There was a Hindi Movie called Desh Preemie was to be made by Manmohan Desai(An ardent sivaji Fan) with NT,Amitabh and Uttam in 1977.It was announced and dropped later.
Printable View
There was a Hindi Movie called Desh Preemie was to be made by Manmohan Desai(An ardent sivaji Fan) with NT,Amitabh and Uttam in 1977.It was announced and dropped later.
The Pairs I hate to see in Screen-
Sivaji-K.R.Vijaya- Somehow no one can have any sort of Chemistry with her(Selvam -the only exception)
Sivaji-Jayalalitha-Somehow,I felt that after 70,we could have gone for a better pair( Galatta Kalyanam,Deiva Magan,Engiruntho vanthal-OK).
Sivaji-Banumathi-It looks like Akka-Thambi on Screen and terrible misfit.Ambigapathi lost out due to miscasting(Arivali,Manamagal Thevai,Kalvanin Kathali-OK)
Sivaji-Sowkar- Again lack lustre(Padikkadha medhai,Pudhia Paravai,Uyarntha Maithan being exception)
Sivaji-Sujatha- Somehow,too many repeats with mechanical intimacy(Deepam,Annan Oru Koil being exception)
Sivaji-sakunthala-I would have avoided repeating this pair in Thava Pudhalvan,Vasantha Maligai &Engal Thanga Raja.
Sivaji-Vijayalalitha-Sorgam OK.But Thirudan ,I could have used Jothi Lakshmi.
My Favourite onscreen pairs for our NT
Sivaji-Vanishree- 9 Movies-Ultimate Pair
Sivaji-Padmini- All time pair 1952-1961,1966-1971,1985-1987.
Sivaji-Sarojadevi-Almost 17 Films and exceptional in Pudia Paravai,Anjal Petti 520.
Sivaji-Devika- Intimate chemistry after Vanshri
Sivaji-Ushanandhini-(I know all my friends are going to throng on me)-Somehow I enjoyed this pair in Ponnunjal
Sivaji-Vijayshree-Surprise package of Babu but worked well.
Sivaji-Alam-Great chemistry in Ennai pol oruvan(Valale,Mounam),Vasantha laligai
Gopal,S. Wow, you were dropping information like nothing, especially the abandoned projects. Wow. Thanks mate :smile: I like your wishlist, by the way. One exception, your dislike of Sivaji-Jayalalitha pairing. I could watch them together forever.
The ultimate year for variety for NT is 1969.
Three Village stories-Anbalippu,Guru Dakshinai,Kaval Deivam
One James Bond Film-Thanga Churangam
Two Action Films- Sivantha Mann,Thirudan
Two Comedy Films-Anjal Petti 520,Niraikudam
One Oscar Classic- Deiva Magan
Music Directors-7
M.S.V-Anbalippu,Thirudan,Sivantha mann
T.K.R-Thanga Churangam
V.Kumar-Nirai Kudam
Devarajan-Kaval deivam
Govardhan-Anjal petti 520
Pugazendhi,KVM- Guru Dakshinai
Heroines-8
Vanishree-Niraikudam
Bharathi- Thanga churangam
Kanchana-Sivantha Mann
Jayalalitha-Deiva magan,Guru Dakshinai
Saroja Devi-Anbalippu,Anjal Petti 520
K.R.Vijaya-Thirudan
Padmini-Guru Dakshinai
Pandari Bhai-Deiva Magan
Directors-7- A.C.T,A.P.Nagarajan,Ramanna,Sridhar,V.Srinivasan,K .vijayan,T.N.Balu
நினைப்பதெல்லாம் நடந்து விட்டால் தெய்வம் ஏதுமில்லை
நடந்ததையே நினைத்திருந்தால் அமைதி என்றுமில்லை
அனைவருக்கும் வணக்கம்!
ஒரு பக்கம் வயிறெரிந்து, மறு பக்கம் மனம் குளிர்ந்து எழுதுகிறேன்! இன்று மாலை காட்சிக்கு சென்னை வில்லிவாக்கம் ags திரையரங்கில் கர்ணன் திரைப்படம் காண என் நண்பர்களுடன் சென்றேன். 7.00 மணி திரைப்படத்திற்கு 6.30 மணிக்கே சென்றுவிட்டோம்! அந்தோ பரிதாபம்! கர்ணன் திரைப்படத்திற்கு டிக்கெட் ஹவுஸ் புல். என்றும் மற்ற திரைப்படங்கள் அதாவது, ஒரு கல் ஒரு கண்ணாடி, மற்றும் கழுகு திரைப்படத்திற்கான டிக்கெட்டுகள் இருக்கின்றன என்றும் கவுண்டரில் சொன்னவுடன், ஒரு பக்கம் டிக்கெட் கிடைக்கவில்லையே என்று வயிறெரிந்தாலும் மற்றொரு பக்கம் தலைவரின் அலைப்பரைக்கு ஒரு அளவு இல்லை போலும் என எண்ணும் போது மனம் குளிர்ந்து வெளியில் வந்தேன். என் நண்பரிடம் காலையிலேயே டிக்கெட்டுகளை ரிசர்வ் செய்ய சொல்லியிருந்தேன். அவர்தான் நிரம்ப அசால்ட்டாக சாயிங்காலம் போகும் போது பார்த்துக் கொள்ளலாம் என்று சொன்னார். நான் கூட AGSல் இரண்டாவது வாரம் தானே டிக்கெட் சுலபமாக கிடைக்கும் என்று நம்பியே சென்றேன்.ஆனால் நடிகர் திலகத்தின் ஆதிக்கம் சாதாரணமானது அல்ல என்பதை அவர் ஒவ்வொரு முறையும் நிருபித்து கொண்டுதான் இருக்கிறார். நாம் தான் அதை உணருவதில்லை. கடைசியாக என் நண்பர் blackல்லாவாது டிக்கெட் ஏதாவது கிடைக்கிறதா என்று பார்த்துவிட்டு டிக்கெட் ஏதும் கிடைக்காமல் ஏமாற்றத்துடன் திரும்பியதுடன் நாளை மாலை டிக்கெட்டிற்கு முன் பதிவு செய்வதாக கூறிச்சென்ற்து மனதிற்கு இதமாக இருந்தது. நடிகர் திலகம் இன்னும் சாகவில்லை! அவர் இன்னும் உயிரோடுதான் இருக்கிறார். நன்றி!
நட்புடன்!
திரு. இராகவேந்திரன் அவர்களுக்கு,
ஆறாவது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் நமது நடிகர் திலகம்.காமி ற்கு என் உளமார்ந்த வாழ்த்துக்கள்.
நட்புடன்!
வெற்றிகரமாக ஆறாவது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் நடிகர் திலகம் .காம் இணைய தளத்திற்கும் அதன் வெற்றிக்கும் புதுமைக்கும் அயராது பாடுபடும் நிர்வாக சிற்பி ராகவேந்தர் சார் அவர்களுக்கும் மனங்கனிந்த வாழ்த்துகள்.
அன்புடன்
சிவாஜி தாசன் அவர்களே,
இன்று மாலை ஏ.ஜி.எஸ். அரங்கு மட்டுமல்ல, சத்யம் [மதிய காட்சி] எஸ்கேப் மாலைக் காட்சி, பி.வி.ஆர். ஆகியவையும் ஹவுஸ் புல். மாயாஜாலிலும் அது போன்றே status.
அன்புடன்
நந்தன வருட தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!
http://i1110.photobucket.com/albums/...Natural1-1.jpg
அன்புடன்,
பம்மலார்.
நந்தன வருடத்தில் ஆனந்தமாக ஆறாவது ஆண்டில் ஏறுநடை போடும் நமது நடிகர்திலகம்.காம் இணையதளத்திற்கு இதயங்கனிந்த நல்வாழ்த்துக்கள் !
Raghavendran Sir, Hats off to You !
தங்களுக்கு ஒரு அன்புப்பரிசு:
http://i1110.photobucket.com/albums/...r/SES100-1.jpg
பாசத்துடன்,
பம்மலார்.
முத்தான முப்பது ஆண்டுகள்
[14.4.1982 - 14.4.2012]
CONGRATS ILAIYA THILAGAM !
http://i1110.photobucket.com/albums/...r/Prabhu-1.jpg
HATS OFF !! KEEP IT UP !!!
With Love & Affection,
Pammalar.
Dear Gopal Sir,
Thank you so much for your whole-hearted appreciation !
As you rightly pointed out, we are missing the services of mr_karthik & Sister Saradha, two towering pillars of our thread for more than a quarter. Hope Nandhana varudam brings them to our fold.
Warm Wishes & Regards,
Pammalar.
சகோதரி சாரதா & mr_karthik,
தங்களுக்கு உளங்கனிந்த தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் !
நமது திரியின் தூண்களான தாங்கள் இருவரும் இதில் காலாண்டுக்கும் மேலாகப் பங்குபெறாமல் இருப்பதை வார்த்தைகளால் வருணிக்க முடியாது. அது ஒரு இனம் புரியாத சோகம். தங்கள் இருவருடைய பங்களிப்புகளுக்கு இணை தாங்கள் இருவர் மட்டுமே.
நானும், வாசு சாரும் இடுகை செய்யும் ஒவ்வொரு பதிவுக்கும் அலுக்காமல்,சளைக்காமல் உடனுக்குடன் உளமாரப் பாராட்டும் உயர்ந்த உள்ளம் படைத்த தாங்கள் இருவரும் நந்தன வருடம் பிறந்துள்ள இந்த நல்ல நேரத்தில் மீண்டும் தங்கள் மேலான பங்களிப்புகளை வாரி வழங்க விரைந்துவர வேண்டும். எங்களையும் பாராட்டி ஊக்குவிக்க வேண்டும். இது எனது-எங்களது அன்பான-பாசமான வேண்டுகோள். இதற்கு தாங்கள் செவி மடுப்பீர்கள் என்று நம்புகிறோம்.
உளமாரப் பாராட்டுவதும் மனிதனுக்குரிய ஓர் உயர்ந்த பண்பு என்பதனை மிக நேர்த்தியாக உலகுக்கு உணர்த்திய தங்கள் இருவருக்கும் மீண்டும் நமது திரியின் சார்பில் ஒளிமிகு நந்தன வருட நல்வாழ்த்துக்கள் !
பாசத்துடன்,
பம்மலார்.
டியர் வாசுதேவன் சார்,
தங்களுடைய மேன்மையான பாராட்டுக்கு எனது மென்மையான நன்றிகள் !
"வியட்நாம் வீடு" விஷுவல்கள் வியப்பின் விளிம்பைத் தொட்டது !
"அவன் தான் மனிதன்" பதிவுகள் பதிவுவித்தகர் தாங்கள் ஒருவரே என்று பறைசாற்றுகிறது !
['ஆனந்த விகடன்' விமர்சனம் இதம், 'பொம்மை' படங்கள் பதம்]
"ஹரிச்சந்திரா" : ஆஹா, வருணிக்க வார்த்தைகளைத் தேடுகிறேன் !
டியர் சந்திரசேகரன் சார்,
நாகர்கோவில் மற்றும் நெல்லையில் சிவாஜி பேரவை சார்பில் நடைபெற்ற "கர்ணன்" 25வது நாள் விழாப் புகைப்படங்கள் மற்றும் செய்திகள் அருமை. வழங்கியமைக்கு நன்றி !
அன்புடன்,
பம்மலார்.
அன்பு பம்மலார் சார்,
தங்கள் அன்பிற்கும், பதிவுகளைப் பற்றிய பாராட்டுதல்களுக்கும் தலை வணங்குகிறேன்.
தங்களுக்கு என் இனிய தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். தாங்கள் எல்லா வளமும் பெற்று வாழ நம் நடிகர் திலகத்தை உளமார வேண்டுகிறேன்.
தங்களால்தான் காணக் கிடைக்காத பல அரிய ஆவணப் பதிவுகள் எங்களுக்குக் கிடைக்கின்றன. அதுவும் வியட்நாம் வீடு, அவன்தான் மனிதன் போன்ற படங்களின் விமர்சனங்கள் அன்றைய பத்திரிக்கைகளின் வாயிலாக நீங்கள் வழங்கும் போது ஏற்படும் மகிழ்ச்சிக்கு அளவேது? நான் அது போன்ற பத்திரிக்கைகளைத் தேடி அலைந்திருக்கிறேன். கிடைப்பது மிக அரிதாக குதிரைக்கொம்பாகத்தான் இன்றளவும் இருக்கிறது. சேர்த்து வைத்திருந்த சில ஆவணங்களும் சரியான பராமரிப்பின்றி சேதமுற்று விட்டன. ஆனால் எங்களை விட தாங்கள் வயதில் குறைந்திருந்தாலும் சிறுவயது முதற்கொண்டே சிறுத்தொண்டர் போல நம் இறைவனாரின் மேல் உள்ள அளவு கடந்த பக்தியினால் இந்தியாவெங்கும் தேடி அலைந்து குருவி சேர்ப்பது போல உங்கள் வாழ்நாளில் பெரும்பகுதியை இதற்காக மெனக்கெட்டு செலவிட்டுள்ளீர்கள்.
அதுமட்டுமல்ல. எனக்கு தலைவர் பற்றிய அரிய ஆவணம் ஒன்று கடலூரில் ஒரு கடையில் கிடைத்தது. அதை வாங்கலாம் என்று விலை விசாரித்தால் அதற்கு கடைக்காரர் சொன்ன விலையில் என் தலை சுற்றியது. இரண்டாவது அக்கால பொம்மை, பேசும்படம், சினிமா எக்ஸ்பிரஸ்,ஜெமினி சினிமா போன்ற பத்திரிக்கைகளைக் கேட்டால் இன்றைய தலைமுறையினர் பல பேர் சிரிக்கிறார்கள். அக்காலத்து ஆசாமிகளோ அதெல்லாம் "இப்போது எப்படி சார் கிடைக்கும்? என்று ஏளனப் பார்வை வீசுகிறார்கள். அப்படியே ஒன்றிரண்டு கிடைத்தாலும் அதற்கு அவர்கள் சொல்லும் விலையே தனி. பெரிய நூலகங்களில் கேட்டாலோ அங்கும் கிடைப்பதில்லை. அப்படியே கிடைத்தாலும் அதற்கு ஏகப்பட்ட கட்டுப்பாடுகள். விதிமுறைகள்.
ஆனால் நாங்கள் செய்த பாக்கியம் எல்லோருக்குமாய் சேர்த்து நீங்கள் கிடைத்து விட்டீர்கள். தாங்கள் இதற்காக எவ்வளவு நேரத்தையும், பணத்தையும், உடல் உழைப்பையும் செலவிட்டீர்கள் என்பதை நினைத்துப் பார்க்கவே பிரம்மிப்பாகவும், மலைப்பாகவும் இருக்கிறது. எவ்வளவு ஆவணங்கள்!. எவ்வளவு புகைப்படங்கள்!
நம் தலைவரின் ரசிகர்கள் விழா எது எடுத்தாலும் பேனர்களுக்கு புகைப்படம் வேண்டுமா... படங்களைப் பற்றிய துல்லியமான புள்ளி விவரங்கள் ஆதாரத்துடன் வேண்டுமா...தலைவரைப் பற்றிய புத்தகங்களுக்கு அனைத்து விஷயங்களும் வேண்டுமா... கல்யாணப் பத்திரிகை அடிக்க தலைவரின் ஸ்டில் வேண்டுமா....
"கூப்பிடு பம்மலாரை"
என்று அனைவரும் ஒரு சேர அழைப்பது தங்களைத் தான். அந்த நம்பிக்கைக்கும் தாங்கள் பங்கம் வைக்காமல் கேட்டவருக்கு கேட்டபடி 'கேட்டதும் கொடுப்பவனே கிருஷ்ணா...கிருஷ்ணா' என்ற கூற்றுக்கேற்ப ஆவணங்களையும், ஸ்டில்களையும் கர்ணனாய் கொடுத்துக் கொண்டேதான் இருக்கிறீகள். அவ்வளவு ஆவணகளையும் எலி, கரப்பான், கரையான், மழை, புயல், வெயில் அனைத்தையும் மீறி பாதுகாப்பது என்பது லேசுப்பட்ட காரியமல்ல. பல்வேறு இடங்களில் சுற்றி தாங்கள் சிரமப்பட்டு சேகரித்து வைத்துள்ள அபூர்வ ஆவணங்களையும், புகைப்படங்களையும் எங்களுடன் மனமகிழ்ச்சியோடு தாங்கள் பகிர்ந்து கொள்வது தங்களின் மேல் எங்களுக்கிருக்கும் மரியாதையை மேலும் மேலும் விரிவு படுத்திக் கொண்டே போகிறது. ஒரு விநாடியைக் கூட வீணடிக்காமல் பணமாக மாற்றி கொள்ளத் துடிக்கும் இந்தக் காலத்தில் எந்த ஒரு பிரதிபலனையும் எதிர்பாராமல் தாங்கள் இரவு பகல் பாராமல் திரிக்காக தங்களை அர்ப்பணித்துக் கொள்வதற்கு மிக உயர்ந்த உள்ளமும், எண்ணமும் வேண்டும். அது தங்களிடம் தாராளமாய் உள்ளது. பகலில் தாங்கள் அலுவலகப் பணிகளை முடித்து வீடு திரும்பியவுடன் பல இரவுகளில் தூங்காமல் கண் விழித்து திரியே கதியென்று இருப்பதை பல முறை நான் கவனித்திருக்கிறேன். கை பேசியைக் கூட சுவிட்ச் ஆப் செய்துவிட்டு இடைவிடாமல் பதிவுகள் இட்டதை நான் நன்கு அறிவேன்.
ஏதோ உங்களைப் புகழ்வதற்காக இதை எழுதுகிறேன் என்று தாங்கள் நினைக்க வேண்டாம். நானும் ஆவணைங்களுக்காக அலைந்து திரிந்து ஏமாந்ததுதான் மிச்சம். 'சே' என்று அலுத்து, சலித்து, வெறுத்து விட்டு வந்து விட்டேன். விடா முயற்சி சென்று வெற்றி பெறுவதற்கு நான் ஒன்றும் பம்மலார் அல்லவே!
அன்பன்
வாசுதேவன்.
திரு. வாசுதேவன் அவர்களுக்கு!
உங்கள் ஆதங்கம் நியாயமானது தான். எனக்கும் இது சம்பந்தம்மாக ஒரு ஆதங்கம் உண்டு. அதாவது, நடிகர் திலகம் அவர்களைப் பற்றி பேசுகிற போது ஏனோ முதல் 25 ஆண்டுகளோடு நிறுத்திக் கொள்கிறோம் என்று. அடுத்த இருபத்தைந்து ஆண்டுகளைப் பற்றி நாம் பேசுவதில்லை. மக்களும் பேசுவதில்லை, மீடியாக்களும் பேசுவதில்லை, அவர்களோடு சேர்ந்து நாமும் பேசுவதில்லை. இனிவரும் காலங்களிலாவது இந்த குறை களைய வேண்டும் என்று விரும்புகிறேன். நன்றி!
நட்புடன்!
அன்பு பம்மலார் சார்,
நந்தன வருடத்தில் மட்டுமல்ல நவயுகத்திற்கும் ஈடுஇணையற்ற நாயகனாய் விளங்கும் நம்மவர் நடிகர் திலகம் கம்பீரமாக அமர்ந்திருக்கும் அந்த புகைப்பட ஸ்டில் அட்டகாச அருமை. இணையில்லா அழகுடன் ஜொலிக்கும் நம் இளம் வயது நாயகரின் அந்த புகைப்படம் இதயத்தில் இனம் புரியா இன்பத்தை அள்ளி வழங்குகிறது. புத்தாண்டிற்கு புதுமைப் பரிசு வழங்கிய தங்களுக்கு புளகாங்கித நன்றி!
நமது நடிகர்திலகம்.காம் இணையதளத்திற்கு இதயங்கனிந்த நல்வாழ்த்துக்களை திரு. ராகவேந்திரன் சாருக்கு அவருக்குப் மிகவும் பிடித்த 'சுமதி என் சுந்தரி' ஸ்டில் மூலம் தெரிவித்திருப்பது சுந்தரம்.
இளைய திலகத்தின் முப்பதாண்டு கலைச் சேவையை நெஞ்சில் நிறுத்தி அவருக்கு தாங்கள் வாழ்த்துக் கூறியிருப்பது அற்புதம். அந்த ஸ்டில்லும் கொள்ளை அழகு.
அன்பன்
வாசுதேவன்.
திரு. Kc shekar அவர்களுக்கு,
தமிழகம் முழுவதும் தாங்கள் நடத்தி வரும் கர்ணன் வைபவத்திற்கும், நலத்திட்டங்களுக்கும் என் நன்றியோடு கலந்த வாழ்த்துக்கள்!
நட்புடன்!
திரு.வாசுதேவன் சார், திரு.பம்மலார் சார் தங்கள் பாராட்டுக்கு நன்றி.
தங்களைப் போன்ற ரசிக சிகரங்களின் வாழ்த்துக்களோடு, இந்த நந்தன வருடத்தில் சிவாஜி சமூகநலப்பேரவையின் பணி மென்மேலும் சிறக்க எல்லாம் வல்ல இறைவன் மற்றும் விண்ணிலிருக்கும் நடிகர்திலகம் ஆசிகளை இறைஞ்சுகிறேன்.
அன்பு திரு.சிவாஜிதாசன் அவர்களே!
தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி. நம் இருவருக்கும் (இதில் பம்மலாரும் அடங்குவார்) ஒரே சிந்தனைதான் என்பதை எண்ணும் போது ஆச்சர்யமாக இருக்கிறது.சமீபத்தில்தான் நானும், பம்மலாரும் இது பற்றி பேசிக்கொண்டிருந்தோம். அந்தக் கருத்தைத் தாங்கள் அப்படியே பிரதிபலித்துள்ளீர்கள். இதைத்தான் vibration என்கிறார்களோ!
பொதுவாகவே எல்லோரும் ஏன் நமது ரசிகர்களும் கூட ஏதோ இருநூறு படங்களுக்கு மேல் வந்த தலைவரின் படங்கள் சுமார் ரகம் தான். இருநூறோடு அவர் நிப்பாட்டி இருக்கலாம் என்று கூறுவார்கள். அதில் எனக்கு உடன்பாடில்லை. பழைய படங்களின் தரத்தை புதிய படங்களில் காண முடியாது என்பது வேறு விஷயம். அதற்காக பழைய படங்களின் தரத்தை அப்படியே புதிய படங்களில் எதிர்பார்க்காமல் அதில் உள்ள நல்ல விஷயங்களை எடுத்துக் கொள்ளலாமே! நான் குறிப்பிடுவது இப்போது வரும் புதுப் படங்களை அல்ல. இருநூறுக்கு மேல் வந்த தலைவரின் திரைப்படங்களைப் பற்றி.
திரிசூலத்திற்குப் பிறகும் பல நல்ல படங்கள், வெற்றிப்படங்கள் வந்திருக்கின்றன என்பதுதான் நிதர்சனமான உண்மை. இது என்னுடைய சொந்தக் கருத்து.
திரிசூலத்திற்கு அடுத்து 201- ஆவது படமாக வந்த 'கவரிமான்' ஒரு அற்புதமான படம் என்று எல்லோராலுமே ஏற்றுக் கொள்ளப்பட்டது. தலைவர் கூட இயக்குனர் திரு S.P.முத்துராமன் அவர்களிடம் "செதுக்கி செதுக்கி அழகான சிற்பமாய் இப்படத்தை வடித்திருக்கிறாய். ஜனங்கள் ரசிப்பார்களா?" என்று கேட்டாராம். அந்தப் படத்தை தரக் குறைவாக யாருமே விமர்சித்ததே இல்லை. அதற்கு முன்னால் வந்த திரிசூலத்தின் விஸ்வரூப வெற்றியினால் கவரிமான் பாதிக்கப்பட்டதே தவிர நல்ல படம் என்ற பெயரை அது இழக்கவே இழக்காது. மிகப் பெரிய வெற்றி அடையாவிட்டாலும் அது தோல்விப்படமல்ல. (பம்மலாரின் 'கவரிமான்' பதிவின் குறிப்பில் இதனை கவனித்திருப்பீர்கள்).
'நல்லதொரு குடும்பம்' அனைவரும் குடும்பத்தோடு பார்க்கக் கூடிய ஒரு நல்ல படம். நல்ல வெற்றியைப் பெற்ற படமும் கூட. எங்கள் கடலூரில் 40- நாட்களுக்கு மேல் ஓடி நல்ல வசூலை அள்ளித் தந்தது அப்படம்.
'இமயம்' தோல்விப் படமென்றால் கூட இப்போது பாருங்கள். very intersting -ஆன தலைவரின் நடிப்பு முத்திரைகளைத் தன்னகத்தே கொண்ட படம்.
'நான் வாழ வைப்பேன்' நல்ல வெற்றிப்படம். ரஜினிக்கு மறுவாழ்வு தந்த படம். நம் தலைவரும் அருமையாகப் பண்ணியிருப்பார்.(முக்கியமாகத் தலைவலி வரும் காட்சிகளில்)
'ரிஷிமூலம்' அனைவராலும் பாராட்டுப் பெற்று வெற்றியடைந்த படம்.
'எமனுக்கு எமன்' ஜாலியாகப் போகும் படம். சிரிப்புக்கு 100% உத்திரவாதம்.
'சத்திய சுந்தரம்' எதிர்பாராத பிரம்மாண்ட வெற்றியை அளித்த கலகலப்பான குடும்பப்படம். குவியல் குவியலாக தாய்மார்கள் இப்படத்தைக் கண்டு களித்தார்கள். நல்ல குடும்பப் படமாக குறிப்பாக பெண்களைக் கவரும் வகையில் அமைந்திருந்தது.
இதே வரிசைகளில் கல்தூண், கீழ்வானம் சிவக்கும், வா கண்ணா வா, வசூலில் அட்டகாசம் செய்த சங்கிலி (பொதுவாக இரவுக்காட்சிகள் 9.30 அல்லது 10.00 மணிக்குத் துவங்கும். ஆனால் சங்கிலி கதையே வேறு. கடலூரில் இரவு பதினோரு மணிக்குள் இரவுக்காட்சி முடிந்துவிடும். இந்தப் படம் மட்டுமே அந்தப் பெயரைத் தட்டிச் சென்றது. அப்படி ஒரு கூட்டம் இப்படத்திற்கு. ஷோ கணக்கெல்லாம் கிடையாது. படம் விட்ட ஐந்தே நிமிடங்களில் அரங்கு நிறைந்து விடும். இப்படி பேயக்கூட்டத்துடன் எங்கள் ஊரிலும் ஓடி வசூலை வாரி அள்ளினார் 'சங்கிலி').
தீவிர வசூல் வேட்டியாடிய தீர்ப்பு, அற்புத நடிப்பைக் கொண்ட தியாகி, கேஷுவல் நடிப்பில் மனதை உருக்கிய துணை, மறுபடியும் பிராமணராக நடிப்புக் கொடி நாட்டிய பரிட்சைக்கு நேரமாச்சு, படித்ததின் பயனை மறந்து, காதலில் உழன்று, கடமையை மறந்து, பிறந்த கிராமத்தையே உதாசீனப்படுத்தும் தன் தம்பியை வித்தியாசமான அணுகுமுறையில் திருத்தி, கிராமத்து மக்களுக்கு மருத்துவ சேவை புரிய வைக்கும் கிராமத்தானாக நடித்து, நல்ல மெசேஜை சொல்லிய ஊரும் உறவும், வெள்ளி விழாக் கண்ட நீதிபதி, கேலி செய்தோரின் வாயை அடைத்து வசூலில் பின்னியெடுத்த மசாலாக் கலவை சந்திப்பு, மிருதங்க வித்வான்களே மெய் சிலிர்த்துப் பாராட்டிய மிருதங்கச் சக்கரவர்த்தி, வெள்ளை மனம் கொண்ட பாதராகவும், கர்ஜனை புரியும் போலீஸ் அதிகாரியாகவும் இரு மாறுபட்ட வேடங்களில் கலக்கிய வெள்ளை ரோஜா, திரும்பவும் போலீஸ் அதிகாரியாக மிரட்டிய திருப்பம், வசூலிலும், நடிப்பிலும் வரலாறு படைத்த வாழ்க்கை, மழலையின் மேல் பாசம் வைத்து மலைக்க வைத்த நடிப்பைப் பகிர்ந்து கொண்ட பந்தம், முக்காலமும் தலைவர் புகழ் பாடிக்கொண்டிருக்கும் முதல் மரியாதை, விசுவாமித்திரரை வியக்கும் வகையில் நடிப்பால் நமக்குக் காட்டிய ராஜரிஷி, அண்ணனின் அன்புப் பாசத்தை தம்பிகளிடம் கண்களிலேயே பிரதிபலித்த படிக்காதவன்,
இயக்குனர் வேடத்தில் இதயத்தை வருடிய சாதனை,
படுத்துக் கொண்டே நடிப்பில் ஜெயித்த மருமகள்,
ஸ்டைலிலும், நடிப்பிலும் ஜமாய்த்த ஜல்லிக் கட்டு,
தேவர்களும் மயங்கும் நடிப்பைக் கொண்ட தேவர் மகன்,
மகள் விதவையான சோகத்தை நேரிடையாகக் கண்டு அனுபவித்து சொல்லொணாத் துயரங்களுக்கு ஆளாகும் பசும்பொன்,
ஜாலியான அறுபது வயது இளைஞனாக யூத்களுடன் கும்மாளமிட்ட ஒன்ஸ்மோர்,
மோகன்லாலுடன் இணைந்து மோகன நடிப்பை வழங்கிய, மலையாளத் தமிழ் பேசிய ஒரு யாத்ராமொழி,
கடைசி வரையிலும் கரகாட்டம் ஆடி களேபரம் செய்த என் ஆச ராசாவே,
காதலர்களை இணையவைக்கும் முதியவராக இளையவர்களுக்கு ஈடு கொடுத்த பூப்பறிக்க வருகிறோம்
என்று தன் திறமை இறுதி வரை குறைந்ததல்ல என்று அவர் வாழ்நாள் முழுதும் தன் திறமையைக் காட்டினார் என்றுதான் கூற வேண்டும்.
அவருடைய முன்னாள் படங்களோடு இருநூறுக்கும் மேல் வந்த படங்களை ஒப்பிடுவதே தவறு. பின்னாட்களில் அவர் படங்கள் வேஸ்ட் என்பது தவறு என்பதும் என் தாழ்மையான கருத்து. பின்னாட்களிலும் மிகச் சிறந்த படங்களை அவர் தந்திருக்கிறார். நல்ல வித்தியாசமான நடிப்பையும் நமக்கு வழங்கி விட்டுத்தான் போய் இருக்கிறார். சில படங்கள் அவர் பெயரைக் கெடுத்திருக்கலாம். அவரும் அதற்குக் காரணமாய் இருந்திருக்கலாம். எல்லாவற்றையும் சிறப்பாகவும், வெற்றியுடனும் செய்யக் கூடியவர்கள் யாரும் இல்லை. ஏற்றத் தாழ்வுகள், சந்தர்ப்ப சூழ்நிலைகள், வெற்றி தோல்விகள் எல்லோருக்கும் உண்டு. இருநூறுக்கு முன்னாலும் அவருடைய மோசமான படங்கள் இருக்கின்றன. தோல்விப்படங்களும் இருந்திருக்கின்றன. எதையும் எதனுடனும் ஒப்பிடாமல் பார்ப்பது தான் ஒரு சரியான விமர்சனமாக இருக்க முடியும் என்பது என் கருத்து.
வெற்றி தோல்விகளை அவரும் எதிர்கொண்டே ஆக வேண்டும். நாம் எதிர்பார்த்த அளவுக்கு படங்களின் தரங்கள் இல்லாதிருந்திருக்கலாம். ஆனால் ஒரு இடத்திலாவது அவர் எல்லோரையும் வாயைப் பிளக்க வைத்து விடுவார். மறுபடியும் சொல்கிறேன். பின்னாட்களிலும் அவர் நல்ல படங்கள் பல கொடுத்திருக்கிறார். பிற படங்களில் இல்லாத நடிப்பையும் அளித்திருக்கிறார். அதனால் தான் இத்திரியில் நான் உறுப்பினரானவுடன் தாங்கள் மனதிலுள்ள எண்ணம் எனக்கும் இருந்ததினால் என்னுடைய முதல் ஆய்வுப் படமாக பின்னாளில் வெளியான 'கருடா சௌக்கியமா' படத்தை ஆய்வு செய்ய எடுத்துக் கொண்டேன்.
சற்று நீண்ட பதிவாகி விட்டது. பொறுமையுடன் படித்ததற்கு மிக்க நன்றி. அவர் விண்ணில் தெய்வமாக வாழ்ந்தாலும் மண்ணில் இருந்த போது அவரும் மனிதர் தான். ஆசாபாசங்களுக்கு உட்பட்டவர்தான், விருப்பு வெறுப்புகள் அவருக்கும் உண்டு. அவர் அப்போது கடவுள் இல்லை. எல்லாவற்றிலுமே நூறு சதவிகிதம் வெற்றியை எவரும் கொடுத்து விட முடியாது.
இப்படி ஒரு பதிவை நெடுநாட்களாகவே எழுத வேண்டும் என்று நினைத்திருந்தேன். அது தங்களால் இன்று நிறைவேறிற்று. அதற்காகவும் தங்களுக்கு என் அன்பு நன்றிகள்.
நன்றியுடன்
வாசுதேவன்.
திரு. ராகவேந்திரன் அவர்களே!.
ஆறாவது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் நடிகர் திலகம்.காமி ற்கு உளமார்ந்த நல்வாழ்த்துக்கள்.
தொலைபேசியிலும் நம் திரியிலும் நமது இணைய தளத்தின் ஆறாம் ஆண்டு நுழைவிற்கு வாழ்த்துத் தெரிவித்த வியட்நாம் கோபால், வாசுதேவன், சந்திரசேகர், பம்மலார், முரளி சார், சிவாஜி தாசன், ராமஜெயம் மற்றும் அனைத்து நண்பர்களுக்கும் உளமார்ந்த நன்றி. தங்களுடைய அன்பும் ஆதரவும் என்றென்றும் வேண்டும்.
பம்மலார் சார், விட்டில் பூச்சி என்ற பெயரில் முதலில் படம் வளர்ந்த பொழுது வெளி வந்த ஸ்டில்லை சூப்பராக பாதுகாத்து இங்கே எனக்களித்தமைக்கு மிக்க நன்றி. அப்போது ஆரம்பித்த கதை, சற்றே மெருகேற்றப் பட்டு சுமதி என் சுந்தரி என வெளி வந்தது. தங்களுக்கு ஸ்பெஷலாக என் பாராட்டுக்கள்.
வாசுதேவன் சார்,
305 படத்திலும் 305 விதமான சிறப்பு முத்திரையுடன் தான் நடிகர் திலகம் நடித்திருப்பார். பெரிதும் கிண்டல் செய்யப் பட்ட லாரி டிரைவர் ராஜாக்கண்ணு படத்தில் தங்கைக்காக அவர் பாடும் பாடலான என்னென்பதோ பாடலாகட்டும், வெற்றிக்கு ஒருவன் படத்தில் தன் பயம் கலந்த பாசத்தை வெளிக் காட்டும் காட்சியிலாகட்டும், பட்டாக் கத்தி பைரவன் படத்தில் யாரோ நீயும் நானும் யாரோ பாடல் காட்சியாகட்டும், எல்லா படத்திலும் அவருடைய தனி முத்திரை இருக்கும். ஒரு சில பத்திரிகையாளர்கள் ஆரம்பித்து வைத்த பல்லவியை ஏனோ பெரும்பாலானவர் எதிர்க்க பயந்து பேச ஆரம்பித்ததன் விளைவுதான் அந்த 200 என்ற எல்லையில் நிற்க காரணமாயிருந்தது. உண்மையிலேயே மிகவும் பரிதாபத்திற்குரிய படம் என்றால் சொல்லக் கூடிய ஒரு படம் தர்மராஜா மட்டுமே. முழுக்க முழுக்க நடிகர் திலகத்தை வேஸ்ட் பண்ணிய படம் என்றால் அது தான். அதில் கூட அவர் விட்டு வைக்காமல் தன் தேசப் பற்றை வெளிக்காட்டும் விதமாக மூவர்ணக் கொடியுடன் ஒரு பாடலை அளித்திருப்பார்.
தங்களுடைய பதிவுகளை மேலும் மேலும் எதிர் பார்க்கிறோம்.
அன்புடன்
திரையுலகில் முப்பது ஆண்டுகள் சங்கிலித் தொடராய் வெற்றிகள் கண்ட சர்தார் 'ராஜாளி' யே! மேலும் சாதனைகள் புரிய வாழ்த்துக்கள்.
http://www.top10cinema.com/dataimage...-12872-1-3.jpg
அன்புடன்,
வாசுதேவன்.
இளைய திலகம் பிரபு அவர்களின் அரிய சாதனையை முன்னிட்டு
18-8-1993 'தேவி' இதழில் வெளியான இளைய திலகத்தின் 'எங்கள் குடும்பம்' கட்டுரை.
'தேவி' இதழ் பக்கம் 9
http://i1087.photobucket.com/albums/...n31355/p-1.jpg
'தேவி' இதழ் பக்கம் 10
http://i1087.photobucket.com/albums/...31355/p2-1.jpg
அன்புடன்,
வாசுதேவன்.
Vasu Sir,Raghavendran Sir,
Please do not mistake me for my intervention.It calls for some explanation.As an ardent ,a born devotee of Acting God,I supported his later movies and felt happy about their successes and wished for his longevity as an actor.But here,we are talking about an acting God not a mortal.We are happy with his successes and proud to talk about it loudly to the world.(thats why I started my myth series)I feel that this thread is not to talk among ourselves but should serve as a future Documentary evidence and a kind of reference point for the youngsters to know about him.NT remained a good actor till his Pooparikka varugirom ,no doubt,but he remained the best in the world from 1952 to 1974.(Thanga Padakkam as last).Barring Avanthan Manithan,Rojavin Roja,Deepam,Annan oru Koil,Naan Vazha Vaipen,Thunai,Mudhal Mariadhai and Thevar Magan where we could rejoice the glimpse of his adaption to the neo- cinema so called realistic.If someone wants to glorify mediocrity as a showpiece of his talence,sorry guys,I am not your associate.The person who saw God Father and Nayagan happened to see Garuda on the basis of our writing skills,you are losing a potential young mind to perpetuate our glory.I request all of you not to be over-enthusiastic to market the sub-mediocre Films of his(He did plenty in later part of his career)and unimaginative but good performances,you are not doing justice to present him as the best in the world.Let us talk about his Natural , controlled,versatile performances from 1952-1958,Stylised method acting from 1958-1965, and his free flowing &improvised , unique style of acting from 1966-1974&His extrodinary acting merging with young talence in Thunai,Mudhal Mariadhai and Thevar Magan at later years.Despite my reservations,I chose some of his later movies for appreciation in my guidelines for movie selections.Dont think that a junior is trying to dictate terms but we should not lose track of our prime objective of introducing NT in proper perspective to the young minds.Every creative genius has a shelf life for his creativity and beyond the creative life span they bask in the good will and past glory to cash on the past hard work during their productive Span. It happened to many great Novelists,Artists,Cricketers(Tendulkar) and let us accept this as a fact of life and go on.But our Acting God had the verve and Fire till his last breath and proved time and again to the young generation in later year movies also.
I only request you to abstain from certain Movies with better bench marks set by others(Same genre or theme) and obvious lack of congruence in Energy,Physique,agility,cheer in some of his later movies.We dont criticise but avoid glorifying it.
But Success or failure is not a criteria for our selection here but a class and watcheable presentation is the main objective.
'சர்தார்' ராஜாளியின் அறிமுகத் தோற்றம்.
http://i1087.photobucket.com/albums/...31355/1-91.jpg
உடலும் உயிரும்
http://i1087.photobucket.com/albums/...31355/2-63.jpg
http://i1087.photobucket.com/albums/...31355/3-45.jpg
'அக்னி நட்சத்திரம்' படத்தில் இளைய திலகம்
http://i1087.photobucket.com/albums/...31355/4-34.jpg
அன்புடன்,
வாசுதேவன்.
NOV, I still feel K.R.V shouldn't have acted with Sivaji. He deserved better heroines ::yessir: I agree with most of Gopal sir's list
டியர் கோபால்,Quote:
I request all of you not to be over-enthusiastic to market the sub-mediocre Films of his(He did plenty in later part of his career)and unimaginative good performances,you are acting like his Friendly Enemies(Anukoola Chatru)
தங்களுடைய கருத்துக்களுக்கு என்னுடைய கண்டனங்களை கடுமையான முறையில் தெரிவிக்க விரும்புகிறேன். இத்திரியில் இதைப் போன்று எழுதி நானும் சிவாஜி ரசிகர் தான் என்று கூறி சிலர் முன்னர் எழுதி அவரை விமர்சிப்பதற்கு இந்தப் படங்களை கேடயமாக பயன் படுத்தி வந்துள்ளனர். அவர்களுக்கு சரியான பதிலடியை முன்னர் அளித்துள்ளனர் நம்முடைய நண்பர்கள். அவர்களுடைய பட்டியலில் தாங்களும் இணைந்து விட்டீர்களோ என்கிற ஐயத்தை தங்களுடைய கருத்து தோற்றுவிக்கிறது.
கிட்டத் தட்ட பாதிக்கு மேல் அவர் படங்களை நாம் ஒதுக்கி விட வேண்டும் என்பது போல் எழுதியுள்ளீர்கள்.
எங்களையெல்லாம் அனுகூல சத்ருக்கள் என்று எழுதியிருக்கிறீர்கள். தோல்விப்படங்களிலும் அவருடைய சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார், அவற்றை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் சொல்லி அந்த நடிப்பில் என்னென்ன இலக்கணங்கள் உள்ளன என்பதையெல்லாம் ஆராய்ந்து சொல்வது எப்படி அனுகூல சத்ரு என்ற கணக்கில் சேரும். அப்படியென்றால் அவருடைய நடிப்பில் உள்ளதெல்லாம் உதவாதவை என்று பொருளா. அவருடன் புதிய தலைமுறையைச் சேர்ந்த இயக்குநர்கள் பலர் உழைத்திருக்கிறார்கள், அவர்களெல்லாம் புதிய பரிணாமத்தில் அவருடைய நடிப்பைக் கண்டு அதனை பயன் படுத்தியிருக்கிறார்கள். அவற்றை எல்லாம் புறக்கணிக்க வேண்டுமா. தங்கள் ஒருவருக்கு பிடித்த படங்களை மட்டும் தான் இத்திரியில் விவாதிக்க வேண்டுமா. தாங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள். அவரைப் பற்றி விமர்சிப்பவர்களுக்குத் தாங்களே பாதை அமைத்துக் கொடுப்பது போல் தோன்றுகிறதே. புரியவில்லை. நடிகர் திலகம் என்கிற அட்சய பாத்திரத்தில் அவரவருக்கு வேண்டிய வகையில் கிடைக்கும் போது ஒவ்வொருவரும் தமக்குப் பிடித்து தாம் ரசித்த விஷயங்களைத் தான் இங்கே பதிந்து கொள்கிறோம். எல்லாமே எல்லாருக்கும் பிடித்திருக்கும் எனக் கூற முடியாது. அதே சமயம் பிடித்தவர்கள் தங்கள் கருத்துக்களைக் கூறலாமே. உதாரணத்திற்கு துணை படத்தில் காக்கா வலிப்புக் காட்சியில் அவருடைய சமயோசித புத்தியைக் கடைப்பிடித்ததைப் பற்றி இயக்குநர் துரை அவர்களும் வியட்நாம் வீடு சுந்தரம் அவர்களும் கூறியுள்ளனர். அது போன்று பல சம்பவங்கள் நடிக்க விரும்பி வரும் இளைஞர்களுக்கு பயனுள்ளதாய் இருக்கும். இதைப் போன்று ஒவ்வொரு படத்திலும் அவர் நடிப்பில் ஏதாவது ஒரு சிறப்பினைப் புகுத்தியிருப்பார்.
1974 வரைக்கும் தான் நான் சிவாஜியை ரசிப்பேன் என்று கூறுபவரை நாம் எப்படி சிவாஜி ரசிகன் என்று ஏற்றுக் கொள்வது.
எனக்குத் தெரியவில்லை. நம் நண்பர்கள் தான் விளக்க வேண்டும்.
Dear Mr.Raghavendar,
If this is the pre-condition to be addressed as his fan,I am not a fan and leave me out of this thread.This is the first time in my life,I am being doubted for my devotion to our Acting god.First Read my full message carefully and if it makes sense ,then we will go further.We are not like other fans who supports blindly,and I think only our Acting God is bestowed with intelleuctual&thinking Fans.The question is to present the best to the future generation as they cant devote their full time to the past . They are busy with so many things with gruelling routines ,you cant expect them to view everything to choose &It is our duty to give them the best out of what we have.If we can concur,I write further.I leave it to the other hubbers to decide it.
Best wishes to Mr Ragavendra on the occassion of Nadigarthilagam.com entering 6th year
It's a unique achievement.
Gopal sir,
Every one has their own view and for me I become NT veriyan after watching Lorry Driver Rajakannu, Sangili, Santhippu, Sumangali. So in my view NT is "Atchaya Pathiram" and you can get any kind of food to satisfy your taste whether his first or middle or after 1980's movies.
For me I am attracted more towards his movies done after 1980's just because of NT has given more than enough and justified his role and also made fans like me happy. Even yesterday watching LDR and Anjal Petti 520, I felt each and every scene in AP520 and LDR totally different and his body language and facial expression is quite brilliant. The beauty of NT movies reagardless of any years are each time you watch and you could see different different facial expression and body language and some thing new. I don't think you can find any other actor have this kind of caliber and talent. So my humble request all NT movies are like diamond and day by day and year by year will glow and get value and respected by others, so let us full stop this topic and let us praise our NT.
After talking with you over the phone I can tell every one that you are die hard fan of NT and every day watch his movies , so there is no question about your affection to our NT.
Cheers,
Sathish
Dear Mr.Satish,
Yes.I decided to keep quite on these matters further.Everyone failed to notice whichever movies mentioned by Vasu Sir after 1981 figured in my shortlist.No actor in the world can claim that all his movies are good and watcheable.If you go thru NT comment on his own Films ,he was honest and ruthless.(He went to the extent of saying Why did they make this Film?For his 50th movie Sarangadhara , Even I didn't remember it for Nan Vanangum deivam Etc).Let me suggest this humbly.Let us take the shortlisted movies for detailed analysis.In other Films ,if there are some exceptional performance by NT,Let us analyse only the scenes in specific analysis case by case.I am doing this for projecting the best of our God to the world.No one is understanding my concern.
I continue with my wishlist(Hope I wont get comdemned for it)
I wish Our NT acted in these Films .
1)Malaikallan-PakshiRaja was begging our NT to do this role.As our NT was too busy to accept this offer,he offered this role to his friend who was not busy at that time.Later Pakshiraja switched camps and made Maragatham and Kalyaniyin Kanavan .Malaikallan was a neat film and could have been another jewel in our crown.
2)Nenjil oor Aalayam-A cult film with tailor made doctor role for our NT (ofcourse Patient role for Gemini or Muthuraman is OK) and the role would have attained more gloss with subtle NT performance .
3)Major Chandrakanth-Ofcourse major has lived that role to get his title but NT would have made it more memorable .
4)Nootrukku Nooru-I wish K.B and NT got together in this movie rather than lacklusture Ethiroli.Ofcourse ,Jai was adequate and his non-Expression and non-acting was managed by K.B well.But it was a monumental Film in crisp and intelligent screen play and our NT as Handsome college lecturer(Lakshmi in lead)with the scope to exploit(Ofcourse NT would have made it different from Andavan Kattalai),Hummm... what a miss!
5)Nan Avanillai-What a movie and what a subtle and good performance by Gemini.But NT with his body language and facial dexturity would have made it better ,though little exaggerated but with distinction in roles would have come more striking with his extraordinary performance.KB would have made more money!!
6)Sila Nerangalil Sila Manithargal-Though,heroine oriented,as guilt-ridden, middle aged remorseful gentleman -could have been a great supporting cameo role.
7)Oru Nadigai Nadagam Parkiral-Reporter Role could have been lapped up earlier than Mudhal Kural and we missed a great show (Sivaji-Lakshmi duel -great)
8)Sankarabaranam-A land mark movie appreciated from all quarters with great music.Somayajulu had an advantage of apt debudant's charm in this role.But NT would have given another Thillana like subtle and exemplary performance.
9)Kizhakku seemaiyile-A folk-story on sibling intimacy on Thevar community and whoelse we could think of?Though Vijaykumar was good and adequate,NT's presence would have made it as memorable as Pasa Malar.
10)Sandhya Ragam-Balu Mahendra's masterpiece and a terrible mis-casting.Chockalinga Bagavathar at best can be a hut-dweller and can't be accepted as a middle-class elder(Balu repeated that mistake in casting him as Ramesh Arvind's father in Sathileelavathi)If NT handled this role,it could have taken him to national accolade.Balu as an ardent NT fan could have enjoyed it.
டியர் கோபால் சார்,
நான் திரிக்கு வந்து கிட்டத்தட்ட ஒன்பது மாதங்கள் ஆகின்றன. எவ்வளவோ நல்ல பல விஷயங்கள் நடை பெற்றிருக்கின்றன. சில வருத்தமான விஷயங்களும் நடந்திருக்கின்றன. ஆனால் எதுவுமே எல்லை மீறாமல் நாகரீகமாகத்தான் நடந்து வந்திருக்கின்றன. ஆனால் மனம் வருந்தி நான் தெரிவிக்கும் என்னுடைய முதல் கண்டனப் பதிவிற்கு நீங்கள் காரணமாகி விட்டீர்கள்.
இரவு பகல் பாராமல், குடும்பத்தைக் கூட கவனிக்காமல் எங்கள் தலைவரின் மேல் உள்ள ஈடுபாட்டால் பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் திரியில் உள்ள அனைவரும் அவரவர் சக்திக்கு ஏற்ப தலைவரின் புகழை எங்களால் முடிந்த மட்டும் யார் மனமும் புண்படாமல் பதிவுகளாகக் கொடுத்துக் கொண்டிருக்கிறோம். அது உங்களுக்கே நன்றாகத் தெரியும். ஆனால் நீங்கள் இப்போது கை வைத்திருப்பது மிக மிக sensitive ஆன விஷயத்தில். நடிகர் திலகத்தின் முதல் ரசிகர் என்று மார் தட்டிக் கொள்ளும் நீங்கள் எந்த வகையில் முதல் ரசிகர்? உங்களுக்கு நாயகனும், காட் பாதரும் அருமையாகத் தெரிந்தால் நீங்கள் மார்லன் பிராண்டோவின் ரசிகர் ஆகி இருக்க வேண்டும். உங்கள் கூற்றுப்படி வேஸ்ட் நடிப்பை தந்த சிவாஜி அவர்களின் ரசிகர் ஆகி இருக்கக் கூடாது. சிவாஜி வெறியன் என்றும் கூறிக் கொள்ளக் கூடாது. கண்ணாடி வீட்டில் இருந்து கல் எரிந்து கொண்டிருக்கிறீர்கள். அது என்ன அனுகூல சத்ரு? திரியில் உள்ள அனைத்து அங்கத்தினர்களையும் அவமானப் படுத்தும் வார்த்தை அல்லவா அது. முதலில் நீங்கள் அனைத்துப் பதிவுகளையும் பொறுமையாக உட்கார்ந்து படித்துப் பாருங்கள். மேல்தட்டு மக்களுக்காக மட்டும் படைக்கப் பட்டவரல்ல நடிகர் திலகம். கோபால் ஒருவரை திருப்தி படுத்த மட்டும் அவர் அவதாரம் எடுக்க வில்லை. நீங்களே பல முறை சொல்லியிருக்கிறீகள் "தர்மராஜா போன்ற மோசமான படங்களில் கூட நடிகர் திலகத்தின் நடிப்பை யாராவது மோசமாக விமர்சித்தால் என்னிடம் அவன் ஒழிந்தான் என்று". அப்படியிருக்க இங்கே அனைவராலும் கோவிலாக மதிக்கப்படும் இந்தத் திரியை சிவாஜி வெறியன் என்று கூறிக் கொள்ளும் தாங்களே எங்களை எப்படி அவமானப் படுத்த முன் வந்தீர்கள்? உங்களுக்கு ஒரு நியாயம். அடுத்தவர்களுக்கு ஒரு நியாயமா? யாரோ வேறொரு ரசிகர் தலைவரை அவமானப் படுத்துவதை கொஞ்சமும் பொறுத்துக் கொள்ள முடியாத தாங்கள், அவருக்காக வாதாடி முதல் சிவாஜி ரசிகர் நான்தான் என்று அவர் பெருமையைக் காப்பற்றுவதாக பறைசாற்றிக் கொள்ளும் தாங்கள் எங்களை அனுகூல சத்ரு என்று அவமானப் படுத்துவதை எங்களால் எப்படி பொறுத்துக் கொள்ள முடியும்?
தயவு செய்து தேன் கூட்டில் கை வைக்காதீர்கள். எங்களுக்கு பராசக்தியும் ஒன்று தான். பூப்பறிக்க வருகிறோமும் ஒன்றுதான். பெற்ற குழந்தைகளிடம் நாங்கள் பேரம் பார்ப்பதில்லை.அதற்காக குறை விமர்சனங்களை ஏற்றுக் கொள்ளாமல் இருந்ததில்லை. நிறை குறைகளை நாங்கள் மனதார வரவேற்கிறோம். அவமானப் படுத்துவதை எங்களால் எப்படி பொறுத்துக் கொள்ள முடியும்? நீங்கள் இந்த வார்த்தை தவறு என உணர்ந்து அந்த வார்த்தையைத் திரும்பப் பெறும் வரையில் நான் இந்தத் திரியில் எனது பதிவுகளை இடப் போவதில்லை. அனுகூல சத்ருவான எனக்கு இனி இந்தத் திரியில் எந்த வேலையும் இல்லை.
மிகுந்த மன வருத்தத்துடன்
அனுகூல சத்ரு.