Quote:
காதலைத் தாண்டி தற்போது திருமணத்தில் வந்து நிற்கும் இந்த காதல் ஜோடி பற்றி எந்த கிசுகிசுவும் எழுதாததால் நம் பேனா கூட மையை கசிந்தது கண்ணீராக... சும்மா விடுவோமா என்ன? அவர்கள் காதல் கதையை சற்று புரட்டிப் பார்க்க ஆசைப்பட்டு முதலில் நாம் பேச நினைத்தது சினேகாதான்.
ஆனால் அவருக்குத்தான் நம்மைப் பற்றி நன்றாகத் தெரியுமா சிக்குவாறா.. எஸ் ஆகிவிட்டார். அடுத்தது நமது பார்வை பிரசன்னா மீது விழ வசமாக சிக்கிக் கொண்டார்.
பொதுவாக காதலர்கள் என்றால் செல்லப்பெயர் வைத்து அழைப்பார்களே.. அதுபோல நீங்கள் சினேகாவை எப்படி அழைப்பீர்கள் என்று கேட்டதற்கு, எனக்கு பாரதியார் ரொம்ப பிடிக்கும். அதனால் எப்போதும் சினேகாவை கண்ணம்மா என்று அழைப்பேன் என்றார்.
ஓ... அப்படியா விவகாரம், சரி சினேகா உங்களை எவ்வாறு அழைப்பார் என்று கேட்டதற்கு, கண்ணா என்றும், டாடா என்றும் அழைப்பார் என்றார் வெட்கம் கலந்த புன்னகையுடன். இது போதுமே நமக்கு வந்த வேலை முடிந்தது என்று கிளம்பிவிட்டோம்.