I think so krishna sir.
Printable View
துளசி மாடம் பதிவுகள் நன்று கிருஷ்ணா சார். இப்படத்தின் பாடல்கள் பார்த்திருக்கிறேன் பலமுறை. ஆனால் படம் பார்த்ததில்லை இதுவரை . ஆம்பிள்ளை போல, அவர் அண்ணன் போலவே இருக்கும் சந்திரகாந்தாவைப் பிடிக்காது. (அத்தான் கடிதம் நல்ல முத்து முத்து தவிர)
அதே போல் ஆடும் மயிலே ஆட்டமெங்கே பாடல் எனக்கு அறவே பிடிப்பதில்லை. ஏன் என்று தெரியாது. ஆனால் மையைத் தொட்டு எழுதியவர் கிளாஸ். ரொம்பப் பிடிக்கும்..
Mr Vasudevan Sir,
Thanks a lot for the Pesum Padam pose of Our NT as well as
the photos from Kathavarayan.
Advance congratulation for your 5000 posts and awaiting your memorable
post from you about NT.
Regards
ஜஸ்ட் ரிலாக்ஸ்.
http://3752ph102dgl405f3e3yvdrpili.w...ust-Relax..jpg
இயக்குனர் வரிசை சி.வி.ராஜேந்திரன்.
http://www.thehindu.com/multimedia/d...01_593941e.jpg
http://i.ytimg.com/vi/8F4SebZj0pk/maxresdefault.jpg
படம்: கலாட்டா கல்யாணம்
இசை: மன்னர்
நடனம்: தங்கப்பன் மாஸ்டர்
ஒளிப்பதிவு டைரெக்டர்: பி.என்.சுந்தரம்
பாடல்: 'உறவினில் 50 50... உதட்டினில் 50 50'
http://i.ytimg.com/vi/23vREAmmbgs/hqdefault.jpg
ரொம்ப அழகான பாடல் ஒன்று சி.வி.ராஜேந்திரன் இயக்கிய 'கலாட்டா கல்யாணம்' திரைப்படத்திலிருந்து.
இந்தப் பாடலை இயக்கிய விதத்திலும் தன்னுடைய முத்திரையை, வித்தியாசத்தை உணர்த்தியிருப்பார் ராஜேந்திரன்.
நடிகர் திலகம் நாயகனாக இருந்தாலும் இப்பாடல் எ.வி.எம். ராஜனுக்கும், துணை நடன நடிகை ராஜேஸ்வரிக்கும் கொடுக்கப்பட்டிருக்கும்.
காதலிக்கும் ஜோதிலஷ்மியை விட்டு விட்டு ராஜேஸ்வரி மோகத்தில் மூழ்கிக் கிடக்கும் ராஜன் அவருடன் இணைந்து பாடும் காட்சி.
இந்த ராஜேஸ்வரி என்ற நடிகை சுமார் ரகம்தான். சற்றே நீண்ட முகம். பார்க்க சுமார்தான். ஆனால் ஆட்டம் படு ஜோர். நல்ல உயரமும் கூட. குட்டைப் பாவாடை கவுனுடன் அருமையான கஷ்டமான ஸ்டெப்களை ஆடியிருப்பார். முகபாவங்களிலும் தேறி விடுவார். ராஜனும் பயபக்தியுடன் நடிகர் திலகத்தை மனதில் நினைத்துக் கொண்டே அவரைப் போலவே டிரெஸ் அணிந்து, அவரைப் போலவே செய்ய முயற்சிப்பார் வழக்கம் போல. இந்தப் பாடலில் 'கியூட்'டாகவே இருப்பார்.
இப்பாடலில் டாப் ஆங்கிளிலிளிருந்து சில ஷாட்களை அற்புதமாகப் படமாக்கியிருப்பார்கள். காமெரா மாடி மேலிருந்தே அழகாக சுழலும்.
மிக அழகான ஷாட்கள். குண்டு பலப் உள்ளே எரிய வெளியில் இருக்கும் லேம்ப் ஷேடோவுக்கு மேல்புறம் ராஜனின் முகம் சைட் குளோஸ்-அப் பிலும், லேம்பிற்கும், ஷேடோவிற்கும் இடைப்பட்ட இடைவெளியில் ராஜேஸ்வரியின் முகமும் தெரிவது போல அசத்தலான காட்சி ஒரு சில வினாடிகளில் நாம் பார்ப்பதற்கு முன்னேயே கடந்து போய் விடும்
அதை இங்கு ஸ்டில்லாக அளித்திருக்கிறேன்.
http://i1087.photobucket.com/albums/..._003925615.jpg
'கன்னம் தனி
இவளுடைய கன்னம் கனி
சின்னக் கிளி
இனிய மொழி என்றும் ஹனி'
http://i2.ytimg.com/vi/Zrd3AaQ0mYU/hqdefault.jpg
ராஜன் கையில் வைத்திருக்கும் சிறு சிறு வட்ட வடிவ கண்ணாடித் துண்டுகள் பதித்த அட்டையை நம் பக்கம் திருப்பும் போது ராஜேஸ்வரியின் பல முகங்கள் அதில் பிம்பங்களாய் தெரிவது ராஜேந்திரனின் திறமையான காமிரா கோண ரசனைக்கான அத்தாட்சி காட்சி. குருவை மிஞ்சின சிஷ்யனாகி விடுவார். இந்தக் காட்சியை பதட்டமில்லாமல் சில வினாடிகள் நீட்டித்திருப்பார் ராஜேந்திரன். அதனால் நிதானமாக பார்த்து நாம் என்ஜாய் செய்யலாம். ராஜேஸ்வரியின் கால்கள் வலதும் இடதுமாக (அதுவும் மிக அகலமாக கால்களை விரித்து வைத்து) மாறி மாறி ஆடுவது நடன இயக்குனர் தங்கப்பனின் பெண்டு நிமிர்த்தும் பணி.
இரண்டாவது சரணத்தில் அந்த ஷெனாயின் தேவாமிர்த இன்னிசையின் போது மறுபடியும் காமெரா டாப் ஆங்கிளில் பயணிக்கும். கீழே ராஜேஸ்வரி குட்டைப் பாவாடையை சுழற்றியபடி ஆட, மேலிருந்து காமேரக் கோணத்தின் பார்வையில் ராஜேஸ்வரி ஆடுவது குடை ராட்டினம் சுற்றுவது போல் இருக்கும். அதுவல்லாமல் ஒரே கோணத்தில் இல்லாமல் காமிராவை சாய்த்து வேறு காட்சியை சாய்வாக எடுத்திருப்பார்கள். பி.என்.சுந்தரம் fantastic job.
அடுத்து மோக போதையை உண்டாக்கும் வரிகள்.
'முத்துச்சரம் மடியில் விழும் பத்துத்தரம்
வெள்ளிக்குடம் சுவை அமுதை அள்ளித் தரும்'
பொல்லாத கவிஞனய்யா இந்த 'வாலு' வாலி .
இரண்டாவது வரி ஒலிக்கும்போது ராஜேஸ்வரி 'அதை' ராஜனுக்கு உணர்த்துவது போல நமக்கு உணர்த்தும் உடல் மொழி. 'வெள்ளிக்குடம்' எனும் போது அவர் தோள்பட்டைகளை ராஜன் அருகில் சற்றே குலுக்கி மோக போதை பார்க்கும் பார்வை. கைகளை நெஞ்சுப் பக்கமாய் வேறு கொண்டு போய் காட்டுவார். யப்பா! அநியாயம் போங்க.
பாட்டு உற்சாகமாய் போய் முடியும் தருவாயில்,
'முத்த மழை இங்கு பொங்கி வர பொங்கி வர வர'
அங்கு ஒரு டிராமா போட வரும் நடிகர் திலகமும், நாகேஷும் வந்த காரியத்தை ஒரு வினாடி மறந்து, அந்த டியூனின் தாளத்திற்கு ஏற்ப கால்களை சற்றே எம்பிக் குதித்தாவாறே ஒருவரையொருவர் மெய்மறந்து வெட்கத்துடன் பார்த்துக் கொள்ளும் அழகை வர்ணிக்கவே முடியாது. (அதுவும் நடிகர் திலகம் சிறு குழந்தை போல நாக்கை வேறே சற்று வெளியே நீட்டி நாணுவார்)
பாடல் முழுக்க பரவி பாடலுடனேயே இழைந்து வரும் அம்சமான இசைக்கருவிகளின் சங்கமம் புரியும் விந்தைகள் அருமையிலும் அருமை.
ராட்சஸியை எத்தனையோ முறை புகழ்ந்தாலும் இப்பாடலை அவர் அளித்திருக்கும் சுகமே அலாதி சார். பின்னிப் பெடல் எடுக்கிறார். ஈஸ்வரி குரலுடனேயே '50 50, பாதி பாதி, ஆஹ் ஆஹ ஹூ' என்று இணைந்து வரும் சி.எஸ்.கணேஷ் (சங்கர் கணேஷ்) அவர்களின் குரலும் காலாகாலத்துக்கும் மறக்க முடியாது.
பார்த்து அனுபவியுங்கள் வினாடி வினாடியாக.
என்னுடய ஈஸ்வரியின் டாப் 5 களில் இது ஒன்று.
எத்தனை ஜென்மம் எடுத்தாலும் மறக்க மாட்டேன்.
http://www.youtube.com/watch?v=23vRE...yer_detailpage
நம் தலைவர் ராகவேந்தர் ஆக்ஞை படி உட்செல்ல ஆசை. ஆனால் நம் மக்களின் தலைக்கு மேல் பயணம் செல்வதாக எனக்கு மிக நல்ல பெயர். இதை மேலும் பறந்து கெடுக்க வேண்டுமா?
ராகங்களுக்கு ,இசையின் ஸ்வரங்களுக்கு ஒரு சின்ன முன்னோட்டம் கொடுக்கிறேன். பிடித்திருந்தால் சற்றே தொடர்வேன்.
ஏழு சுரங்களே சங்கீதத்தின் அடிப்படை. Tonal and Pitch இரண்டுமே அடிப்படை.சுருதி,சுரம் என்று சொல்லலாம்.
ஏழு சுரங்கள் ஸ (ஸட்சமம்),ரி (ரிஷபம்),க (காந்தாரம்),ம(மத்தியமம்),ப (பஞ்சமம்),த (தைவதம்),நி (நிஷாதம்) என்று வழங்க படும்.
இதில் ஸ ,ப ஒன்றே ஒன்று. ம வில் இரண்டு. ரி,க ,த,நி யில் தலா மூன்று 2+2+12 என்று பதினாறு சத்த மாறுபாடுகள்.
இதை ஸட்ஜமம்(S ) ,சுத்த ரிஷபம் (R 1),சதுஸ்ருதி ரிஷபம்(R 2),ஷட்ஸ்ருதி ரிஷபம்(R 3),சுத்த காந்தாரம்(G 1)சாதாரண காந்தாரம் (G 2),அந்தார காந்தாரம்(G 3),சுத்த மத்யமம்(M 1),பிரதி மத்யமம் (M 2),பஞ்சமம் (P )சுத்த தைவதம்(D1),சதுஸ்ருதி தைவதம் (D2),ஷட்ஸ்ருதி தைவதம் (D3),சுத்த நிஷாதம் (N 1),கைசிகி நிஷாதம்(N 2),காகலி நிஷாதம் (N 3) என்று பதினாறு பகுப்பு..(விவாடி எனப்படும் tainted swaras சேர்ந்து)
கொஞ்சம் உள்ளே போனால் G 2=R 3, R 2=G 1,D2=N 1, N 2=D3 என்று இவை சேர்ந்தே வராத பகுப்புகள். ரொம்ப குழப்ப மாட்டேன்.(இவைகளின் சேர்க்கை சாத்யமில்லாததால் 16 சுர சத்தங்கள் 12 என்றே கருத பட வேண்டும்.)
மேற்கத்திய இசையில் ஸ =C . ரி =D . க =E . ம=F .ப=G . த= A .நி =B .(5 வெள்ளை கட்டைகள் முழு pitch ,7 கருப்பு கட்டைகள் -பாதி pitch )
இப்போது 72 மேளகர்த்தா ராகங்கள் எப்படி என்று பார்ப்போம். மேளகர்த்தா ராகங்களுக்கு நிபந்தனை உண்டு. 7 சுரங்கள் கட்டாயம் வர வேண்டும்.(பரி பூர்ணம்).மேலே போவது(ஆரோகணம் ),கீழே வருவது (அவரோகணம்) சீராக (குதிக்காமல்)இருக்க வேண்டும்.ஸ வில் தொடங்கி ஸ வில் முடிய வேண்டும்.
இப்போது 12 சத்த மாறுபாடுகளில் ச,ப இரண்டுடன் மற்ற இணைப்புகள் 2x6x 6=72 வரும்.இதை சத்தங்களின் கணிதம் என்று குறிப்பிடலாம். permutation &Combination (வரிசை பகுப்பும் ,சேர்மானங்களும்)போட்டால் வரும் விடை.
இதில் 12 பகுப்புகளில் ஆறு ,ஆறு ராகங்களாக group செய்ய பட்டுள்ளது.
உதாரணங்கள்-
சுபபந்துவராளி - S R 1 G 2 M 2 P D1 N 2 S ' என்ற சேர்மானம்.
கீரவாணி S R 2 G 2 M 1 P D1 N 3 S ' என்ற சேர்மானம்.
நடபைரவி - S R 2 G 2 M 1 P D1 N 2 S '.என்ற சேர்மானம்.
நீங்களே ஊகிக்கலாம். இப்படி மாற்றி மாற்றி சேர்க்கும் இணைவில் உள்ள சாத்யகூறுகளை. என்ன ஒன்று கணிதம் போல dry ஆக இல்லாமல், கேட்க நன்றாக ,இசைவாக இருக்க வேண்டும்.
ஜன்யம் மற்றும் மற்ற சாத்திய கூறுகளை பிறகு அலசலாம்.
வீர திருமகன் பாடல்கள் எல்லாம் அருமை என்றாலும், எனது பிடித்தம் ராட்ஷஷியின் கேட்டது கிடைக்கும்.(இன்னொன்று வெற்றிலை போட்ட ,வாசு போட்டு விட்டார்). interlude கேட்டால் பின்னால் வரும் பட்டத்து ராணிக்கு ஒத்திகை மாதிரி இருக்கும்.
அப்பப்பா என்ன ஒரு பாட்டு!!!
https://www.youtube.com/watch?v=USWP...layer_embedded
வண்ணக்கிளி-1959
இந்த படத்தில் கே.வீ.மகாதேவன் இசை விஸ்வரூபம் எடுத்து ஒளிர்ந்தது. இதற்கு முன் எந்த ஒரு படத்திலும் இவ்வளவு சூப்பர் ஹிட் பாடல்கள் ஒரே படத்தில் குவிந்ததில்லை. கிராமிய இசையில் அவ்வளவு மெருகு.ஈர்ப்பு.variety .படம் ஜெயிக்க இசை ஒரு முக்கிய காரணமாய் அமைந்தது.கே.வீ.மகாதேவன் முதலாளி,வண்ணக்கிளி படங்களில் தான் ஒரு trend setter என்று நிரூபித்தார்.
சித்தாடை கட்டிக்கிட்டு (கள்ளபார்ட் நடராஜன் பின்னியெடுத்திருப்பார்)
https://www.youtube.com/watch?v=zAZfkh7H6PI
சீர்காழியின் இரண்டு மந்திர பாடல்கள். ஆத்தில தண்ணி வர,மாட்டுகார வேலா
https://www.youtube.com/watch?v=uECIcf22zXk
https://www.youtube.com/watch?v=EeQJVH18DVg
வண்டி உருண்டோட அச்சாணி தேவை
https://www.youtube.com/watch?v=qiQKlF9iDSQ
அடிக்கிற கைதான் அணைக்கும் (டி.லோகநாதன் பின்னியிருப்பார்)
https://www.youtube.com/watch?v=iH5qj1ADzS8
வண்ணக்கிளி பாட்டுக்கள்... வாவ்..
கோபால்ஜி.... விட்டுப்போன சின்ன பாப்பா எங்க செல்ல பாப்பா ...தனியா அழுதுகிட்டு நின்னுச்சு..
அதையும் சேத்துக்குங்க..
http://youtu.be/2C4rQHhS5dA
இதைத் தவிர "குழந்தையும் தெய்வமும் கொண்டாடும் இடத்திலே ஐக்கியமாகிவிடும் இது உண்மை ஜகத்திலே" என்று ஒரு பி.எஸ். பாட்டு இருக்கு
http://www.inbaminge.com/t/v/Vannakk...thile.vid.html
Thanks Madhu. Both are Nice Songs worth mentioning though not in the same league of other ones.
புறாவிற்காக இளவரசர் பாடிய வசந்த முல்லை இன்றும் பிரபலம்.
ஆனால் இந்த அழகின் இலக்கணம் ,ஆண்மையின் சிகரம் ,இளமையின் தலைமையாய் , இளவரசர் பாடும் காதல் கீதம்.ராஜ சுலோச்சனாவுடன் அழகிய காதல் பாடல்.
என்னுடைய விருப்ப பாடல்களில் ஒன்று.
https://www.youtube.com/watch?v=5BpZJ8AHFa8
காதல் நிலவு பாதி இரவு மயக்கத்தில் ஆடும் உலகம் .70 களின் மெல்லிசை மன்னரின் சாதனை படங்களில் ஒன்று பொன்னூஞ்சல்.படத்தின் திரைக்கதை இன்னும் இறுக்கமாக அமைக்க பட்டிருந்தால் B ,C சென்டர் களிலும் உயரம் தொட்டு சாதனை படங்களில் ஒன்றாகி இருக்கும் கிராமிய காவியமாய் அமரத்துவம் பெற்றிருக்கும்.
இந்த படத்தில் ஜானகியின் பிரமாதமான பாடலொன்று ,பிற ஹிட் பாடல்களின் நடுவே கண்டு கொள்ள படவில்லை.கொஞ்சம் interludes மெனக்கெட்டிருந்தால் ,இன்னும் உயரம் தொட்டிருக்கும். சரணத்தில் ,தர வேண்டிய transition space மிஸ்ஸிங். அவசரத்தில் பதிவு செய்தது போல அமைந்த ,இந்த அபூர்வ பாடலை இன்னும் மெருகேற்றி இருக்கலாம்.(மெல்லிசை மன்னர் இதானாலேயே இழந்தது நிறைய.வைரங்களை தினத்தந்தி பேப்பர் கிழித்து pack பண்ணி கொடுப்பார் 70களில் .)
படத்தில் நான் பார்க்கும் போது ,இரவு பாடலாக வரும்.இப்போது DVD க்களில் மிஸ்ஸிங். U Tube இலும் பட காட்சி இல்லை.என்னுடைய favourite pair களில் ஒன்று சிவாஜி-உஷாநந்தினி இணை.குறிப்பாக இப்படத்தில்.
வருவான் மோகன ரூபன்
https://www.youtube.com/watch?v=rATl1Kh-3A0
சி.வீ.ராஜேந்திரன் ,சாதனைகள் போற்ற படுவதே இல்லை.
கனவில் நடந்ததோ படமாக்கம்,உறவினில் fifty fifty பாடலில் அபூர்வ காமிரா கோணங்கள்,under water photography முயற்சி நில் கவனி காதலியில்,
புதிய திரைகதை உத்தி புதிய வாழ்க்கையில், புதிய இளமை காதல் முயற்சி உடைகளில் இளமை,colour psychology ,டைட்டில் உத்தி என்று சுமதி என் சுந்தரி .
பாவம் சில இயக்குனர்கள் பிழைப்பு நடத்தினாலும்,அங்கீகாரம் பெறுவதே இல்லை.
நன்றி வாசு.
நல்ல பாடல்களுக்கு நன்றி கோ.
நன்றி வாசுதேவன் சார். மதுர கானத்தில் அதிகமாகப் பங்கு கொள்ளுங்கள். உங்களுக்குப் பிடித்த பாடல்களைப் பற்றி எழுதுங்கள்.
கோ,
http://2.bp.blogspot.com/-Rrpb4PU-iC...images+(2).jpg
'வீரத் திருமகன்' படத்தில் என்னுடைய பிடித்தம்
'நீலப் பட்டாடை கட்டி
நிலவென்னும் பொட்டும் வைத்து
பால் போல சிரிக்கும் பெண்ணே
பருவப் பெண்ணே'
http://i1087.photobucket.com/albums/...t%20-2/n-2.jpg
இப்பாடலைப் படமாக்கியிருக்கும் பிரம்மாண்டமும், பின்னணிகளும் அற்புதம். இப்பாடலுக்காக நதியிலே பிரம்மாண்ட தாமரைப்பூ, மற்றும் அதைச் சுற்றி தாமரை இலைகள் செட்டிங்ஸ் அமைத்துத் தர வேண்டும் என்று ஏ.வி. எம்மிடம் சொல்லி விட்டாராம் கறாராக திருலோகச்சந்தர். முதலில் 'அது ரொம்பக் கஷ்டம்' என்று மறுத்த தயாரிப்பாளர் பின் டைரெக்டரின் விடாப்பிடியின் காரணமாக அவர் விருப்பப்படி செட் போட்டுக் கொடுத்தாராம்.
அமர்க்களமாக இருக்கும். ஆனால் மிகுந்த மெனக்கெடல். ஏ.வி.எம்.ஆயிற்றே.
நடுவில் பெரிய தாமரைப்பூ செட்டில் நாயகி சச்சு ஆட, சுற்றி தாமரை இலைகள் போல அமைக்கப்பட்ட செட்களில் (நடன நடிகைகள் நின்று ஆட) எக்ஸ்ட்ரா நடன நடிகைகள் ஆடுவது பிரம்மாண்டம். (அதுவும் சுற்றிலும் அமைக்கப்பட்ட இலை வடிவ செட்கள் நடுவில் உள்ள தாமரைப்பூவை சுற்றி வேறு வரும்படி பின்னி எடுத்திருப்பார்கள்). இலைகள் வடிவ செட்டின் மேல் நின்று ஆட துணை நடன நடிகைகள் மிகவும் பயந்தனராம். (கிட்டத்தட்ட மொத்தம் 24 துணை நடிகைகள். சச்சுவை சேர்த்து 25) 'தண்ணீரில் விழுந்தால் என்னாவது' என்று வாக்குவாதமே ஏற்பட்டதாம். பின் தகுந்த பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு இப்பாடல் காட்சி படம் பிடிக்கப்பட்டதாம்.
வழக்கம் போல சிரமமில்லாமல் எடுத்த
'பாடாத பாட்டெல்லாம் பாட வந்தாள்'
சூப்பர் டூப்பர் ஹிட்டாகிப் போய்விட, கடின உழைப்பு தந்து எடுக்கப்பட்ட பாடல் பின்னுக்குப் போனது.
நான் மேலே கூறியுள்ள விஷயங்கள் சச்சு 'திரும்பிப் பார்க்கிறேன்' நிகழ்ச்சியில் கூறியது என்று நினைவு. ரொம்ப நாளாகி விட்டது. நீங்கள் 'வீரத் திருமகனை' பிடிக்கப் போக இப்போது ஞாபகம் வந்தது. காலையில் பெண்ட் எடுக்கிறீர்கள்.:)
அது போல பாடலும் மிக மிக இனிமை.
அது போல இந்தப் பாடலில் பின்னணி பாடும் கோரஸ் பணியை பாராட்டியே தீர வேண்டும். அற்புதமான கோரஸ்.
சச்சுவும் உடம்பை வில்லாக வளைத்து ஆடுவார்.
கண்ணதாசனின் அருமையான இயற்கை வர்ணிப்பு எளிமை வரிகள். மெல்லிசை மன்னர்களின் வெகு அசத்தலான டியூன் மற்றும் மதுர மயக்கும் இசை.
'சுகக்குரல்' சுசீலாவும், 'ஈடு இணையற்ற' ஈஸ்வரியும் இணைந்து இன்ப ஊற்றை அள்ளி செவிகளில் பாய்ச்சுகிறார்கள்.
ஆனால் பாடலுக்குக் கிடைத்த பலன் ரொம்பக் கம்மி.
https://www.youtube.com/watch?v=bXNUAdbOn7o&feature=player_detailpage
இனிய நண்பர் வாசு சார்
வீரத்திருமகன் - பாடல் பற்றிய விரிவான பதிவு அருமை . மிகவும் இனிமையான பாடல்கள் . அதே போல் கலாட்டா
கல்யாணம் பாடலும் சூப்பர். நேற்று மன்னவன் வந்தானடி - வெளியான நாள் . இந்த படத்திலிருந்து எனக்கு பிடித்த பாடல் .
http://youtu.be/BlgVP2qkE0Y
rhythm arrangement என்பது ஒரு பாடலையே நிறம் மாற்றும் ரசாயனம். பாடலின் meter விட்டு தாண்டி குதிக்கலாம். Harmony ,Contrast ,Absurd &weird combinations என்று விளையாடலாம். ஆனால் பரிசோதனையாய் மட்டும்
முடியாமல் இசையாக ,விரும்பும் படி இருக்க வேண்டும்.
அப்படி தாளத்தால் வேறு படுத்தி காட்ட பட்ட இரண்டு வசீகர பாடல்கள்.
ஒன்று 70இன் மெல்லிசை மன்னர். இன்னொன்று 85களின் இசைஞானி.
இரண்டுமே இசையமைப்பாளர்களை பிழிந்தெடுக்கும் ஆட்கள்.ஒன்று ஏ.வீ.எம். மற்றது சி.வீ.ஸ்ரீதர்.
பம்மலாரின் பிடித்தம் என்று கேள்வி. திராவிட மன்மதனின் ,இளமை,அழகு துள்ளும் அழகாக கோரியோகிராப் செய்ய பட்டு ,அழகான உடையமைப்பு ,ஜோடி ரசாயனம் அமைந்த எங்க மாமாவின்,என்னங்க?
தாள வித்தையை ரசியுங்கள்.
https://www.youtube.com/watch?v=8WNqcmi1rrQ
ஸ்ரீதரின் ,இளைய ராஜா இணைவில் மிக மிக சிறந்த படம் "தென்றலே என்னை தொடு "(நினைவெல்லாம் நித்யா,ஒரு ஓடை நதியாகிறது மற்றவை).பாடல்கள் அப்பப்பா.hats off இளையராஜா.வழக்கம் போல ஸ்ரீதர் சொதப்பியிருப்பார் என்று சொல்லவும் வேண்டுமோ?
ஆனால் அந்த படத்தில் ரொம்ப கவனிக்க படாத இந்த தாள அதிசயம்.
புதிய பூவிது.
https://www.youtube.com/watch?v=Jy_KCJTttfg
டியர் வாசு சார்,
வீரத்திருமகன் படத்தில் இடம்பெற்ற 'நீலப்பட்டாடை கட்டி நிலவென்னும் போட்டும் வைத்து' பாடலும் சரி அது படமாக்கப்பட்ட விதமும் சரி மிக மிக அருமை மட்டுமல்ல, புதுமை மட்டுமல்ல சாதனையும் கூட, குறிப்பாக மிகமிகக் குறைவான டெக்னிக்கல் உத்திகள் கொண்ட அன்றைய காலகட்டத்தில். கம்ப்யூடர் கிராபிக்ஸ் என்ற ஒன்று வந்ததால் இன்று நிஜமான உழைப்பின் மகத்துவங்கள் மங்கிப்போய் விட்டன.
அதே திரும்பிப்பார்க்கிறேன் நிகழ்ச்சியில் இப்பாடல் படமாக்கப்பட்ட விதத்தை இயக்குனர் ஏ.சி.திருலோகச்சந்தர் விளக்கினார். அதாவது தாமரைப்பூவும் அதைச்சுற்றி தாமரை இலைகளும் தண்ணீரில் மிதக்க வேண்டும். இதொன்றும் பிரமாதம் இல்லை. மிதவைக்கட்டி மிதக்க விட்டுவிடலாம். ஆனால் பூவின்மேலும் ஒவ்வொரு இலையின்மேலும் நடனமாதர் நின்று ஆட வேண்டும் என்றபோதுதான் பிரச்சினை வந்தது. மிதக்கும் இலையின்மீது நின்று எப்படி ஆடுவது?. எப்படி தாங்கும்?. எப்படி பேலன்ஸ் கிடைக்கும்?. என்று குழம்பியபோது ஆர்ட் டைரக்டரும், ஒளிப்பதிவாளரும் இயக்குனரும் சேர்ந்து உட்கார்ந்து மண்டையை உடைத்துக்கொண்டபோது ஒரு ஐடியா பிறந்தது.
அதாவது தாமரைப்பூவையும் ஒவ்வொரு தாமரை இலையையும் ஒவ்வொரு மர பீப்பாயின்மேல் பொருத்தி அதை மிதக்க விடுவது, பூவும் இலையும் மட்டுமே தண்ணீருக்கு வெளியே தெரியும். மர பீப்பாய் (டிரம்) முழுவதும் தண்ணீருக்குள் மூழ்கியிருக்கும். அதன்மீது நடன மங்கையர் நின்று ஆடும்போது பேலன்ஸ் கிடைக்கும் என்று முடிவாகி அதன்படியே செய்தனர். ஒவ்வொரு இலையின்கீழும் ஒவ்வொரு மர பீப்பாய் மறைந்திருக்கும். அப்படியும் சில நடன மாதர்கள் பேலன்ஸ் தவறி தண்ணீரில் விழுந்து எழ, அவர்கள் காஸ்ட்யூம் காயும்வரை காத்திருந்து படம் பிடித்தனராம்.
ஆனால் மக்கள் இந்தப்பாடலை அவ்வளவாகக் கொண்டாடவில்லை என்பது மிகவும் வருத்தத்துக்குரிய விஷயம். ரோஜா மலரே ராஜகுமாரியும், பாடாத பாட்டெல்லாம் கொண்டாடப்பட்டதில் பாதியளவு கூட இப்பாடலுக்கு கிடைத்ததில்லை.
இப்பாடல் இலங்கை வானொலியின் பயங்கர ஹிட். நீங்கள் கேட்டவை நிகழ்ச்சியில் இரண்டு இஸ்லாமிய சகோதரிகள் இந்த 'நீலப்பட்டாடை கட்டி' பாடலையும் வானபாடியில் இடம்பெற்ற 'கங்கைகரைத் தோட்டம்' பாடலையும் தினமும் விரும்பிக் கேட்பார்கள்...
ம்ம் ஈத் ஹாலிடேஸ் வந்தாலும் வந்தது வெளியூர் எல்லாம் சென்று வீட்டில் வந்து கொஞ்சம் ஜூரம் உடல் நிலை க் குறைவு என அவதிப் பட்டு..இதோ லீவ் முடிஞ்சு..கொலம்பஸ் கொலம்பஸ் வந்துட்டோம் ஆஃபீஸ்..
சைல ஸ்ரீ வரை படித்திருக்கிறேன்..வழக்கம் போல் அவரவர்கள் களத்தில் புகுந்து சிக்ஸ் சிக்ஸ் ஆக அடித்து த் தள்ளிக் கொண்டிருக்கிறார்கள்..படிக்க சந்தோஷமாக இருக்க்க்கிறது..:)
வீரத்திருமகனில் தான் பாடாத பாட்டெலாம்பாட வந்தாள் இல்லியோ..அந்தப் பெண் எஸ் ..சர் பட்டம் வாங்காத ரோசா எஸ்.சரோஜா என நினைவு..முகத்தில் ரஸ்ட் ஜாஸ்தி இருக்கும்..குறும்பு புன்னகைவேறு..ராமண்ணாவைக் கல்யாணம் செய்து நடிப்பதை நிறுத்தி போன வருடமோ என்னவோ காலமானதாகப் படித்த நினைவு..
ம்ம்..வருகிறேன்..மீண்டும் :)
சிக்கா... ராமண்ணா மனைவி.... அது ஈ.வி.சரோஜா... இவங்கதான்
http://thumbnails102.imagebam.com/23...4239304825.jpg
இன்னும் எம்.சரோஜா, பி.எஸ்.சரோஜா... சரோஜா(தேவி) அப்படின்னு எக்கசக்க சர்ர்ர் ரோஜாக்கள் இருந்திருக்காங்களே !
ஓ... தாங்க்ஸ் மதுண்ணா. . டணால் தங்கவேல் ஒஃய்ப் தான் ஈ.வி.சரோஜான்னு நினைச்சுருந்தேன்..அது யார் பி எஸ்.ஸரோஜா..எம்.சரோஜா..
இன்றைய ஸ்பெஷல் என்ன என்று வாசு சார் தன்னைத் தானே கேட்டுக் கொண்டு எழுதியும் முடித்திருப்பார் என நினைக்கிறேன்..இன்னிக்கு என்னவாக்கும் விசேஷம்..
யெஸ்..சின்ன வயதில் நாங்கள் ஆங்கிலத்தில் சொல்லிக் கொண்டு (எய்ட்டீந்த் மல்டிப்ளிகேஷன்) பெருமைப் பட்ட ஆடிப் பெருக்கு..ம்ம்..அந்தப் படத்தில் உள்ள பாடல்கள்..எல்லாமே அருமை தான்..இருப்பினும் பெங்களூர் பேரட் கன்னடத்துக் கிள்ளை மொழி இன்னொரு கிள்ளை முழி ஆட(வேறுயார் தேவிகா தான்) சேர்ந்து பாடும் சோகப் பாடல்..
காவேரி ஓரம் கவி சொன்ன காதல்
கதை சொல்லி நான் பாடவா - உள்ளம்
அலை மோதும் நிலை கூறவா
அந்த கனிவான பாடல் முடிவாகும் முன்னே
கனவான கதை கூறவா - பொங்கும்
விழி நீரை அணை போடவா
அழியாது காதல் நிலையானதென்று
அழகான கவி பாடுவார் - வாழ்வில்
வளமான மங்கை பொருளோடு வந்தால்
மனம் மாறி உறவாடுவார் - கொஞ்சும்
மொழி பேசி வலை வீசுவார் - நட்பை
எளிதாக விலை பேசுவார்
கதை கொஞ்சம் புகையாகத் தான் நினைவில்..ஆனால் பாடல் முடிவில் சர்ரோஜாவின் அண்ணன் மரிப்பது போல் வரும் என நினைக்கிறேன்.இசையரசியின் அற்புதமான பாடல்களில் ஒன்று இது..
இன்னொரு அழகுப்ப் பாட்டு..
கண்ணிழந்த மனிதன் முன்னே
ஓவியம் வைத்தார்
இரு காதில்லாத மனிதன் முன்னே
பாடல் இசைத்தார்
பாடல் இசைத்தார்
கண்ணிருந்தும் ஓவியத்தைக்
காட்டி மறைத்தார்
இரு காதிருந்தும் பாதியிலே
பாட்டை முடித்தார்
பாட்டை முடித்தார்
ஆட வந்த மேடையிலே
முள்ளை வளர்த்தார்
அணைக்க வந்த கரங்களுக்கு
தடையை விதித்தார்
காய்ந்து விட்ட மரத்தினிலே
கொடியை இணைத்தார்
தாவி வந்த பைங்கிளியின்
சிறகை ஒடித்தார்
பெண் பெருமை பேசிப் பேசிக்
காலம் கழிப்பார்
தன் பெருமை குலையும் என்றால்
பெண்ணை அழிப்பார்
முன்னுமில்லை பின்னுமில்லை
முடிவுமில்லையே
மூடன் செய்த விதிகளுக்கு
தெளிவுமில்லையே
ரொ ம்ப பிடித்த பாட்ல்களில் ஒன்று..சிச்சுவேஷன் தான் நினைவுக்கு வரமாட்டேங்குது..ம்ம்
ஊருக்கே நல்லது செய்யும் பெண் அவள்.. அவள் வாழ்வில் நல்லது நடக்கிறது..எஸ் கல்யாணம்.. ஆனால் வேகமாய் முடிந்த கல்யாண வாழ்க்கையும் அவளுக்கு விரைவில் முடிந்து விடுகிறது..ஆனால் அவளுக்குத் தெரியாது..எஸ்.. அவளது கணவன் விபத்திலோ எதிலோ இறந்து விடுகிறான்..இது ஊருக்குத் தெரிகிறது..ஆனால் அவர்களுக்கு அவளிடம் சொல்லத் துணிவில்லை..அந்தப் பொன் சிரிப்புக் கொண்டப் பூ முகம் வாடுவதை அவர்கள் விரும்பவில்லை..
எனில் ஆடி மாதம் வருகிறது..பதினெட்டாம் பெருக்கும் வருகிறது..ஊர் கூடி விளக்கு விடுகிறார்கள் சீறிப் பாயாமல் சிரித்தபடி செல்லும் காவிரியாற்றில்..அவர்கள் சுமங்கலியாக் இருக்க வேண்டும் என..அவளும் விடுகிறாள்..பார்க்கும் பெண்களுக்குச் சற்றே தயக்கம்..பின் மனதைத் தேற்றி அவர்களும் தொடர்ந்து பாட...
(படம்.. ராதா.. அந்தப் பெண் பிரமீளா..முத்து ராமன் ஹீரோ - இரு வேடங்கள் என நினைவு)
ஆடியிலே பெருக்கெடுத்து ஆடி வரும் காவேரி
வாடியம்மா எங்களுக்கு வழித்துணையாக
எமை வாழ வைக்க வேண்டுமம்மா சுமங்கலியாக..
மொய்குழலில் மலர்சூட்டி
மான்விழியில் மை தீட்டி
பொன் முகத்தில் பொட்டு வைத்து
பூவையர்கள் நலம் காக்க
நெய்வழியும் கை விளக்கை
நீரோடு மிதக்க விட்டோம்
நாயகனின் உயிர் காக்க
தாயிடத்தில் போக விட்டோம்..
வள்ளுவரும் வாசுகி போல்
வசிட்டனுக்கு அருந்ததி போல்
தொல்லுலகில் புகழ் விளங்க
தோகையர்க்குத் துணை புரிக
பின்னுறங்கி முன்விழித்து
பிள்ளை நலம் தனைக் காத்து
கொண்டவனின் மனமறிந்து
தொண்டு செய்ய மனம் தருக..
ம்ம் கண்ணதாசன்..என நினைக்கிறேன்..இப்போ காவிரிக்கிட்ட கேட்டா என்ன சொல்லும்.
படம் சுமார் என நினைவு..அந்த இரண்டாவது முத்துராமனின் ஜோடி ஜெயாவா.. அதுவும் நினைவில்லை
http://tamil.way2movies.com/wp-conte...asses-away.jpghttp://www.hindu.com/fr/2005/07/08/i...0800730301.jpg
சின்னக் கண்ணன் சார்,
இவர் தான் எம்.சரோஜா
'டணால்'தங்கவேலு அவர்களின் மனைவி. அடுத்த வீட்டுப் பெண், கல்யாணப் பரிசு போன்ற முக்கியமான படங்களில் இருவரும் ஜோடி சேர்ந்து சக்கை போடு போட்டனர்.
கணவருடன் சேர்ந்து இவர் கலக்கிய காமெடி சீன் கல்யாணப் பரிசு திரைப்படத்தில்.
http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=i5uh6yQ7gzw
http://w1.nst.com.my/polopoly_fs/1.6..._454/image.jpg
இவர் பி.எஸ்.சரோஜா. இவர் தான் ஜெனோவா, வண்ணக்கிளி, கூண்டுக்கிளி, புதுமைப் பித்தன், போன்ற படங்களில் நடித்தார். மலையாளத்தில் நிறைய நடித்தவர்.
இவர் எம்ஜிஆருடன் நடித்த 'ஜெனோவா' படத்திலிருந்து ஒரு பாடல்.
http://www.youtube.com/watch?v=y4b8H7YZkdA&feature=player_detailpage
இது தவிர பின்னாளில் இன்னொரு சரோஜா. 'வடைமாலை' போன்ற படங்களில் நடித்தவர்.
உடம்பு தேவலையா?
வாசு சார்.. இப்போது நலம்..கொஞ்சம் ஒரு டாப்லெட் போட்டுண்டாச்சு..வேலைக்கும் வந்தாச்சு... நன்றி ஃபார் சரோஜா படஙக்ள்+ விளக்கங்கள்..ஈ.வி.சரோஜா மகாதேவியிலும் நடித்திருப்பார் என நினைக்கிறேன்..ஆர்.. மதுரை வீரன்?
'கூண்டுக்கிளி' படத்தில் எம்ஜிஆரின் மனைவியாக நடிகர் திலகம் ஆசைப்படும் பெண்ணாக பி.எஸ்.சரோஜா
http://raretfm.mayyam.com/pow07/images/koondukili01.jpg
http://i.ytimg.com/vi/U4JCYBL171Y/hqdefault.jpg
எம்ஜிஆர் அவர்கள் நடித்த 'என் தங்கை' என்ற படத்தில் எம்ஜிஆரின் குருட்டுத் தங்கையாக நடித்து புகழ் பெற்றவர் ஈ.வி.சரோஜா. ரொம்ப அழுவாச்சியான படம் இது. இதில் ஈ.வி.சரோஜா மிகவும் சின்னப் பெண்.
இதே ஈ.வி.சரோஜா அதே எம்.ஜி.ஆருடன் 'கொடுத்து வைத்தவள்' படத்தில் ஹீரோயினாக நடித்தார்.
http://i.ytimg.com/vi/1GndjzLTnWs/hqdefault.jpg
நடிகர் திலகம், மக்கள் திலகம் என்று பெரிய ஹீரோக்களை டீஸ் செய்து பாடும் கதாநாயகியின் தோழியாகவே பல படங்களில் வருவார்.
காத்தவராயனில் 'முனா... அட முக்காலணா ங்கப்பா' பாடி ஆடி அசத்துவார்.
'மதுரை வீரனி'ல் எம்ஜிஆரை வெறுப்பேற்றி 'வாங்க மச்சான் வாங்க' பாடலுக்கு ஆடுவார்.
ஈ.வி.சரோஜா பி.எஸ்.சரோஜா பற்றிய தகவல்கள் புகைப்படங்கள் நன்றி வாசு சார்..
//டணால்'தங்கவேலு அவர்களின் மனைவி. அடுத்த வீட்டுப் பெண், கல்யாணப் பரிசு போன்ற முக்கியமான படங்களில் இருவரும் ஜோடி சேர்ந்து சக்கை போடு போட்டனர்.// இந்த ஜோடியின் இன்னொரு காமடி மறக்க முடியாது..கைதி கண்ணாயிரம் - என்ன எங்கே எப்போ..
ஆமா தொடர்பா இன்னொரு பாட்டும் நினைவுக்கு வருதே..கொஞ்சி க் கொஞ்சி பேசி மதிமயக்கும் வஞ்சகரின் உலகம் வலைவிரிக்கும்..எம்.எஸ். ராஜேஷ்வரியா..
வாசு சார்,
சரோஜாக்கள் பற்றிய உங்களது பதிவுகள் அருமையாக
உள்ளது.தமிழ்த் திரை உலகம் பற்றிய விபரங்கள் உங்களது
விரல் நுனியில் உள்ளது.நடிகர் திலகம் படிக்காத மேதை
திரைப்படத்தில் -சீவி முடிச்சி சிங்காரித்து-பாடலில் ஈ.வி.சரோஜாவை கிண்டல் செய்து பாடியிருப்பார்.
கோபு
முக்தா சீனிவாசன் அறிமுகப் படுத்திய ஒரு நாயகியின் பெயரும் சரோஜா தான் (படம் ஸ்ரீராம ஜெயம் என நினைக்கிறேன்)
வாசு சார்
ஒவ்வொரு நாளையும் தங்களின் ஸ்பெஷல் பாட்டுக்கள் ஸ்பெஷலாக்கி விடுகின்றன. பாராட்டுக்கள்.
கோபால்
தாளக் கட்டுப் பற்றிய தங்கள் பதிவு அபாரம். வித்தியாசமான தாளக்கட்டுக்களமைப்பதில் என்றுமே மெல்லிசை மன்னரின் பாடல்கள் தனித்துவம் பெறும். அதில் என்னங்க பாடலும் குறிப்பிடத் தக்கது.
பொங்கும் பூம்புனல்
ஆடிப்பெருக்கை முன்னிட்டு ஆடி வரும் காவிரியை வரவேற்கும் ராதா..
http://www.inbaminge.com/t/r/Radha/
இன்றைய ஸ்பெஷல் (45)
இன்று ஒரு மிக மிக அருமையான பாடல்
http://www.inbaminge.com/t/e/Enna%20...hen/folder.jpg
அப்போதைய புகழ் பெற்ற பாடல். ஆனால் வானொலியில் கேட்டு, கேட்டு மகிழ்ந்ததுதான். வீடியோவில் பார்த்திருப்பது அபூர்வம். அதனாலேயே இப்பாடல் இன்றைய ஸ்பெஷல் ஆகிறது.
பாலாவும், சுசீலாவும் பாடிய பல பாடல்களில் முதல் வரிசையில் இடம் பெறுவது இப்பாடல்.
https://lh3.googleusercontent.com/pr...Mg=w426-h320-n
'என்ன தவம் செய்தேன்' படத்தில் விஜயகுமாரும், சுஜாதாவும் பாடும் டூயட்.
சுஜாதா மிக சிம்பிளாக அழகாக தெரிகிறார். விஜயகுமார் வழக்கம் போல. டான்ஸ் மூவ்ஸ் பண்ணத் தெரியாமல் தையா தக்காதான். ('தீபம்' படத்தின் 'பூவிழி வாசலில் யாரடி வந்தது கிளியே கிளியே' பாடலை இருவரும் ஞாபகப் படுத்துகிறார்கள்)
ஆனால் பாடலில் இனிமை கொட்டிக் கிடக்கிறது. ஒவ்வொரு வரி முடிந்ததும் பாலாவும், சுசீலாம்மாவும் கொடுக்கும் அந்த வைப்ரேஷன்ஸ் மறக்கவே முடியாதது.
ஏதோ ஒரு புண்ணியமில்லாத படத்தில் இப்படி ஒரு அருமையான பாடல். நானும் உங்களோடு சேர்ந்து இப்போதுதான் பார்க்கிறேன் வீடியோவாக. பாடலைக் கெடுக்காமல் எடுத்திருந்தாலும் கூட இன்னும் அருமையாக இப்பாடலைப் படமாக்கியிருக்கலாம்.
மெல்லிசை மன்னரின் மணி மகுடத்தில் பதிக்கப்பட்ட பின்னாளைய வைரம். (இன்னொன்றும் கூட 'அந்தியில் சந்திரன் வருவதேன்?' கேள்விப்பாடல்) இயக்கம் கிருஷ்ணன் பஞ்சு.
மிக அருமையான பாலா-சுசீலா இணைவுப் பாடல். வாழ்நாள் முழுக்க என் கனவுப் பாடல்.
பாடலின் வரிகளைப் போலவே ஏதோ ஒரு இன்பம் இப்பாடலைக் கேட்டாலே.
ஏதோ ஒரு நதியில் நான் இறங்குவதைப் போலே
ஏதோ ஒரு இன்பம் நீ அருகில் இருந்தாலே
லால லல்லால லல்லாலா லலலலலா
லால லல்லால லல்லாலா லலலலலா
ஏதோ ஒரு நதியில் நான் இறங்குவதைப் போலே
ஏதோ ஒரு இன்பம் நீ அருகில் இருந்தாலே
சிங்காரச் செம்மாதுளை
உந்தன் செந்தூரம் காட்டும் கலை
சிங்காரச் செம்மாதுளை
உந்தன் செந்தூரம் காட்டும் கலை
பொழுது செல்ல பொழுது செல்ல
கல்யாணப் பந்தலிடும் கலைச்சோலை
ஏதோ ஒரு நதியில் நான் இறங்குவதைப் போலே
ஏதோ ஒரு இன்பம் நீ அருகில் இருந்தாலே
கன்னம் சிறுகுழி விழ சிரிக்கின்ற வண்ணம்
மின்னும் இதழ் பறவைகள் குடிக்கின்ற கிண்ணம்
தாலாட்டு பூச்சூட்டு
நான் உந்தன் சொந்தம்
ஆராத்தி நீ காட்டு ஆனந்த பந்தம்
என் வீட்டுப் பச்சைக்கிளி
இன்று என் தோளில் தோற்றும் கிளி
இடமிருந்து வலமிருந்து என்னோடு
வட்டமிடும் வண்ணக்கிளி
இடமிருந்து வலமிருந்து என்னோடு
வட்டமிடும் வண்ணக்கிளி
ஏதோ ஒரு நதியில் நான் இறங்குவதைப் போலே
ஏதோ ஒரு இன்பம் நீ அருகில் இருந்தாலே
ம்ம்ம்ம்ம்ம்ம்ம் லாலாலாலா
ம்ம்ம்ம்ம்ம்ம்ம் ஹாஹாஹாஹாஹா
மங்கை தினம் சலசலவென வரும் கங்கை
ஹாஹாஹாஹாஹா
மன்னன் தினம் குழலிசை வடிக்கின்ற கண்ணன்
ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்
தாகங்கள் பாவங்கள் நான் கண்டேன் இங்கே
மேளங்கள் தாளங்கள் ஊர்வலம் அங்கே
கல்யாணப் பெண்ணாயிரு
அங்கே கண்ணாடி முன்னாலிரு
கல்யாணப் பெண்ணாயிரு
அங்கே கண்ணாடி முன்னாலிரு
கடவுளுக்கு நன்றி சொல்லி
எந்நாளும் அன்பு கொண்ட கண்ணாயிரு
கடவுளுக்கு நன்றி சொல்லி
எந்நாளும் அன்பு கொண்ட கண்ணாயிரு
ஏதோ ஒரு நதியில் நான் இறங்குவதைப் போலே
ஏதோ ஒரு இன்பம் நீ அருகில் இருந்தாலே
நீ அருகில்
இருந்தாலே
நீ அருகில்
இருந்தாலே
நீ அருகில்
இருந்தாலே
https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=plznRYowKdA
//என்ன தவம் செய்தேன்' படத்தில்// நல்ல பாட்டு தான் நன்றி வாசு சார்.. ஆனால் படம் வெகு போர் என நினைவு..ஏனெனில் ரிலீஸானது தேவி என நினைக்கிறேன்(மதுரை) அங்கு பார்த்தது..
'ஆடியிலே பெருக்கெடுத்து ஆடி வரும் காவேரி' பாடலுக்கு மிக்க நன்றி ராகவேந்திரன் சார். எனக்கு மிகவும் பிடித்த பாடல். இப்பாடலை நம் வசந்தாவும் சேர்ந்து பாடி இருப்பார் இல்லையா?
இதே போல ஒரு பாடல் ராமண்ணாவின் 'நீச்சல் குளத்'திலும் உண்டு. 'ஆடி 18 ஆடுது பூஞ்சிட்டு... எல்லோரும் கொண்டாடுங்க'.. ஜானகியின் குரலில்.
https://www.youtube.com/watch?v=gZJswMES8Io&feature=player_detailpage
rare poster.
http://www.dkpattammal.org/ImagesDB/...les.jpg(1).jpg
thanks to www.dkpattammal.org
வாசு சார்
ஏதோ ஒரு நதியில் நான் இறங்கியதைப் போலே, அதில் மதுர கானம் எனும் அமுத ஊற்றுப் பெருக்கெடுத்து ஓடுவதைப் போலே உணர்கிறேன், தங்களுடைய இன்றைய ஸ்பெஷல் பாடலின் மூலம்.
பாராட்டுக்கள்.
நீச்சல் குளம் பாட்டும் அருமையாக இருக்கும். அதில் எஸ்பிபாலா டூயட் ஒன்று - படத்தில் சுமனுக்கு - உண்டு.
நீச்சல் குளம் சுமனின் அறிமுகப் படம் தானே