பொம்மை
1973ம் வருசம் வெளியான பொம்மை கேள்வி பதில் சினிமாவில் நடிக்க மக்கள் திலகமே அதிகம் சம்பளம் வாங்கிய நடிகர் என்பதை உணர்த்தும்.
http://i67.tinypic.com/2zsnvgk.jpg
Printable View
பொம்மை
1973ம் வருசம் வெளியான பொம்மை கேள்வி பதில் சினிமாவில் நடிக்க மக்கள் திலகமே அதிகம் சம்பளம் வாங்கிய நடிகர் என்பதை உணர்த்தும்.
http://i67.tinypic.com/2zsnvgk.jpg
1974ல் வெளியான பேசும் படம் கட்டுரை. அரசியல் கலையுலக சக்கரவர்த்தி மக்கள் திலகத்தை புகழ்ந்து எழுதியது.
.......
ஒரு மாநிலத்தின் மக்கள் சக்தியின் பெரும்பங்கு ஆதரவு பெற்றுள்ள அரசியல் இயக்கத்தின் தலைவராக இருக்கும் அதே நேரத்தில் அதே மாநிலத்தின் கலையுலகின் பொருளாதாரத்தை அசைத்துப் பார்க்கும் மாபெரும் பொருளாதார சக்தியாக அவரே இருக்கும் சிறப்பு உலகெங்கிலும் தேடி னாலும் காண முடியாது. தமிழ்நாட்டில் ஒரு எம்.ஜி.ஆரை மட்டுமே நம்மால் காண முடியும்.
http://i66.tinypic.com/2dh9r9x.jpg
இப்படிப்பட்ட சாதனை சக்கரவர்த்தி மக்கள் திலகம் எங்கே? மற்ற நடிகர்கள் எங்கே?
வணக்கம் இந்தியா -நெல்லை - 30/06/2017
http://i67.tinypic.com/28iam2v.jpg
http://i68.tinypic.com/zw0tqh.jpg
http://i65.tinypic.com/143mbeg.jpg
வணக்கம் இந்தியா -நெல்லை - 1/07/2017
http://i63.tinypic.com/2ccmt52.jpg
http://i64.tinypic.com/2806rdx.jpg
http://i67.tinypic.com/4ktbtz.jpg
ஜூனியர் விகடன் -09/07/2017
http://i67.tinypic.com/jv3b4h.jpg
http://i67.tinypic.com/2rr9nhk.jpg
மக்கள் குரல் -30/06/2017
http://i67.tinypic.com/2e2i1kx.jpg
தினமலர் -06/7/2017
http://i64.tinypic.com/r6zmv7.jpg
குமுதம் -12/07/2017
http://i64.tinypic.com/33be6xc.jpg
மாற்றுத் திரியின் பொய்யான பதிவுகள் பற்றி நேத்திக்கு நான் கேட்டிருந்த கேள்விக்கு பதில் இ்ல்லை. பரவால்ல. பதில் சொல்ல வேண்டாம், புரி்ந்து கொள்கிறோம் என்று கடைசியில் நான் சொன்னதால் பதில் இல்லை போல இருக்கு. அவர்கள் நிலைமை புரியுது.
ஆனால், மறுபடியும் முத்தய்யன் பதிவ போட்டு அதை அழிக்கவில்லையாம், பார்த்துவிட்டு சொல்லுங்கள் என்கிறார்கள். முத்தயன் அப்படி எழுதவே இல்லை என்று நான் சொன்னல் பொய் என்று சொல்லலாம். அவர்கள் எடுத்துப் போட்டிருக்கிறார்கேளே. நம்ம திரிியல் இருந்து போட்டிருப்பார்கள் போல இருக்கு என்று நினைச்சேன். அவர்கள் சொல்றதைப் பார்த்தால் நம்ம திரியில் அழித்து விட்டார்கள் என்று தெரிகிறது. அப்புறம் எப்படி அவருக்கு கிடைச்சது என்று தெரியவில்லை. வேறு ஏதாச்சும் வழி உள்ளதா என்பதை அனுபவமான திரி மூத்தவர்கள் சொல்லவேண்டும்.
முத்தயன் பதிவுக்கும் நேத்திக்கு பதில் சொல்லிவிட்டேன். இதே மாதிரி உங்கள் திரியிலும் முத்தையன் வந்து ரவிகரன் சூரியா என்பவரை தப்பான பதிவுக்காக கண்டிச்சுள்ளார்.
சரி, முத்தயன் பதிவு இருக்கட்டும். பிராப்தம் படத்தில் நடிக்க வாய்ப்பு கேட்டு சாவித்ரி வீட்டு்க்கு மக்கள் திலகம் சென்றார் என்ற பொய்க்கும் மனோகரா படம் சென்னையில் ஒர வாரத்தில் 84 லட்சத்து 276 ரூபாய் வசூல் என்ற உங்கள் திரியில் வந்த பொய்க்கும் முத்தயன் பதிவு பதில் இல்லையே.
அதோடு, வசூலில் தோல்வியடைந்த கர்ணன் படத்தை எவ்வளவு மு்ட்டுக் கொடுத்து எழுதுவீர்கள். என்னதான் பொய் எழுதினாலும் சரித்திரத்தில் வேட்டைக்காரனுடன் வெளியான கர்ணன் படம் வசூல் ரீதியாக தோல்வி என்ற உண்மை பதிந்துவிட்டது.
கர்ணன் டிஜிட்டலில் வந்த சமயத்திலே குமுதம் பத்திரிகையில் அவர்கள் அபிமான நடிகரின் மகன் பிரபுவே, முதல் வெளியீடில் கர்ணன் படம் சரியாகப் போகவில்லை என்று ஒப்புக் கொண்டார். அதோட, அவர்கள் அபிமான நடிகரின் ரசிகர்களும் கர்ணன் தோல்வி படம் ரேஞ்சுக்கு அமைந்தது என்பதை வெளிப்படையாக ஒப்பு்க் கொண்டு இருக்கின்டார்கள். ஆனால், இன்னும் அங்கே முட்டுக் கொடுத்து பொய் எழுதுகிறார்கள்.
பாபு படத்துடன் வந்த மக்கள் திலகத்தின் நீரும் நெருப்பும் படம் பாபு அளவு்க்கு சரியாகப் போகவில்லை. வசூலிலும் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி இல்லை என்பதை நாங்கள் எப்பவும் நேர்மையாக ஒப்புக் கொள்கின்றோம். நீரும் நெருப்பும் படம் பாபுவை மிஞ்சிவிட்டது என்று நாங்கள் சொன்னதே இல்லை.
ஆனால், கர்ணன் படம் வேட்டைக்காரன் அளவு போகவில்லை (இத்தனைக்கும் உங்கள் ரசிகர்களே ஒப்புக்கொண்ட உண்மை) என்று ஒப்புக் கொள்ளும் நேர்மை உங்களிடம் இல்லையே?
பிராப்தம் படத்தில் நடிக்க வாய்ப்பு கேட்டு சாவித்ரி வீடு தேடி மக்கள் திலகம் சென்றார் என்று அள்ளிவிடப்படுகிறது. ஆனால், அதே பிராப்தம் படம் வெளியான 1971ம் ஆண்டில் வெளியான பேசும்படம் கேள்வி பதில். மக்கள் திலகம் எப்படி திரை உலக சக்கரவர்ததியாக இருந்தார் என்பதை விளக்கும்.
கேள்வி : இன்று தென்னகத்தின் வசூல் சக்கரவர்த்தி யார்?
பதில் :எம்.ஜி.ஆர். !
http://i63.tinypic.com/wiv5zq.jpg
http://i66.tinypic.com/b5qivs.jpg
#புரட்சிச்தலைவர் என்று அழைக்கிறீர்களே!
அப்படி என்ன புரட்சியை செய்துவிட்டார்' என்று கேட்பவருக்கு... இதோ சின்னதாக ஒரு சான்று...
எம்ஜியார் முதல்வராக வருவதற்கு முன்னால் பலர் முதல்வராக இருந்துள்ளனர். அவர்கள் சிந்தையில் தோன்றாத சிந்தனை மக்கள் திலகத்திற்கு தோன்றி அதை நடை முறைபடுத்தினாரே...என்ன... அது.
தமிழகத்தில் அது வரையில் நடைமுறையில் இருந்த வழக்கம்.. ஒவ்வொரு கிராமத்திலும், ஏதோ ஒரு குறிப்பிட்ட குடும்பத்தைச் சேர்ந்தவர்களே பரம்பரை பரம்பரையாக கிராம நிர்வாகத்தை கவனித்து வரும் முறையை ஒழித்து, கிராம நிர்வாக அலுவலர் என்கிற பதவியை ஏற்படுத்தி அதை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் கட்டுப்பாட்டில் கொண்டுவந்தவர் எம்,ஜி.ஆர்.
இதன் மூலம், தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கானோர் கிராம நிர்வாக அலுவலராக வரக்கூடிய சூழல் உருவானது என்பது மிக முக்கியமாகக் குறிப்பிடப்பட வேண்டிய ஒரு செயலாகும்.
எம்.ஜி.ஆர் ஆட்சியில் இருந்தபோதுதான், தெரு பெயர்களில் ஜாதிப்பெயர் இடம்பெறக்கூடாது என்கிற முக்கியமான அரசாணையைப் பிறப்பித்தார்.
- பிரபாகரன் அழகர்சாமி, திராவிடர் இயக்கப் பற்றாளர்.
(உதவியவை: விடுதலை, உண்மை இதழ்களில் வெளிவந்த, கி.வீரமணி, கலி.பூங்குன்றன் கட்டுரைகள்.)
நன்றி எம்ஜிஆர் தளம் துரை வேலுமணி முகநூல்.
என் பெயர் மஸ்தான். ஆனால், மாற்றுத் திரியில் உள்ள ஒருவர் வேறு ஒருத்தரின் பெயரால் என்னை சொல்லியிருக்கிறார். ராமமூர்த்திய யார் என்றே எனக்கு தெரியாது. யாரோ அவருக்கு தப்பான தகவல் சொல்லியிருக்கார்கள்.
சரி. எங்களுக்காவது பெருந்தன்மை இருக்கிறது. உங்களுக்கு பெருந்தன்மை இல்லையே.
ஆயிரத்தில் ஒருவன் சென்னை தவிர கோயமுத்தூரிலும் 100 நாள் ஓடியது. அதிலும் சென்னையில் எம்ஜியார் பிக்சுர்ஸ் வெளியீடு என்பதால் வேட்டைக்காரனும் ஆயிரத்தில் ஒருவனும் 100 நாள் ஓடிய மாதிரி சொல்கிறார்கள்.
புதிய பறவை சென்னை பாரகனில் மட்டும் ஓடிய படத்தை தலையீல்தூக்கி ஆடுவார்கள். அதுவும் சொந்தப் படம், சொந்த பிலிம்ஸ் ரீலீஸ்.
சொந்த பிலிம்ஸ்ில் வெளியான படத்தை எல்லாம் அவர்கள் இப்பிடித்தான் ஓட்டியிருக்கிறார்கள் போல இருக்கிறது.
அதிலும் சென்னையில் சொந்த தியேட்டரான சாந்தியிலும் அவர்கள் லீசுக்கு எடுத்திருந்த கிரெளன் புவனேச்வரி யிலும் 100 நாள் படங்களை இப்படித்தான் ஓட்டியிருக்கிறார்கள் எ்ன்று அவர்கள் பதிவில் இருந்து தெரிகிறது. இந்த தியேட்டர்களில் மட்டும் 100 நாள் ஓ்ட்டப்பட்ட படங்களை கழித்தால் எவ்வளவு படம் 100 நாள் தேறும்.
தூத்துக்குடி பாலகிருஷ்ணாவில் முதல்முதலில் 100 நாள் ஓடிய படம் சிவந்த மண் என்று சொல்லி பொய் பெருமையை பதவிடுவீர்கள். ஆனால், அதுக்கு முன் அதே தியட்டரில் அடிமைப்பெண் 100 நாள் ஓடியது. இதுதான் இவர்கள் சிவந்தமண் பெருமையின் லட்ச்சணம்.
கோயமுத்தூர் கர்னாட்டிக்கில்169 நாள் ஓடிய இரும்புத்திரையை 6 நாள் சேர்த்துப் போட்டு வெள்ளிவிழா ஆக்கிப்புட்டார்கள்.
இந்த மாதிரி பொய் பெருமைகள் எங்களுக்குதேவையில்லை. எங்கள் பெருந்தன்மையே போதும். அது உங்களுக்கு கிடையாது.
http://i63.tinypic.com/8x69o7.jpg
மஸ்தான்,
இதுக்கெல்லாம் பதில் சொல்லாதீர்கள். கோவையில்ஆயிரத்தில் ஒருவன் ஓடியது சும்மா என்றால் கர்ணன் விளம்பரத்தை நாம் கேட்டால் என்ன செய்வார்கள்?
பதில் அளிப்பது வேஸ்ட்
தினத்தந்தி 07/07/2017
http://i64.tinypic.com/11r4r2t.jpg
மாற்று திரியை சேர்ந்தவர் என் பதிவை நன்றாக படிச்சு பிறகு நன்றாக புரிஞ்சு கொண்டு அப்புறம் பதில் சொல்ல வேண்டும்.
நான் மனோகரா படத்தின் விநியோகஸ்தரோ, தயாரிப்பாளரோ கொடுத்த வசூல் விளம்பரம் பொய் என்று சொல்லவில்லை. அது உண்மைதான். ஆனால், தமிழக அரசியல் என்ற பத்திரிகையில் நாஞ்சில் இன்பா என்பவன் அவர்கள் நடிகரைப் பற்றி எழுதிய கட்டுரை வந்தது. அதில் மனோகரா படத்தின் வசூல்
84 லட்சத்தி 276 ரூபாய் வசூல் என்று பொய்யாக அடித்துவிடப்பட்டிருந்தது. அந்த பத்திரிகையில் வந்த கட்டுரையை எடுத்து அவர்கள் திரியிலும் பதிவு போட்டார்கள். அதில்
84 லட்சத்தி 276 என்றுதான் உள்ளது.
எனக்கு பதில் சொன்னவர் எண்ணால் எழுதிக் காண்பிச்சு இருக்கிறார். அவர் சொல்லியபடி பார்த்தால் 84 ஆயிரத்தி 2 ரூபாய் மற்றும் 76 பைசா என்பது அவர் எண்ணால் எழுதியபடியே
84,002.76
இப்படித்தான் இருக்கும்.
ஆனால், தமிழக அரசியல் பத்திரிகையில் எண்ணால் வந்திருப்பது,
84,00,276 என்று உள்ளது. இது 84 ஆயிரமா? 84 லட்சமா?
இதுதான் அந்தப் பதிவு. தொகையை நன்றாக தேடி படிச்சுப் பாருங்கள்.
http://i63.tinypic.com/5pen3t.jpg
மாற்றுத் திரியில் வந்த இந்த கட்டுரையில் உள்ளபடி எண்ணால் உள்ள தொகையை பார்த்தால்
84 லட்சத்தி 276 என்றுதான் அர்த்தம்.
சந்தடி சாக்கில் நைசா நூல் விட்டு பாக்க வேண்டியது. 84 ஆயிரத்தை 84 லட்சமாக கூட்டிக் காண்பிக்க வேண்டியது. யாரும் கண்டுக்காம விட்டால் பின்னால் சாதன ஆயிடும்.
இல்லை, ஒரு வேளை இப்பிடியும் இருக்கலாம்.
எனக்கு மாற்றுத் திரியில் பதில் சொன்னவர் இப்படி சொல்லிருக்கிறார். அவரது வார்த்தைகள்
//விடயத்துக்கு வருவோம்
84 ஆயிரத்தை 84 லட்சம் என்று எந்தப் பள்ளிக்கூடத்தில்
சொல்லிக்கொடுத்தர்களோ? அல்லது பள்ளிக்கூடத்துக்கே....//
சூப்பர். அதானே. நாம்ப கேட்க வேண்டிய கேள்வியை நமக்காக அவரே கேட்டிருக்கிறார். நாஞ்சில் இன்பா என்பவனின் படிப்பு தகுதியை கண்டுபிடித்தவருக்கு நன்றி. நன்றி. நன்றி.
இப்படியாப்பட்ட ஒரு படிக்காத , 84 லட்சத்துக்கும் 84 ஆயிரத்துக்கும் வித்தியாசம் தெரியாத ஆளு, அல்லது வேண்டுமென்றே தங்கள் நடிகருக்கு புகழ் சேர்க்க வசூலை ஆயிரத்தை லட்சமாக கூட்டிச் சொல்லும் ஆளு, (எழுத்துப் பிழைன்னும் சொல்ல முடியாது. பைசா கணக்கு காட்டாமல் கமா எல்லாம் இடம் பார்த்து பக்காவாக ரூபாய் கணக்கில் போட்டு உள்ளது)
இந்த மாதிரி ஆளு,அதுவும் முக்கியமாக அவர்களது நடிகரின் ரசிகரான நாஞ்சில் இன்பா, எழுதும் கட்டுரையில் வரும் செய்திகள், அதிலேயும் மக்கள் திலகத்தை பற்றி வரும் செய்திகள் எப்படி இருக்கும் என்று புரிஞ்சு கொள்ளலாம். வெறும் பொய்க்கூட்டம்.
உபரி செய்தி: திராவிட இயக்கத்தில் அவர்களின் நடிகர் வளர்ச்சியை அண்ணா மனதார ரசிச்சாராம். கட்டுரையில் உள்ளது. அவர்களின் நடிகர் திமுகவில் என்றுமே உறுப்பினர் கிடையாது. அந்தளவு கட்சியில் ஈடுபாடு. அவ்ர் திமுக பக்கமிருந்து விலகியபோது அண்ணா கண்டுக்க கூட இல்லை. போகட்டும் என்று விட்டுவிட்டார். அதற்கு அப்புறமும் சில வருசம் கழித்து எங்கிருந்தாலும் வாழ்க என்று சொல்லி கழட்டி விட்டார். திரும்பி வா என்று கூப்பிடவில்லை. இப்ப 2 பேரும் இல்லை. இதை உறுதிப்படுத்த எனக்கு பதில் சொன்னவர் அவர்களை தேடி போக வேண்டாம். மக்கள் திலகம் சாவித்ரி பற்றிய செய்தியை 2பேரும் இல்லாததால் அவரால் உறுதி செய்ய முடியாதாம். அதனால், அவர் சவுரியத்துக்காக நான் சொன்ன இந்த செய்தியை அவர் உறுதிப்படுத்திக்க ஒரு வழி சொல்றேன். பழைய சரித்திங்களை அவர் படிச்சால் போதும். படிக்க முடிஞ்சால்.
இந்த நாஞ்சில் இன்பா என்பவர் முழுக்க முழுக்க நடிகர் சிவாஜி கணேசன் ஆதரவாளர் என்பதை விட, புரட்சித்தலைவர் பற்றி எதிர் மறையான, அதே சமயத்தில் பொய்யான கருத்துக்களையும், தகவல்களையும் தெரிவிப்பவர் என்று முத்திரை குத்திக் கொண்டு, சிவாஜி கணேசன் ரசிகர்களின் அனுதாபத்தையும், ஆதரவையும் பெற வேண்டும் என்பதில் அதிக ஆர்வம் காட்டுபவர். இவர் எழுத ஆரம்பித்த பிறகுதான், தமிழக அரசியல் பத்திரிகை சர்க்குலேஷன் குறைந்து போயிற்று. நான் நேரடியாக, சென்னையில் பல இடங்களில் அமையபெற்ற கடைகளில் விற்காமல் தொங்கிக் கொண்டிருப்பதை கண் கூடாக பார்த்தவன்.
தமிழ் திரையுலகின் நிரந்தர வசூல் சக்கரவர்த்தி, மக்கள் திலகத்தின் கால்ஷீட் கிடைக்காதா என்று ஏங்கித்தவித்த சிவாஜி பட தயரிப்பாளர்கள் பலர் உண்டு. அவரை வைத்து படமெடுத்து தங்களின் வாழ்க்கை நிலை உயராதா என்று ஏங்கித் தவித்த படத் தயாரிப்பாளர்கள் பலர் உண்டு. நிலைமை இப்பபடி இருக்க, சாவித்திரி வீடு தேடி பொற்கால ஆட்சி தந்த பொன்மனச்செம்மல் எம்.ஜி.ஆர். அவர்கள் பட வாய்ப்புக்காக சென்றார் என்று கூறும் பொய்யர்களின் கூற்றைக் கண்டு எள்ளி நகையாடுவதை தவிர வேறு என்ன செய்ய முடியும் ? பொய்யிலே பிறந்து, பொய்யிலே வளர்ந்த கூட்டம் என்று எண்ணத்தான் தோன்றுகிறது.
நடிக ர் சிவாஜி கணேசனுடன் பத்மினி இருக்கும் படத்தை வெளியிட்டு வாணிஸ்ரீ என்று பிரசுரித்ததிலிருந்தே தெரிகிறது, லட்சணம் ........
பொய்யர்களின் முகத்திரையை கிழித்து காட்டிய சகோதரர் திரு. மஸ்தான் அவர்களுக்கு நன்றி !
வசீகரம் மிக்க ஆளுமைகள் பற்றிச்சில வார்த்தைகள்.
ஒருவரைப்பார்த்த மாத்திரத்தில் இதயத்தின் ஆழத்தே சென்று தங்கிவிடும் வசீகரம் மிக்க ஆளுமை மிக்கவராக எம்ஜிஆரைக்கூறலாம். இவ்விதமான ஆளுமைகள் பார்த்த மாத்திரத்திலேயே பார்ப்பவர்களைக்கவர்ந்து விடுவார்கள். அவர்களைப்பற்றி எதுவுமே அறியாத நிலையிலேயே அவர்களது முக வசீகரம் பார்ப்பவர்களை ஆகர்சித்து விடுகின்றது. அதனால்தான் அத்தகையவர்களை அவர்களால் ஆகர்சிக்கப்பட்டவர்கள் அவர்களது நேர்மறையான மற்றும் எதிர்மறையான அம்சங்களுடன் ஏற்றுக்கொண்டு விடுகின்றார்கள். இவ்விதமான வசீகர ஆளுமை மிக்கவர்கள் ஏன் இவ்விதமான வசீகர ஆளுமை மிக்கவர்களாக இருக்கின்றார்களென்று நினைத்துப்பார்ப்பதுண்டு. இவர்களது அந்த வசீகரம் மிக்க ஆளுமை அவர்களது ஆழ்மனதிலிருந்து வெளிப்படுவதென்று நினைக்கின்றேன். 'அகத்தின் அழகு முகத்தில் தெரியும்' என்பார்கள். '
இவ்விதமான ஆளுமை மிக்கவர்களில் இன்னுமொருவராக நான் 43 வயதில் அமெரிக்க ஜனாதிபதியாகப்பதவியேறற ஜான்.ஃப்.கென்னடியைக்குறிப்பிடுவேன். இவரது சிரித்த முகமும், பார்ப்பவர் இதயங்களைச்சுண்டி இழுத்துவிடும் வசீகரம் மிக்கது. இவ்விதமான ஆளுமை மிக்கவர்களின் வாழ்க்கையைக் கூர்ந்து கவனித்தால் ஒன்றினை அவதானிக்கலாம். இவர்கள் அனைவரும் வாழ்க்கையில் நன்கு அடிபட்டிருப்பார்கள். சுழல்கள் நிறைந்த வாழ்க்கைக்கடலில் எதிர் நீச்சலடித்தே தப்பிப்பிழைத்திருப்பார்கள். அதன் காரணமாக அவர்களது வார்த்தைகளெல்லாம் அவர்களது வாழ்க்கை அனுபவங்களின் காரணமாக வெளிப்படும் தன்மை மிக்கவையாக விளங்குகின்றன என்பதென் கருத்து. அதனால்தான் அவை கேட்பவர்கள் இதயங்களைச்சென்று உலுப்பி விடுகின்றன.
.கென்னடியின் 'நாடென்ன செய்தது உனக்கு. எனக் கேள்விகள் கேட்பது எதற்கு? நீ என்ன செய்தாய் அதற்கு?' என்னும் அர்த்தத்தில் கூறப்பட்ட வார்த்தைகள் மிகவும் புகழடைந்த வார்த்தைகள். அவற்றைக்கேட்டவுடனேயே அந்த வார்த்தைகள் கேட்பவர்கள் இதயங்களின் ஆழத்தை அசைத்து அங்கேயே நிரந்தரமாகத்தங்கி விடுகின்றன. அதே வார்த்தைகளை இன்னுமொருவர் கூறியிருந்தால் இதுபோல் புகழடைந்திருக்குமா என்பது சந்தேகமே. கென்னடியென்றதும் எனக்குச்சிறு வயது நிகழ்ச்சியொன்று ஞாபகத்துக்கு வருகின்றது. கென்னடியின் வாழ்க்கை வரலாற்றை அழகிய புகைப்படங்களுடன், அழகான தாள்களில் நூலாக ஆனந்தவிகடன் வெளியிட்டிருந்தது. அந்த நூலை யாழ்ப்பாணப்புகையிரத நிலையத்திலிருந்த புத்தகக்கடையில் கட்டித்தூக்கியிருந்தார்கள். அவ்விதம் தொங்கிக்கொண்டிருந்த அந்த நூலின் அட்டைப்படத்தில் கென்னடியின் வசீகரம் முகம் சிரித்துக்கொண்டிருந்தது. அதன் காரணமாகவே அந்த நூலை வாங்கித்தரும்படி அம்மாவை வற்புறுத்தி வாங்கிக்கொண்டேன். அந்த நூலை வாங்கியபொழுது எனக்குக் கென்னடியைப்பற்றி எதுவுமே தெரியாது. அவரது அரசியல் கொள்கைகளோ அல்லது அந்தரங்க நடவடிக்கைகளோ எதுவுமே தெரியாது. பின்னர் அந்த நூலின் மூலம்தான் இரண்டாம் உலக யுத்தக்காலத்தில் போர் வீரராக அவர் பயணித்துக்கொண்டிருந்த ஆயுதப்படகு வெடித்துக்கடலில் சிதற, கடலில் தூக்கியெறியப்பட்ட கென்னடி நீந்தித்தப்பிப்பிழைத்த விபரமே தெரிய வந்தது. தம் நாட்டுக்காகத் தம்மை அர்ப்பணித்துப்போராடியதால்தான் கென்னடியின் 'நாடென்ன செய்தது எனக்கு? எனக்கேள்விகள் கேட்பது எதற்கு?' என்னும் அர்த்தத்தில் கூறப்பட்ட வார்த்தைகள் அவ்வளவு வலிமையாகக்கேட்பவர் உள்ளங்களை அசைத்துவிடுகின்றன.
இது போன்றதுதான் எம்ஜிஆரின் 'இரத்தத்தின் இரத்தமே' என்ற சொற்தொடரும். அந்தச் சொற்தொடருக்குப்பின்னால் ஒளிந்திருக்கும் உண்மைதான் அவ்வார்த்தைகளைக்கேட்டதும் கேட்பவர்களின் இதயங்களை ஒருகணம் உலுப்பிவிடக்காரணம். எம்ஜிஆர் குண்டடிபட்டிருந்த சமயம் அவருக்குத் தமிழகமக்கள் பலரின் இரத்தம் வழங்கப்பட்டதாம். அதற்காகத்தான் அவர் அவ்விதம் கூறுவதாக அவரே அதுபற்றி விபரித்திருந்ததை எங்கேயோ படித்திருக்கின்றேன். அவரது வாழ்க்கை அனுபவத்தின்வாயிலாக வெளிப்பட்டதால்தான் அவ்வார்த்தைகள் இவ்வளவுதூரம் மக்களை ஆகர்சிக்கக்காரணம். இதே வசனங்களை இன்னுமொரு நடிப்பில் சிறந்த நடிகர் கூறியிருந்தாலும் எடுபட்டிருக்கப்போவதில்லை.
இவ்வித வசீகர ஆளுமை மிக்கவர்களாக இன்னும் பலரைக்கூறலாம். பிடல் காஸ்ட்ரோ, சேகுவேரா, ஜவஹர்லால் நேரு, கார்ல் மார்க்ஸ், மாசேதுங், ஐன்ஸ்டைன்.. இவ்விதம் பட்டியல் நீண்டுகொண்டே செல்லும். இவர்களைப்போன்ற வசீகர ஆளுமைகளுக்குள்ள பொதுவான அம்சம் இவர்களைப்பற்றி எதுவுமே அறியாதவர்கள் கூட , இவர்களைப்பார்த்த மாத்திரத்திலேயே இவர்கள்பால் ஈர்க்கப்பட்டு விடுவார்கள். பின்னர் இவர்களைப்பற்றி அறிய அறிய மேலும் மேலும் ஈர்க்கப்பட்டுவிடுவார்கள்.
வசீகர ஆளுமை மிக்க கென்னடியின் கூற்றினை மையமாக வைத்து வசீகர ஆளுமை மிக்க எம்ஜிஆரின் 'நான் ஏன் பிறதேன்? என்னும் திரைப்படத்திலொரு பாடல் வருகின்றது. அதுதான் 'நான் ஏன் பிறந்தேன்? நாட்டுக்கு நலமென்ன புரிந்தேன்?'
courtesy - net
Emperor of Emperors Makkalthilagam MGR's "Rahasiya Police 115" Digital now showing @ Bangalore- Nataraj DTS... Message by Mr.Vinoth
மக்கள் திலகத்தின்
மாட்டுக்கார வேலன்
கோவை ராயலில்
இரண்டாவது வாரம்
Our thread writers - Mr.Masthan & also members writes about Makkal Thilagam's fame, proudness... We are likes so...
http://i65.tinypic.com/245nifn.jpg
எப்போது #எம்ஜியார் அவர்களை நினைத்தாலும், அவர் ஜிப்பாவில் வீசிய நறுமனம் என் பக்கத்தில் வீசும்"
"அப்போது நான் +1 படிக்கும் மாணவன்.
கோவை ஒண்டிப்புதூரில் காமராஜர் சிலை புத்தம் புதிதாக உருவாகி பிரசித்தப்பட்டிருந்தது.
மொரார்ஜி ஆட்சியில் ஜனதா கட்சியினர் அமைத்த சிலை. பெரிய மேடை அமைத்தவர்கள் ஏனோ அதற்கு ஏறிச் செல்ல படிக்கட்டு அமைக்கவில்லை.
விசேஷ தினங்களில் சிலைக்கு மாலையிட, அலங்கரிக்க, அதில் ஏற ஸ்டூலோ, ஏணியோதான் கொண்டு வருவார்கள்.
ஒண்டிப்புதூருக்கு எம்.ஜி.ஆர் எப்போது பிரச்சாரத்திற்கு வந்தாலும் ஒரு கூட்டம் பிள்ளையார் கோயில் பஸ் ஸ்டேன்ட் அருகே மறித்துவிடும்.
இன்னொரு கூட்டம் அங்கிருந்து ஒரு பர்லாங் தொலைவில் உள்ள ரயில்வே கேட்டில் நிற்கும். ரயில் வந்தால் கேட் போடப்பட்டிருக்கும். இல்லாவிட்டாலும் என்ன? கேட் கீப்பரை கரெக்ட் பண்ணி கேட் போடவைப்பர் சிலர். எம்ஜிஆர் அங்கே மக்களால் தடுக்கப்பட்டிருப்பார். மக்கள் கூட்டம் அவரை தொட்டுப் பார்க்க அலைமோதும்.
இந்த முறை தமிழக முதல்வராகி வந்த எம்.ஜி.ஆர் ஏதோ ஓர் அரசு நிகழ்ச்சியில் கலந்துவிட்டு இவ்வழியே வந்தார். சாலையில் 1 கிமீ தொலைவிற்கு மூன்றடிக்கு ஒன்றாக தடி தாங்கிய போலீஸார் நிறுத்தப் பட்டிருந்தனர். அதையும் மீறி மந்திரிகள், எம்.எல்.ஏக்கள், அதிகாரிகள் ஆங்காங்கே சாலைத் தடுப்புகள் ஏற்படுத்தியிருந்தார்கள்.
பொதுமக்கள் எம்.ஜி.ஆரை தடுத்துப்பார்க்க முடியுமா? தடுத்தாலும் அவர் நிற்பாரா? போலீஸின் குண்டாந்தடி பதில் பேசாதா? ஒருவித பயத்தோடுதான் கூட்டம் நின்றிருந்தது. அவரின் வெள்ளை நிற அம்பாஸிடர் கார் நெருங்கியதும், அதன் முன் மக்கள் கூட்டம் அலைமோதியது.
அதோ மறித்தும் விட்டது. காரை மொய்க்கிறது கூட்டம். போலீஸின் குண்டாந்தடி அடி சிலருக்கு விழுகிறது. காருக்குள் இருந்த எம்.ஜி.ஆரின் முகம் சூரியன் போல் சிவந்துவிட்டது. காரை விட்டு இறங்குகிறார்.
தடி ஓங்கிய போலீஸாரை அதட்டுகிறார். அடுத்து அவர் பார்த்த பார்வை. தெறித்து ஓடுகிறார்கள் அதிகாரிகள்.
திமிலோகப்பட்ட கூட்டத்தில் எப்படியோ சிக்கி கசங்கி நான் எம்.ஜி.ஆரின் முதுகுப் பக்கத்தை முகர்ந்து நிற்கிறேன். சிலு,சிலுக்கும் சில்க் ஜிப்பாவில் சந்தன நறுமணம்.
கட்சியின் வட்டச் செயலாளரோ, கிளைச்செயலாளரோ தலைவருக்கு மாலையிட்டார். எம்.ஜி.ஆரோ தனக்கு எதிர்ப்பக்கத்தில் ஒரு பூங்கிழவியை அரவணைத்தார்.
‘எங்கிருந்து பாட்டி வர்றீங்க?’ கரகரக்கும் குரல்.
கிழவியின் உடல் நடுங்குகிறது. அந்த பாட்டி எனக்கு பக்கத்து வீடுதான். என் வகுப்புத்தோழன் ‘ஆட்டி என்கிற ஆறுமுகத்தின் பாட்டி! பாட்டியிடம் வெடவெடக்கும் நடுக்கமே பதிலாக இருக்கிறது.
எம்.ஜி.ஆர் முகத்திலோ முறுவல். இந்த வயசான பாட்டியெல்லாம் இத்தனை கூட்டத்தில் தன்னை காண பாசத்தோடு வருகிறதே என்ற மலர்ச்சி.
எம்ஜிஆர் தாயுள்ளத்தோடு,
‘இந்த பாட்டிக்கு என்ன வேணும். விசாரிச்சு கொடுங்க!’
அதிகாரிகளுக்கு ஆணையிடுகிறார்.
அவரின் இடது கைப்பக்கம் காமராஜர் சிலை. பாரக்கிறார். கைகூப்பி அங்கிருந்தபடியே கும்பிடுகிறார். அதை நிர்மாணித்த சுதந்திரப்போராட்ட தியாகிகள் சிலர் சிலைக்கு மாலையிட எம்.ஜி.ஆரை கோருகிறார்கள். உடனே தலையசைக்கிறார்.
மாலையெங்கே?’ கேட்டபடி மேடையை நோக்கி துரு, துருவென நடக்கிறார்.
கூட்டமும் அவருடனே அலைகிறது. அதிகபட்சம் 30 அடி தூரம்தான். மேடையேற படிக்கட்டு இல்லை. அந்த மேடையில் கையூன்றிபடியே நிற்கிறார்.
யாரோ அப்போதுதான் மாலை வாங்க ஓடினார்கள். மேடையில் ஏற ஸ்டூல் எடுத்து வர பறந்தார்கள்.
‘எங்கே மாலை?’
திரும்ப எம்ஜிஆர் குரல்.
அதிகாரிகளா? கட்சிக்காரர்களா? தெரியவில்லை. வியர்த்துப் போய் பதட்டமாய் திரும்பித்திரும்பி பார்க்கிறார்கள். நிற்கிறார்கள்.
'மாலை வாங்கப் போயிருக்கிறார்கள்!’
‘ஸ்டூல் எடுக்கப்போயிருக்கிறார்கள்!’
யாரோ சொல்வது கேட்கிறது.
எம்ஜிஆருக்கு சுர்ரென்று முகம் சிவக்கிறது.
தன் கார் டிரைவரை அழைக்கிறார்.
‘காருக்குள்ளே சந்தன மாலை இருக்கும். எடுத்து வா!’
விநாடிகள்தான் கரைந்தன. சந்தன குண்டுகளால் ஜொலிக்கும் சரிகை வேலைப்பாடுகள் அமைந்த மாலை. அதை டிரைவர் எடுத்து வந்ததுதான் மாயம். ஸ்டூலை எதிர்பாராமலே ஒரே ஜம்ப். தாவினார்.
மேடை மேலே எம்.ஜி.ஆர். காமராஜர் சிலைக்கு மாலையிட்டார். கும்பிட்டார். அதே வேகத்தில் மேடையிலிருந்து குதித்தார்.
அசத்தலான அவரின் செயல்பாடுகளை பார்த்து வியந்து நின்ற கூட்டத்தில் ஆரவாரம்.
கார் புறப்படுகிறது. பின்தொடருகிறது மற்றவாகனங்கள். எம்ஜிஆர் விட்டுச் சென்ற அந்த சில்க் ஜிப்பா, அதில் புதைந்திருந்த உயர்ரக சந்தன நறுமணம். கிட்டத்தில் நடுங்கிய பாட்டி. அதைவிடகிட்டத்தில் ஒட்டி நின்ற நான்.
எத்தனையோ முறை என் நண்பர்களுக்கும், உறவுகளுக்கும் சொல்லி, சொல்லி மாய்ந்த விஷயம். இப்போது நினைத்தாலும் என் கிட்டத்தில் எம்ஜிஆரின் நறுமணம்"
-கா.சுவேலாயுதம் அவர்களின் நினைவுகள்.
நன்றி எம்ஜிஆர் பக்கம் முகநூல்
http://i63.tinypic.com/28gxt8w.jpg
தொப்பி கண்ணாடி இல்லாமல் காவலர்களுடன் புரட்சித் தலைவர் எடுத்துக் கொண்ட அபூர்வமான புகைப்படம்.
நன்றி முகநூல்
https://s9.postimg.org/au42zb0wv/IMG_4628.jpg
கொங்கு மண்டலத்தில்
வேங்கையன்
வருகை அறிவிப்பு இன்றைய தினத்தந்தி
நாளிதழில்.
மக்கள் திலகத்தின் ரகசிய போலீஸ் 115
பெங்களுர் நகரில் நடராஜ் , லட்சுமி , அம்ருத் 3 திரை அரங்குகளில் 7.7.2017 முதல் நடைபெற்று வருகிறது .
Book looks at MGR the man, actor and administrator
CHENNAI:
MGR was the first Indian superstar to conquer politics, according to noted writer and politician Shashi Tharoor. "So nothing is more refreshing than chronicling the life of this actor-politician in an objective way," he said, after releasing R Kannan's book "MGR: A Life" at Kalaivanar Arangam on Saturday. There were compromises and setbacks but MGR made history, said Tharoor. "No one had the charisma and willpower MGR had. Actor N T Rama Rao (NTR), of course, showed great talent. While NTR was known for his roles of mythical and epic characters, MGR always remained the hero of the common man. Unlike NTR, MGR died as a hero and that makes him different from others," he said.
Daily Thanthi - Puducherry edition
http://i66.tinypic.com/2wpr0a1.jpg