சின்னா!
உங்க பதிவுகளைப் பற்றிய ஹோம் ஒர்க் கொஞ்சம் பாக்கி இருக்கிறது. முடிச்சிடலாமா?
தணியாத தாகம் சாங்ஸ் ஏனோ என் நெஞ்சில் அப்போதிலிருந்தே ஒட்டவில்லை. டெல்லியாரை நாயகராக பார்க்கவும் கஷ்டம்.
சிம்ரன் நினைவில் சிதைந்து போய் இருக்குமெங்கள் சின்னா!இப்போதய சிம்ரனின் பக்கெட் ஒன்று போட்டு கனவை கலைக்கவா? 'சிம்'ரன் என்ன மைக்ரோவா இல்லை நானோவா?
ஆனா கவிதை கொட்டுதே!
//ஆக்சுவலா அவர் நடிக்க ஆரம்பித்த படங்கள் பற்றி எழுத வேண்டும்..இடையில் வரும் இந்தப் படப் பாடலை எடுத்ததற்கு என்னகாரணம்.. இடை தான்..!//
வழிமொழிகிறேன்.![]()
'டைம்' பார்த்து 'தவிக்கிறேன்' சாங் தந்ததற்கு ஒரு ஓஹோ உங்களுக்கு. ராஜாவின் நல்ல பாடல் இது. அப்போது சூப்பர் ஆனால் ராஜா ஒதுக்கப்படும் சமயம். மினுமினு நீல உடையை பிரபுதேவா அணிந்து இப்போது பார்க்கையில் ச்சிப்பு வருது.
மயக்கத்தைத் தரும் 'மயக்கத்தை தந்தவன் யாரடி?' பாடலை குறுகிய இடைவெளியில் கொடுத்தாலும் அனுபவித்து வழக்கம் போல ரசிக்க முடிகிறது. நிச்சயம் ஆதிராம் சாரும் ரசித்திருப்பார். தேங்க்ஸ் சின்னா!
ராட்சஸியின் 'ஆடுவது உடலுக்கு விளையாட்டு' பாடலை ஒரே பாடல் வரி விளக்கத்தில் தந்த உம்மை....உம்மை.... சின்னா இதே பாணியில் ஜோதிலஷ்மி 'தேடிவந்த மாப்பிள்ளை'யில் ஈஸ்வரியின் குரலில் ஒரு பாடல் பாடுவார். அதுவும் தூள். என்ன சொல்லுங்கள் பார்க்கலாம்? ரெண்டும் ஒரே மாதிரி இருப்பதால் கொஞ்சம் குழப்பும்.
300 பக்க வாழ்த்துக்கும், ஜாலியான கவிதை நடை பதிவுகளுக்கும், ஜம் பாடல்களுக்கும் 'சபாஷ்' கண்ணா.
Bookmarks