http://i61.tinypic.com/213n67b.jpg
Printable View
http://i160.photobucket.com/albums/t...psel4sg90m.jpg
http://dinaethal.epapr.in/465278/Din...2015#page/13/1
For saving/records purposes only.
மனதில் நிறைந்த மக்கள் திலகம்
“மக்கள் திலகம்” என்றதுமே ஏதோ இனம்புரியாப் பரவசம் என் மனதில் ஊற்றெடுக்கிறது. அந்த ஊற்றின் மூலத்தைத் தேடிக் கொண்டே சென்றேன் அது என்னை எனது இளமைக்காலத்திற்கு அழைத்துச் சென்றது .
ஆமாம், எம்.ஜி.ஆர் எனும் மூன்றெழுத்து, “சக்தி” எனும் இந்த மூன்றெழுத்துடன் பின்னிப்பிணைந்தது இன்று நேற்றல்ல.
அப்படி என்னதான் இந்த மனிதனுடன் என்னைப் பிணைத்தது?
மிக ஆழமான கேள்வி? ஐம்பதுகளின் இறுதிப் பகுதியில் காலடி வைத்திருக்கும் இந்நிலையில் நான் என்னைக் கேட்கிறேன்.
பதில் மிகவும் விசித்திரமானது.
“மனிதனாக வாழந்திட வேண்டும் மனதில் வையடா, தம்பி மனதில் வையடா !” என்று மக்கள் திலகத்தின் படத்தில் வரும் பாடலொன்றில் வரிகள் உண்டு.
உலகில் நன்னெறி கொண்ட மனிதனாக, மக்கள் மனங்களில் கோலோச்சும் மன்னனாக நடைபோட வேண்டுமென்றால் மக்கள் திலகத்தின் படங்களில் அவர் ஏற்கும் பாத்திரங்களின் பண்புகளைக் கொண்டிருக்க வேண்டும் எனும் உன்னத கருத்தே இம்மாமனிதனுடன் என்னை இணைத்தது என்பதே உண்மையாகும்.
யார் இவர் ? ஒரு சாதாரண நடிகர் தானே! இவருக்கென்ன இத்தனை விளம்பரம் என்று எண்ணுபவர்கள் இருக்கலாம்.
இவரின் படத்தில் வரும் பாத்திரங்களில் மயங்கி விட்டாய் என்று சொல்பவர்கள் கூட இருக்கலாம் .
சரி அப்படியே வைத்துக் கொள்ளுங்கள்.
ஆனால் இம்மானிதர் மக்களுடைய மனங்களில் பிடித்திருக்கும் இடம் காலத்தால் அழிக்கப்பட முடியாத ஒன்றாக இருப்பதற்குக் காரணம் என்ன என்றாவது நாம் எண்ணிப்பார்க்க வேண்டாமா ?
மக்கள் திலகம் எனும் இம்மாமனிதருடன் பழகும் சந்தர்ப்பம் எனக்குக் கிடைக்கவில்லை. ஆனால், இவருடன் பழகிய பலருடன் பழகும் பாக்கியம் எனக்குக் கிடைத்தது.
அவர்களில் முக்கியமானவர் என் மனதில் நீங்கா இடம் பிடித்திருக்கும் அமரர் கவிஞர் வாலி அவர்கள்.
அவரைப் பலமுறை சந்தித்து அளவளாவும் பாக்கியம் பெற்றிருந்தேன் . எமது ஒவ்வொருமுறைச் சந்திப்பின் போதும் அவர் எனக்கு மக்கள் திலகத்தின் உயரிய பண்புகளில் ஏதாவது ஒன்றைப் பற்றி உன்னதமாக விளக்குவார்.
திரையுலகைச் சேர்ந்தவர்கள் யாராயிருந்தாலும் அவர்களைத் தனது குடும்பத்தில் ஒருவராக மதித்து அவர்களது தேவை என்னவோ அதைத் தனது தேவையாகக் கருதி நிறைவேற்றும் அவரது இளகிய மனம் ஒன்றே அவருக்கு “பொன்மனச் செம்மல்” எனும் பட்டத்தை பெற்றுக்கொடுக்கும் வல்லமை பெற்றது.
எனது மானசீகக் குரு கவியரசர் கணவிதாசன் அவர்களை தமிழக ஆஸ்தானக் கவிஞராக்கி மகிழ்ந்த அவரது உள்ளத்தை என்னவென்று போற்றுவது.
கவியரசரது விழுதுகளில் ஒன்றான கண்மணி சுப்பு அவர்களின் சந்திப்பின் போது
தனது தந்தையின் வேண்டுகோளை சிரமேல் ஏற்று கவியரசரின் மறைவிற்கு பின்னர் அதைக் கச்சிதமாக நிறைவேற்றிக் கொடுத்த பண்பினை மிக அழகாக எடுத்தியம்பியபோது மக்கள் திலகம் இன்றும் மக்கள் மனங்களில் நிலைத்திருக்கும் மர்மம் புரிகிறது.
நான் படித்த ஒரு சுவையான சம்பவம் எனக்கு இப்போது நினைவிற்கு வருகிறது .
பணத்தோட்டம் எனும் படத்திற்காக டி.எம்.எஸ் உம் , பி.சுசீலா வும் பாடிய “பேசுவது கிளியா ?“ எனும் பாடலில் ஒரு பகுதி
பாடுவது கவியா -இல்லை
பாரி வள்ளல் மகனா
சேரனுக்கு உறவா
செந்தமிழர் நிலவா …
என்று வரும் .
இந்தப் பாடல் எழுதப்பட்ட சமயம் மக்கள் திலகத்தை அவரது தோட்டத்தில் சந்தித்த ஒரு தயாரிப்பாளரிடம் இப்பாடலைக் கேட்டு அவரது கருத்தைக் கூறும்படி மக்கள் திலகம் கேட்டாராம் .
பாடலைக் கேட்ட அத்தயாரிப்பாளர் உங்களது சரித்திரத்தையே இருவரிகளில் கவியரசர் கண்ணதாசனை விட வேறுயாரால் கூற முடியும் என்று சொன்னராம்.
அதற்கு மக்கள் திலகம் அது எப்படி ? என்று கேட்க,
சேரனுக்கு உறவா
செந்தமிழர் நிலவா
எனும் இந்த இருவரிகள் உங்கள் சரித்திரத்தைத் தானே கூறுகிறது என்று கூற மக்கள் திலகம் வியப்பில் ஆழ்ந்து கவியரசரின் திறமையை ரசித்தாராம் .
எனக்கு அப்போது 9 வயது என்று நினைக்கிறேன். எனது தாய்மண்ணாம் இலங்கையில் யாழ்ப்பாணத்தில் இருக்கிறேன்.
“எங்க வீட்டுப் பிள்ளை” யாழ்ப்பாணத்தில் வெளியிடப்படும்போது மக்கள் திலகம் எம்.ஜி.ஆரும், அபிநய சரஸ்வதி சரோஜாதேவியும் யாழுக்கு விஜயம் செய்திருந்தார்கள்.
திறந்தததொரு ஜீப் வண்டியில் பலாலி விமான நிலயத்திலிருந்து பலாலி வீதி வழியாக யாழ் நகருக்கு ஊர்கோலமாக அழைத்து வரப்பட்டார்கள்.
மிகவும் பரபரப்பாக இருந்த என்னை அப்போது விடுமுறையில் வந்திருந்த என் தந்தை எதற்காக இந்தப் பரபரப்பு என்றதும் மக்கள் திலகத்தைப் பார்க்க வேண்டும் என்ற எனது விருப்பத்தைக் கேட்டதும் சைக்கிளில் என்னை உட்கார்த்தி யாழ் கந்தர்மடத்தில் பலாலி வீதிச் சந்தியில் எம்.ஜி.ஆரையும் , கன்னடத்துப் பைங்கிளியையும் நேராகப் பார்க்கும் வாய்ப்பை என் அன்புத்தந்தை ஏற்படுத்திக் கொடுத்ததை எப்படி என்னால் மறக்க முடியும்?
அப்பப்பா ! பொன் வண்ணம் என்பார்களே அப்படியான வதனம், அன்பான புன்னகை அவரைப் பற்றி அவ்வயதில் நான் கொண்டிருந்த கற்பனையை அக்காட்சி எவ்விதத்திலும் சிதறடிக்கவில்லை .
பின்பு எனது பதினாறவது வயதில் எங்க வீட்டுப் பிள்ளை மீண்டும் யாழ் வெலிங்டன் தியேட்டரில் திரையிடப்பட்ட போது டிக்கெட் கிடைக்காமல் மதில் வழியாகப் பாய முற்பட்டு தியேட்டர் ஊழியர் என் சட்டையைப் பிடித்திழுக்க முதுகுப் பக்கச் சட்டை கிழிந்து சட்டை அவர் கையிலும் நான் உள்ளேயும் விழுந்த அனுபவம் இனிக்கிறது.
முதுகுப் பக்கச் சட்டை இல்லாமலே அத்திரைப்படத்தை என் நண்பர்களுடன் பார்த்து மகிழ்ந்தது மக்கள் திலத்தின் ஞாபகத்திற்கு ஒரு மகுடமாய் நெஞ்சில் திகழ்கிறது .
மக்கள் திலகத்தின் திரைப்படப் பாடல்கள் எப்போதும் மனதில் அளவிடமுடியாத உற்சாகத்தைக் கொடுக்கும்.
இப்போது கூட லண்டனில் எப்போது எனக்கு நேரம் கிடைக்கிறதோ அப்போதெல்லாம் எம்.ஜி.ஆர் ஹிட்ஸ் பார்ப்பதே என் மனதிற்கு ஆனந்தத்தை அளிக்கும்.
நீ ஆண்டது
அரியணைக் கதிரையல்ல
மக்களின்
அன்பு மனங்களென்பேன்
காலன் உனைக்
கவர்ந்து சென்று
காலங்கள் பல
கடந்தாலும்
காலத்தால் அழியாத
கலங்கரை விளக்காய்
அரசியல் உலகிற்கு
ஆணிவேராகினாய்
மன்னாதி மன்னனாய்
உலகம் சுறும் வாலிபனாய்
உழைக்கும் கரங்களோடு
பட்டிக்காட்டு பொன்னையா
மாட்டுக்கார வேலனாக
மக்கள் மனங்களை உழுதாயே !
மதுரை வீரனாய் நீயோ
நீதிக்குத் தலைவணங்கும்
எங்கள் வீட்டுப் பிள்ளையென
தர்மம் தலைகாக்கும் என
கலங்கரை விளக்கானாய்
பாசத்திற்கு ஓர் எடுத்துக்காட்டாய்
தனிப்பிறவி நீ என்வாழ்வில்
ஒளிவிளக்காய் பிரகாசித்தாய்
புதுமைப் பித்தன் நீ
தாய்சொல்லைத் தட்டாமல்
தாய்க்குப்பின் தாரம் என
நல்லவன் வாழ்வான் என்றே
ஆயிரத்தில் ஒருவனானாய்
தமிழர்களின் காவல்காரன்
காத்திருந்தாய் விவசாயிகளை
ஒருதாய் மக்கள் நாமென்று
சங்கே முழங்கென்றாய்
ஊருக்கு உழைப்பவனே
நம்நாடு என் இதயவீணை
பாடிய உன் உள்ளமே
உன் மக்கள் எப்போதும்
குடியிருந்த கோயில்
courtesy.
சக்தி சக்திதா
அன்பு சகோதரர் வரதகுமார் சுந்தராமன் எனப்படும் திரு. சி. எஸ். குமார் அவர்கள் அறிவது :
வித்தியாசமான தொகுப்பு - அருமை.
இணைய தளத்திலிருந்து, பதிவிறக்கம் செய்யப்பட்ட தங்களது நேற்றைய பதிவுகள் அனைத்தும் வெகு அருமை !
தங்களின் புதுமையான பதிவுகளுக்கு பாராட்டுக்கள் கலந்த நன்றி !
இனிய நண்பர் திரு லோகநாதன் அவர்கள்
செய்தியை இப்போதுதான் படித்தேன். என்னுடைய ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துகொள்கிறேன். கோடி கொடுத்தாலு தாய்க்கு நிகர் இந்த உலகில் ஏதும் இல்லை. ஆறுதல் கூறமுடியாத துயர் இது. தங்களுடைய தாயார் இந்த புவியில் பிறந்து ஆற்றவேண்டிய கடமைகள் அனைத்தும் செவ்வன ஆற்றிவிட்டதால் இறைவன் திரும்ப அவரை தன்னுடன் அழைத்துகொண்டார். இயற்கையின் கொடுமையான செயல்களில் அதிகம் கொடுமையான செயல் நம்முடன் இருப்பவரை இயற்கை தன்னோடு நம் அனுமதியில்லாமல் சேர்த்துகொள்வதுதான்.
தங்களுக்கும் தங்கள் குடும்பத்திற்கும் என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்கள்.
Rks
My heart felt condolences to Mr.Loganathan for his loss. May her soul rest in peace.
MGR devotee Yukesh Babu informed me that he was blessed with a female child this morning.
அருமை நண்பர் திரு யுகேஷ் பாபு அவர்களுக்கு
தங்கள் இல்லத்தில் மகாலட்சுமி அவதரித்த செய்தி நண்பர் ரூப் பதிவு வாயிலாக அறிந்தேன். மிக்க மகிழ்ச்சி.
தகப்பனாராக பதவி உயர்வு பெற்றிருக்கும் தங்களுக்கு எங்கள் வாழ்த்துக்கள்
இந்த இனிய நாளில் தாங்களும் தங்கள் குடும்பமும் எல்லா வளமும் பெற்று இன்புற்று வாழ எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கின்றேன்.
மகிழ்ச்சியுடன்
RKS
தங்களுக்காக இந்த இனிய சம்பவத்திற்கான பாடல் !
https://www.youtube.com/watch?v=4l_ZCKhEmRs
இரண்டாவது குழந்தை பெற்ற திரு. யூகேஷ் பாபு தம்பதியருக்கு, வாழ்த்துக்கள் ! முதலில் பிறந்த ஆண் குழந்தையை தொடர்ந்து தற்போது பெண் குழந்தை பெற்றுள்ளனர்.
http://i61.tinypic.com/302cra1.jpg
தாயும், சேயும் நலமுடன் இருப்பதாக தகவல் தெரிவித்தார் திரு. யூகேஷ் பாபு.
மீண்டும் பாரட்டுக்கள் பல !
நீங்கநல்லாஇருக்கோணும் …..
தமிழக வரலாற்றில் திரைத்துறையும் அரசியலும் இரண்டறக் கலந்திருப்பதற்கு இந்த பாடலும் சாட்சி சொல்லும்! புரட்சித்தலைவர் என்கிற பொன்மனச்செம்மல் மருத்துவமனையில் உயிருக்காக போராடிக்கொண்டிருந்த போது இந்தப்பாடல் மக்களின் பிரார்த்தனை கீதமானது! இன மதங்களைக் கடந்து எல்லோரும் ஒருமித்த குரலில் இறைவனைத் தொழுதுநின்றார்கள் என்பது ஒன்றிரண்டு அல்ல.. தமிழகமெங்கும்! திரையரங்குகளில் இந்தப்பாடல் எந்தத்திரைப்படம் அங்கே ஓடினாலும் முதலில் இப்பாடல் ஒருமுறை ஒலித்தபின்தான் என்கிற சரித்திரம் எவருக்கு வாய்த்தது.. எம்.ஜி.ஆரைத் தவிர!
நீங்கநல்லாயிருக்கோணும்நாடுமுன்னேறஇந்தtms
நாட்டில்உள்ளஏழைகளின்வாழ்வுமுன்னேற
நீங்கநல்லாயிருக்கோணும்நாடுமுன்னேறஇந்த
நாட்டில்உள்ளஏழைகளின்வாழ்வுமுன்னேற
என்றும்நல்லவங்கஎல்லாரும்ஒங்கபின்னாலேநீங்க
நெனச்சதெல்லாம்நடக்குமுங்ககண்ணுமுன்னாலே
என்றும்நல்லவங்கஎல்லாரும்ஒங்கபின்னாலேநீங்க
நெனச்சதெல்லாம்நடக்குமுங்ககண்ணுமுன்னாலே
· பேரறிஞர் அண்ணாவின் இதயக்கனி என்று பாராட்டப்பெற்ற அவர் நடித்த இத்திரைப்படத்திற்கும் இதயக்கனி என்றே பெயரிட்ட பேறும் அண்ணா அவர்களின் குரலில் இப்படத்திற்கான முன்னுரையும் இடம்பெற்றது.
· தமிழகத்தைச் செழிப்பாக்க ஓடிவரும் காவிரி நதியின் ஒய்யார அழகை ஒரு திரைப்பாட்டில் தொகையறாவைக் கொண்டு இப்படி வர்ணிக்க முடியும் என்று புலவரின் கைவண்ணம் ஓங்கி ஒலித்திட.. காவிரியின் பெருமைகள் காட்டாற்று வெள்ளமாய் கரைபுரண்டு ஓடிவருவதைப் பாருங்கள்.. அதன் உச்சமாய்.. வாரி வழங்கும் வள்ளல் புகழை ஒப்பிட்டு திரையில் தோன்றிய திருமுகத்தைக் காட்டிய இயக்குனரின் சமார்த்தியம் பாராட்டத்தக்கது!
தென்னகமாம்இன்பத்திருநாட்டில்மேவியதோர்
கன்னடத்துக்குடகுமலைக்கனிவயிற்றில்கருவாகி
தலைக்காவிரிஎன்னும்தாதியிடம்உருவாகி
ஏர்வீழ்ச்சிகாணாமல்இருக்கசிவசமுத்திர
நீர்வீழ்ச்சிஎனும்பேரில்நீண்டவரலாறாய்
வண்ணம்பாடியொருவளர்த்தென்றல்தாலாட்ட
கண்ணம்பாடிஅணைகடந்துஆடுதாண்டும்காவிரிப்பேர்பெற ்று
அகண்டகாவிரியாய்ப்பின்நடந்து
கல்லணையில்கொள்ளிடத்தில்காணும்இடமெல்லாம்
தாவிப்பெருகிவந்துதஞ்சைவளநாட்டைத்
தாயாகிக்காப்பவளாம்தனிக்கருணைகாவிரிபோல்
செல்லும்இடமெல்லாம்சீர்பெருக்கித்தேர்நிறுத்தி
கல்லும்கனியாகும்கருணையால்எல்லோர்க்கும்
பிள்ளையெனநாளும்பேசவந்தகண்மணியே
வள்ளலேஎங்கள்வாழ்வேஇதயக்கனி
எங்கள்இதயக்கனிஇதயக்கனி
· டி.எம்.செளந்திரராஜன்.. சீர்காழி கோவிந்தராஜன்.. எஸ்.ஜானகி மற்றும் குழுவினரின் கூட்டணியில் மெல்லிசை மன்னர் ஈன்றெடுத்த வெற்றிச்சித்திரமிது!
· உழைக்கும்தோழர்களேஒன்றுகூடுங்கள்sj
உலகம்நமதுஎன்றுசிந்துபாடுங்கள்
மேடுபள்ளம்இல்லாதசமுதாயம்காண
என்னவழிஎன்றுஎண்ணிப்பாருங்கள்
அண்ணாசொன்னவழிகண்டுநன்மைதேடுங்கள்
நீங்கநல்லாயிருக்கோணும்நாடுமுன்னேறஇந்த
நாடெங்கும்இல்லாமைஇல்லையென்றாக
சமத்துவ சமுதாய சிந்தனையை.. தன் பாட்டு வரிகளால் ஒருமிக்க.. அதற்கேற்ற காட்சியை இயக்குனர் அமைத்துத் தர ஒட்டுமொத்தமாய் எம்.ஜி.ஆருக்கு புகழை மட்டுமல்ல.. ஓட்டுக்கள் மொத்தத்தையும் அள்ளித்தந்த பாடலிது என்றுகூட சொல்லலாம்!
பாடுபட்டு்ச்சேர்த்தபொருளைக்கொடுக்கும்போதும்இன ்பம்
வாடும்ஏழைமலர்ந்தமுகத்தைப்பார்க்கும்போதும்இன்ப ம்
பேராசையாலேவந்ததுன்பம்சுயநலத்தின்பிள்ளை
சுயநலமேஇருக்கும்நெஞ்சில்அமைதிஎன்றும்இல்லை
பேராசையாலேவந்ததுன்பம்சுயநலத்தின்பிள்ளை
சுயநலமேஇருக்கும்நெஞ்சில்அமைதிஎன்றும்இல்லை
அமைதிஎன்றும்இல்லை
காற்றும்நீரும்வானும்நெருப்பும்பொதுவில்இருக்குதுமனி தன்
காலில்பட்டபூமிமட்டும்பிரிந்துகெடக்குது
பிரித்துவைத்துப்பார்ப்பதெல்லாம்மனிதர்இதயமேஉலக ில்
பிரிவுமாறிஒருமைவந்தால்அமைதிநிலவுமே .. அமைதிநிலவுமே
நதியைப்போலநாமும்நடந்துபயன்தரவேண்டும்
கடலைப்போலேவிரிந்தஇதயம்இருந்திடவேண்டும்
வானம்போலப்பிறருக்காகஅழுதிடவேண்டும்
வாழும்வாழ்க்கைஉலகில்என்றும்விளங்கிடவேண்டும்
ஒற்றைத்திரைப்பாடலில் இத்தனைக் கருத்துக்களா? விழிகள் விரிகின்றன! இதயக்கனிக்காக புலவரின் இதயம் வார்த்த வார்ப்புகளிது!
COURTESY- KAVIRI MAINTHAN- NET
மனதில் நிறைந்த மக்கள் திலகம்!..
அன்றலர்ந்த தாமரைபோல் அழகியநல்முகம்! செக்கர்வானம் தந்துவைத்த பொன்னிறம்! கொடுத்துச்சிவந்த கரங்களால் அவரும் பாரி! பறங்கிமலை அருகினில் தோட்டம்! தோட்டம்! ராமனின் கால்பட்டதால் அகலிகை பெற்ற விமோசனம்போல் எங்கள் ராமச்சந்திரன் வாழ்ந்த காரணத்தால் அது ராமாவரமாய் ஆனதோ? திரையில் தோன்றிய நாயகன் மக்கள் மனதில் வாழ்கிற காவியம்! இதற்கு முன்னோ இதற்குப் பின்னோ இப்படி ஒருவரில்லை! ஈடில்லை. உவமையில்லை!
கும்பகோணத்தில் தன் தாய் ஒரு கவளம் சோறுதர முடியாமல் தவித்த தவிப்பை தன் மனதில் பதி்த்து தமிழகத்தில் எந்த தாய்க்கும் அந்த நிலை வரக்கூடாது என்று ஆர்ப்பரித்து சத்துணவுத் திட்டம் விரிவாக்கிய தலைமகன்! வாழ்ந்த நாளெல்லாம் மக்கள்..மக்கள் என்று மக்களை எண்ணியே தான் வாழ்ந்த ஓர் மகன்! அவனுக்குப் பிள்ளையில்லை என்று சொல்வார்கள். அட. அவனே பிள்ளைதானே தமிழருக்கெல்லாம்! எங்கவீட்டுப் பி்ள்ளை என்பது யாரை இங்கே? தமிழுக்குத் தலைவணங்கி தன் கையெழுத்தை எப்பொழுதும் தமிழில்தான் இட்டமகன்! தமிழ்க்கவிஞர்களை எல்லாம் கட்டித்தழுவி உச்சிமுகர்ந்து பாராட்டி பரிசளித்து அவர்கள் இதயங்களில் எல்லாம் நீக்கமற நிறைந்தமகன்! சமுதாயம், நாடு, மொழி, இனம் என்பதற்கு என்றைக்கும் முன்னிலைதந்து முழுமூச்சாய் உழைத்தவன்! ஏழைகள்மீது பரிவுகாட்டுதல், சாதிப்பாகுபாடு இல்லாமல் சமத்துவத்தை விரும்பியவன்!
ஆதியிலே பெரியாரும். அடுத்துவந்த அண்ணாவும் திராவிட உணர்வூட்டித்தந்ததனால் தன்னுழைப்பை தவறாமல் தந்தானே! அண்ணாவின் பெயர்தாங்கி கழகம் கண்டு தேர்தல்களம் கண்ட நாள் முதலாய் வெற்றியையே அறிந்தானே! முதல் அமைச்சர் என ஆன 1977முதல் அவன் வாழ்ந்த நாள்வரைக்கும் அவனே ராஜா! வாய்பேச முடியாமல் போனபோதும். மக்கள் வாக்குகளோ அவனைத்தான் சேரும்! சேரும்!! அன்றொரு நாள் அவனுக்கு உடல்நலக்குறைவால் அமெரிக்காவில் சிகிச்சை. ஜப்பான் நிபுணர் முதல் உலக மருத்துவர்கள் கவனம்குறையாமல் காத்திருந்த எங்கள் ரோஜா! வாடிநிற்கும் காட்சி்யைத்தான் ஏடுதனில் பார்த்தோம். ஐயகோ. எங்கள் தங்கத்திற்கா இப்படி ஒரு நிலை? அழகுக்கு இலக்கணம் வகுத்துவைத்த அன்புத்தலைவனுக்கு வரலாமோ என்றெல்லாம் மனமுருக பிரார்த்தனைகள் உலகமெங்கும்!
தமிழகத்தின் மூலை முடுக்கெல்லாம் . சிறுசிறு கோயில்முதல் அறுபடைவீடுவரை. எங்குபார்த்தாலும் மதங்களைக் கடந்து மக்களின் பிரார்த்தனை. அனலில்விழுந்து துடித்தனர் ஏழையரெல்லாம்! என்னுயிரை எடுத்துக்கொள். மன்னன் உயிர் காத்திடு என்று ஆயிரமாயிரம் உள்ளங்கள் தொழுதன! அழுதன! ஆண்டவன் காலடியில் விழுந்தன! தமிழகத்தின் திரையரங்குகளில் எந்தப் படம் ஓடினாலும் அதற்கு முன் இரண்டு பாடல்கள் காட்டப்படுவது எழுதப்படாத விதியானது! நீங்க நல்லா இருக்கணும் நாடு முன்னேற. இந்த நாட்டிலுள்ள ஏழைகளின் வாழ்வு முன்னேற. என்கிற புலவர் புலமைப்பித்தன் அவர்களது பாடலும் இறைவா உன் மாளி்கையில் எத்தனையோ மணிவிளக்கு . தலைவா உன் காலடியில் என் நம்பிக்கையின் ஒளிவிளக்கு என்கிற கவிஞர் வாலியின் பாடலும். (இரண்டுமே மெல்லிசை மன்னரின் இசை) ஒளிபரப்பானது. இந்தச் சரித்திரத்தை எங்கே பார்த்திருக்கிறோம்?
அப்படி ஒரு அதிகாலை அமெரிக்காவிலிருந்து உடல்நலத்தோடு மக்கள்திலகம் வந்து நம் மண்ணில் இறங்குகிறார். என்கிற செய்தி. ஒருசில நாட்களுக்கு முன்னர் எட்ட அவர் உருவாக்கிய அ.தி.மு.க.வின் சார்பிலும் எம்.ஜி.ஆர். ரசிகர்மன்றத்தினர் சார்பிலும் மாபெரும் வரவேற்பு பொதுக்கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு தமிழகமெங்கிலுமிருந்து மக்கள் கூட்டம் தலைநகரில் அலைமோதியது! அன்று பறங்கிமலை அருகே உள்ள ராணுவ மைதானத்தில் அதற்கான ஏற்பாடுகள் முழுவீச்சில்.
இரவென்றும் பாராமல். பனியென்றும் பாராமல். மக்கள் கூட்டம் இலட்சக்கணக்கில் திரண்டது ஓரிடத்தில்! எம்.ஜி.ஆர் வருகிறார். எங்கள் தலைவர் வருகிறார். இன்னல்நீங்கி புதுப்பொலிவுடன் தமிழகத்தை ஆள. எங்கள் ராஜா வருகிறார். என்று உணர்வால். உள்ளத்துடிப்பால். கூடிநின்ற கூட்டமது! இரவெல்லாம் மக்களுக்காக மக்கள் திலகம் நடித்த ஐந்து திரைப்படங்கள் அங்கே திரையிடப்பட்டன! பொழுது மெல்ல விடிந்தது! பார்வைபடும் இடங்களெல்லாம் மக்கள் தலைகள்! அழகாக அமைக்கப்பட்ட மேடை. அதிலே எளிதாக எம்.ஜி.ஆர் கார் ஏறுவதற்கு தகுந்தாற்போல் ஏற்பாடுகள். காத்திருந்த மக்கள் எல்லோர் மனதிலும் வேறெந்த நினைவுகளும் இல்லை. இல்லை! காலை மணி 6.50க்கு சென்னை வானொலியில் செய்திகள். அமெரிக்காவில் படுத்துக்கொண்டே இங்கே தமிழகத்தின் முதல் அமைச்சராய் மூன்றாம் முறை வெற்றிபெற்ற சத்தியத்தாயின் தவப்புதல்வன்! தாயைத் தெய்வமாகப் போற்றியவன்! தமிழகத்தை உயிராக நேசித்தவன்!
அவன் வந்த வானூர்தி தரையிறங்கிவிட்டது. பனிமூட்டம் இருப்பதனால் முதல் அமைச்சர் வருகையிலே தாமதம் என்று செய்திகள் ஒருபக்கம் ஒலிபரப்பாகிக் கொண்டிருக்க. மக்களின் உற்சாகக் கரகோஷம் விண்ணைப்பிளக்க. உயிரையே பெற்றதுபோல் மக்கள் மகிழ. உலக வரலாற்றில் இப்படி ஒரு காட்சி நடந்ததுண்டா என்றால் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்! புராணப் புருஷர்களைப் பற்றி கதைகள் புனையப்பட்டு கேள்வியுற்றிருக்கிறோம். அன்று கண்முன்னே கண்ட காட்சி. புரட்சித்தலைவர் என்னும் சாதனைச் சரித்திரத்திற்கு மட்டுமான பிரத்யேக காலப்பதிவு!! இத்தனை உயிரோட்டத்தை நேரிலே கண்டு தரிசித்து திரும்பியது என் வாழ்வின் மறக்க முடியாத நாள் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை!
எம்.ஜி.ஆரின் ரசிகன் என்கிற தகுதியோடு. அன்றைக்கு முதல் நாள் அவருக்காக எழுதிய கவிதையொன்று இதயக்கனியே வருக. வருக வென்று! அதனையும் சுதேசமித்திரன் நாளிதழில் ஒரு வார்த்தை மாற்றாமல் தலைப்பை மட்டும் தர்மங்கள் வென்றது தலைப்பிட்டு வெளியிட்டார்! நான் விவரம்அறிந்த நாள் முதலாகப் பார்த்த பெரும் தண்ணீர் பிரதேசம் காவிரி! கொள்ளிடம்! திருச்சிக்கருகே உள்ள எங்கள் சொந்த ஊருக்குப் பயணிக்கும் போதெல்லாம் என் கண்ணில் பட்ட காவிரி நினைவுக்கு வந்தது! மண்ணின் மைந்தன் என்பது போல் நதியின் மைந்தன் ஆனேன். காடு விரி்ந்ததனால் உருவான நதி காவிரி என்று கம்பன் சொல்லுவான். காவிரிமைந்தன் என்கிற புனைப்பெயர் புரட்சித்தலைவருக்காக புனைந்த கவிதைக்குத்தான் முதன்முதலில் பயன்படுத்தப்பட்டது. அதில் இடம்பெற்ற இரண்டு வரிகள் என்னால் மறக்க முடியாதவை.
Courtesy-காவிரிமைந்தன்
MY TOP 10 MAKKAL THILAGAM MGR MOVIES.
http://i57.tinypic.com/zx5u2b.jpghttp://i58.tinypic.com/k2m2u.jpghttp://i62.tinypic.com/3321jix.jpghttp://i61.tinypic.com/2ykb7fd.jpghttp://i59.tinypic.com/2hfl0g3.jpghttp://i57.tinypic.com/2cg23vc.jpghttp://i62.tinypic.com/2m5yscw.jpghttp://i61.tinypic.com/iy37ms.jpghttp://i60.tinypic.com/o6z4g3.jpghttp://i58.tinypic.com/149b0gh.jpg
http://i160.photobucket.com/albums/t...psz9zpfpdv.jpg
http://i160.photobucket.com/albums/t...psjjomoa3z.jpg
http://i160.photobucket.com/albums/t...psli3x0wgk.jpg
Dinaethal - 25/3/2014, on behalf of Sri. Loganathan.
From 27.03.2015
coimbatore shanmugha theatre
mannathi mannan
திரு லோகநாதன் - உங்களை சந்தித்ததில்லை - உரையாடினது இல்லை - ஆனாலும் உங்கள் இழப்பின் வலியை மிகவும் உணர முடிகின்றது . எவ்வளவு வயதானாலும் ஒரு தாய் என்றுமே நமக்கு இளமை தான் . அவளை மிஞ்சிய கோவில் இல்லை , மீறிய தெய்வம் இல்லை . நம்மை ஈன்றவள் , நமக்காகவே வாழ்ந்தவள் , மறைந்த பிறகும் நம் மனதில் வாழ்பவள் - இறைவனுக்கு இந்த உலகை படைத்ததினால் பெருமை வரவில்லை , கருணையே உருவாக ஒரு தாயை படைத்ததனால் தான் அவனை இன்று எல்லோரும் வழி படுகிண்டார்கள் . A child gives a birth of a mother . சமீபத்தில் என் தாயும் இறைவனடி சேர்ந்தவள் . ஒரு நாளில் 100 தடவையாவது என் பெயரை சொல்லிக்கொண்டிருப்பாள் - தேவை ஒன்றும் இருக்காது - ஆனால் கண்டிப்பாக அதில் பாசம் இருக்கும் - கண்டிப்பு இருக்காது - கருணை இருக்கும் ; காரணம் இருக்காது ஆனால் அதில் ஒரு பூரிப்பு இருக்கும் - அவளின் கடைசி நாட்களில் - க்ளுக்கோமா என்ற கண் சம்பந்த பட்ட வியாதியில் , பார்வைகளை தொலைத்து விட்டாள் - ஆனால் அவள் தொலைக்க விரும்பாதது என் மீது வைத்திருக்கும் பாசம் - சொன்னார்கள் அவள் 10 மாதம் என்னை சுமந்தவள் என்று - அது தவறு ! இறுதி மூச்சு உள்ளவரை என்னை சுமந்து கொண்டுதான் இருந்தாள் -- அவள் உடம்பைக் கூட , நெருப்பு மிகவும் மரியாதையுடன் தான் நெருங்கியது ... உங்கள் இழப்பும் மிகவும் ஈடு செய்ய முடியாத ஒன்று - அன்னாரின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை ப்ராத்தனை செய்கிறேன் - இந்த மடலை எழுதும் நேரத்தில் காற்றோடு கலந்து காலத்தால் அழியாது நிற்கும் இரண்டு பாடல்கள் இந்த உண்மை தத்துவத்தை என்றும் பறை சாற்றி கொண்டிருக்கின்றன - " தாயிலாமல் நானில்லை - தானே எவரும் பிறந்ததில்லை !!" ; " அன்னையை போல் ஒரு தெய்வம் இல்லை ; அதை மறந்தவர் ஒரு மனிதரில்லை "
இந்த ஒரு சிறிய உண்மையை உங்களிடம் பகிர்ந்து கொள்ள விழைகிறேன் - அன்புடன் ரவி
Mother
When you say, Mom, 4 dosas will be enough for me, she will bring you 5.
When you are out, she will call you once in an hour.
When there are 3 apples and your family has 4 members, mom will say, I do not like apples.
When you go to sleep with no blankets, you will definitely wake up with one.
When you are going away to another city or country, she will pack you a bunch of snacks specially made for you. Then she will tell you, Do not give all the snacks to your friends. Eat them yourself.
When coming back to home after a long day, the first thing your mom would say, Come and have dinner.
Gonna study at midnight? Do not worry. Mom will make you tea, coffee or whatever snack you want and she will never complain about losing her sleep.
If it is for her children, mom will go to a temple no matter how far it is or how long it will take.
Conclusion: At times, you may not like her. You may get irritated by her. You may even abandon her. But mom will always be mom. And you will always be her child. She will never stop loving you.
No one in this world can take mom’s place, not even God.
வாழ்த்துக்கள் திரு .யூகேஷ் பாபு - இன்னும் பல சந்தோஷங்கள் உங்கள் வாழ்வில் மலரட்டும் , கூடட்டும் !! நல்ல எண்ணங்கள் , நல்ல வாழ்க்கையை உருவாக்கும் - நல்ல வாழ்க்கை பலரை வாழவைக்கும் - பலரை வாழ வைத்தவரின் பாதையில் வரும் நீங்கள் கண்டிப்பாக நல்ல எண்ணங்களின் உரிமையாளராக தொடர்ந்து இருந்து கொண்டு இருப்பீர்கள் என்பதில் சிறிதும் ஐயம் இல்லை
அன்புடன் ரவி
http://i61.tinypic.com/302cra1.jpg
அன்பு சகோதரர் திரு.யுகேஷ் பாபு அவர்களுக்கு,
தங்களுக்கு பெண் குழந்தை பிறந்திருப்பது அறிந்து மிக்க மகிழ்ச்சி. வாழ்த்துக்கள். நேற்று திரு.லோகநாதன் அவர்களின் தாயார் மறைவு. அடுத்த நாளே உங்களுக்கு பெண் குழந்தை. நமது சொந்தங்கள் எங்கேயும் செல்லாது. நமக்குள்ளேதான் வேறு வடிவங்களில் சுற்றிச் சுற்றி வரும் என்பதைப் போல அடுத்தடுத்த நிகழ்வு. துயருக்குப் பின் இன்பம் இயற்கைதானே. எப்போதும் எல்லாருக்கும் இன்பம் தொடர வாழ்த்துக்கள்.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
அன்புள்ள திரு. ரவி சார்,
எங்களோடு இணைந்திருக்கும் தங்களுக்கு நன்றிகள் பல. புரட்சித் தலைவரின் ரசிகர்கள் என்றாலே ஏளனமாக பார்க்கும் உலகில் எங்களை மதித்து நீங்கள், திரு.ராகவேந்திரா சார், திரு.ஆர்.கே.எஸ். போன்றவர்கள் இங்கு வந்து எங்கள் சுக துக்கங்களில் பங்கேற்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. தங்களது தாயார் சமீபத்தில் இறைவனடி சேர்ந்ததாக கூறியுள்ளீர்கள். தங்களுக்கும் எங்கள் ஆழ்ந்த அனுதாபங்கள். அதிலும், நீங்கள் குறிப்பிட்டுள்ள...
என்ற வரிகள் கலங்கடிக்கின்றன.
திரு.யுகேஷ் பாபு அவர்களுக்கு வாழ்த்து சொன்னமைக்கும் நன்றி. தங்கள் உயர்ந்த எண்ணங்களை தங்களின் ஒவ்வொரு வார்த்தைகளும் வெளிப்படுத்துகின்றன. நன்றி.
அன்பார்ந்த திரு.ராகவேந்திரா சார்,
திரு.லோகநாதன் அவர்களின் தாயார் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளதற்கும் எங்கள் வருத்தத்தை பகிர்ந்து கொண்டமைக்கும் மிக்க நன்றி.
அன்புமிக்க திரு.ஆர்.கே.எஸ். அவர்களுக்கு,
அவ்வப்போது சூடான கருத்துப் பரிமாற்றங்கள் இரு தரப்பிலும் இருந்தாலும் திரு.லோகநாதன் அவர்களின் தாயார் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ள தங்கள் பண்புக்கு தலைவணங்குகிறேன்.
திரு.யுகேஷ் பாபு அவர்களுக்கு மகள் பிறந்ததற்காக வாழ்த்து தெரிவித்து எங்களோடு இரண்டறக் கலந்திருக்கும் உங்களுக்கு நன்றி. நீங்கள் குறிப்பிட்டுள்ள,
‘தங்கள் இல்லத்தில் மகாலட்சுமி அவதரித்த செய்தி....’ நல்ல உவமை. ரசித்தேன். நன்றி.
எங்களுக்குள் நாங்களே, மகிழ்ச்சியான செய்தி என்றால் ஒருவருக்கொருவர் வாழ்த்து சொல்வதும் சோகமான செய்தி என்றால் வருந்துவதும் பெரிய விஷயமல்ல. நீங்கள் மூவரும் எங்கள் மகிழ்ச்சியையும் துயரத்தையும் பரந்த மனத்துடன் பகிர்ந்து கொள்வது பாராட்டத்தக்கது. நன்றி.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
இனிய நண்பர் திரு யுகேஷ் பாபு அவர்களுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது அறிந்து மிக்க மகிழ்ச்சி . வாழ்த்துக்கள் யுகேஷ் .
இனிய நண்பர் திரு ரவி சார்
தாயின் பெருமைகளை பற்றி தாங்கள் பதிவிட்டுள்ள கருத்துக்கள் அத்தனையும் உண்மை . சத்தியம் . உங்களை
பாராட்ட வார்த்தைகள் இல்லை ..நன்றி நண்பரே .
எங்களுக்குள் நாங்களே, மகிழ்ச்சியான செய்தி என்றால் ஒருவருக்கொருவர் வாழ்த்து சொல்வதும் சோகமான செய்தி என்றால் வருந்துவதும் பெரிய விஷயமல்ல. நீங்கள் மூவரும் எங்கள் மகிழ்ச்சியையும் துயரத்தையும் பரந்த மனத்துடன் பகிர்ந்து கொள்வது பாராட்டத்தக்கது. நன்றி.
கலைவேந்தன்.
கலைவேந்தன் சார்
மிக அருமையாக கூறியுள்ளீர்கள் . நண்பர்கள் திரு ராகவேந்திரன் , திரு ரவி [ஹைதராபாத் ], திரு ரவிகிரண் ஆகியோருக்கு நன்றி .
ENGA VEETU PILLAI 50 YEARS - IMAGES FROM THE WEB:
http://i62.tinypic.com/102ujw1.jpg