-
25th September 2013, 05:14 PM
#11
amudhavan http://amudhavan.blogspot.in/2013/09/1.html
ராஜ்குமாருக்கு ஒரு கர்நாடக அரசு கிடைத்தது போன்ற ஒரு 'அரசாங்கம்' சிவாஜிக்குக் கிடைக்கவில்லை என்பதுதான் பெரிய குறை. அந்தக் கலைஞனை அரசியல் கண்ணோட்டத்துடனேயே அணுகி எம்ஜிஆரை முன்னிறுத்தி இவரை இருட்டடிப்பு செய்யும் அரசியல்தான் ஐம்பதாண்டு காலமாகவும், இன்றளவும் நடைபெற்று வருகிறது. இதோ நேற்றைக்கு சினிமா -100 வது ஆண்டுவிழாவில்கூட 'மக்கள் மனதில் நீங்கா இடம் பெற்றுள்ள மறக்கவே முடியாத ஒரே நடிகர் எம்ஜிஆர்தான்' என்று தமிழக முதல்வர் பேசுகிறார். அவர் மறந்தும்கூட அந்த நிறைவு விழாவில் சிவாஜி பெயரை உச்சரிக்கவில்லை. நல்லவேளை, நாட்டின் குடியரசுத் தலைவர் உச்சரித்தார்.
ஓட்டுக்காக வேண்டுமானால் எம்ஜிஆர் பெயரை தமிழ்நாட்டில் உச்சரிக்கலாம். தமிழகம் கடந்துபோய் 'நடிப்புக்காக' எம்ஜிஆர் பெயரை உச்சரித்தோமென்றால் ஒரு பயல் நம்மை மதிக்கமாட்டான். அதுதான் நடந்துகொண்டிருக்கிறது.
courtesy - amudhavan (filimalaya)
-
25th September 2013 05:14 PM
# ADS
Circuit advertisement
Bookmarks