-
27th January 2015, 05:03 PM
#11
Junior Member
Seasoned Hubber

Originally Posted by
MGR RAJKUMAR
சாதனை மன்னன்
விஜய் டி.வி.யில் தலைவரைப் பற்றிய மன்னாதி மன்னன் நிகழ்ச்சி நேற்று மீண்டும் ஒளிபரப்பானது. ரசிகர்களின் வேண்டுகோளுக்கிணங்க என்ற அறிவிப்புடன். இதோடு இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பானது 3வது முறை.
தலைவர் பிறந்த நாளை முன்னிட்டு கடந்த 16ம் தேதி முதலில் ஒளிபரப்பானது. அதுவும் பொங்கல் விழா நாட்களில். நேற்று 11வது நாளில் 3வது முறையாக ஒளிபரப்பியுள்ளனர். அதுவும் குடியரசு தின நாளில். 11 நாளில் ஒரு நிகழ்ச்சி 3வது முறையாக ஒளிபரப்பாவது விஜய் டி.வி.யில் இதுவே முதல் முறை. இதிலும் புதிய சாதனை படைத்து விட்டார் தலைவர்.
அதிலும், நிகழ்ச்சி எந்த அளவுக்கு ரீச் ஆகியிருந்தால் 3வது முறையாக அதுவும் குடியரசு நாளில் ஒளிபரப்புவார்கள்? அதோடு, புதிய காட்சிகளையும் இணைத்திருந்தார்கள். சகோதரர்கள் திரு.செல்வகுமார், திரு.லோகநாதன், திரு.ராஜ்குமார் ஆகியோர் தோன்றும் காட்சியை ஆரம்பத்தில் காட்டினர். இறைவன் எம்.ஜி.ஆர். பக்தர்கள் குழு, அனைத்துலக எம்.ஜி.ஆர். பொதுநலச் சங்கம், மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். மன்றம் சார்பில் சென்னையில் ஒட்டப்பட்டிருந்த சுவரொட்டியையும் காட்டினா்.
இந்த சுவரொட்டியை காட்டி எம்.ஜி.ஆர்.ரசிகர்களும் அவரைப் போலவே நன்றி பாராட்டும் குணம் கொண்டவர்கள் என்பது புரிந்தது என்று கூறினார்கள். இதை விட நமக்கு என்ன பெருமை வேண்டும்? மேலும்,திரு.சரத்குமார், திரு.பி.வாசு, திருமதி. திவ்ய தர்ஷினி ஆகியோரின் பேட்டிகளோடு, புரட்சித் தலைவர் நினைவு இல்லம் மற்றும் சில ஸ்டில்களை புதிதாக காட்டினர்.
நண்பர்கள் இன்னொன்றையும் கவனித்திருக்கலாம். புதிய காட்சிகள் மட்டுமல்ல, முதல் முறை ஒளிபரப்பானபோது இல்லாத (இடம் பெறாத புதிய) விளம்பரங்கள் இம்முறை இடையிடையே இடம் பெற்றன. அந்த அளவுக்கு வர்த்தக ரீதியாகவும் நிகழ்ச்சி வெற்றி பெற்றிருக்கிறது. கோடிக்கணக்கானோர் நிகழ்ச்சியை பார்ப்பார்கள் என்ற நம்பிக்கையில்தான் விளம்பரமே வருகிறது. யூ டியூப்பிலும் இதுவரை 47,000க்கும் அதிகமானோர் நிகழ்ச்சியை பார்த்துள்ளனர், 11 நாட்களில். மொத்தத்தில் எல்லாருக்கும் மனநிறைவையும் திருப்தியையும் அளித்த நிகழ்ச்சி. விஜய் டி.வி.க்கும் நிகழ்ச்சியை நடத்திய திரு.கோபிநாத் அவர்களுக்கும் நன்றி.
இந்த நிகழ்ச்சியை பகுதிகளாக பிரித்து எழுதுவேன் என்று கூறியிருந்தேன். அதன்படி 5 பகுதிகள் எழுதியிருக்கிறேன். மேலும் 5 பகுதிகளாக பிரித்து எழுத இருக்கிறேன்.
பெளராணிகர்கள் கூறுவார்கள். எங்கெல்லாம் ராம நாமம் ஒலிக்கிறதோ அங்கெல்லாம் பக்தியுடன் கண்ணீர் பெருக்கெடுக்க அனுமார் இருப்பார் என்று கூறுவார்கள். அதுபோல, இந்த ராமச்சந்திரன் பெயரைக் கேட்டால் தமிழகமே நன்றிக் கண்ணீரை காணிக்கையாக்கி பக்தியோடு மயங்கிக் கிடக்கிறது என்பதற்கு சமீபத்திய உதாரணம் விஜய் டி.வி. நிகழ்ச்சி.
மன்னாதி மன்னன்...... சாதனை மன்னன்.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
-
27th January 2015 05:03 PM
# ADS
Circuit advertisement
Bookmarks