சந்திரனிடம் வாக்குவாத ஜாலம்.
http://i1087.photobucket.com/albums/..._000323976.jpg
Printable View
சந்திரனிடம் வாக்குவாத ஜாலம்.
http://i1087.photobucket.com/albums/..._000323976.jpg
அழகு சூரியனாய் சூரியகாந்தன்.
http://i1087.photobucket.com/albums/..._001396296.jpg
திரு வாசு சார்,
துளிவிஷம் பெருவெள்ளமாக மாறி அனைவரையும் மூழ்கடித்துகொண்டிருக்கிறது ஆனந்தமாக அனுபவித்துகொண்டிருக்கிறோம் .மிக்க நன்றி .
திரு ராகவேந்திரா சார்,
நடிகர்திலகம் சம்பந்தப்பட்ட அனைத்து விஷயங்களுமே ஒரே திரியில் இருந்தால்தான் அனைவரும் படிக்க வசதியாக இருக்கும் என்பதே என் கருத்து.தனி தனி திரியாக இல்லாமல் ஒரே திரியாக இருந்திருந்தால் இந்நேரம் நமது திரி 20ம் பாகத்தையும் தாண்டியிருக்கும் என்பது நிச்சயம்
என்னே விந்தை இது!!! அள்ளி அள்ளி வழங்குகிறார் துளி விஷம்.
வாசு தேவ மந்திரமா இது. ஆனந்தத்துடன் பருகுகிறோம் திகட்டாத அமுதெனவே!!!
சின்னக்கண்ணன் சார் உங்கள் கவிதையை படித்து விட்டு பதிவித்ததால் அதன் விளைவு மேலே. நீங்க எனக்கு ஒரு மாய மந்திரக் கண்ணன் சார்!!!
வாசு சார்
துளி விஷம்
பற்றிய பதிவு அபாரம . சிவா ஜி அவர்கள் கூட ஒரு பேட்டியி ல்
ஹீ ரோவை விட வில்லனாக நடிப்பதை மிகவும் விரும்பினதக
கூறி இருந்ததாக நினை வு
இந்த படத்தை பற்றி 1969 சிவந்த மண் வெளியாகும் போது நெல்லை மாவட்ட ரசிகர் மன்ற மலர் ஒன்றில் படித்த நினைவு . அப்போது நெல்லை மாவட்ட சிவாஜி மன்ற தலைவர் ஆகா திரு போஸ் என்பவர் மற்றும் செயலாளர் ஆக திரு வெங்கட்ராமன் என்பவர் இருந்ததாக நினைவு அந்த மலரில் சிவாஜியின் பட பட்டியல்களை வெளியிட்டு அத்தனை படத்திலும் ஹீரோ ஆகதான் சிவாஜி தோன்றி நடித்து இருந்தார் இதுவரை நடித்த எந்த படத்திலும் கதாநாயகனுக்கு கத்தி துடைத்து கொடுக்கும் பாத்திரத்தில் நடித்தது இல்லை என்று பின் குறிப்பு எழுதி இருந்தார்கள் துளி விஷம் படத்தில் கூட வில்லன் ஆக நடித்து இருந்தாரே தவிர அதுவும் மெயின் ரோல் மாதிரி தான் என்று குறிப்பிட்டு எழுதி இருந்தாக நினைவு ராகவேந்தர் அல்லது பம்மலர் சார் அவர்களிடம் அந்த மலர் இருந்தால் பதிவு ஏற்றலாம் மிக அருமையன ஒன்று
டியர் வாசு சார் , இதுவரை நடிகர்திலகத்துக்கு மட்டும் ரசிகன் ஆகா இருந்த என்னை உங்களக்கும் ரசிகனாக பன்னிர்விட்டிர்கள். என்ன தமிழ் , என்ன நடை , என்ன பணிவு . நிறைய கத்துக்கணும் சார் உங்களிடம். நான்கு பகுதியுடன் முடிந்துவிட்டதே என்ற ஒரு குறை தான் எனக்கு . கடவுள் உங்களை வாழ்த்தட்டும் வாசு சார் . நெரிய எழுதுங்கள் - படிக்கும் கூட்டம் பெருகட்டும் .
மதிப்புடன்
ரவி :):)
Hyderabad
எனது பரீக்ஷா நண்பரான நாசர் (நடிகர்),நடிகர்சங்க தலைவர் ஆகும் வாய்ப்பு உள்ளது.(இளம் நடிகர்கள் ஆதரவுடன்).அது மட்டும் நடந்தால், எழுதி வைத்து கொள்ளுங்கள். தலைவரின் மணி பண்டபம் சர்வ நிச்சயம். நம்மைஎல்லாம் விட பெரும் ரசிகர் நாசர்.
Mr Vasu Sir,
Mind boggling. What an analysis. I will read the same again.
You have taken this thread to the new level like our NT.
Thanks.
S Vasudevan
Chennai
ராஜ்குமாருக்கு ஒரு கர்நாடக அரசு கிடைத்தது போன்ற ஒரு 'அரசாங்கம்' சிவாஜிக்குக் கிடைக்கவில்லை என்பதுதான் பெரிய குறை. அந்தக் கலைஞனை அரசியல் கண்ணோட்டத்துடனேயே அணுகி எம்ஜிஆரை முன்னிறுத்தி இவரை இருட்டடிப்பு செய்யும் அரசியல்தான் ஐம்பதாண்டு காலமாகவும், இன்றளவும் நடைபெற்று வருகிறது. இதோ நேற்றைக்கு சினிமா -100 வது ஆண்டுவிழாவில்கூட 'மக்கள் மனதில் நீங்கா இடம் பெற்றுள்ள மறக்கவே முடியாத ஒரே நடிகர் எம்ஜிஆர்தான்' என்று தமிழக முதல்வர் பேசுகிறார். அவர் மறந்தும்கூட அந்த நிறைவு விழாவில் சிவாஜி பெயரை உச்சரிக்கவில்லை. நல்லவேளை, நாட்டின் குடியரசுத் தலைவர் உச்சரித்தார்.
ஓட்டுக்காக வேண்டுமானால் எம்ஜிஆர் பெயரை தமிழ்நாட்டில் உச்சரிக்கலாம். தமிழகம் கடந்துபோய் 'நடிப்புக்காக' எம்ஜிஆர் பெயரை உச்சரித்தோமென்றால் ஒரு பயல் நம்மை மதிக்கமாட்டான். அதுதான் நடந்துகொண்டிருக்கிறது.
courtesy - amudhavan (filimalaya)
Dear Mr. Chinnakkannan,
What a flow of writing which is also hilarious! Great!! Being such an ardent fan of NT, I don't know where you have been, especially when it found that you already registered more than 2000 posts.
Please visit us frequently and enthral us.
Regards,
R. Parthasarathy
Dear Vasudevan (Neyveli) Sir,
Extraordinary write up on "Thuli Visham".
The amount of hard work you have done is reflecting clearly in your write-up.
I read a series by ASA Sami during late 70s in Bommai where he wrote about the durbar scene where NT and KRR will have a war of words. In fact, he wrote that this scene is one of the main reasons for the not so encouraging result of the movie in that, people almost forgot the storyline of the movie after the durbar scene as everybody were spellbound.
The irony is in Tamil there is a saying as everybody know "alavukku minjinaal amirdhamum visham". Here, it was proved even dramatics should have some limit and as it exceeded the limit, it proved as a poison and alas the title of the movie also was "Thuli Visham".
Kudos sir once again!
Regards,
R. Parthasarathy
Ok.Joe sir,we were not aware of consequences.Thank u.
அன்பின் பொன் ரவிச்சந்திரன், கல் நாயக் - நன்றி..
அன்பின் ஆர்.பார்த்த சாரதி சார்.. நன்றி..துளிவிஷம் வந்தாகி விட்டது.. இனி ஒன்றரை முழ இடை ஸாரி typo கூந்தல் கொண்ட ஆலம் பற்றி இடுகை வந்த பிறகு வருகிறேன்..(யார் கிட்ட அடி வாங்கப் போறேனோ தெரியலை:))
சின்னக்கண்ணன் சார்!
உங்கள் நெடிய இடுகைகள் தான் கொல்(g) என்று சிரிக்க வைக்கின்றன என்றால் உங்கள் ஓரிரு வாக்கிய இடுகைகளும் விலாநோக சிரிக்க வைக்கின்றன.
"யார் கிட்ட அடி வாங்கப் போறேனோ தெரியலை" என்பதை படித்து விட்டு கடந்த பத்து நிமிடங்களாக சிரித்துகொண்டிருக்கிறேன்.(யார் கிட்ட அடி வாங்கப் போறேனோ தெரியலை)உங்கள் பணி தொடரட்டும்.
யார் அடி வாங்கப் போறாங்களோ, யார் அடிக்கப் போறாங்களோ, இந்த டென்ஷனை விட ஒரு துளி விஷத்தையே குடுத்துடுங்கப்பா...
சந்தோஷமா சாப்பிட்டு விட்டு பிராணனை விட்டுடறோம்...
ஆனால் ஒரு கண்டிஷன் ..
அந்த ஒரு துளி விஷத்தை குடிச்சிட்டு சாகறத்துக்கு முன்னாடி இந்த மய்யத்திலே நடிகர் திலகத்தின் நடிப்பைப் பற்றி எழுத்துச் சிற்பிகள், முரளி சார், கார்த்திக் சார், கோபால் சார், வாசு சார், சின்னக் கண்ணன் சார், கண்பத் சார், பம்மலார் சார், ஏம்பா யாராச்சும் பேர் விட்டுப் போனா சொல்லிடுங்க... உங்க பேரையும் இந்த லிஸ்டிலே சேத்துக்குங்க... இவங்களும் இன்னும் பேர் சொல்ல விட்டுப் போன மத்த சிற்பிகளும் ஒவ்வொருத்தரும் எழுதுகிற ஆய்வையெல்லாத்தையும் படிச்சிட்டு, இந்த திரி 100 பாகம் முடிந்த பிறகு தான் அந்த விஷத்தைப் பருகுவோம் .. இது தான் ஒரே கண்டிஷன் ...
கண்பத் சார் ராகவேந்திரா சார் - நன்றி :) நீங்கள் சொன்ன லிஸ்ட்ல உங்க பேரும் வேணுமே..ஓ..இதற்குப் பெயர் தான் தன்னடக்கமோ
கண்ணனே நீநினைத்த காவியம் பற்றியே
எண்ணும் படியே எழுது ...
என க எ ஒ ஆ இ..(கண்டுபிடிங்க பாக்கலாம்) எனில் பெண்டிங்க் இடுகைகள் முடிந்தவுடன் வருவேன்..இதோ எனது கட்டம் போட்ட கைக்குட்டை :)
துளிவிஷத்தை பேரமுதமாக்கிய எழுத்து "இந்திரன்" வாசு'தேவன்'.
இன்னும் சற்றே நேரத்தில்.....
அந்த இனிமையான அறிவிப்பு...
நம்மையெல்லாம் மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்த...
வருகிறது...
சின்னக் கண்ணன் சார்..
ஒ.... ஒரு
ஆ.... ஆளும்
இ.... இல்லே...
அப்படின்னு தான் என் சிற்றறிவுக்குத் தோண்றது...
க...எ.... அப்படின்னா ...கடலை எண்ணையா
தமிழ்த் திரைக் களஞ்சியம்
அவதாரமெடுத்து விட்டது..
மனித அவதாரம் ...
உருவத்தில் மட்டுமல்ல உள்ளத்திலும் தான் ...
அந்த அவதாரம்
தன் களஞ்சியத்தை
வாரிக் கொடுத்த கர்ணன்....
எப்பொழுதும் அன்புடன்
பேசும் தெய்வம்
தமிழ்த் திரையின் அறிவில்
பெருஞ் செல்வம்.
அவருடைய மலர்ந்த முகம் இருக்கும்
எங்கள் நெஞ்சிருக்கும் வரை
இன்று அவர் தொடங்கியிருப்பதோ...
சரம் சரமாய் நடிகர் திலகத்திற்கு
புகழ் மாலை...
இதனை ஊரறியச் செய்வதே
எங்கள் வேலை...
பார்க்கப் பார்க்கப் பார்வையில் ஆயிரம்
கதைகளைக் கூறும் அவர் விழி பாசுரம்
பக்கம் புரட்டும் போதெலாம் நெஞ்சம்
பக்கம் யாரென்று பார்க்காது மூழ்கும்
அந்த நாளும் வந்திடாதோ
என
ஆவலோடு காத்திருப்போம்
http://i1146.photobucket.com/albums/...psaea4ae92.jpg
பிறவிக் கடன் தீர்த்தேன்
பம்மலாரே
இதை அறிமுகப் படுத்த
நல்கிய நல்வாய்ப்பினால்...
நன்றிகள் கோடி...
வருகின்றன உங்களைத் தேடி...
நன்றி ராகவேந்தர் சார். உங்களின் suspense தெரிந்தும் அறிவிப்பிற்கு காத்திருந்தேன்.
அனைத்து சிவாஜி பக்தர்கள் ,ரசிகர்கள் மற்றும் அவரை ரசிக்கும் பொதுமக்கள் அனைவருக்குமான வேண்டுகோள். நடிகர்திலகம் சம்பந்த பட்ட புத்தகங்களை நாம் உற்சாக படுத்தி ஆதரவு தந்தால்தான் ,நிறைய புத்தகங்கள் (தரமான) வெளி வர வாய்ப்புள்ளது. இந்த புத்தகம், எந்த மொழிக்கும் அவசியமில்லாத உலகத்தின் பொதுமொழியான, விழிகளும்,முகமும்,உடலும் உணர்த்தும் மொழியில், அதையும் உலகத்திலேயே சிறந்த ஒரே நடிகரின் வித விதமான பாத்திரங்களால் பேச பட்ட மொழியை அடிப்படையாக கொண்ட பேசும் சித்திரங்கள். ஒவ்வொரு தமிழனின் வரவேற்பறையிலும் தவழ வேண்டியது.
இங்கு வரும் விருந்தினர்களின் முன்பதிவுகள் மட்டுமே 1000 பிரதிகள் என்றால் ,நாம் ஒவ்வொருவரும் பத்து பேரையாவது வாங்க செய்தால் பத்தாயிரம் ஆகி விடாதா?
நம் சாயங்காலங்களுக்கு சந்நிதி வாசல் போல விளங்கிய படங்களின் நாயகனுக்கு,நாம் இன்றிருக்கும் நிலைக்கு பொறுப்பாகி,நம் ரசனை ,அறிவு,தமிழ்,தேசிய உணர்வு,இறை உணர்வு,குடும்ப பொறுப்பு,தியாக உணர்வு அத்தைனையையும் வளர்த்து மேம்படுத்திய அந்த ஆசானுக்காக ஓராயிரம் என்ன,நூறாயிரமே கொடுப்போம் என்று ஒவ்வொருவரும் உணர்த்த வேண்டிய நேரம்.
ராகவேந்திரன் சாருக்கும்,சந்திர சேகர் சாருக்கும் நேரடி போட்டி. யார் அதிக பிரதிகளை விற்க காரணகர்த்தாவாக திகழ போகிறீர்கள்? நான் வழக்கம் போல ராமனின் அணில். பாலத்திற்கு சில கற்களாவது உண்டு.
http://www.vasantham.lk/wp-content/u...14-300x240.jpg
http://www.indianmirror.com/arts/cel...vaji-limg3.jpg
விண்ணும் மண்ணும் இணையில்லா இதய தெய்வத்திற்கு
தன்னிகரில்லா தமிழ் மகன் பம்மலார் படைக்கும் புகழ்மாலை
சாதனை படைத்து சரித்திரம் வென்று
தரணி எங்கும் வெற்றிப் பரணி பாட வாழ்த்தும்
அன்புச் சகோதரன்
வாசுதேவன்.
உ
---
----
பிள்ளையார் சுழி என்னுடையது. முதல் பிரதிக்கான முன்பதிவு என்னுடையது. துவக்கி விட்டேன்.
தொடருங்கள்.
உலக வரலாற்று புகழ் பெற்ற மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்களுக்கு மலர் மாலை சூடி உலக புகழ் பெற்ற இனிய நண்பர் திரு பம்மலார் அவர்களின் கை வண்ணத்தில் உருவாகிவரும்
நடிகர் திலகம் ''புகழ் மாலை ''மிகப்பெரிய வெற்றி பெற மக்கள் திலகத்தின் ரசிகர்கள் சார்பாக
வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கின்றேன்
உலக அளவில் முதல் முறையாக ஒரு நடிகர் நடித்த படங்களின் காட்சிகளை தொகுத்து ,அவரின் சுய விமரிசனங்களோடு வெளியிட பட்ட முதல் முயற்சி சிவாஜி ரசிகன் 1971 இல் அவரது முதல் 140 படங்களை தொகுத்து வெளியிட்ட சிறப்பு மலர் ஆகும். அது வெளிவந்த சூட்டிலேயே சுமார் 20000 பிரதிகள் விற்று தீர்த்தன. (விலை ரூ.4 என்று ஞாபகம்)
இது சோலோ,கலர், 305 படங்களின் மொத்த தொகுப்பு.ரசிகர்களோ ,அப்போது இருந்ததை விட இப்போது உயர்ந்த ,செல்வ செழிப்பான, settled என்று சொல்ல படும் வாழ்க்கை தரத்தில் உள்ளோம். இப்போது 50,000 ஆவது விற்றே ஆக வேண்டும்.
எஸ்வி சார்,
நாங்கள் உங்களை வேற்று மனிதராக கருதியதே இல்லை. எங்களில் ஒருவர்தான் நீங்கள். உங்களை நீங்கள் எங்களில் ஒருவராகவே கருதி ,எங்களை மட்டும் நினைத்து, எங்கள் சார்பில் நின்றே,எங்களை வாழ்த்துங்கள். அப்படி வாழ்த்தியதாகவே கருதி கொள்கிறோம்.
http://www.aic.aibsnloa.in/images/nandri.png
'துளிவிஷம்' பதிவிற்கு அபார வரவேற்பும், வாழ்த்துக்களும் அளித்த அன்பு இதயங்கள்
திருவாளர்கள்
சிவன்K அவர்கள்
சின்னக்கண்ணன் அவர்கள்
கோபால் அவர்கள்(கைபேசி வாயிலாகவும்)
கல்நாயக் அவர்கள்
C.ராமச்சந்திரன் அவர்கள்
கார்த்திக் அவர்கள்
ராகுல்ராம் அவர்கள்
ராகவேந்திரன் அவர்கள் (கைபேசி வாயிலாகவும்)
வினோத் அவர்கள் (கைபேசி வாயிலாகவும்)
சந்திரசேகரன் அவர்கள்
புலவர்கள் அவர்கள்
கண்பத் அவர்கள்
ஹரீஷ் அவர்கள்
gகிருஷ்ணா அவர்கள்
ரவி அவர்கள் (ஹைதராபாத்)
S.வாசுதேவன் அவர்கள்(கைபேசி வாயிலாகவும்)
பார்த்தசாரதி அவர்கள்
மற்றும்
அன்பு பம்மலார் அவர்களுக்கும்.
தொலைபேசி மூலம் பாராட்டுக்கள் தெரிவித்த முரளி சார் அவர்களுக்கும்.
'கோல்ட் ஸ்டார்' சதீஷ் அவர்களுக்கும்
மற்றுமுள்ள நண்பர்கள் ஏனையோருக்கும்
என் இதயபூர்வமான நன்றிகளைக் காணிக்கை ஆக்குகிறேன்.
தங்கள் அனைவருடைய வாழ்த்துக்களும், பாராட்டுக்களும், ஆதரவும் எனக்கு மிகுந்த உத்வேகத்தையும், உற்சாகத்தையும் அளிக்கின்றன. என் வேண்டுகோளை ஏற்று 'துளிவிஷம்' பதிவுகளுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்த அத்துணை நல்லுள்ளங்களுக்கும் மீண்டும், மீண்டும் என் மனமார்ந்த நன்றி!
அணிகலன் செய்யப்படுவதோ... பத்தரைமாற்று சொக்கத்தங்கத்தில்.
செய்பவரோ.... தலைசிறந்த பொற்கொல்லர்.
விற்பனைக்கு பொறுப்பேற்பதோ.....உலகின் தலை சிறந்த விற்பனை மேலாளர்கள்
வாங்கப்போவதோ....பரம பக்தர்கள்.
அவர்கள் எண்ணிக்கையோ..... பலகோடி.
விலையோ..... பராசக்தி கால செலாவணியில் ஒண்ணரை ரூபா.
50,000சிறியதாக தெரிகிறதே!
அன்பு நண்பர் கண்பத் சார்,
'துளிவிஷம்' பற்றிய தங்கள் மனமுவந்த பாராட்டிற்கு என் ஆத்மார்த்தமான நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். பம்மலார் புத்தகத்துக்கான தங்களுடைய உவமான உவமேயங்கள் அழகு.
அன்பு சகோதரர் பம்மலார் அவர்களால் வெளியிடப்படவிருக்கும் "நடிகர்திலகம் புகழ் மாலை-1" மாபெரும் வெற்றி பெற்று நமது ரசிகர்கள் அனைவரின் கரங்களிலும் தவழ இதயப்பூர்வமான நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
செய்தி
நடிகர்திலகம் சிவாஜி ரசிகர்களின் கோரிக்கையை ஏற்று, சரஸ்வதி சபதம் என்ற பெயர் "நவீன சரஸ்வதி சபதம்" என்று பெயர் மாற்றம் செய்யப்படுவதாக அந்தத் திரைப்படத்தின் தயாரிப்பாளர் சார்பில் நடிகர்திலகம் சிவாஜி சமூகநலப்பேரவையின் வழக்கறிஞருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது ஒரு நகைச்சுவைப் படம் என்றும், யாருடைய மனதையும் புண்படுத்தும் எண்ணம் தமக்கு இல்லை இல்லை என்றும் அக்கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்னும் வேறு ஏதாவது பெயர் மாற்றம் செய்யப்பட்டிருந்தால் நன்றாக இருந்திருக்கும். ஆனாலும், நமது கோரிக்கையை ஏற்று பெயர் மாற்றம் செய்த தயாரிப்பாளருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.
கோபால் சார்,
நேரமில்லாத காரணத்தால் தங்கள் 'நீதி' பதிவை இப்போதுதான் முழுமையாகப் படித்து சுவைத்தேன். படம் ரொம்ப எளிமை. உங்கள் எழுத்திலும் அது தெரிந்தது. தலைவர் ஓடும் ஸ்டைலில் இன்னொன்றையும் சேர்த்துக் கொள்ளுங்கள். 'அவன்தான் மனிதன்' படத்தில் 'அன்பு நடமாடும்' பாடலின் இடையில் கால் சரியானதும் குடையை விரித்துப் பிடித்தபடி ஒரு அழகு ஓட்டம் ஓடி வருவாரே! கிரேட்! எஸ்.வி சுப்பையாவுடன் நிலத்தில் கடுப்படித்து பழித்துக் காட்டும் சீன் ரொம்ப எனக்குப் பிடிக்கும்.
இன்னொன்று கவனித்தீர்களா! நீங்கள் எழுதுவீர்கள் என்று நினைத்தேன். தலைவர் அந்த முரட்டு ஜீன்ஸ் உடையில் நல்ல உயரமாகத் தெரிவார். 'நாளை முதலி'ல் மிக நன்றாக உணரலாம். அதே 'எங்களது பூமியில்' வழக்கமான உயரமாகத் தெரிவார்.
தலைவரும் மனோரமாவும் டிராக்டரில் பேசிக் கொண்டே வரும் சீன் மறக்க முடியாதது.
கடந்த கால நினைவுகள் "மனோரமா"
http://www.lakshmansruthi.com/cinepr...manorama01.jpg
அப்போது கடலூர் அருகே (செம்மங்குப்பம் கிராமம்) 'ஒரே முத்தம்' என்றொரு படம் ஷூட்டிங் நடந்தது. ஜெய்கணேஷ், சுமித்ரா ஜோடி. அதில் கலந்து கொள்ள ஆச்சி வந்திருந்தார். அவர் ஓய்வாக ஆற்றோரம் நடந்து கொண்டிருந்தார். கிராமத்தார் பலரும் அவரை வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தனர். அவரிடம் யாரும் ஒரு அச்சம் காரணமாக பேசவில்லை. நான் வாயை வைத்துக் கொண்டு சும்மா இருக்கக் கூடாது? 'டிராக்டர் பொன்னம்மா' என்று உரக்கக் குரல் கொடுத்து கத்தி விட்டேன். டக்கென்று திரும்பிய ஆச்சி என்னைக் கவனித்து விட்டார்கள். என்னை அருகே வரச் சொல்லி கூப்பிட்டார்கள். சற்றே தயக்கத்துடன் அருகில் சென்றேன். "என்ன சொன்னே"? என்று கேட்டார்கள். நான் சற்று தயங்கியவாறு 'டிராக்டர் பொன்னம்மா' என்று சொன்னேன்.
அவர்களுக்கு சிரிப்பு வந்து விட்டது. "உனக்கு அந்த ரோல் பிடிக்குமா? என்று கேட்க 'பிடிக்கும்' என்றேன். "வேறு என்ன பிடிக்கும்?" என்றார். 'நடிகர் திலகத்தை உயிரைவிட மேலாக பிடிக்கும்' என்றேன். சொன்னதுதான் தாமதம். அவர்கள் முகத்தில் மகிழ்ச்சியைப் பார்க்க வேண்டுமே! "அப்ப நீ நம்ம ஆளு" என்றார்கள். "கொஞ்ச தூரம் என்னுடன் நடந்து வா! என்றார்கள். அப்போது நடிகர் திலகத்தைப் பற்றியும், அவர் படங்களில் ஆச்சியின் நடிப்பைப் பற்றியும் சொல்லிக் கொண்டே வந்தேன். ஆச்சியும் மகிழ்ச்சியுடன் கேட்டுக் கொண்டே வந்தார்கள். பின் 'வா வாத்யாரே ஊட்டாண்டே' என்று ஆச்சி பாட ஆரம்பிக்க கூடவே நானும் பாட ஆரம்பிக்க ஒரே ஜாலியாக இருந்தது. (மனோரமா கூடவே நான் பாடியவனாக்கும்!) ஆச்சி ரொம்ப அன்பாக நடந்து கொண்டார்கள்.
அதற்கு முன் ஆச்சியைப் பிடித்தாலும் ஆச்சி நிரந்தரமாக என் மனதில் ஆட்சியைப் பிடித்தது இச்சம்பவத்திற்குப் பிறகுதான்.
அடுத்தநாள் நான் ஆச்சியை பார்த்தது சிதம்பரம் மெயின் ரோட்டில் அதே கிராமத்தில். ஆச்சி வண்டி நின்று கொண்டிருந்தது. யாருமே இல்லை. நான் போய் எட்டிப் பார்த்தேன். பார்த்தால் ஆச்சி. ஆச்சி என்னைப் பார்த்ததும் நீயா என்று அடையாளம் கண்டு கொண்டார்கள். "ஊருக்குப் போயிட்டு வர்றேன் தம்பி! குடிக்க இங்கே டீ கிடைக்குமா?...கடை தெரியவில்லை. அதான் டிரைவரை அனுப்பி வைத்து விட்டு வெயிட் செய்கிறேன். தலை வேறு வலிக்கிறது" என்றார்கள். பின் நான் கடை சென்று டீ வாங்கிக் கொண்டு கொடுத்தேன். (காசு அவர்கள்தான் கொடுத்தார்கள். நம்மிடம் அப்போது ஏது?) அழகாகச் சாப்பிட்டுவிட்டு நன்றி சொல்லி விடை பெற்றார்கள்.
'நீதி' என்றாலே இந்த சம்பவம் எனக்கு நினைவுக்கு வந்து விடும். ஆச்சிக்கு இப்போது அடிக்கடி உடம்பு முடிவதில்லை என்று செய்திகள் கேட்கும் போது ரொம்ப கஷ்டமாக இருக்கிறது. அவர்கள் எல்லா நலனும் பெற்று வாழ நம் திரியின் சார்பாக வாழ்த்துவோம்.
இந்த நினைவலைகளை நினைக்க வைத்த உங்களுக்கு நன்றி.
எனக்கு டிராக்டர் பொன்னம்மா பற்றி தனியாக எழுத மிக மிக ஆசை.
எழுதலாமா?
THULIVISAM.,,, A movie by name itself i disliked those days, in early sixties regular morning shows in north madras theatres on sundays and spl shows on festival days still i have no inclanation to see it for obvious reasons,
now your fantastic coverage has created my wish to see it very early.AFTER SIXDECADES,
WONDERFUL SKILLS.
t
vasudevan sir
அள்ளஅள்ள குறையாத காமதனுசெல்வம் போல் அல்ல வா
உங்களடிம் இருந்து விஷயங்கள் வெளி வருகி ன்றது
மனோரமா பற்றிய பதிவு
பம்மலர் சார்
காத்து இருக்கிறோம் உங்கள் புத்தகத்துக்காக
உங்கள் முயற்ச்சி வெற்றி அடைய எல்லாம்
வல்ல அந்த கணேச பெருமானை வாங்குகின்றோம்
கார்த்திக் சார்,
தங்கள் ஆலம் பதிவு இப்போதே போடுங்கள்.இனியும் காத்திருக்க முடியாது.(ஆலத்தை இப்போதே போட முடிந்தால் சந்தோஷ படுவேன்.)
ஆச்சியை டிராக்டர் பொன்னம்மாவாக சந்தித்த அனுபவம் நன்றாக இருக்கிறது வாசு சார். டிராக்டர் பொன்னம்மாவை தனியாக எழுதுவதற்கு ஆசையா? எங்களுக்கு என்ன கரும்பு தின்பதற்க்கு கசக்குமா என்ன? நன்றாக எழுதுங்கள். நாங்கள் ரசிக்கிறோம்.
கார்த்திக் சார், கோபாலும், சின்னக்கண்ணனும் ரொம்பவே ஏங்கி போயி இருக்கிறார்கள். எங்கள் பொறுமையை இப்படியெல்லாம் சோதனை செய்ய வேண்டுமா? கொண்டு வாருங்கள் ஆலத்தின் பதிவை உடனடியாக.
சின்னக்கண்ணன் சார், என்ன சொல்றதுன்னே தெரியலை. இம்மாந்திறமையை வைத்துக்கொண்டு இம்மா நாளும் இன்னா செஞ்சிக்கிட்டு இருந்தீங்க. உங்க புலமையில் மயக்குறீங்க. உங்க கவிதைக்காகவாவது கார்த்திக் ஆலம் பதிவை உடனடியா கொண்டு வரமாட்டாரா? இல்லை தவிக்கவிட்டு, இதுமாதிரி இன்னும் நாலு கவிதையை உங்க கிட்ட இருந்து வரட்டும்-னு நெனச்சி தள்ளிப் போட்டுற மாட்டாரு? அதனால உங்க கவிதையை தினமும் கொடுங்க. அவரும் ஆலம் பதிவை உடனடியாக கொடுக்கட்டும். (பதிந்து விட்டு பார்த்தால் உங்க கவிதையை காணோம். என்ன சின்னக்கண்ணன் சார் இப்பிடி பண்றீங்க?)
மற்றபடி மாற்று பெயரில் மற்ற திரியில் கருத்து சொல்லிக்கொண்டிருக்கும் எங்கள் அண்ணனை உடனடியாக இந்த திரிக்கு வருமாறு வேண்டி விரும்பி கேட்டுக்கொள்கிறேன். உங்கள் சேவை - இந்தத் திரிக்கு தேவை.
புலவர்களும் கோபம் தணிந்து இத்திரிக்கு வருகை புரிய வேண்டும்.