http://i68.tinypic.com/o5tfnb.jpg
Printable View
தொடரும்...
http://i65.tinypic.com/54tbox.jpg
உள்ளங்கையால் வானை மறைக்க முடியாது. தர்ம தேவதையின் தவப்புதல்வன் நடிகர் திலகத்தின் சாதனைகளும் அவ்வாறே. தர்மம் வெல்லும் என்பதற்கு சிறந்த உதாரணம் நடிகர் திலகம் என்பதற்கு இதுவும் ஒரு சான்றே.
நிழற்படம் நன்றி 24.01.2016 தேதியிட்ட தினமலர் வாரமலர்.
https://scontent.fmaa1-2.fna.fbcdn.n...1b&oe=572AE23B
https://scontent.fmaa1-2.fna.fbcdn.n...62&oe=572F76BF
ராகவேந்தர்,
சிவாஜியின் ரசிகரான பாலு மகேந்திராவின் சீடரான சிவாஜியின் ரசிகரான பாலாவின் ரசிகனான எனக்கு, சிவாஜி,பாலா இருவரின் ரசிகனான உங்களின் தாரை தப்பட்டை விமரிசனம் மிக சுவையாக இருந்தது.
பாலாவின் படங்கள் இன்னும் தமிழ் ரசிகர்களால் அதிக வரவேற்பை பெற வேண்டும் என்ற அவா உள்ளவன் நான். ரஜினி முருகன் என்ற கேவலமான படம் ப்ளாக் பஸ்ட்டர் .
இளைய தலைமுறையும் ,ரசனையில் திருந்தாதது எனக்கு வேதனையே.
நன்றி ராகவேந்தர்,நான் நினைத்ததை எழுத்தில் வடித்ததற்கு.
இந்த பத்து வருடத்தின் சிறந்த படங்களை தேர்ந்தெடுக்க சொன்னால் என் தேர்வுகள்.
நான் கடவுள்.- பாலா.
அஞ்சாதே.- மிஸ்கின்.
புது பேட்டை.-செல்வராகவன்.
குற்றம் கடிதல்- பிரம்மா.
ஆடுகளம்- வெற்றி மாறன் .
கோபால்
தங்கள் பாராட்டிற்கு மிக்க நன்றி.
தாரை தப்பட்டை... பாலாவின் புகழ்க்கிரீடத்தில் இன்னுமொரு வைரக்கல்.
அதே போல் இளையராஜாவின் 1000வது படம் என்கிற பெருமைக்கும் முழுத்தகுதி வாய்ந்தது.
பல காட்சிகளில் அவருடைய பின்னணி இசை, மெல்லிசை மன்னருக்குப் பிறகு பின்னணி இசையில் அசைக்க முடியாத சக்கரவரத்தியாக விளங்குகிறார் என்பதை நிரூபிக்கிறது.
ஒளிப்பதிவும் படம் முழுதும் கதைப்போக்கை விட்டு விலகாமல் கதையோடு சேர்ந்து பயணிக்கிறது.
சரத்குமாரின் புதல்வி வரலட்சுமியின் நடிப்பில் இவ்வளவு ஆழமும் ஜீவனும் இருப்பது பாராட்டத்தக்கது. அவரை இன்னும் பயன்படுத்தியிருக்கலாம்.
She needs more exposure in Tamil cinema. A talent to be utilised more and more. போடா போடி படத்திலேயே தான் ஒரு கவனிக்கப்பட வேண்டிய நடிகை என்பதை நிரூபித்து விட்டார்.
என் தேர்வில் நான் விரும்பும் சில படங்கள் கடந்த சில ஆண்டுகளில்...
நடுவிலே கொஞ்சம் பக்கத்தைக் காணோம்...
எங்கேயும் எப்போதும்...
மைனா...
நான் ஈ... தொழில் நுட்பத்திற்காக...
விஸ்வரூபம்...தேவர் மகனிற்குப் பிறகு ஹேராமிற்குப் பிறகு... என் விருப்பத்தில் கமல் படம்...
மேலும் சில உள்ளன... நினைவூட்டிக்கொண்டு சொல்கிறேன்...
மிக குறுகிய காலத்தில் பத்தாயிரம் பதிவுகளை செய்துவிட்டேன்..எனது இலக்கு இது..மக்கள் திலகத்தின் பக்தனான என்னை நீங்கள் ஏற்றுகொண்டது..எனக்கு மிகுந்த சந்தோசம்..அந்த பத்தாயிரம் பதிவுகளில் நடிகர்திலகத்தின் பதிவுகளும் அடக்கம்..நன்றி..நண்பர்களே..திரிசூலம் பதிவுகளை என்னால் தொடர்ந்து மேற்கொள்ள முடியவில்லை..அந்த வருத்தம்தான்..என்னை வாழ்த்திய அனைத்து சிவாஜி பக்தர்களுக்கும் என் மனமார்ந்த நன்றி..நான் சண்டை போட்ட என் அன்பு நண்பன் ரவி சூர்யா..உங்களை என்றும் மறக்க மாட்டேன்..ரவி உனக்கு நடிகர் திலகத்தின் ஆசி என்றும் உண்டு..உன் பதிவுகளை நிறைய எதிர் பார்கிறேன்..உடல் நிலை சரியில்லாததால் தற்சமயம்..எனது பதிவுகள் இருக்காது..என்பதை தெரிவித்து கொள்கிறேன்..தற்காலிகமாக எனது பதிவுகள் நிருத்திவைக்கபடுகிறது..வாழ்க இரு பெரும் திலகங்கள்..
http://i68.tinypic.com/23vxlr7.jpg
இப்படி அவமானங்களை தாங்கி போலிப்புகழுக்கு ஆசைப்படாமல் தன்னுடைய அசைக்கமுடியாத திறமையின் மீது நம்பிக்கை வைத்து கடைசி வரை உழைத்ததினால் தான் அவருடைய ரசிகர்களாகிய நாம் கடைசி மூச்சு வரை அவருடைய ரசிகர்களாகவே இருந்து அவர் புகழ் பரப்புவதில் பேரானந்தம் அடைகிறோம்
இந்த அசைக்கமுடியாத ரசிகர் படையை அவர் பெற்றிருப்பதே பல நூறு ஆஸ்கர் அவார்டுக்கு சமம்
இன்றும் அவருடைய ரசிகர்கள் இன்றைய தலைமுறை நடிகர்களுக்கு போட்டியாக இவருடைய பழைய படங்களுக்கு கொடுக்கும் ஆதரவும் அலங்காரங்களும் எந்த பலனுமின்றி செலவு செய்வதும் நடிகர்திலகத்தின் புகழுக்கும் உழைப்புக்கும் கிடைத்த பெரும் வெற்றியாகும்
From Dinamani Kanavu kannigal,
தம்பி உங்களைப் பட விஷயமாகப் பார்க்கணும்ங்கறான். எப்ப ப்ரீயா இருப்பிங்க? ’
போனில் கணேசனிடம் அப்பாயின்மெண்ட் கேட்டார் டி.ஆர்.ராஜகுமாரி.
டஜன் ஆண்டுகளுக்கும் மேலாக தனித்துத் தெரிந்த ஒரே உச்ச நட்சத்திரம். வலிய வந்து நடிக்கக் கேட்கும் வேளையில், கணேசனின் மனத்தில் கூடுதல் குற்றாலம்!
‘நீங்க தேடி வந்தால் தயாரிப்பாளர்- நடிகர் உறவுதான். நாமெல்லாம் கலைஞர்கள். ஒரே குடும்பம்ற உணர்வு வரணும். உங்க ஆபிசுக்கு நானே வரேன். ’
சிவாஜியிடம் கால்ஷீட் வாங்குவதற்காக அத்தனை ஸ்டுடியோ அதிபர்களும் கால் கடுக்கக் காத்து நிற்க, கணேசனோ ஆர்வத்துடன் ஆர்.ஆர். பிக்சர்ஸ் அலுவலகத்துக்குள் நுழைந்தார்.
ராமண்ணாவுக்கு ஒரே ஆச்சர்யம். சிவாஜி என்கிற சிங்கத்தை எப்படி சிறைப் படுத்துவது என்று சிந்தித்துக்கொண்டிருந்த சமயம். அவரே எதிரில் வந்து நின்றால்..!
நேரடியாக மேட்டருக்குச் சென்றார் ராமண்ணா. ’உங்களோட எம்.ஜி.ஆரும் நடிக்கிறார்! ’
‘நாங்க ரெண்டு பேரும் சேர்ந்து ஆக்ட் பண்ணி, ஒரு படம் வெற்றியடைஞ்சா அது இன்டஸ்ட்ரிக்கே நல்லதுதானே. ’
‘ அட்வான்ஸ் எவ்வளவு தரணும் நாங்க? ’
‘கொடுக்கிறதை வாங்கிக்க. கொடுக்கலன்னா கேட்காதேன்னு எங்கம்மா சொல்லிட்டாங்க. ’
நட்பு நாடி வந்த கணேசனிடம் வெள்ளி நாணயங்களை மழையாகப் பொழிந்தார் ராமண்ணா.
சிவாஜிக்கு முன்பே எம்.ஜி.ஆரை ஒப்பந்தம் செய்து விட்டார்.
‘நாம்’ படுதோல்வியால் வருந்தி நின்றார் எம்.ஜி.ஆர். உடனே அழைத்து உற்சாகப்படுத்தி வாய்ப்பும் கொடுத்தார் ராமண்ணா.
கூண்டுக்கிளியில் ஹீரோ சிவாஜி. அவரோடு நடிக்கப் போகிறோம் என்றதும் எம்.ஜி.ஆர் மெய்யாகவே மகிழ்ந்தார்.
அந்த இன்பத்தின் முனையில் முன் பணம் ஒரே ஒரு ரூபாய் போதும் என்றார்.
‘சினிமா பாஷையில் கேட்கிறார்... ’ என்றெண்ணி ராமண்ணா பெரிய நோட்டை எடுத்துக் கொடுத்தார்.
‘அய்யோ நான் கேட்டது ஒரே ஒரு ரூபாய். ஆயிரம் கிடையாது. ’ அடம் பிடித்து ஒரே ஒரு ரூபாய் அட்வான்ஸ் வாங்கிச் சென்றார்.
என்ன காரணத்தினாலோ சிவாஜி - எம்.ஜி.ஆரோடு, டி.ஆர். ராஜகுமாரி கூண்டுக்கிளியில் நாயகியாக நடிக்கவில்லை.
ஒரே படத்தில் இரு திலகங்களுடன் ராஜகுமாரியும் நடித்திருந்தால் இன்னமும் பரபரப்பாகப் பேசப்பட்டிருக்கும் கூண்டுக்கிளி.
எம்.ஜி.ஆர்.- சிவாஜி, இருவருக்கும் ராமண்ணா ஒரே ஊதியம் வழங்கினார். ஆளுக்குத் தலா இருபத்தைந்தாயிரம்!
muhaiyan ammu sir
takecare of your health and comebacksoon your contributions to NADIGARTHILAGAM THREAD IS SOMETHING GREAT AND IMMORTAL.
BLESSINGS
அன்புடன் செந்தில்Quote:
பத்தாயிரம் முத்தான சொத்துக்கள் கெத்தாக வித்திட்ட முத்தையன் அம்மு அவர்களுக்கு.....
உடல்நலமும் ஒரு சொத்தே ....பேணவும்.....இறைவனை வேண்டுகிறேன்...ஓய்வெடுக்கவும்..
.....பொய்யில்லாத நாக்கிருக்குது முத்தையா
...நம்ம புன்னகைக்கு பொருளிருக்குது முத்தையா....!
முத்தையன் அம்மு அவர்களுக்கு நடிகர்திலகத்தின் திரி சார்ந்த நன்றியறிதல்கள் !!
https://www.youtube.com/watch?v=t7RRTdHPNhw
உயர்திரு முத்தையன் அம்மு அவர்களின் கைவண்ணத்தில் நிலைப்படத் தொகுப்புக்களாக மக்கள் திலகமும் நடிகர் திலகமும் காதல் மன்னரும் .......
மறக்க முடியாத உங்களது புதுமை கலந்த முயற்சிகளுக்கு இதயம் கனிந்த நன்றிகள்! .....என்றென்றும்!!
அன்புடன் செந்தில்
முத்தையன்
அண்ணன் ஒரு கோயில், திரிசூலம் திரைப்பட நிழற்படங்கள் மிகவும் அற்புதமாக உள்ளன. தங்களுடைய உழைப்பிற்கு என் மனமார்ந்த வந்தனமும் நன்றியும் பாராட்டுக்களும்.
மேலும் குறுகிய காலத்தில் பத்தாயிரம் பதிவுகளைத் தாண்டி விட்ட அசுரத்தனமான அர்ப்பணிப்பினையும் உளமாரப் பாராட்டுக்கிறேன்.
ராகவேந்தர்,
தாங்கள் குறிப்பிட்ட படங்கள் சுவாரஸ்யமான நல்ல படங்கள். நான் குறிப்பிட்ட ஐந்தும் வேறுபட்ட,அற்புதமான உலகத்தர படங்கள். சுவாரஸ்யமான படங்கள் நிறைய உண்டு.
தங்களிடமிருந்து நான் வேறு படுகிறேன். மெல்லிசை மன்னரால்,இளைய ராஜாவின் பின்னணி தரத்தை நெருங்கவே முடியாது.(சில பாலசந்தர் படங்கள் விதிவிலக்கு)
இசையமைப்பு என்று வந்தால் 1)விஸ்வநாதன்-ராமமூர்த்தி ,2)ஏ.ஆர்.ரகுமான் ,3)இளையராஜா என்று வரிசை படுத்தலாம். ஆனால் பின்னணி என்று வந்தால் 1)இளையராஜா,2)கே.வீ.மகாதேவன் 3)விஸ்வநாதன் 4)ஏ.ஆர்.ரஹ்மான் என்றே சொல்ல வேண்டி வரும். இளையராஜாவிடம் யாரும் கிட்ட நெருங்க முடியாது.
தாரை தப்பட்டை -படம் மிக ரசனைக்குரியது. இசையமைப்பு பழுதில்லை என்ற அளவே.
பாகப் பிரிவினை - 1959
பாக பிரிவினை படம் நெய்வேலி அமராவதியில் 1969 இல் திரையிட பட்ட போது என் அன்னை இந்த படத்தின் சிறப்புகளை பற்றி நிறைய சிலாகித்தார். என்னுடன் தை பூசத்தில் நான் வாங்கிய பாட்டு புத்தகம் ஒன்று இருந்தது. அதில் முடிவில் குழந்தைக்கு என்னவானது? கண்ணையனின் கை கால்கள் மீண்டதா? குடும்பம் ஒன்று சேர்ந்ததா என்று பல கேள்விகளுடன் கதை சுருக்கம்.சுருக்கமே இரண்டு பக்கம்.
அப்போது சிவாஜியின் பழைய படங்களை தேடி தேடி பார்த்து கொண்டிருந்த நேரம்.வழக்கம் போல குணா,பக்கிரி, சந்திரசேகர்,பன்னீர்,போன்றோருடன் இதை முதலில் பார்த்த நினைவு. முதல் முறை பார்த்த போது மனதில் நச்சென தைத்தது சிவாஜியின் நடிப்பும்,சிவாஜி-எம்.ஆர்.ராதா ஒருவரை ஒருவர் கலாய்ப்பதும்.
இந்த படத்தை ஒரு எட்டு வருடம் சிவாஜி புது பட மோகங்களில் (1969 - 1977) மறந்தே போனேன். அவ்வப்போது இந்த படத்தின் அபார வெற்றி குறித்தும், இதன் மொழி மாற்ற படங்களில் நடிக்க நிறைய இந்திய நடிகர்கள் திணறி மறுத்ததும் பற்றிய செய்திகள் படிப்பேன். ஏனோ திரும்பி பார்க்கும் அளவு ஆர்வம் வரவில்லை.அப்போது மலையாள நண்பி ஒருவர் (பெயர் பார்வதி மேனோன் என்று நினைவு.வயதில் மூத்தவர் )நிறைகுடம் என்ற மலையாள படத்தை பற்றி சொல்லி, இதில் கமல் என்ற புது நடிகர் வித்யாசமாக நடித்ததை குறித்து கதையை சிலாகித்தார். எனக்கு சட்டென்று பாக பிரிவினை நினைவில் தோன்றியது. பிறகு நண்பன் ஹரிச்சந்திர பாபு ,பீ.டெக் 2ஆம் வருடம் படித்த போது முதல் நாள் முதல் ஷோ மிட்லண்ட் தியேட்டரில் 16 வயதினிலே என்ற படத்திற்கு புக் செய்து ,நாங்கள் 20 பேர் ஹாஸ்டலிலிருந்து (இம்பாலாவில் சோளா பட்டுரா)போனோம். படம் அசர வைத்தது. ஈர்ப்பு கொண்டு மீண்டும் பார்க்க தூண்டியது.
பத்திரிகைகள் கொண்டாட ஆரம்பித்தன. நல்ல படம் என்பதில் எனக்கு உடன்பாடுதான். நடிகர்களின் பங்களிப்பு,இசை ,வெளிப்புற படப் பிடிப்பு,திரைக் கதை எல்லாமே பிடித்தே இருந்தது.
ஆனால் பத்திரிகைகள் வழக்கம் போல மிகை படுத்தி , இதுதான் ரியலிச நடிப்பு, தமிழ் பட உலகின் திருப்பு முனை, அசல் கிராமம்,அசல் மக்கள், ரியலிச படம் என்று போட்டு தாக்கி ,மூளை சலவை செய்ய எனக்கோ ஒரு எண்ணம். என் நண்பர்களிடம் சொல்லி , மாதமொரு திரையீட்டில் பாக பிரிவினை போட செய்தேன் எங்கள் ஆடிடோரியத்தில் . பார்த்த மாணவர்களுக்கு ஷாக். 1959 லேயே இப்படியொரு படம் ,இப்படியொரு நடிப்பா? கமல் ,இதை பிரதியெடுத்து நடிக்க முயன்றும் பாதியளவு கூட செய்யவில்லையே? இந்த பட கதையமைப்பில் இருந்த இயல்பு தன்மை,பாத்திர வார்ப்புகளில் இருந்த அசலான கிராம மணம்,எடுத்து கொண்ட கருவில் சமூக அக்கறை துளி கூட பதினாறு வயதினிலே படத்தில் இல்லையே ,ஏன் ,ரஜினி கூட எம்.ஆர்.ராதாவின் அருகே வர முடியவில்லையே என்று என் அத்தனை நண்பர்களும் அதிசயித்தனர். once more கேட்டு திரும்ப திரும்ப பார்த்து மகிழ்ந்தோம்.
இந்த கேள்வி என் மனதில் இன்று வரை நிழலாடுகிறது. என்னவோ பதினாறு வயதினிலே க்கு முன்பு வெளிப்புற படப்பிடிப்பே நடக்காத மாதிரியும், அந்த படம்தான் தமிழ் பட திருப்பு முனை என்றும் ,பீம்சிங்,கே.எஸ்.ஜி,ஸ்ரீதர்,பாலசந்தர் போன்றவர்களை தொபெரென்று போட்டுவிட்டு , பாரதிராஜா (எனக்கும் பிடிக்கும்)இவரின் நூற்றுகணக்கான போலிகள் (செல்வராஜா,பாக்கியராஜா,etc etc )இவர்களை பத்திரிகைகள் கொண்டாடின. இத்தனைக்கும் துளி கூட ரியலிச சாயல் இல்லாமல், sensationalism ,pseudo -eusthetics ,கிச்சு கிச்சு காமெடிகள்,ஓட்ட வைத்தார்போல காட்சிகள், உண்மையில்லா பாத்திர வார்ப்புகள்,cliche ஆன படங்கள்,சம்பந்தமில்லா montage ,மொக்கை நடிப்பு என்று நூற்று கணக்கில் படங்கள்.(மகேந்திரன் விதிவிலக்கு,பாலு மகேந்திரா கொஞ்சம் தேறுவார்).ஷ்யாம் பெனெகல்,கிரீஷ் கர்னார்ட், அடூர் படங்களில் இருந்து உருவிய சில காட்சிகள்.(மூலத்தின் சாரத்தை உள்வாங்காமல்).எனக்கு குமட்டியது.மூச்சு திணறியது.
பதினாறு வயதினிலே துவக்கமே அபத்தம். பொருந்தா காதலில், ஒரு நாயகி சப்பாணிக்காக காத்திருப்பதாக. இது ரொமாண்டிக் வகை காதலல்லவே?அனுதாப வசதி காதல்தானே ,என்ன build up சம்பந்தமில்லாமல் என்ற சிரிப்பு வரும்.பிறகு ஓரளவு சுவையான காட்சிகள். ஆனால் டாக்டர் காட்சிகள் படத்தின் நம்பக தன்மையை தொபெலாக்கி விடும். டாக்டர் செவ்வாய் கிரகத்திலிருந்தா வருகிறார்? என் கிராமத்து நண்பர்களே இதை பற்றி ஏளனம் செய்துள்ளனர். பிறகு சப்பாணி-மயில் காட்சிகள் ஈர்ப்புள்ளவை. சுவாரஸ்யம். ஆனால் முடிவு? ஒரு சாதா தமிழ் பட கற்பழிப்பு சார்ந்த முடிவு. எந்த பாத்திரங்களிலும் அசல் தன்மையில்லை. வாழ்க்கை பதிவுகள் இல்லை.(குசும்பு,நையாண்டி,sadism இவை தவிர)
பிறகுதான் பாக பிரிவினை அருமை முழுதும் துலங்க ஆலம்பித்தது.(அப்போது வீ.சி.ஆர் கூட வராத காலம்) சந்தர்ப்பம் அமையும் போதெல்லாம் தேடி தேடி பார்த்தேன். எனக்கு பீம்சிங்-சோலைமலை, பீம்சிங்-கே.எஸ்.ஜி இணைவு அவ்வளவு பிடிக்கும். (ஆரூர் தாஸ் இணைந்தது ஒரு விபத்தே)இப்போது பாகபிரிவினை படத்தை விரிவாக அலசுவோம்.
பாகப் பிரிவினை ரொம்ப சாதாரண கதை போல மேலுக்கு தெரிந்தாலும் ஒரு நிலவுடமை சமூகத்தின் அடிப்படை தகர்ப்பை,நகரிய நாகரிகம் தன போக்கில் செல்லாமல் ,அதனை சிதைக்க முயல்வதோடு ,பொன் முட்டையிடும் வாத்தை அறுத்து ,பலன் காணும் போக்கையும், அதை எதிர்கொள்ளும் அப்பாவி மனங்களையும், அற்புதமாக பேசுகிறது.
வாரிசில்லாத பெரியப்பா -பெரியம்மா , இரு ஆண் வாரிசுகள் கொண்ட அப்பா அம்மா ஒரே கூரையில் . ஒரு ஆண் வாரிசு சிறு வயது விபத்தில் கை கால் ஊனமுற்று ,ரொம்ப படிப்பறிவின்றி வீட்டை சார்ந்து வாழ்பவன். மற்ற வாரிசு பட்டணத்தில் படித்து சிறிதே நாகரிக சுகம் கண்டவன். பெரியம்மாவின் செல்லம். பெரியம்மாவின் கள்ள மனம் கொண்ட உறவினன் தன் தங்கையுடன் வீடு புகுந்து ,குடும்பத்தை பிளவு படுத்தி, நம்பியவர்களையும் நட்டாற்றில் விட, குடும்பம் மீண்டும் இணைவதை கூறும் படம்.
இந்த படத்தின் மிக பெரிய பலம் தெளிவான திரைக்கதை, அசலான பாத்திர வார்ப்புக்கள், நூல் கோர்த்தார்ப்போல் ரேசர் ஷார்ப் வசனங்கள்,பாத்திரங்களின் இணை-முரண்களில் இழையும் இயல்புத்தன்மை ,கதையோடு ஓடும் நகைச்சுவை,எல்லோருடைய நடிப்பில் பங்களிப்பு (முக்கியமாக சிவாஜி,எம்.ஆர்.ராதா,சரோஜாதேவி),அற்புதமான கிராமிய இசை ,வெளிப்புற காட்சிகள் (அவ்வப்போது studio set பல்லிளித்தாலும்) என்று கூறி கொண்டே போகலாம்.
முக்கியமாக அழகுணர்ச்சியுடன் கூடிய நம்பக தன்மை. ஆரம்ப காட்சிகளில் பாத்திர அறிமுகங்களுடன் அவர்களின் குணாதிசயங்கள் துருத்தாத நகைச்சுவையுடன் கோடி காட்ட படும். சுரு சுருப்பான கலாட்டா டீசிங் பாடல்கள்.கதாநாயகன் கண்ணையன் ஊனமானவனாக இருப்பதால்,சக வயது ஆண்களால் உதாசீனம், சக வயது பெண்களால் கேலி என்று இருப்பதால் ,உதாசீனத்தை விட கேலியே மேல் என்று பெண் நண்பிகளை தேர்ந்தெடுப்பது ஒரு தேர்ந்த திரைக் கதை உத்தி. பிறகு பட்டண திமிருடன் விருந்தாளியாக வரும் எம்.ஆர்.ராதா ,சிவாஜி மோதல்கள் அவ்வளவு இயல்பான நகைச்சுவை மிளிரும் சுவாரஸ்யங்கள். கதையை வலுவாக நகர்த்தும். சகோதரன் மணியின் இயல்பு மாற்றம் (பெண்ணை முன்னிறுத்தி) அவ்வளவு நயமாக வில்லத்தனம் துருத்தாமல் சொல்ல படும்.பொன்னி-கண்ணையன் திருமணம் அவர்களது வாழ்க்கை, மன முறிவுகளில் பாக பிரிவினை (பசுவும்-கன்றும் பங்கு போட படும் சோகம்), பெரியப்பாவின் இருதலை கொள்ளி நிலை, பிறகு எம்.ஆர்.ராதாவின் (சிங்காரம்) சூழ்ச்சி போக்கு , மணி மற்றும் மணி மனைவி அபாயம் உணர்வது ஆனாலும் சொல்லவும் முடியாமல் மெல்லவும் முடியாமல் தவிப்பது ,கண்ணையனின் வைத்தியம் சார்ந்த பட்டண விஜயம் என்று எங்கும் குறி தவறாது. சில பாடல்கள் (ஆட்டத்திலே) நம்மை சோதித்தாலும் சிறிய நகரங்களில் வரவேற்பு பெற்றதாய் கேள்வி.
பாக பிரிவினை படத்தை பொறுத்த வரை ஒரு நடிகனின் உச்ச பட்ச சாதனை ஐம்பதுகளில். இன்று போல கேமரா, கட் shots ,வெளிநாட்டு ஒப்பனையாளர் , இரண்டு வருடமாக ஒரே படம் என்பதெல்லாம் இல்லாத போது கைகால் ஊனமுற்ற பாத்திரம்.அதிலும் கதாநாயகன் என்றால் ஒளி வட்டம் இருந்த காலங்களில் இமேஜ் வட்டத்தில் இல்லாமல் , அறிமுகமாகும் போதே எருமை குட்டை தண்ணீரில் விழுந்து எழுந்திருக்க முடியாமல் தத்தளிப்பது, எருமை மாட்டின் முதுகில் சவாரி செய்வதும் என நடிப்புக்காக வேள்வி வளர்ப்பார்.
வெற்று பொழுதுபோக்கு படங்கள் வெள்ளிவிழா காணுவது சாதனையே அல்ல. அதனை ரவிசந்திரன் கூட செய்வார். இந்த மாதிரி வெகு ஜன ஈர்ப்புக்கு வாய்ப்பு குறைந்த படங்களை பிளாக் பஸ்ட்டர் ஆக்குவதற்கு வெள்ளி விழா காண வைப்பதற்கு ,நமது நடிகர்திலகத்தை விட்டால் யார்?
கண்ணையன் பாத்திரத்தை வெறும் அப்பாவி போல நடித்து விட்டு கடக்க முடியாது. இந்த படத்தில் கண்ணையன் உலகம் குறுகியது அவனின் முடக்கமான நிலையால். அவன் எதிர்கொள்வதோ வீட்டில் அன்புள்ளங்களை மட்டுமே. இந்த நிலையில் சிறிதே தாழ்வு மனப்பான்மை, அன்பு நிறை உள்ளம், நிறைய விஷயங்களில் தேர்ச்சி குறைவு இவற்றால் அவன் அப்பாவி போல தோற்றம் தர வேண்டும். கை கால் அசைவுகள் அவர் ஊன நிலைக்கு தக்க இயங்க வேண்டும். (படிக்காத மேதை EQ அப்பாவித்தனமும்,சாப்பாட்டு ராமனின் வெட்டி அரட்டை அப்பாவித்தனமும் இதிலிருந்து எவ்வளவு மாறும்? மேதையின் அப்பாவி பாத்திரங்களை ஒப்பிட்டு ஆராய்ச்சி நடத்தலாம்.)
இந்த பாத்திரத்தை நடிகர்திலகம் கையாளும் லாவகம் இருக்கிறதே? அடடா.... அத்தனை அருமை. மாடு உதைத்து கழுநீர் தொட்டியில் விழுந்து மற்றவர்கள் உதவியால் வெளியேறும் முதல் காட்சியில் துவங்கி, பெரியப்பாவிடம் பக்தி நிறைந்த நட்பு,அப்பா அம்மாவிடம் பணிவு, பெண்களிடம் கலாட்டா ,இதில் பிள்ளையாரு கோயிலுக்கு,தாழையாம் ,தேரோடும் எங்க சீரான பாடல்களில் தாள லயத்துக்கேற்ப நொண்டி நொண்டி முழு பாடலுக்கும் நடனமாடும் தேர்ச்சி (கமல் அப்படியே இந்த ஸ்டெப் களை ஆட்டு குட்டி,,செவ்வந்தி பூ முடிச்ச பாடல்களில் அட்சரம் தப்பாமல் கையாளுவார்),தம்பியுடன் வாஞ்சை,அவன் கொஞ்சம் கொஞ்சமாக மாறும் போது திருப்ப பார்க்கும் பாசமுள்ள குத்தல், எம்.ஆர்.ராதா வின் அடாவடி தனங்களுக்கு சவடால்களுக்கு தன் இயல்பு மாறாமல் அளிக்கும் counter response ,reactions , (எம்.ஆர்.ராதா அப்படியே தன்னுடைய சிஷ்யனை பார்த்து பெருமை பட்டு எங்கியோ போயோட்டாம்பா எவ்வளவு நல்லா நடிக்கிறான் என்று சொன்னாராம்),பொன்னி ஒரு சங்கடமான சூழ்நிலையில் தன்னை மணக்கும் நிலைக்கு தள்ள படும் போது empathy யுடன் அவள் நிலையை பேசும் அழகு,தன் குறை மறந்து மண வாழ்க்கையில் தோய்வது ,பிரிவினை கொடுமை தாளாமல் பெற்றோரிடம் ,பெரியப்பாவிடம் தவிப்பது,பெரியம்மாவின் உதாசீனத்தை பொருமலுடன் ஏற்பது,தன்னுடைய மகனை உதாசீனம் செய்யும் போது ஒரு வெறுப்புடன் கையாலாகா தனத்தை விம்மலுடன் காட்டுவது, பட்டணத்தில் டாக்டர் செக் அப் செய்ததை கூச்சத்துடன் விவரிக்கும் பாங்கு என ஒவ்வொரு அணுவையும் ஆக்கிரமித்து ,நம் கவனம் ஈர்த்து தன்னிடமே தக்க வைப்பார்.
எம்.ஆர்.ராதாவிற்கு ரத்த கண்ணீருக்கு பிறகு ஒரு பெரிய break தந்த படம் இது.அடாவடியின் உச்சம். வசனங்கள் பெரும் பலம்.நடிகர்திலகத்தின் முன்னே தைரியமாக நின்று பார்வையாளரை ஈர்ப்பார்.(நடிகர்திலகம் உடனே தனது counter கொடுத்து சமன் செய்வார்).
சரோஜாதேவிக்கு நடிக்கும் வாய்ப்பு. நன்றாக பயன் படுத்தி ,வரும் காட்சிகளில் அனுதாபம் தட்டுவார். பாலையா,சுப்பையா,சி.கே.சரஸ்வதி ,ராஜம்மா எல்லோரும் அருமையான கூட்டணி .கிட்டத்தட்ட தில்லானா அளவு எல்லா நடிகர்களும் ஒத்துழைத்து களை கட்ட வைப்பார்கள்.
படப் பிடிப்பு, படத்தொகுப்பு,பின்னணி இசை ,பாடல்கள் எல்லாமே உன்னதம். எம்.எஸ்.வீ-டி.கே.ஆர் இணைவில் தாழையாம் பூ,தங்கத்திலே,தேரோடும்,ஒற்றுமையாய், ஏன் பிறந்தாய் எல்லா பாடல்களும் அருமை.
1956 முதல் பிணங்கி நின்ற கண்ணதாசன் ,இந்த படத்தின் மூலம் திரும்பினார். பட்டுகோட்டையார் ஏன் பிறந்தாய் மகனே பாட்டை எழுத மறுத்ததால் இந்த யோகம். ஆனால் முழுவதும் மனம் மாறாமல் கால் அடிபட்டு படுக்கையில் கிடந்த பழைய நண்பருக்கு தோதாக தங்கத்திலே பாட்டில் ஒரு வரி சேர்த்தாலும் நடிகர்திலகத்தின் பெருந்தன்மை அதை அனுமதித்தது.ஆண்டவன் கட்டளை முன்னாலே அரச கட்டளை என்னாகும் என்று எழுதி விட்டு துன்ப பட்ட வாலிக்கும், இதற்கும் எத்தனை வித்யாசம்?இதுவல்லவோ பெருந்தன்மை,மனித தன்மை,விவேகம். தமிழர்களுக்கு நல்லதுதான் ஆகவே ஆகாதே?
இது வந்த வருடம்(1959) முதலிரண்டு வசூல் படங்களாக வீரபாண்டிய கட்டபொம்மன்,பாகபிரிவினை.இரண்டுக்கும் எவ்வளவு வேறுபாடு?அதுதான் சிவாஜி. 1960,1961,1962 எல்லா வருடங்களிலும் முதல் இரண்டு உன்னத வசூல் படங்கள் இந்த box -office சக்ரவர்த்தியுடையதே.(1960- தெய்வ பிறவி,படிக்காத மேதை, 1961-பாவமன்னிப்பு,பாசமலர்,1962-ஆலய மணி)
இந்த படத்தை இன்றைய தலைமுறையும் அலுக்காமல் ரசிக்க முடியும். ரசிக்க வேண்டும். நம் உன்னதங்களை,சாதனைகளை கொண்டாட தமிழர்கள் கற்க வேண்டும்.
பாலும் பழமும்-1961.
ஒரு முக்கோண காதல் அல்ல மணவாழ்வு கதை. காதல் வாழ்வு என்பது மக்களுக்கும் ,நாட்டுக்கும்,உலகத்துக்கும் சேவை செய்யும் உன்னத நோக்குடன் இணைந்து பயணிக்க வேண்டும் என்பதை சொல்லி ,பிரமாண்ட வெற்றி பெற்ற படத்தை பற்றி கேட்டதுண்டா?
உலகம் தோன்றிய நாளிலிருந்து ,இருந்து வரும் ஒரு உன்னத ,மக்களை காக்கும் தொழில் செய்யும் அனைவரும் ,ஒரு படம் பார்த்து தங்கள் தொழிலையே நினைத்து பெருமிதம் கொண்டு ,அந்த படத்தின் நாயகனை பிரதி செய்து லட்சியமாக்கிய அதிசயம் கேட்டதுண்டா?
தமிழின் ஒரே ஸ்டார் நடிகன் ,முப்பது வயது இளைஞன் , தூக்கி வாரிய தலை முடியுடன், சில நரை சேர்த்து (salt &Pepper look )லட்சியவாதி மருத்துவராய் 1960 களில் நடித்து ,ஊரையே மலைக்க வைத்த அற்புதம் கண்டதுண்டா?
ஒரு தத்துவ பாடல், பாடல் ,இசை, நடிகனின் பங்களிப்பு(பாடகனும்) ஆகியவற்றால் அமரத்துவம் கண்டு, இன்றளவும் பெஞ்ச்மார்க் என்று சொல்ல படும் தர உன்னத அளவுகோலாக cult status அடைந்த கதை தெரிய வேண்டுமா?
உன்னத மனிதர்களை வைத்தே ,ஒரு படம் முழுவதையும் சுவாரச்யமாக்கும் கலை தெரிய வேண்டுமா?ரசிகர்கள் பாத்திரங்களுடன் ஒன்றி பயணித்த பேரதிசயம் நிகழ்ந்த வரலாறு அறிய வேண்டுமா?
கதை,வசனம்,இயக்கம்,நடிப்பு,பாடல்கள்,படமாக்கம் அனைத்திலும் உயரம் தொட்டு ,சமூகத்தின் மீது அக்கறையுள்ள பார்வை, அனைத்து ரக(நகரம்,கிராமம்) ஆண் பெண் ரசிகர்களை ஒருங்கே கட்டி போட்ட அறுபதுகளின் ஒரு படத்தை காண வேண்டுமா?
நடிகர்களின் இமயம், கதாசிரிய இமயம் (ஜி.பாலசுப்ரமணியம்),இயக்குனர்களின் இயக்குனர் ,கவிஞர்களின் கவிஞன்,மெல்லிசை சக்ரவர்த்திகள் இணைந்து நடத்திய கலை சாம்ராஜ்யம் தான் பாலும் பழமும்.
ஒரு செல்வ குடும்பத்தால் எடுத்த வளர்க்க பட்டு ,மருத்துவம் முடிக்கும் அனாதையான ரவி, தன்னுடைய லட்சியமாக கொள்வது புற்று நோய்க்கு மருத்துவ தீர்வு. அதற்கு உறுதுணையாக நிற்கும் சாந்தி என்ற செவிலி (nurse ) அனாதையாக நிற்கும் போது ,அவள் தன் லட்சியத்துக்கும் துணை நிற்பாள் என்று மணமுடிக்கிறான் .எடுத்த வளர்த்த பெரியவர்கள் தங்கள் பெண் நளினியை ரவிக்கு மணமுடிக்க எண்ண ,ரவியின் விருப்பத்தை அறிந்து பெருந்தன்மையாக அங்கீகரிக்கின்றனர்.மணவாழ்வில் சாந்தியின் அன்பினால் கவர படும் ரவி, ஒரு கட்டத்தில் முற்றிய காச நோய் கண்ட மனைவியை விட்டு நகராமல் தொழிலை உதாசீனம் செய்ய, அவனை விட்டு அகல்கிறாள் சாந்தி. தான் ஒரு விபத்தில் இறந்ததாக நம்ப வைக்கிறாள். பிறகு விதிவசத்தால் நளினியின் பிடிவாதத்தால் அவளை மணந்தாலும் ,சாந்தியின் நினைவால் ,நளினியுடன் விலகியே இருக்கிறான். ஒரு உணர்ச்சி போராட்டத்தில் ,கண் பார்வையை தற்காலிகமாக இழக்கிறான். ஒரு பெரியவரின் தயவால் சுவிட்சர்லாந்து சென்று நோய் குணமாகி வரும் சாந்தி, ரவியின் நிலையறிந்து ,அவனுக்கே பணி புரிய நீலா என்ற பெயரில் வர, முக்கோண போராட்ட உணர்ச்சி குவியலின் பின் ரவியும்,சாந்தியும் இணையும் கதை.
நடிகர்திலகமே படத்தின் தலையாய உயிர்மூச்சு. படவுலகத்துக்கும்,முதிர்ச்சியற்ற ரசிகர்களுக்கும் நல்ல கலையை தன் உழைப்பென்ற ரத்தத்தால் அமுதாக்கி கொடுத்து கொண்டிருந்தார் பலன் கருதாது. அவர் நடித்த அத்தனை படங்களும் ,ரசிகர்களை உயர்த்தி ,ரசனையை ஒரு படி மேலேற்றும் பணிகளை செய்தன. மற்றொரு புறம் ,ரசிகர்களை திருப்தி படுத்தி,அவன் ரசனை முன்னேறாமல் செய்து,அவனுக்கு பழகிய விருப்பப்பட்ட விஷயங்களை கொடுத்து வியாபாரியாக போட்டியாளர்கள். இப்போதைய படித்த இளைஞர்கள் (ஏட்டு படிப்பே. ரசனை உயர்ந்ததா?) மிக்க காலத்திலேயே கமல் போன்றவர்கள் இவ்வளவு திணறும் போது ,அந்த கால மந்தை கூட்டத்தின் நடுவே ,நடிகர்திலகத்தின் பணி எவ்வளவு மகத்தானது?
,பராசக்தி அந்தநாள்,ரங்கோன் ராதா, மணமகன் தேவை,அன்னையின் ஆணை,கப்பலோட்டிய தமிழன்,பார் மகளே பார்,புதிய பறவை,தில்லானா மோகனாம்பாள்,வியட்நாம் வீடு,கெளரவம் போன்ற படங்கள் காலத்தை எவ்வளவு முந்தியவை? அதுவரை இருந்த மசாலாக்களை முறித்து போட்டவை.
இந்த படத்தில் ,நடிப்புக்கு ஒரு புது இலக்கணம் வரைய பட்டது. poise ,elegance ,balance ,style எல்லாம் கொண்ட ஒரு sophisticated underplay with restraint என்பது அரங்கேறி ரசிகர்களை குதூகலத்தில் தள்ளியது. அவன் ரசனையை கைபிடித்து பத்திரமாக மேலேற்றியது. மூக்காலே ,முணு முணுப்பது(whisper through Nasal Tone ) போல வசனம் பேசி அந்த பாத்திரத்துக்கு தொழில் சார்ந்த ஒரு மரியாதை கிடைக்க செய்வார்.ஒரு உயர் ரக கண்ணிய போக்கு ,பாத்திரத்தின் மனநிலையையும் ,உணர்வு நிலையையும் கூட துல்லியமாக நூல் பிடித்தாற்போல வெளியிட்டு விடும்.
இலகுவான ஒரு உபரி செய்தி. டி.எம்.எஸ் அவர்களுக்கு ஜலதோஷம். அத்துடன் பாடியதால், சிவாஜி தன் பாத்திரத்துக்கு தேர்ந்தெடுத்த குரல் பாடல்களுக்கும் கிடைத்து விட்டது.
நடிகர்திலகத்துக்கு இதில் தோதான திரைக்கதையமைப்பு. கண்ணியமான லட்சிய உணர்வுள்ள மருத்துவராக ஆரம்பம், தன் லட்சியத்தை சுமக்கும் துணையை தேர்வு செய்யும் கட்டம், முரண்பட்டு நிற்கும் குடும்பத்தாரிடம் சங்கட வெளியீடு, இலட்சிய மனைவியுடன் உணர்வு ரீதியில் காதலாகி கசிந்துருகும் இடங்கள், அவள் நோய் வாய் பட்ட பிறகு எல்லாவற்றையும் துறந்து அவளுக்காகவே வாழும் வாழ்வு, பிரிவின் சோகம்-தாபம்-வேதனை-விரக்தி, குடும்பத்தால் சுமத்த பட்டு வேண்டா வெறுப்பாக இரண்டாவது திருமணம், மனைவியுடன் ஓட்ட முடியாமல் அவள் உணர்வுகளை தாண்ட முடியாமல் தகிப்பது,கண் போன பின் நீலாவிடம் இயல்பாக அமையும் பிடிப்பு, அவளிடம் உள்ளம் திறப்பது,என்று படம் முழுதும் அவருக்கு கொடி நாட்ட தோதாக கதை ,காட்சிகள்.(பீம்சிங் அல்லவா?)
அவ்வளவு பிரமாதமாக அமையும் அவர் வெளியீட்டு முறை. அமைதியான ,லட்சிய மருத்துவர் , காதலில் விழும் அழகு நான் பேச நினைப்பதெல்லாம் என்றால், மனைவியை குழந்தை போல எண்ணி உருகி பணிவிடை செய்யும் பாங்கு பாலும் பழுமும் கைகளில் ஏந்தி.(சுமைதாங்கி சாய்ந்தால் முன்னோடி)எம்.ஆர்.ராதாவின் நியாமற்ற வேண்டுகோளை curt ஆக ,அமைதியான கண்டிப்புடன் புறம் தள்ளும் அழகு. மனைவிக்கு பணிவிடை செய்யும் போது ,இடையீடு செய்யும் தொலை பேசியில் முதல் வேண்டுகோள் மறுப்பு ,இரண்டாவது முறை இயலாமை கலந்த வெறுப்பான மறுப்பு, மூன்றாவது முறை மூர்க்கமான வெறுப்புடன் உயிர் போச்சா இருக்கா I am coming என்ற இயலாமையின் உக்கிர வெளியீடு,(சாந்தி விலகி போகும் முடிவுக்கு வரும் காட்சி. என்னவொரு impact ), civilian march பாணி நடையுடன் ,வாக்கிங் ஸ்டிக் உடன் பாடும் போனால் போகட்டும் போடா என்ற விரக்தி-தத்துவ பாடலின் ரசிக ஈர்ப்பு முறை (இதனை முன்னோடியாக கொண்டே சிவாஜி என்றால் ஒரு தத்துவ சோலோ என்ற formula எண்பதுகள் வரை தொடர்ந்தது )நளினியின் பிடிவாதம்,பெரியவரின் உடல் நிலை கருதி தன்னிலை வெளியிட்டு திருமணத்துக்கு உடன் படும் கட்டம்,இரண்டாம் மனைவியின் உணர்வு வெளியீட்டின் தகிப்பை தாங்க முடியாத கட்டம்,நீலாவின் குரல் கேட்டதும் வரும் துடிப்பு,அவளிடம் உருவாகும் நேசம் நிறை நட்பு, பெரியவருடன் தன கையறு நிலையை சொல்லி கலங்கி தவிப்பது என்று டாக்டர் ரவியின் பாத்திரம் என்றென்றும் பேச படும் அளவில் நடிப்பில் முன்னோடி புது பாணி அரங்கேற்ற படும்.(இதை ரிலீஸ் நாளில் உடனே பார்த்த அண்ணாவின் மனநிலை யூகிக்க கூடியதே)
சரோஜாதேவி பிரமாத படுத்துவார். சாவித்திரியின் spontaneity வராவிட்டாலும் ,அவரை விட சில இடங்களில் முந்துவார். முக்கியமாக நோயில் வீழ்ந்து கணவரின் அளவு மீறிய ஈடுபாட்டோடு வரும் பணிவிடைகளில் உருகி நெகிழ்ந்து அதே சமயம் கடமை மறக்கும் கணவரை எண்ணி மருகுவது, நீலாவாக வேடமிடும் போது கணவரின் காதல் கண்டு பெருமிதம் ஒரு புறம்,தன்னிலை எண்ணி தன்னிரக்கம் மறுபுறம், இரண்டாம் மனைவியின் ஸ்தானத்திற்கு கொடுக்கும் மனிதம் என்று முகபாவங்களில் பிரமாத படுத்துவார். மின்னல் போல உணர்வுகளை வெட்டி வெளியிடுவார். நட்பை விரும்பவும் செய்வார்.
சௌகார் ஜானகி,சுப்பையா,பாலையா,எம்.ஆர்.ராதா ,நாகையா வழக்கம் போல நல்ல பங்களிப்பு. சுப்பையாவிற்கு அவருக்கென்றே தைத்த சட்டை போன்ற ரோல்.(நானே ராஜாவில் வில்லனாகவும் கிழிப்பார். என்னவொரு performer !!!!)
https://fbcdn-sphotos-e-a.akamaihd.n...fd87dc9c865335
Members of Sivaji Nataka Mandram.
Image courtesy: Facebook and Sivaji Santhanam
https://scontent-sin1-1.xx.fbcdn.net...28&oe=5735D65B
M.R. Santhanam with NT in Ulagam Palavitham.
Image courtesy: FB friend R.S.Sivaji (Sivaji Santhanam)
அருவருப்பின் உச்சத்தை தொடுகிறது பா.ஜ.கா. இதை போல ஒரு மோசமான பாசிஸ்ட் கட்சியை உலகத்திலேயே பார்க்க முடியாது. இந்துத்துவம், உயர்ஜாதி ஆதிக்கம்,சமஸ்கிருதம் இவற்றையெல்லாம் தூக்கி பிடித்து இந்தியாவை துண்டாட பிறந்த தீய சக்திகள். யாருக்கும் அதிகாரத்தை பிரித்து கொடுக்காமல் ,இந்தியாவில் சில நாட்கள் கூட தாங்காமல்,தானில்லாத போது நிர்வாகம் யார் கையில் ,என்று கூட நிர்மாணிக்காத டீ கடை பிரதமர். பத்ம விருதுகளை தகுதியில்லாதொருக்கு அள்ளி வழங்கி ,அந்த விருதுகளையே தலை குனிய வைக்கிறது.
ஹிந்துத்துவ சார்புள்ள ரஜினி ,ரவிசங்கர்,ஜெயமோகன் போன்றோருக்கு ஒவ்வாத விருதுகள்.
சிவாஜி ,இறந்த போது நேரில் வராத வாஜ்பாய், பூலான் தேவி சாவுக்கு போனார்.நிறைய பேர் பேசியும் சிவாஜிக்கு பாரத் ரத்னா தரவில்லை.(ஒரு வீரபாண்டிய கட்டபொம்மன் ,ஒரு கப்பலோட்டிய தமிழன்,ஒரு திருவிளையாடல்,ஒரு திருவருட்செல்வர்)இவற்றுக்காக தேச ஒற்றுமை, தெய்வ நம்பிக்கை ஊட்டும் படங்கள் இவைகளை முன்னிட்டாவது அந்த உலக நடிகனுக்கு வழங்க பட்டிருக்கலாமே?வாஜ்பாய் ஹிந்தி வெறியன்.கமல் போன்ற கலைஞனுக்கு காலம் கடந்த கௌரவம். பட்டங்களை பெற தமிழ் நாட்டில் வசித்தாலும் வேறு மாநிலமாய் இருந்தால்தான் மரியாதை போலும். சிவாஜி,கமல் போன்ற கலைஞர்களுக்கு வெளிநாட்டு அங்கீகாரம் மட்டுமே போலும்.
ரவி சங்கரை வாதுக்கு அழைத்து புறமுதுகு காட்டி ஓட வைத்த ஜாகீர் நாயக் என்ற அனைத்து மத நூல்களிலும் தேர்வு கண்ட ,சிறந்த பேச்சாளருக்கு அல்லவா வழங்க பட வேண்டும்?ரவிசங்கர் என்ன சாதித்தார்?
அசோக மித்திரனின் தண்ணீர்,பதினெட்டாவது அட்ச கோடு போன்ற நோபெல் தர நாவல்களுக்கு உரிய மரியாதையாய் பத்மபூஷன் கொடுக்காமல்,இந்துத்துவ ஜெயமோகனுக்கு பத்ம விருது கொடுப்பது என்ன ஞாயம்.?(அதை வெட்கத்தோடு நிராகரித்தார் ஜெயமோகன். ரஜினியிடம் அதையெல்லாம் எதிர்பார்க்க முடியாது)
நடப்பது அசிங்கம்.
i dont understand why you compare nadigar thilagam and next league actors.
The achievemwnts of nadigar thilagam cannot be dreamed by anybody in this globe.
Nadigar thilagam has achieved global hero status within 10 years of his career. He was awarded, rewarded and acknowledged by
1) asia afro filmdom
2) us government headed by john f kennedy.
Us, asia, afro - is 3/4th of globe.
With chevalie, nt is the only undisputed world hero..
Do not try to forcibly bring
anyone anyway as a comparison to nt.
Nadigar thilagam - it stops there !
All others are far....far...far...behind him !!!!
Iniya Nanbar Muthaiyan Avargale,
Thaangal oivu nichayam edukkavum. Anbu kattalai Idhu. Thaangal udal valimai viraivil Petri iru thirigalilum thaangal pangalippu thodara iraivanai vendugiren.
Makkal Thilagam paaniyil...
Neengal ennidam sandai poateergalaa?
Yeppodhu ?? Appadi onru nadandhadhaaga yenakku ninaivae illaye nanbarey !
கோபால்,
இரண்டு தினங்களுக்கு முன்னால்தான் குறிப்பிட்டேன். இங்கே வேறு வகையான விவாதங்கள் தேவையில்லை. நடிகர் திலகத்தைப் பற்றி மட்டும் பேசுவோம் என்று. ஆனால் மீண்டும் deviation. ராஜா எம்எஸ்வி இவர்களின் இசையமைப்பு மற்றும் பின்னணி இசை பற்றி விவாதம் செய்ய இந்த மன்றத்திலேயே வேறு தளங்கள் இருக்கின்றன. அதற்கு நடிகர் திலகம் திரி எதற்கு? அதுவுமல்லாமல் இந்த விஷயத்தில் உங்கள் கருத்து என்ன என்பது உலகத்திற்கே தெரியும். மீண்டும் ஏன்? அது போல் இந்த வருட பத்ம விருதுகளைப் பற்றிய விவாதமும் இங்கே தேவையில்லாதது. நடிகர் திலகத்திற்கு கொடுக்கப்படவில்லை என்பதை highlight செய்வதற்காக என்றால் அதை மட்டும் குறிப்பிடலாம். அரசியல் பற்றி பேசுவதற்கு வேறு திரிகள் உள்ளன. அனைத்து விஷயங்களைப் பற்றியும் உங்களின் அனைத்து கருத்துகளையும் கொட்டுவதற்கு உரிய இடமல்ல நடிகர் திலகம் திரி. புரிந்து கொள்வீர்கள் என நினைக்கிறேன்.
அன்புடன் ஒரு வேண்டுகோள். சோம்பல் வயப்பட்டு புதிதாக எழுதாமல் உங்களின் பழைய பதிவுகளையே மீள் பதிவு செய்து ஜல்லியடிப்பதை விட்டு விட்டு மிக நன்றாக எழுத தெரிந்த நீங்கள் புதிய பதிவுகளை தர வேண்டும் எனபதே அது.
அன்புடன்
RKS, Gopal is not comparing NT with anybody. He is just highlighting the fact that NT was not conferred with such civilian awards which he richly deserved. Let us keep it that way and not argue.
இன்றைய தினம் மாலையில் சற்று நேரம் சன் லைஃப் சானல் பார்த்துக் கொண்டிருந்தபோது நடுவில் நடிகர் திலகம் தோன்றினார். நடிகர் திலகம் தோன்றினார் என்று சொன்னால் அவரின் இயல்பான தோற்றத்தில் [1990 களில் அவர் எப்படி காட்சியளித்தாரோ அப்படி] பேசுகிறார். சுதந்திரப் போராட்டத்தை பற்றி.
"வெள்ளைக்காரன் நம்மை அடிமைகளாக வச்சிருந்தான். நாமா அடிமையா இருக்கோம்ங்கிறது கூட நம்ம பயலுகளுக்கு தெரியல்லை. இந்த அடிமை வாழ்க்கை கூடாது, சுதந்திரம் வேணும்னு அவனுக்கு புரிய வச்சு போராட்டம் பண்ண வேண்டியதாப் போச்சு. இந்த நூற்றாண்டில்தான் [இது படமாக்கப்பட்டது 1990-களின் இறுதியில்] சுதந்திரப் போராட்டம் வலுவடைஞ்சு காந்தி தலைமையிலே நேரு, படேல், சுபாஷ் சந்திர போஸ் போன்ற தலைவர்களெல்லாம் போராடினாங்க. இங்கே தமிழ் நாட்டிலே காமராஜ், வ.ஊ.சி, சுப்ரமணிய சிவா, பாரதியார், வாஞ்சிநாதன் போன்றவ்ங்களெல்லாம் போராடினங்க.
அவங்களுக்கெல்லாம் பட்டம் பதவி பணம்னு எதுவும் கிடையாது. ஒரே சிந்தனை நாட்டு விடுதலை. இன்குலாப் ஜிந்தாபாத்.இந்துஸ்தான் ஜிந்தாபாத் இதுதான் லட்சியம்."
கிட்டத்தட்ட இரண்டு மூன்று நிமிடங்களுக்கு வந்த மேற்கண்ட [மேற்கண்ட வாக்கியங்கள், வார்த்தைகளில் சற்றே வித்தியாசம் இருக்கலாம்] அவரது உரையை கேட்டவுடன் மனதில் ஒரு சிலிர்ப்பு. வெகு நாட்களுக்கு பிறகு ஒரு உரை மனதில் தைத்தது என்றே சொல்ல வேண்டும். இது போன்ற விசேஷ நாட்களில் கடமைக்காக பேசி செல்பவர்களைப் பார்த்து பார்த்து சலித்துப் போன நமக்கு உண்மையான ஒரு தேசியவாதியின் ஆத்மார்த்தமான பேச்சு அதுவும் நமது நடிகர் திலகத்தின் பேச்சு மிகுந்த மகிழ்வை கொடுத்தது.
குடியரசு தினம் அலல்து சுதந்திர தினம் என்றாலே நடிகர் திலகமும் அவர் படங்களும்தான் என்பது நமக்கு தெரியும். அதையும் தாண்டி அவரின் நேரிடையான பேச்சை ஒளிப்பரப்பியதற்கு [அதுவும் பல முறை] சன் லைஃப் சானலுக்கு நெஞ்சார்ந்த நன்றி!
அன்புடன்
முரளி,
ஆலோசனைகளுக்கு நன்றி. எனக்கே தெரிந்து,நானே விரும்பும் பதிவுகளை,புதிய வாசகர்களுக்காகவோ அல்லது முதல் முறை கண்ணில் படாமல் போன வாசகர்களுக்காகவோ அல்லது திரி சிறிதே தொய்வதாக உணரும் போதே ,அறிந்து செய்கிறேன்.
உங்களை போல புதுசு என்ற பெயரில் ஜீவனில்லாத பதிவுகள், என் பெயரில் எந்த நாளும் வெளியாகாது.
நான் வேலை நிமித்தம் ,மலேசியா,வியட்நாம்,போவதாலும்,நிறைய வெளிநாட்டு வியாபார விருந்தாளிகள் ,இந்தோனேசியா வருகை தருவதாலும் ,அடுத்த ஒரு மாதம் திரிக்கு வருவது சந்தேகமே.
பிறகு, நவராத்திரி, தூக்கு தூக்கி படங்களுக்கு நல்ல ஆய்வு புதுசாக தரும் எண்ணம் உள்ளது. அதற்காவது ,எதிர்விளைவு உங்களிடமிருந்து,ராகவேந்தரிடமிருந்து ,ஆதவன் ரவியிடம் இருந்து வந்தால் ,மரபின் நீட்சி தொடர் தொடரும் எண்ணம் உள்ளது. கார்த்திக்,வாசு,சாரதி போன்றோர் பங்கு பெறாததும், ராகவேந்தரின் அரசியலும், தங்களின் பட்டும் படாத பங்களிப்பும் எனக்கு அயர்வை தருகிறது. இன்னொரு உலக அதிசய தொடர் தர முடியுமா என்றே எனக்கு நானே கேள்வி எழுப்பி கொள்கிறேன்.
ஒரு மாதம் பொறுத்து சிந்திப்போம் ,நன்றி.
ஆதவன் ரவி,செந்தில்வேல்,ரவிகிரன்,முத்தையன் அம்மு,ராகவேந்தர் திரியை சுவாரஸ்யமாக்குங்கள்.
முத்தையன் அவர்களே, நீங்கள் போடும் நிழல் படங்களை பார்த்து நீங்களே நடிகர்திலகம் பக்தனாக மாறி இருப்பீர்களே?
வெளிவராத jeeva boomi திரைப்படத்தில்
(முகநூலில் இருந்து)
http://i65.tinypic.com/2rgjjb7.jpg
http://i65.tinypic.com/9a9s20.jpg
(முகநூலில் இருந்து)
மதுரை சென்ட்ரல் திரையரங்கில் 29.01.2016 வெள்ளி முதல் மக்கள்தலைவரின் தங்கைக்காக தினசரி 4 காட்சிகள்.
http://www.sivajiganesan.in/Images/290116_6.jpg
சிவாஜி எட்டாவது அதிசியம் அல்ல... எவரும் எட்டாத அதிசியம்.