Appears as though not even one soul has seen my post(s) mmmm... :'(
Appears as though not even one soul has seen my post(s) mmmm... :'(
அன்பு நண்பர்கள் ஆதிராம் மற்றும் முத்ராமன் அவர்களுக்கு,
ஒருவர் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட பெயர்களில் இயங்குவது ஒன்றும் எங்கும் புதிதில்லை. சொல்ல வரும் கருத்து தான் மிகவும் முக்கியம். ரா.கி.ரங்கராஜன் "கிருஷ்ணகுமார்" என்ற பெயர் மற்றும் பல பெயர்களிலும், ஜ.ரா.சுந்தரேசன் "பாக்கியம் ராமசாமி" என்ற மற்றொரு பெயரிலும், புஷ்பா தங்கதுரை "ஸ்ரீவேணுகோபாலன்" என்ற மற்றொரு பெயரிலும் இன்னும் இது போல் பல எழுத்தாளர்கள் ஒன்றுக்கு மேற்பட்ட பெயர்களில் ஏற்கனவே பல வருடங்கள் எழுதி வந்துள்ளார்கள்.
இனி, இந்த விஷயத்தை பெரிதாக்காமல், நாம் அனைவரும், நடிகர் திலகத்தின் மேன்மையை இன்றைய மற்றும் நாளைய தலைமுறையினருக்கும் எடுத்துச் செல்லப் பாடு படுவோம்.
தொடர்ந்து எழுதி, தாங்களும் இன்புற்று, எல்லோரையும் மகிழ்வியுங்கள்.
அனைத்து நண்பர்கள் மற்றும் அவர்தம் குடும்பத்தினருக்கு இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்.
அன்புடன்,
இரா. பார்த்தசாரதி
nandri -dinamani kaadhir.
இன்றைய ஆரம்பம் இனிதே உள்ளது .[ஆதி யின் கோபம் மட்டும் ஏனோ தொடர்கிறது ]
ok .
இனி நாகி ரெட்டி அவர்களின் நடிகர் திலகத்தின் கட்டுரை பார்ப்போமா நண்பர்களே
நடிகர் திலகத்தைப் பற்றி என் தந்தையார் என்ன சொல்கிறார் என்பதைக் கேட்போம்:
""இது பொன்னாள்... இதைப்போலே வருமா இனிமேலே... இப்படி ஒரு பாடல் வரி "பூம்புகார்' திரைப்படத்தில் வரும். இந்த வரியை நான் அடிக்கடி நினைத்துப் பார்ப்பதுண்டு. காரணம், நான் என் கூட்டாளி சக்கரபாணியும் இன்னும் சில நண்பர்களும் அடிக்கடி அந்த இல்லத்தில் ஒன்றாகக்கூடி மணிக்கணக்கில் மனம் விட்டுப் பேசுவோம். அரசியல் தொடங்கி சினிமா வரை அலசுவோம். இடையிடையே சிற்றுண்டிகளும் அங்கே பந்தி வைக்கப்படும். சுவைகளுக்குக் கேட்கவா வேண்டும்? அந்தச் சுவைகளை வழங்கிய அழகிய இல்லம், நடிகர் திலகம் சிவாஜி அவர்களின் அன்னை இல்லம்... அது பொன்னாள்... அதைப் போலவே வருமா இனிமேலே.... நினைக்கும்போதே மனமெல்லாம் மகிழ்ச்சி மல்லிகைகள் மணக்கின்றன. அதே நேரத்தில் சில நினைவுத் தாமரைகளும் மொட்டு அவிழ்க்கின்றன.
சிறந்த நடிகரான சிவாஜியுடன் தொடர்ந்து பல ஆண்டுகள் பழகி வந்தபோதும் இன்னும் நமது படத்தில் அவர் நடிக்காமல் இருக்கிறாரே என்ற ஏக்கம் என் நெஞ்சத்தில் இருந்தது. அந்த உணர்வின் விளைவாக உருவான, என் பிள்ளைகள் டி.ராமா நாயுடுவுடன் இணைந்து தயாரித்த "வசந்த மாளிகை' சாதாரணப் படங்களுக்கு மத்தியில் சரித்திரப் படமாக அமைந்தது. அடுத்து சிவாஜியையும் முத்துராமனையும் நடிக்க வைத்து "வாணி ராணி' என்ற படத்தையும் எடுத்தோம். அதில் வாணிஸ்ரீக்கு இரட்டை வேடம். நடிகர் திலகத்திற்கோ ஹீரோ வேடம் அல்ல. அந்த வேடத்திற்கு அவரை நடிக்க வைக்கலாமா? என்று யோசித்தோம். ஆனால் நேரில், என் மகன் விஸ்வம் வாயிலாக அவரிடத்தில் விவரத்தைக் கூறியபோது சிறிய வேடம், பெரிய வேடம் என்றெல்லாம் பாகுபாடு பார்க்காமல் ஒப்புக் கொண்டு தன் பெருந்தன்மையை வெளிப்படுத்தி எங்களை மகிழ்வித்தார்.
சிவாஜி நடித்த ஒவ்வொரு படமுமே ஒரு காவியம் என்று சொன்னால், அது மிகையில்லை. அவர் நடித்த படங்களில் சில, சில காரணங்களால் தோல்வி அடைந்திருக்கலாம். ஆனால், அவர் நடிப்பில் தோற்ற படம் என்று நம்மால் ஒன்றையாவது சுட்டிக் காட்ட முடியுமா? முடியவே முடியாது. அதற்கெல்லாம் காரணம் அந்தக் காலகட்டம்.
மணிமணியான இயக்குநர்கள், அந்தத் தங்கத்தைப் புடம்போட்டுப் படம் எடுத்தனர். சாதனைத் தடம் பதித்தனர் உதாரணத்துக்குச் சொல்ல வேண்டுமென்றால், கிருஷ்ணன் பஞ்சு, பீம்சிங், ஏ.பி. நாகராஜன், ஸ்ரீதர், பி.ஆர். பந்துலு, ஏ.சி. திருலோகசந்தர், பி.மாதவன்... இப்படிப் பல பேரைப் பட்டியலிடலாம். அந்தச் சிறப்பு மட்டுமா? அன்று சிவாஜியுடன் நடித்த பலரும் மிகப் புகழ்பெற்ற நட்சத்திரங்களாக சுடர்விட்டுப் பிரகாசித்தார்கள். எஸ்.வி. சுப்பையா, எம்.ஆர். ராதா, எஸ்.வி. ரங்காராவ் போன்ற பல நட்சத்திரங்களுக்கு மத்தியில் ஒரு துருவ நட்சத்திரமாக மின்னினார் நடிகர் திலகம்.
உருக உருக நடித்த அந்தத் திறமை மட்டுமல்ல, அவரிடத்தில் வேறு சில பண்புகளைப் பார்த்துகூட நான் சிலிர்த்திருக்கிறேன். ஷூட்டிங் எட்டு மணிக்குத் தொடங்குகிறது என்றால் 7.55 மணிக்கே அந்த இடத்தில் இருக்கும் நேரந்தவறாமை என்ற அந்தப் பண்பைக் கண்டு வியந்திருக்கிறேன். அதைப்போல படப்பிடிப்பு நடக்கின்ற நேரங்களில், அவர் செட்டைவிட்டு வெளியே வரமாட்டார். அந்த அளவுக்கு தொழில் பக்தி, ஈடுபாடு. இளைய தலைமுறை அவரிடத்தில் கற்றுக்கொள்ள எவ்வளவோ இருக்கின்றன.
கலை உலகிலும், இல்லற வாழ்விலும் சிறந்து விளங்கியவர்கள் ஒரு சிலரே. அவர்களில் குறிப்பிடத்தக்கவர் சிவாஜி. "நல்லதொரு குடும்பம் பல்கலைக்கழகம்' என்பதற்கேற்ப மனைவி, மக்கள், பேரக் குழந்தைகளுடன் ஆடம்பரமற்ற எளிமையான வாழ்வு. ஆம். இத்தனை புகழ், வசதி வந்த போதும் அவர் விரும்பி உடுத்தியது கதர் வேஷ்டி, கதர் சட்டைதான். அதற்குக் காரணம் அவரது உதிரத்தில் கலந்திருந்த தேசிய உணர்வுதான்.
சுதந்திரத் தியாகிகளைத் தம் படங்களின்மூலம் நினைவூட்டிய அந்த வித்தக நடிகருக்கு, அன்று அவர் ஆசியா ஆப்ரிக்க நாடுகளில் சிறந்த நடிகராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு கெüரவிக்கப்பட்டது நம் நாட்டிற்குப் பெருமை.
தேசிய உணர்வுள்ள அந்த நடிகரை தேசத்திற்காக உழைத்த கப்பலோட்டிய தமிழன், கட்டபொம்மன், பாரதியார், பகத்சிங் , திருப்பூர் குமரன் எனப் பல தலைவர்களின் தேசப்பற்றை தனது நடிப்பினால் நமக்கு எடுத்துரைத்த அந்த நடிகரை தேசிய அரசு உரிய முறையில் கெüரவிக்கவில்லையே என்று பலமுறை வருந்தியிருக்கிறேன்.
1981ஆம் ஆண்டு நான் பால்கே விருதை வாங்கினேன். அதற்கு பிறகு, இந்த விருதை யாருக்குக் கொடுக்கலாம் என்று என்னிடத்தில் மூன்று முறை கேட்டார்கள். இவரைவிடத் தகுதியானவர்கள் வேறு யாருமில்லை என்று சிவாஜி அவர்களைக் கூறினேன். ஆனால் டெல்லியிலிருந்து அடுத்து விருதுபெற்றோர் அறிவிப்பு வரும்போது வேறு யாருடைய பெயராவது அறிவிக்கப்படும். அப்பொழுது எனக்கு பெரிய ஏமாற்றமாக இருக்கும்.
எப்பொழுதோ அவருக்குக் கொடுத்திருக்க வேண்டிய, இந்திய அரசின் உயர்ந்த திரைப்பட விருதான தாதா சாகேப் பால்கே விருது காலந்தாழ்ந்து வழங்கப்பட்டு சிறப்பிக்கப்பட்டது இந்திய திரைப்பட உலகுக்கு பெருமை''
திரு. Ganpat அவர்களே,
மிகவும் அனுபவித்து எழுதியுள்ளீர்கள். உமது தமிழ் நடைக்கு நான் அடிமை. தயை கூர்ந்து நிறைய எழுதி எல்லோரையும் மகிழ்வியுங்கள்!
திருவிளையாடல் படத்தில் வரும் "சிவபெருமான்-நக்கீரர்-தருமி" எபிசோட், இன்று தமிழ்நாட்டில், நிர்வாகத்தைப் பற்றிய training ப்ரோக்ராம்களில், "Assertiveness" பற்றிய பிரிவில், காட்டப்படுகிறது. "சிவபெருமான் - Aggressive", "தருமி - Submissive" & "நக்கீரர் - Assertive".
ஆனாலும், இந்த எபிசோடை, எப்போது காண்பித்தாலும், எல்லோரும் நாகேஷின் நகைச்சுவைக்கு சிரித்து (நாகேஷ் ஏற்கனவே சொல்லியிருக்கிறார், இதற்கு முழு முதல் காரணம், நடிகர் திலகத்தின் பெருந்தன்மை, ஒரு அடி கூட வெட்டாமல், அவர்தம் பகுதியை படத்தில் வைத்தனர், அவர் அன்று வளர்ந்து வரும் நடிகராயிருந்தும்!), உடனே, நடிகர் திலகத்தின் ஆர்பாட்டத்தில் அடிபணிகிறார்கள்.
மறக்க முடியாத நடிப்பல்லவா!
அன்புடன்,
இரா. பார்த்தசாரதி
என் வேண்டுகோளிற்கு செவிசாய்த்து உடனே வந்து மொய் எழுதிய வனஜா அம்மணிக்கு நன்றி.நீங்கள் தொடர்ந்து எழுதப்போவதாக கூறியுள்ளது மேலும் உற்சாகத்தைத்தருகிறது. உங்கள் பன்முக ஆற்றல் உங்கள் எழுத்து வாயிலாக அனைவருக்கும் தெரியட்டும்.வாழ்த்துக்கள்.
அன்பின் பார்த்தா ஸார்!,
தன்யனானேன்..மனமார்ந்த நன்றி.
திருவிளையாடல் தருமி episode உலக பல்கலை கழகங்களில் நடிப்பிற்கு பாடமாக வைக்கப்படத்தக்க ஒன்றாகும்.
நீங்கள் அருமையாக விளக்கிய "Aggressive", Submissive" & Assertive"உடன் இதையும் சேர்த்துக்கொள்ளலாம்.அதாவது "Leadership" மற்றும் "Team Spirit" (குழு மனப்பான்மை).
Team captain: தலைவர்தான்.மற்ற members: நாகேஷ்,ஏ.பி.என்,முத்துராமன்.
வரவேற்புரை:நாகேஷ்;
முதன்மை உரை:ஏ.பி.என்;
தலைமையுரை:தலைவர்.
நன்றியுரை:முத்துராமன்
என அழகாக விரியும் ஒரு அற்புத மேடை நிகழ்வு இது.
இதை ரசிப்பதிலும் பல்வேறு நிலைகள் உள்ளன.
முதல் நிலை:நாகேஷ் நடிப்பை சிலாகித்து அவரை சந்தித்து பாராட்டி வணங்க விரும்புவது.
இரண்டாம் நிலை:ஏ.பி.என். நடிப்பை சிலாகித்து அவரை சந்தித்து பாராட்டி வணங்க விரும்புவது.
மூன்றாம் நிலை:மஹா கலைஞன் நடிப்பை கண்டு மெய் சிலிர்த்து அவரை சந்தித்து அவர் கால்களில் விழுந்து வணங்க விரும்புவது.
நான்காம் நிலை: மேற்கண்ட எதுவும் சாத்தியம் இல்லை என அறியும் போது,குறைந்த பட்சம் இந்த காட்சியில் கலந்து கொள்ளும் பாக்கியம் பெற்ற சக நடிகர் முத்துராமன் அவர்களின் காலகளிலாவது விழுந்து வணங்க எண்ணுவது.
ஐந்தாம் நிலை:நான்கும் சாத்தியம் இல்லை என உணர்ந்து இந்த படப்பிடிப்பில் பங்கேற்ற ஒரு லைட் பாயை ஆவது தேடி கண்டுபிடித்து"என்ன தவம செய்தனை!" என்று கூறி, அவர் காலில் விழுவது.
இந்தப்படம் எடுத்த ஏ.பி.என் அறுபத்து நான்காம் நாயன்மார் ஆகிவிட,
மஹா கலைஞனோ சிவனாகவே ஆகிவிட்டார்.
நன்றி,வணக்கம்.
ஆஹா! அற்புதம் கண்பட் அவர்களே!
தமிழ்க் கலாசாரத்தின் அடையாளம் நடிகர் திலகம் தான் என்று எத்தனையோ முறை அனைவரும் கூறியாயிற்று. அதற்குத் தான் நடிகர் திலகம் எத்தனை எத்தனை கலைஞர்களுடன் கை கோர்த்தார். எப்பேர்ப்பட்ட கூட்டணி!
நாம் தான் கொடுத்து வைத்தவர்கள்!
அன்புடன்,
இரா. பார்த்தசாரதி
அன்பு நண்பர்களே,
தங்கள் அனைவரின் ஆதரவுடனும் வாழ்த்துக்களுடனும் நமது ntfans அமைப்பு வெற்றிகரமாக தன்னுடைய முதல் ஆண்டினை நிறைவு செய்ய உள்ளது. அதனையொட்டி எதிர் வரும் ஜனவரி 20, 2013 ஞாயிற்றுக்கிழமை மாலை 5.00 மணிக்கு முதலாம் ஆண்டு விழா நடைபெற உள்ளது. நடிகர் திலகத்தின் உன்னதத் திரைக்காவியமான உயர்ந்த மனிதன் அன்று திரையிடப் பட உள்ளது. தயாரிப்பாளர் ஏவி.எம்.சரவணன், மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன், இசைக்குயில் சுசீலா, சௌகார் ஜானகி ஆகியோர் பங்கேற்க இசைந்துள்ளனர். சென்னை தியாகராய நகர், திருமலை சாலையில் உள்ள ஒய்.ஜி.பி. அரங்கில் விழா நடைபெற உள்ளது.
உறுப்பினரல்லாதோர் இந்த விழாவில் சேர்ந்து கொள்ளலாம்.
அனைத்து நண்பர்களும் வருகை தர வேண்டுகிறோம்.
கடந்த ஆண்டு 2012ல் நமது ntfans அமைப்பின் சார்பாக நடைபெற்ற நிகழ்ச்சிகள்
22.01.2012 - துவக்க விழா மற்றும் பார்த்தால் பசி தீரும் திரைப்படத்தின் 50வது ஆண்டு விழா - ஒய்.ஜி.பி. அரங்கு, சென்னை - 17.
01.04.2012 - பலே பாண்டியா திரைப்படம் - four frames அரங்கு, சென்னை
27.05.2012 - எங்கிருந்தோ வந்தாள் திரைப்படம் - ருஷ்ய கலாச்சார மய்யம், சென்னை - 18.
22.07.2012 - படித்தால் மட்டும் போதுமா திரைப்படம் - ருஷ்ய கலாச்சார மய்யம், சென்னை - 18.
01.09.2012 - கப்பலோட்டிய தமிழன் திரைப்படம் - ருஷ்ய கலாச்சார மய்யம், சென்னை - 18.
23.09.2012 - வடிவுக்கு வளைகாப்பு திரைப்படம் - ருஷ்ய கலாச்சார மய்யம், சென்னை - 18.
21.10.2012 - நீலவானம் திரைப்படம் - ருஷ்ய கலாச்சார மய்யம், சென்னை - 18.
25.11.2012 - ஆலயமணி திரைப்படம் - ருஷ்ய கலாச்சார மய்யம், சென்னை - 18.
இந்த அமைப்பு துவங்குவதற்கு உந்துசக்தியாயிருந்த நமது மய்யத்திற்கும், அடியேனுடைய கனவினை நனவாக்குதற்கு பெரிதும் முயற்சி செய்து செயல் வடிவமாக்கிய முரளி சாருக்கும் மற்றும் நமது மய்ய நண்பர்களும் இவ்வமைப்பின் துணைத் தலைவர் திரு மோகன் ராம், நிர்வாகக் குழு உறுப்பினர்களுமான திரு பார்த்தசாரதி மற்றும் கிருஷ்ணாஜி ஆகியோருக்கும் என் உளமார்ந்த நன்றியை பணிவுடன் தெரிவித்துக் கொள்கிறேன். நமது மய்ய நண்பர்கள் மேலும் பலர் இந்த அமைப்பில் சேர்ந்து பயனுற்று நடிகர் திலகத்தின் புகழினைப் பரப்புவதில் பங்கு கொள்ள அன்புடனும் பணிவுடனும் அழைக்கிறேன்.
அன்புடன்
ராகவேந்திரன்
Swatantra Law Associates,Madurai, அமைப்பின் சார்பாக இந்திய குடியரசின் 63வது ஆண்டு விழா மதுரையில் இந்த அமைப்பின் கட்டிடத்தில் நடைபெற உள்ளது. விழாவில் பண்டிட் நேரு, நடிகர் திலகம் சிவாஜி ஆகியோரின் உருவப் படங்கள் திறந்து வைக்கப் பட உள்ளன. மஹாத்மா காந்தி, வ.உ.சிதம்பரனார், கவிச்சக்கரவர்த்தி பாரதி, பாலகங்காதர திலகர், சர்தார் வல்லபாய் படேல், பெருந்தலைவர் காமராஜ், மொரார்ஜி தேசாய், இவர்களின் வரிசையில் இவ்விரு தலைவர்களின் படங்களும் இடம் பெற உள்ளன. படங்களை, பாண்டியன் சரஸ்வதி யாதவ் பொறியியல் கல்லூரி நிர்வாக இயக்குநர் திரு வரதராஜன் அவர்கள் திறந்து வைக்கிறார். அச்சயம் மதுரையில் நண்பர்கள் இருக்க நேர்ந்தால் அவசியம் கலந்து கொள்ளவும். விழாவினை Swatantra Law Associates,Madurai அமைப்பின் நிர்வாகி திரு மனோஹர் நாடார் அவர்கள் ஏற்பாடு செய்துள்ளார்.
நமது ntfans அமைப்பில் உறுப்பினராக உள்ள நமது மய்ய நண்பர்கள், திரு ஜே. ராதாகிருஷ்ணன், திரு பம்மல் ஸ்வாமிநாதன், திரு ராமஜெயம், சங்கரா 1970, ஆகியோர். இன்னும் ஓரிருவர் இருக்கலாம் பெயர் விட்டுப் போனால் மன்னிக்கவும். தங்கள் அனைவரையும் மற்றும் இதர நண்பர்களையும் தங்கள் உறுப்பினர் சேர்க்கையைப் புதுப்பிக்க அல்லது புதிதாக இதில் இணைய அன்புடன் அழைக்கிறேன்.
திரு ராகவேந்திரன் அவர்களின் பெருந்தன்மையான பதில் மிகவும் மனதுக்கு நிறைவு தருகிறது .
இந்த பதிவின் மூலம் ஆண்டவன் கட்டளை நடிகர் திலகத்தை பார்க்கிறேன்
எளிதில் உணர்ச்சி வசப்படும் புதிய பறவை கோபால் போலவே ,கொஞ்சம் பார் மகளே பார் நடிகர் திலகமாக மிடுக்கான பதிவுகளை வழங்கிய கோபால் அவர்களே ... சாந்தி .. சாந்தி .
என்னை போலவே
நீங்களும் நடிகர் திலகம் - வாணிஸ்ரீ ஜோடி பிரியர் என நினைக்கிறேன் .
ganpat அவர்களின் திருவிளையாடல் பதிவு -
ஒரு சிலரை - எங்கே நிம்மதி பாடலை கேட்க வைத்து புதிய பறவை போல் ஆக்கியது உமது பதிவு .
கோபால் அவர்களே
வரம் கேட்க சொன்னீர்கள் .
தர வேண்டிய இடத்தில நீங்கள்
பெற வேண்டிய இடத்தில நான்
விரைவில் நீங்கள் என் பக்கம் வருவீர்கள்
இது திருவிளையாடல் - அல்ல
அன்பு நண்பர் கண்பத் அவர்களே,Quote:
திருவிளையாடல் தருமி episode உலக பல்கலை கழகங்களில் நடிப்பிற்கு பாடமாக வைக்கப்படத்தக்க ஒன்றாகும்.
நீங்கள் அருமையாக விளக்கிய "Aggressive", Submissive" & Assertive"உடன் இதையும் சேர்த்துக்கொள்ளலாம்.அதாவது "Leadership" மற்றும் "Team Spirit" (குழு மனப்பான்மை).
Team captain: தலைவர்தான்.மற்ற members: நாகேஷ்,ஏ.பி.என்,முத்துராமன்.
வரவேற்புரை:நாகேஷ்;
முதன்மை உரை:ஏ.பி.என்;
தலைமையுரை:தலைவர்.
நன்றியுரை:முத்துராமன்
என அழகாக விரியும் ஒரு அற்புத மேடை நிகழ்வு இது.
இதை ரசிப்பதிலும் பல்வேறு நிலைகள் உள்ளன.
முதல் நிலை:நாகேஷ் நடிப்பை சிலாகித்து அவரை சந்தித்து பாராட்டி வணங்க விரும்புவது.
இரண்டாம் நிலை:ஏ.பி.என். நடிப்பை சிலாகித்து அவரை சந்தித்து பாராட்டி வணங்க விரும்புவது.
மூன்றாம் நிலை:மஹா கலைஞன் நடிப்பை கண்டு மெய் சிலிர்த்து அவரை சந்தித்து அவர் கால்களில் விழுந்து வணங்க விரும்புவது.
நான்காம் நிலை: மேற்கண்ட எதுவும் சாத்தியம் இல்லை என அறியும் போது,குறைந்த பட்சம் இந்த காட்சியில் கலந்து கொள்ளும் பாக்கியம் பெற்ற சக நடிகர் முத்துராமன் அவர்களின் காலகளிலாவது விழுந்து வணங்க எண்ணுவது.
ஐந்தாம் நிலை:நான்கும் சாத்தியம் இல்லை என உணர்ந்து இந்த படப்பிடிப்பில் பங்கேற்ற ஒரு லைட் பாயை ஆவது தேடி கண்டுபிடித்து"என்ன தவம செய்தனை!" என்று கூறி, அவர் காலில் விழுவது.
இந்தப்படம் எடுத்த ஏ.பி.என் அறுபத்து நான்காம் நாயன்மார் ஆகிவிட,
மஹா கலைஞனோ சிவனாகவே ஆகிவிட்டார்.
[நான் சரியாக சொல்லியுள்ளேனா, தவறு இருந்தால் மன்னிக்கவும்]
திருவிளையாடல் படத்தைப் பற்றியும், இக்காட்சியில் பங்கு பெற்ற கலைஞர்களைப் பற்றியுமான தங்களின் உருவகம் உயிர் பெற்று அந்தக் கலைஞர்களையே இங்கு வரவைத்து விட்டது. அவர்கள் இந்தப் பதிவுகளில் ஊடுருவி தங்களுடைய எழுத்திற்கு ஜீவன் அளித்துள்ளார்கள்.
உளமார்ந்த பாராட்டுக்கள்.
அன்புடன்
அன்பு முத்ராம் அவர்களே,
இங்கு உள்ள ஒவ்வொரு நண்பருக்குள்ளும் நடிகர் திலகம் இருக்கிறார். அவருடைய vibration நம் ஒவ்வொருவருக்குள்ளும் பரவிக் கிடக்கிறது. தங்களுடைய அன்பான பாராட்டிற்கு என் பணிவான நன்றிகள்.
அன்புடன்
Parasakthi Diamond Jubilee Celebration, Madurai - Coverages in English Dailies
The Hindu
http://www.facebook.com/photo.php?fb...type=1&theater
Deccan Chronicle
http://www.facebook.com/photo.php?fb...type=1&theater
The Times of India
http://www.facebook.com/photo.php?fb...type=1&theater
The New Indian Express
http://www.facebook.com/photo.php?fb...type=1&theater
அலுவலக நேரத்தில் அடிக்கடி 'hub' ஐயும் நோட்டம் விட்டுக்கொண்டிருந்த நான், மனச்சாட்சி உறுத்தியதால் (இரு கோடுகள் நாகேஷ் சொல்வதுபோல) 'சரி சரி, கொஞ்சம் office வேலையும் பார்ப்போம்' என்று இருக்கிறேன். நான் ஏதாவது எழுதப்போக அது ஏற்கனவே யாராவது எழுதியதாக இருந்துவிடக்கூடாதே என்றும் அங்கலாய்ப்பாக இருக்கிறது.:roll:
பராசக்தி படப்பிடிப்புத் தளத்தில் நடிகர் திலகம்
http://sphotos-h.ak.fbcdn.net/hphoto...39a2fff025b7d0
மிக மிக அபூர்வமான இந்த நிழற்படத்திற்கு நன்றி திரு செந்தில் வேல் சிவராஜ், முகநூல் நண்பர்..
திருவிளையாடல் படத்தைப் பற்றியும், இக்காட்சியில் பங்கு பெற்ற கலைஞர்களைப் பற்றியுமான தங்களின் உருவகம் உயிர் பெற்று அந்தக் கலைஞர்களையே இங்கு வரவைத்து விட்டது. அவர்கள் இந்தப் பதிவுகளில் ஊடுருவி தங்களுடைய எழுத்திற்கு ஜீவன் அளித்துள்ளார்கள்.
உளமார்ந்த பாராட்டுக்கள்.
அன்புடன்[/quote]
திரு.ராகவேந்தரா.அவர்களே..
உங்களிடமிருந்து,
திருவாளர்கள்.
பம்மலாரிடமிருந்து,
பார்த்தசாரதியிடமிருந்து,
முரளியிடமிருந்து,
கோபாலிடமிருந்து,
மற்றும் வாசுதேவனிடமிருந்து
பாராட்டு பெறுவது என்பது
என்னைப்பொறுத்தவரை
சொர்க்கத்தில் இருக்கும்
சாட்சாத் "அவரி"டமிருந்து
பாராட்டு பெறுவதற்கு நேர்
மனமார்ந்த நன்றி..
Dear Mr.Raghavendran and Mr.Gopal - I'm not good in writing in such an excellent manner like all of you including Vanaja madam . The hub was witnessing good amount of heat in last few days - good enough for global warming . I'm happy to see that a quick resolution is done and thread is re started with same zeal . I pray for harmony and concerted efforts from all of us so that this thread will become a good foot print for next generation . There are many who confined in reading this the thread only and we need to enocourage them to come out and host articles / write ups about NT - NT is a gold mine and more we speak , the more will come - this is like a temple - and our analysis about NT is a silence prayer and unity is flowers that we offer to NT through our silence prayers. I'm sure with this reunion , and seniors returning to the thread , we will not witness any more slowdown , breaks in our speed. With kind regards - Ravi
Dear Ravi,
Thank you for the appreciation.
A sample image. Navarathiri still coloured and presented.
http://i1146.photobucket.com/albums/...athriNT3d1.jpg
Raja in a tennis court
http://i1146.photobucket.com/albums/...enniscourt.jpg
சிவாஜி-வாணிஸ்ரீக்கும் சிவாஜி-தேவிகாவுக்கும் விசிறிகள் அதிகமாகவிருக்கும் இந்த hub இல் ஏன் pretty doll மஞ்சுளாவை பிடிக்காமல் போனது என்று நினைத்துப்பார்த்தேன். Not that I am fan of மஞ்சுளா, but அவர் 'இரு பெரும் திலகங்களுடனும் சேர்ந்து பல படங்களில் நடித்திருக்கிறார். அதுவே அவருக்குரிய qualification ஐக்கொடுத்துவிட்டதே. அதுமட்டுமல்லாமல் அவர் தாராளமாக அள்ளித் தெளித்த கவர்ச்சிக்கு இன்றைய ஹன்சிகா கூட கிட்ட நெருங்கமுடியாது. குஷ்பூவையும் நக்மாவையும் நமீதாவையும் விரும்பும் ரசிகர்கள் நிச்சயமாக மஞ்சுளாவையும் விரும்பியிருக்கவேண்டும்.
ஒருவேளை அவர் நடிகர் திலகத்துடன் சேர்ந்து நடித்தது பிடிக்கவில்லையோ? NT ரசிகர்கள் வெறும் கவர்ச்சி மட்டும் காட்டும் நடிகைகளை NT உடன் சேர்த்துப் பார்க்க விரும்பவில்லை என்பது இங்கு பழைய பதிவுகளைப் படித்ததிலிருந்து புரிகிறது.
சிவாஜியுடன் பத்மினியும் தேவிகாவும் வாணிஸ்ரீயும் கண்களால் பேசிய காதலை மஞ்சுளா 'two -piece' போட்டுக்காட்டியும் வெளிப்படுத்த முடியவில்லை என்பதே உண்மை. இயக்குனர்கள் 'எள்' என்றால் அவர் 'எண்ணெய்'யாக நிற்பார் போல; பாய்ந்து விழுந்து, நெருங்கி நடித்து, தாராளமாக கவர்ச்சியை அள்ளித்தெளித்து விடுவார். அது MGR படங்களுக்கு (அது வழமையான ஒன்று என்றபடியால்) பொருந்தியிருக்கலாம். ஆனால் மஞ்சுளாவின் அந்த தாராள மனப்பான்மை சிவாஜியின் படங்களுக்கு ஆபத்தாக வந்து முடிந்து விட்டது. மிகநல்ல உதாரணம் Dr சிவா. படம் நல்ல படம் தான். பாடல்களோ அற்புதம். ஆனால் மஞ்சுளா ஒரு 'திருஷ்டிப்பொட்டு'. அவர் மிகவும் அழகாக பொம்மை போல இருப்பார். அதுதான் பிரச்சனையே; 'பொம்மை' போல மட்டுமே இருப்பது.
'நல்லவர்....' பாடல் முழுவதும் அவர், எந்த அவசியமும் இன்றி (நிச்சயமாக பெண் NT ரசிகர்களுக்கு) half naked ஆக வந்து, அந்த பாடலின் தரத்தை குறைத்து விட்டார். பாட்டு முடிந்த பின்னரும் அதே 'கோல'த்தில் மேலும் 1/2 மணித்தியாலம் வளைய வருகிறார். அது தேவையா? அதற்குப் பின்னரும் ஒரு duet இல் (பாட்டு ஞாபகமில்லை) மஞ்சுளாவின் compromising position, little more than necessary. சிலசமயங்களில் அவரின் 'over exposure' seemed mockingly ridiculous. Not only that, it makes NT's performance under valued.
அன்பே ஆருயிரே இக்குப்பின் இதை சிவாஜி உணர்ந்திருக்க வேண்டும். ஆனால் என்ன செய்வது, அவர் தான் director's actor ஆச்சே, சொல்ல முடியாமல் இருந்திருக்கலாம். திருலோகசந்தரின் மீது ஆத்திரம் வருகிறது. talking of which, 'அன்பே ஆருயிரே' யில் அந்த அருமையான பாட்டு 'மல்லிகை முல்லை பூப்பந்தல்' ஐ வீணடித்து விட்டார். கவித்துவமான பாட்டை சிவாஜி- வாணிஸ்ரீ ஜோடியுடன் கற்பனை செய்து பார்த்து திருப்திப்பட்டுக்கொள்ள வேண்டியதுதான்.
அடுத்தது 'உத்தமன்'. அதுவும் சிவாஜி-வாணிஸ்ரீ க்குப் பொருத்தமான கதையே. வசனம் பாலமுருகன் (?) என்பதை நம்ப முடியவில்லை. வசனங்களில் ஆழமில்லை. பாடல்கள் அதிகம். MSV இருந்திருந்தால் மேலும் நன்றாக இருந்திருக்கும். KV மகாதேவன் பக்தி படங்களுக்கு இசை அமைத்தால் தான் எனக்கு பிடிக்கும். இந்தப்படம் வெள்ளி விழாக்கொண்டாடியதாமே? இதிலும் மஞ்சுளாவின் தாராளம் இருந்தது. பிரிவுத்துயரை NT அழகாக காட்டியிருந்தாலும், முக்கியமாக அந்த 'கனவுகளே' பாடலில்; மஞ்சுளாவின் poor performance ஆல் இந்த படம் NT படத்திற்கு இருக்கவேண்டிய தாக்கத்தை கொடுக்கவில்லை. இங்கு அடிக்கடி பேசப்படும் 'screen chemistry' சிவாஜி-மஞ்சுளாவுக்கிடையே இல்லவே இல்லை.
சிவாஜியின் இன்னொரு 'திருஷ்டிப்பொட்டு' ஸ்ரீபிரியா. ஆனால் அதைப்பற்றி இந்தளவுக்குக் கூட சொல்ல முடியாது.
Thanks for coloured photo of Navarathiri Mr Raghvendra Sir and also
for the rare still of Parasakthi.
Vanaja Madam,
Accept your views on NT's pair of Manjula. It is true that
wonderful movie Dr Siva's success has been spoiled due to
the glamour portion.
Does anybody have mp3 of the title music of 'Shanthi'? I wanted to fast forward and watch only 'yaarantha nilavu' song last night, but ended up in listening the title music about 6/7 times, instead!! Wonderful piece!! I surfed the net but no avail.
I know it's got nothing to do with Sivaji Ganesan, but; 'சான்சே இல்லை' or 'no chance' என்பதை எந்த அர்த்தத்தில் சொல்லுகிறார்கள் என்பது எனக்கு புரியவில்லை. சிவாஜி பற்றி குறிப்பிடும்போதும் இச்சொல்லை யாரோ பயன்படுத்தியிருந்தார்கள். எனக்குத்தெரிந்த வரையில் 'no chance' என்பதற்கு negative ஆன meaning தான். ஆனால் தமிழ்நாட்டில் positive meaning இல் பயன்படுத்தப்படுகிறது. ஏன்? இதுவும் 'தங்க்லீஷ்' ஆகிப்போன ஒரு சொல்லா?
Dear Ragavendran Sir,
Thanks for the Rare still of Parasakthi & Coloured Still of Navarathiri.
நடிகர்திலகத்தின் படங்களில் ஜோடியாக நடித்த பல நடிகைகளில் , குறிப்பாக மஞ்சுளா வந்த பின்னர்
எங்கள் தங்க ராஜா
என்மகன் - மன்னவன் வந்தானடி - அன்பே ஆருயிரே -டாக்டர்சிவா - உத்தமன் - அவன் ஒரு சரித்திரம் படங்களில் இருவரின் ஜோடி மிகவும் கட்சிதமாக ,பொருத்தமாக அமைந்து விட்டது .
ஒரு படத்தின் வெற்றி - தோல்விக்கு நாயகிகள் பொறுப்பு அல்ல .
ரசிகனின் ரசனையும் - மக்களின் வரவேற்பும் இருந்தால்தான் வெற்றி .
நல்ல ஜோடி பொருத்தம் என்று கூறப்பட்ட பல படங்கள் எதிர் பார்த்த வெற்றி பெறவில்லை .
மஞ்சுளா பொறுத்த வரை - இளமை துள்ளல் - ஸ்லிம் அழகோடு பல இனிய பாடல்களில் சிறப்பாக நடித்து நடிகர் திலகத்தின் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தவர் .
எனது ரசனையில் சிறந்த ஜோடி பட்டியல் .
1.வாணிஸ்ரீ
2. மஞ்சுளா
3. தேவிகா
4. சரோஜாதேவி
5. பத்மினி
6. விஜயா
7. உஷா நந்தினி
8. ஜெயலலிதா
9. லக்ஷ்மி
10. பானுமதி
சகோதரர்கள் அனைவருக்கும் முன்னதாகவே எனது பொங்கல் தின நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்!
Vanaja,
Your view on MANJULA with SHIVAJI are correct. But the responsible person for that blunder is only the director and not Manjula. She already proved what she had, but kuruvi thalaiyil panangaayai vaiththathu director's mistake.
'nallavar kuralukku' paadalil two piece dressudan nadippen endru Manjula adam pidiththaaraa enna?.
'malare kurinji malare' paadalukku manjulavai anaiththuk kondu summaa nadandhaal podhum endrum directorum, herovum ninaiththaal adhukku manjula enna pannuvaar?.