Thanks for all your replies and noted the contents. Now let us proceed with positive frame of mind and be constructive. I again politely request you not to irritate fellow hubbers in this forum.
Printable View
Gopal Sir
Sometimes I thought of putting posts (information/questions/discussion) in the Nadigar Thilagam Thread;
You hubbers (senior people) in this thread, won't permit other posts than glorification of NT;
So I keep myself away from NT thread.
In other threads (Kamal/Rajini/Ajith), many people are participating.
(This post is not to put blame..just sharing)
Dear Ravi,
Please post your comments and no one is going to stop you. I feel few people come with some agenda to blindly blame or make fun of NT which should be avoidable. There should be a healthy discussion so that we can get more details about NT and his caliber and other actors limitation. As you mentioned other threads I never seen any one blaming or making fun of other actors like done in NT thread. It seems NT is only actor the Tamil field who could be blamed for anything. I hope my statement makes sense to you.
Please continue your post.
Cheers,
Sathish
Ravi,
I know pretty well how much of tolerence is shown in other threads and the quality of articles. You are most welcome to participate and welcome to get clarified. Instead coming in groups like guerillas and tried to derail the discussions and flow.
You are with intellectuals here and you will get correct answers and clarifications. but advised to maintain some decorum and positive attitude. Infact some of us are worst critic than you (even I) which is very much tolerated by this refined group.
GoldStar & Gopal Sir
Thanks for your reply.
Anyway, I am a regular visitor to NT thread.
ரொம்ப நன்றி ரவி.தொடருங்கள். எங்களுடன் உடன் வருவீர்கள்.
அண்ணனுக்கு ஆதரவாய் நாலு வார்த்தை சொல்வதற்குள் இப்படியா? நீங்கள் எது வேண்டுமானாலும் பேசலாம். அண்ணன் எது வேண்டுமானாலும் பேசக்கூடாதா? நான் கூப்பிட்ட குரலுக்கு ஓடோடி சேவை செய்ய வந்திருக்கும் அண்ணனிடம் இப்படியா நீங்கள் நடந்து கொள்வது? இப்பக் கூட பாருங்கள் 2 வயது குறைவாக சொல்லிவிட்டதால் மன்னிப்புக் கேட்டுக்கொண்டார். அது போல அவர் எதேதில் தவறு செய்கிறாரோ அதையெல்லாம் இப்படி ஆதாரத்துடன் காட்டுங்கள். அண்ணன் அவ்வப்போது அதுக்கெல்லாம் மன்னிப்பு கேட்டுக்கொள்வார். இதுபோல அவர் எத்தனை முறை செய்திருக்கிறார். இன்னும் நீங்கள் அவரை புரிந்து கொள்ள வில்லையே.
Hello Everybody,
My name is Kumaran. I am introduced to mayyam by my nephew. I was working with Revenue Department and took a VRS.
I am voracious reader from my PUC days and film lover. I have always admired good films irrespective of ICONS.
There are lot of good reading materials in Mayyam that speaks about Traditions, cultures and more and there is equally good threads that pertains to ICONS & Films.
Am reading your threads quite regularly. Many a times, i found it interesting, sometimes debatable, few times argumentative. Overall mix of all ingredients, i would say.
Not sure of typing in Tamil, yet am sure, I will be allowed to share my views - be it is positive or negative (as I am used to call Spade a Spade)and contribute to the thread. Hope that's fine with all here, most importantly, the stake holder of this thread Sri. Gopal.
All the best !
மேலே சாம்பாரில் இரண்டு "தான்" போட்டுள்ளீர்கள்.அதில் ஒன்றை எடுத்து விட்டு..அடிமட்டத்தில் ஆரம்பித்து மிகப் பெரிய உச்சத்தை தொடுவது ஒரு மனிதனின் மிகப் பெரிய சாதனை. அதைதான் எம்.ஜி.ஆரும், கமலும் திரை உலகில் சாதித்து இருக்கிறார்கள். என்று ஆக்கிவிட்டால் எங்களுக்கும் எந்த மாற்று கருத்தும் இல்லை.
ராஜா ஒன்று சொல்லுங்கள்..ஒருவர் அடிமட்டத்தில் பிறந்தால், உழைத்து, கஷ்டப்படுத்தி, உச்சத்தை தொடலாம்.ஆனால் உச்சத்திலேயே பிறந்த ஒருவர் என்ன செய்வார்?மீண்டும் கீழே சென்று அடிமட்டத்திலிருந்து தொடங்கி மேலே வர வேண்டுமா?நான் பிறக்கும்போது Ganpat.எனவே கஷ்டப்பட்டு மேலே வந்து ராஜா ஆக வேண்டும்..ஆனால் நீங்களோ பிறக்கும்போதே ராஜா !!..நீங்கள் எதற்கு Ganpat லிருந்து தொடங்கவேண்டும்?
லீலாவதி அம்மையார், மூச்சிறைக்க தட்டித்தடவி மேலேறி, பராசக்தி உயரத்தை எட்டியபோது, பராசக்தி பல மடங்கு உயர்ந்து மோகனாம்பாள் ஆகி விட்டார்.அதற்கு யார் என்ன செய்வது? என்ன! முன்னவர் முடிவாக எட்டிய சொர்க்கத்தை பின்னவர் 13 ஆண்டுகளுக்கு பின்னரே அடைந்தார் என்று வேண்டுமானால் மனதை தேற்றிக்கொள்ளலாம்.
NT sir thread ah oru ajith fans vs Vj fans, dhanush fans vs simbu fans thread maathiri aaga vittudatheengo plz, this used to be a healthier thread and even today compared with other threads this is the healthiest thread..........
Stake Holder????!!!!!!!! Not too fine. Just a junior most simple member. The real stake holders are Joe,Murali,Karthik,Saradha,Ragavendhar,Sarathy,Vas udevan to mention a few.
Any case welcome to participate with your positive contributions. Debates are healthy.
Dear Friends,
I shall catch up later.
I have to take medicines post lunch and rest for couple of hours, I shall take leave now for a while.
Nice
டியர் வாசுதேவன் / கோபால் சார்,
உங்களுடைய எல்.ஆர்.ஈஸ்வரி பாடல்கள் தேர்வு இனிமை.
என்னுடைய All Time Favourite "பட்டத்து ராணி" பாடல்தான். தலைவரின் சாட்டைக்கு இளமைத் துள்ளலாக வரும் இப்பாடலை என்று, எப்போது கேட்டாலும் பரவசம்தான்.
http://www.youtube.com/watch?v=3zm1tX7jxWU
குமரன்,
இந்த மாதிரி அடி போட்ட பலர் வேஷம் கட்டியே வந்துள்ளனர்.சுகாராம் போல. ஒவ்வொருத்தருக்கு வேறுரசனை ,மற்றும் fine austhetics உள்ளவர்கள் இரண்டு வேறு பட்ட விஷயங்களை ரசிக்க முடியுமா என்பது கேள்விகுறி. தாங்கள் இரண்டிலும் தொடங்கி உள்ளதால் கலகம் வர வாய்ப்புள்ளது. நீங்கள் எங்கே விருப்பமோ அங்கே தொடருங்கள். சரியாக மாத்திரை போட்டு ஓய்வெடுங்கள். விருப்ப பட்டால் வாருங்கள்.ஆரோக்யமான விவாதங்களுக்கு தயார்.
Mr Karthik Sir,
Expecting your visit to Chennai. As Mr Chandrasekar told, we the hubbers can meet in one particular
place.
+1, As mentioned in NOV's signature, it is better not to argue with fools sometimes as they can easily beat you in their game........ at the same time, if some one genuinely feels / have wrong conceptions, it is duty of a fan to clear that without compromising on the dignity of their leaders (in the standard of the discussion)
சந்திரசேகர் சார்,
நான் இதுல இருந்து கொஞ்சம் மாறுபடுகிறேன் . முட்டாள்களிடம் பேசி பயனில்லை தான் .ஆனால் முட்டாள்கள் பொதுவெளியில் நின்று பிதற்றுவதை பலரும் உண்மை என்று ஏற்றுக்கொள்ளும் நிலையும் இருந்து வருகிறது . உங்களுக்குத் தெரியும் . மையம் தவிர வலைப்பதிவுகளில் 2003-லிருந்து ஒரு 5 வருடங்கள் நானும் தீவிரமாக இயங்கிக் கொண்டிருந்தேன் .அப்போதெல்லாம் வலைப்பதிவுகளிலும் நம் நடிகர் திலகத்தை கிண்டலும் கேலியும் செய்து பலர் பிதற்றும் போது அதை கேள்வி கேட்க யாருமில்லை என்ற மிதப்பு தான் பலரை அவ்வாறு பேச வைத்தது என எனக்குப் பட்டது .பின்னர் முடிந்த அளவு சிவாஜி பற்றி பதியப்படும் வலைப்பதிவுகளுக்கு சென்று நாலு வார்த்தையாவது பதில் சொல்லும் வழக்கம் எனக்கு இருந்தது . இங்கிருப்பவர்களைப் போல அணு அணுவாக ரசித்து விளக்கி என்னால் நிறுவ முடியாதென்றால்லும் , கேட்கிறதுக்கு ஒருத்தனாவது இருக்கிறான் என்ற எண்ணம் வரட்டும் என நினைத்தேன் .அப்போது சொற்ப பேரே இருந்த தமிழ் வலைப்பதிவு பரப்பில் என்னை எல்லோரும் சிவாஜியை வைத்தே அடையாளப்படுத்தும் அளவுக்கு தனித்தே நான் செயல்பட்டேன் .இன்றும் வலைப்பதிவு வட்டத்தில் என்னை சந்திப்பவர்களும் அறிமுகப்படுத்துபவர்களும் சிவாஜியை குறிப்பிடாமல் இருக்க மாட்டார்கள் . இந்த அருணின் செய்தியில் என் முதல் கருத்துக்கு அடுத்து சிவகுமார் என்பவர் "நீங்க தொலஞ்சீங்க" என அருணிடம் சொன்னது அதனால் தான் .அவர் தொடக கால சக வலைப்பதிவர் என்பதால் அவருக்கு தெரியும்.
இன்றைக்கு இணையத்தின் பல பரப்புகளிலும் சிவாஜி பற்றி இது போல விஷம கருத்துகள் பரப்பப்படுகிறது ..கேட்க ஆளில்லை என நினைத்து இன்னும் சிலர் வந்து கும்மி அடிக்கிறார்கள் .இவர்களுக்கு முடிந்த அளவுக்கு பதிலடி கொடுக்க வேண்டியதும் நம் கடமை என நினைக்கிறேன் . இங்கே நமக்கென்று ஒரு திரி வைத்துக்கொண்டு நாமே நமக்குள் விவாதித்து சிலாகித்து , நாமே ஒருவரை ஒருவர் பாராட்டிக்கொண்டு இருப்பதால் கிடைக்கும் பலனை விட இதற்கு வெளியே பல தளங்களில் நம் ஈடுபாடும் , எங்கெல்லாம் சிவாஜி பற்றி விவாதிக்கபப்டுகிறதோ நமக்கு தெரிந்தவரை அங்கெல்லாம் சென்று சிவாஜி பற்றி எது வேணா பேசிட்டு போய்விட முடியாது என்ற எண்ணத்தை பரவலாக்க வேண்டும் என்பது என் விருப்பம் .
என்னைப் பொறுத்தவரை சிவாஜியின் அருமை பெருமையை இன்னும் அதிகமாக ஒருவரிடம் கொண்டு சேர்ப்பதுவும் , சிவாஜி பற்றி மேம்போக்கான கருத்துள்ள ஒருவரை அவர் மகத்துவத்தை உணரச் செய்வதுமே அதிக மகிழ்ச்சி அளிக்கக் கூடியது .அதை நான் என்னளவில் என்னை சுற்றியிருப்போரிடம் தொடர்ந்து செய்வேன் .
எனக்கு ஒரு விஷயம் மட்டும் சில காலமாகவே விளங்கவில்லை. வலைப்பூ எழுதும் பிரகஸ்பதிகளில் பெரும்பாலானோர் நடிகர்த்திலகத்தையே குறிவைத்து தாக்குவதும், தரக்குறைவாக எழுதுவதற்குமான காரணம் என்ன?. அந்த அளவுக்கா மற்றவர்கள் பிரமாதமாக நடித்திருக்க, இவர் மட்டும் அவ்வளவு படு மோசமாக நடித்து விட்டார்??. சரி, அப்படியே (ஒரு வாதத்துக்கு) வைத்துக் கொண்டாலும், அவர் நடிப்பு பிடிக்காதவர்கள் அவர் படத்தை விட்டு விட்டு தங்களுக்கு பிடித்த வேறு படங்களைப் பார்க்க வேண்டியதுதானே. எவன் தடுத்தான்?. அதை விட்டு, 'அவர் அப்படி நடித்திருக்க வேண்டும், இப்படி நடித்திருக்க வேண்டும்' என்றெல்லாம் வரையறை செய்யும் தகுதி எவனுக்கு வந்து விட்டது?.
ஜோ சார்,
தங்களுடைய பணிக்கு பாராட்டுக்கள்
தங்களுடைய கருத்தை ஏற்றுக்கொள்கிறேன். நம் நேரத்தை வீணடித்து, திசை திருப்புகிறார்களே என்ற வேதனையில் இதனை நான் தெரிவித்திருந்தேன். தங்களைப் போன்றே (வாய்ப்பிருக்கும்) ஒவ்வொரு சிவாஜி ரசிகரும் பதிலடி கொடுத்தால், நடிகர்திலகத்தை வம்பிழுக்கும் கூட்டம் காணாமல் போய்விடும் என்பது உண்மை.
தங்களுடைய கருத்தும், ஆதங்கமும்தான் எனக்கும் உள்ளது. தாங்கள் கூறுவது நூற்றுக்கு நூறு உண்மைதான். வலைப்பதிவில் என்று மட்டுமில்லை அதற்கு வெளியிலும் நடிகர்திலகத்தை தாக்குவதற்கென்றே ஒரு கும்பல் உள்ளது. நடிகர்திலகத்தின் சிலை திறக்கப்பட்டபோது, ஒரு தலித் அமைப்பின் சார்பில் எதிர்ப்பு தெரிவித்தபோது, அதற்கு எதிராக தலித்துகளுக்காக நடிகர்திலகம் என்னென்ன செய்தார் என்று பட்டியலிட்டு ஒரு துண்டுப் பிரசுரத்தை வெளியிட்டேன். எந்தப் பத்திரிகையாயினும் சிவாஜியைப் பற்றி தவறாக எழுதினால் அதற்கு கண்டனம் தெரிவித்து வருகிறேன்.
இன்னும் சொல்லப்போனால் தனிப்பட்ட முறையில் தெரிவிப்பதைவிட ஒரு அமைப்பாக செயல்பட்டால், நடிகர்திலகத்தின் புகழ் பரப்பும் பணியைச் செய்வதோடு, நடிகர்திலகத்தின் புகழுக்கு களங்கம் கற்பிக்கும் யாராயினும் அவர்களுக்கு பதிலடி கொடுப்பதற்காகவுமே நடிகர்திலகம் சிவாஜி சமூகநலப்பேரவை அமைப்பே தொடங்கப்பட்டது.
திருவிளையாடல் பெயரில் திரைப்படம் எடுக்கப்பட்டபோது எதிர்ப்பு தெரிவித்து அதனை மாற்றவைத்ததும், தற்போது சரஸ்வதி சபதம் பெயரை மாற்ற வைத்ததும் கூட இந்த வகையில்தான்.
ஒரு சாம்பிள்
http://i1234.photobucket.com/albums/...ps8f2e8280.jpg
என்னுடைய நிலையை விளக்க ஒரு வாய்ப்பு அளித்தமைக்கு நன்றி.
http://tamil.oneindia.in/movies/goss...on-184272.html
எம்.எஸ்.வீ சார்,
முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்.இதில் சந்தோஷ படும் உங்கள் நண்பன் நான். எங்கள் கர்ணனுக்கும்,பாசமலருக்கும் வெளியீட்டு விழாவிற்கு வராமல் நினைத்தாலே இனிக்கும் என்று போனவர்தானே? பார்க்கவே சதுக்க பூதம் போல தோற்றமளிக்கும் ஆளிடம் உட்கார்ந்து அரட்டை அடிக்கும் போது உங்களுக்கு வெட்டியாக 125 படங்கள் கொடுத்து ஆதரித்த நடிகர்திலகத்தை நன்றியோடு நினைவு கூர்ந்தீர்களா? எங்கள் 150 வது படத்துக்கே dubbing படம் போல இசையமைத்த மேதையே? இந்த அவமானம் உங்களுக்கு போதாது.
ஜோ சார்,
பதிலடி கொடுக்கச் சொல்லுங்கள். அதை மதிக்கிறோம். தாங்கள் சிவாஜி அவர்களுக்கு வலைதளங்களில் நேரும் அவமானங்களை நக்கீரராய் தனி ஒருவராய் தட்டிக் கேட்கும் தைரியத்தைக் கண்டு மெய் சிலிர்த்துப் போகிறோம்.
ஆனால் சில கேள்விகள்.
கண்ட கண்ட நாற்றங்களுக்கு எல்லாம் பதில் சொல்லணுமா? வேண்டுமென்றே இழித்துரைபோருக்கு பதில் சொல்லி ஒரு பிரயோஜனமுமில்லை.
இரண்டாவது அதை நீங்கள் திரியில் போட்டு பகிரங்கப்படுத்தியிருக்க வேண்டாம். இது பலரின் கருத்து. இப்போது பலர் அறிய விவிதபாரதி விளம்பரம் போல் கொடுத்து உலகறியச் செய்து விட்டீர்கள். அப்படியே விட்டிருந்தாலாவது ஒரு நான்கைந்து பேரோடவாவது போய் இருக்கும். (அப்படி என்ன சிவாஜி மேல் உங்களூக்கு கோபம் என்று தெரியவில்லை)
இன்னொன்று. நடிகர் திலகம் திரியில் நடிகர் திலகத்தைப் பற்றி சிலாகித்து எழுதாமல் ஜெயமாலினியைப் பற்றியா எழுதுவார்கள்? அவரவர்கள் திரியில்தான் அவரவர்களுக்குப் பிடித்தவர்களை பற்றிதான் எழுதுவார்கள். சிலாகித்துக் கொள்வார்கள். நக்கீரரான உங்களுக்கு இது கூட தெரியாமல் போனது எப்படி? அது கூட நீங்கள் தானே திரியை தொடங்கி வைத்தது?
பிறந்தநாள் வாழ்த்தைக் கூட ஏற்றுக் கொள்ளக் கூடாத உங்கள் பணிவுக்கு என் பெருந்தன்மையான வணக்கம்.
உங்களுக்கு அணுஅணுவாக ரசித்து நிறுவ முடியா விட்டாலும் உங்கள் சுருங்கச் சொல்லி விளங்க வைக்கும்:)உங்கள் தனி பாணியிலேயே உங்களின் தாக்குதல்களைத் தொடருங்கள்.
பலருக்கு நீங்கள் இதை வெளிச்சம் போட்டுக் காட்டியதே பிடிக்கவில்லை. அதைதான் சந்திரசேகரன் சாரும் தெரிவித்திருந்தார். அதே போல பல இடங்களில், பல நேரங்களில், பல திரிகளில் சிவாஜி அவமானப்படுத்தப்பட்டபோது உங்களைக் காணோமே! ஏன் இந்த பாரபட்சம்? ஓ....நக்கீரர் அப்போது தவம் செய்யப் போய் விட்டாரோ! இப்போது மட்டும் ஏன் இந்த வேகம்? கோபம்?
ஓஹோ...இப்போது புரிகிறது. அது திரியல்லவே! வலைத்ததளம் தானே!
I endorse Joe's views here. Nowadays many half backed people bring so many people's attention in the name of criticism. Such posts need fitting answer. Its an indirect way to educate other 1000's of ignorant people over the internet who just reading those discussions with their opinions. I see Jeeva from Kovai also contributing in that topic.
வாசுதேவன்,
புரிய வைத்தமைக்கு நன்றி .
வாசு சார்
என் உள்ளத்தை அப்படியே பிரதி பலித்து விட்டீர்கள். தங்களுக்கு மிக்க நன்றி. ஒவ்வொரு நாளும் ஒவ்வொருத்தர் வலைப்பூவில் எழுதிக் கொண்டு இருப்பர். இவற்றிற்கெல்லாம் பதில் சொல்லி சாத்தியமில்லை. வேண்டுமென்றே சொல்பவர்கள் புதிது புதிதாக ஏதாவது விமர்சனங்களை செய்து கொண்டு தான் இருப்பார்கள்.
சாதனைகளைப் பற்றி முன்பு செய்யப் பட்ட விமர்சனங்களெல்லாம் பம்மலாரின் ஆவணங்கள் மூலம் தவிடு பொடியாக்கப் பட்டு விட்டது. எனவே இன்றைய தலைமுறை என்கிற கேடயத்தின் மூலம் நடிகர் திலகத்தின் நடிப்பை விமர்சிக்கிறார்கள். இதற்கும் நாம் அவ்வப்போது தகுந்த காணொளிகள், நிழற்படங்கள், என்று அவற்றை எதிர் கொண்டு வருகிறோம். இதற்குப் பின்னால் நம்முடைய உழைப்பு எந்த அளவிற்கு உள்ளது என்பதை புரிந்து கொள்பவர்களுக்குத் தான் அவற்றின் அருமை தெரியும். காணொளிகள், நிழற்படங்கள், ஆவணங்கள் இவற்றை நம் திரியிலேயே கேலி செய்ததும் தேவையில்லை என்றும் பயனற்றவை என்றும் கூறியதும் நாம் கண்டது தானே. இன்று ஒவ்வொன்றிற்கும் ஆவணம் தேவைப் படும் போது நாம் பம்மலாரின் பொக்கிஷத்தைத் தானே பயன் படுத்துகிறோம்.
இது போல கடும் உழைப்புடன் பதிவுகள் இடப் படும் போது திசை திரும்பும் வகையில் விவாதங்கள் இடம் பெறாமல் இருந்தால் நாம் சொல்ல வந்ததை இன்னும் விவரமாக சொல்லலாம் என்கிற நோக்கில் தான் பதிவுகளை முறைப் படுத்தக் கேட்டுக் கொள்ளப் பட்டது.
அதே போல தான் தேர்ந்தெடுத்த சிலரின் பதிவுகளை மட்டும் சிலர் பாராட்டுவதும் இங்கே அவ்வப்போது நடைபெறுகிறது. இதனை சுட்டிக் காட்டிய போது எனக்கும் கண்டனங்கள் வந்தன.
இதில் அவ்வப்போது அரசியல் வேறு. நடிகர் திலகம் 1952ல் பராசக்தி வெளியான நாளிலிருந்தே இந்த இருட்டடிப்பு செய்வதையெல்லாம் சந்தித்துத் தானே வந்தார். அவர் என்ன புதியதாகவா இருட்டடிப்பு செய்யப் படுகிறார்.
நம்மைப் போன்ற உள்ளங்களில் உள்ளதை அப்படியே தாங்கள் உரைத்திருக்கிறீர்கள்.
ராகவேந்திரா சார்,
அருமை . இன்னும் தெளிவாக புரிய வைத்தமைக்கு நன்றி
Dear Chinnakkannan Sir,Excellent Kavidhai on Avan Dhaan Manidhan,made me to call you,"IVAN DHAAN MANIDHAN"(orumaiyil iruppadharku mannikkavum)
All NT fans,
regarding persons who talk ill of NT,we should know that they would not have enjoyed the golden movies of NT.In fact even to my friends I say I am proud and "LUCKY"to be a NT fan.NT had established whatever he had to establish.Anyone can analyse,and pass comments about actors who are alive.But,what ,they are going to gain in commenting ill of NT,who had become HISTORY.The only choice left to them,is they can be selective of NT movies,by seeing which they can enjoy.Otherwise,they need not select it.Any thing other than this is waste of time for our friends who think,write,talk ill of NT.
https://fbcdn-sphotos-g-a.akamaihd.n...94247550_n.jpg
Nadigar Thilagam Sivaji Ganesan Statue at Thirubuvanam, Thanjavur
image courtesy: FB friend Thirubhuvanam Sankar
Describtion as quoted in FB page of Sankar:
Link for the page: https://www.facebook.com/photo.php?f...count=3&ref=nfQuote:
Thanjavur (Mavattam) Thiruvitaimaruthur (Vattam) Thirubuvanam (Pin Code) 612103 Ooril Thamizhagathileye Muthan Muthali Ayya Maraintha Oru Varutathirkkul Muzhu Uruva Silai Amaikkap Pattathu, Rasigarkalin Migakkatum Muyarchiyazhum Appakuthiyei Serntha Vanigarkal, Nesavalargal, Vivasaygal, Pala Nadigarkalin Rasigar Manrangal, Palveru Arasiyal Katchi Nanbargal, Ena Anaivarin Othulaippaal Vetrigaramaga Amaikkapattu 85vathu Pirantha Naal Vizhavai Ethirnokivullathu!
gopal sir, paavam MSV, avar enna pannuvar paavam......... avarukku kuzhandhai manasu nu niraya peru sollirukkanga having no grudge or animosity whatsoever (recent is CHO's article in Kumudham), Sivaji in general would never interfere in songs or music department...so avar padathai porutha varai nalla music and nalla songs extract panrathu director kadamai.......... appdinu naan ninaikkaren (am a 79 year born, so cant tell things for sure, only on assumption :))
தாமஸ் ஆல்வா எடிசன் நடுநிலைப் பள்ளி..
காலாண்டு வினாத்தாள்
வகுப்பு: மூன்றாம் வகுப்பு
காலம்: என்.டி. த்ரெட்டிற்குப் போதாத காலம்!
பாராக்ராஃப் கேள்வி மதிப்பெண்:20
நீங்கள் பார்த்த”………..” படத்தைப் பற்றி இரு பக்கங்களுக்கு மிகாமல் எழுதவும்
மாணவர் சி.க எழுதிய விடை..:
**
முன்னுரை
*
கவிதை என்பது என்ன..
மனதில் முகிழ்க்கும் உணர்வுகள் பிரசவிக்கும் போது ஒரு வரிசைப் படி பிறக்கும் போது கவிதை எனப்படுகிறது..
இந்தக்காலத்தில் சில பல கவிதை வடிவங்கள் உள்ளன..
நடிகர் திலகம்
குறிஞ்சிப் பூக்களின்
முன்னோடி
என்றால் அது புதுக்கவிதை..
நடிகர் திலகம்
பூவாய்ப் பிறந்து
பூவாய் மணத்து
பூப்போல் மரித்து
பூவாய் மணப்பவர்
என்றால் இதுவும் புதுக்கவிதை தான்..
ஹீம்
சிலருக்கு வாழ்க்கையில் நடிப்பு
நடிகர் திலத்துக்கு
வாழ்க்கையே நடிப்பு
எனச் சொல்லும் வேதாந்தக் கவிதையும் புதுக்கவிதை தான்
..
நவீன கவிதை என்று உண்டு..சற்றே புரியாத பாணியில் எழுதப்பட்டு படிப்பவருக்கேற்பப் புரிந்து கொள்ளும் தன்மை மிக்கது.
. நடிகர் திலகத்தின் நடிப்பு சுற்றிச் சுழன்றோடும் அருவியின் தன்மையொத்தது..அருவி ஆக்ரோஷ்மாகச் சில இடங்களில் பாய்ந்து வீழும்.
.அப்படி வீழ்ந்த அது நதியில்கலக்குமிடங்களில் அமைதி கொள்ளும்.. நதியில் கலக்கும் நறுமலர்கள் மணத்தில் மனமயங்கி
அவற்றின் மேல் காதல் கொண்டு அதனுடன் சேர்ந்தே ஓடிக் கொண்டிருக்கும்..
சமயத்தில் மலர்கள் கரைபக்கம் ஒதுங்கி வாடி விட, மேலும் அழுகையை வார்த்து சுற்றிச் சுழன்றோடிடும்.. நடிப்புச் சிம்மத்தின் நடிப்பும் அப்படித்தான் கோபம்,ஆக்ரோஷம், அழுகை காதல், குடும்பப் பொறுப்பு, மிருக குணம் என அருவியைப் போலவே பொங்கித் தந்தவர்..
ஷ்ஷ்..என்ன சொல்ல வந்து என்ன எழுதுகிறேன்..கவிதை..
ம்ம் அந்தக்காலத்தில் கவிதைக்கென சில மரபுகள் இருந்தன…வெண்பா, விருத்தம் கட்டளைக் கலித்துறை கலிப்பா இன்னும் பலவண்ணம்…
இதில் புலமை பெற்று விளங்கிய பல புலவர்கள் அரசர்களின் அரசவையில் இருந்திருக்கிறார்கள்.
.அப்படி இரண்டு புலவர்களுக்கிடையில் சண்டை வருகிறது இந்தத் திரைப்படத்தில்..அது என்ன சண்டை
கதையும் விமர்சனமும்:
இந்தத் திரைப்படம் தமிழில் வந்த ஒன்று..ஆனால் கதா நாயகன் வட நாட்டுக் கவி..சமஸ்கிருதத்தில் வன்மை பெற்றவன்..ஆனால் எடுத்தது தமிழ்ப் படம் என்பதால் அவரையும் தமிழ்க் கவி ஆக்கி எடுத்திருக்கிறார்கள்..
நடுவில் ஒரு காட்சி: கதானாயகக் கவிக்கும் அரசவைக் கவிஞர் கெத்தான தண்டிக் கவிராயர்
( நடித்தவர் தாடி மீசை சகஸ்ர நாமம்) என்பவருக்கும் சண்டை..
தீட்டுதற்கு ஓலைகள் தக்கனவாய் சிக்கிவிட
பாட்டுக்கள் பலபடைக்கும் பாவலனே – ஏட்டில்
நற்கவி எனவுவந்து நாங்கள் சொலக்கூடும்
பொற்கவி நீரில்லை பார்..
என காளிதாஸரை மகாகவி என ஒப்புக் கொள்ளாமல் சவால் விட,
பாடல் பக்குவமும் பார்க்கும் கற்பனையும்
ஆடற் கலையும் அறிகிலேன் – ஊடலைக்
கொண்டதமிழ் நாக்குழறிக் கூறுவண்ணம் சொல்லாற்றல்
கொண்ட மகாக்கவிதான் காண்
எனச் சொல்கிறார்.. (இது படத்தில் கிடையாது..என் சொல்லாடல்)
பின் இருவரும் சென்று காளியையே கேட்கிறார்கள்..
அன்னையே எம்மில் அரும்புலவர் யாரெனில்
இன்னமுத வாயால் இயம்பு என (குமா. பாலசுப்ரமணியனின்) வெண்பா பாடி..
காளி என்ன சொல்கிறாள்- கேபிஎஸ் குரலில் “தண்டியே கவி தண்டியே கவி” எனச் சொல்ல தண்டி சகஸ்ர நாமத்தின் கண்களில் வெற்றிப்பெருமிதம்..பார்த்தீரா..காளிதாஸ்.. நீரில்லை மகாகவி எனச் சொல்ல காளிதாசராய் நடித்தவரின் கண்களில் கங்கைபெருகுகிறது..மனமோ ஆரம்பப் படத்தை நினைத்துப் பார்க்கிறது..
சின்னையன் ஆடு மேய்ப்பவன்..அறிவிலி முட்டாள்..எல்லாம் காளி என்று நம்புபவன்.. பெற்றோர் (விகேஆர், சிகேஎஸ்) பக்தி, காளி பக்தி லட்டின் ஆசை மேய்க்கும் ஆடுகள் என இருப்பவன்..
இன்னொரு நாட்டின் இளவரசி எளிதில் கால்ஷீட் கிடைத்தவரோ என்னவோ..ஆனால் மகா கர்வி..புலவர்களிடம் முக்கியக் கொஸ்டீன்கள் மன்னிக்க கேள்விகள் கேட்டு மார்க் போடாமல் பிரம்பால் அடிப்பது தான் அவரது குணம்..அவரது தந்தையின் குண்மும் கூட (செளகார் ஜானகி). அப்படி அவரிடம் அவமானப்படும் நல்ல புலவர் அம்பரீஷ் (வில்லன் நடிகர் மனோகர்) காளியிடம் புலம்புகிறார்..அந்த ப்ரின்ஸ்ஸ்க்கு நல்ல லெஸன் கற்பிக்க வேண்டுமென..
பின் என்ன..அவர் கண்ணில் நுனிக்கிளையில் அமர்ந்து அடிக்கிளை வெட்டும் சின்னையா நடிகர் கண்ணில் பட, இளவரசியிடம்கூட்டிச் சென்று போட்டியில் பங்கு கொள வைத்து வெற்றி பெறவும் வைக்கிறார்கள்.
.
பின் என்ன.. ராத்திரி அறையில் பால் பழம் சாப்பிடுவதற்காக சின்னையா இருக்கையில் இளவரசி வந்துபேசும் சிலவார்த்தைகளிலேயே சின்னையா மூடன் எனத் தெரிந்து காளியிடம் கோவெனக் கதறி அழுது சூலத்தில் கழுத்தைக் கொடுக்கப் பார்க்க- காளி கருணை மிக்கவர்.. இளவரசியின் ஓவர் ஆக்டிங்கான அழுகையையும்பொறுத்துக் கொண்டு சின்னையனை உலகம் போற்றும்கவிஞனாக மகாகவி காளிதாஸாக மாற்ற இப்பொழுது நம் கண்முன்னே கம்பீரக் காளிதாஸ்..க எ ஒ ஆ இ – கலைமகள் எனக்கு ஒரு ஆணை இட்டாள் எனப் பாடுகிறார்.
.
உலகம் என்பது இப்படித்தான்.. மூடனாய் இருக்கையில் கண்ணீர் சிந்திய இளவரசி காளிதாஸர் காளியால் எஜீகெட் செய்யப்பட்டு விட்டார் என அறிந்ததும் சிரித்து வர, காளிதாஸ நடிகர் கம்பீரமாய்ச் சிரித்து அவரது அன்பை ரிஜெக்ட் செய்து நடக்க, மறுபடியும் தற்கொலை செய்யப் பார்க்கிறாள் இளவரசியான செளகார்..இந்த் முறை காளி அவளைத் தடுக்கவில்லை ( போரடிச்சுதோ என்னவோ) மாறாக அவளை விலாசவதி எனப் பெயர் மாற்றம் கொண்ட பெண்ணாக வடிவமைத்து போஜ சபைக்குப் போ, காளிதாஸ் வருவார் எனச் சொல்லிவிடுகிறாள்..
இங்கே காளிதாஸர் கம்பீரமாக மலரும் வான் நிலவும் எனப் பாடிக் கொண்டு, தனது கிராமத்திற்குச் சென்றுதனது அன்னை (சிகேஎஸ்) உடல் நிலை குன்றியிருப்பது கண்டு காளியிடம் கண்,காது வாய்மூக்கு எல்லாம் துடிக்க வெண்பாவாய் ஈற்றடி “நடக்கப் பெறுவாய் நலம்” எனப் பாடி முடிக்க, தாயார் உடல் நலம்பெறுகிறார்..தனது நண்பன், சின்னையாவாக இருந்த போது சில காட்சிகளில் வந்து ஜொள்ளுவிட்ட உப நாயகி ஆகியோருக்குப் பரிசுகள் வழங்கிவிட்டு தாயிடமும் தந்தையிடமும் ”ஐயாம் கோயிங்க் டு போஜ மன்னன்” எனச் சொல்லிச் செல்கிறார்..
வழக்கம் போல் போஜ நாட்டை அடைந்து கோவிலில் பாடகி விலாசவதியையும் ஆடலழகி மோகனாங்கியையும் (எல்.விஜயலஷ்மி..ம்ம் என்னா அழகுப்பா..) பார்த்து, இயக்குனர் சொற்படி விலாசவதி செளகாரைப் பார்த்து
“தங்கமே தாமரை மொட்டுக்களாகி.. என ஆரம்பித்து குங்குமம்பூத்த நிலாவண்ணம் புறப்பட்டதே என க்
கட்டளைக் கலித்துறையில் ஈவ் டீசிங்க் போல் செய்து பார்க்க,
அங்கு வந்த போஜ மன்னன்(எப்போதும் ஒருவித டென்ஷனில் இருக்கும் முத்துராமன்) போயட் எனக்கொரு டவுட்டு என்று கேட்க,அதற்குபதிலிறுக்க பின் அமாவாசை, பெளர்ணமி நிலவு என அபிராமி பட்டர் கதையை இயக்குனர் சாமர்த்தியமாய் நுழைத்திருப்பார்..
பின் தான் போஜமன்னன் காளிதாஸருக்குச் சொர்ணாபிஷேகம் பண்ணி மகாகவி எனப் பட்டத்தை வழங்க
அந்தக்காலத்திலும் அப்ஜெக்ஷன் என்பது இருந்தது என்பதற்குஅடையாளமாக தண்டி மறுத்து காளியும் தண்டியே கவி என ஜட்ஜ்மெண்ட் சொல்லி விட என்னாகிறது..
“தாயே வாட் இஸ் மை பொஷிசன்..மன்னிக்க என் நிலை என்ன “எனக்கேட்க காளி சொல்கிறாள்..
நீயே நான், நானே நீ.._ பின் என்ன காளிதாஸனின் புகழ் மேலும் கூடுகிறது..
ஒரு சந்தர்ப்பம்..அரண்மனை, போஜமன்னன் அரசி, மோகனாங்கி காளிதாஸன்..இயற்றிய பாடல் சொல்லச்சொல்ல கூறுகிறான் காளிதாஸன்..உடை நெகிழ்ந்த பூமகளின் அழகு என்ற பாடல்..பொறாமையுறும் அழகியான எல்.விஜயலஷ்மியான மோகனாங்கி மேலும்சதி செய்து அரசிக்கும் காளிதாஸனுக்கும் அவதூறு செய்யப் பார்த்தும் போஜமன்னனின் நம்பிக்கையில் முடியவில்லை..பின் சதிதெய்து ஒரு சந்தர்ப்பத்தில் காளியுடன் மனமுருகப் “விதிமுடிவுத் தேவதையே விரைந்து நீ வா” என வேண்டுகையில் அவன் தலையைத்துண்டிக்கிறாள்..
ம்ம் எல்.விஜய லஷ்மி, கேபிஎஸ், விகே ராமசாமி,செளகார், முத்துராமன், அவரது மனைவியான அரசி, நாகேஷ் என அனைவரும் நன்றாக நடித்தும் இந்த ப் படம் ஓடவில்லையாம்..கொஞ்சம் திருவிளையாடலின் சாயல் ப்ள்ஸ் கொஞ்சம் அதே நடிகர்கள் என இருந்ததாலாம்.. இரண்டு பக்கங்கள் மேலாகி விட்ட படியால் இத்துடன் முடிக்கிறேன்
முடிவுரை..
எல்லாரைப்பற்றியும் பாராட்டிவிட்டு காளிதாசரை நடித்தவரைப் பற்றி எதுவுமே சொல்லவில்லை – மகனே வெளியே வா பாத்துக்கிறேன் – எனச் சிலபேர் சொல்லக் கூடும் என்பதால்: இந்தப் படத்தில் நடிக்க நடிகர் திலகத்தை அழைத்தார்க்ளாம். அப்போது அவருக்குச் சற்றே உடல் நலம் குன்றியிருந்ததால், அவருக்குப் பதிலாக மேலுலகம் சென்று காளிதாஸரையே அழைத்து வந்து இந்த டமில் வெர்ஷனில் நடிக்க வைத்து விட்டார்களாம்!.. எனக்குப் பிடித்த படங்களில் இதுவும் மொன்று..
**
டியர் சுந்தரவல்லி மிஸ்
தேர்வில் வருமென்று முக்கிய கொஸ்டினாக இதைக் கொடுத்ததற்கு ரொம்ப தாங்க்ஸ்.. இந்தப் படத்தைப்பற்றி என் தாத்தாவிடம் கூற அவர் விமர்சனம் எழுதிக் கொடுத்தார்..அதை அப்படியே மக் அப் செய்து எழுதிவிட்டேன்(பாட்டுக்கு மட்டும் கொஞ்சூண்டு பிட் அடிச்சுட்டேன்) சாயந்திரம் வரும்போது டியூஷன்ஃபீஸ் கொண்டு வருகிறேன்.. இந்த செளகார் auntyயும் எல்வி auntyயும் பேசிக் கொள்ளும் எதுவும் புரியவில்லை… முடிந்தால் புரிய வையுங்கள்!
யுவர்ஸ் ஸின்சியர்லி
சின்னக் கண்ணன்
**
Gopal Sir,
MSV was honoured at the function by Pranab Mukherjee.
Please see below.
http://dinakaran.com/Wall_Details.as...08&page=38#DKN
https://www.youtube.com/watch?featur...&v=lzqvvWqyTeY
Thanks.
மஹா கவியைப் பற்றிய மஹா கலைஞனின் சித்தரிப்பினைப் போற்றும் மஹா காவியப் பதிவு...Quote:
முடிவுரை..
எல்லாரைப்பற்றியும் பாராட்டிவிட்டு காளிதாசரை நடித்தவரைப் பற்றி எதுவுமே சொல்லவில்லை – மகனே வெளியே வா பாத்துக்கிறேன் – எனச் சிலபேர் சொல்லக் கூடும் என்பதால்: இந்தப் படத்தில் நடிக்க நடிகர் திலகத்தை அழைத்தார்க்ளாம். அப்போது அவருக்குச் சற்றே உடல் நலம் குன்றியிருந்ததால், அவருக்குப் பதிலாக மேலுலகம் சென்று காளிதாஸரையே அழைத்து வந்து இந்த டமில் வெர்ஷனில் நடிக்க வைத்து விட்டார்களாம்!.. எனக்குப் பிடித்த படங்களில் இதுவும் மொன்று..
http://youtu.be/L5q_HoFQiZg