-
11th August 2012, 10:44 AM
#671
Senior Member
Senior Hubber

Originally Posted by
pammalar
டியர் கல்நாயக் சார்,
தங்களின் இடுகைகள் தகவலார்ந்த பதிவுகளாக ஒளிர்கின்றன. காமெடியாக பதிப்பதில் கலக்கும் தாங்கள், சீரியஸான பதிவுகளையும் சிறப்பாகத் தருகிறீர்கள். வாழ்த்துக்கள்..! தங்களுக்கு நேரம் கிடைக்கும் போதெல்லாம் இது போன்று இனிய பதிவுகளை இங்கே இடலாமே..!
அன்பு கலந்த எதிர்பார்ப்புடன்,
பம்மலார்.
வரலாற்று ஆவணங்களை, நிகழ்ச்சிகளை, கொண்டாட்டங்களை பதிவு இடுவதில் மாமன்னரான பம்மலார் அவர்களே,
நான் எழுதியது மிக மிகக் குறைவு என்றாலும், தங்கள் பாராட்டு என்னை மிகுந்த உற்சாகமூட்டுகிறது. நேரம், வாய்ப்பு கிடைக்கும் சமயங்களில் உங்கள் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய எனக்குத் தெரிந்தவைகளை பதிவாய் இடுகிறேன்.
எழுதத்தூண்டி, உற்சாகம் ஊட்டும் தங்களுக்கும், வாசுதேவனாருக்கும் கடமைப் பட்டவனாகினேன். மீண்டும் மீண்டும் நன்றி, நன்றி.
அன்புடன்.
-
11th August 2012 10:44 AM
# ADS
Circuit advertisement
-
11th August 2012, 01:17 PM
#672
Senior Member
Seasoned Hubber
நடிகர் திலகமும் நடிப்புக் கோட்பாடும்

His system of actinghas developed an international reach.
அவருடைய நடிப்பு முறை உலக அளவிலான வீச்சை ஏற்படுத்தி வளர்த்த்து.
He treated theatre-making as a serious endeavour, requiring dedication, discipline and integrity.
அர்ப்பணிப்பு, ஒழுக்கம், ஒருங்கிணைப்பு ஆகியவை உண்மையாக தேவைப்பட்ட நாடக உருவாக்கத்தை அவர் ஒரு தவமாக்க் கருதி மேற்கொண்டார்.
Throughout his life, he subjected his own acting to a process of rigorous artistic self-analysis and reflection.
தன்னுடைய நடிப்பினை கலைத்தன்மைக்குட்பட்ட தீவிர சுயபரிசோதனைக்கும் அதன் வெளிப்பாட்டிற்கும் தன் வாழ்நாள் முழுமையாக உட்படுத்திக் கொண்டார்..
His development of a theorized praxis – in which practice is used as a mode of inquiry and theory as a catalyst for creative development – identifies him as the first great theatre practitioner.
பழக்கம் என்பதை கேள்வி வடிவமாகவும் கோட்பாடு என்பது ஆக்கபூர்வமான உருவாக்கத்திற்கான விளக்கமாகவும் அடிப்படையாக்க் கொண்டு அவர் உருவாக்கிய கோட்பாடு செயலாக்கம் – அவரை முதன்மையான சிறந்த நாடக தொழிலராக அறிய வைக்கிறது.
மேற்கண்ட வாசகங்கள் ஸ்டானிஸ்லாவ்ஸ்கி அவர்களைப் பற்றி விக்கிபீடியா இணைய தளத்தில் அறிமுகமாக உள்ளவை. ஒவ்வொரு வார்த்தையும் நடிகர் திலகத்திற்கு எந்த அளவிற்குப் பொருந்துகிறது.
இது நம்முடைய அலசலின் துவக்கம் தான். இனி வரும் காலங்களில் ஸ்டானிஸ்லாவ்ஸ்கி நடிப்புக் கோட்பாடு பற்றியும் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களுடைய நடிப்பிற்கும் உள்ள ஒற்றுமை அல்லது வேற்றுமை அல்லது இரண்டும் ... என்பதை நாம் தொடர்ந்து பார்க்கலாம்.
அன்புடன்
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
11th August 2012, 03:05 PM
#673
Senior Member
Veteran Hubber
அன்புள்ள பம்மலார் சார், வாசுதேவன் சார் மற்றும் ராகவேந்தர் சார்....
எனது பதிவுகளைப் பாராட்டியமைக்கு மிக்க நன்றி.
பம்மலார் அவர்களே, தாங்கள் தவணைமுறையில் தந்துகொண்டிருக்கும் 'சந்திப்பு' வெற்றிக்காவியத்தின் விளம்பரப்பதிவுகள் அனைத்தும் சூப்பர். ஒன்றையொன்று மிஞ்சுகின்றன. ராகவேந்தர் அவர்கள் சொன்னதுபோல, 80க்கு முன்பே தலைவரின் சாதனைகள் முடிந்துவிட்டதுபோல பரப்பப்பட்டு வரும் மாயையை இவை தகர்த்து வருகின்றன. 'சந்திப்பு' வெள்ளிவிழாப்படம் என்பது நம்மில் பலருக்கே தெரியவில்லை என்பதுதான் சோகம். அந்த குறையை தங்கள் ஆவணங்கள் போக்கி வருகின்றன.
எங்க மாமா பற்றி பதிவுகள் இடப்படும் இவ்வேளையில் 'எங்க மாமா'வின் ஆவணப்பதிவுகளையும் தரலாமே. நம்முடைய வனவாச காலத்தில் இடம்பெற்ற படங்களில் அதுவும் ஒன்றல்லவா?. தங்களின் 'பராசக்தி' மறுவெளியீட்டு விளம்பரம் அட்டகாசம். மறுவெளியீடுகளின் விளம்பரங்களையும் தாங்கள் பத்திரப்படுத்தி வைத்திருப்பது வியக்க வைக்கிறது.
கலக்குங்கள்.....
-
11th August 2012, 03:42 PM
#674
Senior Member
Veteran Hubber
அன்புள்ள வாசுதேவன் சார் & கல்நாயக் சார்...
நீங்களிருவரும் என் இரு கைகளையும் பிடித்துக்கொண்டு கடலூர் திரையரங்குகளுக்கு மினி சுற்றுலா அழைத்துச்சென்றுவிட்டீர்கள். நல்ல தெளிவான நடை. அங்கங்கே நகைச்சுவை செருகல்கள். படிக்க அருமையாக இருந்தது. நான் கடலூர் வழியாக பேருந்துகளிலும், தொடர் வண்டிகளிலும் சென்றிருந்தபோதிலும், அங்கே இறங்குவதற்கோ, தங்குவதற்கோ இதுவரை வாய்ப்பு அமைந்ததில்லை. இருப்பினும் தங்கள் எழுத்துக்கள் மூலமாகவும், நிழற்படங்கள் மூலமாகவும் கடலூரை மானசீகமாக தரிசிக்க வைத்து விட்டீர்கள்.
மிக்க நன்றி. இதுபோன்ற சுவாரஸ்யப் பதிவுகளை இருவரும் தொடர்ந்து அள்ளி வழங்குங்கள்.
-
11th August 2012, 04:21 PM
#675
Senior Member
Veteran Hubber
அன்புள்ள ராகவேந்தர் சார்,
'அன்பைத்தேடி' திரைப்பட பாடல்களை காணொளியாய் வழங்கியமைக்கு நன்றிகள். 'புத்திகெட்ட பொண்ணு ஒண்ணு' பாடலில் நடிகர்திலகமும் கலைச்செல்வியும் மிக வித்தியாசமான உடையலங்காரத்துடன் ஆடும் அழகு அருமை. மெல்லிசை மன்னரின் மிகவும் வித்தியாசமான இசையும், என்.பாலகிருஷ்ணனின் கண்ணுக்கு குளிர்ச்சியான ஒளிப்பதிவும் பாடலின் தரத்தை உயர்த்திக்காட்டின.
'சித்திர மண்டபத்தில்' பாடல் காட்சியில் க்யூட்டான ஃபுல்சூட்டில் நடிகர்திலகமும், மிஸ்மெட்ராஸ் எம்ப்ளத்துடன் எங்கள் கலைச்செல்வியும் செம தூள். (இந்த வார்த்தை நீங்கள் உள்பட பலருக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தலாம். நடிகர்திலகத்தின் இணைகளில் தேவிகாவுக்கு அடுத்தபடியாக, எனக்கு மிகவும் பிடித்தவர் 'கலைச்செல்வி' ஜெயலலிதா. அதே சமயம் அரசியலில் எனக்கு அறவே பிடிக்காதவர் 'புரட்சித்தலைவி (?)' ஜெயலலிதா). அதுவும் இப்பாடலில் ஜெ. சொந்தக்குரலில் கொஞ்சுவார். இப்பாடலிலும் மெல்லிசை மன்னர் மற்றும் பாலகிருஷ்ணன் அணி அசத்தியிருந்தனர்.
நீங்கள் அன்பைத்தேடி படத்தை முதல்காட்சி வில்லிவாக்கம் ராயல் தியேட்டரில் பார்த்தது போல, அந்த தீபாவளிக்கு கும்பகோணத்துக்கு அத்தை வீட்டுக்குச்சென்றிருந்த நான், இப்படத்தை கும்பகோணம் 'செல்வம்' தியேட்டரில் முதல் காட்சி பார்த்தேன். பின்னர் சென்னை வந்தபின் தேவிபேரடைஸ் தியேட்டரிலும் பார்த்தேன்.
தங்கள் பதிவுகள் அனைத்துக்கும் நன்றிகள்.
-
11th August 2012, 04:35 PM
#676
Senior Member
Veteran Hubber
'நட்புத்திலகம்' வினோத் (esvee) அவர்களே,
தங்களின் அசத்தல் பதிவுகளை நடிகர்திலகம் திரியிலும், மக்கள் திலகம் திரியிலும் தொடர்ந்து கண்டுகளித்து வருகிறேன். அவற்றில் பல நிழற்படங்கள் உண்மையிலேயே மிக அரிதானவை. அதுபோல திரையரங்குகளின் நிழற்படங்களும் சூப்பர். அவ்வப்போது இடம்பெறும் விளம்பரப்பதிவுகளும் அப்படியே. தங்கள் வரவுக்குப்பின் மக்கள் திலகம் திரி புத்துயிர் பெற்றதோடு வேகமும் எடுத்துள்ளது.
தொடர்ந்து தொய்வின்றி அசத்துங்கள்.
-
11th August 2012, 06:30 PM
#677
Senior Member
Devoted Hubber

Originally Posted by
vasudevan31355
ஹரீஷ் சார்,
எப்போது நமது அடுத்த 'சந்திப்பு'?
திரு வாசு சார்,
'சிவபெருமான்' அருளால் வாசுதேவனார் பெங்களூர் வந்தால் விரைவில் நமது 'சந்திப்பு'
TAMIL THAAYIN THALAIMAGAN NADIGARTHILAGAM
-
11th August 2012, 09:00 PM
#678
Senior Member
Diamond Hubber
நடிகர் திலகத்தின் நாயகிகள்.(ஒரு விஷுவல் தொடர்)
(தொடர்-3)
நடிகர் திலகத்தின் நாயகிகள் (3) கிருஷ்ண குமாரி.
படம்: 'திரும்பிப்பார்' '
நடிகை சௌகார் ஜானகி அவர்களின் தங்கை கிருஷ்ண குமாரி. தமிழை விட தெலுங்கில் வெற்றிக்கொடி நாட்டியவர். காந்தாராவ், என்.டி. ராமாராவ் போன்ற நட்சத்திர நடிகர்களுக்கு ஜோடியாக நடித்துள்ளார். 'மாயாஜால மன்னன்' விட்டலாச்சார்யா அவர்களின் அன்றைய ஆஸ்தான நடிகை என்றும் சொல்லலாம். நல்ல அழகான நடிகை. நடிகர் திலகத்துடன் முழுப் படத்தில் ஜோடியாக நடிக்க வாய்ப்பு கிடைக்கா விட்டாலும் 'திரும்பிப்பார்' திரைக்காவியத்தில் சில காட்சிகளில் ஜோடியாக வருவதால் நடிகர் திலகத்தின் நாயகியர் லிஸ்டில் சேருகிறார்.


(ஜோடிகள் தொடரும்)
அன்புடன்,
வாசுதேவன்.
Last edited by vasudevan31355; 15th August 2012 at 10:32 PM.
நடிகர் திலகமே தெய்வம்
-
11th August 2012, 11:20 PM
#679
Senior Member
Veteran Hubber

Originally Posted by
vasudevan31355
அன்பு பம்மலார் சார்,
'சந்திப்பு' திரைக்காவியத்தின் '35 நாட்களில் 75 லட்சம் ரூபாய் வசூல்' 'தினத்தந்தி' விளம்பர கட்டிங் எங்களுக்கு தாங்கள் அளித்த பொற்கிழி. விலைமதிப்பில்லாதது. பொற்கிழி வழங்கிய பொன்னான கைகளுக்கு நன்றிகள். இந்த நேரத்தில் 'திரிசூலம்' மெகா ஹிட் காவியம் '6 வாரங்களில் 60 லட்ச ரூபாய்' வசூல் ஈட்டிய 'தினத்தந்தி' விளம்பரம் நினைவுக்கு வருகிறது. நோக்கம் புரிகிறதா? நன்றிகள் சார்.
அன்புக்குரிய நெய்வேலியாரே,
அடியேன் வழங்கியது பொற்கிழியானாலும் அதனை பெறும் நீங்கள் 'தருமி'யல்ல..! எப்படியோ நானும் 'கருமி'யல்ல..! அதுசரி, கடலூரில் 'உருமி'யை ஊதித் தள்ளிவிட்டுத்தானே நமது 'கொடை வள்ளல்' நான்கு காட்சிகளில் உலா வந்தார். தருமி, கருமி, உருமி...அய்யா சாமி...,பட்டாக்கத்தி பைரவபாஷையில் 'எல்லாம் ஒரு ஜாலிக்குத்தான்...!'
தங்களுடைய பாராட்டுக்கு அன்பான நன்றி..!
ரொம்ப ரொம்ப ஜாலிமூடில்,
பம்மலார்.
-
11th August 2012, 11:24 PM
#680
Senior Member
Veteran Hubber

Originally Posted by
RAGHAVENDRA
பம்மலார் சாரே,
திரியின் வேகம் மலைக்க வைக்கிறது.. இன்னும் ஓரிரு நாளில் 25,000 பார்வையாளர் எண்ணிக்கையைத் தாண்டி விடும்...ஜூலை 22 முதல் ஆகஸ்ட் 10 வரையிலான கால கட்டத்தில் 20 நாட்களில் 23000 பதிவுகள். ஒரு நாளைக்கு சராசரியாக குறைந்த பட்சம் 1000 பார்வையாளர்களை ஈர்த்து வரும் வேகம். பாகம் பத்திலேயே தொடர்ந்திருந்தால் கூட இந்நேரம் நிச்சயமாக அடுத்த பாகத்தைத் தொடர்ந்திருக்கும். எப்படி யிருந்தாலும் புதிய திரியின் வரவு உண்டு. அது சற்று முன்னமேயே வந்து விட்டது.
விரைவில் இத்திரியின் இரண்டாம் பாகத்தையும் சந்திப்போம் என்பதில் ஐயமில்லை. பாராட்டுக்கள் மீண்டும் மீண்டும்.
ராகவேந்திர ஐயா,
அளித்த பாராட்டுக்களுக்கு அடியேன் அளிக்கும் நன்றிகளை பிடித்துக் கொள்ளுங்கள். 'நன்றிகள்' ஓடிவிடப் போகின்றன..!
விடாக்கண்டர்...கொடாக்கண்டர்...என்றால் அது நீங்கள்தான் ஐயா..! புலிபோல் பாய்ந்துவந்து புள்ளிவிவரங்களை அள்ளி அளித்த தாங்கள் உண்மையிலேயே 'புள்ளிவிவரப்புலி'தான்..!
கவிஞர் ராஜூ ஆரோக்கியசுவாமியின் அருமையான கவிதை ஆரோக்கியமான முறையில் நமது கலையுலக சுவாமியை ஆராதனை செய்கிறது..! [நமது திரியில் ஏதாவது 'கவிதை' என்றாலே எனக்கு தெனாலிராமன் பூனைக்கு [கோ] பால் வைத்த க[வி]தையாய் கொஞ்சம் பயமாகவே இருக்குது].
[இக்கவிதையில் கீழ்க்கண்ட வரிகளை திரும்பத் திரும்பப் படித்தேன். அவ்வரிகள் அவ்வளவு என்னை ஈர்த்தன.]
"நீயும் நீரும் ஒன்று...
இல்லை...இல்லை...
நீர் பாத்திரவடிவங்கொள்ளும்..
நீயோ பாத்திரமாகவே மாறிவிடுவாய்...!"
செம ஜாலிமூடில்,
பம்மலார்.
Bookmarks