வரம் தந்தேன் கோபாலரே! திலீப் மாதிரி தலைவரை தனியே ஆடவிட்டு இருக்கலாம். பாட்டி பத்மினியால் தேரு வேறு மாதிரி ஆகி விட்டது. தலைவர் உழைப்பு! அது மலைப்பு!
http://www.youtube.com/watch?v=gmUxj...yer_detailpage
Printable View
வரம் தந்தேன் கோபாலரே! திலீப் மாதிரி தலைவரை தனியே ஆடவிட்டு இருக்கலாம். பாட்டி பத்மினியால் தேரு வேறு மாதிரி ஆகி விட்டது. தலைவர் உழைப்பு! அது மலைப்பு!
http://www.youtube.com/watch?v=gmUxj...yer_detailpage
// 'Mughal-e-Azam' பற்றிய தங்களுடைய கருத்துக்களை பலமுறை படித்து மகிழ்ந்தேன். சுருக்கமான ஆனால் அம்சமான அலசல். ரசித்துப் படித்தேன். நடுநடுவே தாங்கள் அளிக்கும் சிறு சிறு உதாரணங்களுக்கு அல்லது சிறு கதைகளுக்கு மெய்யாலுமே நான் அடிமை. மாதம் ஒரு முறையாவது இந்தக் காவியத்தை தவறாமல் கண்டு களித்து மெய்மறந்து போய் விடுவதுண்டு. என்னுள் மிகப் பெரிய பாதிப்பை ஏற்படுத்தியதொரு காவியம். //
Sure, no doubt.
But when it was in black & white, not much interested. But after conversion to Technicolor the movie is awsome.
When it was telecasted in color in Zeenet channel, I fully recorded in a video cassette and then convert to a DVD by the help of a friend. What a fantastic songs by Naushadji. I am addict to that songs.
Thanks Vasu sir, for giving 'Ganga Jamuna' song and 'Iru Dhuruvam' song together.
This song is the only thing coming to remember when we hear the name Iru Dhuruvam (another thing is camera work by Vincent in train chasing scene). Excellent 'kuththu song' between 'mama.. mama.. mama..' and 'ennadi raakkamma'.
super service sir.
மிக்க நன்றி வாசு சார்.
ஆப்பிரிக்க கண்டம் சென்று அங்கு சூடான் நாட்டில் வாழும் மசாய் பழங்குடி இனத்தவர் குடியிருப்பிற்கு சென்று "உங்கள இனத்திலேயே உயரமானவர் யார்?" என்று கேட்டால் சுமார் ஆறரை அடி உயரமுள்ள ஒரு நபரை கொணர்வார்கள்.
சில நூறு மைல்கள் தாண்டிச்சென்று பிக்மி பழங்குடி இனத்தவர் குடியிருப்பிற்கு சென்று "உங்கள இனத்திலேயே உயரமானவர் யார்?" என்று கேட்டால் சுமார் ஐந்து அடி உயரமுள்ள ஒரு நபரை கொணர்வார்கள்.
இருவருமே சரிதான்..நாம் ஒப்பீடு செய்வதுதான் பிழை.
திலீப்ஜியின் இந்த நடனம் "ஜோடி #1" இல் முதன் முதலில் reject செய்யப்பட போட்டியாளரின் நடனத்தை விட சுமார்தான்.
இறைவன் விதிகளுக்கு இசைவாக பலரையும்,விதி விலக்காக பலரையும் படைப்பார்.அதுவும் சமகாலத்தவராக.பொறுத்துக்கொள்ளத்தான் வேண்டும்.
ஏனெனில் விதியும் அவரே!விதிவிலக்கும் அவரே!!
தலைவரின் சமகால நடிகர்(களி)ன் திறமை(அவருக்கு சமமாக கருதப்பட்ட நடிகர்) நாம் அறியாததா என்ன?
இங்கே வசிக்கும் நண்பர்கள் ராகவேந்தர்,வாசு,ஆகியோர் எதாவது அக்ஷய பாத்திரம் வைத்துள்ளனரா என்ன?
என்ன பாடல்/ காட்சி கேட்டாலும் வந்து விழுகிறதே?:confused2:
நண்பர் ஆதிராம் அவர்களே..
மனிதனின் தலையின் இருபக்கமும் இறைவனால் பொருத்தப்பட்டுள்ள காது எனும் அவயம் சரியாக வேலை செய்யும் எவரும் Naushadji. யின் இசைக்கு addict ஆகத்தான் இருப்பர்.
மேலும் pyar kiya tho எனும் பாடல் ஒரு classic ரகத்தை சேர்ந்தது.தர்பாரி எனும் ஹிந்துஸ்தானி ராக சாயலில் வடிவமைக்கப்பட்டு கேட்போர் உள்ளங்களை கொள்ளை கொள்ளும்.தலைவர் பாடல் சின்னஞ்சிறிய வண்ணப்பறவை நினைவுக்கு வருகிறதா?
மேலும் இதனால் inspire ஆன மெல்லிசை மன்னர்கள் வாழ்க்கைப்படகு எனும் படத்தில்,"உன்னைத்தான் நான் அறிவேன்.மன்னவனை யார் அறிவார்?" எனும் பாடலில் தங்கள் மேதமையை காண்பித்துள்ளனர்.
சகலா சார்,
கண்களில் கங்கையைக் கொட்ட வைக்கிறீர்கள்.
வெள்ளிக்கிழமை..மாலை வேளை..
இந்த போட்டோ எதுக்கு? ஒரு relevance உம் இல்லாமல்? :(
சரி எதோ என்னால் முடிந்த பரிகாரம்...
Attachment 2310
P _R ,
ஏதோ வேந்தர் ஞாயிற்று கிழமை கொண்டாட்டங்களில் busy ஆக இருப்பதால் கண்டு கொள்ள மாட்டார் என்ற அசட்டு தைரியத்தில், எங்கிருந்தோ வந்தாளில் உடன் பட்டு விட்டேன் . ராத்திரியெல்லாம் பயத்தில் தூக்கமே இல்லை.
Jokes apart , come to think of it ,எனக்கு அது ரொம்ப கவராத பாத்திரமாகவே இருந்தாலும்(Cliched ), இன்னொரு கோணத்தில் அலசினால்......
ஒரு socio -path (psychopath ), Border line IQ , Autism , mild schizophrenia பாத்திரங்களில் காட்டும் நுட்பமான histrionics , மன நிலை பிறழ்ந்தவன் பாத்திரத்தில் காட்ட முடியாது.அதற்கு ஒரே வழி antics driven performance மட்டுமே.
Mood swings &inconsistent disposition ,lack of cogency in thoughts &Actions ,Incoherent unpredictable behaviour,இவற்றை வெளியிட ஒரே வழி series of antics ஒன்றுதான்.அதைதான் நடிகர்திலகம் செய்து காட்டினார்.
சமீபத்தில், திரியில் என்னை மிக கவர்ந்த விஷயம் ஆரோக்யமான விவாதங்களுடன், அதிகரித்து வரும் sense of humour . நட்புணர்வை அதிகரிக்க செய்யும் கிரியா ஊக்கி.(Catalyst )
கண்பட் அவர்களின் , Mugale azam தொடர்பானது.(அரச உடையை பார்த்தாவது...., ராகவன் )
வாசுவின், தண்ட,பேத,தான, சாமம்.
ராகவேந்தர் சாரின், ஆயிரத்தில் ஒருவன் ராமதாஸ் பாணியில் வந்த ஒன்று.(நமக்கு வாய்த்த அடிமைகள் திறமைசாலிகள். ஆனால் வாய் தான் ..) .ஒன்றும் குறை காண முடியாது. ஆனால் விவேகம்தான்.... இதை என் குடும்பத்திடம் சொன்னதும் , சொன்னவர் யார்?உடனே மாலை போட்டு மரியாதை செய்ய வேண்டும். எங்கள் மனதில் இவ்வளவு நாளாக புதைத்து அழுத்தி கொண்டிருந்த ஒரு ரகசியத்தை, இவ்வளுவு தைரியமாய் உரைத்த விவேகியை என்று.
தொடந்த நட்புடன் கூடிய நகைச்சுவை தொடர, இந்த அவிவேகியின் பிரார்த்தனை.
ராகவேந்தர் சாரின் பதிவு தொடர்பானது.
போன வாரம் வாழ்க்கை படத்தை மீண்டும் பார்த்தேன். (இதை மலையாளம்,ஹிந்தி ஆகியவை பார்த்துள்ளேன்.) வாழ்க்கையில், நம்பிக்கை சார்ந்து சுய மரியாதையோடு இயங்கும் ஒருவன், மனைவியுடன் ஆன உறவு முறை காதல் வய பட்டதாக இருப்பினும் ,ஒரு குற்ற உணர்வு இழையோடி கொண்டே இருக்கும்.(செல்வ நிலையில் இருந்த அவள் வாழ்க்கையை சிதைத்து விட்டதாக). இதையெல்லாம் விடுங்கள். கடைசியில் மனைவி தனக்கு உடன்பாடில்லாத ஒரு காரியத்தை செய்யும் போது ,அதை கைகேயி வரமாகவே உபயோகிக்கும் போது ,....
அந்த office scene ... நடிகர்திலகத்தின் உடல் மொழி, முக பாவம் வசன உச்சரிப்பு.... என் இதயத்தை யாரோ வெளியே எடுத்து பிழிந்து கொண்டிருப்பதை போல ஒரு அவலத்தை உணர்ந்தேன். அப்படியே சக்கையாய் பிழிய பட்டு ,குப்பையில் வீச பட்ட துறவு கலந்த ஒரு dryness , வெறுமை ..... (வாசு சார் முடிந்தால் காட்சி உதவி)
கோபால் அண்ணன் குடும்பத்தின் சார்பாக நான் ராகவேந்திரன் சாருக்கு இந்த மிகப் பெரிய மாலையைப் போட்டு மகிழ்கிறேன்.
http://www.dollsofindia.com/images/p...and-CA77_l.jpg
நடிகர்திலகத்தின் காட்சி finish பண்ணும் போது character -action -mood ஆகிய அனைத்தையும் ஒரு சிறு gesture மூலம் establish பண்ணும் அழகு.
கல்லெல்லாம் மாணிக்க பாட்டின் இறுதியில், ஒரு துணியை எடுத்து கையை துடைக்கும் நேர்த்தியில் ,ஓவியத்தை திருப்தியாக முடித்து விட்ட காதலனின் திருப்தி.....
தூங்காத கண்ணென்று பாட்டில், விக் கழட்டி, மேல் பட்டன் திறந்து, stress relieve செய்து, ஓய்வெடுப்பதை குறிப்பதுடன், காதலையும் கழட்டி விடும் symbolic gesture .
ஆஹா,
தீயாய் வேலை செய்கிறாயே தம்பி. என்ன ஒரு சுறு சுறுப்பு.சிறு வயதில் ஒரு கிராமத்து நண்பன் . அவன் வேலையே ,நம் அரை டிரௌசரை பின்னாலிருந்து உருவி விட்டு ஓடுவது. பாவம் ,நிறைய நண்பர்கள் அப்போதெல்லாம், தொள தொள அரை நிக்கரை ,அரணா கயிறு போட்டே இடுப்பில் அணிந்திருப்பார்கள்.(உடுக்கை இழந்தவன் கை போல,என்பதை உல்டா செய்த உயர்ந்த நண்பன்) .
தொடர்பில்லா விட்டாலும் ஏதோ பழைய நினைவு. H mmmm .
Mr Vasu Sir,
Welcome back with a bang and also do not forget
the stunt scenes series of NT.We are eagerly
awaiting for the same.
கோபால் சார்,
தங்களைப் போலவே நானும் நீங்கள் குறிப்பிட்ட அந்த நெஞ்சு பிழியும் காட்சியைப் பர்ர்த்து தன் வசமிழந்து நிற்கிறேன். நிம்மதியாகவே இருக்க விட மாட்டீர்களா?
சரி! நீங்கள் கேட்டதற்காக அந்த அற்புதமான காட்சி. தரவேற்ற கொஞ்சம் நேரம் ஆகி விட்டது. அதான் delay.
http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=-X9pKWBJNl4
http://www.youtube.com/watch?v=SQDbDVuXMvI&feature=player_detailpage
Thank u vasudevan sir. Definitely.
வாசு சார்
தங்களுடைய சிறந்த பாராட்டிற்கு என் உளமார்ந்த நன்றிகள். இது வெறும் வார்த்தையல்ல... உள்ளத்தின் அடித்தளத்திலிருந்து வரும் உணர்வின் வெளிப்பாடு.
வாழ்க்கை – ஏற்கெனவே படத்தை பல முறை பார்த்திருந்தாலும், கோபால் இந்த காட்சியில் உள்ள நுணுக்கமான விஷயங்களை சொன்ன பிறகு இந்த காட்சியைப் பார்க்கும் போது நிச்சயம் பல புதிய விஷயங்களை அறிய முடிகிறது. அதனைத் தாங்கள் உடனே இங்கே பதிவிட்டு அசத்தி விட்டீர்கள். மிக்க நன்றி.
டியர் கோபால் சார்,
தங்களுடைய பதிவுகளை நான் எப்போதுமே ரசித்து வந்திருக்கிறேன் ... சில சமயம் அவசரத்திலோ அல்லது உணர்வின் வேகத்திலோ வெளிப்படும் வார்த்தைகளின் தன்மைகளைத் தவிர. அதனை சரி செய்ய வேண்டும் என்பதே என் வேண்டுகோள்.
நகைச்சுவையினை விரும்பாதவர் யார் உளர் .. அதில் மாற்றுக் கருத்திற்கு இடமில்லை.
நூற்றுக்கு நூறு உண்மை. ஒவ்வொரு படத்திலும் ஒவ்வொரு காட்சியிலும் இதனை நாம் காணலாம். இதனை நான் முன்பே வேறொரு பதிவில் சுட்டிக் காட்டியிருக்கிறேன். உதாரணத்திற்கு மணமகன் தேவை படத்தைக் கூற விரும்புகிறேன். பானுமதியின் வீட்டிற்கு முதல் முறை வரும் போது காரில் வருவார். அப்போது அவர் வீட்டில் காரை நிறுத்தி விட்டு உள்ளே போக வேண்டும். காரை நிறுத்தி, இன்ஜினை அணைத்து விட்டு சாவியை எடுத்துக் கொண்டு வந்து அந்த காட்சியை முடிப்பார். அதன் பிறகு காட்சி வீட்டிற்குள் தொடரும். ஒவ்வொரு படத்திலும் ஒவ்வொரு காட்சியிலும் முடிக்கும் போது ஒரு ரிதம் இருக்கும், perfect finish இருக்கும்.Quote:
நடிகர்திலகத்தின் காட்சி finish பண்ணும் போது character -action -mood ஆகிய அனைத்தையும் ஒரு சிறு gesture மூலம் establish பண்ணும் அழகு.
அன்பு நண்பர் P_R அவர்களுக்காக
நடிகர் திலகத்தின் அழுகைக் காட்சிகள் - தொடர்
பொதுவாக இக்காலத்தில் பரவலாக ஒரு தவறான அல்லது மிகையான அபிப்ராயம், நடிகர் திலகத்தின் படங்களில் வரும் அழுகைக் காட்சியைப் பற்றி நிலவி வருகிறது. அந்த myth உடைக்கப் பட வேண்டும் என்பதே இத் தொடரின் நோக்கம்.
அழுகை பல்வேறு சந்தர்ப்பங்களில் பல்வேறு காரணங்களில் திரைப்படங்களில் இடம் பெறும். இதனைப் பற்றித் தனியாக விரிவாக எழுதலாம். முதலில் உதாரணங்களைக் கூற முற்படுகிறேன். அதன் பின்னர் அந்த பல்வேறு விதமான சூழ்நிலைகள் தானாகவே விளக்கி விடும்.
பெரும்பாலானோர் பார்த்திராத, அல்லது ஒதுக்கியிருக்கக் கூடிய படம் தாம்பத்யம். நான் ஏற்கெனவே சொன்னது போல் அரைகுறை அல்லது அரை மனதோடு உருவாக்கப் பட்டது போல் தோற்றமளிக்கக் கூடிய தொழில் நுட்பங்களைத் தாண்டி, நடிகர் திலகம் என்னும் மாமேதை ஒளிரும் காட்சிகள் அடங்கிய சில படங்களில் இதுவும் ஒன்று. இதனுடைய மைனஸ் பாயிண்டுகளை எழுத ஏகப் பட்ட பக்கங்கள் வேண்டும். ஆனால் சிங்கம் ... அதன் மேன்மை குறையாமல் அப்படியே இருக்கும் படம் தாம்பத்யம்.
நடிகர் திலகத்தை விரும்புபவராக ராதா வருவார். ஆனால் அவர் விரும்புவது நடிகர் திலகத்திற்கு தெரியாது. ஆனால் நன்கு பழகிய நண்பராக நடிகர் திலகம் கருதி பழகி வருவார். ராதா தொடர்பான காட்சிகள் பின்னோட்டமாக வரும். ஒரு கட்டத்தில் ராதா இறந்து விடுவார். அப்போது நடிகர் திலகம் அழுகையைக் காட்ட வேண்டிய சூழல்.
தமக்கு மிகவும் பரிச்சயமான ஒருவர் இறக்கும் போது நாம் வருத்தப் படுவது அழுவது உண்டு என்றாலும் அது மிகவும் ஆழமான வருத்தமாக இராது. நாம் அதற்கு பச்சாதாபப் பட்டு மிகவும் தெரிந்தவர் இறந்து விட்டாரே என்பதற்கு எவ்வளவு வருத்தம் வருமோ அந்த அளவிற்குத் தான் வருந்துவோம், அதற்கு ஏற்ற வகையில் தான் நம்முடைய அழுகையும் இருக்கும். இதனை இக்காட்சியில் நடிகர் திலகம் தன் அழுகையின் மூலமாகவே அற்புதமாக வெளிப்படுத்தியிருப்பார். ஒரே ஒரு முறை அந்தக் கதாபாத்திரத்தின் பெயர் உச்சரிப்பார் ... அவ்வளவு தான் ...
வாசு சார் ,இந்தக் காட்சியை முடிந்தால் வீடியோவில் தரவேற்றுமாறு கேட்டுக் கொள்கிறேன். இதில் பொதிந்துள்ள நுட்பமான உணர்வை நடிகர் திலகத்தின் நடிப்பில் அறிந்து கொள்ள மிகவும் பயனுள்ளதாய் இருக்கும்.
இன்னும் பல படங்களிலிருந்து இத் தொடருக்கான விஷயங்கள் வர உள்ளன.
தாம்பத்யம் ஒரு surprise package . முதல் காட்சியில், கொலை குற்றம் சாட்ட பட்டு போலீஸ் தேடி கொண்டிருக்கும். வீட்டுக்கு வரும் அவரிடம், hostility காட்டும் பிள்ளைகளிடம், அவர் காட்டும் reaction ......
Even in the remake of Prem Nagar & Avataar both ANR & Rajesh Khanna not showing
their expression which is required for that film. I have watched recently the telegu
version of VM where ANR delivering the dialogue without any expression/emotions.
That particular walk of our NT from the step during the song scene of Kalaimagale
is enough why our NT incomparable actor with anyone in the world. Simlilary the
case of with Avataar. Rajesh Khannan not showing the correct expression throughout
the film whereas in Vazhkai everyone can see the difference why our NT the University of
acting.
Mr. Gopal sir,
namadhu threadil ennaikkum humour shortage kidaiyaadhu. especially Mr. Ganpat sir's humours are 'must enjoy' category. Previously mr_karthik's posts also carry needful humours. But avar kindaladippadhu mostly about artists, not about hub members (now we miss those humours)..
humours are always enjoyable till they are not crossing the boundries.
Mr. (Neyveli) Vasudevan sir,
Thanks for the clipping of 'Vaazhkai' the great movie. What an expression in that scene.
Mr.Raghavendar sir, we can raise up our collars as it is one of 'after 80' movies.
I must watch the full movie today.
நகைச்சுவைக்கு என்றே நமது திரைப்படப் பட்டியலில் அடுத்து இடம் பெறப் போகும் மணமகன் தேவை படம் பிரசித்தி பெற்றது. தன்னுடைய தங்கை பெயரையே தன்னுடைய இன்னொரு உருவமாக பாவித்து அதற்கு சூட்டி ஒரே சமயத்தில் தன்னை காதலிக்கும் இளைஞர்களை சாமர்த்தியமாக சமாளிக்கும் பெண்ணின் வாழ்க்கையில் சந்திக்கும் சம்பவங்களே படத்தின் கரு. இப்போதைக்கு இது போதும். மணமகன் தேவை திரைப்படத்திலிருந்து ஒரு நிழற்படம், நகைச்சுவையாக உருவாக்கப் பட்டுள்ளது இங்கே நம் பார்வைக்கு.
http://i1146.photobucket.com/albums/...ps07a53019.jpg
There will always be some combos that you would dream of that may be hard to materialise. But still even the remote possibility of such combo will make you mouth watering. Such a combo when it becomes a reality will give immense pleasure to one and all. No, I am not talking about the Sachin - Ricky of MI. Though they are yet to fire in unison, our thread's Sachin and Punter have set up a great momentum. It is a pleasure to read the current series and in addition when you are additionally served with delectable delicacies by Prabhu and Ganesh [the later nicely mixing it with the traditional Cauvery Kusumbu] what more do you want? Please continue as i lean back in my arm chair and enjoy it.
Vasu Sir,
Glad to see you back. Hope you are completely recovered from the illness.
Regards
நண்பர்கள் திரு.கோபால்,ஆதிராம் அன்புடன் அளித்த பாராட்டுக்களுக்கே, கிறு கிறுத்து நின்ற என்னை,கீழேயே தள்ளி விட்டது நண்பர் முரளி அவர்களின் கனிவான பாராட்டு.
இவ்வகையில் சில சமயம் பாராட்டுகளுக்கு நன்றி சொல்வது கூட சிக்கல் ஏற்படுத்தி விடும்.எப்படி?
ஒரு ராமாயண நாடகம் நடந்து முடிந்தவுடன் அதில் அனுமனாக நடித்த ஒரு பெரிய நடிகரை அனைவரும் மேடையேறி பாராட்டினர்.அதை ஏற்றுக்கொண்டு பேசிய அவர் அடக்கத்துடன்,"இந்த பாராட்டில் பெரும்பகுதி எனக்கு அனுமாராக ஒப்பனை செய்தவரையே சாரும்!" என அறிவிக்க,அந்த ஒப்பனைக்காரர் (என் போன்ற ஒரு அப்பாவி) உடனே மைக்கை பிடித்து,"அண்ணா, என்னை அளவுக்கதிகமாக புகழ்கிறார்! நான் என்ன அப்படி பிரமாதாமாக ஒப்பனை செய்து விட்டேன்.ஒரு வால் ஒன்றை ஓட்டினேன்.அவ்வளவுதான்!!" என் அதை விட அடக்கமாக சொன்னாராம்.
மேலும் ராமாயணமும் மகாபாரதமும் யார் சொன்னாலும் சுவையாக இருக்கும்.அதைப்போல அல்லவா நம் தலைவர் புராணமும்!ஒவ்வொரு நண்பரும் தன பங்கிற்கு தலைவர் நடித்த ஒரு காட்சியை விவரிக்கையில்,அப்படியே மனம் மிக இலேசாகி விடுகிறதே!நண்பர் கோபால் அவர் பாணியில் தலைவரை உலக மகா நடிகர்கர்களுடன் ஒப்பிடுகையில் மனம் பூரிக்கிறதே!அப்பொழுது ராமருக்கு அணில் செய்த சிறு உதவியைப்போல
நானும் என் பங்கிற்கு ஏதாவது எழுத மனம் விழைகிறதே!இதெல்லாம் தன்னிச்சை செயல்கள்
(reflex actions) அல்லவா?
ஆயிரக்கணக்கில் அற்புதமான பதிவுகளை இட்டு அரியாசனத்தில் அமர்ந்திருக்கும் நண்பர்கள்,முரளி,பார்த்தசாரதி,பம்மலார் போன்றோர் மனம் மகிழ என் பதிவுகள்
அமையுமெனில் அதை விட எனக்கு மகிழ்ச்சியளிப்பது வேறு எதுவாக இருக்க முடியும்?
எல்லா வகையிலும் நான் இந்த மய்யம் அமைப்பிற்கு மிகவும் நன்றிக்கடன் பட்டுள்ளேன்.
நன்றி கோபால்.
"உலக பெரும் அதிசயம்" இன்னும் பல பகுதிகள் தொடரட்டும்.
வாழ்த்துக்கள்.
Thank you Adiram ji!
I may be Dhoni,but there are strong fielders like Pollard standing on the fence to prevent the balls from crossing the boundary.
(those who have watched the IPL yesterday would have been thrilled by the Sivaji catch taken by Pollard)
Gopal sir,
PM anuppaththaan mudiyum. adhukku atleast reply panninaaththaane.
avanga phone numberum theriyaadhu. (yaarudaiya phone numberum theriyaadhu, including yours).
avargal irauvarai vida naan aavaludan adhigamaaga edhirpaarppadhu, namadhu PAMMALAR avargalin varugaiyai.
Got this image from Facebook...Looks like same year released film. The hype that one film enjoyed was extreme when compared to other..Any insight?Attachment 2314
ILAYARAJA TOO HAILS NADIGAR THILAGAM - Reproduced News from Internet
`கடினமான பாடலுக்கு பிரமாதமாக வாயசைத்தார்'- சிவாஜிகணேசனுக்கு இளையராஜா புகழாரம்
பஞ்சு சார் அடுத்து 'கவரிமான்' என்ற படத்தில் நடிக்க சிவாஜியை ஒப்பந்தம் செய்தார். நடிகர் திலகத்தின் பாத்திரப் படைப்பை ரசிகர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. (மனைவி சோரம் போகிற காட்சியை பார்க்கும் கணவனின் கேரக்டர்)
என் இசையில் முதன் முதலில் ஒரு தியாகராஜ கீர்த்தனை இடம் பெற்றது இந்தப் படத்தில்தான். 'ப்ரோவ பாரமா?' என்ற கீர்த்தனையை ஜேசுதாஸ் பாட, டி.வி.கிருஷ்ணன் அவர்களின் வயலினும், டி.வி.கோபாலகிருஷ்ணனின் மிருதங்கமும் இணைந்தன.
சிவாஜி இந்தப் பாட்டுக்கு வாயசைத்ததை கண்டு வியந்து போனேன்.
ஆரம்பத்தில் ஜேசுதாஸ் ராகம்பாடி, தாளம் ஏதும் இல்லாமல் திடீரென்று `ப்ரோவபாரமா' என்று தொடங்குமாறு பதிவு ஆகியிருந்தது.
ராகம்பாடி, `ப்ரோவ பாரமா' தொடங்குவதற்கு இடையில் தாளத்தில் ஏதாவது வாசித்திருந்தால் நடிப்பவர்களுக்கு பாடல் தொடங்கும் இடம் சரியாகத் தெரிந்து வாயசைக்கலாம்.
ராகம்பாட, வெறும் தம்புரா மட்டும் போய்க்கொண்டிருக்க, அது எவ்வளவு நேரம் போகிறது என்று கண்டுபிடித்து, பாடல் ஜேசுதாஸ் குரலில் வரும் அந்த நொடியை எப்படியோ கண்டுபிடித்து சரியாக வாயசைத்தார்.
இதைப் பாராட்டி, அண்ணன் சிவாஜியிடம், 'எப்படிச் செய்கிறீர்கள்?' என்று கேட்டேன்.
'என்னை என்னடா நினைச்சிட்டே? சும்மா ஏனோதானோன்னு சினிமாவுக்கு வந்தவன்னு நினைச்சியா? இதெல்லாம் முடியாட்டா ஏண்டா ஒருத்தன் நடிகனா இருக்கணும்?' என்று கேட்டார் சிவாஜி.
'நடிகர் திலகம்' என்று சும்மாவா பட்டம் கொடுத்தார்கள்?
Finally finally saw ThillAnA on the large screen :bluejump:
Arguably the most complete Tamil film of all time.
Sivaji, KV Mahadevan, APN, Padmini, Nagesh, Baliah, Manorama
An outstanding performance from Sivaji. As I tried to write once earlier, SikkalAr is one of his very best characters/performances. The naturally hypersensitive supreme artist is depicted with such fluency and perfection.
Right from the first சமிக்ஞை to the (தன்னையே மறந்து வாசிக்கும்) Baliah - to notice Mohana to the dazed expression when glancing at his hand - which had just slapped Mohana - in the intermediate moment between the Maharaja clearing the air and exiting and Thangarathnam (AVM Rajan) entering to inform him of Mohana's suicide attempt. சிக்கலார் பத்தி எவ்வளவு தான் சொல்றது. It always feels incomplete. Such a wholesome performance.
Hats off to APN - every single larger-context (நாதச் சக்ரவர்த்தி) line was placed with maximum effect without affecting the balance of the script - indeed accentuating the aesthetics. And some camera movements can only be appreciated fully on large screen - with larger than life images - like the confrontation with Mohana in Madhanpur - the drama is there even in the arcs the camera cuts to capture Shanmugam back and forth.
My favourite Nagesh performance of all time. I have possibly quoted most of his lines. He is at his funniest best when he attempts to insult Sivaji - which he does in many places in the film. The way he asks them to start performing in the Rao Bahadur function..
"சண்முகசுந்தரம், நீ சட்டையெல்லாம் அவுத்துட்டு... ' :rotfl:
Still laughing as I type this.
:ty: to Murali sir and Mr.Raghavendran and the NT Fans organization for the screening. Look forward to the next.
It's our pleasure, Prabhu for having you all with us during such occasions. I could not sit with the audience because of arrangement commitments and my personal commitments. Hope you enjoyed the evening.
BEFORE AND AFTER ... THE Exhibition Hall before the inauguration (clicked on 6th Ap evening) and you can see Murali Sir in one of those snaps.
http://i1146.photobucket.com/albums/...ps7e402af8.jpg
http://i1146.photobucket.com/albums/...pse3f9a982.jpg
http://i1146.photobucket.com/albums/...psbccde8b8.jpg
http://i1146.photobucket.com/albums/...ps5aa36a16.jpg
http://i1146.photobucket.com/albums/...ps0a2499d4.jpg
http://i1146.photobucket.com/albums/...ps1264dd26.jpg
And now, today's snaps at the exhibition hall just after inauguration. You can see FILM NEWS ANANTHAN explaining to the Consul General.
http://i1146.photobucket.com/albums/...psbfd7efd1.jpg
http://i1146.photobucket.com/albums/...ps062adb46.jpg
http://i1146.photobucket.com/albums/...ps900c7a37.jpg
http://i1146.photobucket.com/albums/...ps1f832bdb.jpg
http://i1146.photobucket.com/albums/...ps7d4c561a.jpg
http://i1146.photobucket.com/albums/...ps25711a53.jpg