திவ்யா பிலிம்ஸ் சொக்கலிங்கம் அவர்களின் இந்த மாபெரும் முயற்சி வெற்றியடைய வாழ்த்துக்கள்
அன்புடன்
திவ்யா பிலிம்ஸ் சொக்கலிங்கம் அவர்களின் இந்த மாபெரும் முயற்சி வெற்றியடைய வாழ்த்துக்கள்
அன்புடன்
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
Wow, watching Karnan in Shanthi theatre with DTS.... I have already started imagine the Sunday "Alapparai" on that day... it will beat Gowravam "Alapparai". It would be nice if released between Aug. 3rd week and Sep. last week, so that I can enjoy the "Alapparai" in person.
Cheers,
Sathish
Last edited by goldstar; 21st July 2011 at 10:22 AM.
Parthasarathy sir,
You are 100% correct, few news paper themself called as "only truth news" and are so biased on giving information about NT and have written few emails to them but as usual no response. Best thing we could do just ignore these nutshell people.
Cheers,
Sathish
கலையுலகின் கறுப்பு நாள்.......
அந்த 2001 ஜூலை 21 என்ற கறுப்புநாள் வராமலே போயிருக்கக் கூடாதா?. அதிகம் நடிப்பதில்லை என்றாலும் எங்களோடு இருக்கின்றாய் அதுபோதும் என்று எண்ணியிருந்த எங்கள் எண்ணத்தில் மண் விழுந்த அந்த நாள். மீண்டும் மீண்டும் வந்து எங்கள் உள்ளங்களை வாட்டுவது ஏனோ?. எங்கள் உள்ளங்களில் ஒட்டிக்கொண்ட உன் நினைவுகள் இருக்கின்றனவா என்று சோதிப்பதற்கா?. உன்னை நினைக்கும்போதெல்லாம் எத்தனை எண்ணங்கள், இனிய நினைவுகள். ஒன்றா.. இரண்டா..?.
'ரக்ஷா பந்தன்' கொண்டாடும் பழக்கமில்லாதவர்கள் நாம். இருப்பினும் இதை சாக்காக வைத்து உன்னைக்காண வேண்டும் என்பதற்காக, ‘ரக்ஷாபந்தன்’ தினத்தன்று ஒரு பெரிய ‘ராக்கி’யை எடுத்துக்கொண்டு உன்னிடம் ஓடி வந்தேன், நான் மட்டும்தான் கட்டப்போகிறேன் என்ற எண்ணத்தில். ஆனால் எனக்கு முன்பே பல வடநாட்டுப்பெண்கள் உன் இல்லத்தின் முன் ராக்கியோடு நிற்பதைப்பார்த்து அதிசயித்தேன். உன்னை அண்ணா என்று உரிமை கொண்டாட எத்தனை தங்கைகள்..!!. ராக்கி கட்டியவர்களுக்கெல்லாம், பக்கத்தில் நின்ற உதவியாளரிடம் பணம் பெற்று கொடுத்துக் கொண்டிருந்தாய்.
என்முறை வந்தது. “என்னம்மா, நல்லாயிருக்கியா?” என்று சிரித்துக்கொண்டே வலது கையை நீட்டினாய். பதட்டத்தில் எனக்கு முடிச்சுப்போட வரவில்லை. என் கணவர்தான் உதவினார். என் பதட்டத்தை நீ ரசித்துச் சிரித்தாய். மெய்மறந்து நின்றேன். உதவியாளர் தர அந்த நூறு ரூபாய் நோட்டைத் என்னிடம் நீட்டினாய். “அண்ணா, நீங்கள் த்ரும் இந்த நூறு ரூபாய் எனக்கு கோடிக்கு சமம். எப்படியும் இதை நான் செலவழிக்கப் போவதில்லை. அதனால் உங்கள் கையெழுத்துப்போட்டு தந்து விடுங்கள்” என்று நான் கேட்க, அதை உதவியாளரிடம் கொடுத்துவிட்டு, இன்னொரு புத்தம்புது நூறு ரூபாய் நோட்டை வாங்கி உன் கையெழுத்திட்டு தந்தாய். இன்றைக்கும் என்வீட்டு வரவேற்பறையில் எவர்சில்வர் பிரேமிட்ட கண்ணாடிபேழையில் நீ கையொப்பமிட்ட 'அந்த கோடி ரூபாய்' ஜொலிக்கிறது.
2001 ஜூலை 21-க்கு முன் வரை அதைப்பார்க்கும்போதெல்லாம் பெருமிதம் பொங்கும், இப்போதோ பார்க்கும்போதே கண்களில் நீர் கோர்க்கிறது. எத்தனை நினைவுகள் இதுபோல..!!!!.
உன்னை இழந்துவிட்டு ஓராயிரம் ஆண்டா வாழ்ந்துவிடப்போகிறோம்?. இதோ வந்துகொண்டே இருக்கிறோம்.
அதுவரை உன் நினைவுகள் எங்களோடு.....
கண்ணீருடன், தங்கை சாரதா.
இது புகைப்படமல்ல .. நடராஜன் என்ற அன்பர் தீட்டிய ஓவியம்
நன்றி : Facebook -ல் ஜீவா நந்தன் (ஓவியர் ..சமீபத்தில் தன் ‘திரைச்சீலை’ புத்தகத்துக்காக தேசிய விருது பெற்றவர் ..நடிகர் திலகத்தின் ரசிகர் ..நாஞ்சில் மண்ணிலிருந்து இப்போது கோவையில் குடியுருப்பவர்) ..இன்று நடிகர் திலகம் நினைவு நாளையொட்டி Facebook -ல் கலக்கிக்கொண்டிருக்கிறார்.
Last edited by joe; 21st July 2011 at 11:10 AM.
பாசமலருக்கு அழாதவன் மனுஷனாடே ! - சுயம்புலிங்கம்
அட ஆமா பயின்டிங்கு . Captured the ferocity well. Thanks, Joe.
" நல்ல படம் , சுமாரான படம் என்பதையெல்லாம் தாண்டியவர் நடிகர் திலகம் . சிவாஜி படம் தோற்கலாம் ..சிவாஜி தோற்பதில்லை." - Joe Milton.
நமது உணர்வுகளைப் பிரதிபலிக்கும் திரு. கவிதாலாயா கிருஷ்ணன் அவர்களின் அஞ்சலிக் கவிதை மிக அருமை.
திரு. கிருஷ்ணன் அவர்களை ஒரு நல்ல நடிகராகவும் நம்மைப் போன்ற தீவிர நடிகர் திலகம் அபிமானியாகவும் அறிந்திருந்தோம். சாந்தியில் திரையிடப்படும் படங்கள் அனைத்திற்கும் தவறாமல் வந்து விடுகிறார். கெளரவம் படத்தை பார்க்க காட்சி நேரத்துக்கு 1 மணி நேரம் முன்பே அரங்கத்துக்கு வந்து காத்திருந்தார்.
இப்போது அவருக்குள் இருக்கும் கவிஞரை நமக்கு ராகவேந்திரன் சார் தெரியப்படுத்தி இருக்கிறார். இருவருக்கும் மனமார்ந்த நன்றி.
Bookmarks