நன்றி திரு.லோகநாதன் சார். தலைவர் வெறும் நடிகர் மட்டுமே அல்ல. அதையெல்லாம் தாண்டிய மனிதப் புனிதர் என்பதற்கு இந்தத் தகவல்களே சாட்சி. நன்றி.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
Printable View
மனிதாபிமானத்தின் "மகாத்மா" எம்.ஜி.ஆர்.
மாற்றம் செய்த நாள் : செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 23, 9:58 PM IST பதிவு செய்த நாள் : திங்கட்கிழமை, டிசம்பர் 23, 7:50 PM IST கருத்துக்கள்9வாசிக்கப்பட்டது896 Share/Bookmark printபிரதி
மனிதாபிமானத்தின் "மகாத்மா" எம்.ஜி.ஆர்.
எம்.ஜி.ஆரின் 26வது நினைவு நாள் அனுசரிக்கப்படும் நிலையில் அவரின் நினைவுகளை நாம் கொஞ்சம் பகிர்ந்து கொள்வோம்.
1917 ஆம் ஆண்டு ஜனவரி 17 ஆம் ஆண்டு இப்பூவுலகில் பிறந்த எம்.ஜி.ஆர் தனது தாய் சத்யபாமா மீது அளவற்ற அன்பு கொண்டவர். தனது தந்தையின் மரணத்திற்கு பின் மதுரையில் உள்ள நாடக கம்பெனி ஒன்றில் நாடக நடிகராக கலைத்துறையுடன் தன்னை இணைத்துக் கொண்டார்.
நாடகங்களில் நடித்து வந்த அவர், 1936 ஆம் ஆண்டு சதிலீலாவதி என்ற திரைப்படத்தின் மூலம் வெள்ளித்திரையில் அறிமுகமானார். பல தரப்பட்ட பாத்திரங்களில் நடித்த அவர் சினிமாவில் தனக்கெனி தனி பாணியை வகுத்துக்கொண்டார்.
மக்கள் திலகத்தின் திரைத்துறை வெற்றிக்கு பிரபல தயாரிப்பாளர் தேவர் பிலிம்ஸ் சாண்டோ சின்னப்ப தேவரும் வசனர்த்தா ஆரூர்தாசும் முக்கிய காரணம் ஆவார்கள். அவரது உடன் பிறந்த சகோதரர் எம்.ஜி சக்கரபாணி என்றாலும், தேவர் அவர்களுக்கு உடன் பிறவா சகோதரர் என்ற அந்தஸ்தை கொடுத்திருந்தார் என்று கூறிப்படுகிறது.
குண்டடிபட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது தேவரண்ணன் வந்தால் மட்டும் உள்ளே அனுப்புங்கள் என்று எம்.ஜி.ஆர் கூறியதாக அண்ணன் ஆரூர்தாஸ் அவர்கள் தனது தினத்தந்தி கட்டுரையில் கூறியிருப்பதன் மூலம் தேவரின் மீது எம்.ஜி.ஆர் விலை உயர்ந்த பற்று கொண்டிருந்தார் என்பது தெளிவாகிறது.
சக கலைஞர்கள் நலனிலும் மக்கள் திலகம் பெருமளவு அக்கறை கொண்டிருந்தார் என்பதற்கு ஆரூர்தாஸ் அவர்களே முக்கிய சாட்சி. எம்.ஜி.ஆர் நடித்துக் கொண்டிருந்த படப்பிடிப்பின் இடைவேளையின் போது அவருக்கருகே உட்கார்ந்திருந்த ஆரூர்தாஸ், பெருமளவு வேலைப்பளு காரணமாக, அப்படியே எம்.ஜி.ஆரின் மடியில் சாய்ந்து உறங்கிய போது அவர் கண்விழிக்கும் வரை அவரை எழுப்பாமல் அன்போடு பார்த்துக்கொண்டது அவரின் உயர்வான குணத்தை காட்டுகிறது.
நாடக குழுவிலிருந்து திரைத்துறைக்கு வந்த பின் அவருக்கு தொடர்ந்து வெற்றி கிடைத்துக்கொண்டேயிருந்தது. இந்நிலையில் அண்ணாவின் எழுத்தால் கவரப்பட்ட மக்கள் திலகம் அவர்கள் திராவிட முன்னேற்ற கட்சியில் இணைந்தார்.
அண்ணாவின் மறைவிற்கு பின் திராவிட முன்னேற்ற கழகத்திலிருந்து வெளியேற்றப்பட்ட பின் 1972 ஆம் ஆண்டு அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தை துவக்கினார். கட்சி ஆரம்பித்த குறுகிய காலத்தில் 1973 ஆம் ஆண்டு நடந்த திண்டுக்கல் பாராளுமன்ற இடைத்தேர்தலில் மாயத்தேவரை நிற்க வைத்து வெற்றி பெற வைத்து அரசியலில் தனது சாதனை ஓட்டத்தை துவக்கினார்.
1977 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் 200 இடங்களில் போட்டியிட்ட அ.தி.மு.க 130 தொகுதிகளில் அமோக வெற்றி பெற்றது. அருப்புக்கோட்டை தொகுதியில் போட்டியிட்ட புரட்சித் தலைவர் அவர்கள் 43065 வாக்குகள் பெற்று அமோக வெற்றியடைந்தார்.
இத்தேர்தலில் கிட்டத்தட்ட 52 லட்சம் வாக்குகளை அ.தி.மு.க அறுவடை செய்தது அரசியல் வரலாற்றின் மிகப்பெரிய சாதனை. அக்கட்சியை சேர்ந்த ஆனூர் ஜெகதீசன், பண்ருட்டி ராமச்சந்திரன், எஸ்.செம்மலை, பி.தனபால், சி. பொன்னையன், கே. ஏ. செங்கோட்டையன் மற்றும் கா.காளிமுத்து ஆகியோர் தேர்தலில் மிகப்பெரிய வெற்றியை ஈட்டினர்.
1980ல் நடந்த பாராளுமன்ற தேர்தலில் திமுக-காங்கிரஸ் கூட்டணி அதிமுக-ஜனதா கூட்டணியை வீழ்த்தி மிகப்பெரிய வெற்றிபெற்றதையடுத்து புரட்சித்தலைவரின் ஆட்சி கலைக்கப்பட்டது. ஆனால் ஆட்சியை கலைத்த பின் நடந்த தேர்தலில் முன்னை காட்டிலும் அதிக வெற்றியை எம்.ஜி.ஆர் பெற்றார். அப்போது 177 இடங்களில் போட்டியிட்ட அதிமுக 129 இடங்களில் அமோக வெற்றி பெற்று சாதனை படைத்தது. இத்தேர்தலில் மதுரை மேற்கு தொகுதியில் போட்டியிட்ட எம்.ஜி.ஆர் அவர்கள் 21066 வாக்குகள் வித்தியாசத்தில் திமுகவின் பொன்.முத்துராமலிங்கத்தை தோற்கடித்தார்.
தமிழக அரசியல் வரலாற்றில் காமராஜருக்கு பிறகு தொடர்ந்து 2வது முறையாக முதலமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்ட பெருமை எம்.ஜி.ஆருக்கு உண்டு.
1983 ஆம் ஆண்டு அதிமுக அரசியல் வரலாற்றில் முக்கிய நிகழ்வாக ஜெயலலிதா அவர்கள் அக்கட்சியின் கொள்கை பரப்பு செயலாளராக நியமிக்கப்பட்டார். பின்னர் 1984 ஆம் ஆண்டு நடந்த சட்டப்பேரவை தேர்தலில் எம்.ஜி.ஆர் நோய்வாய்ப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது ஜெயலலிதாவின் தீவிர பிரச்சாரத்தால் அதிமுக அமோக வெற்றி பெற்றது.
இத்தேர்தலில் ஆண்டிப்பட்டி தொகுதியில் போட்டியிட்ட எம்.ஜி.ஆர்., 60510 வாக்குகள் பெற்று அமோக வெற்றி பெற்றார். தொடர்ந்து 3வது முறையாக முதலமைச்சரான பெருமை புரட்சித்தலைவருக்கு கிடைத்தது.
தன்னுடைய ஆட்சிக்காலத்தில் அடித்தட்டு மக்களின் வாழ்க்கை முன்னேற்றுவதற்கு பல நல்ல திட்டங்களை கொண்டு வந்தார். குறிப்பாக கல்வித் துறையில் மிகப்பெரிய சீர்திருந்தங்களை கொண்டு வந்தார். 1982 ஆம் ஆண்டில் மாணவர்களுக்கு சத்துணவு திட்டத்தை அறிமுகப்படுத்தி அதை வெற்றிகரமாக நடத்திக்காட்டினார். மகளிருக்கு சிறப்பு பேருந்து திட்டத்தை அறிமுகப்படுத்தினார்.
தமிழக அரசியல் வரலாற்றில் மது விற்பனையை தடை செய்த மகத்தான தலைவர் புரட்சித்தலைவர் ஆவார். பழமையான கோவில்களுக்கு முக்கியத்துவம் தந்து அவற்றை புனரமைக்க வேண்டிய நடவடிக்கைகளை எடுத்தார். சுற்றுலாத் துறையில் தமிழகம் வளர்ச்சி அடைய நடவடிக்கை எடுத்தார்.
குறிப்பாக ஈழத்தமிழர் நலனில் உண்மையான அக்கறை கொண்டிருந்தார். பல்வேறு வகைளில் அவர்களுக்கு நிதியுதவியும், பொருளுதவியும் தந்த "வள்ளல்" அவர். 1987 ஆம் ஆண்டு டிசம்பர் 24 ந்தேதி இப்பூவுலகை விட்டு மறையும் வரை ஏழைகளின் நலனுக்கு பெரும் முக்கியத்துவம் கொடுத்த இந்த பொன்மனச் செம்மலை மனிதாபிமானத்தின் மகாத்மா என்று குறிப்பிடுவது சாலச்சிறந்தது.
COURTESY MALAIMALAR KALASUVADUGAL EDITION
நேற்று பிறந்த நாள் கொண்டாடிய இனிய நண்பர் திரு கலியபெருமாள் அவர்களுக்கு என் அன்பு வாழ்த்துக்கள் .
இன்று பிறந்த நாள் கொண்டாடும் இனிய நண்பர் திரு லோகநாதனுக்கு என் அன்பு வாழ்த்துக்கள்
நாளை பிறந்த நாள் கொண்டாடும் இனிய நண்பர் திரு சைலேஷ் அவர்களுக்கு அட்வான்ஸ் பிறந்தநாள் வாழ்த்துக்கள் ..
MAKKAL THILAGAM MGR IN MAJESTIC LOOK- EYE FEAST
http://i62.tinypic.com/30wm1si.jpg
REAL FASHION HERO
http://i60.tinypic.com/2cn9t8n.jpg
100/100 PERFECT LOOK MGR IN HIS 100TH MOVIE IN 1968 AT THE AGE OF 51.
http://i58.tinypic.com/esqog3.jpg
OH MY GOD...
http://i58.tinypic.com/vq3037.jpg
PRADEEP SIR WHAT HAPPENED VALLALIN VARALARU ?
https://www.youtube.com/watch?v=8mGCb1kPrto
மக்கள் திலகம் எம்ஜிஆர் திரியின் நண்பர்கள் திரு கலிய பெருமாள் [ 27.1.2015] திரு லோகநாதன் [28.1.2015]
திரு சைலேஷ் [ 29.1.2015] பிறந்தநாளுக்கு என்னுடைய இதயங்கனிந்த நல் வாழ்த்துக்கள் .
இனிய நண்பர் திரு ராமமூர்த்தியின் ஆரணி நகர ''மக்கள் திலகம் எம்ஜிஆர் பிறந்த நாள் '' நிழற்படங்கள் எல்லாமே படு சூப்பர். இன்று கலக்கபோகும் குடியாத்தம் விழா படங்களை காண ஆவலாக உள்ளேன் .
மக்கள் திலகத்தின் அட்டகாசமான ஸ்டைல் படங்கள் போட்டு அசத்திய இனிய நண்பர் திரு சி.எஸ். குமார் அவர்களுக்கு நன்றி .
http://s27.postimg.org/h2a7veswj/scan0016.jpg
DINAMALAR - COIMBATORE
BOLLYWOOD SUPERSTAR AMITAB WISHED THALAIVAR BIRTHDAY
மும்பை - 16-Jan-2015
கூலி (1982) இந்தி படப்பிடிப்பில் ஏற்பட்ட விபத்திலிருந்து உயிர் மீண்டு குணமாகிய வந்த பின் தமிழக முதல்வர் எம்.ஜி.ஆர் நான் பழையபடி எழுதுவர பிரார்த்தனையும், செய்த உதவியும் என்னால் மறக்க முடியாது. தயாரிப்பாளர்/இயக்குனர் ராமநாதன் மூலம் எம்.ஜி.ஆரை சந்திக்கவும் அவரோட பேசவும் கிடைத்த அந்த சந்தர்ப்பம் என்றென்றும் நினைவில் நிற்கும். எம்.ஜி.ஆர் என்னோடு பழகிய விதம் அபாரமானது. 16.1.2015 அன்று பிற்பகல் 2 மணிக்கு அமிதாப் தனது பேஸ்புக்கில் எம்.ஜி.ஆர் 98வது பிறந்தநாளையொட்டி வெளியிட்ட செய்தி...
English Summary
A historic moment for me .. after my recovery from my accident in 1982 in the film 'Coolie", I paid a visit to the great MGR, the thespian and legendary actor from Tamilnadu and Chief Minister .. his blessings had remained with me .. and his prayers for my recovery .. this was at his modest residence in Chennai .. with me is my Director and dear friend S Ramanathan, who made 'Bombay to Goa', 'Mahaan', 'Giraftaar' films with me and remained a close family member almost till his demise ..
VALASARAVAKKAM
http://i60.tinypic.com/2ro54bt.jpg
VIRUGAMBAKKAM
http://i60.tinypic.com/9le7pe.jpg
25.01.2015 அன்று அன்பு நண்பர் கடலூர் செல்வநாதன் இல்லத்திற்கு அவரின் அன்பான அழைப்பை ஏற்று எனது குடும்பத்தாருடன் சென்றிருந்தேன். கடலூர் வண்ணாரப்பாளையம் பகுதியில் உள்ளது அவரது இல்லம். இல்லத்தின் உள்ளே திரும்பிய இடமெல்லாம் மக்கள் திலகத்தின் படங்கள். அவரும் அவரின் இல்லத்தரசியும் மகிழ்ச்சிபொங்க எங்களை வரவேற்றனர்.
அவரின் குடும்பத்தில் உள்ளவர்களின் விபரம்.
செல்வநாதன் - மக்கள் திலகத்தின் பக்தர்
செல்வகுமாரி - இல்லத்தரசி
செல்வகண்ணன் - மகன் - 24.12.2009 தலைவர் பிறந்த நாள் அன்று பிறந்தவர்.
செல்வ நிரஞ்சனா - வயது 2-1/2 - மக்கள் திலகத்தின் ரசிகை.
குழந்தைகள் இருவரும் மக்கள் திலகத்தின் பிறந்த நாளில் நம் இதய தெய்வத்தை வணங்கும் புகைப்படத்தை இங்கு பதிவிட்டுள்ளேன்.
செல்வநாதன் அவர்களும் அவரின் குடும்பத்தாரும் மக்கள் திலகத்தின் ஆசியோடு வளமுடன்
வாழ வாழ்த்துவோம்.
அன்புடன்
எஸ். ரவிச்சந்திரன்
-----------------------------------------------------------------------
நல்லவர் லட்சியம் வெல்வது நிச்சயம்
மக்கள் திலகத்தின் வழி நடப்போம்
-----------------------------------------------------------------------
http://s22.postimg.org/ifr5k4og1/scan0017.jpg
அன்பில் வாழும் இதயம் தன்னை
தெய்வம் கண்டால் வணங்கும்
எங்கே சொல்லு
வணங்கும்
அன்பில் வாழும் இதயம் தன்னை
தெய்வம் கண்டால் வணங்கும்
ஆசை இல்லா மனிதர் தன்னை
துன்பம் எங்கே நெருங்கும்
பொன்னில் இன்பம் புகழில் இன்பம்
என்றே நெஞ்சம் மயங்கும்
பூவைப் போலே சிரிக்கும் உன்னைக்
கண்டால் உண்மை விளங்கும்
சிரித்து வாழ வேண்டும்
பிறர் சிரிக்க வாழ்ந்திடாதே
முள்ளில் ரோஜா மலர்ந்ததாலே
முள்ளுக்கு என்ன பெருமை
சிப்பிக்குள்ளே பிறந்ததாலே முத்துக்கு என்ன சிறுமை
எங்கே நன்மை இருந்த போதும்
ஏற்றுக் கொள்ளும் உலகம்
அங்கே வந்து தழுவிக் கொண்டு
போற்றும் நல்ல இதயம்
சிரித்து வாழ வேண்டும்
பிறர் சிரிக்க வாழ்ந்திடாதே
சிக்கு மங்கு சிக்கு மங்கு செச்ச பாப்பா
சிக்கு மங்கு சிக்கு மங்கு செச்ச பாப்பா
வானில் நீந்தும் நிலவில் நாளை
பள்ளிக் கூடம் நடக்கும்
பள்ளிக் கூடம் நடக்கும்
காற்றில் ஏறி பயணம் செய்ய
பாதை அங்கே இருக்கும்
பாதை அங்கே இருக்கும்
எங்கும் வாழும் மழலைச் செல்வம்
ஒன்றாய் சேர்ந்து படிக்கும்
இல்லை ஜாதி மதமும் இல்லை
என்றே பாடிச் சிரிக்கும்
PRASAD STUDIO
http://i58.tinypic.com/nffiio.jpg
PRASAD STUDIO
http://i61.tinypic.com/9a8n4w.jpg
PRASAD STUDIO
http://i60.tinypic.com/21o64c4.jpg
PRASAD STUDIO
http://i62.tinypic.com/11ljvq0.jpg
wish u happy birthday sailesh basu sir
ஆங்கிலேயர் ஆட்சியின் கடைசி சில ஆண்டுகள்.. கோவை மாவட்டத்தில் கல்வியின் அவசியம் புரியாத காசிகவுண்டன் புதூர் என்ற எளிய கிராமத்தில் பிறந்தேன் .
பத்து மாதக் குழந்தையாக இருக்கையில் அப்பா மரணம்.
அடுத்த 4 ஆண்டில் கல்லூரி செல்ல வேண்டிய 16 வயது
அண்ணன் பிளேக்கில் போய்விட்டான்...பஞ்சம் தலைவிரித்தாடிய காலம்...இரண்டு பேர் படிப்புச்
செலவைச் சமாளிக்க முடியாமல் 3-ம் வகுப்புடன் அக்கா நிறுத்தம்.
பள்ளி இறுதிக்குப்பின் சென்னையில் ஓவியக்கலை
பயில ஒன்றுவிட்ட மாமா கல்விக்கடன் வழங்கினார்.
100-வது படம் வெளியானபோது மாணவர் சமுதாயத்துக்கு சிறு துளியாவது உதவ எண்ணி தாயார் ஆசியுடன் அன்றைய முதல்வர் எம்.ஜி.ஆர். அவர்கள் தலைமையில் சிவகுமார் கல்வி அறக்கட்டளை
துவக்கினேன்.
ரூ. 25,000/- வங்கி வைப்பு நிதிக்கு ரூ.2,250/- ஆண்டு வட்டி.
ரூ.1000/- 750/- 500/- எனப் பிரித்து +2 தேர்வில் முதல் நிலை பெற்ற 3-மாணவர்களுக்கு பரிசு வழங்கினோம்.
படிப்படியாக பரிசுத் தொகையை உயர்த்தி 25-ம் ஆண்டு நானே ரூ.50,000/- பரிசு வழங்கினேன்.
இப்போது பிள்ளைகள் பொறுப்பேற்று ஆண்டுதோறும் 5 லட்சத்து 50 ஆயிரம் கடந்த 10 ஆண்டுகளாக பரிசளிக்கிறார்கள்.
1980-ம் ஆண்டு முதன் முதல் பரிசு பெற்ற மாணவர்கள் இப் படத்தில் இருக்கிறார்கள்
குடியரசு தின சிறப்பு நிகழ்ச்சியாக (26.1.15) விஜய் டி.வி.யில் மீண்டும் 'மன்னாதி மன்னன் எம்.ஜி.ஆர்' நிகழ்ச்சி ஒளிப்பரப்பாகியது. நடிகர் சரத்குமார், இயக்குனர் பி.வாசு, எம்.ஜி.ஆர் நினைவு இல்லம் புதிதாக சேர்க்கப்பட்டு, என்னை முன்னதாகக் காட்டி முடித்தனர். 16.1.15 அன்று ஒளிபரப்பாகியது youtubeல் இது வரை (10 நாட்களில்) 50099 பேர் பார்த்துள்ளனர்.( STATUS FOR TODAY 2100 HRS)
முந்திய தொகுப்பு: https://www.youtube.com/watch?v=w-BK5MMO9oA
புதிய தொகுப்பு விஜய் டி.வியின் youtubeல் இடம்பெறலாம்
சாதனை மன்னன்
பெளராணிகர்கள் கூறுவார்கள். எங்கெல்லாம் ராம நாமம் ஒலிக்கிறதோ அங்கெல்லாம் பக்தியுடன் கண்ணீர் பெருக்கெடுக்க அனுமார் இருப்பார் என்று கூறுவார்கள். அதுபோல, இந்த ‘ராமச்சந்திரன்’ பெயரைக் கேட்டால் தமிழகமே நன்றிக் கண்ணீரை காணிக்கையாக்கி பக்தியோடு மயங்கிக் கிடக்கிறது என்பதற்கு சமீபத்திய உதாரணம் விஜய் டி.வி. நிகழ்ச்சி.
மன்னாதி மன்னன்...... ‘சாதனை மன்னன்’.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
முழுக்க முழுக்க உண்மைதான் திரு. கலைவேந்தன் அவர்களே ! கோடானு கோடி வார்த்தைகளில் ஒன்று. தங்களின் உவமை போற்றத்தக்கது, பாராட்டத்தக்கது.
ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் !
அன்பன் : சௌ. செல்வகுமார்
என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்
http://www.youtube.com/watch?v=Rb7azbUG1Po
[SIZE=4]குடியரசு தினத்தன்று புதுமனை புகுவிழா கண்டு சிறப்புடன்
இனிய நண்பர் திரு. கலியபெருமாள் அவர்கள் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். நல்லாசியுடன் எல்லா வளமும், நலமும் பெற்று வாழ்க என அன்புடன்
வாழ்த்துகிறேன் .[/SIZE
http://i62.tinypic.com/2l95ie0.jpg
ஆர். லோகநாதன்.
நேற்று பிறந்த நாளை சிறப்பாக கொண்டாடிய திரு. கலியபெருமாள்
அவர்கள் இன்று போல் என்றும் வாழ்க.
இன்று பிறந்தநாள் கொண்டாடிய எனக்கு வாழ்த்துக்கள் நமது திரி மூலமும்
தொலைபேசி /அலைபேசி மற்றும் நேரிலும் கூறிய அன்பர்களுக்கு
எனது நெஞ்சார்ந்த நன்றி.
நாளை பிறந்த நாள் காண உள்ள இனிய நண்பர் திரு. சைலேஷ் பாசு
அவர்கள் அனைத்து சிறப்புக்களுடன் பல்லாண்டு வாழ்க.
தாங்கள் அனுப்பிய பிறந்த நாள் வாழ்த்து செய்தி அறிந்து மிக்க மகிழ்ச்சி.
நன்றி.
http://i62.tinypic.com/25i56y9.jpg
ஆர். லோகநாதன்.
http://s9.postimg.org/lzeh1zurz/DSC00946.jpg
PONDICHERRY
http://s8.postimg.org/i5tdmsmpx/DSC00947.jpg
PONDICHERRY
http://s27.postimg.org/y0nzcrgsz/DSC00949.jpg
PONDICHERRY
http://s15.postimg.org/7gg3qbpor/DSC00948.jpg
PONDICHERRY
AIYAPPANTHAANGAL
http://i62.tinypic.com/xq9pog.jpg
AIYAPPANTHAANGAL BUS STATION
http://i58.tinypic.com/55ff4.jpg
AIYAPPANTHAANGAL
http://i57.tinypic.com/2wox5ef.jpg
NEAR PORUR LAKE
http://i57.tinypic.com/1z54qwm.jpg