நண்பர்களே..
வசூல் ஒப்பீடு என்பது தேவையில்லை என்று நாம் பல முறை கூறி வந்திருக்கிறோம். தமிழ்த் திரைப்படம் என்பது வியாபார ரீதியாக வெற்றி பெறும் படங்களினால் தான் இத்தனை ஆண்டுகளாக தொடர்ந்து நிலைத்து வருகிறது. ஒரு ஆண்டுக்கு சராசரி 50 படங்களே என்று வைத்துக் கொண்டாலும் கூட இந்த 80 ஆண்டுகளில் குறைந்த பட்சம் 4000 திரைப்படங்கள் வெளிவந்திருக்கும். ஒவ்வொரு கால கட்டத்திற்கும் நட்சத்திரங்களின் புகழும் இந்த வெற்றியைத் தீர்மானிக்கும் அளவு கோலில் அடங்கி வந்திருந்தாலும் அவ்வப்போது இதையெல்லாம் தாண்டி அந்தந்தப் படங்களுடைய தகுதி, தரம் போன்றவற்றிற்காக பெற வேண்டிய வெற்றியைப் பெற்றும் உள்ளன. வியாபார ரீதியிலான உலகில் வசூல் என்பது காலத்திற்குக் காலம், விலைவாசி, போன்ற பல அம்சங்களின் பொருட்டு நுழைவுச்சீட்டு கட்டண உயர்வு, இருக்கைகளின் எண்ணிக்கை போன்றவற்றைப் பொறுத்து வேறு பட்டு வந்திருக்கின்றன. கடந்து போன பல ஆண்டுகளுக்கு முந்தைய வசூல் விவரங்கள் தற்போதைய கால கட்டத்தில் நிரூபிக்க முடியாத விஷயங்களாகத் தான் இருக்கும் என்பது என் கருத்து. இதற்கு பல காரணங்களைக் கூறலாம். எனவே இந்த வசூல் அதிகம், இந்த வசூல் குறைவு, என்பவையெல்லாம் ஆவணங்களால் நிரூபிக்க இந்த காலகட்டத்தில் சாத்தியமில்லாதவை. அவ்வப்போது சில திரைப்படங்களின் செய்தித்தாள் விளம்பரங்களில் வெளியிடப் பட்ட வசூல் விவரங்கள் நம்பகத்தன்மை வாய்ந்தவை என்றாலும் அவற்றின் எண்ணிக்கை மிகவும் குறைவு.
இந்த அடிப்படையில் வசூல் ஒப்பீடு என்பது எவருக்குமே தேவையில்லாத ஒன்று என நான் எண்ணுகிறேன்.
ஒரு உதாரணத்திற்காக ஒப்பீடு என்பது எவ்வாறு இருக்க வேண்டும் என்பதற்காக கீழே தரப்படுகிறது.
இந்த மய்யம் திரியிலேயே நடிகர் திலகம் திரி எம்.ஜி.ஆர். அவர்களுக்கான திரி இவையிரண்டும் பார்வையாளர்கள் எண்ணிக்கை, பதிவுகளின் எண்ணிக்கை, இவற்றை 03.08.2014 இன்று நண்பகல் 12.00 மணி யளவில் வைத்து ஒப்பிடப் படுகிறது. இந்த எண்ணிக்கை இதைக் குறிப்பெடுத்த நேரத்துக்குத் தான் பொருந்துமே தவிர நிலையானதல்ல. இரண்டிலுமே இந்த விகிதங்கள் மாறுபடும் வாய்ப்புள்ளவை. இதை வைத்து இது தான் உயர்ந்தது, இது தான் அதிக வரவேற்பைப் பெற்றது என்று முடிவுக்கு வரமுடியாது.
நடிகர் திலகம் திரி பாகம் 14
துவக்கப் பட்ட நாள் 06.07.2014
பார்வையாளர் எண்ணிக்கை - 03.08.2014 பகல் 12.00 மணி வரை - 26885
மொத்தப் பதிவுகளின் எண்ணிக்கை - 03.08.2014 பகல் 12.00 மணி வரை - 659
ஒரு பதிவிற்கு சராசரி பார்வையாளர் எண்ணிக்கை - 26885 / 659 = 40.80
06.07.2014 முதல் 03.08.2014 வரை 29 நாட்களுக்கு ஒரு நாளைக்கு இத்திரியின் சராசரி பார்வையாளர் எண்ணிக்கை 927.07
எம்.ஜி.ஆர் அவர்களுக்கான திரி பாகம் 10
துவக்கப் பட்ட நாள் 10.07.2014
பார்வையாளர் எண்ணிக்கை - 03.08.2014 பகல் 12.00 மணி வரை - 24274
மொத்தப் பதிவுகளின் எண்ணிக்கை - 03.08.2014 பகல் 12.00 மணி வரை - 1392
ஒரு பதிவிற்கு சராசரி பார்வையாளர் எண்ணிக்கை - 24274 / 1392 = 17.44
06.07.2014 முதல் 03.08.2014 வரை 29 நாட்களுக்கு ஒரு நாளைக்கு இத்திரியின் சராசரி பார்வையாளர் எண்ணிக்கை 837.03
நம்மிடமுள்ள நம்பகத்தன்மை வாய்ந்த ஆவணங்கள், சரியான தகவல்கள், புள்ளி விவரங்கள் இவையே ஒப்பீடு செய்வதற்கு அளவு கோலாக இருக்க வேண்டும் என்பதற்காகவே இந்த உதாரணமே தவிர யார் சார்பாகவும் அல்லது யார் மனதையும் புண்படுத்த அல்ல.