Originally Posted by
Gopal,S.
ஜெமினி சாரின் எனது favourite நான் அவனில்லை பற்றி விஸ்தாரமாக எழுத உள்ளேன்.
அதற்கு முன்-
1)கல்யாண பரிசு போன்ற படங்களில் நகைச்சுவை ஜொலித்ததில் ஜெமினியின் reactions முக்கிய பங்கு வகித்தது. அவர் ஆமோதிப்பது,நக்கலடிப்பது,எதிர்ப்பது,அங்கலாய்ப் பது என்று படு short அண்ட் sweet ரகம்.தங்கவேலுவின் flow கெடாமல் அவரை முந்த விட்டு,இவர் மனதில் நிற்பார்.
2)ஆடி பெருக்கில் வாழை இலையை திருப்பி போட்டிருக்கும் சரோஜாதேவியை இவர் செல்லமாக சொல்லி காட்டி இலையை திருப்பி போடும் அழகு.
3)தேன்நிலவில் போலிசுக்கு பயந்து நிலவறையில் பதுங்கி இருக்கும் போதும், breakfast கொண்டு வருவதாக சொல்லும் தங்கவேலுவிடம் சைடு டிஷ் கேட்கும் அழகு.(தொட்டு கொள்ள...)கோபுவும்,ஜெமினியும் அடிக்கும் சிக்ஸர்.