-
17th June 2013, 02:53 PM
#11
Junior Member
Devoted Hubber
அசல் திரைப்படத்தில் " சிங்கம் என்றால் எந்தந்தைதான்" என்ற அதி அற்புதமான வைரமுத்து எழுதிய பாடல்.
அசல் திரைபடத்தில் அந்த பாடலை கொலை செய்திருப்பார்கள் அது வேறு விஷயம்.
ஆனால் அந்த பாடலை நாம் கண்மூடி கேட்டோமேயானால் நம் திரை உலக சித்தர் தான் அனைவருக்கும் நினைவில் வருவார். (அதனால்தானோ என்னவோ வயிதெரிச்சல் பிடித்த சில புல்லுருவிகள், அந்த பாடலை முழுதுமாக பயன்படுத்தாமல் ஏனோ தானோ என்று படத்தில் சேர்த்திருப்பார்கள்)
நானும் எனது நண்பர் திரு ஆனந்த் அவர்களும் இந்த பாடலை எடுத்துகொண்டு, அதில் நடிகர் திலகத்தின் பல்வேறு காட்சிகளை கொண்டு ஒரு காட்சியாக செய்தால் என்ன என்று எண்ணியதன் விளைவு இந்த ஒளி ஒலி காட்சி.
அதை செய்து முடித்தவுடன் எனக்கு மின்னல் போல ஒரு யோசனை தோன்றியது. நாம் ஏன் இதை நடிகர் திலகத்தின் புதல்வர் திரு பிரபு (நான் பிரபு அவர்களின் ரசிகன் கூட ) நினைத்துபாற்பதுபோல செய்யகூடாது என்று.
என் எண்ணத்தை திரு ஆனந்த் அவர்களிடம் கூற, அவரும் சரி செய்யலாம் என்று சொல்ல, டூயட் திரைப்படத்தில் வரும் காட்சியை பயன் படுத்தினால் நன்றாக இருக்கும் என்று நான் சொல்ல அந்த காட்சியை கட் செய்து ஆரம்பத்தில் (Prelude) அந்த saxophone இசை யுடன் இணைத்தோம்.
எப்படி இருக்கிறது? ரசிக்கும்படி இருக்கிறதா ? என்று திரி நண்பர்கள் கூறவேண்டும் என்று கேட்டுகொள்கிறேன் !
-
17th June 2013 02:53 PM
# ADS
Circuit advertisement
Bookmarks