பம்மலார் சார்,
நடிகர்திலகத்தின் நினைவுநாளையொட்டி பல்வேறு மன்றங்களின் சார்பில் அமைக்கப்பட்ட சுவரொட்டிகளையும் பேனர்களையும் சிரமம் பாராது தொகுத்து இங்கே பதிப்பித்து, நமது திரியின் சார்பிலும் நினைவஞ்சலியை நிறைவேற்றியிருக்கிறீர்கள் மிக்க நன்றி.
சந்திரசேகர் சார்,
நடிகர்திலகத்தின் நினைவுநாளையொட்டி அன்னதானம் நிகழ்ச்சிகளை சிறப்பாக ஏற்பாடு செய்தமைக்கு மிக்க நன்றி.
மற்றும் பல்வேறு இடங்களிலும் பல்வேறு விதங்களிலும் அவரது நினைவஞ்சலியை சுவரொட்டிகள், பேனர்கள் வாயிலாகவும், அன்னதானம் மற்றும் ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகள் வாயிலாகவும், மற்றும் தங்கள் தனிப்பட்ட வலைப்பூக்களில் அவரைப்பற்றிய நினைவஞ்சலி கட்டுரைகள், கவிதைகள் வாயிலாகவும், சில தொலைக்காட்சி சேனல்கள் தங்கள் நிகழ்ச்சிகள் வாயிலாகவும் நடிகர்திலகத்தின் நினைவுநாளை மனமுருகி நினைவு கூர்ந்தமைக்கு மேலும் மேலும் நன்றிகள்.