http://i62.tinypic.com/1218lfq.jpg
Printable View
மக்கள் திலகத்தின் இறுதி யாத்திரை என்கிற விடியோ காட்சியை நான் பகிர்ந்திருந்தேன் .... உண்மையில் நான் பார்த்த மாத்திரத்திலேயே அழுது விட்டேன் ...
அவருடன் பல ஆண்டுகள் பணியாற்றிய கலைமாமணி ரவீந்தர் அவர்கள் கூறிய ஒரு சம்பவம் .. உங்களுக்காக ....
" எனக்கு 1958 இல் திருமணம் நிச்சயமாகியிருந்தது , " நாடோடி மன்னன் வெளி வரும் வரை பொறுத்திரும் பிரமாதமாகச் செய்யலாம் என்றார் "
படம் வெளிவந்து பெரும் வெற்றி பெற்றதும் , மக்கள் திலகத்தின் அண்ணன் எம் ஜி சக்ரபாணி என்னை அழைத்து , " என்னைய்யா ஆச்சு உன் கல்யாணம் எப்ப வைச்சுக்கலாம் ? " என்று கேட்டார்
நான் , " தேதி குறிப்பிட்டு விட்டார்கள் , அதற்காகவே வந்தேன் " என்று சொன்னதும்
" சந்தோசம் , எவ்வளவு வேண்டும் என்று கேட்டார் "
நான் " பதினாறு ரூபாய் வேண்டும் " என்று சொன்னேன் .
பெரியவரும் சின்னவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர் ...
பின்னர் பெரியவர் தயங்கித் தயங்கிச் சொன்னார் " ரவீந்தர் , நாடோடி மன்னனில் புகழ் கிடைச்சிது , பணம் கிடைக்கலே , ஏதாவது குறைச்சு தரலாமா ? " என்று கேட்டார்
நான் புரிந்துக் கொண்டு " பதினாறாயிரம் கேக்கலே , வெறும் பதினாறு ரூபாய் தான் " என்றுச் சொன்னேன்
கலகலவென்று சிரித்து " என்னைய்யா பதினாறு ரூபாய் கல்யாணம் ? ஒரு பிளேட்டு பிரியாணிக்கு கூட ஆகாதே ? " என்று கேட்டார்
" எங்கள் தாலி ஒரு கிராம் எடையில் இருக்கும் , இப்ப அதோட விலை பதினாறு ரூபாய் , அதுக்கு மட்டும் கொடுத்தா போதும் , மத்தப்படி உங்க தயவுல என் கிட்ட இருக்குற பணம் போதும் " என்றேன் .
" அப்படியா இரும் கொண்டாறேன் , " என்று உள்ளே சென்று நான் கேட்ட பணத்தை கொண்டு வந்து பெரியவரே என்னிடம் கொடுக்கச் சொல்லிச் சொன்னார் செம்மல் .
அதை பெரியவர் என்னிடம் கொடுத்து விட்டுப் போய் விட , நான் அங்கேயே காத்திருந்தேன் , உள்ளே சென்ற செம்மல் திரும்ப வந்தார் , என்னைப் பார்த்து " ஏன், ரவீந்தர் , இன்னும் வேணுமா ? உமக்காக பத்தாயிரம் எடுத்து வச்சிருக்கேன் , தர்றேன் " என்றார்
நான் உடனே , " அதுக்கில்லே அண்ணா , அந்தப் பணத்தை உங்க கையால கொடுப்பீங்கன்னு நினைச்சேன் " என்றேன் ..
" அட முட்டாளே , என் அண்ணன் பிள்ளைக் குட்டிக் காரர் , எனக்கு அது இல்லை , அதனால் தான் அவர் கையால் கொடுக்கச் சொன்னேன் " என்றார் ...
இதைக் கேட்ட நான் அழுதுவிட்டேன் .... செம்மலும் கண் கலங்கி விட்டார் ,, என்னை அணைத்து " நல்லா இரும் " என்று வாழ்த்தினார் ... இன்று நான் 6 பிள்ளைகளுக்கு தந்தை ....
எண்ணங்களின் வண்ணங்களாக எண்கள் திகழ்ந்திட்ட திகட்டாத மதுர கீதங்கள் !
எண் இரண்டு
PART 2/2Quote:
இரண்டு கண்கள் இரண்டு காதுகள் இரண்டு கால்கள் இரண்டு நாசித் துவாரங்கள்...நாணயத்தின் இரண்டு பக்கங்கள்....இரவும் பகலும் இரண்டு நேரங்கள்....
இன்பம் துன்பம் இரண்டு உணர்வுகள் ....ஆணும் பெண்ணும் இறைவனின் இரண்டு படைப்பம்சங்கள்....
எண் இரண்டை பெருமைப்படுத்திய திரைப் பாடல்கள் !
மக்கள்திலகம் பெருமைப்படுத்திய எண் இரண்டு !
கண்களிரண்டும் விடி விளக்காக .....
https://www.youtube.com/watch?v=KSFTdt6I1n8
கண்கள் இரண்டும் என்று உம்மைக் கண்டு பேசுமோ ...
https://www.youtube.com/watch?v=-xYZh6kgbk0
இரண்டு கண்கள்.....
https://www.youtube.com/watch?v=-9TXLXecyJU
தனது தாத்தாவிற்காக இங்கு வந்து நன்றிய "தா தா தா " என்று போராடும் அந்த குழந்தையின் உணர்வை மதிக்கிறோம். நங்கள் எப்போதும் எங்களது ஒப்பற்ற தலைவர் புரட்சித்தலைவர் வழியில் "வார்த்தை இன்றி போகும் போது மௌனத்தாலே நன்றி சொல்வோம்" செல்கிறோம்.
அரசியல்வாதிகள் ஒரு நாட்டுக்குத்தான் சொந்தம். கலைஞ்ர்கள் உலகத்திற்கே சொந்தமானவர்கள்.
- புரட்சித்தலைவர்
அந்த நீருற்றுக்கு பதிலாக நடிகர் திலகத்தின் சிலையை அங்கு அமைக்கலாமே! பிற்காலத்தில் அது "சிவாஜி" ரவுண்டானா என்று அழைக்கப்படும். இதனால் "அனைவருக்கும்" நிம்மதி.இது என்னுடைய கருத்து.
அனைவருக்கும் ஓணம் ஆஷம்சகள்
Pookaleyum pookaletheyum varavelkunna chithra salabhangale pole namukorumichu e ‘Ponnonathe’ varavelkam evarkum
“Happy Onam”
எல்லோருக்கும் இனிய ஓணம் வாழ்த்துக்கள் - வாருங்கள் எல்லோரும் சேர்ந்து உணவு உண்போம் .
http://i818.photobucket.com/albums/z...psizsrkyjm.png
http://i818.photobucket.com/albums/z...psfv9vbztz.jpg
http://i818.photobucket.com/albums/z...psqfzya2uq.jpg
http://i818.photobucket.com/albums/z...psddzvryxa.jpg
http://i818.photobucket.com/albums/z...psgogrbnp6.jpg
http://i818.photobucket.com/albums/z...psgm0emsjd.jpg
http://i818.photobucket.com/albums/z...psvp151tqs.jpg
அனைவருக்கும் எனது இதயம் கனிந்த ஓணம் பண்டிகை நல்வாழ்த்துக்கள்.
இதயம் நிறைந்த எம்.ஜி.ஆர் என்ற புதிய தொடருக்கு அதன் ஆரம்பக் கட்டத்திலேயே நண்பர்கள் அனைவரும் காட்டிய ஆதரவிற்கு நன்றி. பலரது ஆலோசனைக்கும் இணங்க இன்று முதல் அது தனித் திரியாக ஆரம்பிக்கப்பபட்டிருக்கிறது. அதன் இணைப்பு இங்கே கொடுக்கப்பட்டிருக்கிறது. ஆலோசனைகள் வழங்கிய மற்றும் ஆதரவு நல்கிய நண்பர்கள்பேராசிரியர் செல்வகுமார், வினோத், ராமமூர்த்தி, ரூப்குமார், கலைவேந்தன் , சி.எஸ்.குமார் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி நன்றி. நன்றி.
http://www.mayyam.com/talk/showthrea...04#post1247004
ഓണാസംസകൾ
Numerals rule the roost!!
எண்ணங்களின் வண்ணங்களான எண்கள் ஆட்டுவித்திட்ட அமுத கான வரிசை !
எண் மூன்று
Quote:
மூன்று என்பது மும்மூர்த்திளை ஆராதிக்கும் / மூவேந்தர்களை குறிக்கும் / முக்கனிகளை நினைவூட்டும் / சமுத்திர முக்கூடலை மனத்திரையில் விரிக்கும் / கடந்த காலம் நிகழ் காலம் எதிர்காலம் என்னும் முக்காலங்கள்......முப்படை அணிவகுப்பு, நீளம் அகலம் ஆழ/உயரம் முப்பரிமாணம்....
திரையுலகப் பொருத்தவரை நடிகர்திலகம் /மக்கள்திலகம்/ காதல் மன்னர் என்னும் முப்பரிமாண நடிகவேந்தர்களைக் கண்முன்னே நிறுத்தும் !
அரசியலிலும் மூன்று என்பது மந்திர வார்த்தையே ....
எண் மூன்று மக்கள்திலகம் அதிகமாகப் பெருமைப் படுத்தியதே!
மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும் ..அது முடிந்த பின்னாலும் பேச்சிருக்கும்...கடமை...அது கடமை...MGR என்ற மூன்றெழுத்து பொழுதுபோக்கு மனமகிழ் மந்திரவாதி பாடி ஆடுகிறார் !
https://www.youtube.com/watch?v=cvgOHwXNrFA
மூன்று தமிழ் தோன்றியதும் உன்னிடமோ...மு க முத்து முயல்கிறார்...நகலெடுக்க!
[url]https://www.youtube.com/watch?v=SaC4mtYp4FY
மதுரையில் பறந்த மீன்கொடி ராஜஸ்ரீ முக்கனியாய் மூவேந்தர் ராஜ்ஜியமாய் ஒன்றான தமிழகமாக வர்ணிக்கப் படுகிறார் ..காதல் மன்னரின் புகழ் பெற்ற
பைஜாமா ஜிப்பா கெட்டப்பில் !!
https://www.youtube.com/watch?v=v7PePTO-xYI
மூன்று தமிழும் ஓரிடம் வந்து பாடவேண்டும் காவிய சிந்து ....நாளை நமதே!
[url]https://www.youtube.com/watch?v=aoj1z1KnWwk
மூன்று சார்ந்த பாடல்களின் அணிவகுப்பு இனி நண்பர்களின் பங்களிப்பிலே !
மையம் . திரியில் இணைந்து ஒரு வருடத்திற்குள் 6000 கண்கவர் மக்கள் திலகம் எம்ஜிஆர் - நடிகர் திலகம் சிவாஜிபடங்களின் ஸ்டில்களை இரவு பகல் பாராது தொடரந்து பதிவேற்றி எல்லோரையும் மகிழ்ச்சி வெள்ளத்தில் மூழ்கடித்த இனிய நண்பர் திரு முத்தையன் அவர்களுக்கு மனமார்ந்த பாராட்டுக்கள் .
பெருந்தன்மைகோர் பேராசிரியர்
கடந்த வாரம் சென்னை சென்ற போது பேராசிரியர் செல்வகுமார் அவர்களைச் சந்தித்தேன். அன்பாக வீட்டிற்கு அழைத்துச் சென்று அருமையாக உபசரித்த பேராசிரியர் அவர்கள் தனது பொக்கிஷங்களை என்னோடு பகிர்ந்து கொண்டார். நான் கேட்காமலேயே திரையுலகம் இதழ்கள் சிலவற்றைக் கொடுத்து நீங்கள் ஸ்கேன் செய்து கொண்டு கொடுங்கள் என்றார். மக்கள் திலகம் பற்றிய செய்திகள் வருங்காலத் தலைமுறைக்கு கொண்டு சேர்க்கப்பட வேண்டும். அவை நம்மோடு அழிந்து விடக்கூடாது என்ற அவரது வார்த்தைகள் மீண்டும் மீண்டும் என் காதுகளில் ரீங்காரமிட்டுக் கொண்டிருக்கின்றன. மிகப் பழைய திரையுலகம் இதழ்களில் சிதிலமடைந்து எந்த ஒரு உருவமும் பார்க்க இயலாத நிலையிலிருக்கும் சிறு சிறு துண்டுகளைக் கூட பத்திரப்படுத்தி வைத்திருக்கிறார் என்பதைப் பார்க்கும் போது மக்கள் திலகத்தின் பால் அவர் கொண்டுள்ள அளப்பரிய அன்பு புலப்படுகிறது. அவருக்கு எனது நன்றிகள். அவரது மனைவியார் சற்று உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளார். அவர்கள் விரைவில் நலம் பெற இறைவன் அருளை இறைஞ்சுகிறேன். பேராசிரியரின் பொக்கிஷப் பகுதிகள் விரைவில் நம் திரியின் நண்பர்களின் பார்வைக்கு.
நமது பேராசிரியர் செல்வகுமார் அவர் பாடம் நடத்தும் கல்லூரியில் மட்டும் பேராசிரியர் அல்லவே! அவர் "புரட்சித்தலைவர் பல்கலைகழகம்" மற்றும் "மக்கள் திலகம் பல்கலைகழகம்" இவைகளிலும் கூட பேராசிரியர் தான்.
இங்கே யாரு வேண்டுமானாலும் வந்து "அரசியல்" பற்றியும் பேராசிரியரிடம் தங்களது கருத்தை தெரிவிக்கலாம். இங்கு "கருத்து" சுதந்திரம் என்றும் உண்டு . அதற்கு "நாள் கிழமை" பார்க்க அவசியமே இல்லை. ஆனால் சொல்லும் கருத்து வரம்பை மீறி விடக்கூடாது என்பது எங்களது அச்சம். இங்கே யார் வந்தாலும் எங்களது "விருந்தினர்" என்றே கருதுவோம். "அத்தி தேவோ பாவ" என்ற முறையில் அவர்களுக்கு என்றும் மதிப்பும் மரியாதையும் உண்டு என்பதை எங்களது "வரையறுக்கப்பட்ட நிலை". "சட்டப்பூர்வமாக நிலையின் உதவி கொண்டு" இங்கே "மற்றவரை புண்படுத்தும்" பதிவு செய்து அது ஒரு சர்ச்சை அககூடது எனபது எங்கள்ளது தாழ்மையான வேண்டுகோள்.
நாங்கள் "நினைப்பதே சட்டம்", "நிறைவேற்றுவதே சட்டம்" என்று என்றும் சொல்லமாட்டோம்.
ஆகயால் தாங்கள் "தேவைபட்டால்" இங்கே வந்தும் தங்களது பதிவுகளை செய்யலாம். You are very welcome.
Congrats Muthaiyan sir for completing 6,000 posts in short time.
Today 50th year of Kalangarai Vilakkam.
http://i125.photobucket.com/albums/p...ps8ccgbrys.jpg
http://mgrroop.blogspot.in/2015/08/k...50th-year.html
"காங்கிரஸ் ,திராவிட கலாச்சார அரசியல்வாதிகள் அனைவருமே கடந்த காலங்களில் , நடிகர்திலகத்தை தனிப்பட்ட முறையிலும்,அரசியல் ரீதியிலும் புண்படுத்தியவர்களே ஆவர்!"
நண்பா, ஒரு உதர்ணதிர்க்கு சொலிகிறேன், காங்கிரஸ் என்று வைத்துகொள்வோம் அவர்கள் "ஆரிய " காலசாரத்தை சேர்த்தவர்கள். திராவிடர் என்று வைத்துகொள்வோம் இவர்கள் "திராவிட" கலாசாரத்தை சேர்த்தவர்கள்.
நமது நடிகர் திலகம் "திராவிட கலாசாரத்தை" சேர்ந்தவர் தானே! அப்படி திராவிட தலைவர்களை என்று சொல்ல நினைத்தால் பெயரை குறிப்பிடவும். தனகளது பட்டியலில் கர்மவீரர் காமராஜர், பேரறிஞர் அண்ணா, கவிஞ்சர் கண்ணதாசன், ஈ.வீ.கே.சம்பத், எஸ்.எஸ்.ஆர் மற்றும் புரட்சித்தலைவரும் இருக்க மாட்டார்கள் என்று நம்புகின்றேன்.
நடிகர் திலகம் திரவிட முன்னெற்ற கழகத்திலிருந்து விலக காரணமானவர் தான் புரட்சித்தலைவர் அவர்கள் காமராசரை அவரது பிறந்தால் நிகழிச்சியில் பாராட்டி பேசியதற்கு - "இன்றும் உயிருடன் இருக்கும் அந்த ஐயந்தாம்படை", அவரையும் காட்சியை விட்ட நீக்க அறிக்கை மேல் அறிக்கை விட்டார்.
நடிகர் திலகத்துக்கு நல்லது செய்த ஒருவரை பாராட்டுவதற்கும், போற்றி கவிதை புகழ் படுவதற்கும் கூடவா எதிர்ப்பு? பாராட்டுவது என்பது பிரசபரம் இருக்கவேண்டியது. இதற்கும் கலாச்சாரத்துக்கும் என்ன சம்பந்தம் நண்பா?
என்னை பற்றிய ஒரு சிறிய விளக்கம்.. உங்களை போன்ற மேட்டுக்குடி மக்கள் அல்ல நான்.. தாழ்த்த பட்ட சமுதாயத்தை சேர்ந்தவன் நான் என்பதை பெருமையாக சொல்லிகொள்கிறேன்..ஒரு சில சூழ்நிலைகளில் எனது பதிவுகள் உங்களை வருத்தப்பட வைக்கலாம்..ஆனால் தலைவரின் ச்டில்ல்களை பார்த்தால் எனக்கு உற்சாகம் பிறந்துவிடும்..என்னுடைய தொந்தரவுகளை மறந்துவிடுங்கள்..என் உயிர் உள்ளவரை தலைவர் புகழை பதிவிடுவதே என் கடமை..வாழ்க்கை..மனம் திறந்து சொல்வதால் எனது பாரம் குறைகிரது..வாழ்க தலைவர்..வளர்க அவரின் பக்தர்கள்..
http://i61.tinypic.com/sxcax3.jpg
முத்தைய்யன் சார்,
உயர்த்தப்பட்ட ஜாதி, தாழ்த்தப்பட்ட ஜாதி இது எல்லாம் இந்த கேடுகெட்ட சமுதாயம் செய்தே வாய்த்த கொடும. நமக்கு [ புரட்சித்தலைவர் பக்தர்களுக்கு] தெரிந்ததுஎல்லம் ஒரு ஜாதி "மனித ஜாதி" தான்.
நன்றி.
திரு முத்தையன் சார்
கடமையை செய் பலனை எதிர்பாராதே
என்ற தலைவனின் வாக்குப்படி
கடமையை செய்யுங்கள்
தானாகவே புகழ் உங்களை வந்து சேரும்
ஒன்றே குலம் என்று பாடுவோம் ஒருவனே தேவன் என்று சொல்லுவோம்
மக்கள் திலகத்தின் வாசகர்கள் பல்வேறு நாடுகளில் வசிப்பதாலும் வேலை நேரங்கள் மாறுபடுவதாலும்
உங்களுக்கு உடனே வாழ்த்து சொல்லமுடியாமல் போயிருக்கலாம்
நீங்கள் பதிவு செய்த அத்தனையும் பொக்கிஷம்
வாழ்த்துக்கள்
நமது மக்கள்திலகம் ரசிகர்கள் செய்ய துணியாத, இல்லாத விளம்பரங்களை அவர்கள் செய்கிறார்கள்களே -என கூற தோன்றுகிறது...ஆம்...திருச்சி பதிப்பில் nt நடித்த vpkb படம் 2-வது வாரம் - என்று போனவாரம் திரையிட்ட அரங்குகள் பெயரே நாளிதழில் இன்று வந்து அதை நம்பி, சில நண்பர்கள், ரசிகர்கள் அந்த அரங்குக்கு சென்று பார்த்தால் - இன்று வேறு புது படம் ஓடுகிறது... இது போல தேவையில்லாமல் - ஏன் பொதுவான நம்பகத்தன்மையை கெடுத்து கொள்கிறார்கள்?...
தோழர்களே... நமது பதிவு யாரையும் மன புண்படவோ, விமர்சனம் எனவோ கருத வேண்டாம்... நாம் அறிந்த சிறு தகவலை இங்கே பகிருதல் ஒன்றே... திருச்சியில் ஒரு வாரத்திற்கு 250000 ரூபாய் கிட்டத்தட்ட வசூல் எனவும், கும்பகோணத்தில் 100000 ஆகவும் வசூல் ஆனதாகவும் -மற்றபடி மாயவரம், நாகபட்டினம் -பகுதிகளில் 4 நாட்களில் எடுக்கப்பட்டதாக திரையரங்க மேலாளர் மூலமாக தெரிந்தது...தஞ்சையில் முதல் நாள் மட்டுமே 4 காட்சிகள் நடைபெற்றதாகவும் மறுநாளிலிருந்து 1காட்சி , 2 காட்சிகள் என ரத்து செய்யப்பட்டு 40000 அளவில் வசூலும், புதுகோட்டையில் 60000 வசூலும் ஆனதாக தெரிவித்துள்ளனர்...
திரு.முத்தையன் அம்மு சார்,
மிகக் குறுகிய காலத்தில் இரவு பகல் பாராமல் அயராத உழைப்பால் 6,000 பதிவுகள் இட்டு, தனது அற்புதமான ஸ்டில்களால் தலைவருக்கு புகழ் மாலை சூட்டியிருக்கும் குழந்தை உள்ளம் கொண்ட, தலைவரின் தீவிர பக்தரான தங்களுக்கு நன்றி.
திரு. ரவி சார்,
தங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி. ஏற்கனவே தெரிந்ததுதான் என்றாலும் நீங்கள், தங்களுக்கே உரிய நகைச்சுவையுடன் சுவைபடக் கூறியுள்ள பசு கதையை ரசித்து சிரித்தேன். நன்றி. தங்களின் ஓணம் விருந்துக்கும் நன்றி. திரு.ரூப்குமார் அவர்கள் கூறியிருப்பதை போல, சோற்றைக் காணோமே?
திரு. சிவாஜி செந்தில் சார்,
தங்களின் எண்கள் அடிப்படையிலான பாடல்களுக்கு மிக்க நன்றி. இரண்டுக்கு சிறப்பு சேர்த்த மக்கள் திலகம் என்று நீங்கள் குறிப்பிட்டிருப்பதை பார்த்தபோது, இரட்டை இலை சின்னத்தை தலைவர் தேர்ந்தெடுத்தது நினைவுக்கு வந்தது. நன்றி.
திரு.ஜெய்சங்கர் சார்,
இதயம் நிறைந்த எம்ஜிஆர் தொடருக்கு தனித்திரி தொடங்கியிருப்பதற்கு வாழ்த்துக்கள். பேராசிரியர் கொடுத்த திரை உலகம் இதழ்களை விரைவில் பதிவிடுவேன் என்று நீங்கள் கூறியிருப்பது குதூகலிக்க வைக்கிறது. நன்றி.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
Congratulations muthaiyan ammu sir for completing more than 6000+ postings
Sent from my HM NOTE 1LTE using Tapatalk
Dear Suharaam Sir,
PLEASE DONOT WORRY !
WE ARE AWARE OF YOUR INTEREST BUT WE ARE WELL ABOVE YOUR INTENTIONS !
PLEASE CARRY ON...WE WILL NEVER FEEL SAD (or) WORRIED SEEING AT YOUR FAKE FIGURES !!
ALL ARE AWARE THAT SUHARAAM FIGURES = FAKE FIGURES !!!
ATLEAST YOU FEEL HAPPY ABOUT WHAT YOU ARE DOING & GET SATISFIED !
LET YOU COMPLETE THE LIST ....THEN I SHALL REPLY IN TOTAL !
BEST REGARDS
RKS
‘‘இந்த தத்துவத்தை தானறிந்தால்
பிறர்க்கு தீங்கு செய்ய எண்ணம் வருமோ?’’
பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்களின் சொந்த மாநிலமான குஜராத் பற்றி எரிகிறது. 6 உயிர்கள் அநியாயமாக பலியாகியுள்ளன. கலவரங்களில் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள பொதுச் சொத்துக்கள் சேதமடைந்துள்ளன. பல இடங்களில் ஊரடங்கு.
குஜராத்தில் கணிசமாக உள்ளவர்கள் படேல் சமூகத்தினர். முன்னேறிய வகுப்பினரான இவர்கள் தங்களை பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்றும் இடஒதுக்கீடு அளிக்க வேண்டும் என்றும் கோரி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் விளைவுதான் முதலில் சொன்ன களேபரங்களுக்கு காரணம். போராட்டத்தை முன்னின்று நடத்தி வரும் இளைஞர் ஹர்திக் படேல். இவருக்கு வயது 22 தான்.
இதே குஜராத் மாநிலத்தில் 1980களில் காங்கிரசைச் சேர்ந்த மாதவ்சிங் சோலங்கி முதல்வராக இருந்தபோது இடஒதுக்கீட்டை எதிர்த்து இதே படேல் சமூகத்தினர்தான் போராட்டம் நடத்தினர். அதை பா.ஜ.கவும் ஆதரித்தது. இப்போது, தங்களுக்கே இடஒதுக்கீடு வேண்டும் என்று போராட்டம் நடத்துகின்றனர். பா.ஜ.வுக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை.
இதில் வேடிக்கை என்னவென்றால், பா.ஜ.க. தேசியத் தலைவர் திரு.அமித் ஷா அவர்கள் சமீபத்தில் மதுரை வந்து தேவேந்திர குலத்தினர் மாநாட்டில் கலந்து கொண்டபோது, கூட்டத்தில் கலந்து கொண்ட சிலர், தங்களுக்கு இடஒதுக்கீடு தேவை இல்லை என்று கோரினர். ‘ஆஹா, இடஒதுக்கீடு தேவையில்லை என்று இந்தியாவுக்கே தமிழகம் வழிகாட்டுகிறது’ என்று புகழ்ந்தார் திரு. அமித்ஷா. இப்போது, அவரது மாநிலத்திலேயே (அவரும் குஜராத்) இடஒதுக்கீடு கோரி போராட்டம். அதுவும் முற்பட்ட வகுப்பினரே நடத்துகின்றனர் என்பது வகுப்பு வாரி இடஒதுக்கீட்டின் தேவையை உணர்த்துகிறது.
இடஒதுக்கீடு தேவைப்படாத அளவுக்கு இன்னும் எல்லா தரப்பு மக்களும் உயர்ந்து விடவில்லை. 1921-ம் ஆண்டில் இருந்தே இடஒதுக்கீட்டை தமிழகம் பின்பற்றி வருகிறது. சமூக நீதிக் கொள்கையில் இந்தியாவுக்கே வழிகாட்டியாக இருக்கிறது. இதை உணர்ந்துதான் புரட்சித் தலைவர் இடஒதுக்கீட்டின் அளவை 50 சதவீதமாக உயர்த்தினார். செல்வி ஜெயலலிதா அவர்கள் 69 சதவீதமாக உயர்த்தி, அதை பாதுகாத்திட பின்னர் அரசியல் சாசனத்தின் 9வது அட்டவணையில் சேர்க்கப்பட்டது.
குஜராத்தில் 1980களில் இடஒதுக்கீட்டுக்கு எதிரான போராட்டத்தை பா.ஜ. ஆதரித்தது. பின்னர், முன்னாள் பிரதமர் சமூக நீதிக்காவலர் திரு. வி.பி.சிங் அவர்கள் மண்டல் குழு பரிந்துரைப்படி கொண்டு வந்த இடஒதுக்கீட்டுக்கு எதிராகவும் போராட்டம் நடத்தி அவரது ஆட்சியையே கவிழ்த்தது.
இப்போது, ‘‘இடஒதுக்கீடு தேவையில்லை என்று தாழ்த்தப்பட்ட மக்களே சொல்கிறார்கள்’’ என்று அதுவும் சமூக நீதிக் கொள்கையின் தாய் வீடான தமிழகத்திலேயே திரு.அமித் ஷா அவர்கள் அறிவித்த நிலையில், குஜராத்தில் இடஒதுக்கீடு விவகாரம் பாஜ.வை பூமராங்காய் தாக்குகிறது.
தலைவன் படத்தில் தலைவர் பாடுவார். தெய்வப் பாடகரின் குரலில் திரு. வாலியின் கருத்தாழம் மிக்க வரிகள்.
அறிவுக்கு வேலை கொடு....பகுத்தறிவுக்கு வேலை கொடு...மூடப் பழக்கத்தை விட்டு விடு
காலம் மாறுது கருத்தும் மாறுது நாமும் மாற வேண்டும், நம்மால் நாடும் மாற வேண்டும்
மண்வெட்டி கையில் எடுப்பார் சில பேர் மற்றவர்க்கு குழி பறிப்பார்
அதுதன் பக்கம் பார்த்திருக்கும் என்பதை தானறிய மறந்திருப்பார்
பந்தெடுத்து விட்டு எறிந்தால் சுவர்மேல் பட்டது போல் திரும்பி வரும்
இந்த தத்துவத்தை தானறிந்தால் பிறர்க்கு தீங்கு செய்ய எண்ணம் வருமோ?
பா.ஜ.கவுக்கு தலைவர் சொல்வது போல இல்லை?
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
Dear Sailesh Sir !
NANNI UNDU SAARE !
NEENGALKKUM NINGALDE MADATHILE EVARKKUM PINNE IVIDAE ULLA ELLA SUHURTHUGALUKKUM ENDE ONAASAMSAGAL !
https://www.youtube.com/watch?v=wVzG4EHyKSE
RKS
தாலி பாக்கியம் 27.8.1966 ..... பொன் விழா ஆண்டு துவக்கம் .
கலங்கரை விளக்கம் . 28.8.1965 பொன் விழா ஆண்டு நிறைவு.
தேடி வந்த மாப்பிள்ளை . 29.8.1970 45 ஆண்டுகள் நிறைவு .
மக்கள் திலகத்தின் சிறந்த நடிப்பில் வெளிவந்த மூன்று படங்களும் வித்தியாசமான கதை அம்சம் கொண்ட படங்கள்.இனிய பாடல்கள் நிறைந்த படங்கள் . மறக்க முடியாத படங்கள் .