http://i64.tinypic.com/2mq1f6w.jpg
Printable View
மையம் திரியில் 4000 பதிவுகளைக் கடந்தமைக்கு சிவாஜி செந்தில் அவர்களுக்கு எனது வாழ்த்துக்கள்.
கோபு.
மையம் திரியில் 4013 பதிவுகளைத் தொட்ட சிவாஜி செந்தில் ஜி அவர்களுக்கு எனது வாழ்த்துக்கள்.
சரி.. நானும் பேசறேன்
ஆடிய ஆட்டமென்ன பேசிய வார்த்தை என்ன
வீணை பேசும் அதை மீட்டும் விரல்களைக் கண்டு
ஊமைப் பெண்ணை பேசச் சொன்ன் உறவோ
மௌனம்தான் பேசியதோ
மௌனம் பேசும் வார்த்தை யாவும்
வீசும் காற்றுக்கு பூவைத் தெரியாதா பேசும் கண்ணுக்கு
கண்ணால் பேசும் பெண்ணே
விழியே விழியே பேசும் விழியே
அன்று ஊமைப் பெண்ணல்லோ இன்று பேசும் பெண்ணல்லோ
கண்ணாலே பேசும் காதல் நிலையாகுமா
கனிய கனிய மழலை பேசும் கண்மணி
சந்தைக்கு வந்த கிளி சாடை சொல்லி பேசுதடி
தொட்டு தொட்டு பேசும் சுல்தானா
இரண்டு கண்கள் பேசும் மொழியில்
http://www.thehindu.com/multimedia/d...es_489732e.jpg
வித விதமான கான்செப்ட்கள் எடுத்து, வித்தியாச தலைப்புக்கள் தந்து அறிவுபூர்வ ரத்ன சுருக்கமாக விளக்கங்கள் தந்து, மதுர கானங்களை அள்ளி வழங்கும் சிவாஜி செந்தில் சார் 4000 பதிவுகளை நச்சென்று கடந்து தொடர்வதற்கு என் மனப்பூர்வமான வாழ்த்துக்கள்.
4000 பதிவுகள் - பல்வேறு தலைப்புகளில் பல மொழி படங்களின் பாடல்களை ஒப்பிட்டு அருமையான வீடியோ பதிவுகளை வழங்கிய நண்பர் திரு சிவாஜி செந்தில் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் .
வித்யாச சிந்தனைகளுடன் வித விதமான தலைப்புகளில் வெகு அழகாய் உழைத்து பாடல்களையும் காணொளிகளையும் வழங்கி இப்போது 4000 பதிவுகளைக் கடந்திடும் சிவாஜி செந்தில் அவர்களுக்கு என்னுடைய மனப்பூர்வமான வாழ்த்துகள். தொடரட்டும் அவரது நற்பணி..
ஆடுவது உடலுக்கு விளையாட்டு
பாடுவது மனதுக்கு விளையாட்டு
இரண்டும் இருந்தால் அழகு வளரும்
இன்றுபோல் என்றும் கொண்டாடும்
ஆமா எதுக்கு இந்தப் பாட்டு திடீர்னு என உங்கள் புருவங்கள் நெளிகின்றன..அஃது எனக்கு நன்றாகவே புரிகிறது..
இந்தப் பாடலிலேயே வரும் வரிகள்...
மூங்கில்போல் வளையும் இடையும்
தூண்டில்போல் கவரும் இதழும்
தூண்டினால் துள்ளாத உள்ளங்கள்
கொண்டாட்டம் போதாதோ
எஸ் க்வரும் என்ற சொல்லிற்காகத் தான்.. கவர்வது என்றால் மனதிற்குப் பிடிப்பது என்றும் பொருள் கொள்ளலாம்..
அப்படிக் கவர்ந்ததினால் தான் மயக்கம் வரும் இல்லியோ..
*
08.06.14 அன்று மிக அழகாக திரு. நெய்வேலி வாசுதேவன் அவர்கள் இந்த இழையைத் துவக்கினார்கள்..மனதை மயக்கும் மதுர கானங்கள் என்றதலைப்பில்..அதுவே விரைந்து வந்த இரண்டாம் பாகத்தில் மனதைக் கவரும் மதுரகானங்கள் என்று மாறி இன்றுவரை ஐந்தாவது பாகத்தில் தொடர்கிறது வெற்றிகரமாக நம் நண்பர்கள் அனைவருடைய அருமையான பங்களிப்புடன்..
எனில் நாளை நமது இந்தத் திரியின் இரண்டாவது பிறந்த நாள் விழா..
திரு நெய்வேலி வாசுதேவன் அவர்களுக்கு மனமார்ந்த நன்றி..அவரது உழைப்பும் பங்களிப்புகளும் குறைவில்லை..
அது மட்டுமல்ல..இங்கு வந்த பிறகு கிடைத்த மனமொத்த நண்பர்களின் எண்ணிக்கை எத்தனை எத்தனை..அவர்கள் இட்ட பல அருமையான பதிவுகள் என்றும் எண்ணி எண்ணி மகிழத் தக்கவை..
இங்கு வந்தாலே டபக்கென ஈஸி சேரில் சாய்ந்து ரிலாக்ஸ் செய்வது போன்ற உணர்வு..அவ்வப்போது பதிவுகளின் இடையே ஊடாடும் நகைச்சுவை மிகச் சிறப்பு
எனில் மனதைக்கவரும் மதுர கானங்கள் திரியின் இரண்டாவது பிறந்த நாள் விழாவைக் கொண்டாட ஆரம்பிக்கலாமா ( பிறந்த நாளைக்குச் சொந்தக் காரர் நெய்வேலி வாசுதேவன் அவர்கள்.( ஹப்பா க்ளூவை ஜஸ்டிஃபை பண்ணிட்டேன்)).அவருக்கும் சிறப்பாக பங்களித்த அனைத்து நண்பர்களுக்கும் என்னுடைய வாழ்த்துகள் அண்ட் நன்றிகள் (எனக்கும் தான்!)
மயக்கத்தைத் தந்தவர் யாரடி..
https://youtu.be/fPnEgr_7luQ
ஆடுவது உடலுக்கு விளையாட்டு
பாடுவது மனதுக்கு விளையாட்டு..
https://youtu.be/5sZkT46mW4E
யார் முதலில் பக்கெட்டில் பர்த் டே கேக் கொண்டு வரப் போவது..:)
http://i66.tinypic.com/2v809iq.jpg
மனதை கவரும் மதுர கானங்கள் - மூன்றாவது ஆண்டு விழா துவக்கம் . 8.6.2016
கடந்த இரண்டு ஆண்டுகளில் இத்திரியில் பல அருமையான பழைய பாடல்கள் , காட்சிகள் ,வீடியோ
கவிதைகள் , கட்டுரைகள் , என்று நண்பர்கள் அனைவரும் தங்களின் பங்களிப்பை தந்து சிறப்பித்து
இருப்பது மிகவும் பெருமையாகும் . அனைவருக்கும் நன்றி. வாழ்த்துக்கள்
Heartfelt congratulations to this thread on mind scintillating nectar filled immortal songs for the achievements hitherto crossing into its third year and yet to accomplish much more!
https://www.youtube.com/watch?v=XuzQ0llQ07g
Warm thanksgiving to all contributors!!
with regards, senthil
Reverse Osmosis lands in an Oasis!
மாற்றி யோசித்தால் ..மதுரகான மக்களே!
Quote:
வாழ்க்கை என்னும் கூட்டல் கழித்தல் பெருக்கல் வகுத்தல் கணக்கேட்டில் இறுதிப் பக்கத்தில் மிஞ்சுவது பூஜ்ஜியமே !
எனவே இந்த நீர்க்குமிழி வாழ்க்கையை இனிமையாக அனுபவித்திட அப்படி இருந்த நாம் இப்படி மாறலாமே என்று யோசித்து முடிவெடுக்கிறார்கள் திரையுலக மூவேந்தர்கள் !
பற்றற்றவராக புண்பட்ட மனதை ஆற்றி ஆற்றி பண்படுத்திட்டநடிகர்திலகம் ......!
https://www.youtube.com/watch?v=Ohh1B0SquPM
எப்படியிருந்த நடிகர்திலகம் ஜெமினி கணேசனின் வாழ்க்கை வாழ்வதற்கே போஸ்டரைப் பார்த்து இப்படியும் இனிமையாக வாழ ஏன் அப்படியிருக்கணும்?...ஏன் ஏன் ஏன் என்று ஞானோதயம் வந்தவுடன் இப்படி ஆ(கி)டிவிட்டாரே !
https://www.youtube.com/watch?v=osl4PNU_-lg
என்ன இந்த கட்டழகான வஞ்சிக்கோட்டை வாலிபன் இவ்வளவு இல்லற பற்றற்றவராக இருக்கிறாரே என்று சாம்பார் என்ற பட்டப்பெயரை ஆழமாக முத்திரை குத்தி தமிழ் மக்கள் இட்லிதோசை மீல்ஸ் சாப்பிடும் போதெல்லாம் என்னையே நினைத்து சிரித்து தொலைக்கிறார்களே என்ற விரக்தியில் இருந்த மன்னர்.....
https://www.youtube.com/watch?v=zUQurTWUJuM
வாழ்க்கை பொருட்காட்சியில் வாங்கி நடந்துகொண்டே தின்று தீர்க்கும் பஞ்சுமிட்டாய் மற்றும் டெல்லி அப்பளமே என்ற ஞானோதயம் வந்ததும் .. ஒன்றுக்கு ரெண்டாகவே ஜோடி தேடுகிறாரே
https://www.youtube.com/watch?v=sHb4MQO8dYI
உண்டாக்கி விட்டவர்கள் ரெண்டு பேரு கொண்டாந்து போட்டவர்கள் நாலுபேரு என்றெல்லாம் தத்துவ முத்தெடுக்கும் மக்கள் திலகம் ....
https://www.youtube.com/watch?v=JkleSVeEu0I
ருக்குமணியே பரபர ....பறபற.....வாழ்க்கையில் குறிக்கோளை அடைய எத்தனை சக்கர வியூகங்களுக்குள் புகுந்து மீண்டு வரவேண்டியிருக்கிறது !......வண்ணமயமாக தொங்கலாட்ட வாழ்க்கையை ஒளிவிளக்கின் ஞானோதயத்தில் உணர்ந்து அனுபவிக்கிறாரே!
https://www.youtube.com/watch?v=u6Rebaq7m6M
சிவாஜி செந்தில்,
வாழ்த்துக்கள். நீங்கள் retire ஆனதில் பலன் ஜெமினிக்கு நிறைய. கொஞ்சம் நடிகர்திலகத்துக்கு.
வாசு,
இந்த திரியை ஆரம்பித்து பிறந்த நாள் கொண்டாடுவதில் மகிழ்ச்சியே. ஆனால் இப்போ ரொம்ப போரடிக்குது. எல்லாம் செஞ்சதையே செய்வதை போன்ற உணர்வு. இரண்டே பங்காளர்கள்.
பொதுவாக மையம் ரொம்பவே நமத்து கொண்டு வருகிறது. இது வலை தள மாற்றங்களின் அறிகுறியோ?
ஆஹா! இப்போதுதான் ஆரம்பித்தது போல் இருக்கிறது. அதற்குள் வருடங்கள் ஓடியே விட்டன! 'தத்தக்கா பித்தக்கா' என்று ஆரம்பித்த மதுர கானம் இப்போது பாய்ச்சலில் கலக்கிக் கொண்டிருக்கிறது. இந்த மதுர கான வயலுக்கு உரம் போட்டு, நீர் பாய்ச்சி, விதை நட்டு, செழிக்கச் செய்த அத்துணை பேருக்கும் என் மனமார்ந்த நன்றி.
மதுரகானங்களுக்கு மயங்கி உடனே ஓடோடி வந்த கிருஷ்ணா சார், அற்புத அரிய பாடலகளை இரவு பகல் பாராமல் வழகிய ராகவேந்திரன் சார், அளப்பரிய ராகக் கட்டுரைகளை அள்ளித் தந்த கோபால் சார், கொஞ்சமே வந்தாலும் 'நச்'சென்று பதிவுகளைத் தந்த முரளி சார், 'கான்செப்ட்' புகழ் சிவாஜி மற்றும் ஜெமினி செந்தில் சார், பத்திரிகைகளில் இருந்து கட்டுரைகள் வழங்கி சிறப்பிக்கும் சித்தூர் வாசுதேவன் சார், மலையாளக் கரை பாடல்களில் தனி ஆர்வம் காட்டி அற்புதமான இளையராஜா படலகளைத் தேடி எடுத்துத் தரும் ராகதேவன் சார், எங்களுக்கெல்லாம் குருவாக விளங்கும் அற்புத பழைய இந்தி, தமிழ்ப் பாடல்களை தனக்கே உரிய பாணியில் அள்ளி வழங்கும் ராஜ்ராஜ் சார், எந்த நேரம் எந்த பாடல் கேட்டாலும், எந்த பாடல் வரிகளைக் கேட்டாலும் சிறிதும் கால தாமதமின்றி அள்ளித் தரும் அற்புத மனிதர்... என் கண்ணான அண்ணன் மது அண்ணா, இசையரசியின் புகழ் பாடும் என் உயிரான ஜி, கிடைக்காத பாடல்களை 'சுக்ரவதனி' யிலிருந்து அள்ளி வழங்கும் சுந்தர பாண்டியன் சார், எப்போதோ ஒருமுறை வந்தாலும் நல்ல ரசனை மனம் கொண்ட காட்டுப் பூச்சி சார், சிறந்த ராஜாவின் பாடல்களைத் தந்து அசத்திய வெங்கிராம் சார், வெண்பா, விருத்தம், கவிதை புதுக்க்கவிதை, நகைச்சுவை, நயமான கட்டுரை, ரசிக்கத்தக்க சந்தேகங்கள் என்று பல்வேறு விஷயங்களை அள்ளித் தரும் பல்துறை விற்பன்னர் என் ஆருயிர் சின்னக் கண்ணன் சார், பத்திரிக்கைகளில் இருந்து அபூர்வ நிழற்படங்களை அள்ளி வழங்கும் இனிய நண்பர் வினோத் சார், நல்ல விளம்பரங்ளை தந்து சிறப்பித்த குமார் சார், அத்தனை பேருக்கும் 'லைக்'குகள் தந்து உற்சாகப்படுத்தி வரும் கோபு சார், தற்போது திரிக்கு வராவிட்டாலும் அந்தக் நாளைய திரைப்படங்களைப் பற்றிய விவரங்களை விரல் நுனியில் வைத்திருக்கும் கிருஷ்ணா சார், நல்ல ரசனை பிளஸ் நல்ல சினிமா அறிவு இரண்டையும் ஒரு சேரப் பெற்ற அருமை ஆதிராம் சார், என் கடலூர் பாசக்கார 'பூ' புகழ் நண்பர் கல்நாயக் சார், ஆரம்ப காலங்களில் மதுர கானங்களில் பெரும் பங்காற்றிய உயிர் நண்பர் கார்த்திக் சார், அத்தனை பதிவுகளையும் இடைவிடாமல் படித்து வரும் ஸ்டெல்லா மேடம், முத்தான பாடலகளை சத்தாக தந்த கலை வேந்தன் சார், (பெயர் வீட்டுப் போன நண்பர்கள் பொறுத்தருள்க) இன்னும் மதுர கானங்களில் பங்கு கொண்ட அன்பு நண்பர்கள் ஏராளம்...அளித்த ஆதரவுகளும் தாராளம்.
மதுர கானங்கள் தழைக்கப் பாடுபட்ட அத்துணை நல் இதயங்களுக்கும், திறமைசாலிகளுக்கும் என் கோடானு கோடி நன்றிகள்.
இதே ஆதரவோடு கானங்கள் தொடர வேண்டும்...அனைவரும் களிப்புற வேண்டும் என்பதே என் விருப்பம்.
நன்றி! நன்றி! நன்றி!
இதோ மதுர கானங்கள் தொடங்கிய இதே நாளில் பதித்த பதிவு. மீண்டும் இங்கே நினைவு படுத்தலுக்காக
8th June 2014, 08:21 AM
மனதை மயக்கும் மதுர கானங்கள்
அனைவருக்கும் வணக்கம்.
அதுவும் பழைய பாடல்கள் விரும்பிகளுக்கு என் ஸ்பெஷல் வணக்கங்கள்.
இது ஒரு புது இழை.
'மனதை மயக்கும் மதுர கானங்கள்'
தமிழ்ப் படங்களில் நம் மனதில் என்றும் நீங்கா இடம் பெற்ற மதுர கானங்களைக் கண்டும், கேட்கவும், மகிழவும் இந்த இழை தொடங்கப்பட்டுள்ளது.
நம் மனதில் பல பாடல்கள் எப்போதும் ரீங்காரமிட்டுக் கொண்டே இருக்கின்றன. சில பாடல்களை நம்மை அறியாமல் வாய் முணுமுணுத்துக் கொண்டே இருக்கும். ஆனால் படம் என்னவென்று தெரியாது. படத்தின் பெயர் தெரியும். பாடல் நினைவுக்கு வராது.
இதற்கெல்லாம் இந்த இழை ஒரு தீர்வாக அமையும் என்று நினைக்கிறேன்.
இதில் இன்னொன்று. மிடில் சாங்ஸ் என்று நாம் செல்லமாகப் பெயரிட்டு அழைக்கும் பல பாடல்களை நாம் இங்கே நினைவு கூற இருக்கிறோம். அவ்வளவு அற்புதமான பாடல்கள் இருக்கின்றன. திரையிசைப் பாடல்களைப் பற்றி அறிந்த ஜாம்பவான்கள் பலர் நமது ஹப்பில் இருக்கிறார்கள். நிச்சயம் அவர்கள் இந்த இழையில் பங்கு கொண்டு தங்களுக்குத் தெரிந்த பல அபூர்வ விஷயங்களை நம்முடன் பகிர்ந்து கொள்வார்கள் என்று நான் உறுதியாக நம்புகிறேன்..
வெறுமனே யூ டியூபிலிருந்து பாடலை இழுத்துப் போட எனக்கு உடன்பாடில்லை. அது போரடிக்கவே செய்யும். அப்பாடல்களைப் பற்றிய சுவையான தொகுப்புகளை நாம் நமக்குத் தெரிந்தவற்றை மற்றவர்களுக்கு தெரிவித்தால் இத்திரியின் சுவாரஸ்யம் வெகுவாகக் கூடும். மேலும் அரிய, மிக அரிய பாடல்களை நாம் இங்கே அலசலாம்.
அனைவரது ஒத்துழைப்பும் இங்கு கிடைக்கும் என்று பரிபூரணமாக நம்புகிறேன்.
முதலில் 'மறுபிறவி' படத்திலிருந்து ஒரு பாடல்.
http://www.inbaminge.com/t/m/Marupiravi/folder.jpg
முதலில் இந்தப் படத்தைப் பற்றிய சிறு குறிப்பு. 1973-இல் வெளியான இத்திரைப்படம் விஜயா சூரி கம்பைன்ஸ் தயாரிப்பு.
முத்துராமன், மஞ்சுளா, அசோகன், தேங்காய் ஸ்ரீனிவாசன் போன்றோர் நடித்திருந்த இத்திரைப்படம் நிஜமாகவே ஒரு புதுமைத் தயாரிப்புதான். டாக்டர் கோவூர் அவர்களும் இப்படத்தில் மனநல மருத்துவராகவே நடித்திருந்தார்.
அப்போதே 'அடல்ட்ஸ் ஒன்லி' அதாவது 'A' செர்டிபிகேட் பெற்ற படம் இது. மலையாளத்தில் வந்து பெரும் வெற்றி பெற்ற 'புனர்ஜென்மம்' என்ற திரைப்படத்தின் தமிழாக்கமே 'மறுபிறவி' ஆகும். மலையாளத்தில் பிரேம்நசீர், ஜெயபாரதி பிரதான பாத்திரங்களில் நடித்திருந்தனர்.
சிக்கலான முள் மேல் நடப்பது போன்ற கதையமைப்பு கொண்ட அருமையான திரைப்படம் இது.
ஒரு வரியில் கதையை சொல்ல வேண்டுமென்றால்
கல்லூரி பேராசிரியர் ஒருவர் அக்கல்லூரி மாணவியை விரும்பியே மணந்து கொள்கிறார். ஆனால் அவளுடன் தாம்பத்ய உறவு கொள்ள மட்டும் அவர் உடலும், மனமும் நடுங்குகின்றது. உடலில் அவருக்குக் குறையில்லை. தனக்கு உடல்சுகம் தேவைப்படும் போது தன் வீட்டு வேலைக்காரியுடன் அவர் உறவு வைத்துக் கொள்கிறார். மனதில்தான் அவருக்குக் குறை. மனைவியோ தன் கணவனின் போக்கை எண்ணி செய்வதறியாது திகைக்கிறாள். கண்ணீர் வடிக்கிறாள்.
இறுதியில் மருத்துவரை நாடும் போது கணவனின் பலவீனத்துக்குக் காரணம் புரிகிறது. கணவனின் தாயின் உருவமும், அவன் தாரத்தின் உருவமும் ஒத்துப் போவதால் அவன் தன் தாரத்தை நெருங்கும் போதெல்லாம் மனைவியின் முகத்தில் தன் அன்னையின் உருவத்தைப் பார்க்கிறான். அதனால் மனைவி உறவு கொள்ள வரும்போதெல்லாம் அவளை விட்டு விலகுகிறான்.
இறுதியில் அருமையான மனநல மருத்துவ சிகிச்சைக்குப் பிறகு நார்மலாகிறான் கணவன்.
அன்றைய காலகட்டத்தில் "அய்யய்யோ! 'மறுபிறவி' மோசமான படமாயிற்றே!" என்று பொய்யாக எல்லோரும் வெறுத்த படம் இது.
ஏனென்றால் படத்தின் கதை அமைப்பிற்குத் தேவையான காட்சி அமைப்புகள். இளமை பொங்கும் மனைவியாக மஞ்சுளா தன் தாம்பத்ய உறவிற்காக கணவன் முத்துராமனிடம் ஏங்கும் காட்சிகள் அப்போது மிகவும் பரபரப்பாகப் பேசப்பட்டன. மஞ்சுளாவும் சற்று தாராளமாக நடித்திருந்தார். முத்துராமனுக்கு முற்றிலும் புதுமையான வேடம். அமிர்தம் அவர்களின் ஒளிப்பதிவு பௌர்ணமி நிலவின் ஒளி போல பளிச்சோ பளிச்.
18 வயதுக்குக் கீழே வரும் சிறுவர், சிறுமிகள், மாணாக்கர்களுக்கு தியேட்டரில் டிக்கெட் தர மாட்டார்கள்.
இந்த லிஸ்டில் சேர்ந்த வேறு இரண்டு படங்கள். ஒன்று 'அவள்'. இன்னொரு படம் பாலச்சந்தரின் 'அரங்கேற்றம்'.
இலங்கையை சார்ந்த 'டாக்டர் கோவூர்' எழுதிய இந்த கதையை அற்புதமாகப் படமாக்கியிருந்தார் இயக்குனர் ராமண்ணா. டி .ஆர் பாப்பா என்ற அற்புத இசையமைப்பாளரின் பங்கை இப்படத்தில் என்னவென்று சொல்ல!
ஒவ்வொரு பாடலும் தேன் சொட்டும் ராகம்.
டி.என்.பாலு வசனம் எழுதிய இப்படத்தை இப்போது பார்க்கும் போது மிகவும் ரசிக்க முடிந்தது. அப்போது ஆபாசம் மட்டுமே தென்பட்டது. இப்போது மனநல ரீதியாக பல விஷயங்கள் இப்படத்தின் மூலம் புரிய வந்தது.
படத்திலிருந்து சில காட்சிகள்.
http://i1098.photobucket.com/albums/...piravi0002.jpg
http://i1098.photobucket.com/albums/...piravi0004.jpg
http://i1098.photobucket.com/albums/...piravi0005.jpg
http://i1098.photobucket.com/albums/...piravi0007.jpg
http://i1098.photobucket.com/albums/...piravi0009.jpg
இப்போது பாடலுக்கு வருவோம்.
http://i1.ytimg.com/vi/HhastadadV0/maxresdefault.jpg
படத்தின் நாயகன் சிறுவனாக இருக்கும்போது கணவனை இழந்த அவனது தாய் தன் மகனைக் கொஞ்சிப் பாராட்டுவது போல் அமைந்த இந்தப் பாடலில்
விஷேசங்கள் சில உண்டு.
அந்த இளம் வயதிலேயே எந்த ஈகோவும் பார்க்காமல் நெற்றியில் விபூதி அணிந்து விதவைத் தாயாக மஞ்சுளா நடித்திருந்தார். (இப்போதுள்ள ஹீரோயின்கள் அப்படி நடிக்கத் துணிவார்களா!?)
மஞ்சுளாவின் சிறுவயது மகனாக வருபவர் நடிகர் பப்லு. என்ன ஒரு அழகு இந்த சிறுவன்!
இந்தப்பாடலைப் பாடியவர் சூலமங்கலம் ராஜலஷ்மி. ஆஹா! ஒரு தாயின் பரிவையும் பாசத்தையும் இக்குரல் என்னமாய் பிரதிபலிக்கிறது! கேட்க கேட்க அவ்வளவு சுகம். மனதை தாலாட்டும் இப்பாடலைக் கேட்டு மயங்காதவர் இருக்கவே முடியாது.
காவேரி மாந்தோப்புக் கனியோ!
கண்கள்
கல்யாண மண்டபத்து மணியோ!
நல்ல பாவேந்தர் பாராட்டும் மொழியோ!
பண்பாடும் தென்பாங்கு கிளியோ!
நீங்களே பார்த்து உங்கள் கருத்துக்களைப் பதியுங்கள்.
http://www.youtube.com/watch?feature...&v=N9xVrdiKAcc
vasudevan.
மதுர கானங்களின் பிறந்த நாளுக்கான என்னுடைய பரிசு.
'ராஜா' நினைவுகள்
புதிய பதிவு
http://i1087.photobucket.com/albums/..._000049564.jpghttp://i1087.photobucket.com/albums/..._001000550.jpg
நேற்று முன்தினம் என்னைப் பொறுத்தவரை வருடம் மீண்டும் 1972. தேதி 26 ஜனவரி. 'ராஜ'போக தினம். காலை ஷிப்ட் முடிந்து வந்து மதியம் 2.15 க்கு சாப்பிட உட்கார்ந்தால் ஜெயா மூவிஸில் 'ராஜா'. அப்புறம் சாப்பாடு இறங்குமா? முழு கவனமும் நம் 'ராஜா' மீதே. கூடவே விஸ்வத்தின் மீதும். அந்தக் கணமே கோபாலும், கிருஷ்ணாவும், கார்த்திக் சாரும், முரளி சாரும், ஆதிராம் சாரும் நெஞ்சில் 'டபக்'கென புகுந்து குந்திக் கொண்டார்கள். 'சாப்பிடுங்க...சாப்பிடுங்க' என்று மனைவி படுத்த, கைவிரல்கள் தட்டில் கோலம் போட, எதையுமே செய்யத் தோணாமல் மெய் மறந்து 'மெய்யழ'கனை இமையாமல் மெய்யாக ரசித்துக் கொண்டிருந்தேன். என்னவோ அப்போதுதான் பார்ப்பது போல அனைத்துக் காட்சிகளையும் புத்தம் புதுமையாக உணர முடிந்தது. பிரிண்ட் வேறு பளிங்கு போல இருந்ததால் பேராண்மை மிக்க 'ராஜா' பேரழகன் இன்னும் நங்கூரமிட்டு நெஞ்சில் புதைந்தார்.
'ராஜா'வின் ஹேர் ஸ்டைலும், டிரெஸ் கலக்கல்களும், குறும்பு கொப்பளிக்கும் கண்களும், நீள்கிருதாவும் ஒரு காதலி அவள் காதலனை இன்ப இம்சை செய்வதை விடவும் அதிகமாக நம்மை இம்சை செய்பவை. பிறந்தால் 'ராஜா' போல பிறக்க வேண்டும். வாழ்ந்தால் அவனைப் போல ஜாலியாக வாழ வேண்டும். கிருஷ்ணனின் குறும்பும், சகுனியின் தந்திரமும் கலந்த வித்தியாசக் கலவை 'ராஜா'. 'தேவி சொர்க்க'த்தின் ஒரே வசூல் ராஜாவும் இவனே.
எந்தக் காட்சியை சொல்வது?
எத்தனயோ முறை அலசி விட்டாலும் அலுக்காத காட்சிகள். ஒன்றுக்கொன்று சளைத்தவை அல்ல. 'ராஜா'வுக்கு கீழே ராஜாங்கம் பண்ணும் விஸ்வம், நாகலிங்க பூபதி, தர்மலிங்க பூபதி, தாரா டார்லிங், 'ராஜா'வின் ராதா டார்லிங், குமார், பட்டாபி, சீதா, ஜானகிராமன்கள், எதிரணி 'கவர்ச்சி வில்லன்' ஜம்பு, செம்பட்டைத்தலை பின்தொடர்பவர், சந்தர் என்ற பாபு, அந்த வயசிலும் கூட ஊசியில் நூலைக் கோர்த்து விடும் நம்பிக்கை கொண்ட தாய் பண்டரி, காரியத்தில் கண்ணாயிருக்கும் போலீஸ் கமிஷனர் சி.கே.பிரசாத் என்று பார்த்து பார்த்து செதுக்கப்பட்ட ராஜேந்திரன் சி.வி.ஆரின் வார்ப்புகள். சொல்லாமல் விட்டதும் நிறைய.
உண்மை அசலை விட இந்த நகலுக்கு பவர் ஜாஸ்தி. வசூல் ஜாஸ்தி. வரவேற்பும் ஜாஸ்தி. அசலை நகலாக்கவும், நகலை அசலாக்கவும் என் 'ராஜா'வுக்குத் தெரியாதா என்ன! கை தேர்ந்த கில்லாடி கிட்டு அல்லவா அந்த அழகன்! 'ஜானி'யை மண்ணைக் கவ்வச் செய்தவன் இந்த 'ராஜா'.
பார்க்கும் போதே பரவசத்தின் உச்சத்தில் டைப் செய்ய கை பரபரத்தது. 'மெல்லிசை மன்னரி'ன் வல்லிசையில் கேப் அணிந்த பச்சைக் கலர் உருவ கார்ட்டூன் மனிதர்கள் திகிலூட்ட டைட்டிலில் ஓடிவரும் போதும், 'ராஜா ராஜா ராஜா ராஜா' என்ற ஆண்களின் பின்னணி கோரஸ்களின் மத்தியில் 'ததததததம் ததததததம் தஜதம்...'ததததததம் ததததததம் தஜதம்' என்ற ஆரவார சத்தங்களுக்கிடையில் மன்னரின் பிரம்மாண்ட இசைப் பின்னணி புகுந்து விளையாட, இதுவரை நாம் அனுபவிக்காத இன்பமெல்லாம் ஒன்று சேர அனுபவிப்பது போன்ற பிரமை இந்த ராஜாவின் டைட்டிலில் மட்டும்தான் கிடைக்கும். மன்னரின் பேங்கோஸ் உருட்டல்கள் மிரட்டல்கள்தானே? அப்படியே 'ஜெமினி கலர் லேப்' என்று டைட்டில் பச்சை நிற பட்டை சூர்யக் கதிர்களுக்கிடையில் ஒளிரும்போது அந்த பிரம்மாண்ட இசை அப்படியே தடம் புரண்டு வெறும் விசில் ஒலியாக பியானோவுடன் மட்டுமே இணைந்து மாயாஜாலங்கள் செய்யுமே! விதவிதமான வண்ண வண்ண சுழலும் கட்டங்களுக்கிடையே டைட்டில் ஏற்படுத்தும் பரவசத்தை இதுவரை உலகில் எந்தப் படத்திலுமே நான் கண்டதில்லை. டைட்டில் என்றால் அது 'ராஜா' மட்டுமே. அது போல 'ராஜா' என்ற டைட்டிலுக்கு 'அவர்' ஒருவர் மட்டுமே.
http://i1087.photobucket.com/albums/..._000052992.jpghttp://i1087.photobucket.com/albums/..._000134479.jpg
முக்கியமாக அந்த வீராணம் குழாய் வடிவிலான தொடர் வட்ட வளையங்கள் படுவேகமாக நம்மை நோக்கி நகரும் காட்சி. 'கலை R.B.S.மணி, தோட்டா' என்ற டைட்டில் வரும் போது இந்த அற்புத காட்சி நம் கண்களுக்குள்ளே விரியும். அதே போல 'மெல்லிசை மன்னர்' என்று டைட்டில் போடும்போது வந்து அலங்கரித்து படுக்கை வாக்கிலும், குறுக்கிலும், நெடுக்கிலுமாக அசையும் ரிங்குகள் இன்னும் பிரமாதம். சி.வி.ஆருக்கு பருந்து ஷேப்பில் வடிவங்கள். நடிகர் திலகத்துக்கும் அப்படியே.
டைட்டில் முடிந்து சேகரும், சந்தரும் சிறுவர்களாய் 'பாக்ஸிங்' மோதும் அந்த ஆரம்ப நொடிக் காட்சியிலிருந்து இறுதியில் ஒன்று சேர்ந்து இளைஞர்களாக நடிகர் திலகமும், 'சுஜாதா சினி ஆர்ட்ஸ்'காரரும் முன்னம் மோதிய விளையாட்டை மீண்டும் ஒரு தடவை 'லெப்ட்.. ரைட்' சொல்லி விளையாட்டாக மோதிப் பார்க்கும் அந்த 18 ரீல்களுமாகிய 4543.34 மீட்டர் படச் சுருள்களும் நம்மை அப்படியே சுகத்தில் சுருள வைப்பவை.
அந்த திகிலான பயமுறுத்தும் இரவுப் பின்னணியில் நாயகர்களின் இன்ஸ்பெக்டர் தந்தையை அவர்கள் கண்முன்னமேயே கருப்பு கம்பளி அணிந்த, சின்னப்ப தேவரை முக ஜாடையில் ஞாபகப்படுத்தும் வில்லனின் கையாள் தன் கையால் கூர்வாள் கொண்டு முதுகில் குத்தும் போது அதைப் பார்க்கும் பலரில் ரத்தம் உறையாமல் இருப்பவர்கள் குறைவு. அந்த கத்தியின் கூர்மை போலவே அர்த்தம் பொதிந்த ரசமான வசன கூர்மைகள் நம்மை அவை வசமாக்குகின்றன.
நடிகர் திலகம் அறிமுகமாகும் காட்சிக்கு முன்னர் வரை 'மன்னர்' என்னவோ நம் 'விஸ்வம்'தான். ஆரம்பக் காட்சிகளை அப்படியே குத்தகை எடுத்துக் கொள்வார். மீதியை பின்னணியில் 'மெல்லிசை மன்னர்' பார்த்துக் கொள்வார். ரீரிக்கார்டிங் காதுகளில் இன்றும் ரீங்காரமிட்டுக் கொண்டே இருக்கும்.
விஸ்வம் சூயிங்கம் மென்றபடி tennis racquet டைப் பிடித்து 'இண்டர்நேஷனல் டிபார்ச்ச'ருக்கு வெளியே 'சிகப்பு விக்' களவாளி போலிஸ் எச்சரிக்கை செய்ததும் கொஞ்சமும் பதறாமல் சர்வ அலட்சியமாக டாக்ஸியில் ஏறும் 'கெத்'தே தனிதான் போங்கள்.
தங்கியிருக்கும் ஹோட்டலின் பால்கனியிலிருந்து தன்னை கழுகாக வட்டமிடும் காவலர்களை நோட்டமிட்டு அவர்களுக்கு தண்ணி காட்டும் 'தண்ணி' மாஸ்டர் விஸ்வம் செய்யும் விபரீத விளையாட்டுத்தனங்கள் விழுந்து விழுந்து ரசிக்கக் கூடியவை. டென்னிஸ் பிளேயர் உடையில் ஹோட்டலிலிருந்து வெளியே டென்னிஸ் கோர்ட்டுக்கு வந்து அவர் எம்.எஸ்.வியின் 'டடடடடடங் டங் டங் டங்' கிடார் பிரம்மாண்டங்களுக்கு நடுவே கவலையில்லாமல் டென்னிஸ் விளையாடுவது ஜோரான ஜோர்.
காவலாளிகள் விஸ்வத்தின் அறையை 'செக்' செய்து ஏமாந்து திரும்புகையில் tennis விளையாடிவிட்டு வரும் விஸ்வம் 'ராஜா'வை இயக்கிய இளம் ராஜேந்திரன் பில்லியர்ட்ஸ் பார்வையில் பட்டு, அங்கு விளையாடிக் கொண்டிருக்கும் ஒருவருக்கு விளையாட்டு நுட்பத்தை சொல்லிக் கொடுத்து செல்வது ஆபத்து சூழ்ந்திருக்கும் விஸ்வத்துக்கு இருக்கும் மகா நெஞ்சுத் துணிவை நமக்கு உணர்த்தும்.
Racquet ஸ்டாண்டில் அந்த குறிப்பிட்ட சிகப்பு கைப்பிடி போட்ட tennis racquet டை வைத்துவிட்டு கண்ணாடியில் வேறு தன்னைப் பார்த்து வேர்வையை ரிலாக்ஸாக டவலால் துடைத்துக் கொண்டு, கழுத்திலும் மப்ளர் அணிந்து, ஸ்டாண்டிலிருந்து வேறு ஒரு racquet டை எடுத்து யாராவது கவனிக்கிறார்களா என்று கவனிக்கும் விஸ்வத்தின் ராஜ்ஜியம் தொடர்ந்து கொண்டே இருக்கும்.
http://i1087.photobucket.com/albums/..._000662660.jpghttp://i1087.photobucket.com/albums/..._000706660.jpg
தன் ரூமை சோதனை செய்து விட்டு கேண்டீனில் ஜூஸ் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் 'மப்டி' காவலர்கள் இருவர்களுக்கு மத்தியில் அனாயாசமாக புகுந்து, வாயில் சிகெரெட்டை வைத்து, அவர்களிடமே சிகரெட்டுக்கு நெருப்பு கேட்கும் விஸ்வத்தின் துணிவை அவன் கெட்டவன் என்றாலும் அவனுடைய சாமர்த்தியத்திற்காக அவனை மனதார பாராட்டலாம். சற்று வயதான வழுக்கைக் காவலர் ஒன்றும் செய்யத் தோன்றாமல் விஸ்வத்தின் சிகரெட்டுக்கு மேட்சஸ் கொண்டு நெருப்பு பற்ற வைக்க, அருகில் இருக்கும் பரிதாபமான அந்த இளம் காவலரைப் பார்த்து வாயில் சிகரெட்டுடன் விஸ்வம் விடும் நக்கல் நையாண்டி சிரிப்பு ஓஹோஹோ! அந்த காவலர்கள் இருவருமே விஸ்வத்தின் கிண்டலால் படா பரிதாபம்.
அதே போல விஸ்வத்தை ஏதாவது காரணம் காட்டி உள்ளே தள்ள போலீஸ் கமிஷனர் பிரசாத் ஐடியாவின்படி கான்ஸ்டபிள் பட்டாபி, இன்ஸ்பெக்டர் ஹரிகிருஷ்ணன் இருவரும் விஸ்வம் மதுவிலக்கின் போது பெர்மிட் இல்லாமல் குடித்துக் கொண்டு இருக்கையில் அவனிடம் செய்யும் கலாட்டாக்கள்.... அதையும் மீறி விஸ்வம் முதலில் செய்யும் புத்திசாலித்தனமான தப்பித்தல் முறை கையாளுமை முயற்சிகள் ...(கான்ஸ்டபிள் பட்டாபி சரக்குக்கு ஆசைப்படுவதை 'சட்'டெனப் புரிந்துகொண்டு "நீங்களும் சாப்பிடுங்களேன்...ஆளுக்கொரு பெக்!" என்று குழைந்து பின் அதைத் தனக்கு சாதகமாக்கி கொள்ள பின்னும் சாமர்த்தியத் தந்திர வலை)
http://i1087.photobucket.com/albums/..._001065233.jpghttp://i1087.photobucket.com/albums/..._000148830.jpg
பின் கான்ஸ்டபிள் பட்டாபியின் எரிச்சல் போக்கை தாங்க முடியாமல் ('டியூட்டில நான் குடிக்கறதே இல்ல...டியூட்டி ஆர் நோ டியூட்டி..--நாம குடிக்கறதே இல்லே'):) விஸ்வரூப விஸ்வமாய் மாறி கோபத்தில் தன்னையே இழந்து, போலீஸை அடித்து 'ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு' என்று அந்த இடத்தில் மட்டும் ஆத்திரம் காட்டி மாட்டிக் கொள்ளும் (பின்னால் கிளைமாக்ஸிலும் படுபுத்திசாலித்தனமாக நடக்கும் விஸ்வம் இதே போல கோபத்தில் அவசரப்பட்டு ராஜா, கமிஷனர் இவர்களின் சிலந்தி வலைப் பின்னலில் மாட்டும் ஈயாக கொஞ்ச நேரம் மாட்டி, நாகலிங்க ரங்காராவின் நம்பிக்கையை தற்காலிகமாக இழப்பது விஸ்வத்தின் கேரக்டரை ஆரம்பத்திலிருந்து முடிவு வரை ஒரே சீராக அழகாக நமக்கு உணர்த்தும். அதற்கேற்றார் போன்று அருமையான காட்சி அமைப்புகள் தப்பு தவறு என்னவென்றே தெரியாமல் அழகாக பொருள்பட எடுக்கப்பட்டிருக்கும்) என்று அதுவரை நம்மை ஆளும் விஸ்வத்தின் ஆளுமையை தகர்த்தெறிய வருவார் தோன்றும் முதல் சிறைக் காட்சியிலே எல்லாவற்றிலும் சிகரம் தொட்டுவிடும் நம் ஸ்டைல் 'ராஜா'. ஆர்ப்பாட்ட அறிமுகம். அப்புறம் விஸ்வமென்ன?... யாராயிருந்தாலும் என் 'ராஜா'விடம் 'பஸ்பம்'தான்.
என்னடா இது 'ராஜா' திலகத்தைப் பற்றி எழுதுவான் என்று பார்த்தால் 'நாடகக் காவலரை'ப் பற்றி எழுதுகிறானே என்று நினைக்கிறீர்களா? எப்படி திரையுலகிற்கு ஒரே ஒரு 'ராஜா'வோ அது போல விவகாரமான வில்லனுக்கு ஒரே ஒரு சுவாரஸ்ய 'விஸ்வம்'தான். அதனால்தான் தலைவர் படத்திலும் கூட அவனுக்கு மட்டும் ஸ்பெஷல் கவனிப்பு. இரண்டாவது படத்தின் ஓப்பனிங் காட்சிகள் விறுவிறுப்பு விஸ்வத்தை நம்பியே.
நடிகர் திலகத்தின் நடிப்பு பிளஸ் ஸ்டைல் அக்கிரமங்களைப் பற்றி எழுத நாள் போதுமா என்ன! ஒரு ஆள் போதுமா என்ன! அதுவும் 'ராஜா'வாக அவர் செங்கோலோச்சும் போது கேட்கவும் வேண்டுமோ!
தொடருகிறேன் விரைவில்.
அலங்கார் தியேட்டரில் அந்தப் படத்தைப் பார்த்து விட்டு வந்த நண்பன் சொன்னான்.. ரொம்ப நல்லா இருக்கு கண்ணா.. ப்ளஸ்டூ பருவம் என நினைக்கிறேன் முதலாவதோ இரண்டாவதோ நினைவில்லை..
ஆனால் அவன் பார்த்த மறு நாளே விகடனில் வந்த விமர்சனத்தால் கிளர்ந்தெழுந்தது கூட்டம் அந்தப் படத்திற்கு.. இரண்டு நாள் கழித்து சென்ற எனக்கு நல்ல வேளை சைக்கிள் டிக்கட் கிடைத்தது..போய் ப்பார்க்க லொங்கு லொங்கு என்று அவ்வளவு தூரம் போன கஷ்டம் தெரியவில்லை ..(ரொம்ப தூரம் எனச் சொல்லமுடியாது.. இரண்டு மூன்று கிலோ மீட்டர்கள் மேபி) படமும் பிடித்துத் தான போனது..பின் அது ஓடிய ஓட்டத்தில் அலங்கார் தியேட்டரில் சீட், பெய்ண்ட் எல்லாம் மாற்றினார்கள்.என நினைவு..படம் ஒரு தலை ராகம்..
பல பாடல்கள் இருந்தாலும் கவர்ந்தது கூடையில கருவாடுகூந்தலிலே பூக்காடு.. ஒரு அழகான மெலடிகொண்ட கோரஸ் பாட்டு..சலசலவெனச் செல்லும்..
இசை டி.ராஜேந்தர் ஏ.ஏ. ராஜ் எனப் போட்டிருந்தார்கள்..பின்னால் நான் தான் இசைத்தேன் என டி.ஆர் சொல்லி பல படங்கள் எடுத்து இசை கொடுக்க ஆரம்பித்தார்..ஆனால் இருவரும் சேர்ந்து இசை அமைத்த பாடல்களைக் கொண்ட ஒ த ரா போல இல்லை அதுவும் எஸ்பெஷலி போதோடு கோழி கூவுற வேலை மெலடி..
காரணம் ஏ.ஏ.ராஜ் எனப் புரிந்தது நேற்று இந்தப் பாட்டைக் கேட்ட போது
நம் மக மகா வில் போடாத பாடல்கள் இல்லை எனும் அளவிற்கு ஆகிவிட்டது.. அந்தப் பாடலின் வரிகளுக்காக கூகுளிட்டால் மமகா முதல்பாகம் பேஜ் என வர வந்து பார்த்தால் கிருஷ்ணா வரிகள் மட்டும்கொடுத்திருந்தார்.. பின்னூட்டத்தில் மிஸ்டர் கார்த்திக் அந்தப் படம் தண்டம் என எழுத நான் பாட்டைத்தானே சொன்னேன் என கிருஷ்ணா பதில் சொல்லியிருந்தார்..பட் பாடல் காணொளி இல்லாததினால் நான் கேட்கவில்லையோ என்னமோ..பட் சின்ன வயதில் இந்தப் பாட் கேட்டிருக்கிறேன்.. நன்றாகவும் இருக்கும்..
ஏ.ஏ. ராஜ் இசையமைத்த படம் தணியாத தாகம்.. பி. நா. கொண்டாட்டத்திற்காகத் தேடியதில் அகப்பட்ட பாடல் இது. இதுவரை மூன்று முறை கேட்டுவிட்டேன்..காலையிலிருந்து இது ஒரு பின்னணியாய் மனதிற்குள் ஓடிக் கொண்டே இருக்கிறது..
ஏ.ஏ ராஜ் பற்றியும் இந்தப் பாடலைப் பற்றியும் எழுத்தாளர் ஜெயமோகனின் பதிவு..
http://www.jeyamohan.in/42900
http://www.jeyamohan.in/43064
பாடல் வரிகளைப் பார்க்கலாமா..(க்ருஷ்ணா ஜியிடமிருந்து கட் பேஸ்ட்)
நடிப்பு டெல்லி கணேஷ்..சுபத்ரா..
மலேசியா ஜானகி
ஜானகியின் சிரிப்பு சிலிர்ப்பு
பூவே …நீ ...
யார் சொல்லி யாருக்காக மலர்கின்றாய்
நான் பருவ தோட்டத்தில் ஒரு மலர்
நான் பருவ தோட்டத்தில் ஒரு மலர்
உன்னோடு பாடிட வந்த புது மலர் .. புது மலர்
பூவே …நீ ...
யார் சொல்லி யாருக்காக மலர்கின்றாய்
இவள் பருவ தோட்டத்தில் ஒரு மலர்
இவள் பருவ தோட்டத்தில் ஒரு மலர்
உன்னோடு பாடிட வந்த புது மலர் .. புது மலர்
(பூவே)
நீ கோவில் கொண்ட அந்த கண்ணனுக்கோ
நான் ...
என் நெஞ்சில் வாழும் இந்த மன்னனுக்கோ
(நீ கோவில் )
என் தேவன் தேர் ஏறி வருகின்றான்
என் தேவன் தேர் ஏறி வருகின்றான்
புன்னகையில் உன்னை அள்ளி தருகின்றான்
(பூவே )
கோவில் கலசம் போல் என் தேவி
ஆஹ (ஜானகி யின் சிலிர்ப்பு )
இவள் கூந்தலில் ஆடிடும் உன் மேனி
(கோவில்)
பூவிலும் பூ அவள் பொன் மேனி
(ஜானகியின் சிரிப்பு)
பூவிலும் பூ அவள் பொன் மேனி
இவள் புது உடல் தழுவிடும் என் மேனி
(பூவே)
மாங்கனி இளந்தென்றல் தாலாட்டு
என் மைவிழி மயங்கிட சீராட்டு
(மலேசியவின் சிரிப்பு)
பூப்போல் சிரிக்கிறாள் இளஞ்சிட்டு
(ஜானகியின் சிரிப்பு)
பூப்போல் சிரிக்கிறாள் இளஞ்சிட்டு
இவள் பொன்னுடல் சிவக்கட்டும்
என் கரம் பட்டு
அஹ (மீண்டும் ஜானகியின் சிலிர்ப்பு )
(பூவே)
இவள் பருவ தோட்டத்தில் ஒரு மலர்
நான் பருவ தோட்டத்தில் ஒரு மலர்
உன்னோடு பாடிட வந்த புது மலர் ..
புது மலர் புது மலர் ..
https://youtu.be/rcFVgGJL0qg
**
இன்னொரு அற்புதமான பாடல் கேட்டு என் கண்கள் கலங்கின.. வீணையும் புல்லாங்குழலும் ஜுகல் பந்தி செய்தபாடல்..கண்கள் கலங்கியகாரணம் என்னவென்றால்...
அது ….
*
பின்ன வாரேன்..
Third Year Postings...begin with this Good Morning song!
பட்டிக் காட்டானின் மிட்டாய்க்கடை: மனம் இனித்திடும் தேன்மதுர கானங்களின் தனித்துவ காணொளிப் பெட்டகம் !
Part 1 : Singing in the Rain (1952) with Gene Kelly!
https://www.youtube.com/watch?v=Yu6--WBPBHoQuote:
சிறுவயதில் நமது தமிழ் படப் பாடல் காட்சிகள் அவ்வப்போது காந்தாராவின் தெலுங்கு டப்பிங் மற்றும் ஷம்மிகபூர் போன்ற இந்தித்திரை மின்னல்களின் இசை நடன பாடல்கள் எப்போதாவது அபூர்வமாக செம்மீன் போன்ற மானச மயிலான மலையாள மதுரங்கள் ....இப்படிச் சென்றுகொண்டிருந்த இந்தப் பாமர ரசிகனுக்கு பிரமிப்பூட்டும் வண்ணம் வந்து சேர்ந்தன பொக்கிஷமான சில ஆங்கில இசை நடன பாடல் கோர்வைகள் ....பிரபஞ்சத்தின் மாபெரும் நடனமேதைகள் பிரெட் ஆஸ்டையர் மற்றும் ஜீன் கெல்லியின் பங்களிப்பில் ...பட்டிக்காட்டான் மிட்டாய்க்கடை பார்த்து வாய்பிளந்தது போல....அந்தக் காலத்திலேயே (1952!) அதிதுல்லியமான வண்ணக்குழைவில் அதிரடி இசையமைப்பில் இணையற்ற நளினநடன அசைவுகளில் அபாரமான கேமிரா கோணங்களில்......சிங்கிங் இன் தி ரெயின் போன்ற வாழ்நாளில் மறக்க முடியாத ஆராதனைக்குரிய ஆங்கிலத் திரைப்படங்கள் !
இப்படத்தின் எல்லாப் பாடல் நடனக் காட்சிகளுமே இன்றுவரை ஈடு இணையற்றவையே.....நிச்சயம் நமக்குப் பட்டிக்காட்டானின் மிட்டாய்க்கடைகளே!
https://www.youtube.com/watch?v=w40ushYAaYA
பருவமழை தொடங்கி விட்டதே..... நமது மனதிலும் மழையில் குடை மடக்கி குதூகலமாக சிறு குழந்தைகளாக மாறி நனைந்து ஆடிப்பாடி மகிழும் ஆசையை தூண்டிவிட்டாரே ஜீன் கெல்லி !
Titbits on the evergreen celluloid saga Singing in the Rain!
Singin' in the Rain is a 1952 American musical comedy film directed and choreographed by Gene Kelly and Stanley Donen, starring Kelly, Donald O'Connor and Debbie Reynolds. It offers a lighthearted depiction of Hollywood in the late 1920s , with the three stars portraying performers caught up in the transition from silent films to "talkies."
The film was only a modest hit when first released, with only Donald O'Connor's win at the Golden Globe Awards, Betty Comden and Adolph Green's win for their screenplay at the Writers Guild of America Awards, and Jean Hagen's nomination at the Academy Awards for Best Supporting Actress being the only major recognitions it received. However, it was accorded its legendary status by contemporary critics. It is now frequently regarded as the best movie musical ever made, and the best film ever made in the "Arthur Freed Unit" at Metro-Goldwyn-Mayer. It topped the AFI's Greatest Movie Musicals list, and is ranked as the fifth greatest American motion picture of all time in its updated list of the greatest American films in 2007.
In 1989, the United States Library of Congress selected the film for preservation in the National Film Registry.
Quote:
All songs have lyrics by Freed and music by Brown! Some of the songs, such as "Broadway Rhythm", "Should I?", and most notably "Singin' in the Rain," were featured in numerous films. The films listed below mark the first time each song was presented on screen.
"Fit as a Fiddle (And Ready for Love)" from College Coach (1933) (music by Al Hoffman and Al Goodhart)
"Temptation" (instrumental only) from Going Hollywood (1933)
"All I Do Is Dream of You" from Sadie McKee (1934)
"Singin' in the Rain" from The Hollywood Revue of 1929 (1929)
"Make 'Em Laugh" considered an original song, but bearing close relation to Cole Porter's "Be a Clown", used in another Freed musical, The Pirate (1948).
"Beautiful Girl Montage" comprising "I've Got a Feelin' You're Foolin'" from Broadway Melody of 1936 (1935), "The Wedding of the Painted Doll" from The Broadway Melody (1929), and "Should I?" from Lord Byron of Broadway (1930)
"Beautiful Girl" from Going Hollywood (1933)[10] or from Stage Mother (1933)
"You Were Meant for Me" from The Broadway Melody (1929)
"You Are My Lucky Star" from Broadway Melody of 1936 (1935)
"Moses Supposes" (music by Roger Edens, lyrics by Comden and Green)
"Good Morning" from Babes In Arms (1939
"Would You?" from San Francisco (1936)
"Broadway Melody Ballet" composed of "The Broadway Melody" from The Broadway Melody (1929) and "Broadway Rhythm" from Broadway Melody of 1936 (1935) (music by Nacio Herb Brown and Arthur Freed)
Courtesy : Wikipedia and You Tube
இதோ 'ராஜா'வின் இசை ரசிகர்களுக்காக 'யூ டியூபி'ல் முதன்முறையாக இன்று தரவேற்றப்பட்ட 'ராஜா' டைட்டில் மியூஸிக்.
https://youtu.be/ivRbjxqlato
வாசுசாரின் திரி Profile Photo நடிகர் திலக ஞான ஒளி ஸ்டில் கண்ணுறும் போ து எனக்கு நினைவில் நிழலாடுவது ஷான் கானரியின் தண்டர்பால் ஜேம்ஸ் பாண்ட் பட அடால்போ சீலி என்னும் நடிகரின் தோற்றமுமே ! கண் அறுவை சிகிச்சைக்குப் பிறகோ மாற்றுக்கண் பொருத்தப்பட்ட பிறகோ இவ்வகை ஒருபக்க சீரமைப்புக் கறுப்புக் கண்ணாடிகளை அணிவது ஸ்டைலாக இருக்கும்!! ஞான ஒளியில் நடிகர்திலகத்துக்கு கதைப்போக்கின்படி இவ்வகை ஒற்றைக்கண் கண்ணாடி அற்புதமாகப் பொருந்தியது!
https://www.youtube.com/watch?v=llWjUmCv4Vg
https://www.youtube.com/watch?v=Ooy4VtKCVNo
தீம் மியூசிக் அல்லது டைட்டில் மியூசிக் என்பது பொதுவாகவே தமிழ்த் திரைப்படங்களில் அபூர்வமே! ராஜா திரைப்படத்தில் ஹாலிவுட் பாணியில் ஜேம்ஸ் பாண்ட் மற்றும் கௌபாய் படங்களின் தீம் இசை பின்பற்றி எம் எஸ் வி சிறப்பானதொரு டைட்டில் இசைக் கோர்ப்பை முயற்சி செய்தார். அந்தகால கட்டத்தில் ராஜா திரைப்படத்தின் பரபரப்பான வெற்றியின் பின்னணியில் இந்த இசை நேர்த்தியும் ஒரு சிறிய பங்கை வசித்தது. அதற்கப்புறம் வெகு நீண்டகாலம் கழித்து சூது கவ்வும் திரைப்படத்தின் தீம் இசையும் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தது !
The topmost of all theme musics till today....From Russia With Love James Bond theme music!!
NT starrer Raja has traces of this music and Pink Panther title animations partly embraced to fit the Tamil Screen ambiance!
https://www.youtube.com/watch?v=58Y_U4XZupY
Title Music in The Good The Bad and the Ugly by the one and only music genius of Spaghetti Cowboy genre....the Italian based music director Ennio Morricone!
https://www.youtube.com/watch?v=h1PfrmCGFnk
Another famous theme music! D'Jango!
https://www.youtube.com/watch?v=MQKKOjXIwuA
Theme musics from such movies as Come September, The Silencers, For a Few Dollars More, .....My Name is Nobody...McKenna's Gold....Naagin/Neeyaa...were also equally good!
காலம்Quote:
முன்னோக்கி மட்டுமே பயணிக்கிறது. கடந்த காலம் நினைவுகளில்...நிகழ்காலம் நிஜங்களில்....எதிர்காலமோ கனவுகளில்!
காலச்சக்கரத்தின் கடிகார முள்சுற்றுவழி சுழற்சியில் வசந்தகாலங்களும் குளிர்காலங்களும் கோடைகாலங்களும் இலையுதிர் காலங்களும் இடையிடையே மழைக்காலங்களும் தளிர்விடு பயிர்க்காலங்களும் பலன்பெறும் பழமுதிர் அறுவடைக் காலங்களும் இயற்கையின் நியதியே!
ஆண்டொன்று போனால் வயதொன்று போவதும் பிறப்பும் மனித மற்றும் பிற ஜீவராசிகளின் குல வளர்ச்சிப் பருவங்களும் முதுமையும் மரணமும் சகஜமே !
பூந்தென்றலும் புயலும் இன்பமும் துன்பமும் வரவும் செலவும் வாழ்வியலே! மனிதன் மட்டுமே சிந்திப்பதோடு சிரிக்கவும் தெரிந்த விலங்கினமானது எவ்வளவு வசதியானது! மறதிஎன்னும் மாமருந்தும் துன்பம் தணிந்திட இறைவன் வரமே!
வாழ்வியல் வசந்தங்களில் அன்பே காட்சிசாட்சியான காதலும் நல்லறமான இல்லறமும் நினைவில் நிற்கும் தேனலைகளே !
வசந்தம் கடந்த நினைவலைகளால் அழியாத கோலங்கள் ! .......
https://www.youtube.com/watch?v=dWE7tGOL9f4
காதலில் வீழும்போது நிகழ்காலக் கன்னியரெல்லாம் வசந்தகால முல்லைப்பூக்களே!
https://www.youtube.com/watch?v=wKGNgRiL7Ns
எதிர்கால வசந்தம் கனவலைகளாக !
https://www.youtube.com/watch?v=asO-IBX8h4w
இது வாத்தியாரையாவுக்காக வண்ணமயமாக்கப்பட்ட ஓல்டு வசந்த காலம்
https://www.youtube.com/watch?v=MSJEMj52ufU
//இன்னொரு அற்புதமான பாடல் கேட்டு என் கண்கள் கலங்கின.. வீணையும் புல்லாங்குழலும் ஜுகல் பந்தி செய்தபாடல்..
அது ….//
தணியாத தாகத்தில் ஏ.ஏ. ராஜ் இசையில் இன்னொரு பாடல்..அவள் ஒரு மோகன ராகம்..
அந்தப் பாடல் வரிகள்..
அவள் ஒரு மோகன ராகம்
என்னை விட்டு தனியே.. பிரிந்திட்ட போதும் என் மனக்கோவிலின் தீபம்
இறைவா என்னிடம் ஏன் இந்த கோபம்..
நிலவில்லா வானம் அழகில்லா கோலம்
அவள் இல்லா நெஞ்சம் தனிமையில் வாடும்
எனக்கென்ன பாடல் அதற்கென்ன ராகம்
என் இதயத்தின் பாடல் அவள் நினைவையே பாடும்
என் ஆசை எல்லாம் ஒன்றாக சேர்த்து
உன் மீது வைத்தேன் மாலையாய் கோர்த்து
பூஜைக்கு வந்தேன் நீ அங்கு இல்லை..
என் பாடல் கேட்பார் யார் இங்கு கண்ணே...
https://youtu.be/ZFqnoHbE858
செந்தில் சார்,
கெல்லியின் கால் கில்லி விளையாட்டுக்களை மீண்டும் பார்த்து ரசிக்க வைத்ததற்கு நன்றி! பின்னாளைய மழை, குடை பாடல்களுக்கு கெல்லிதானே முன்னோடி? அந்தக் கால்கள் எப்படியெல்லாம் ஜாலம் புரிகின்றன! வான் மேகம் பூப்பூவாய்த் தூவ, மேகம் கொட்ட, கெல்லியின் இந்த மழைப்பாடல் ஆட்டத்திற்கு என்றும் நம் மனதில் நீங்கா இடம் உண்டு. மனிதர் குடையிலும் அற்புதங்கள் நிகழ்த்துகிறார் அனாயாசமாக. நடிகர் திலகத்திற்கு இப்படி ஓர் பாடல் இல்லையே என்று அடிக்கடி என் மனம் ஏங்கும். ஆனால் மழைக்குப் பதிலாக உச்சி மண்டை பிளக்கும் வெயிலில் நடனம் தெரியாத நண்பர்கள் இருவரையும் உடன் இழுத்துக் கொண்டு, பேலன்ஸ் செய்து, சென்னையின் சாலைகளில் நடனத்திலும், நடையிலும், நடை ஓட்டத்திலும் வெற்றிக்கொடி நாட்டி, உருவத்தில் வறட்சி காட்டி, இடுப்பொடி நடனத்தில் மிரட்சி காட்ட நடிகர் திலகத்தை விட்டால் ஆளேது? 'நெஞ்சிருக்கும் வரை' மறக்க முடியாத நடனமாயிற்றே!
நடிகர் திலகம் அவன்தான் மனிதன், அன்பளிப்பு, ஆண்டவன் கட்டளை, தங்கப்பதக்கம் படங்களில் குடையை நடிக்க வைத்திருப்பார்.
நடிகர் திலகம் அவன்தான் மனிதன், அன்பளிப்பு, ஆண்டவன் கட்டளை, தங்கப்பதக்கம் படங்களில் குடையை நடிக்க வைத்திருப்பார்.// அந்த ஆண்டவன் கட்டளை குடை தான் முதல் இடம்.. என்னா ஒரு மிடுக்கா இருக்கும்..
செந்தில் சார்,
மழை, குடைப் பாடல்களில் இந்தப் பாடல் இல்லாமல் போனால் அதற்கு அர்த்தமே இல்லை. என் மனம் கவர்ந்த 'ஸ்ரீ 420' 'Pyar Hua Ikrar Hua Hai Pyar Se' பாடல். பிரமாதமான ஒளிப்பதிவு மற்றும் படமாக்கல். ஒரு காலத்தில் பைத்தியமாக கேட்ட பாடல். மன்னா டே மற்றும் லதா கலக்கல்.
சாரல் காட்சிகள் அருமை. டீ பாய்லரில் இருந்து ஆவி பறக்க டீ பிடித்து, 'கப்'பிலிருந்து சாஸரில் ஊற்றி அந்த குளிரில், மழையில் அந்த மாற்றுக் கண்ணாளி:) கபூரையும், நரகீஸையும் பார்த்து ரசித்தபடி ருசித்து டீ அருந்துவது (நமக்கு ஒரு கப் கிடைக்காதா என்று மனம் கிடந்து ஏங்கும்) மறக்கவொண்ணா கவிதைக் காட்சி. தெரு விளக்குகள் ஒளிர்வு, வழக்கமான ஆனால் திகட்டாத ராஜின் அப்பாவித்தன இசைக் கருவிகளின் ஈர்ப்பு இசைப்பு, நர்கீஸின் உதடும், கண்களும் துடிக்கும் குளிர் மோக, விரக தாபம் 'திடு'மெனக் கிளம்பும் அந்த 'ஆஹாஹா' சப்த உற்சாகம், பாதைகளில் தேங்கி நிற்கும் மழைத் தண்ணீர், தூரத்தில் தெரியும் தொழிற்சாலை கட்டிடங்கள், குட்டி குட்டியாய் மழைக் கோட்டு அணிந்து வரும் அழகு 'அஞ்சலி' செல்வங்கள்,
ஆஹாஹா! தமிழில் ஏன் இது போல காவிய பாடல் காட்சிகள் அமையவில்லை எனும் போது வருத்தம் மேலிடும்.
என் நெஞ்சமெல்லாம் நிறைந்த காவிய பாடல்.
https://youtu.be/oXLzfldeDcM
சின்னா! கரெக்ட். ஆனால் நடிகர் திலகம் குடை பிடித்தாலே கோபால் திட்டுவார். ஏனென்று தெரியுமா? குடை வயதானவர்களுக்கு மட்டும்தானாம். ஒரு வகையில் அதுவும் உண்மைதான். 'தேரு வந்தது போல் இருந்து நீ வந்தபோது' என்று சரோவிடம் வயலில் குடை பிடித்தபடி பாடி வரும்போது காதல் சீண்டல்கள் இல்லாமல் போகுதாம். குடை டிஸ்டர்பாம்.:) அதே போல 'அன்புக்கரங்க'ளில் 'உங்கள் அழகென்ன... அறிவென்ன!' என்று தேவிகா நடிகர் திலகத்தை கொஞ்சும்போது பொய்க்கோபத்தில் குடையைப் பிடித்துக் கொண்டு அவர் நடப்பதும் கோபாலருக்கு மகா எரிச்சலைத் தருமாம்.
ஆனால் 'அவன்தான் மனித'னில் 'அன்பு நடமாடும் கலைகூடமே'வில் அந்த மழையில் குடையை விரித்து, கால்கள் சரியாகி விட்ட குஷியில் சின்னப் பையன் போல் ஒரு ஓட்டம் ஓடி வருவாரே! என்னா அழகாக ஓடி வருவார்! ஓட்டத்திலும் திலகமே. அதை யாராவது குறை சொன்னால் எனக்கு பொல்லாக் கோபம் வரும்.
மதுண்ணா! கலர் பாகவதர் நன்றாகத்தான் இருக்கிறார். இப்போ நான் ஒரு 'வசந்தம்' தரேன் என்னுடைய குருதட்சணையாக.
'புது வசந்தமாமே வாழ்விலே
இனி புதிதாய் மணமே பெறுவோமே'
'மெல்லிசை மன்னர்' இசையமைத்த முதல் பாட்டாமே!
https://youtu.be/wVVNbPeI4A0
//ஆனால் 'அவன்தான் மனித'னில் 'அன்பு நடமாடும் கலைகூடமே'வில் அந்த மழையில் குடையை விரித்து, கால்கள் சரியாகி விட்ட குஷியில் சின்னப் பையன் போல் ஒரு ஓட்டம் ஓடி வருவாரே! என்னா அழகாக ஓடி வருவார்! ஓட்டத்திலும் திலகமே. அதை யாராவது குறை சொன்னால் எனக்கு பொல்லாக் கோபம் வரும்.// வாஸ்ஸூ.. ஸாரி.எனக்கு அப்போ ’மஞ்சு’ மயக்கம் :)
சரி அந்த மே பாட் இன்னொரு தடவை பார்த்தா போச்சு.. :)
எண்ணிட வாரா எழில்பாடல் தோரணத்தில்
முன்னூறு போதாது போ (ங்கள்)
வாழ்த்துகள் அனைவருக்கும்..:)
அயணம் என்றால் பயணம் என்று அர்த்தமாம்..நமக்கெல்லாம் ராமாயணம் தெரியுமில்லையா.. ராமாயணம் என்றால் ராமனின் பயணம்.. என அர்த்தம்..
எனில் நாமும் இன்னொரு அயணம் எழுதிப் பார்க்கலாமா..
சிம்ரனயனம். – 2 (ஹை.. சிம்ரனின் நயனம் என்றும் வ்ருகிறதே!)
**************
தேவிகாவைப் பற்றி முன்பு எழுதியிருந்த போது – உண்மையான ரசிகன் நடிகையின் பெர்ஸனல் லைஃப் பற்றிப் பார்க்க மாட்டான்..அவர் திரையில் எப்படித் தோன்றுகிறார் … நடிக்கிறார் என்பது மட்டுமே பார்ப்பான் என எழுதியிருந்தேன்..
அதுவே சிம்ரனுக்கும் பொருந்தும்..அவரது பெர்ஸனல் லைஃப் எல்லாம் இங்குபார்க்க வேண்டாம்..அழகு நடிப்பு அழகான பாடல்..மட்டும் பார்க்கலாம் என்னாங்கறீங்க..
விம்மி வருமெழிலோ விண்மீன் விழிமலரோ
சிம்ரன் இடையோ சிறிதாமோ – தெம்மாங்காய்
பாடலுடன் அங்குதான் பாவை நடிப்பினிலும்
ஆடலிலும் மின்னும் அழகு
என்னது அத்தியாயம் 2 ஆ.. அதான் முன்னால தின்னாதே பாட் கொடுத்தேனே.. எனில் இது இரண்டு.:).
ஆக்சுவலா அவர் நடிக்க ஆரம்பித்த படங்கள் பற்றி எழுத வேண்டும்..இடையில் வரும் இந்தப் படப் பாடலை எடுத்ததற்கு என்னகாரணம்.. இடை தான்..!
இந்தப்பாட்டு கேட்டதே இல்லை நான்..பட் தேடியதில் கிடைத்ததாக்கும்.. நல்ல மெலடி.. நல்ல காதல் பாடல்.. தவிக்கிறேன் தவிக்கிறேன் பாடல் மட்டுமல்ல இன்னொருபாட்டும் காதல் நீதானா காதல் நீதானா
இரண்டிலும் பிரபு தேவா தான்..
உள்ளத்தில் ஒளிந்துகொண்டு உணர்வினைச் சீண்டி
….ஓடாமல் நின்றென்னைச் சோதனையாய்த் தூண்டி
கள்ளமது செயலாமோ கண்ணாநீ உந்தன்
…காரிகையும் நான் தானே கனவினிலே மேலும்\
அள்ளுகின்றாய் துள்ளியெனை அணைக்கின்றாய் இன்னும்
…ஆர்வமாய்ப் பலவாறாய் மாயங்கள் செய்தே
கொள்ளைகொளும் வண்ணமயக் கோலத்தில் வந்தே
…கோதையெனை வதைக்காமல் ஆட்கொள்ளேன் நேரில்…
அப்படின்னு விருத்தத்தில பாடாம பாட்டாப்பாடறாங்க சிம்மு..
//ஓடி வா ஓடி வா இயங்கவில்லை இதயத்தில் ஒரு பாதி
தேடி வா தேடி வா இரு உயிரும் ஒன்றாகும் ஒரு தேதி
காதலே காதலே மேகத்தால் வானில் வீடு கட்டு
தவிக்கிறேன் தவிக்கிறேன் உனது கனவாலே....//
https://youtu.be/iHsvrOd3yD0?list=RDiHsvrOd3yD0
*
உள்ள முரசுகையில் ஏற்பட்ட மாற்றமது
வெள்ளப் பெருக்கெடுத்து வேகமாய் – சொல்லினில்
வண்ணமாய்க் காதலாய் வாகாக வந்ததுவே
பெண்ணெனும் பேரழகால் போம்….
*
//என்ன கனவு கண்டாய்
நீ வந்தாய் முத்தம் தந்தாய்
பதிலுக்கென தந்தாய்
போ போ போ சொல்ல மாட்டேன் போ //
காதல் நீ தானா
உன்னைக் காணத்தான்
கண்கள் கொண்டேனா//
https://youtu.be/nYzfRIe7wPc?list=RDiHsvrOd3yD0
அடுத்த பாட்டில் சிம்ரனின் இடையிருக்கும் நடை இருக்காது ஒரே ஓட்டம் தானாக்கும்..:) அது என்னான்னாக்க……
பின்ன வாரேன்…:)
சின்னா!
உங்க பதிவுகளைப் பற்றிய ஹோம் ஒர்க் கொஞ்சம் பாக்கி இருக்கிறது. முடிச்சிடலாமா?
தணியாத தாகம் சாங்ஸ் ஏனோ என் நெஞ்சில் அப்போதிலிருந்தே ஒட்டவில்லை. டெல்லியாரை நாயகராக பார்க்கவும் கஷ்டம்.
சிம்ரன் நினைவில் சிதைந்து போய் இருக்குமெங்கள் சின்னா!:) இப்போதய சிம்ரனின் பக்கெட் ஒன்று போட்டு கனவை கலைக்கவா? 'சிம்'ரன் என்ன மைக்ரோவா இல்லை நானோவா?:) ஆனா கவிதை கொட்டுதே!
//ஆக்சுவலா அவர் நடிக்க ஆரம்பித்த படங்கள் பற்றி எழுத வேண்டும்..இடையில் வரும் இந்தப் படப் பாடலை எடுத்ததற்கு என்னகாரணம்.. இடை தான்..!//
வழிமொழிகிறேன்.:)
'டைம்' பார்த்து 'தவிக்கிறேன்' சாங் தந்ததற்கு ஒரு ஓஹோ உங்களுக்கு. ராஜாவின் நல்ல பாடல் இது. அப்போது சூப்பர் ஆனால் ராஜா ஒதுக்கப்படும் சமயம். மினுமினு நீல உடையை பிரபுதேவா அணிந்து இப்போது பார்க்கையில் ச்சிப்பு வருது.
மயக்கத்தைத் தரும் 'மயக்கத்தை தந்தவன் யாரடி?' பாடலை குறுகிய இடைவெளியில் கொடுத்தாலும் அனுபவித்து வழக்கம் போல ரசிக்க முடிகிறது. நிச்சயம் ஆதிராம் சாரும் ரசித்திருப்பார். தேங்க்ஸ் சின்னா!
ராட்சஸியின் 'ஆடுவது உடலுக்கு விளையாட்டு' பாடலை ஒரே பாடல் வரி விளக்கத்தில் தந்த உம்மை....உம்மை.... சின்னா இதே பாணியில் ஜோதிலஷ்மி 'தேடிவந்த மாப்பிள்ளை'யில் ஈஸ்வரியின் குரலில் ஒரு பாடல் பாடுவார். அதுவும் தூள். என்ன சொல்லுங்கள் பார்க்கலாம்? ரெண்டும் ஒரே மாதிரி இருப்பதால் கொஞ்சம் குழப்பும்.
300 பக்க வாழ்த்துக்கும், ஜாலியான கவிதை நடை பதிவுகளுக்கும், ஜம் பாடல்களுக்கும் 'சபாஷ்' கண்ணா.
//அடுத்த பாட்டில் சிம்ரனின் இடையிருக்கும் நடை இருக்காது ஒரே ஓட்டம் தானாக்கும்.. அது என்னான்னாக்க……//
https://youtu.be/14Ho5FQWjoI
//சிம்ரன் நினைவில் சிதைந்து போய் இருக்குமெங்கள் சின்னா! இப்போதய சிம்ரனின் பக்கெட் ஒன்று போட்டு கனவை கலைக்கவா? 'சிம்'ரன் என்ன மைக்ரோவா இல்லை நானோவா? ஆனா கவிதை கொட்டுதே! // தாங்க்யூ வாசு.. பக்கெட்டா கனவே கலையாதே வா.. :)
ஆடுவது உடலுக்கு விளையாட்டு பாட்டு ரொம்ப நாள் முன்னால் கேட்டிருந்தது.. அதை ஃகோட் பண்ணிய போது பார்க்கவில்லை..எனில் கொஞ்சமாய் விட்டு விட்டேன்..
ஆமாம் டெல்லி கணேஷ் பார்க்க முடியாது தான்.. ஆனால் இந்த பூவே நீ யார் சொல்லி அந்தப் பாட்டுக்கு ஒரு ரீமிக்ஸ் போட்டிருந்தார்கள்பாருங்கள் அது பானுசந்தர் அர்ச்சனா..எப்படி இருக்கும் நீங்களே சொல்லுங்கள்
அப்புறம் இன்னும் நான் பிறந்த நாள் வாழ்த்துக்கள் சொன்னவர்களுக்கு நன்றி சொல்லவில்லை.. முதலாய் எஸ்வி சார், சிவாஜி செந்தில், ராகவேந்தர் சார் மதுண்ணா அப்புறம் விலாவாரியாக (அவ்ளோ நல்லாவா எழுதறேன்) என்னை புகழ்ந்து மயக்கத்தில் ஆழ்த்திய நீங்கள்..எல்லாருக்கும் ஒரு நன்றி..
அப்புறம் பதிவுகளைப் படித்துப் பாராட்டி எண்ணங்களைச் சொன்ன உங்களுக்கு ஒரு ஸ்பெஷல் நன்றி.. நைட் ஒரு ஸ்பெஷல் பாட் கிடைக்குதான்னு பார்க்கறேன்..:)
எல்லார் ஈஸ்வரியின் பாடல் நைட் வந்து செக் பண்ணிப் போடறேன்.
ஆமாம் இந்த ஓடற பாட் இப்படியா போட் உடைக்கறது..அது என்னா இடம்.. கல்கத்தாவாக்கும்... :)
For a change here is Bolero conducted by Zubin Mehta
http://www.youtube.com/watch?v=8zh70izqAfo