-
25th January 2016, 09:24 PM
#11
Junior Member
Devoted Hubber
From Dinamani Kanavu kannigal,
தம்பி உங்களைப் பட விஷயமாகப் பார்க்கணும்ங்கறான். எப்ப ப்ரீயா இருப்பிங்க? ’
போனில் கணேசனிடம் அப்பாயின்மெண்ட் கேட்டார் டி.ஆர்.ராஜகுமாரி.
டஜன் ஆண்டுகளுக்கும் மேலாக தனித்துத் தெரிந்த ஒரே உச்ச நட்சத்திரம். வலிய வந்து நடிக்கக் கேட்கும் வேளையில், கணேசனின் மனத்தில் கூடுதல் குற்றாலம்!
‘நீங்க தேடி வந்தால் தயாரிப்பாளர்- நடிகர் உறவுதான். நாமெல்லாம் கலைஞர்கள். ஒரே குடும்பம்ற உணர்வு வரணும். உங்க ஆபிசுக்கு நானே வரேன். ’
சிவாஜியிடம் கால்ஷீட் வாங்குவதற்காக அத்தனை ஸ்டுடியோ அதிபர்களும் கால் கடுக்கக் காத்து நிற்க, கணேசனோ ஆர்வத்துடன் ஆர்.ஆர். பிக்சர்ஸ் அலுவலகத்துக்குள் நுழைந்தார்.
ராமண்ணாவுக்கு ஒரே ஆச்சர்யம். சிவாஜி என்கிற சிங்கத்தை எப்படி சிறைப் படுத்துவது என்று சிந்தித்துக்கொண்டிருந்த சமயம். அவரே எதிரில் வந்து நின்றால்..!
நேரடியாக மேட்டருக்குச் சென்றார் ராமண்ணா. ’உங்களோட எம்.ஜி.ஆரும் நடிக்கிறார்! ’
‘நாங்க ரெண்டு பேரும் சேர்ந்து ஆக்ட் பண்ணி, ஒரு படம் வெற்றியடைஞ்சா அது இன்டஸ்ட்ரிக்கே நல்லதுதானே. ’
‘ அட்வான்ஸ் எவ்வளவு தரணும் நாங்க? ’
‘கொடுக்கிறதை வாங்கிக்க. கொடுக்கலன்னா கேட்காதேன்னு எங்கம்மா சொல்லிட்டாங்க. ’
நட்பு நாடி வந்த கணேசனிடம் வெள்ளி நாணயங்களை மழையாகப் பொழிந்தார் ராமண்ணா.
சிவாஜிக்கு முன்பே எம்.ஜி.ஆரை ஒப்பந்தம் செய்து விட்டார்.
‘நாம்’ படுதோல்வியால் வருந்தி நின்றார் எம்.ஜி.ஆர். உடனே அழைத்து உற்சாகப்படுத்தி வாய்ப்பும் கொடுத்தார் ராமண்ணா.
கூண்டுக்கிளியில் ஹீரோ சிவாஜி. அவரோடு நடிக்கப் போகிறோம் என்றதும் எம்.ஜி.ஆர் மெய்யாகவே மகிழ்ந்தார்.
அந்த இன்பத்தின் முனையில் முன் பணம் ஒரே ஒரு ரூபாய் போதும் என்றார்.
‘சினிமா பாஷையில் கேட்கிறார்... ’ என்றெண்ணி ராமண்ணா பெரிய நோட்டை எடுத்துக் கொடுத்தார்.
‘அய்யோ நான் கேட்டது ஒரே ஒரு ரூபாய். ஆயிரம் கிடையாது. ’ அடம் பிடித்து ஒரே ஒரு ரூபாய் அட்வான்ஸ் வாங்கிச் சென்றார்.
என்ன காரணத்தினாலோ சிவாஜி - எம்.ஜி.ஆரோடு, டி.ஆர். ராஜகுமாரி கூண்டுக்கிளியில் நாயகியாக நடிக்கவில்லை.
ஒரே படத்தில் இரு திலகங்களுடன் ராஜகுமாரியும் நடித்திருந்தால் இன்னமும் பரபரப்பாகப் பேசப்பட்டிருக்கும் கூண்டுக்கிளி.
எம்.ஜி.ஆர்.- சிவாஜி, இருவருக்கும் ராமண்ணா ஒரே ஊதியம் வழங்கினார். ஆளுக்குத் தலா இருபத்தைந்தாயிரம்!
-
Post Thanks / Like - 2 Thanks, 4 Likes
-
25th January 2016 09:24 PM
# ADS
Circuit advertisement
Bookmarks