Vanaja Madam,
Do continue your postings on NT with a spirit of come what may.
Vanaja Madam,
Do continue your postings on NT with a spirit of come what may.
சிவாஜி-வாணிஸ்ரீ: தமிழ்த்திரையுலகின் நாகரிகக் காதல் ஜோடி
இந்த தளத்தில் சிவாஜிக்குச் சரியான ஜோடி யார் என்ற ஒரு கருத்துக்கணிப்பு நடந்து அதில் சிவாஜி-பத்மினி ஜோடி பெரும்பான்மை வாக்குகளால் வெற்றி பெற்றது. சிவாஜி-வாணிஸ்ரீ ஜோடி runner-up! சிவாஜி-பத்மினி ஜோடி பலவிதங்களில் மிகப் பொருத்தமாக இருந்தாலும் stylish, elegant & majestic pair சிவாஜி-வாணிஸ்ரீ தான். இருவருக்குமிடையேயுள்ள வயது வித்தியாசம் 20 வருடங்கள் (1928-1948) என்றாலும் அது திரையில் தெரியாதது, அச்சோடியின் வெற்றியைப் பலப்படுத்துகிறது. இவர்கள் இணைந்து ஏறக்குறைய 10 படங்கள் நடித்திருந்தார்கள்.
இந்த ஜோடிக்கிடையிலான screen chemistry யைப் பார்த்துத்தானோ என்னவோ அவர்களை வைத்துப் படம் எடுக்கும் தயாரிப்பாளர்கள் காதல் படங்களையே கொடுத்தார்கள். அதற்கு ஏற்றால்போல வசந்தமாளிகையும் பெரும் வரவேற்பைப்பெற்றது .
தனது எல்லாவிதமான நடிப்பு பரிமாணங்களைப்போலவே நடிகர் திலகம் காதலை வெளிப்படுத்துவதிலும் expert தான்! இதில் காதல் மன்னர்களும் இளவரசர்களும் தற்போதைய திரையுலக இளம் ஹீரோக்களும் கூட கிட்ட நெருங்கமுடியாதென்பது எனது கருத்து. அவர்களின் காதல் அணுகுமுறையில் காமம் தெரிகின்ற அளவுக்கு காதல் வெளிப்படுத்தப்படுவதில்லை . இதில் திடீரென்று குத்துப்பாட்டு என்கின்ற over acting வேறு!. (ஆம்! இவர்கள் தான் அந்தரத்தில் எழும்பி அடிப்பது, குத்துக்கரணம் போடுவது என்று over acting செய்துகொண்டிருக்கிறார்கள் ) சிவாஜியோ அந்தந்த கதாபாத்திரங்களின் சமூகத்தகுதிகளுக்கேட்ப காதலை மிதமாகவோ அதீதமாகவோ கோமாளித்தனமாகவோ அல்லது கம்பீரமாகவோ வெளிப்படுத்தியிருக்கிறார்.
பண்டரிபாயிலிருந்து ராதா வரையிலான சிவாஜியின் கதாநாயகியர்களைப் பார்க்கும்போது, வாணிஸ்ரீயினது (காதல்) நடிப்பு சற்றே வித்தியாசமாகவும் stylish ஆகவும் இருக்கும். சிவாஜியின் ஆரம்பகாலக் கதாநாயகியர்கள் சற்று அதீதமாக நாணுவதும் கோணுவதுமாக இருக்கையில், வாணிஸ்ரீ அதையே சற்று நளினமாகவும் மிதமாகவும் செய்திருந்தார்.
வசந்தமாளிகையில் ஆனந்தின் மனத்திலிருப்பது என்னவென்று லதாவுக்குத் தெரிந்தாலும் அதைக்காட்டிக்கொள்ளாமல், she played down her emotions towards Anand . அதே நேரத்தில் தன்னை woman of easy virtue என்று ஆனந்த் நினைத்துவிடக்கூடாதென்பதிலும் லதா கவனமாகவிருந்தாள்; considering his reputation among 'easy' women! அந்த அவளது ego, கடைசியில் ஆனந்த் விஷம் குடித்தபின்னர் உடைந்து போனது.
சிவகாமியின் செல்வன் பலவிதங்களில் வசந்தமாளிகையை விடவும் சிறந்த காதல் காவியம் என்றே நான் சொல்வேன்.
ஆராதனாவின் நிழல் அதன் மீது படிந்து , அப்படம் அடைந்திருக்கவேண்டிய வெற்றியை குறைத்திருந்தாலும், ஆரம்ப கட்டத்திலிருந்தே அசோக் - சிவகாமிக்கிடையில் பூத்துவிட்ட இனிமையான காதலை சிவாஜியும் வாணிஸ்ரீயும் பிரமாதமாக வெளிப்படுத்தியிருந்தனர். (except அந்த 'எத்தனை அழகு' பாடல் காட்சி. அது கொஞ்சம் நீளமாகப்போய்விட்டது. "just get on with it!" என்று சொல்லத்தோன்றும்! )
அவர்களுக்கான வசனங்களை ஏ எல் நாராயணன் மிகவும் இயல்பாகவும் இனிமையாகவும் எழுதியிருந்தார்.
ஆனந்த் -லதா வுக்கிடையே வந்துவிட்ட storming relationship ஐ விடவும் அசோக்-சிவகாமிக்கிடையிலான பரஸ்பரம் ஆழ்ந்த அன்புடனான, மிதமான காதல் ஒரு படி மேலானதேன்றே சொல்லலாம். அதுவும் படம் முழுவதும் மெல்லிய இழையாக ஓடிக்கொண்டிருக்கிறது. வாணிஸ்ரீ அதை மிகவும் அற்புதமாக செய்திருக்கிறார்.
இந்த ஜோடிக்கு போதுவாகப் படங்களில் ஏற்படும் love -hate relationship ஐ வைத்து பின்னர் நல்லதொரு குடும்பத்தை எடுத்தனர். அப்படத்தின் பின்பகுதி நன்றாக இருக்கவில்லை என்றாலும் இந்த ஜோடி தமது பங்கைச்சிறப்பாக செய்திருந்தனர். அதுபோலவேதான் ரோஜாவின் ராஜாவும்.
I'm not at all annoyed, adhiram! I've just been sarcastic, that's all. I knew it had been mentioned in earlier threads where I got the info from, I admit it. But I tried to give it in 'my way'. I bet all the other NT fans share my feelings in a sense that he was wasted in the 80's. Everybody said that before, now its my turn to emphasize it, that's all. I want to say that too, you know! No hard feelings!:smile2:
:redjump:This is Fun! Sasi says; 'you're in 'The Hub' for one minute, and you've already started a fight!!' :hammer:
Sister VANAJA,
I accept and appreciate your approach that 'Sivakamiyin Selvan' is better than 'Vasandha Malligai'. That is true also.
But, because of the reasons that Vasandha Maligai is a huge hit, and Sivakamiyin Selvan is met a normal result (due to the reason of comparing it with Aradhana), everybody is shouting 'Vasandha Maligai... Vasandha Maligai... Vasandha Maligai...'
But I am in your way that Sivakamiyin Selvan is definitely better than Vasandha Maligai, in love aspect. Regarding the songs, it is NO WAY less than Aradhana or Vasandha Maligai. MSV did in his own way, without touching the hindi tunes.
வீரபாண்டிய கட்டபொம்மன் நினைவு நாள் இன்று: 3rd January
சகோதரி வனஜா ,
தங்கள் சிவாஜி-வாணிஸ்ரீ காதலை மையமாக்கிய பதிவு மிக மிக அற்புதமான ரசனைக்குரிய ஒன்று. தொடருங்கள் சகோதரி,
இரும்புத்திரை (iron curtain )- 1960- பகுதி-1
எனக்கு சிறு வயதில் கம்யுனிச கோட்பாட்டில் மயக்கம் உண்டு. தொழிலாளர் 19ஆம் நூற்றாண்டில் நடத்த பட்ட விதங்களை படித்தால் தூக்கமே வராது.அடிப்படை உரிமைகளான வேலை நேரம்,குறைந்த பட்ச கூலி,கொத்தடிமை,குழந்தை தொழிலாளர், சம உழைப்பு சம கூலி,அடிப்படை பாதுகாப்பு,தொழிற்சங்கம்,முதலாளி-தொழிலாளி உறவு, கூலி உயர்வு,அடிப்படை உரிமைகளுக்கான தொழிற்சங்க கூட்டு பேச்சு வார்த்தை,வேலை நிறுத்தம் போன்ற உரிமைகளை பெற ,வளர்ச்சி பெற்ற நாடுகளிலேயே பலர் ரத்தம் சிந்தி உலக தொழிலாளர் கூட்டு நிறுவனம்(I .L .O ) உறவான பின்புதான் ,தொழிற்புரட்சியின் சிறிதளவு பலனாவது உழைப்பாளிகளை வந்தடைந்தது. நான் வளர்ந்த நெய்வேலியில் தொழிற்சங்க அமைப்புகள் வலுவானவை. ஆனால் அன்றும் ,நம் நாட்டில் விவசாய தொழிலாளர்கள்,தனியார் நிறுவன தொழிலாளர் நிலை பரிதாபத்துக்கு உரியது. முக்கியமாக ஆலை தொழிலாளர் நிலை.கீழ் வெண்மணி போன்ற நிகழ்வுகள் சர்வ சாதாரணம். நான் முதல் முதலில் இரும்பு திரை பார்த்தது ,எனது அப்பாவின் நண்பர் ஒருவர் சொல்லி, 1971இல். சவாலே சமாளி பார்த்து ஆஹோ ஓஹோ என்று புகழ்ந்து தள்ளி கொண்டிருந்த போது , இதை விட வலுவாக,realistic ஆக பிரச்சினை பேசும் படம் ,இதற்கு மூலம்,அதனால்தான் வாசன் படத்தை போட்டு மல்லியம் மரியாதை செய்தார் என்று சொல்லி,இப்படத்தை பார்க்க தூண்டினார்.அதிர்ஷ்ட வசமாக,சொரத்தூர் ஜோதி என்ற டூரிங் கொட்டாயில் ,இந்த படம் டிசம்பர் 1971இல் வெளியானது.
படம் பார்த்து,அந்த பாதிப்பில் சவாலே சமாளி மோகம் சற்றே குறைந்தது.
மாணிக்கம் ,ரிக்ஷா இழுத்து ,அந்த உழைப்பில்,தொழிற்கல்வி கற்கும் மாணவன். ஜெயந்தி என்ற அம்மாவுடன் தனியாக வாழும் ஏழை பெண்ணுக்கு ஒரு அவசர நேரத்தில் உதவி அறிமுகம் ஆகிறான். ஜெயந்தி பட்டதாரி .மாலதி என்ற பணக்கார ,மில் முதலாளி பெண்ணில் சிபாரிசில் ,அவள் மில்லிலேயே டைபிஸ்ட் ஆக வேலை கிடைக்கிறது. அதே ரங்கநாதா மில்லில் ,மோகன ரங்கம் என்ற முதலாளியின் கீழ் விசுவாசமான தொழிலாளி தான் மாணிக்கத்தின் அண்ணன் சரவணன். அம்மா, மனைவி,பிள்ளை,பெண்ணுடன் வாழ்ந்து வருகிறான்.பெண்ணுக்கு ,நடராசன் என்று ஒரு பையனுடன் நிச்சயம் செய்கிறான்.படிப்பு முடிந்து ஊருக்கு அண்ணனை பார்க்க வந்த மாணிக்கத்தை சரவணன் மில்லுக்கு அழைத்து செல்ல ,மாணிக்கம் ஒரு பெரும் பிரச்சினையை,இறக்குமதி செய்ய அவசியமின்றி ,சுமுகமாக தீர்க்க ,முதலாளி chief mechanic ஆக வேலை போட்டு கொடுக்கிறார். அங்கேயே வேலை செய்யும் ஜெயந்தியுடன் காதல் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமும் ஆக வளர்கிறது.முதலாளி மகள் மாலதியும்,மாணிக்கத்தை ஒருதலை பட்சமாக விரும்ப தொடங்குகிறாள்.
தீபாவளி போனஸ் சமயம் பிரச்சினை துவங்குகிறது. மூன்று மாத போனஸ் என்று கையெழுத்து வாங்கி,ஒரு மாத போனஸ் கொடுக்கும் பொது,மாணிக்கம் அதை வாங்க மறுத்து கேள்வி கேட்கிறான். அண்ணனோ ,தம்பிக்கு எதிர் நிலை. முதலாளி விசுவாசத்தில் தம்பியுடன் மோதுகிறான்.இன்னொரு சந்தர்ப் பத்தில் வேலை நேரத்தில் விபத்தில் சிக்கும் தொழிலாளிக்கு நியாயமாக கொடுக்க பட வேண்டிய compensation தர படாமல் முதலாளி சூழ்ச்சி செய்ய மாணிக்கம் வேலை நிறுத்தம் செய்து,தொழிற்சங்கம் ஆரம்பிக்க வேண்டிய நிர்பந்தத்திற்கு தள்ள படுகிறான்.சரவணன் ,மாணிக்கத்தை வீட்டை விட்டு போக சொல்ல,சரணன் பெண் கல்யாணம் தடை பட,மாணிக்கம் உறுதியாக தொழிலாளர் பக்கமே நிற்கிறான்.இடையில்,மாணிக்கம்-ஜெயந்தி காதலிப்பதை அறிந்து,மாலதி ஜெயந்தியை வேலையை விட்டு நீக்குகிறாள். மோகன ரங்கம் மில்லுக்கு அருகிலேயே ஒரு மளிகை கடையும் நடத்தி கலப்பட வியாபாரம் செய்கிறார்.இடையில் முதலாளியை தற்செயலாக சந்திக்கும் ஜெயந்தியின் அம்மா தன்னை ஏமாற்றி விட்டு போன காதலன்தான் மோகன ரங்கம் என்று அறிந்து,ஊரை விட்டு போக முயன்று வழியில் உயிர் பிரிகிறது. தன தகப்பனே மில் முதலாளி என்று அறிந்து ,வீட்டுக்கு சென்று அவருடன் மோத ,மோகன ரங்கம் சூழ்ச்சியை அறிந்து ,ஜெயந்தி கோபத்துடன் மில்லை கொளுத்த முயல,மாணிக்கம் அங்கு வந்து தீ பந்தத்தை கையில் வாங்கி ,பழியை ஏற்கிறான்.
இறுதியாக,முதலாளியின் கோர முகத்தை அறியும் சரவணன் மனம் மாற, ஜெயந்தி தன் சகோதரி என்று தெரிந்து மாலதி மனம் மாற,நீதி மன்றத்தில் உண்மை தெரிந்து மாணிக்கம் விடுதலை யாகிறான்.முதலாளி-தொழிலாளி உறவு சீர்படுகிறது.
சுபம்.
(தொடரும்)
Sister vanaja
Hearty welcome to NT family.
sivaji- vanisri chemistry notes fantastic. my second best pair first being sivaji-devika pair always.
simakamiyin selvan beetter than vasantha maligai I do not accept. always VM Chemistry stands first. the way they have handled GENTLE love is much much superior than any other love concepts NT has played. please keep writing more and more. goodluck.
சகோதரர் கோபால் தரும் ஊக்கத்திற்கு நன்றி.
உங்கள் 'இரும்புத்திரை' (விமர்சனம்) அட்டகாசமாக விலகத்தொடங்கியிருக்கிறது. நடிகர் திலகத்தின் மிக மிதமான நடிப்பில் எனக்கு மிகவும் பிடித்த படம்.
இந்த படத்தை நான் அண்மையில் தான் பார்த்து வியந்தேன். சிவாஜியின் நடிப்பினை விமர்சிக்கும் அடுத்த பாகத்திற்காகக் காத்திருக்கிறேன். தற்போது active ஆக இருக்கும் hubbers இல் திறமான விமர்சனங்களை வழங்கும் உங்கள் போன்றவர்கள் தான் நடிகர் திலகத்தின் தேரை இழுப்பதில் முன்னிலையில் நிற்கவேண்டியவர்கள்.
Thank you friend! I really appreciate it.
I agree with you about VM as an overall good and successful movie. My brother Sasi also a crazy fan of VM. But in a woman's point of view, I thought Ashok gains higher points where Anand is weak; i.e:alcoholism, womanizing..:roll: And Ashok never suspected Sivakami and his love towards her was flawless. But on the other hand what Anand did (or said, rather) on the gold necklace matter was outrageous and is a black mark on his, supposed to be- unconditional love for Latha.
அன்புள்ள நண்பர்களே,
அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!
வேலை நிமித்தமாகவும் உடல் நிலை காரணமாகவும், ஒரு இடைவெளி விழுந்து விட்டது.
சீனியர்கள் திரு. முரளி, திரு. ராகவேந்திரன் போன்றோர் தொடர்ந்து பங்களித்துக் கொண்டிருப்பது மகிழ்ச்சியைத் தருகிறது.
திரு. ராகவேந்திரன் அவர்களின் நிழற்படப் பதிவுகளும் 3-d பதிவுகளும் மிக நன்றாக இருந்தன.
திரு. முரளி அவர்கள் வழக்கம் போல எளிய மற்றும் சுவாரஸ்யமான ஈர்ப்புடன் தியாகம் மற்றும் மதுரை மாவட்ட நினைவலைகளை அற்புதமாக எழுதியிருந்தார்.
அண்மையில், வனஜா மேடம் அவர்களின் இரண்டு கட்டுரைகள் மிகவும் சுவையாகவும் உயிர்ப்புடனும் இருந்தன. எண்பதுகளில், நடிகர் திலகத்தின் திறமையை இன்னும் நன்றாக வெளிக் கொணர்ந்திருக்கலாம் என்ற கருத்துடன் உடன்படாதவர்கள் யாரும் இல்லை. கடைசி வரை, அவர் "இயக்குனரின் நடிகராகத்" தான் இருந்தார். இந்த காலகட்டத்தில் அவரது சில முக்கியமான படங்கள் அவற்றில் அவரது பங்களிப்பைப் பற்றி நீண்ட கட்டுரைக்கான எண்ணங்கள் ரொம்ப நாளாகவே என் மனதில் இருக்கிறது. நிச்சயம் அவற்றை எழுதுவேன். நடிகர் திலகம் வாணிஸ்ரீ ஜோடிப் பொருத்தம் பற்றிய கட்டுரை நன்றாக இருந்தது. நடிகர் திலகத்தின் பிரத்தியேக ரசிகனாகப் பார்த்து ஒரு வகையாகவும், ஒரு படைப்பாளியின் பார்வையிலிருந்து வேறு வகையாகவும் எழுதலாம். அது தான் நடிகர் திலகத்தின் தனித் தன்மை. இந்த ஒரு கலைஞன் தான் பல கோணங்களிலிருந்தும் பார்த்து விமர்சனம் எழுதும் படி செய்தவர். அண்மையில், கெளரவம் "பாரிஸ்டர் ரஜினிகாந்த்" பாத்திரத்தில் அவரது நடிப்பை வேறு கோணத்தில், ஒரு ஹப்பர் அற்புதமாக ஆங்கிலத்தில் எழுதியிருந்தார்.
திரு. சந்திர சேகர் அவர்களைப் பற்றியும் அவரது சமூகத் தொண்டினைப் பற்றியும் போற்றுவதற்கு வார்த்தைகள் இல்லை.
திரு. ராகுல் ராம் அவர்களின் ஆய்வுகளும் மிகவும் சுவையாக இருந்தன.
திரு. கோபால் அவர்கள் மறுபடியும் "இரும்புத் திரை" பட ஆய்வு மூலம் துவங்கி இருக்கிறார். மிக்க மகிழ்ச்சி. எனக்கு மிகவும் பிடித்த படங்களுள் ஒன்று. நடிகர் திலகம் வைஜெயந்தி மாலா ஜோடிப் பொருத்தம் அற்புதமாக அமைந்து, துரதிர்ஷ்ட வசமாக சொற்ப படங்களுடன் முடிந்தது. ஒரு சோலை வனத்தில், இருவருக்கும் நிகழும் இரு சந்திப்புகள் மிகவும் சுவையாகவும், இயல்பாகவும் அமைந்திருக்கும். தொடருங்கள்.
சிலரது பெயர் விட்டுப் போயிருந்தால், தயை கூர்ந்து மன்னிக்கவும்.
திரு. பம்மலார், திரு. வாசுதேவன் (நெய்வேலி) மற்றும் மற்ற சீனியர்களின் வருகை இந்தத் திரிக்கு மேலும் சுவையும் சுவாரஸ்யமும் கூட்டும்.
இது ஒரு தேர். ஊர் கூடித் தான் ஒன்றுபட்டு இழுக்க வேண்டும். யார் எதை எழுதினாலும், கிண்டல் செய்யாமல், முடிந்தால் திரு. ஜோ அவர்கள் சொல்லியபடி எளிய வார்த்தைகளால் பாராட்டுங்கள். நடிகர் திலகமே கூறியபடி, ஒவ்வொரு கலைஞனும் அங்கீகாரத்துக்கு ஏங்குபவன். இங்கு பங்களிக்கும் அனைவருமே கலைஞர்கள் தான். ஊக்கம் தான் அவர்களை மேலும் மேலும் பங்களிக்க, எழுத வைக்கும். என்னதான் சுய திருப்திக்காக செய்கிறோம் என்று கூறிக் கொண்டாலும் (நான் உட்பட), மற்றவர்களுடைய அங்கீகாரம் தரும் ஊக்கம் தனி தான்!
அன்புடன்,
இரா. பார்த்தசாரதி
Sister VANAJA,
Your points for accepting Sivakamiyin Selvan is better than Vasandha Maligai are good and acceptable.
If you go through the old posts of Saradha, she also doesnt like Vasandha Maligai, for the reasons you mentioned.
Glad to see another fan to argue Asok is better than Vijay Anand.
We, fans, want to see Shivai sir minus bottles and call girls.
[
((அண்மையில், வனஜா மேடம் அவர்களின் இரண்டு கட்டுரைகள் மிகவும் சுவையாகவும் உயிர்ப்புடனும் இருந்தன. எண்பதுகளில், நடிகர் திலகத்தின் திறமையை இன்னும் நன்றாக வெளிக் கொணர்ந்திருக்கலாம் என்ற கருத்துடன் உடன்படாதவர்கள் யாரும் இல்லை. கடைசி வரை, அவர் "இயக்குனரின் நடிகராகத்" தான் இருந்தார். இந்த காலகட்டத்தில் அவரது சில முக்கியமான படங்கள் அவற்றில் அவரது பங்களிப்பைப் பற்றி நீண்ட கட்டுரைக்கான எண்ணங்கள் ரொம்ப நாளாகவே என் மனதில் இருக்கிறது. நிச்சயம் அவற்றை எழுதுவேன். நடிகர் திலகம் வாணிஸ்ரீ ஜோடிப் பொருத்தம் பற்றிய கட்டுரை நன்றாக இருந்தது. நடிகர் திலகத்தின் பிரத்தியேக ரசிகனாகப் பார்த்து ஒரு வகையாகவும், ஒரு படைப்பாளியின் பார்வையிலிருந்து வேறு வகையாகவும் எழுதலாம். அது தான் நடிகர் திலகத்தின் தனித் தன்மை. இந்த ஒரு கலைஞன் தான் பல கோணங்களிலிருந்தும் பார்த்து விமர்சனம் எழுதும் படி செய்தவர்.
இது ஒரு தேர். ஊர் கூடித் தான் ஒன்றுபட்டு இழுக்க வேண்டும். யார் எதை எழுதினாலும், கிண்டல் செய்யாமல், முடிந்தால் திரு. ஜோ அவர்கள் சொல்லியபடி எளிய வார்த்தைகளால் பாராட்டுங்கள். நடிகர் திலகமே கூறியபடி, ஒவ்வொரு கலைஞனும் அங்கீகாரத்துக்கு ஏங்குபவன். இங்கு பங்களிக்கும் அனைவருமே கலைஞர்கள் தான். ஊக்கம் தான் அவர்களை மேலும் மேலும் பங்களிக்க, எழுத வைக்கும். என்னதான் சுய திருப்திக்காக செய்கிறோம் என்று கூறிக் கொண்டாலும் (நான் உட்பட), மற்றவர்களுடைய அங்கீகாரம் தரும் ஊக்கம் தனி தான்!
அன்புடன்,
இரா. பார்த்தசாரதி[/QUOTE]
மிகவும் நன்றி நண்பர் பார்த்தசாரதி. NT experts எல்லாரும் மீண்டும் வரத்தொடங்கியிருக்கிறீர்கள். மகிழ்ச்சியாக இருக்கிறது. நான் எனது பெயரை இத்திரியில் பதிவு செய்த பின்னர் எந்தவொரு 'தாய்க்குல'த்தையும் இங்கு காணாமல் தயங்கியபோது:???:, என் அண்ணன் சசி எனது i .d ஐ பயன்படுத்தி பதிவுகளை இட்டதும் எனக்கும் இப்போது தைரியம் வந்துவிட்டது.!
நான் தனிப்பட்ட ரசிகையாகத்தான் எனது சிவாஜி பற்றிய எண்ணங்களை எழுதுகிறேன். ஆனால் மற்றவர்களின் எல்லாப் படைப்புகளையும் மிகவும் விரும்பி படிப்பேன். அன்னை இல்லம் படத்தின் உங்கள் விலாவாரியான அந்த 'side burns ' பற்றிய கட்டுரை பிரமாதம்!
I'm looking forward to read your article on NT's 80's movies
//ஒவ்வொரு கலைஞனும் அங்கீகாரத்துக்கு ஏங்குபவன். இங்கு பங்களிக்கும் அனைவருமே கலைஞர்கள் தான். ஊக்கம் தான் அவர்களை மேலும் மேலும் பங்களிக்க, எழுத வைக்கும். என்னதான் சுய திருப்திக்காக செய்கிறோம் என்று கூறிக் கொண்டாலும் (நான் உட்பட), மற்றவர்களுடைய அங்கீகாரம் தரும் ஊக்கம் தனி தான்!//
Mr. PARTHASARATHY,
You said the truth and acceptable. Every hubber, including you, have posted many worthful matters and informations. Whether they are appreciated or not, you are continuing your participations and contributions.
But some hubbers, after posting some posters and banners, suddenly expecting appreciation for them. If there is no any appreciations then suddenly they are saying, "ayyo... nobody is appreciating my posts. so I want to quit from here. I want to keep silent" like this.
Appreciations should come automatically, as it comes for Shivaji sir.
Dear Mr. Adiram,
Thanks for your response. There is no need to reiterate the fact that "Every human being is unique". In such a case, there is no harm in somebody expecting a feedback from others immediately after his/her posting. Even if he/she laments about no/poor response, let us, still, not discourage them. Instead, a small note of recognition, without overdoing it, would be a welcome one.
Regards,
R. Parthasarathy
Mr Parthasarathy Sir,
Welcome back Sir and do post your view on NT's Songs like before and slowly
also the Senior hubbers are coming to this thread after posting from
Vanaja Madam.
வனஜா மேடம் அவர்களே,
தங்களது பாராட்டுக்கு நன்றி.
அன்புடன்,
இரா. பார்த்தசாரதி
நடிகர் திலகம் அவர்களின் சாதாரண ரசிகன் நான் .எனக்கு மக்கள் திலகத்தின் படங்களும் பிடிக்கும் . காதல் மன்னன் ஜெமினியின் படங்களும் பிடிக்கும் .
நடிப்பு என்று வந்து விட்டால் அதில் ஒப்பீடு செய்வதில் பயனில்லை .
நடிகர் திலகம் எந்த கதையின் பாத்திரம் ஏற்றாலும் அதில் அவரது தனி தன்மை பிரகாசிக்கும் .
சிவகாமியின் செல்வன் கதை வேறு . வசந்த மாளிகை கதை வேறு .
பிடிக்கும் - பிடிக்காது என்பது அவரவர் ரசனையை பொறுத்தது . யார் மீதும் திணிக்க கூடாது .
ஒரு ரசிகனாக பின்பு குற்றம் - குறை தவிர்ப்பது நலம் .
நான் ஆறு வருடங்களாக நடிகர் திலகம் திரியினை தொடர்ந்து படித்து வருகின்றேன் .
குறிப்பாக திரு முரளி - திரு கோபால் -திரு நெய்வேலி வாசுதேவன் - திரு ராகவேந்திரன் .திரு சுவாமிநாதன் .- திரு பார்த்தசாரதி - மற்றும் பலருடைய பங்களிப்பு விலை மதிப்பற்றது .
மேடம் சாரதா - திரு கார்த்திக் -திரு கல்நாயக் - திரு ஆதிராம் மறக்க முடியாத நால்வர் அணி .சூப்பர் ஆய்வுகள் - பதிவுகள் . இருந்தாலும் இந்த நால்வரின் முகமும் ஒரு முகம் தானோ ?
மனிகட்டியாகிவிட்டது . தெரிய வேண்டியது சம்பந்த பட்டவர்கள் .
ரசனை தொடரும்
"பொது வாழ்க்கையில் அவர் எத்தனையோ நல்ல காரியங்களையும் உதவிகளையும் சத்தம் போடாமல் செய்திருக்கிறார். தான் பெரிதாகப் புகழடையத்தொடங்க முன்பே அவர் அளித்த கொடைகள் பற்றி யாரும் பெரிதாக அறிந்திருக்கவில்லை. அதை வைத்து அவர் புகழ் பெற முயன்றதுமில்லை."
நிதர்சனமான உண்மையை, அதிகம் பேசப்படாததை எழுதி உள்ளீர்கள்.
Hats off to You.
Anand
நன்றி சகோதரர் anm! பள்ளிக்கூடக் கட்டுரைப்போட்டியில் வென்று விட்டதைப்போன்ற உற்சாகம் எனக்கு! என் தமிழ் எழுத்துப்புலமை மீது நம்பிக்கை வந்துவிட்டது. சிவாஜியை நினைத்தவுடன் தமிழ் தானாக வருகிறது போலும்!
இங்கிருக்கும் experienced hubbers போல என்னிடம் statistics எல்லாம் இல்லை. திருவாளர்கள் ராகவேந்தர், முரளி, பம்மலார் மற்றும் சாரதா மற்றும் இன்னும் பல NT experts முந்தைய திரிகளில் எழுதிய தகவல்களை அடிப்படையாகக் கொண்டு, எனது எழுத்து நடையில் எழுதியது தான்.
இன்னொன்று திரு முத்ராமன் க்கு : இது நடிகர் திலகத்துக்கான திரி. இதில் நாங்கள் அவர் புகழ் பாடும்போது பிற நடிகர்களை ஒப்பிடுவது தவிர்க்க முடியாதது. அதுமட்டுமல்லாமல் அவருடைய படங்களையும் ஒன்றுடன் ஒன்றும் இரு வேறு படங்களில் அவருடைய நடிப்பு வித்தியாசத்தையுமே கூட நாம் ஒப்பிடுகிறோமே! சிவாஜி என்றல்ல, எந்தவொரு இலக்கிய ஆக்கத்தையும் நாம் விமர்சனம் செய்யும்போது comparisons வரும். அப்போது எதிர்க்கருத்தாளர்கள் தமது மாற்றுக்கருத்துக்களையோ கண்டனங்களையோ சொல்லலாம். இதில் தப்பில்லை என்பது என் கருத்து. யாரும் தமது கருத்துக்களை இங்கே தாராளமாகச் சொல்லலாம் என்றே நான் நினைக்கிறேன். வ.மா ஆனந்த் ஐ விட, எனக்கு சி.செ: அசோக்கைப் பிடித்தது: காரணம் ஏற்கனவே சொல்லியாகிவிட்டது.
இதுவும் நன்றாயிருக்கிறதே. (வெடி) 'திரி' யைப் போட்டு வாதத்தை ஆரம்பித்தாகி விட்டது, நடக்கட்டும்!
என் கண்களை நம்ப முடியவில்லை . உங்களின் எழுத்து , நடை . எல்லாமே முன்னர் பதிவிட்ட மேடம் சாரதா , கார்த்திக் போன்றோரின் சாயல் உள்ளது வியப்பாக உள்ளது . உங்களின் நகைச்சுவை கல்நாயக்கை நினைவு படுத்துகின்றது . வெடி -திரி - நண்பர் ஆதி ராமை நினைவு படுத்துகிறது .
எது எப்படியோ அவரவர் பெயரில் வரும் பதிவுகள் உணமையாக இருப்பின் வரவேற்க தக்கதே .
அசோக் -ஆனந்த் இருவருமே நடிகர் திலகம்தான் . வித்தியாச மான நடிப்பில் அசத்தியிருப்பார் .
சகோதரி
உங்களின் அருமையான பதிவுகளை எதிர் பார்க்கின்றேன் .
நீங்களாக எழுதுங்கள் , நிச்சயம் வெற்றி பெறுவீர்கள் .
அன்புடன்
முத்ராம்
டியர் முத்ராம்,
தங்களை நான் முத்துராம் என்று நினைத்தேன். ஆனால் தங்களுடைய முத்திரையில் முத்ராம் என்று உள்ளதால் நானும் முத்ராம் என எழுதுகிறேன். முதலில் தங்களுக்கு என் உளமார்ந்த வரவேற்பினை கூற விரும்புகிறேன். தங்களுடைய பங்களிப்பின் மூலம் மற்றொரு புதிய பரிணாமத்தில் நடிகர் திலகத்தின் ரசிகரைக் காண முடியும். இதற்கு வாய்ப்பளித்த இந்த மய்யத்திற்கும் அதே போல் நடிகர் திலகத்திற்கும் நம் நன்றிகள்.
பல்வேறு விதங்களில் அணுகுமுறைகளில் கருத்துக்களில் வேறுபாடு இருந்தாலும் ஒரு விஷயத்தில் சிவாஜி ரசிகர்கள் ஒரே மாதிரி இருப்பார்கள். இறுதி வரை சிவாஜி ரசிகர்களாக இருப்போம் என்கிறை வைராக்கியமே அது. அதை யாராலும் அசைத்துப் பார்க்க முடியாத உறுதியான மனப் பான்மை. யாராலும் விலை கொடுத்து வாங்க முடியாதவர்கள் சிவாஜி ரசிகர்கள். அதைப் போன்று எழுத்து நடைகளிலும் ஒரே மாதிரி எழுதக் கூடிய சிவாஜி ரசிகர்கள் பலருண்டு. அதில் சாரதா, கார்த்திக், கல்நாயக், போன்று மேலும் வரலாம் அல்லவா. அப்படி சிந்தித்துப் பாருங்களேன்.
வாழ்த்துக்கள் முத்ராம், தொடர்ந்து தங்களுடைய பதிவுகளைப் படிக்க காத்திருப்பவர்களில் நானும் ஒருவன்.
அன்புடன்
வனஜா மேடம் அவர்களே,
தங்களின் சிங்கத்தமிழன் சிவாஜி கணேசன்!
அருமையான கட்டுரை. நன்றி.
Mr. MUTHURAMAN,
The other three hubbers has to reply for the doubt created by you.
But,
first person did not come for more than one year.
second one did not come for some months. (everytime he will come with some gap, give some beautiful malarum ninaivugal, then disappear)
the third one wil come then and there, but cant see nowadays.
the fourth person me (Anantha Raman) only here.
before, many times karthik accepted that he is following the writing style of saradha. but what made you to include me and mr.kalnayak in that roll, I cant able to know.
Some years before somebody was saying, Murali and Saradha are same person, because they are always talking about past history with statistical datas.
My GOD, ippo sister Vanajavaiyum indha doubtla serththaachaa?. Kashtamthaan.
அகர வரிசையில் பார்த்தால் முதலில் அ, பிறகு தான் ஆ ...
அதாவது அசோக், பிறகே ஆனந்த் ...
இது யெதேச்சையாக அமைந்ததா ...
என்னுடைய தனிப்பட்ட அபிப்ராயம் எனச் சொல்ல வேண்டுமென்றால்.
வசந்த மாளிகை நாவலாக ஒரு காதல் காவியமாகத் தான் உருவானது. பிரேம் நகர் என்கிற சிறந்த தெலுங்கு நாவல் மக்களிடையே மிகப் பெரிய வரவேற்பைப் பெற்றது. அதை எழுதிய கௌசல்யா அவர்களும் பிரபலமானார். அதை அப்படியே எடுத்திருந்தால் நிச்சயம் சிவகாமியின் செல்வனைப் போன்று முழுதும் காதலைப் பற்றி மட்டும் சொன்ன படமாயிருந்திருக்கும். ஆனால் நாவலில் கௌசல்யா அவர்கள் சற்று சமூகப் பிரச்சினைகளையும் சேர்த்திருந்தார். குறிப்பாக கிராமத்து விவசாயிகளின் சிரமங்களையும் அங்கங்கே சொல்லி யிருந்தார். ஆனால் திரைக்கதையாக அதை மாற்றும் பொழுது அதை சமூகப் பிரச்சினைக்காகவோ அல்லது முழுதும் காதலுக்காகவோ அணுகாமல் சற்றே வர்த்தக ரீதியில் அமைத்தது ஒரு அணுகுமுறை. அதனடிப்படையில் சில வியாபார அம்சங்களை சேர்த்ததனால் அது காவியம் என்கிற வார்த்தைக்கான தகுதிக்கு சற்று ஈடு தராத நிலையில் உள்ளது என்பதே என் கருத்து. நாயகன் பணக்கார வர்க்கத்தில் பிறந்து மதுவுக்கும் மாதுவுக்கும் ஆட்படுவது சாதாரணமான நிலை. அவனுக்குள் உள் மனதில் புகுந்து காதலை உருவாக்கி அவனை சிறிது சிறிதாக நல்லவனாக்குவதாக வரும் போது காதலின் மகத்துவம் நிச்சயம் உயர்த்தித் தான் காட்டப் பட்டிருக்கிறது. அதே போல் அவளைப் பற்றி தான் கேள்விப் பட்டதை அவளிடமே நேரில் கேட்கும் போது அந்த பாத்திரத்தின் நேர்மையினை கதாசிரியர் வெளிப் படுத்துகிறார். உள்ளொன்று வைத்து புறமொன்று சொல்லா குணம் காதலரிடம் இருப்பது நல்லது என்பதை அந்த இடத்தில் வலியுறுத்துகிறார். இது காதலர்களுக்கு இருக்க வேண்டிய மனப்பான்மை. அதே நேரத்தில் அந்த பணக்கார வாலிபனின் போலித்தனமற்ற நல்ல உள்ளத்தை பிரதி பலிப்பதாகவும் அமைகிறது பாத்திரப் படைப்பு. அதைக் கேட்டு நாயகி கோபப் படுவதும் நியாயமே, இயல்பான மனித உணர்வினைத் தான் காட்டுகிறார். ஆக, இந்த காட்சியில் சந்தர்ப்பமும் சூழ்நிலயும் மனிதனை எந்த அளவிற்கு ஆட்டுவிக்கின்றன என்பதையே கதாசிரியர் வலியுறுத்தி இருக்கிறார்.
வசந்த மாளிகை திரைப்படம் ... நான் சொல்வது படத்தை .. மூலக்கதையை அல்ல ... காவியம் என்கிற வார்த்தைக்கு சற்றே தகுதி குறைந்ததாக தோற்ற மளிப்பதற்கு முதற் காரணம் திரைக்கதையாக்கலே. படத்தின் விறு விறுப்பு அல்லது வணிக நோக்கம் இந்த இரண்டு காரணங்கள் திரைக்கதையை வழுவ வைத்து விட்டன. குறிப்பாக நகைச்சுவை என்கிற பெயரில் நாகேஷ்-வி.கே.ராமசாமி-ரமாப்பிரபா அடிக்கும் கூத்துக்கள் விரசத்தின் உச்சம். இவையே அந்தப் படத்தின் மாற்றைக் குறைக்கின்றன. அதே போல் ஹோட்டலில் நாயகியை நிர்வாகி கற்பழிக்க முயலுவதும் நாயகன் காப்பாற்றப் போடும் சண்டைக் காட்சியும் செயற்கையின் உச்சம். அதை நாம் அப்போது விழுந்து விழுந்து ரசித்தோம், இன்றும் ரசிக்கிறோம், நாளையும் ரசிப்போம் ... காரணம் நடிகர் திலகத்தின் ஸ்டைல் ... அது வேறு விஷயம் ...
இது போன்ற குறைகள் இல்லாமல் முழுக்க முழுக்க --- தழுவலாக இருந்த போதிலும் --- காதல் உணர்வை வெளிப்படுத்திய படம் சிவகாமியின் செல்வன்.. படத்தின் பெயரே நம்மை சுண்டி இழுக்கும் ... பெருந்தலைவரைக் குறிப்பதல்லவா ... இருந்தாலும் அதனைக் கதைக்கேற்ற வாறு பயன் படுத்திய விதம்... மிகவும் பொருத்தம்.
முதலிலிருந்து கடைசி வரை சிவாஜி ரசிகர்களுக்கு சிவகாமியின் செல்வன் பிடித்திருக்கிறதென்றால் காரணம் ...
வேறெ யாரு
http://www.nadigarthilagam.com/image10/CVRspeaks.jpg
ஒரு புதிய தலைமுறையினரையே நடிகர் திலகத்தின் பக்கம் திருப்பி விட்ட சிவிஆர் அல்லவா...
நான் என்றைக்கும் நினைத்துப் பார்க்கும் விஷயத்தையே இங்கே கூற விரும்புகிறேன்.
இதே வசந்த மாளிகை படத்தை சிவிஆர் இயக்கியிருந்தால் .
நினைத்தாலே நெஞ்சம் இனிக்கும்.
வசந்த மாளிகை ஒரு வெற்றிகரமான மசாலா காதல்
சிவகாமியின் செல்வன் ஒரு வெறித்தனமான உண்மையான காதல்
Even Songs are more memorable in SS than VM. Why the movie did not get
the response like VM is still a mystery.
திரு ராகவேந்திரன் அவர்களுக்கு எனது வணக்கம் .
உங்களின் அன்பான வரவேற்பிற்கு நன்றி .
நான் நடிகர்திலகம் அவர்களின் நடிப்புக்கு ரசிகன் .
மக்கள் திலகத்தின் பாடல்கள் - சண்டைகாட்சிகள் - இளமை துள்ளல்கள் - காட்சிகளுக்கு ரசிகன்
ஜெமினி அவர்களின் மென்மையான நடிப்புக்கு ரசிகன் .
எனது இயற் பெயர் முத்துராமன் .
தாய் - முத்தம்மா - தந்தை -ராஜாராம்
இருவரின் பெயரை சுருக்கி முத்ராம் என்று பதிவிட்டேன் .
அசோக் பற்றிய உங்களின் நீண்ட பதிவு உங்கள் ரசிப்பு திறனுக்கு எடுத்துகாட்டு .
எனக்கு உங்கள் அளவு பதிவிட அனுபவமில்லை .
நீங்கள் எல்லாம் ஜாம்பாவான்கள் .
என்னை பற்றி கூறிவிட்டேன் , பன்முகம் காட்டும் நண்பர் ஒருவர் மட்டும்
என்னுடைய புதிரை விடுவிக்கவில்லை .
பாடும் நானே பாவமும் நானே பாடல் நினைவுக்கு வருகிறது
நன்றி
Thanks to sister VANAJA,
You started the comparison between Vasandha Maligai and Sivagamiyin Selvan.
Now everyone realise and started to accept SS is better than VM. You tempted every one to watch Sivagamiyin Selvan, including me.
Tonight my schedule is watching SS dvd.
thuvandu kidandha thiriyai thookki niruththiyatharku another thanks.
A small correction in my personal opinion. There is no question of realisation. Every fan of NT has his own favourites and he will never change his stance. So the question of realisation or acceptance does not arise. However, one's views may enlighten another to view in that angle. Accordingly there are considerable hardcore fans who weigh SS better than VM incl me. Until SS was released we were happy that VM was a romantic and classic. Even during VM release I rated Sumathi En Sundari (even today) among my friends a better up than VM. And it still holds good. SES is among my top ten of NT's films.Quote:
Now everyone realise and started to accept SS is better than VM.
A memorable still from Sivakamiyin Selvan
http://i.ytimg.com/vi/a7eEJ7Kl7BY/0.jpg
டியர் பார்த்த சாரதி சார்,
ஒவ்வொரு நண்பரையும் குறிப்பிட்டு பாராட்டியுள்ள தங்களுடைய பதிவுக்கு என் உளமார்ந்த நன்றி.
Thanks to Madam Vanaja for the brisk pace of this thread.
My favourite nt flims
1. Thangaikkaga
2. Piraptham
3. Neelavanam
4. Santhi
5. Galatta kalyanam
6. Sumathi en sundri
7. Aandavan kattalai
8. Thangai
9. Niraikudam
10.pavamannippu
திரு ராகவேந்திர சார்,
அருமயாக அலசி விட்டீர்கள், சிவகாமியின் செல்வனுக்கும் வசந்த மாளிகையின் ஆனந்திற்கும் உள்ள வித்தியாசத்தை;
இதன் உச்சம் என்னவென்றால் நமது நடிகர்திலகம் ஒவ்வொரு பாத்திரத்திற்கும் ஒரு புதிய கோணத்தைக் கொடுத்து நம்மையெல்லாம் கருத்தாய்வும் செய்ய வைத்து விட்டாரே.என்னே அவரது திறன்.
ஆனந்த்
நண்பர்களே,
தினமலர் இந்த வாரம் "வாரமலரில்" திண்ணை என்ற பகுதியில் கீழ்க்கண்ட தவறான செய்தி வந்துள்ளது, நாம் நமது கணடனத்தை தெரிவிக்க வேண்டும் என்று நினைக்கிறேன்:
"எம்.ஜி.ஆரை கதாநாயகனாகப் போட்டு, "மாடி வீட்டு ஏழை' என்ற திரைப்படத்தை, தாமே டைரக்ட் செய்து, தயாரிக்கத் தொடங்கினார் நடிகர் சந்திரபாபு. முதல் நாள் படப்பிடிப்பிலேயே, இருவருக்கும் மோதல் ஏற்பட்டது. எம்.ஜி.ஆர்., மேற்கொண்டு நடிக்க வரவேயில்லை.
அப்போது, "கலை' என்ற பெயரில், ஒரு சினிமாப் பத்திரிகை வெளிவந்தது. அதில், சந்திரபாபு அளித்த பேட்டியில், "உங்களுக்குப் பிடித்த நடிகர்?' என்ற கேள்விக்கு, "இரண்டு பேர், ஒன்று - நான். மற்றொருவர் - சிவாஜிகணேசன்' என்று பதில் அளித்தார். எம்.ஜி.ஆரை கோபமூட்டுவதற்காகச் சொன்ன பதில்! சுவற்றில் அடித்த பந்து திரும்பி வந்தது. எம்.ஜி.ஆரின் அண்ணன், எம்.ஜி.சக்கரபாணி, சந்திரபாபுவிடம் கேட்டார்...
"என்ன, ஒரு பத்திரிகையில், உனக்குப் பிடித்த நடிகர் சிவாஜி கணேசன் தான் என்று சொல்லியிருக்கிறாய்?'
சந்திரபாபு சூடாகச் சொன்னார்: "பின்னே... உங்கள் தம்பி பெயரை சொல்வேன் என்று நினைத்தீர்களா? நெவர்!'
விளைவு - "மாடி வீட்டு ஏழை' படம் நிரந்தரமாக நிறுத்தப்பட்டது. சந்திரபாபு உண்மையிலேயே ஏழையாகிப் போனார்.
ஒருபடத்தில் நடிக்க, ஒரு லட்ச ரூபாய் சம்பளம் வாங்கினார் சந்திரபாபு. (அந்தக் காலக்கட்டத்தில் அரசு ஊழியரின் ஒரு மாதச் சம்பளமே, 150 ரூபாய் தான்) அடுத்த ஏழு, எட்டு ஆண்டுகளில், வயிற்றுக்குச் சோறின்றி, வாழ வழியின்றி, வீட்டு மின்சாரக் கட்டணம் செலுத்தாமல், மின்வாரியத்தினர் வந்து, "பீஸ்' பிடிங்கிவிட்டுப் போன நிலையில், மெழுகு வர்த்தி வாங்கவும் காசில்லாமல், மூன்று இரவுகள் இருட்டிலேயே வாழ்ந்தார்.
எந்த சிவாஜி கணேசனை உயர்த்திக் பேசியதற்காக எம்.ஜி.ஆரின் பகையாளி ஆகி, ஒரு வேளை சோற்றுக்கும் வழியின்றி வதைபட்டாரோ, அதே சிவாஜி கணேசனை, ஒரு நாள் தேடிப் போனார் சந்திரபாபு.
"கணேசா... இப்போது நான் பட வாய்ப்பு இல்லாமல், பட்டினி கிடக்கிறேன். உன் படங்களில் எனக்கு சிபாரிசு செய்து, வாய்ப்பு வாங்கி கொடு. ஏதோ, பிழைத்துக் கொள்கிறேன்...' என்றார்.
சிவாஜி கணேசன் சாவதானமாகச் சொன்ன பதில், "உனக்கு என்னப்பா கஷ்டம்? ஏன் பட்டினி கிடக்கிறாய்? தினமும் என் வீட்டிற்கு வந்து சாப்பிட்டுவிட்டு போ. உனக்கென்று தனியாகவா உலை வைக்கப் போகின்றனர். என் வீட்டில் எத்தனையோ பேர், வேலைக்காரன், தோட்டக்காரன், சமையல்காரன் சாப் பிடுகின்றனர். அதுபோல, நீயும் ஒருத்தனா சாப்பிட்டுவிட்டுப் போயேன்...'
பதில் சொல்லாமல், கிளம்பிப்போன சந்திரபாபு, விரைவில் காலமானார்."
இது ஒரு தவறான் செய்தி. சிவாஜி அவர்களிடம் சந்திரா பாபு வந்ததும், சிவாஜி அவர்கள் அன்புள்ளத்தோடு நமது வீட்டிலேயே தங்கி சாப்பிட்டு கொண்டிருக்க சொன்னதும் அதற்கு சந்திரா பாபு தனக்கு ஒரு வேலை கொடுக்கக் கேட்டதும் அதன் பின்னர்தான் "நீதியிலும்" "ராஜவிலும்" சிவாஜி அவர்கள் சந்தர்ப்பம் கொடுத்ததும். எம்ஜியார் சந்திர பாபுவைப் பழி வாங்கியதும் வேறு காரணங்களுக்காக என்பது உலகமே அறிந்தது, ஆனால் தினமலர் யாரை திருப்தி படுத்துவதற்காக இந்த பொய்யான செய்தியை வெளியிட்டு உள்ளார்கள் என்பதுதான் புரியவில்லை,
நாம் நமது கண்டனத்தை வெளிப்படுத்த வேண்டும் எல்லா நண்பர்களையும் கேட்டுக் கொள்கிறேன்.
ஆனந்த்