கோ,
அதிகம் கொண்டாடப்படாத பாடகி பி.வசந்தா பற்றிய சிறப்புப்பதிவு அருமை. ஆனால் தமிழில் அவரை பெரும்பாலும் ஹம்மிங் குரல் கொடுப்பவராகவே வைத்திருந்து வஞ்சித்து விட்டனர்.
நிழலில் இருந்தவரை வெளிச்சத்துக்குக் கொண்டுவந்த தங்கள் முயற்சி, பலே...
Printable View
கோ,
அதிகம் கொண்டாடப்படாத பாடகி பி.வசந்தா பற்றிய சிறப்புப்பதிவு அருமை. ஆனால் தமிழில் அவரை பெரும்பாலும் ஹம்மிங் குரல் கொடுப்பவராகவே வைத்திருந்து வஞ்சித்து விட்டனர்.
நிழலில் இருந்தவரை வெளிச்சத்துக்குக் கொண்டுவந்த தங்கள் முயற்சி, பலே...
வினோத் சாரின் 'முத்துமண்டபம்' விளம்பரப் பதிவைப்பார்த்ததும் மனம் காலத்தின் முதுகில் ஏறிப்பயணிக்கிறது. இலட்சிய நடிகரின் ஒரு வித்தியாசமான படம்.
பாடகர்திலகத்தின் கம்பீரக்குரலில் ஒரு தத்துவப்பாடல், விரக்தியின் விளிம்பில் நின்று கதாநாயகன் பாடுவார்....
சொன்னாலும் வெட்கமடா சொல்லாவிட்டால் துக்கமடா
வெட்கமில்லாமல் துக்கமில்லாமல் வாழுகிறேன் ஒரு பக்கமடா
பாய்விரித்து படுப்பவரும் வாய்திறந்து தூங்குகிறார்
பஞ்சணையில் நான் படுத்தும் நெஞ்சில் ஓர் அமைதியில்லை
கொஞ்சவரும் கிளிகளெல்லாம் கொடும் பாம்பாய் மாறுதடா
கொத்திவிட்டு, புத்தனைப்போல் சத்தியமாய் வாழுதடா
சொன்னாலும் வெட்கமடா.....
http://mmimages.maalaimalar.com/Arti...f_S_secvpf.gif
எம்.ஜி.ஆரின் புகழ் பெற்ற பாடல்கள் பலவற்றை எழுதியவர்; ஓவியராக இருந்து நாடக ஆசிரியரானவர்; நாடகத்திலிருந்து சினிமா உலகுக்கு வந்தவர் அவர்தான் கவிஞர் வாலி.
அவர் சினிமா உலகில் எளிதாகப் புகழ் பெற்று விடவில்லை. எதிர்நீச்சல் போட்டு வெற்றி பெற்றார்.
வாலியின் சொந்த ஊர் ஸ்ரீரங்கம். தந்தை பெயர் சீனிவாச அய்யங்கார். தாயார் பொன்னம்மாள். வாலியின் இயற்பெயர் ரங்கராஜன். சிறு வயதில் இருந்தே ஓவியம் வரைவதில் ஆர்வம் கொண்டிருந்தார். பிரபல ஓவியர் `மாலி' போல் புகழ் பெறவேண்டும் என்று ஆசை.
இதனால், பாபு என்ற அவருடைய பள்ளித் தோழர், 'வாலி' என்ற பெயரை சூட்டினார். இதை அறிந்த அவருடைய ஆசிரியர், 'உனக்கு வால் இல்லையேடா! அப்புறம் எப்படி வாலின்னு பெயர் வெச்சுக்கிட்டே?' என்று கேலி செய்தார்.
உடனே ஒரு துண்டு காகிதத்தை எடுத்து, 'வாலில்லை என்பதால் வாலியாகக்கூடாதா? காலில்லை என்பதால் கடிகாரம் ஓடாதா?' என்று ஒரு கவிதையை எழுதி, ஆசிரியரிடமே நீட்டினார்.
அதைப் படித்த ஆசிரியர், 'பரவாயில்லையே! கவிதை கூட நன்றாக எழுதுகிறாயே!' என்று முதுகில் தட்டிக்கொடுத்தார்.
ஓவியம் வரைவதுடன் கதை, கட்டுரை, கவிதை எழுதுவதிலும் `வாலி' ஆர்வம் கொண்டிருந்தார். பத்திரிகைகளில் வரும் கதைகளை எல்லாம் விழுந்து விழுந்து படிப்பார். பிரபல மராத்தி எழுத்தாளர் காண்டேகர் எழுதிய கதைகள் அவருக்கு மனப்பாடம்.
நண்பர்களுடன் சேர்ந்து 'நேதாஜி' என்ற கையெழுத்துப் பத்திரிகை நடத்தினார். ஸ்ரீரங்கத்துக்கு வந்திருந்த எழுத்தாளர் 'கல்கி', அந்த கையெழுத்துப் பத்திரிகையைப் பார்த்து பாராட்டியதுடன், பத்திரிகைக்கு கதை எழுதும்படி கூறினார்.
இந்தக் காலக்கட்டத்தில், ஸ்ரீரங்கத்தில் ஏ.எஸ்.ராகவன், ஸ்ரீரங்கம் ராமகிருஷ்ணன், ஸ்ரீரங்கம் நரசிம்மன், பிலஹரி, சுஜாதா என்று பல எழுத்தாளர்கள் வசித்தார்கள். இவர்கள் எல்லாம் வாலிக்கு நண்பர்கள் ஆனார்கள்.
ஒரு நாள் ஸ்ரீரங்கம் ஆயிரங்கால் மண்டபத்தில், பிரபல ஓவியர் 'சில்பி' ஓவியங்கள் வரைந்து கொண்டிருப்பதைப் பார்த்தார். தான் வரைந்த ஓவியங்களை அவரிடம் கொண்டு போய்க் காண்பித்தார். 'கும்பகோணத்திலும், சென்னையிலும் ஓவியக் கல்லூரிகள் இருக்கின்றன. அங்கு சேர்ந்து ஓவியம் பயின்றால், சிறந்த ஓவியனாக வரலாம்' என்று சில்பி ஆலோசனை கூறினார்.
இந்த சமயத்தில், திருச்சியில் புகழ் பெற்ற கவிஞராக விளங்கிய திரிலோக சீதாராம், மகாகவி பாரதியாரின் மகள் தங்கம்மாள் பாரதியுடன் வாலியின் வீட்டுக்கு வந்தார்.
வாலி வரைந்த பாரதியாரின் படம், சுவரில் மாட்டப்பட்டிருந்தது. அதைப் பார்த்த தங்கம்மாள் பாரதி, 'அப்பா மாதிரியே இருக்கு. நன்றாக வரைந்திருக்கே' என்று வாலியைப் பாராட்டியதுடன், 'பையனை படம் வரையற துறையிலேயே விடுங்க. நன்றாக முன்னுக்கு வருவான்' என்று வாலியின் பெற்றோரிடம் கூறினார்.
கடன் வாங்கியாவது பையனை சென்னைக்கு அனுப்பி, ஓவியம் வரைய செய்வது என்ற முடிவுக்கு வந்தார், வாலியின் தந்தை. அதன்படி, சென்னைக்கு ரெயில் ஏறினார், வாலி. எழும்பூரில் உள்ள ஓவியக் கல்லூரியில் சேர்ந்தார்.
சிந்தாதிரிப்பேட்டையில், ஒரு நண்பனுடன் தங்கிக்கொண்டு ஓவியக் கல்லூரிக்கு போய் வந்தார்.
ஓவியக் கல்லூரியில் ஏற்பட்ட அனுபவம் பற்றி வாலி கூறியிருப்பதாவது:-
'ஓவியக் கல்லூரியில் என்னுடைய வகுப்பில் மாடலிங் என்ற பெயரில், ஆண், பெண்கள் ஆடாது, அசையாது சிலை போல் நிற்பது உண்டு.
`மாடலிங்'காக முதன் முதலில் சந்தித்தது, இருபத்தைந்து வயதிற்குள் இளம் பருவத்தை சற்றே கடந்து நின்ற ஒரு பெண்ணைத்தான். அந்தப் பெண்ணைப் பார்த்து, அப்படியே வண்ண ஓவியமாக வரையவேண்டும்.
அந்தப்பெண் எங்களுக்கு முன்னால் வந்து நிற்க, எந்த கோணத்தில் எப்படி `போஸ்' தரவேண்டும் என்பதை ஆசிரியர் சொல்லிக் கொடுத்தார்.
நான், என் மேஜைக்குக் கீழே குனிந்து, ஓவியம் வரைவதற்காக வைத்திருந்த உபகரணங்களை எடுத்து மேஜை மíது வைத்து விட்டு, `மாடலிங்'காக நின்ற அந்த பெண்ணை நிமிர்ந்து பார்த்தேன்.
ஒரு விநாடி எனக்குத் தலை சுற்றியது. ரத்தமே உறைந்து விடுவது போல், உடலெங்கும் ஒரு சிலிர்ப்பு பரவியது. என் கை கால்கள் வெடவெடத்தன.
காரணம், அந்தப் பெண் முழு நிர்வாணமாக நின்று கொண்டிருந்தாள்! நிர்வாணமாகப் பெண்களை வரைவது ஓவியத்தில் ஒரு பாடமாகும்.
ஓவியக் கல்லூரியில் நான் பயின்றது 'கமர்ஷியல் ஆர்ட்.' ஓராண்டுதான் நான் படித்தேன். பிறகு அந்தப் படிப்புக்கே முற்றுப்புள்ளி வைத்து விட்டு, ஏதோ ஓர் உந்துதலால் ஸ்ரீரங்கம் திரும்பிவிட்டேன்.
ஸ்ரீரங்கத்தில், 'வாலி பப்ளிசிட்டீஸ்' என்று சொந்தமாக ஒரு விளம்பர நிறுவனத்தை நிறுவினேன். அதுவும், வள்ளலார் கதை போல ஆயிற்று. 'கடை விரித்தேன்; கொள்வார் இல்லை.'
எதிலும் நான் உருப்படாமல் போய் விடுவேனோ என்று என் தாயும், தந்தையும் என் எதிர்காலம் பற்றி மலையளவு வருத்தத்தை மனதில் தேக்கி வைத்திருந்தனர்.'
இவ்வாறு குறிப்பிட்டுள்ளார், வாலி.
http://tamil.thehindu.com/multimedia...V28GbcRRRX.jpg
From Tamil Hindu -today
பி.ஆர். பந்துலு இயக்கத்தில் வெளியான ‘பலே பாண்டியா’ (1962) படத்தில் பாண்டியன்,மருது, சங்கர் என மூன்று மாறுபட்ட வேடங்களில் முதல்முறையாக சிவாஜி நடித்திருந்தார்.
இந்தப் படத்தில் விஸ்வநாதன் ராமமூர்த்தி இசையில் இடம்பெற்ற ‘நீயே உனக்கு என்றும் நிகரானவன்’ பாடலில் நீண்ட ஆலாபனையாக சுர வரிசையைப் பாடிக்கொண்டே ‘மாமா… மாப்ளே’ என்று பாடலின் முடிவில் நடக்கும் சங்கீதப் போட்டி, மிகவும் ரசிக்கப்பட்டது.
அப்போது கிண்டியில் அமைந்திருந்த ‘நியூட்டன்’ ஸ்டூடியோவில் பாடலைப் படமாக்கியிருக்கிறார்கள். இந்தப் பாடலில் எம்.ஆர். ராதாவுக்காக எம். ராஜு என்பவரைப் பாட வைத்திருக்கிறார்கள். இவர் விஸ்வநாதன் ராமமூர்த்தி குழுவில் இடம்பெற்றிருந்த கம்பெனிப் பாடகர்.
அச்சு அசலாகத் தனது குரலில் பாடியதைப் போலவே ராஜு பாடியிருப்பதைக் கேட்டு அவரை செட்டுக்கே வரவழைத்து நடிகவேள் பாராட்டினார். பிறகு அவரிடமே அந்தப் பாடலில் இடம்பெற்ற சுர வரிசையையும் கற்றுக்கொண்டார். ஆனால் அவை அத்தனை சீக்கிரம் வாயில் நுழையவில்லை. அவர் பயிற்சி எடுத்துக் கொண்டிருந்ததை ரசிக்க செட்டில் இருந்தவர்கள் கூடியதால், “ஏன்டா இங்க என்ன யானை வித்த காட்டவா வந்திருக்கு?” என்று எல்லோரையும் துரத்தினாராம்.
ஓரளவு கற்றுக்கொண்டாலும் சுர வரிசைகளால் பெரிய குழப்பம் ஏற்பட, இயக்குநர் பந்துலுவிடம் “எனக்கு குளோஸ் அப் வைக்காமல் கேமராவை நிறுத்தாமல் ஓடவிடு, முக்கியமாக நாகராவில் பாடலை ஒலிக்கவிட்டு ‘ரிகர்சல்’ பார்க்க வேண்டாம் என்று உத்தரவு போட்டுவிட்டாராம் ராதா.
படப்பிடிப்பில் பாலாஜி கடம் வாசிப்பதுபோல நடிக்க, சிவாஜி தரையில் அமர்ந்து பாட, சோபாவில் அமர்ந்து எம்.ஆர். ராதா ரசித்துக் கொண்டிருப்பதுபோல இரண்டு கேமராகளை வைத்துப் படமாக்கியிருக்கிறார் இயக்குநர். பாதி பாடல் எடுத்து முடிக்கப்பட்டதும், இரண்டு நிமிடம் இடம்பெறும் சுர ஆலாபனைக்கான படப்பிடிப்பு தொடங்கியது.
பாடகர் ராஜு சொல்லிக்கொடுத்த சுரங்கள் எல்லாம் மறந்துபோனாலும் ரொம்பவே சூப்பராகச் சமாளித்திருக்கிறார் நடிகவேள். சுர ஆலாபனையைச் சரியான உதட்டசைவுடன் சொல்ல முடியாது என்று தெரிந்ததும், தனது அங்க சேஷ்டைகளால் சமாளிக்க ஆரம்பித்தார். முக்கியமாக அவர் அமர்ந்திருந்த சோபா அதிரும்படி உடலையும் கைகளையும் அசைக்க ஆரம்பித்தார். நடிகவேளின் உடல் மொழியைக் கண்டு செட்டில் இருந்த அத்தனை பேரும் சிரித்துக்கொண்டே இருக்க அப்போதே இந்தப் பாடல், படத்துக்குப் பெரிய சர்ப்பிரைஸ் என்பது தெரிந்துவிட்டது.
பாடலின் க்ளைமேக்ஸ் நெருங்கிய நேரத்தில் பெரிய கர்நாடக சங்கீதப் பாடகரைப் போல் இடது கையைத் தனது காதருகே வைத்துக் கொண்டு வலது கையை நீட்டி வாயை அசைத்து நடித்திருக்கிறார் நடிகவேள். இது கொஞ்சம் ஓவராக இருக்கிறதே என்று இயக்குநர் நினைத்தாலும் கடைசி ஷாட் என்பதால் ஓடிக்கொண்டிருக்கும் கேமராவை நிறுத்த இயக்குநர் விரும்பவில்லை.
படப்பிடிப்பு முடிந்ததும்.. “அண்ணே ஆலாபனை பாடுறதுக்கே காதுகிட்ட கையைக் கொண்டு போயிட்டீங்களே!? என்னாலயே சிரிப்பை அடக்க முடியல” என்றார் பந்துலு. அதற்கு எம்.ஆர்.ராதா... “அடப் போய்யா... நான் குதிச்ச குதியில விக் கழன்றுகிட்டு வந்திருச்சு... அது கீழ விழுந்துட்டா.. எல்லார் உழைப்பும் தீர்ந்துருமே… விக் கீழே விழாம பிடிச்சுக்கத்தான்.. அப்புடி காதுக்கிட்ட கை வெச்சேன். என்னோட மானமும் மிச்சம், உன்னோட பிலிம் ரோலும் மிச்சம்” என்றாராம்.
உடன் வரும் மாய நிழல் - From Today Tamil HINDU
http://tamil.thehindu.com/multimedia...EmvAQsRVea.jpg
பாசத்துடனும் ஆசையுடனும் பழகிவந்த காதலி அல்லது கைப்பிடித்த மனைவி திடீரென்று மறைந்த துக்கத்தில் நம் திரை நாயகர்கள் அவள் நினைவாக அல்லல்படும்போது மறைந்தவள் ஆறுதல் சொல்லிப் பாடுவதாக அமைந்த பாடல் காட்சிகள் எல்லா இந்தியத் திரைப்படங்களிலும் இடம்பெற்றுள்ளன. இப்படிப்பட்ட பாடல்கள் அமரத்துவத்தன்மை அடைவதும் உண்டு.
தமிழ், இந்தி ஆகிய மொழிகளில் இந்த உணர்வை வெளிப்படுத்திய இரண்டு திரைப்பாடல்கள், காலத்தைக் கடந்து இன்றும் பெரிதும் கேட்டு ரசிக்கப்படுகின்றன.
வழக்கப்படி முதலில் இந்திப் பாடல்.
லதா மங்கேஷ்கர் பாடிய பல்லாயிரத்துக்கும் அதிகமான பாடல்களில் மிகச் சிறந்த பத்துப் பாடல்களில் ஒன்று என்று தெரிவுசெய்யப்பட்ட இந்தப் பாடலை எழுதியவர் இந்தித் திரை இசைக் கவிஞர்களின் அரசன் என்று புகழப்படும் ராஜா மெஹதி அலி கான். பாடலுக்கு இசை பாரம்பரிய இசை அமைப்பாளர் மதன்மோஹன். பாடல் இடம்பெற்ற வெற்றித் திரைப்படம் 1966-ல் வெளிவந்த மேரே சாயா (என் நிழல்) என்ற சாதனா - சுனில் தத் நடித்த படம்.
பாடல் வரிகள்.
து ஜஹான் ஜஹான் சலேகா
மேரா சாயா சா ஹோகா
மேரா சாயா
கபி முஜ்கோ யா கர்கே
ஜோ பெஹேங்கே தேரி ஆஸு
தோ வஹீ பே ரோ லேகே
உன்ஹே ஆக்கே மேரே ஆஸு
து ஜிதர் கா ருக் கரேகா
மேரா சாயா
... ...
இதன் பொருள்:
நீ எங்கெங்கு செல்கிறாயோ
என் நிழல் (அங்கெல்லாம்) உடன் இருக்கும்
என் நிழல்...
எப்பொழுது என் நினைவில் உன் கண்ணீர் பெருகுகிறதோ அங்கே உடன் வந்து
அது நிற்கும்படி என் கண்ணீர் தடுத்துவிடும்.
என் நிழல் உடன் இருக்கும்
நீ விரக்தி அடைந்தால் நானும் விரக்தியாகிவிடுவேன்
நான் கண்ணுக்குத் தெரிந்தாலும்
தெரியாவிட்டாலும்
உன் உடன்தான் இருப்பேன்
நீ எங்கு சென்றுகொண்டிருந்தாலும்
என் நிழல் உடன் இருக்கும்.
நாயகியை இழந்த பிறகு பாடும் இப்பாடல் வரிகளின் இரண்டாம் பகுதியில் அவள் உயிருடன் இருக்கும்போது பாடிய சில வரிகள் வால்யூம் 2 என்று தனியாக உள்ளன. படத்தில் அவை ஒரே தொகுப்பாகக் காட்சியாக்கப்பட்டிருகின்றன. இந்த உணர்வை அப்படியே பிரதிபலிக்கும் ஜெமினி கணேசன் - கே.ஆர். விஜயா நடித்த ‘கற்பகம்’ படத்தின் பாடல்:
விஸ்வநாதன் ராமமூர்த்தி இசையில் மக்கள் கவிஞர் வாலி எழுதி அவருக்கு மிகவும் புகழ் சேர்த்தது அந்தப் பாடல். பாடியவர் பி. சுசீலா. தான் விட்டுச் சென்ற இடத்திற்கு வந்தவளை நேசிக்கும்படி இறந்த மனைவி பாடும் பாடல் வரிகள் மிகச் சிறப்பாக அமைந்திருப்பதைப் பாருங்கள்.
மன்னவனே அழலாமா கண்ணீரை விடலாமா
உன்னுயிராய் நான் இருக்க என்னுயிராய் நீ இருக்க
மன்னவா மன்னவா மன்னவா
கண்ணை விட்டுப் போனாலும்
கருத்தை விட்டுப் போகவில்லை
மண்ணை விட்டுப் போனாலும்
உன்னை விட்டுப் போகவில்லை
இன்னொருத்தி உடலெடுத்து
இருப்பவளும் நானல்லவா
கண்ணெடுத்தும் பாராமல்
கலங்குவதும் நீயல்லவா
உன் மயக்கம் தீர்க்க வந்த
பெண் மயிலைப் புரியாதா
தன் மயக்கம் தீராமல்
தவிக்கின்றாள் தெரியாதா
என் உடலில் ஆசை என்றால்
என்னை நீ மறந்துவிடு
என் உயிரை மதித்திருந்தால்
வந்தவளை வாழவிடு.
மன்னவா மன்னவா மன்னவா
நாயகியை நினைத்து வாடும் நாயகன் மட்டுமே ஆறுதல் பெற முடியும் என்பதும் நாயகனை நினைத்து வருந்தும் நாயகிக்கு இம்மாதிரிப் பாடல்கள் ஒருபோதும் திரையில் இடம்பெற முடியாது என்பதும் கவனத்தில் கொள்ள வேண்டிய காவிய இலக்கணமாகும்.
கிருஷ்ணா ஜி.. அருமையான பதிவு. மேரா சாயா-தான் தமிழில் இதயக் கமலம் என்ற பெயரில் வெளிவந்தது. தூ ஜஹான் ஜஹான் சலேகாவை தமிழில் "உன்னைக் காணாத கண்ணும் கண்ணல்ல" என்று சுசீலாவின் குரலைக் கொண்டு மயங்க வைத்திருக்கிறார்கள். "மன்னவனே அழலாமா" போல இந்தப் பாடலுக்கும் நடித்தவர் கே.ஆர்.விஜயா என்பது ஹைலைட் !!
நன்றி மது சார்
இந்த பதிவை காலையில் நானும் எனது அத்தை ஒருவரும் (அவர் வயது கிட்டத்தட்ட 65 வயது இருக்கும்) சேர்ந்து படிக்கும் போது நீங்கள் சொன்ன இதே தகவலை சொன்னார் .
இந்த பதிவை எழுதியவர் 'உன்னை காணாத கண்ணும் கண்ணல்ல' பாடலை பற்றியும் குறிப்பிட்டு இருக்க வேண்டும்
என்றும் அவர் கூறினார்
மீண்டும் ஒரு முறை நன்றி மது சார்
வினோத் சார்
செந்தாமரை நிழற்படம் மிகவும் அருமை. அதே போல் முத்து மண்டபம் படநிழற்படமும். தொடர்ந்து தங்கள் பங்களிப்பில் பல அபூர்வ நிழற்படங்களைக் காண ஆவலுடன் காத்திருக்கிறோம்.
உள்ள(த்)தை அள்ளித்தா
இந்தத் தொடரில் அடுத்து நாம் பகிர்ந்து கொள்ளப் போவது கே.ஆர்.ராமசாமி, ஜெமினி கணேசன் நடித்து மெல்லிசை மன்னர்கள் இசையமைத்த நீதிபதி திரைப்படத்திலிருந்து கே.ஜமுனா ராணி குழுவினர் பாடிய பாடல். பாடலைக் கேட்கத் துவங்கிய உடனே நம்மையும் அறியாமல் நம் கால்கள் தாளம் போடும். அருமையான பாடல். நமக்காக சிறப்பான ஒலித்தரத்தில்
வந்ததடி ராஜயோகம்
பொங்கும் பூம்புனல்
பஜனைப் பாடல்களை நகைச்சுவைக்காக அமைக்கும் பாங்கு பல படங்களில் இடம் பெற்றிருக்கிறது. இதில் மக்களின் நினைவில் முதலில் நிற்பது காசேதான் கடவுளடா படத்தில் இடம் பெற்ற ஜம்புலிங்கமே ஜடாதரா.
இந்த வரிசையில் மெல்லிசை மாமணி வி.குமாரின் இசையில் பெண்ணை நம்புங்கள் படத்தில் இடம் பெற்ற ராஜா ராமா ரகுராமா என்கிற இந்தப் பாடலும் அடங்கும். எஸ்.பி.பாலா, கோவை சௌந்தர்ராஜன் இவர்களுடன் எம்.ஆர்.ஆர்.வாசுவும் இணைந்து பங்கேற்றுப் பாடியுள்ள பாடலைக் கேட்டு மகிழுங்கள்.
http://www.inbaminge.com/t/p/Pennai%20Nambungal/
ஜேசுதாசுடன் இணைந்து பாடுபவர் வசந்தா. அருகில் ம்யூசிக் டைரக்டர் தேவராஜன்.
http://www.thehindu.com/multimedia/d...N1_764379g.jpg
இன்னும் சில அருமையான பாடல்கள்.
பொங்குதே புன்னகை... போதுமா புன்னகை
நேற்று வரை விண்ணில் இருந்தாளோ
எல்லோர்க்கும் வேண்டும் நல்ல மனது
ஆடியிலே பெருக்கெடுத்து ஆடி வரும் காவேரி
ஏசுநாதர் பேசினால் அவர் என்ன பேசுவார்
மணிவிளக்கே மாந்தளிரே
வினோத் சார்,
அசத்தலான 'செந்தாமரை'க்கு நன்றி!
Thanks Vasu.
இனிய நண்பர்கள் திரு ராகவேந்திரன் / திரு வாசு சார் .
உங்களின் அன்பான பாராட்டுகளுக்கு நன்றி .
1963 சினி டைரியில் வெளிவந்த நடிகர் திலத்தை பற்றிய ஒரு சிறு குறிப்பு.
http://i62.tinypic.com/30ncjdl.jpg
விழிகளுக்கும் செவிகளுக்கும் விருந்து படைத்த பாடல் .
மெல்லிசை மன்னரின் அட்டகாசமான இசையில் பாடகர் திலகம் குரலில் மக்கள் திலகத்தின்
சிறப்பான நடன பாடல் .
http://youtu.be/IACqSG0qUgg
எனதருமை பாடகர் பீ.பீ.ஸ்ரீநிவாஸ் ,நடிகர்திலகத்திற்கு பாடிய ஒரே டூயட்.குறிஞ்சி மலர் போல ,நினைவில் தங்கும். நான் சொல்லும் ரகசியம் படத்தில்.வீரபாண்டிய கட்டபொம்மனுக்கு அடுத்து வந்ததாலோ என்னவோ,ஜி.ராமநாதனின் இன்பம் பொங்கும் சாயலில் வந்த பாடல் கண்டேனே உன்னை கண்ணாலே.
இந்த படத்தில் ஹீரோ ரிக்ஷாகாரன் கனவு காணுவதாய் வருவதால் fantacy & realism சரிபாதியாய் கலந்த உடைகள்,அரங்க அமைப்பு.
பீ.பீ.ஸ்ரீநிவாஸ் தன்னுடைய வழக்கமான பிட்ச் இல் இருந்து சிவாஜிக்காக ஒரு படி மேலேற ,சிவாஜி ஏ.எம்.ராஜா,எஸ்.பீ.பீ.,ஜேசுதாஸ் இவர்களுக்கு ,இவர்கள் குரலுக்காக மாற்றி அட்ஜஸ்ட் செய்து ,body language ,வாயசைப்பு,முகபாவம் எல்லாவற்றிலும் தத்ரூபமாய் குரலின் பிரதிபலிப்பை கொண்டு வருவார். அஞ்சலி இந்த காட்சியில் அழகு ,சிவாஜியுடன் மிக இசைவாக இருக்கும்.(சிவாஜி ,நடிகைகளுக்கும் அவர்கள் இயல்பு படி விட்டு,தான் வித்யாசபடுத்தி இணைவார்,இசைவார்)
அந்த பாக்கெட் இல் கை விட்டு ,அடக்கி வாசிக்கும் வாயசைப்பு.ஹா ஹா என்று தொப்பி கழட்டும் ஸ்டைல்,நிலவென்று நீயே உனதல்லி நானே என்ற வரிகளில் ஆ ஆ ஆ என்று ஆமோதிக்கும் ஸ்டைல்,எனதாசை மானே என்று துள்ளி அருகில் விழும் துரு துரு ஸ்டைல் ,என் பிரியமான டூயட்.
பீ.பீ.எஸ் இதை பற்றி பத்து நிமிடம் சிலாகித்தார்.
https://www.youtube.com/watch?v=WEHpektZFc0
கோ,
வெறுப்பேத்தி உசுப்பேற்றதீர்கள்.
என் டிவிடியில் இருந்து அந்த ஸ்பெஷல் போஸ்கள். (உங்களுக்காக)
'ஆண்மை அழகன்' காத்தவராயனில்.
http://i1087.photobucket.com/albums/..._000387749.jpg
http://i1087.photobucket.com/albums/..._000432729.jpg
http://i1087.photobucket.com/albums/..._000481357.jpg
http://i1087.photobucket.com/albums/..._000472399.jpg
அன்னையின் ஆணை -சிவாஜி கோடீஸ்வரன், மணமகன் தேவை படங்களில் கோடி காட்டி இருந்தாலும் ,தன்னுடைய நடிப்பின் பாணியை முற்றிலும் வேறு திசையில் மேற்கு நோக்கி திருப்பிய ஆரம்ப படம் அன்னையின் ஆணை.
அதே போல சிவாஜி-சாவித்திரி இணை ஆரம்ப படங்களான (இறுதி 50 களின்) அமர தீபம்,வணங்காமுடி,அன்னையின் ஆணை ,காத்தவராயன் படங்களில் அவ்வளவு அழகாக வந்திருக்கும். என்ன ஒரு கெமிஸ்ட்ரி இந்த திலகங்களிடையே. அவ்வளவு அழகு ஜோடி.
பாச மலர் வந்து புரட்டி போட்டு விட்டது.
இந்த பாடல் கதாநாயகனின் கனவு. fantasy கலந்த செட்,உடைகள் எனினும் மிக மிக அழகுணர்ச்சியுடன் வடிவமைக்க பட்டிருக்கும். ஆண் -பெண் உடையமைப்பில் ஒத்திசைவு அபாரம். திராவிட மன்மதன் இளமையுடன் ஆணழகின் இலக்கணமாக ,துறு துறு வென்று மனதை அள்ளி விடுவார்.
நடன ஒத்திசைவு (rhythm ),அமைப்பு (choreography ),நளினம் (Grace ),ஸ்டைல் (style )வெளியீடு (execution ) எல்லாவற்றிலும் அப்படி ஒரு முழுமை. நடிகர்திலகம் முற்றிலும் புது பாணி கையாண்ட ஆரம்ப படம்.
கனியே உன்னாசை போலே, மலர்ந்தாடும் இன்ப சோலை மனம் மகிழும் பொன்னான வேளை ,அழகாய் நின்றாடும் மானே ,ஓஹோஹோ அமுதே எந்தன் வாழ்வுதனிலே வரிகளில் தலைவரை கண் கொட்டாமல் கவனியுங்கள்.இந்த இடத்தில் ஒரு ஸ்டெப் எடுப்பது போல நிறுத்தி பிறகு வருவதை பாருங்கள். ஸ்டைல்
ஆனாலும் சரி ,cue மிஸ் பண்ணி சமாளித்தாலும் (படசுருள்
வீணாகாமல்)இரண்டுமே ஒரு சாதனை நாயகனை பிரித்து காட்டும் அதிசயம்.
https://www.youtube.com/watch?v=Mtslsb4wJkY
வாசுவின் ஸ்பெஷல் ஆன காத்தவராயனில் சிவாஜி-சாவித்திரி அழகு இணையின் நிறைவேறுமோ எண்ணம்.ஜி.ராமநாதன் இசையில் டி.எம்.எஸ்-ஜிக்கி இணையில் .
கிளி ,நிலவொளியில் நடிகர்திலகமாகும் அந்த எனதாசை வனிதாமணி
கணத்தை தவற விடாமல், அந்த சைடு போஸில் ஜொலிப்பை ,கண் கொட்டாமல் பாருங்கள். இந்த ஸ்டில் மிகவும் பிரபலம்.சுவை கண்டால் மீறி இங்கே ஓடுவார் வரிகளிலும் அவ்வளவு அழகு. பாருங்க,பாருங்க,பார்த்து கிட்டே இருங்க.
https://www.youtube.com/watch?v=uAPRrWJDHMs
RAGHAVENDRAN MURALI SIRS AND PARTICIPANTS.
my heartiest congradulations for the proramme schduled about NADIGARTHILAGAM. My request is try to bring out unknown sadhanaigal and matters not widely discussed about NT by the general public and fans to some extent so that MORE ABOUT NT can be understood by the people. hope all of you will focus on these points. ALL THE VERY BEST.
VALGA VALARGA NT FAME AND GLORY.
இன்றைய ஸ்பெஷல் (44)
இன்று ஒரு அருமையான காமெடிப் பாடலை இன்றைய ஸ்பெஷலாகத் தருகிறேன். அப்போதைய ஹிட். இப்போது மீண்டும் ஞாபகப்படுத்திக் கொள்வோம்.
http://www.inbaminge.com/t/m/Manam%2...ngu/folder.jpg
'மனம் ஒரு குரங்கு' படத்தில் ராட்சஸி, சீர்காழி கலக்கி எடுக்கும் பாடல்.
http://i.ytimg.com/vi/WB4p7JKH5nU/hqdefault.jpg
சோவுக்கு ஒரு காமெடி டூயட். அப்போதைய சினிமாப் படங்களின் பெயர்களை பயன்படுத்தி காமெடிக் காதலர்கள் பாடும் பாடல். சுத்த தமிழிலும், கர்னாடக சங்கீதத்திலும், பக்திப் பாடல்களிலும் பட்டை கிளப்பும் சீர்காழி ஆங்கிலத்தில் பாடும் போதே தானாக வந்து விடுகிறது சிரிப்பு நமக்கு. ஈஸ்வரியின் ஆங்கில உச்சரிப்பு தமிழையும் விஞ்சுகிறது. டிபி.ராமச்சந்திரன் அவர்கள் இசை (இவர்தானே இசை?) மேலை நாட்டு இசையைத் தழுவி இருந்தாலும் பியூடிபுல். சோ திரைக்கதை வசனம் எழுதிய படம் இது. வி.டி.அரசு தயாரித்து ஏ.டி.கிருஷ்ணமூர்த்தி இயக்கி வெளிவந்த படம்.
Beautiful
marvelous
Excellent
Beautiful marvelous Excellent
very very Excellent
நீ பிறந்திருக்க வேண்டியது england
Beautiful marvelous Excellent
very very Excellent
நாம் பிறந்திருக்க வேண்டியது england
இளமைப் பூங்கா அள்ளித் தந்த
நானும் ஒரு பெண்
நீ தட்டிக் கழித்த பேர்களிலே நான்
ஆயிரத்தில் ஒருவன்.
இளமைப் பூங்கா அள்ளித்
தந்த நானும் ஒரு பெண்
நீ தட்டிக் கழித்த பேர்களிலே
நான் ஆயிரத்தில் ஒருவன்.
இன்பக் கடலில் நீந்திட வந்த
படகோட்டி
இன்பக் கடலில் நீந்திட வந்த
படகோட்டி
இனி என்றும் வாழ்வில் நீயே எனக்கு
வழிகாட்டி
Beautiful
Excellent
கல்யாணம் என்ற ceremony
அது காதலர்க்கு தரும் company
கல்யாணம் என்ற ceremony
அது காதலர்க்கு தரும் company
குழந்தை குட்டிகள் too many
பெறக் கூடாது அம்மணி
குழந்தை குட்டிகள் too many
பெறக் கூடாது அம்மணி
அம்மணி அம்மணி
ஓஹ்ஹஹோஹ்ஹோ (ஈஸ்வரியின் ஒரு வினாடி ஓஹோ)
Beautiful
Beautiful
marvelous
marvelous
Excellent
very very Excellent
நாம் பிறந்திருக்க வேண்டியது england
taxi meter ஐப் போல ஓடுது இருவர் உள்ளம்
அதைத் தடுத்து நிறுத்த கட்டிடுவோம் நம்
நெஞ்சில் ஓர் ஆலயம்
நெஞ்சில் ஓர் ஆலயம்
நெஞ்சில் ஓர் ஆலயம்
வடிகட்டி உன்னை தேர்ந்தெடுத்து
நான் போட்டேன் பூமாலை
வடிகட்டி உன்னை தேர்ந்தெடுத்து
நான் போட்டேன் பூமாலை
இளமங்கை உனக்கு என்னை இதுவரை
காதலிக்க நேரமில்லை
காதலிக்க நேரமில்லை
நீ கைகொடுத்த தெய்வம்
என்னைத் தேடி வந்த செல்வம்
நீ கைகொடுத்த தெய்வம்
என்னைத் தேடி வந்த செல்வம்
லாலலா லலலலாலாலா
லாலலா லலலலாலாலா
ஹோஹஹோ ஹோஹஹோஹோ ஹோ
Beautiful marvelous Excellent
very very Excellent
நாம் பிறந்திருக்க வேண்டியது england
http://www.youtube.com/watch?feature...&v=wmW_iv0dbH4
மனம் ஒரு குரங்கு வித்யாசமான,துணிச்சலான முயற்சி. (ஹாலிவூட் தழுவல்). சி.ராமசந்திரா அத்தனை பாடல்களும் அருமை.
மனம் ஒரு குரங்கு மனித மனம் ஒரு குரங்கு -டி.எம்.எஸ்.
போகிறேன் புதிய உலகம் போகிறேன்- டி.எம்.எஸ்-பீ.எஸ்.
தாங்கள் கொடுத்துள்ள beautiful marvellous -சீர்காழி-ராக்ஷஷி .
நன்றி வாசு.
டியர் வாசு சார்,
இன்றைய ஸ்பெஷல் சீரீஸில் முந்தாநாள் நீங்கள் தந்த மோகம் முப்பது வருஷம் படத்திலிருந்து 'சங்கீதம் ராகங்கள் இல்லாமலா' பாடலின் விளக்கமும் ஆய்வும் மிகச்சிறப்பு.
ஆனந்த விகடனில் மணியன் இக்கதையை தொடராக எழுதியபோதே படித்திருக்கிறேன். கொஞ்சம் விவகாரமான கதைதான். முள்ளில் விழுந்த சேலைபோல கையாள வேண்டிய கதை. எழுதும்போது எப்படி வேண்டுமானாலும் எழுதிவிட முடியும். ஆனால் படமாக எடுக்கும்போது எப்படி வரப்போகிறது என்பதைக்காண ஆவலுடன் படத்துக்குச் சென்றேன். கொஞ்சம் அங்கே இங்கே மாற்றியிருந்தாலும் கதையை மிகவும் கவனமாகவே கையாண்டிருந்தனர். அதிலும் கமல் அப்போது பிளேபாய் ரோல்களாக பின்னிக்கொண்டிருந்த நேரம் (உணர்ச்சிகள், சொல்லத்தான் நினைக்கிறேன், மேலும் இதே சாயலில் சில மலையாளப்படங்கள்).
மணியன் 70-களில் அணிமாறிச்சென்று நடிகர்திலகத்தின் ரசிகர்களின் அதிருப்தியைச் சம்பாதிக்கும் முன், 60-களின் இறுதியில் அவருடைய கதைகள் என்றால் எனக்கு மிகவும் பிடிக்கும். முதன்முதலாக கண்ணதாசன் எழுதிய இதயவீணை தூங்கும்போது என்ற பாடல் வரியிலிருந்துதான் தன் இதயவீணை கதையின் தலைப்பை தேர்ந்தெடுத்தார். ஒவ்வொரு வாரமும் அக்கதையின் அத்தியாய எண் போடும் இடத்தில் சரோஜாதேவி மடியில் வீணையுடன் அமர்ந்திருக்கும் ஸ்டில் இடம்பெற்றிருக்கும். (ஆனந்த விகடனில் வந்த தொடர்கதையின் பைண்ட் செய்யப்பட வடிவம் இருந்தால் இன்றும் பார்க்கலாம்). ஒவ்வொரு அத்தியாயத்துக்கும் தலைப்பாக கண்ணதாசனின் பாடல் வரிகளைக் கொடுத்திருப்பார். இவையெல்லாம் மணியனின் கதைகளை விரும்பி படிக்கவைத்த கூடுதல் காரணங்கள்.
நடிகர்திலகத்தின் புதிய பறவையில் இடம்பெற்ற பாடல் வரிகளை தலைப்பாக வைத்தே நான்கு தொடர்நாவல்கள் எழுதினர். அவை...
'உன்னை ஒன்று கேட்பேன்'
'உண்மை சொல்ல வேண்டும்'
'என்னைப்பாடச் சொன்னால்'
'என்ன பாடத்தோன்றும்'
இதில் 'உண்மை சொல்ல வேண்டும்' என்ற தொடர்கதை துவங்கிய அதே விகடன் இதழில்தான் நடிகர்திலகம் எழுதிய 'அந்நிய மண்ணில் சிவந்தமண்' என்ற பயணக்கட்டுரைத் தொடரும் துவங்கியது.
இவர் எழுதிய கதைகளில் இதயவீணை (அதே பெயரில்), இலவுகாத்த கிளியே (சொல்லத்தான் நினைக்கிறேன்), லவ் பேர்ட்ஸ் (வயசுப்பொண்ணு) மோகம் முப்பது வருஷம் (அதே பெயரில்) திரைப்படங்களாக வந்தன. 'காதல் காதல் காதல்' படமும் மணியன் எழுதிய கதைதான்.
எந்த மணியனின் எழுத்துக்களை விரும்பிப் படித்தோமோ, அதே மணியனின் இதயம் பேசுகிறது பத்திரிகை இதழ்களை நாங்களே சென்னையின் பிரதான சாலையில் போட்டுக்கொளுத்தி போராட்டம் நடத்தும் அளவுக்கு மணியனின் பிற்கால நடவடிக்கைகள் நடிகர்திலகத்துக்கு எதிராக மாறிப்போயின.
ஸாரி..., உங்கள் பாடல் பதிவுக்கு பதிலளிக்கத்துவங்கி விஷயம் வேறெங்கோ திரும்பிவிட்டது...
நன்றி கார்த்திக் சார்.
நடிகரில் அசோகன்
பத்திரிக்கையாளர்களில் மணியன் (நல்ல எழுத்தாளராய் இருந்தும் கூட)
நடிகையரில் விஜயகுமாரி
குமட்டும்.
//(ஆனந்த விகடனில் வந்த தொடர்கதையின் பைண்ட் செய்யப்பட வடிவம் இருந்தால் இன்றும் பார்க்கலாம்).//
அம்மா வைத்திருந்தார்கள். நானே பல தடவை பார்த்திருக்கிறேன். ஆனால் இப்போது எங்கே?!!!!!!
குப்பத்து கே.ஆர்.விஜயா நடிகையானவுடன் ஒரு பாடலை ஷூட்டிங் எடுப்பது போன்ற காட்சி.
அருப்புக் கோட்டை மச்சான்
ஆசை என் மேல் வச்சான்
என்ற ஒரு பாடலும் ராட்சசி குரலில் 'மனம் ஒரு குரங்கி'ல் உண்டு.
எந்தப் பாட்டிலும் இல்லாத விசேஷம் இதில் உண்டு.
புன்னகை அரசி கவர்ச்சி விருந்து படைப்பார் லோ-ஹிப்பில்.
டியர் வாசு சார்,
இன்றைய ஸ்பெஷல் சீரீஸில் இன்று நீங்கள் வழங்கியிருக்கும் பாடல் உண்மையிலேயே 'பியூட்டிபுல் மார்வெலஸ்'. எதிர்பாராத நேரங்களில் இப்படி திடீர் திடீரென இன்ப அதிர்ச்சித் தாக்குதல்கள் நடத்துகிறீர்கள். ஏற்கனவே பலமுறை கேட்ட பாடலென்றாலும், ஒரு ஸ்பெஷல் தருணம் நினைவுக்கு வருகிறது.
பத்ரகாளி படம் பார்ப்பதற்காக வண்ணாரப்பேட்டை பாண்டியன் தியேட்டரின் எதிரே ஒரு டீக்கடை அருகில் நின்றுகொண்டிருந்தோம். வானொலியில் ஞாயிற்றுக்கிழமை மாலை உங்கள் விருப்பம் நிகழ்ச்சி, சீர்காழியாரின் சிறப்பு தேன்கிண்ணமாக ஒலிபரப்பாகிக்கொண்டிருந்தது. அவர், தான் பாடிய சிறந்த பாடல்களாக, விளக்கங்களுடன் கொடுத்துக்கொண்டிருந்தார். 'உள்ளத்தில் நல்ல உள்ளம்', 'உழைப்பதிலா', 'எங்கிருந்தோ வந்தான்' போன்ற பாடல்களை தந்தவர், 'இதுவரை ரொம்ப சோகமான, அல்லது சீரியஸான பாட்டுக்களாக தந்துவிட்டேன். அதிலிருந்து உங்களை மாற்ற நானும் எல்.ஆர்.ஈஸ்வரியும் பாடிய ஒரு இங்கிலீஷ் பாட்டைக் கேப்போமா?' என்று சொல்லிவிட்டு இந்த 'பியூட்டிபுல் மார்வெலஸ்' பாடலை ஒலிபரப்பினார். இப்போது (மனம் ஒரு குரங்கு படத்தில் இடம்பெற்ற) இந்தப்பாடலை எங்கே கேட்டாலும் அன்று கேட்ட அந்த அனுபவம் நினைவுக்கு வரும்.
'மனம் ஒரு குரங்கு' சோ எழுதிய நாவல். ஒருமுறை ரயிலில் மதுரை செல்ல எழும்பூர் ரயில்நிலையம் வந்த சோ அவர்கள், பயணத்தின்போது படிக்க எதுவும் எடுத்துவரவில்லையே என்ற நினைப்புடன் அங்கிருந்த புத்தகக் கடைக்கு சென்று சில புத்தகங்களை பார்வையிட்டபோது, கடைக்காரர் ஒரு புத்தகத்தை எடுத்துக்காட்டியிருக்கிறார். அதைப்பார்த்ததும் 'இது நல்லாயிருக்காது' என்று ரிஜெக்ட் செய்திருக்கிறார். சோ அவர்களால் ரிஜெக்ட் செய்யப்பட கதை வேறெதுவுமில்லை. அவரே எழுதிய 'மனம் ஒரு குரங்கு'தான்...
http://www.teamfours.com/library/boo...ges/32968f.jpg
தூள் கார்த்திக் சார்.
எனக்கு beautiful சாங் அவ்ளோவ் பிடிக்கும்.
சோவின் ரயில்வே ஸ்டேஷன் குரங்குத்தனத்தை நானும் படித்த ஞாபகம் உங்கள் பதிவைக் கண்டதும் வருகிறது.
இதை மாதிரி விஷயங்களை நினைவு படுத்த எங்கள் கார்த்திக் சாரால் மட்டுமே முடியும். ஒரு விஷயத்தை தொடக்கி வைத்தால் அதை பூரணமாக முடித்து வைக்க (அதுவும் சுவையோடு) உங்களால்தான் முடியும்.
மனம் ஒரு குரங்கு ! எத்தனை பொருத்தமான, சத்தியமான வார்த்தை. குரங்கு என்பது ஏளனத்துக்காக சொல்லப்பட்டதல்ல. அதன் செயலுக்காகவே சொல்லப்பட்டது. இன்றைக்கு ஒன்றை நினைக்கும் மனது அதனையே நாளை மறுக்கிறது. மீண்டும் பிறகு ஏற்கிறது. எனவே மனத்தை வைத்து நான் செயல்களை ஏற்பதில்லை. இன்றைக்கு ஒருவர் பிடிக்காமல் போகலாம். ஆனால் மீண்டும் மனம் எப்போதாவது அவரை நாடி விழையும். இப்போது நாம் அவரை பகைத்து கொண்டால், அப்போது அவருடன் நாம் பேச மனம் இடம் கொடாது. நம்முடைய ( ego) "தான்" என்ற உணர்வு தடுக்கின்றது. ஆனால் அவருடன் பேசி உறவாடுவதன் மூலம் கிடைக்கக் கூடிய நற்பலன்கள் பயனற்று விடுகின்றன. மனம் கிடந்து அடித்துக் கொள்கிறது. தான் முன்பு செய்த அவசர செயலை எண்ணி தன்னை வருத்தி நொந்து கொள்கிறது. இப்போது நாமாக போனால் அவமானப் படுத்தப் படுவோம் என்று அஞ்சுகின்றது. அமைதியில்லாமல் போகின்றது. எல்லாவற்றுக்கும் காரணம் மனம் அலை பாய்வது தான். மனம் எப்போதும் ஒருவருடன் பகைமை உறவாடுவதில்லை. சில சமயம் நண்பரும் எரிச்சலூட்டுவதுண்டு. என்னை எரிச்சளூட்டுவதர்க்குரிய உரிமையையும் நானே அவர்களுக்கு அளித்தேன் என்ற உண்மையையும் அதனால் அவர்களுக்கு கிடைக்கும் சிறிய சந்தோஷத்தையும் உணரக் கூடிய மனப் பக்குவம் எனக்கு இன்னும் வளர வேண்டும்.
அமைதியில் / தனிமையில் மனம் சிந்திக்கின்றது. தனது பழைய செயலை நினைத்து அலசியிருக்கிறது. இது அனைவருக்கும் தேவையான ஒன்று. கடந்ததை எண்ணி வருத்தப் படாதே என்பர். ஆனால் கடந்த பாதையே வாழ்வில் நமக்கு படிப்பினை கற்று தர போகிறது. இனி கடக்கப் போவதற்கு அதுவே வழி காட்டி.
அழகு முகத்தில் நிச்சயமாக இல்லை. மனத்தில் தான் இருக்கிறது. இதனை சிறிய வயதிலேயே அறிந்து கொண்டதினால் தானோ என்னவோ, என்னால் காதல் போன்றவற்றை முகத்தையும் உடலையும் வைத்து தீர்மானிக்க முடியவில்லை. இன்று என்னுடன் பேசும் அழகான பெண் என்னை அவமதித்து வார்த்தைகளால் நோகடிக்கும் போது அவளது அழகான முகம் மறைந்து மனத்தின் குரூரம் வெளிப்படுகிறது. இதனை நான் நன்கு உணர்ந்திருக்கிறேன்.
ஆணோ பெண்ணோ அவர்களது அழகு நம்முடைய மனதில் தான் இருக்கிறது. நமது மனதுக்கு அவர்களை பிடித்துப் போனால் அவர்கள் தான் அழகின் இலக்கணம் என்கிறோம். பிடிக்காவிடில் தூக்கி எறிகிறோம். கொஞ்சம் யோசித்துப் பார்க்கும் போது எல்லோருமே அழகாயிருப்பதாகப் படுகிறது. ஆனால் எல்லாருமே எல்லா சமயங்களிலும் அழகாயிருப்பதில்லை. மனமே முன்னின்று ஒரு செயலை செய்யும் போது மனிதர்கள் அழகனவர்களாகத் தெரிகின்றனர். நமது மனதுக்கு இதமளிப்பவர்கள் , நம்முடைய குறைகளை காது குடுத்துக் கேட்பவர்கள், நமக்கு ஆறுதல் கூறுபவர்கள் எல்லோரும் அந்தந்த சமயங்களில் அழகாக தெரிகிறார்கள். இது சுயநலமாகப் படலாம். ஆனால் சற்று யோசித்து பாருங்கள். பெற்ற தாய்க்கு தனக்குப் பிறந்ததெல்லாம் அழகு தான். அவளால் அவைல்களை வேறு படுத்த முடியாது. எல்லாவற்றிலும் தன்னழகு சேர்ந்திருப்பதாக அவள் நினைக்கிறாள். அவள் மனம் அப்படி. பிள்ளைகள் வயதான காலத்திலும் தங்களது தாயின் அழகை கண்டு சந்தோஷமடைகின்றன. அழகுக்கு வயதில்லை. அதற்கு வரம்பில்லை. ஆனால் ஆசைக்கு தான் வரம்பு உண்டு. ஆசையும் மனதில் தான் உண்டாகிறது.
குழந்தை ஒன்று பொம்மை வேண்டும் என்று ஆசைப்பட்டால் அது நியாயப்படுத்தப்படுகிறது. இளமையில் பெண்ணையும் திருமணத்தையும் நாடினால் அதுவும் நியாயப் படுத்தப் படுகிறது. ஆனால் 20 வயது இளைஞன் விளையாட பொம்மை கேட்டால் உலகம் அவனை கேலி செய்யும். வயதான மனிதன் பெண்களை நாடி சுற்றினால் உலகம் அவனை பழிக்கும். ஆசையின் வரம்பு வயதுக்கேட்ட்றபடி மாறுபடுகிறது. ஆனால் அழகுக்கு வரம்பில்லை. அது எங்கும் இருக்கிறது. ஆசை, அழகு இரண்டுமே உண்டாவது மனதில் தான் என்றாலும் அவை வேறுபடுகின்றன.
இருந்தாலும், அழகான பொருளை அடைய ஆசையும், ஆசை காரணமாக அது மேலும் அழகாகவும் தெரிகிறது.
உற்றுப் பாருங்கள். சிறு எறும்பு நகர்வது கூட அழகாகத் தான் தெரியும். எல்லாமே அழகாக தெரிபவனுக்கு கவலைகள் குறைகின்றன. மனம் அமைதி அதிகப் படுகின்றது. தனிமை குறைகின்றது. நட்பு வலுக்கின்றது. பிறர் செய்யும் தவறில் அவர்களுக்கு பாடம் உண்டாகட்டும், நாம் உணர்ந்தது போல அவர்களும் அழகை அனுபவித்து அறியட்டும் என்ற எண்ணம் வளர்கிறது.
(நண்பர் ஒருவரின் வலை பூவில் படித்தது .பகிர்ந்து கொள்ள ஆசை )
https://koottanchoru.files.wordpress...pg?w=150&h=150
சோவை பற்றி எழுதுவதாக முதலில் ஐடியா இல்லை. கொற்கை என்பவர் நான் ராஜாஜியை பற்றி எழுதியதும் அவர் “நீ பிராமணன், பிராமணன் பற்றிதான் எழுதுவாய்” என்ற ரேஞ்சில் ஒரு கமென்ட் விட்டார். அந்த கமென்ட் கிளப்பிய கடுப்பில்தான் – “பிராமணன் பற்றி எழுதுவது கொலைக் குற்றமா?” – இதை எழுதுகிறேன்.
சோவுக்கு பல முகங்கள் உண்டு. வக்கீல் (வெற்றி அடைந்தாரா தெரியாது), நாடக ஆசிரியர், நாடக, திரைப்பட நடிகர், அரசியல் இதழியலாளர் என்று.
வக்கீலாக என்ன செய்தாரோ எனக்கு தெரியாது.
அவர் அவ்வளவு நல்ல நடிகர் அல்லர். அவர் நன்றாக நடித்ததாக எனக்கு ஒரு திரைப்படம் கூட நினைவில்லை. ஆனால் கொஞ்ச நாள் அவர்தான் டாப் காமெடியன் ஆக இருந்தார். அவரது காமெடியும் வெகு சில படங்களிலேயே சோபித்தது. (வா வாத்யாரே ஊட்டாண்டே என்ன படம்? இடம் பெற்ற பொம்மலாட்டம், தேன் மழை) அரசியல் கலந்த காமெடி சில படங்களில் நன்றாக வந்தது (துக்ளக், அன்னபூரணி)
அவரது நாடகங்களை நான் பார்த்ததை விட படித்ததுதான் அதிகம். அவரது நாடகங்களில் நல்ல கதை அமைவது கஷ்டம். உண்மையே உன் விலை என்ன, யாருக்கும் வெட்கமில்லை, துக்ளக், சாத்திரம் சொன்னதில்லை மாதிரி சில நாடகங்களில்தான் கோர்வையான கதை அமைந்திருக்கும். அவரது நாடகங்களின் ஃபார்முலா ரொம்ப சிம்பிள். ஏதாவது ஒரு பிரச்சினை – ஜாதி, விபசாரம், உண்மை vs. பண பலம், லஞ்சம் என்று ஏதாவது ஒரு விஷயம் – அதை சுற்றி நிறைய அன்றைய அரசியல் பற்றிய அடிவெட்டுகள், கெக்கே பிக்கே ஜோக்குகள் இவற்றை வைத்து ஒரு நாடகம் பின்னி விடுவார். அவரது பாணி ஏறக்குறைய எம்.ஆர். ராதா பாணி. very topical comments. எழுத ரொம்ப அலட்டிக்கொள்வதில்லை. சில சமயம் Pygmalion, Tale of Two Cities போன்ற புகழ் பெற்ற இலக்கியங்களை தழுவியும் மனம் ஒரு குரங்கு, வந்தே மாதரம் போன்ற நாடகங்களை எழுதி இருக்கிறார். சில சமயம் ப்ளாட்டே இல்லாமல் சும்மா அரசியல் கமெண்ட்டுகளை வைத்து வாஷிங்டனில் நல்லதம்பி, கூவம் நதிக் கரையினிலே, சர்க்கார் புகுந்த வீடு, என்று தணியும் இந்த சுதந்திர தாகம் போன்ற நாவல்கள் மற்றும் நாடகங்களை எழுதி இருக்கிறார்.
அவரை கிரேக்க நாடக ஆசிரியரான அரிஸ்டோஃபனசுடன் ஒப்பிடலாம். அரசியல், சமூகம் பற்றிய கமெண்ட்கள்தான் அவருடைய ஸ்பெஷாலிடி. இருவரிடமும் ஒரே ப்ராப்ளம். அந்த கால கட்டத்தில் வாசிக்காதவர்களுக்கு அவர் எதை கிண்டல் செய்கிறார் என்று புரிவது கஷ்டம். அரிஸ்டோஃபனஸ் அன்றைய கிரேக்க அரசியல்வாதியான க்ளியானை கிண்டல் செய்வதை நாம் இன்று எப்படி முழுதாக புரிந்து கொள்ள முடியும்? சோவுக்கு உதாரணமாக ஒன்று – சர்க்கார் புகுந்த வீடு என்ற நாவலில் வரும் முக்கிய பாத்திரங்களான ரகுநாத ஐயர், கந்தசாமி இருவருக்கும் மளிகைக் கடையிலும் பால்காரரிடமும் கடன் தொந்தரவு. அவர்கள் நாராயணசாமி நாயுடுவிடம் ஆலோசனை கேட்கப் போவார்கள். அவர் “பொதுவா வாங்கின கடனை திருப்பி கொடுக்கக் கூடாது என்பதுதான் நம்ம கொள்கை” என்பார். இதற்கு நீங்கள் சிரித்தீர்கள் என்றால் எண்பதுகளில் நாயுடு நடத்திய போராட்டங்கள் உங்களுக்கு நினைவிருக்கிறது என்று அர்த்தம்.
அவர் ஷேக்ஸ்பியரோ, இப்சனோ இல்லை. ஆனால் அவருடைய எழுத்துக்கள் சிரிக்க வைப்பவை. சில சமயங்களில் நாடகம் அருமையாக வந்து விழுவதும் உண்டு. சாத்திரம் சொன்னதில்லை, துக்ளக், உண்மையே உன் விலை என்ன, யாருக்கும் வெட்கமில்லை, சர்க்கார் புகுந்த வீடு, கூவம் நதிக் கரையினிலே ஆகியவை படிக்க வேண்டியவை.
அவருடைய இதழியல் பணி குறிப்பிடப்பட வேண்டிய்து. துக்ளக் நடத்த முதல் ஐந்து ஆறு வருஷங்களாவது மிகுந்த துணிச்சல் வேண்டும். கலைஞர் அவருக்கு பல நெருக்கடிகளை ஏற்படுத்தினார். நெருக்கடி நிலையின் போது அவர் ஜெயிலுக்கு போய் அடி வாங்காதது ஆச்சரியம்தான். He made Thuglaq an institution! அவருக்கு பிறகு துக்ளக் வரப்போவதில்லை என்பது வருத்தமாக இருக்கிறது.
அவருடைய அபிப்ராயங்கள் சுலபமாக மாறுவதில்லை. காமராஜின் ஆட்சி பொற்காலம், மொரார்ஜி, சந்திரசேகர் போன்றவர்கள் அப்பழுக்கில்லாதவர்கள், வி.பி. சிங் ஒரு துரோகி, பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ். ஆகியோரை செலுத்துவது தேச பக்தியே, பெண் சுதந்திரம் என்பது பம்மாத்து, நரேந்திர மோடிதான் இன்றைய இந்தியாவின் சிறந்த தலைவர், புலிகள் அயோக்கியர்கள் இந்த மாதிரி பல. அவற்றை நல்ல நகைச்சுவையுடன் வெளிப்படுத்துவார். எழுபதுகளிலிருந்து தொண்ணூறுகள் வரை அவர் நடுநிலை தவறியதில்லை. நடுநிலை என்றால் எல்லா அரசியல் நிகழ்வுகளையும் ஒரே value system வைத்து பார்த்தார். அதனால் எம்ஜிஆர், கலைஞர், இந்திரா, ஜனதா கட்சி ஒருவரையும் விட்டதில்லை. மொரார்ஜி, காமராஜ் மீது அவருக்கு பெரும் மரியாதை இருந்தது, ஆனால் அவர்களது குறைகளையும் சொல்லுவார். ஒண்ணரை பக்க நாளேடுகள் சூப்பர்!
என்றைக்கு பா.ஜ.க. ஆட்சிக்கு வரும் சாத்தியக்கூறுகள் அதிகரிக்க ஆரம்பித்தனவோ, அன்றையிலிருந்து அவர் தனது நடுநிலையை தவற விட்டுவிட்டார். அவரது கண்ணோட்டத்தில் பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தால் நல்லது. அதனால் அவர் பா.ஜ.க.வின் முக்கிய குறையான முஸ்லீம் எதிர்ப்பு என்பதற்கு ஏதாவது சப்பைக்கட்டு கட்டுவார். நரேந்திர மோடி குஜராத்தை ஊழல் அற்ற மாநிலமாக மாற்றி இருக்கிறாராம். அங்கே வளர்ச்சி அதிகமாம். அவரை சாதாரண மனிதனும் சுலபமாக பார்க்கலாமாம். இவை எல்லாம் அங்கே நடந்த படுகொலைகளை நியாயபடுத்த முடியாது. அவரே ஒரு முறை சொன்ன மாதிரி, integrity is more important in a politician than efficiency.
அதே போல்தான் ஜெவும். கலைஞர் ஆட்சிக்கு வந்தால் புலிகளுக்கு ஆதரவு மறைமுகமாக தரப்படும், அது இந்தியாவுக்கு ஆபத்து என்று அவர் உறுதியாக நம்புகிறார். கலைஞருக்கு புலிகளை விட, தமிழர்களை விட பதவி முக்கியம் என்பது அவருக்கு புரியவில்லை. அதனால் ஜெ போன்ற ஒரு மோசமான சர்வாதிகாரி மேல் அவருக்கு ஒரு ஸாஃப்ட் கார்னர் இருக்கிறது.
அவர் நல்ல அறிவாளி. அரசியலில் ஒரு தீர்க்கதரிசி என்றே சொல்லலாம். புலிகளை பற்றி எண்பதுகளில் குறை சொன்ன ஒரே பத்திரிகையாளர் அவர்தான். புலிகள் ராஜீவ்-ஜெயவர்த்தனே உடன்பாட்டை நிறைவேற விடமாட்டார்கள் என்று சரியாக கணித்தார். வி.பி. சிங்கை ஆதரிப்பது ஜனதாவுக்கு தற்கொலைக்கு சமமானது என்று அவர் கணித்தது சரியாக அமைந்தது. சரண் சிங், ராஜ் நாராயண் ஆகியோர் மொரரஜியின் முதுகில் குத்தக்கூடும் என்று சந்தேகப்பட்டார். அப்படியே ஆயிற்று.
மொத்தத்தில் அவர் ஒரு நல்ல நாடக ஆசிரியர். தமிழில் நல்ல நாடக ஆசிரியர்கள் அபூர்வம். அதனால் அவரது நாடக பங்களிப்பு மிக பெரியதாக தெரிகிறது. அவரது நகைச்சுவை அற்புதமானது. கிட்டத்தட்ட இருபத்தைந்து வருஷங்கள் அவர் அரசியல், சமூகம் பற்றி பட்டையை கிளப்பும் நடுநிலையான கமெண்ட்களை போட்டு தாக்கி இருக்கிறார். ஆனால் ஒரு பத்து பதினைந்து வருஷங்களாக அவர் பா.ஜ.க. பக்கம் சாய்ந்துவிட்டார், அதனால் எல்லார் தவறுகளையும் போட்டு கிழிக்காமல், பா.ஜ.க.வுக்கு சப்பைக்கட்டு கட்ட ஆரம்பித்துவிட்டார். தான் நினைப்பதுதான் சரி என்று பிடிவாத குணமும், குதர்க்கம் பேசும் புத்தியும் அவருடைய குறைகள்தாம். அவர் நல்ல நடிகர் இல்லை. நகைச்சுவைக்காகவும், ஒரு நாடக ஆசிரியராகவும், தைரியமான, ஆனால் கடைசி நாட்களில் ஒரு பக்கம் சாய்ந்து விட்ட இதழியலாளர்/அரசியல் விமர்சகராகவும், நினைவு கூறப்பட வேண்டியவர்.
வாசு சார்
இந்த மனம் ஒரு குரங்கு டைரக்டர் ஏ.டி.கிருஷ்ணமூர்த்தி தானே
நமது அறிவாளி டைரக்டர்
தமிழ்த்திரையுலகின் பொற்காலம் (1960 - 1969)
தமிழ்த்திரைப்படங்கள் மகத்தான் சாதனைகள் புரிந்த இந்த காலகட்டத்தில் நடிகர்திலகத்தின் சாதனை பொக்கிஷங்கள்.
-------------------------------------------------------------
வெள்ளிவிழா காவியங்கள்
1) பாவ மன்னிப்பு
2) பாசமலர்
3) திருவிளையாடல்
20 வாரங்களைக் கடந்த படங்கள்
1) படிக்காத மேதை
2) பாலும் பழமும்
3) சரஸ்வதி சபதம்
4) தில்லானா மோகனாம்பாள்
5) சிவந்த மண்
100 நாட்களுக்கு மேல் ஓடியவை...
மருத நாட்டு வீரன்
பார்த்தால் பசிதீரும்
ஆலயமணி
இருவர் உள்ளம்
அன்னை இல்லம்
கர்ணன்
பச்சை விளக்கு
கைகொடுத்த தெய்வம்
புதிய பறவை
நவராத்திரி
சாந்தி
மோட்டார் சுந்தரம் பிள்ளை
கந்தன் கருணை
இருமலர்கள்
ஊட்டிவரை உறவு
கலாட்டா கல்யாணம்
உயர்ந்த மனிதன்
தெய்வமகன்
(திருவருசெல்வர், என்தம்பி, திருடன் ஆகிய படங்கள் 100 நாட்கள் ஓடியதாக சொல்லப்பட்ட போதும் தெளிவான ஆதாரங்கள் இல்லாததால் சேர்க்கப்படவில்லை).
சென்னையில் நான்கு அரங்குகளில் 100 நாட்களுக்கு மேல் ஓடிய படங்கள்...
ஆலயமணி
கைகொடுத்த தெய்வம்
நவராத்திரி
சிவந்த மண்
------------------------------------------------------------
விருதுகளும் பரிசுகளும்
1966-ல் மத்திய அரசின் 'பத்மஸ்ரீ' விருது
1961 மத்திய அரசின் சிறந்த பிராந்திய மொழிப்படம் பாவமன்னிப்பு
1961 மத்திய அரசின் சிறப்பு சான்றிதழ் கப்பலோட்டிய தமிழன்
1968 மத்திய அரசின் சிறந்த பிராந்திய மொழிப்படம் தில்லானா மோகனாம்பாள்
1968 மாநில அரசின் சிறந்த படம் உயர்ந்த மனிதன்
1968 மாநில அரசின் இரண்டாவது சிறந்த படம் தில்லானா
1969 மாநில அரசின் சிறந்த நடிகர் விருது தெய்வமகன்
1963 சிறந்த ஒருமைப்பாட்டுப் படம் ரத்தத்திலகம் (துப்பாக்கி பரிசு)
இவைபோக சினிமா ரசிகர்சங்க விருதுகள், பிலிம்பேர் விருதுகள்.
ஐரோப்பிய நாடுகளில் படமாக்கப்பட்ட முதல் தமிழ்ப்படம் சிவந்த மண்.
இந்த காலகட்டத்தில் (60-69) வெளியான 'லேண்ட்மார்க்' படங்கள்
75-வது படம் பார்த்தால் பசிதீரும்
100-வது படம் நவராத்திரி
125-வது படம் உயர்ந்த மனிதன்
(அனைத்தும் வெற்றி)
1962-ல் இந்திய கலாசார தூதுவராக அமெரிக்க பயணம். நயாகரா நகரின் கௌரவ மேயராக தங்கச்சாவி பரிசு என்பதோடு அன்றைய மேயர் என்ற முறையில் இரண்டு தீர்மானங்களில் நடிகர்திலகத்தின் கையெழுத்து.
பொற்கால தமிழ் சினிமாவின் பொற்கால சிற்பி நடிகர்திலகம்...
கார்த்திக் சார்
நடிகர் திலகம் வெற்றி படங்கள் 1960-70 மிக அருமையான தொகுப்பு
மிக்க நன்றி கார்த்திக் சார். நல்ல தகவல்கள்.
//சென்னையில் நான்கு அரங்குகளில் 100 நாட்களுக்கு மேல் ஓடிய படங்கள்...//
தங்களுடைய இந்தப் பதிவிற்கு பொருத்தமாக 'பேசும் படம்' இதழிலிருந்து நமது திரிக்கு முதன் முதலாக
நடிப்புக் காவலரின் அழகிய வண்ணப்படம்.
http://i812.photobucket.com/albums/z...ps4e1e0444.jpg
'மனம் ஒரு குரங்கு' (1967) பாடலுக்கும் ஒளி விளக்கு(1968) 'தைரியமாக சொல் நீ மனிதன் தானா'
லக்ஷ்மி கல்யாணம் ''யாரடா மனிதன் அங்கே.. கூட்டி வா அவனை இங்கே...''
ஏதாவது தொடர்பு உண்டா சார் ?
நினைவலைகளில் இருந்து எழும் கேள்வி இது
தமிழ்த் திரைப்பட உலகம் பொற்கால ஆண்டுகள் (1968)
நன்றி. 'பேசும்படம்' (1969) ஜனவரி இதழ் 'நினைவில் நின்றவை' தகவல்கள்.
என்னுடைய நண்பர் ஒருவர் பேசும் படம் பத்திரிக்கையிலிருந்து திரட்டிய தகவல்கள். தவறுகள் இருப்பின் சுட்டிக்காட்டவும்.
(நன்றி சின்னசாமி அவர்களே!)
http://i1087.photobucket.com/albums/...20-2/IMG-9.jpg
http://i1087.photobucket.com/albums/...IMG_0001-7.jpg
http://mmimages.maalaimalar.com/Arti...b_S_secvpf.gif
வாலியின் நாடகம் ஒன்றுக்குத் தலைமை தாங்கிய எம்.ஜி.ஆர்., "சென்னைக்கு வாருங்கள். உங்கள் தமிழ், திரை உலகுக்குத் தேவை'' என்று அழைப்பு விடுத்தார். ஓவியக் கல்லூரி படிப்பை ஓராண்டுடன் முடித்துக்கொண்ட வாலி, திருச்சியில் நாடகங்கள் எழுதி மேடை ஏற்றுவதில் முழு மூச்சுடன் ஈடுபட்டார்.
ஸ்ரீரங்கம் உயர்நிலைப்பள்ளியில் இவர் நடத்திய "மிஸ்டர் சந்தோஷம்'' என்ற நாடகத்துக்கு, திரைப்பட நடிகரும், டைரக்டருமான ஜாவர் சீதாராமன் தலைமை தாங்கினார். நாடகத்தை அவர் வானளாவப் புகழ்ந்து பேசியதால், வாலி உற்சாகம் அடைந்தார்.
நாடகங்கள் எழுதியதோடு, "கலைமகள்'', "குமுதம்'' முதலான பத்திரிகைகளில் கதைகளும் எழுதினார், வாலி.
அந்தக் காலத்தில், வானொலியில் எழுத்தாளர்களின் சிறுகதைகளை படிக்கும் நிகழ்ச்சி இடம் பெற்றிருந்தது. வாலி எழுதி அனுப்பிய "வராளி வைகுண்டம்'' என்ற சிறுகதை, வானொலியால் ஏற்றுக்கொள்ளப்பட்டு ஒலிபரப்பப்பட்டது. அந்தக் கதை சிறப்பாக இருந்ததால், தொடர்ந்து கதைகள் எழுதும்படி வானொலி நிலையத்தில் உயர் அதிகாரியாகப் பணியாற்றிய எழுத்தாளரும், கவிஞருமான "துறைவன்'' உற்சாகப்படுத்தினார். அதனால், வாலி நிறைய கதைகளும், நாடகங்களும் வானொலிக்கு எழுதினார்.
வானொலியின் பொங்கல் விழா சிறப்பு நிகழ்ச்சிக்கு பாடல் எழுதினார், வாலி. அந்தப் பாடலை டி.எம்.சவுந்தரராஜன் பாடினார். "நிலவுக்கு முன்னே...'' என்று தொடங்கும் அந்தப் பாடலை டி.எம்.எஸ். வெகுவாக ரசித்தார். "சென்னைக்கு வந்து, திரைப்படத் துறையில் நுழையுங்கள். கவிஞராகப் புகழ் பெறலாம்'' என்று வாலியிடம் கூறினார், டி.எம்.எஸ்.
ரேடியோவில் நாடகங்கள் எழுதி வந்த அதே காலக்கட்டத்தில், மேடை நாடகங்களையும் வாலி தொடர்ந்து எழுதி வந்தார்.
பிற்காலத்தில் எம்.ஜி.ஆரின் மந்திரிசபையில் அமைச்சராக பதவி வகித்த திருச்சி சவுந்தரராஜன், வாலியின் நாடகத்தில் நடித்தவர்.
அம்பிகாபதி -அமராவதி காதலை வைத்து வாலி எழுதிய "கவிஞனின் காதலி'' என்ற நாடகத்தில் திருச்சி சவுந்தரராஜன் அம்பிகாபதியாகவும், புலிïர் சரோஜா அமராவதியாகவும், நடிகை சந்திரகாந்தாவின் சகோதரர் சண்முகசுந்தரம் கம்பராகவும் நடித்தனர்.
வாலி ஸ்ரீரங்கத்தில் இருந்தபோது, இந்த நாடகம் சென்னையில் நடந்தது. திருச்சி சவுந்தரராஜனின் முயற்சியால், இந்த நாடகத்துக்கு எம்.ஜி.ஆர். தலைமை தாங்கினார். மூன்று மணி நேரமும் அமர்ந்து நாடகத்தை பார்த்தார்.
முடிவில், நாடகத்தைப் பாராட்டி எம்.ஜி.ஆர். பேசும்போது, வாலியை வெகுவாக புகழ்ந்தார். "நாடகத்தை எழுதிய வாலி, ஸ்ரீரங்கத்தில் இருக்கிறாராம். அவர் எப்போது சென்னைக்கு வந்தாலும் என்னைப் பார்க்கலாம். அவருடைய தமிழ், சினிமாவுக்குத் தேவை'' என்று குறிப்பிட்டார்.
திருச்சியில் "கோமதிராணி பிக்சர்ஸ்'' என்ற சினிமா கம்பெனியை ராஜ்குமார் என்பவர் தொடங்கி, வாலியின் நாடகம் ஒன்றை படமாக்கும் முயற்சியில் இறங்கினார். அது வெற்றி பெறவில்லை.
ராஜ்குமார் மூலமாக வாலிக்கு எம்.ஏ.ராஜாராம் என்ற திரைப்பட இயக்குனர் அறிமுகமானார். அவர் அவ்வப்போது சென்னையில் இருந்து வாலிக்கு 10 ரூபாய் மணியார்டர் அனுப்புவார். ஸ்ரீரங்கத்தில் வசித்து வந்த வாலி, சென்னைக்கு ரெயிலில் சென்று, ராஜாராம் தயாரிக்கத் திட்டமிட்டிருந்த படத்துக்கு வசனம் எழுதிக் கொடுத்து விட்டு வருவார்.
அப்போது (1956) சில பாடல்களையும் வாலி எழுதினார். அவற்றை சி.என்.பாண்டுரங்கன் இசை அமைப்பில் ஏ.எம்.ராஜா, சீர்காழி கோவிந்தராஜன், சூரமங்கலம் ராஜலட்சுமி ஆகியோர் பாட, ரேவதி ஸ்டூடியோவில் ஒலிப்பதிவு செய்யப்பட்டன.
(ராஜாராம் படம் எடுக்க இயலாததால், இந்தப்பாடல்கள் அப்போது பயன்படுத்தப்படவில்லை. எனினும், பிற்காலத்தில் அவர் தயாரித்த "புரட்சி வீரன் புலித்தேவன்'' என்ற படத்தில் பயன்படுத்திக்கொண்டார்.)
1956-ம் ஆண்டு தீபாவளிக்கு மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரிப்பான "பாசவலை'' படம் வெளியாயிற்று.
அந்தப் படத்தில் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் எழுதிய "குட்டி ஆடு தப்பி வந்தா குள்ள நரிக்கு சொந்தம்; குள்ள நரி தப்பி வந்தா குறவனுக்கு சொந்தம்; தட்டுக்கெட்ட மனிதர் கண்ணில் பட்டதெல்லாம் சொந்தம்; சட்டப்படி பார்க்கப்போனா எட்டடிதான் சொந்தம்'' என்ற பாடலில், மனதைப் பறிகொடுத்தார், வாலி.
அதுபற்றி அவர் எழுதியிருப்பதாவது:-
"குணங்குடி மஸ்தானும், சித்தர் பெருமக்களும் யாத்தளித்துள்ள எத்தனையோ தத்துவப் பாடல்களை, அடியேன் அந்த நாளிலேயே அறிவேன். ஆயினும், பாசவலை படப்பாட்டில், பாமரனுக்கும் புரியுமாறு போதிக்கப்பட்டிருந்த தத்துவ வரிகள் இருக்கின்றனவே, அவை ஒரு ஞானக்கோவையை சாறு பிழிந்தெடுத்து, வெள்ளித்திரை மூலம் ஊருக்கெல்லாம் விநியோகித்தது போலிருந்தது.
இந்தப் பாடல்களை எழுதியிருந்தவர் பட்டுக்கோட்டை. அடேயப்பா! சவுக்கெடுத்து சொடுக்கி விட்டது போல என்ன சொல் வீச்சு? அசந்து போனேன். அன்றைய படவுலகுக்குப் புதிய வரவான பட்டுக்கோட்டையின் மேல், என்னையும் அறியாமலே காதலாகி கசிந்துருகிப்போனேன்.
பாசவலை படத்தை, பத்து தடவை பார்த்தேன்; பாடல்களுக்காகத்தான்!
பட்டுக்கோட்டையின் பாடல், என்னுள் பூசிக் கிடந்த சிறுகதை எழுதும் ஆசை, ஓவியம் வரையும் ஆசை, நாடகம் எழுதும் ஆசை அனைத்தையும் ஒருசேர ஒரே நாளில் கழுவி விட்டது.
பாடல்கள் எழுத வேண்டும், அதுவும் படப்பாடல்களை எழுத வேண்டும், இந்த முயற்சியையே ஒரு தவமாகப் பழகி, இதில் காரியசித்தி பெற வேண்டும் என்னும் புதியதோர் வேட்கை வேர்விட்டது.''
இவ்வாறு வாலி எழுதியுள்ளார்.
"பாசவலை'' படத்தில் எம்.கே.ராதா, ஜி.வரலட்சுமி, எம்.என்.ராஜம் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தாலும், இளம் கதாநாயகனாக நடித்தவர் வி.கோபாலகிருஷ்ணன்.
அவர் நடிப்பு வாலிக்கு மிகவும் பிடித்திருந்தது. அவரை பாராட்டி கடிதம் எழுதினார். அதற்கு கோபாலகிருஷ்ணன் பதில் எழுதினார்.
கடிதப் போக்குவரத்து, அவர்கள் இடையே நட்புறவை வளர்த்தது. இந்த நட்புறவு, வாலியின் திரை உலகப் பிரவேசத்துக்கு வழி வகுத்தது.
http://i3.ytimg.com/vi/a9e879QTiX0/mqdefault.jpghttps://i.ytimg.com/vi/bR5137Cfm2k/hqdefault.jpghttp://www.thehindu.com/multimedia/d...m_1517050e.jpg
ஹிந்து ரண்டொர் கை யின் விமர்சனம்
http://www.thehindu.com/features/cin...cle4911895.ece
M.A.V.Pictures சம்பூர்ண ராமாயணம் ,முதலாளி போன்ற திரை படங்கள் எடுத்த M .A .வேணு அவர்களின் படம்
துளசி மாடம் 1963
திரை இசை திலகம் மாமா இசை
ஏவிஎம் ராஜன் V .கோபாலகிருஷ்ணன் சந்திரகாந்தா, (இரட்டை வேடம் )
ஒரு சந்திரகாந்தா(ஏவிஎம் ராஜன்) காசநோய் வந்து அவர் மாமியாரால் வீட்டை விட்டு துரத்தபடுவார்.இன்னொரு சந்திரகாந்தா அங்கு வந்து காச நோய் சந்திர காந்தா இங்கு வந்து வளைந்து நெளிந்து செல்லும் கதை
பாடகர் திலகத்தின் தங்க குரல்
1.'ஆடும் மயிலே ஆட்டம் எங்கே பாடும் குயிலே பாட்டு எங்கே
பேசும் கிளியே பேச்சு எங்கே பெண்ணே உனது '
http://www.youtube.com/watch?v=4ps_iwVoWMc
2.'சித்திரை மாத நிலவினிலே
தென்றல் வீசும் இரவினிலே
உத்தமி ஒருத்தி விழித்திருந்தாள்
அவள் உறவுக்கு ஒருவன் காத்திருந்தான் '
http://www.youtube.com/watch?v=bR5137Cfm2k
3.ஜானகியின் குரல் மாமாவின் அருமையான மெலடி
'கல்யாண சாப்பாடு போதும் என் கையாலே சாப்பாடு போடட்டுமா '
4.மீண்டும் ஜானகி 'அம்மாடியோ அத்தானுக்கு'
5.சூலமங்கலம் ஜானகி குரல்களில்
மையை தொட்டு எழுதியவர்
என் மனதை தொட்டு எழுதிவிட்டார் .
http://www.inbaminge.com/t/t/Thulasi%20Maadam/
அருமையான இசை,பாடல்கள்,நடிப்பு சுடர்,கோபாலகிருஷ்ணன்,சந்திரகாந்தா போன்ற பண்பட்ட நடிகர்கள் இருந்தும் இருந்தும் தோல்வியை தழுவிய படம் துளசி மாடம்