Karnan is going full house today at satyam - hope to have another celebration soon by this month end
Karnan is going full house today at satyam - hope to have another celebration soon by this month end
http://i50.tinypic.com/919dh4.pngMY EXPERIENCE WITH NAMNADU AND SIVANDHA MANN CELEBRATION AT TIRUVANNAMALAI -1969- DEEPAVALI FESTIVAL .
மறக்க முடியாத - 1969 - மக்கள் திலகம் - நடிகர் திலகம் தீபாவளி திருவிழா .
திருவண்ணமலையில் நம்நாடு - மீனாக்ஷி - சிவந்த மண் - பாலசுப்ரமணியம் திரையரங்குகளில் வெற்றி பவனி .
1969 .....மதியின் ரசிகர்களும் நதியின் ரசிகர்களும் போட்டி போட்டு கொண்டு தீபாவளி நாளை எதிர் பார்த்து காத்திருந்த நாட்கள் அது ...
எங்க வீட்டு பிள்ளை மகத்தான வெற்றிக்கு பிறகு மக்கள் திலகத்தின் நம்நாடு 1966 ஆண்டில் துவங்கி நீண்ட கால தயாரிப்பில் பிரமாண்ட படமாக உருவாகி வந்தது .
மக்கள் திலகம் - ஜெயலலிதா - ரங்கராவ் - அசோகன் - தங்கவேலு - ராமதாஸ் - நாகையா-
பகவதி - பண்டரிபாய் என்று எராளமான நட்சத்திர பட்டாளம் .
மெல்லிசை மன்னரின் அட்டகாசமான பாடல்கள் - குறிப்பாக லாங் PLAY எனப்படும் இரண்டு பாடல்கள் 1 .நினைத்ததை நடத்தியே முடிப்பவன் .... 2 .VANGHAYYA வாத்தியார் அய்யா என்ற இரண்டு சூப்பர் பாடல்கள் படம் வருவதற்கு முன்பே பட்டி தொட்டி எங்கும் பிரபலமானது . CENSOR பிடியில் சிக்கிய இப்படம் பலவேறு காட்சிகள் வெட்டப்பட்டு வெளியானது .
மே மாதம் வெளிவந்த அடிமைபெண் வெள்ளி விழா வெற்றி மிதப்பில் இருந்த என்போன்ற மதியின் ரசிகர்கள் நம்நாடு வெற்றியினை எதிர்நோக்கி இருந்தோம் .
திருவண்ணாமலை - மீனாக்ஷி திரை அரங்கம் ஊருக்கு நடுவில் அமைந்திருந்தது
பெஞ்ச் டிக்கெட் .O . 43 பைசா ./ 0 .60 பைசா ./ RS 1 .10 / பால்கனி .RS 1 . 90 .
ஏடுகளில்பல மாதங்களாக நம்நாடு படத்தினை பற்றி பல விதமான ஆர்வமான செய்திகள் தினத்தந்தி , திரை உலகம் , முரசொலி , பேசும் படம் , பொம்மை , திரைநீதி போன்ற வந்த வண்ணம் இருந்தது . நாளுக்கு நாள் எங்களின் ஆர்வமும் அதிகரித்து கொண்டே போனது .
நடிகர் திலகத்தின் சிவந்த மண் நிலையும் அதே நிலைமைதான் ..ஏடுகளில்பல மாதங்களாக சிவந்த மண் படத்தினை பற்றி பல விதமான ஆர்வமான செய்திகள் தினத்தந்தி , மதி ஒளி , முரசொலி , பேசும் படம் , பொம்மை , சுதேசமித்திரன் ,நவமணி , நவசக்தி , போன்ற ஏடுகளில் செய்திகள் வந்த வண்ணம் இருந்தது . மேலும் தென் இந்தியாவின் வெளி நாட்டில் எடுக்கப்பட்ட முதல் தமிழ் படம் ...மிகவும் பிரபல மான பாடல்கள் என்று எதிர் பார்க்கப்பட்ட படம் .
சமூக சீர் திருத்த கருத்துகள் கொண்ட லட்சிய படம் மதியின் .. நம்நாடு
புரட்சி மூலம் நாட்டை காப்பாற்றும் வீரனின் கதை -- நதியின் சிவந்த மண் .
இரண்டு ரசிகர்களின் மன நிலை ஆர்வம் ... கொண்டாட்டம் .. கேட்கவா வேண்டும் .
அந்த இனிய நாளும் வந்தது .... தீபாவளி திரு நாள் .....
மீனாக்ஷி தரிசனம் ..
நம்நாடு முதல் நாள் இரவே திரையரங்கில் களை கட்டியது ஆயிரக்ககணக்கில் ரசிகர்கள் கூட்டம் மீனாக்ஷி அரங்கில் சங்கமம் ...நூற்றுக்கணக்கான ஸ்டார்ஸ் , மற்றும் தோரணங்கள் கட்டப்பட்டு பட்டாசுகள் வெடித்து ரசிகர்கள் ஆரவாரமாய்
முதல் காட்சி பார்க்க உள்ளே மக்கள் வெள்ளத்தில் போராடி டிக்கெட் பெற்று உள்ளே சென்று அமர இடமில்லாமல் நின்று கொண்டே மக்கள் திலகத்தின் நம்நாடு பார்த்து மகிழ்ந்த அனுபவம் இன்றும் என்றும் மறக்க முடியாத ஒன்றாகும் .
நம்நாடு துவக்கம் முதல் இறுதி வரை அருமையான காட்சிகள் , இனிமையான பாடல்கள் ,இனிமையான இன்னிசை , மதியின் நடிப்பு , என்ற பல்வேறு அம்சங்களுடன் தீபாவளி விருந்தாக வந்த நம்நாடு மாபெரும் வெற்றி சித்திரமாகும் .
நடிகர் திலகத்தின் சிவந்த மண் .
மீனாக்ஷி அரங்கில் எந்த அளவிற்கு ஆர்பாட்டங்கள் இருந்ததோ அதே அளவு பாலசுப்ரமணியர் திரைஅரங்கில் நடிகர்திலகம் ரசிகர்கள் கூட்டம் அலைமோதி
திருவண்ணாமலை நகரமக்கள் திக்கு முக்காடி போனார்கள் என்பது உண்மை
மக்கள் திலகமும் நடிகர் திலகமும் தங்களுடைய ரசிகர்களுக்கு தீபாவளி விருந்தாக தங்கள் படங்களை வழங்கி ரசிகர்களை ஆனந்த வெள்ளத்தில் மிதக்க விட்ட அவர்களின் சாதனை களை என்றென்றும் மறக்க முடியாது
http://i45.tinypic.com/218kf8.jpg http://i47.tinypic.com/23maqt1.jpg http://i50.tinypic.com/28r02n5.jpg
EVER REMEMBERANCE
esvee
.
..
.
நடிகர் திலகத்துடன் திரு. ஏவிஎம்
http://i1110.photobucket.com/albums/...ar/NTAVM-1.jpg
12.8.2012 : அமரர் ஏ.வி.மெய்யப்பன் அவர்களின் 33வது ஆண்டு நினைவு தினம்.
பம்மல் ஆர். சுவாமிநாதன்.
டியர் ராகவேந்திரன் சார்,
திரு. ராகுல்ராம் பதிவுக்கு மேலும் மெருகூட்டும் வகையில் தாங்கள் பதித்துள்ள "அன்பைத் தேடி(1974)" பாடல் காணொளிகள் கனஜோர்.
'நடிகர் திலகமும் நடிப்புக் கோட்பாடும்' நெடுந்தொடரின் தொடக்கமே தூக்கிக் கொண்டு போய்விட்டது. தொடருங்கள்..,காத்திருக்கிறோம்..!
அன்புடன்,
பம்மலார்.
டியர் எஸ்வீ சார்,
1969 - மறக்க முடியாத ஆண்டு ... நடிகர் திலகத்தின் அத்தனை படங்களும் வெற்றிப் படங்களாய் அமைந்த ஆண்டு ... குருதட்சணை மற்றும் சற்றே தொய்வடைந்தது. தொடர்ச்சியாக வெளிவந்த படங்களின் எண்ணிக்கையால் ந.தி.யின் படங்களுக்கு அவர் படங்களே வில்லனாய் அமைந்த பல ஆண்டுகளில் 1969ம் ஒன்று ... பெரும் வசூலுடன் வெற்றி நடை போட்ட தங்க சுரங்கம் ... திருடன் என அனைத்துமே வெற்றிகரமாய் அமைந்தன. அந்த ஆண்டுக்கு அனைவரையும் அழைத்துச் சென்று விட்டீர்கள் .... நன்றி ...
அன்புடன்
டியர் பம்மலார் மற்றும் வாசு சார்,
அன்பைத் தேடி படக் காணொளி இணைப்புகளுக்கும் நடிப்புக் கோட்பாடு தொடருக்குமான தங்களுடைய பாராட்டுக்கு உளமார்ந்த நன்றி. தங்கள் அனைவரின் ஆதரவை ஆவலுடன் எதிர்நோக்குகிறேன்.
அன்புடன்
நடிகர் திலகமும் நடிப்புக் கோட்பாடுகளும்
நுழைவாயில்
reproduced from: http://www.tcm.com/this-month/articl...Hollywood.htmlQuote:
"THE METHOD." Those are words which struck terror into the souls of many a Hollywood actor in the 1950s, exactly as the phrase "Talking Pictures" sobered up numerous film players in the late 1920s (and in a few cases did just the opposite, sending them straight to the bottle). Seemingly overnight, the acting style known as "the Method" blew into Hollywood, arriving with a tornado-like force not unlike that big wind which sent Dorothy Gale off to Oz - sending numerous A-, B- and C-grade actors scurrying off to learn this new acting style in order to save their careers.
What was, and is, "the Method"? It's a process by which actors behave naturally, stripping themselves of all artifi ce, using their emotional memory of past experiences and feelings to create a character's motivation. (It's worth noting that the man considered one of the greatest of all screen actors, Spencer Tracy, had been giving naturalistic performances for years, using a method quite his own.) Interestingly, this "Method" we'll be looking at on TCM this month was far from new at the time Americans embraced it. It started in Russia in the late 1890s, nurtured there by producer-director-theoretician Konstantin Stanislavsky, and was famously given new life (with adjustments) in America by the legendary Group Theatre in New York in the 1930s, then in the 1940s by several teachers such as Lee Strasberg, David Lewis and Elia Kazan at N.Y.'s Actors Studio.
டொர்னடோ புயலைப் போல் திரையுலகைத் தாக்கிய அந்த வார்த்தை அனைத்து ரக நடிகர்களையும் தங்கள் வாழ்வாதாரத்தைக் காக்க, நடிப்பைக் கற்றுக்கொள்ள திக்கெட்டாய்ப் பறக்க வைத்தது. அது METHOD என்ற வார்த்தை.
METHOD - இது பொதுவான வார்த்தை அல்லவா ... இதற்கு ஏன் அவ்வளவு பரபரப்பு ... கேள்வி வரும் ... நியாயம்.
METHOD - இந்த வார்த்தையில் என்ன சிறப்பு ... இது ஏன் திரையுலகினரை பாதிக்க வேண்டும்...
METHOD என்பது ஒரு கோட்பாடு என்பதன் சின்னமாகும் ... ஸ்டானிலாவ்ஸ்கி வகுத்த நடிப்புக் கோட்பாடு System அல்லது METHOD என அழைக்கப் பட்டது. அதனுடைய தாக்கம் உலக அளவில் பரவி ஹாலிவுட்டை பரபரக்க வைத்தது என்றால் அந்த கோட்பாட்டின் மகிமை விளங்கும். ருஷ்ய நடிகர் ஸ்டானிலாவ்ஸ்கி வகுத்த கோட்பாடுகள் நடிப்பு என்கிற கலையின் பொதுவான பரிணாமங்களை வகுத்தளித்து அதன் மூலம் உலகமெங்கும் அது ஏற்றுக் கொள்ளத் தக்க வகையில் அமைந்தது. குறிப்பாக பேசும் படம் அறிமுகமான கால கட்டத்தில் அந்த கால நடிகர்கள் பெரும்பான்மையோர் இதனை ஒரு இலக்கணமாக ஏற்று நடித்தார்கள்.
தொடரும்
அபூர்வமான வாய்ப்பு ... இது வரை பார்க்காதவர்களுக்கு
எம் எம் மூவீஸ் - கெய்சர் கிரியேஷன்ஸ்
நடிகர் திலகம், சாருஹாசன், கார்த்திக், ஜீவிதா மற்றும் பலர் நடித்த
ராஜ மரியாதை ...
http://youtu.be/3zoMfW_tHeE
"ராஜ மரியாதை(1987)" காவியக் காணொளிக்கு ராஜராஜ நன்றிகள், ராகவேந்திரன் சார்..!
கல்நாயக்கரே,
ஆ..எத்தினியாவது பார்ட்..ஆ.. நாபகம் வந்துச்சு..பத்தாவது பார்ட் ந.தி. திரியில ஒரு தபா பிராமின் பாஷலயும், உன்னொரு தபா 'செங்கோட' பாஷலயும் பேசுனீங்கல்ல.. அதுக்காக இந்த தபா உங்குல்கு replyஇ 'பலே மருது' மெட்ராஸ் பாஷையிலே..இன்னா..okவா..
மாமன்னர்ன்னு எனுக்கு ஐஸ் வச்சதுக்கு தேங்க்ஸ்..எனுக்கு பின்னாடி இன்னா 'படையா'குது. கூசாம 'மன்னருகின்னரு'ன்னு அட்ச்சு உடுறீங்க..அப்பப்ப ஏதாவது வந்து இங்க ஏதணும்..தெர்தா..அட இன்னா அதுக்குல்ல டபாய்க்கிறீங்க..உங்ககூட படா பேஜாராகுது.
உங்க 'அண்ணன்' கைல சொல்லி வைங்க..ஒயிங்கா இர்க்க சொல்லி.. இன்னா..வர்ட்டா..ஐய..
ரொம்ப ஜாலியாகவும், மிகுந்த உரிமையுடனும்,
உங்கள் பம்மலார்.