டியர் ராகவேந்திரன் சார்,
சொர்க்கம்(தேவிபாரடைஸ்), எங்கிருந்தோ வந்தாள்(சாந்தி) ஃப்ளாஷ்பேக் அருமை !
டியர் mr_karthik,
தங்களின் பெரிய பாராட்டுக்கு எனது இனிய நன்றி !
My sincere thanks to Mr.Chandrasekaran & Mr.Gopal.
அன்புடன்,
பம்மலார்.
Printable View
டியர் ராகவேந்திரன் சார்,
சொர்க்கம்(தேவிபாரடைஸ்), எங்கிருந்தோ வந்தாள்(சாந்தி) ஃப்ளாஷ்பேக் அருமை !
டியர் mr_karthik,
தங்களின் பெரிய பாராட்டுக்கு எனது இனிய நன்றி !
My sincere thanks to Mr.Chandrasekaran & Mr.Gopal.
அன்புடன்,
பம்மலார்.
டியர் mr_karthik,
தங்களின் ஆதங்கம் நியாயமானது.
சிவாஜி புரொடக்ஷ்ன்ஸ் "தங்கப்பதக்கம்" திரைக்காவியத்திற்குக் கூட 100வது நாள் விளம்பரத்தில் 'சென்னை சாந்தி, கிரௌன், புவனேஸ்வரி மற்றும் இந்தியா முழுவதும்' என்றே அளித்திருப்பார்கள்.
என்னத்த சொல்ல...என்னத்த செய்ய...
வருத்தத்துடன்,
பம்மலார்.
கலையுலக ஆண்டவரின் அக்டோபர் காவியங்கள்
அவள் யார்
[30.10.1959 - 30.10.2011] : 53வது ஆரம்பதினம்
பொன்னுக்கு மேலான பொக்கிஷங்கள்
காவியக்காட்சிகள் : பேசும் படம் : ஏப்ரல் மலர் 1959
http://i1110.photobucket.com/albums/...GEDC4888-1.jpg
http://i1110.photobucket.com/albums/...GEDC4889-1.jpg
http://i1110.photobucket.com/albums/...GEDC4890-1.jpg
http://i1110.photobucket.com/albums/...GEDC4891-1.jpg
http://i1110.photobucket.com/albums/...GEDC4892-1.jpg
http://i1110.photobucket.com/albums/...GEDC4893-1.jpg
தொடரும்...
அன்புடன்,
பம்மலார்.
டியர் காரத்திக்,
தங்களின் உள்ளம் மிகவும் புண்பட்டுள்ளது தங்களின் வார்த்தைகளில் தெரிகிறது. வாழ்க்கை என்பது நம்பிக்கையின் அடிப்படையில் ஆனது. நம்புவோம். நிச்சயம் நாம் நினைத்தது நடக்கும். நம்முடைய நேர்மையான முயற்சிகள் வீண் போகாது.
டியர் பம்மலார்,
என்னத்த சொல்ல, என்னத்த செய்ய... சமயம் பார்த்து பஞ்ச் தருகிறீர்கள், சூப்பரோ சூப்பர்.
டியர் பம்மலார்,
அவள் யார் படக் காட்சிகள் அருமை. படம் பார்க்காதவர்களுக்கு ஓரளவிற்கு நிறைவைத் தரும்.
சமீபத்தில் கேள்விப் பட்டது. எல்லாம் உனக்காக திரைக்காவியம் கொலம்பியா பிலிம்ஸ் மலேசியா நிறுவனத்தால் சில ஆண்டுகளுக்கு முன்னர் குறுந்தகடாக வெளியிடப் பட்டதாக ஒரு தகவல் கிடைத்தது. அவ்வாறாயின் அங்குள்ள நமது நண்பர்கள் முயற்சி செய்து எந்த நிலையில் உள்ளது, தற்போது மீண்டும் முயற்சித்தால் கிடைக்குமா என்கிற விவரங்களைக் கேட்டறிய முடியுமா?
கலையுலக ஆண்டவரின் அக்டோபர் காவியங்கள்
அவள் யார்
[30.10.1959 - 30.10.2011] : 53வது ஆரம்பதினம்
பொன்னுக்கு மேலான பொக்கிஷம்
வரலாற்று ஆவணம் : பேசும் படம் : செப்டம்பர் 1959
["அவள் யார்" காவியம் குறித்தும், அதில் நடிகர் திலகத்தின் கதாபாத்திரம் குறித்தும், அவை இரண்டும் சரிவர அமைய அதன் தயாரிப்பாளர்-இயக்குனர் கே.ஜெ.மகாதேவன் அவர்கள் எடுத்து கொண்ட பெருமுயற்சி குறித்தும் விளக்குகிறது இந்த எட்டு பக்கப் படக்கட்டுரை]
முதல் பக்கம்
http://i1110.photobucket.com/albums/...GEDC4894-1.jpg
இரண்டாம் பக்கம்
http://i1110.photobucket.com/albums/...GEDC4895-1.jpg
மூன்றாவது பக்கம்
http://i1110.photobucket.com/albums/...GEDC4896-1.jpg
நான்காம் பக்கம்
http://i1110.photobucket.com/albums/...GEDC4897-1.jpg
ஐந்தாம் பக்கம்
http://i1110.photobucket.com/albums/...GEDC4898-1.jpg
ஆறாம் பக்கம்
http://i1110.photobucket.com/albums/...GEDC4899-1.jpg
ஏழாவது பக்கம்
http://i1110.photobucket.com/albums/...GEDC4900-1.jpg
எட்டாம் பக்கம்
http://i1110.photobucket.com/albums/...GEDC4901-1.jpg
தொடரும்...
அன்புடன்,
பம்மலார்.
கார்த்திக்,
ஒரு சின்ன இடைவெளிக்கு பின் உங்களின் உணர்வுபூர்வமான பதிவு அனைவர் மனதையும் தொட்டது போல் என் மனதையும் ஆழமாக தொட்டது. நான் பாபு படம் வெளியான அன்று பார்க்கவில்லை. அக்டோபர் 18 திங்கள் தீபாவளியன்று 5 காட்சிகள். காலையில் 9 மணி ஓபனிங் ஷோ ஸ்ரீதேவி தியேட்டருக்கு போய் டிக்கெட் கிடைக்காமல் திரும்ப வேண்டிய சூழல். அப்படியே நேரே மீனாட்சி தியேட்டருக்கு போய் அன்று வெளியான ஜானி மேரா நாம் பார்த்தோம்.[மூன்று மாதங்களுக்கு பிறகு நம்முடைய படமாக வரப் போவது எப்படி இருக்கும் என்பதை பார்க்கவே போனோம்]. என்னை கூட்டிக் கொண்ட போன என் கஸினுக்கு அவனுடைய நண்பன் ஒருவன் மூன்றாவது காட்சியான 3 மணி ஷோவிற்கு டிக்கெட் வாங்கி கொடுத்து விட நான் போக முடியாமல் போனது.
பாபு தேவியில், சென்ட்ரலில் நீரும் நெருப்பும், தங்கத்தில் ஆதி பராசக்தி சிந்தாமணியில் வீட்டுக்கு ஒரு பிள்ளை என்ற கணக்கில் வெளியாகி இருந்தன. தீபாவளிக்கு மறு நாள் காலையும் தேவிக்கு சென்று டிக்கெட் கிடைக்காமல் சிந்தாமணி தியேட்டருக்கு போய் வீட்டுக்கு ஒரு பிள்ளை படம் பார்த்தோம். அன்றும் பாபு பார்க்க முடியவில்லை. மறு நாள் முதல் ஸ்கூல் மீண்டும் திறந்து விட்டதால் அந்த சனிக்கிழமையன்று தான் பார்க்க முடிந்தது. எப்போது பார்த்தால் என்ன? 1965 நீலவானத்திற்கு பிறகு மனதை மிக சோகமாக்கிய படம் என்றால் அது பாபு தான். வியட்நாம் வீட்டையும் இந்த இடத்தில் மறக்கவில்லை.
இந்த 1971 அக்டோபர் 18-ந் தேதியை பொறுத்தவரை அதற்கு ஒரு முக்கியத்துவம் உண்டு. தமிழ் சினிமா வரலாற்றில் நிகழ்ந்த உச்சக்கட்ட போட்டி என்று சொன்னால் அது இரண்டு திலகங்களிடையே நிகழ்ந்த போட்டியே ஆகும். அதற்கு முன்னும் அதற்கு பின்னும் அது போன்ற ஒரு போட்டியை தமிழ் சினிமா கண்டதில்லை. எத்தனையோ முறை இருவரின் படங்களும் ஒரே நாளில் வெளியாகி இருக்கின்றன. அந்த போட்டியில் கடைசி முறையாக ஒரே நாளில் இருவரின் படங்களும் வெளியான நாள்தான் 1971 அக்டோபர் 18. அந்த தினத்திற்கு பின் ஒரே தினத்தில் இருவரின் படங்களும் வெளியாகவில்லை. அதற்கு பிறகு மிக நெருக்கமாக வந்த படங்கள் என்றால் இதற்கு பிறகு ஒரு 5 மாதம் சென்று வெளியான ஞான ஒளி மற்றும் நல்ல நேரம் படங்கள். நல்ல நேரம் 1972 மார்ச் 10 அன்று வெளியான போது ஞான ஒளி மார்ச் 11 அன்று ரிலீசானது. அந்த வகையில் அடுத்து சொல்வதென்றால் 1975 அக்டோபர் 31 அன்று பல்லாண்டு வாழ்க வெளியானது, இரண்டு நாட்கள் கழித்து நவம்பர் 2 அன்று Dr.சிவா மற்றும் வைர நெஞ்சம் வெளியானது. ஆனால் எப்போதும் ஒரு நிகழ்வின் முக்கியத்துவம் அன்றைய நாளை விட பிறிதொரு நாளில் யோசிக்கும் போதுதான் புரியும். அது போலதான் அந்த அக்டோபர் 18 பற்றிய நினைவுகளை 40 வருடங்களுக்கு பிறகு யோசிக்கும் போது அல்லது சொல்லும்போதுதான் இது போன்ற சின்ன சின்ன குறிப்புகள் கூட சுவையாகின்றன.
இவற்றை குறிப்பிட்டு நானே முன்பு எழுதியிருக்கிறேன் என்ற போதிலும் மீண்டும் அதை அசை போடுவதில் ஒரு தனி சுகம்.
நன்றி கார்த்திக் நன்றி!
அன்புடன்
நீங்கள் பதிவு செய்த அன்றே இதை எழுத வேண்டும் என்று ஆரம்பித்து இன்றுதான் பதிய முடிந்தது.
சுவாமியை அவரின் ஆவண பங்களிப்பிற்காக பாராட்ட ஆரம்பித்தால் அதற்கு ஒரு முடிவே இருக்காது என்பதனால்தான் நான் அதை திரியில் குறிப்பிடுவதில்லை. அது மட்டுமல்ல பல விஷயங்களை நேரில் தொலைபேசியிலும் பகிர்ந்து கொள்வதால் சுவாமியிடம் என்ன என்ன இருக்கின்றது என்பதை பற்றி ஓரளவிற்கு ஒரு அனுமானமும் எனக்கு உண்டு. ஆனால் நான் இங்கே பலமுறை குறிப்பிட்டுள்ளது போல் அதையும் மிஞ்சும் வண்ணம் இன்ப அதிர்ச்சிகளை கொடுப்பவர் சுவாமி. அவற்றில் ஒன்றுதான் யாருக்குமே அவ்வளவாக தெரியாத அவள் யார் படத்தின் கதை சுருக்கத்தையும் கதாநாயகனின் பாத்திரப்படைப்பையும் பற்றி படத்தின் இயக்குனர், பேசும் படம் இதழுக்கு கொடுத்துள்ள பேட்டி.
Thanks Swami for those sweet surprises! Keep them coming.
அன்புடன்