http://i68.tinypic.com/bk2ti.jpg
http://i64.tinypic.com/21lq0zt.jpg
http://i64.tinypic.com/20sfwxk.jpg
http://i66.tinypic.com/zveps6.jpg
Printable View
MAKKAL THILAGAM WITH THE MASS - 1980
http://i65.tinypic.com/5xplz7.jpg
நமது மக்கள் திலகம், குண்டடி பட்டு குரல் வளம் இழந்தவர். இந்த பெண்மணி பிரேமலதாவின் கணவரோ குடியினால், நல்ல குரலிருந்தும் போதையினால் உளறிக் கொட்டுகிறார். யாருடன் யாரை ஒப்பீடு செய்வது ? நான் வணங்கும் எங்கள் குல தெய்வம் - மலை எம்.ஜி. ஆருடன் மடுவை (மதுவை) ஒப்பிடலாமா ?
என் தங்கத்தலைவன், 1967க்கு பின், கெட்ட தனது குரல் வளத்தை, தான் நடித்து வெளிவந்த "காவல் காரன்" காவியத்தை மக்கள் ஏற்றுக் கொண்டால் திரையுலகில் தொடர்ந்து நீடிப்பதாகவும், இல்லை என்றால் , தமிழ் திரை உலகிலிருந்து விலகி விடுவதாகவும் துணிச்சலாக அறிவித்தார். மக்கள், அவரது முகம் திரையில் தோன்றினால் போதும், குரல் எப்படியிருந்தாலும் அது பற்றிய கவலையில்லை என்று கருதி "காவல் காரன்" காவியத்தை மாபெரும் வெற்றிக்காவியமாக்கிய வரலாறு தெரியாமல், பிதற்றியிருக்கும் பிரேமலதா, மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கோடிக்கணக்கான மக்கள் திலகத்தின் பக்தர்கள் கோருகிறார்கள். என்ன பதில் சொல்லப் போகிறாய் பிரேமலதாவே?
உனக்கு இன்னொரு செய்தியையும் சொல்கிறோம் :
எங்கள் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். அவர்கள், தனது குரல் வளம் குன்றிய, 1967க்கு பிறகு நடித்த காவியங்கள் பல வெற்றிக்காவியங்களாகவும், வெள்ளி விழாக் காவியங்களாகவும் திகழ்ந்தன. அது மட்டுமல்ல, பாதிக்கப்பட்ட அந்த குரலில்தான் தமிழகம் முழுவதும் தேர்தல் சுற்றுப்பயணங்களை மேற்கொண்டு, மகத்தான வெற்றி கண்டு, மூன்று முறை தமிழக முதல்வராக தொடர்ந்து பதவி வகித்து, மக்களின் முழு நம்பிக்கையை பெற்றவராகவும், அசைக்க முடியாத சக்தியாகவும், இன்றும் தனக்கென்று பெரும்பான்மையான வாக்கு வங்கியை தக்க வைத்து கொண்டு வருவதும் உலகமறிந்த உண்மை. !
பிரமலதாவே ! அவையடக்கத்துடன், அரசியல் நாகரீகத்துடன், பண்புடன் பேச கற்றுக்கொள்.
உயர உயரப் பறந்தாலும், ஊர்க்குருவி பருந்தாகி விடாது ! எல்லோரும் எம். ஜி. ஆர். ஆகி விட முடியாது.
ஒரு சூரியன், ஒரு சந்திரன் போல் இந்த பூவுலகில் ஒரே ஒரு எம். ஜி. ஆர். தான் என்பதை புரிந்து கொள் பிரேமலதாவே !
From Facebook Posting.
மது + பனிக்கட்டி (-) குரல்
நன்றாக சொன்னீர்கள் பேராசிரியர் சார். மதுவுடன் பனிக்கட்டிகளை அதிகம் போட்டு போட்டு, அதனால் அவர் தொண்டை கட்டி, குரல் போச்சு. அவர் குரலின் தடுமாற்றமும், நடையின் தள்ளாட்டமும் பார்த்து உலகமே சிரிக்கிறது. அந்த கேடுகெட்ட வாழ்க்கைக்கு ஒரு துணை. அந்த துணைக்கு நாம் பதில் சொல்ல வேண்டி வருதே என்றுதான் சார் கஷ்டமா இருக்கு. பைத்தியங்கள் நம்மைப் பார்த்து கத்தினாலும், மனசு சங்கடப்படத்தானே செய்யும். ஒப்பாரும் மிக்காரும் இல்லா நம் ஆண்டவனை ஒப்பிட்ட அந்த பெண்மணியால்தான் அவரது கட்சியே அழியப்போகிறது. வரும் தேர்தலில் அது நிரூபணமாகும்.
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
பேராசிரியர் அவர்களே,
வரவர இந்த பிரேமலதாவின் ஆட்டம் தாங்க முடியவில்லை. மேடையேறினாலே ஒரே கத்தலும் ஆணவமும்தான்.
நேற்றைய கூட்டம் ஒன்றில் இவரை "வாழும் தெரஸா" என்று அழைத்ததும் பற்றிக்கொண்டு வந்தது பாருங்கள். அன்னை தெரசாவுக்கு இதைவிட பெரிய அவமரியாதை யாரும் செய்ய முடியாது.
இந்த லட்சணத்தில் இவர் தம்பி நேற்றைய கூட்டத்தில் எல்லோருக்கும் இலாகா ஒதுக்குகிறார். எல்லாம் அழிந்து நாசமாக போகத்தான்.
அருமை நண்பர்கள் அனைவருக்கும்
வணக்கம். ...
நமது தானை தலைவர் பெயரால்
எதாவது செய்ய வேண்டும்
எண்ணத்தில் ...
தலைவர் புகழ் என்றும் இப்புவியில்
நிலைத்து நிற்க வேண்டும் எனற வடிவத்தில். .
பலருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும்
என்ற நோக்கத்தில்......
நல்ல தமிழில் ..
நாம் மறந்து போன. .
கேட்க விருப்பமான. ..
அழகு தமிழ் இசையை. ..
ஆங்கில கலப்பு இல்லாத
தமிழில்...
இசையாய்.. தமிழாய் ..
எங்கும் நாதவடிவமாய். ..
நம் செவியில் நல்ல இசையை
கேட்க ...
தலைவரின் ஆசியோடு
நம் அனைவரின்
பங்களிப்புடன்....
பொன்மனம் என்ற பெயரில். ..
இரத்தத்தின் இரத்தங்கள்
பங்கேற்கும்...
எப். எம் . வானொலி
தொடங்க ஆரம்ப முயற்சிகளை
தொடங்கியுள்ளோம்....
நல்ல உள்ளங்கள் எங்களை
வழி நடத்துங்கள். ..
தமிழிசையை ...
தங்க தலைவர் பெயரால். .
காற்றில் கலந்து வர..
பொன்மனம் ...
பொன்மனத்திற்கு
ஆதரவு தாருங்கள். .
வழி நடத்துங்கள். ..
நன்றி. ..
Courteysy facebook thalaivar fan sivakumar
COMMENTS ABOUT MRS.VIJAYAKANTH
என்னதான் இவர் தன் கணவனை எம் ஜி ஆரை ஒப்பிட்டாலும் அவர் கால் தூசுக்கு வரமாட்டார் மேலும் குடித்து உலறுபவனுக்கும் குண்டடிபட்டு
பேசியவருக்கும் வித்தியாசம் தெரியாத அம்மாவாக இருக்கிறது
ஐயோ பாவம் என்னதான் கோவேரி கழுதை தூரத்தில் இருந்து பார்க்க குதிரைபோல இருந்தாலும் குதிரை குதிரைதான் கழுதை கழுதைதான்
about 6 hours ago (1) · (0)
reply (0)
Raja Up Voted
Ravi Sankar
எம் ஜி ஆர் சாவு வீட்ல நன்றி சொல்லலையே ஆனா உன்ற புருஷன் சொல்லுறாரே அத என்ன சொல்லுவ
2975
about 6 hours ago (1) · (0)
reply (1)
raiza Up Voted
V
Vivek
சபாஷ் . என்ன ஒரு திறமை என்று பாராட்டி பரிசு கொடுத்தேன்
about 4 hours ago (1) · (0)
reply (0)
kandan Up Voted
M
Mohanraj,Pec
தெருவோரம் குடித்துவிட்டு உளறுபவர்கள் எல்லோரையும் எம்ஜீஆருக்கு ஒப்பிடலாமா?
MGR அவர்கள் குடிக்க மாட்டார் இவர் வீட்டிலேயே ஒரு டாஸ்மாக் இருக்கு...இதில் இவரு MGR ஆ??
முதல்ல இருக்கிற மிச்சம் மீதி இருக்கிற கட்சியை முதலுதவி கொடுத்து காப்பாத்துங்க. கேப்டன் தீவிர விசுவாசி வடசென்னை மாவட்ட செயலாளர் 1000 தொண்டர்களுடன் தி .மு.க வில் சேர்ந்தார் .
தூ...தூ, தூரமா போ நாத்தம் தாங்க முடியல!
about 6 hours ago (1) · (0)
reply (0)
karthi Up Voted
Aya Shan
தெருவோரம் குடித்துவிட்டு உளறுபவர்கள் எல்லோரையும் எம்ஜீஆருக்கு ஒப்பிடலாமா?
720
about an hour ago (1) · (0)
reply (0)
karthi Up Voted
Renugadevi Dinakaran
MGR அவர்கள் குடிக்க மாட்டார் இவர் வீட்டிலேயே ஒரு டாஸ்மாக் இருக்கு...இதில் இவரு MGR ஆ??
முதல்ல இருக்கிற மிச்சம் மீதி இருக்கிற கட்சியை முதலுதவி கொடுத்து காப்பாத்துங்க. கேப்டன் தீவிர விசுவாசி வடசென்னை மாவட்ட செயலாளர் 1000 தொண்டர்களுடன் தி .மு.க வில் சேர்ந்தார் .
about 2 hours ago (1) · (0)
reply (0)
LOGANATHAN Up Voted
LM
LOGANATHAN M
தூ...தூ, தூரமா போ நாத்தம் தாங்க முடியல!
3370
about 2 hours ago (0) · (0)
reply (0)
k
kumaresan
குடிகார விஜயகாந்த . கோபுர கலசம் MGR
about 2 hours ago (2) · (0)
reply (0)
LOGANATHAN · Renugadevi Up Voted
k
kumaresan
MGR என்கிற சந்தனத்திற்கும் விஜயகாந்த் என்கிற சாணிக்கும் வித்தியாசம் இல்லையா
about 2 hours ago (3) · (1)
reply (0)
LOGANATHAN · Renugadevi · ravi Up Voted
ashok Down Voted
LM
LOGANATHAN M
இவன் "சரக்கு' அடிச்சிட்டு ஒளர்றத இந்த 'கேப்மாரி' என்னா மாதிரி "மாத்தி' அடிக்குது பார்!
3370
about 2 hours ago (3) · (0)
reply (0)
Renugadevi · CHANDRU · ravi Up Voted
LM
LOGANATHAN M
இந்த கருப்பு செனப்பன்னிக்கும் MGR ருக்கும் என்ன சம்பந்தம்!
எம். ஜி. ஆர் குண்டடி பட்ட நிலையிலும் நன்கு புரிகிற மாதிரி நல்ல ஆக்கபூர்வமான விஷயங்களை பேசினார் . ஆனால் விஜயகாந்த் பேசுவது அவருக்கே புரிவதில்லை என்பதே நிஜம்
about 3 hours ago (4) · (0)
reply (0)
LOGANATHAN · CHANDRU · kannan · kumaresan Up Voted
s
subaiktha
எம்சிஆர் அவர்களுடன் யாரை ஒப்பிடுகிறாய்
185
about 3 hours ago (6) · (0)
reply (0)
LOGANATHAN · kadparai · CHANDRU · kannan · kumaresan · ravi Up Voted
k
karthi
MGR பத்தி பேச எவனுக்கும் அருகிதை கிடையாது அவர் ஒரு சகாப்தம்
அண்ணா தி மு க சொல்லணும் அவசியம் இல்ல நாங்க அவர்க்கு 3அம் தலைமுறை ரசிகர்கள் , அரசியல பேச விரும்பல நாங்க
குண்டடிபட்டு பேசுவதற்கும் சாராயம் குடிச்சுட்டு பேசுவதற்கும் வித்தியாசம் தெரியாம பேசுது இந்த அம்மணிக்கு
போ டி செருப்படி வாங்க போறவளே ..... யார யார் கூட ஒபிடுற .... நி மக்களிடம் தர்ம அடி வாங்குவது உறுதி ......
about 5 hours ago (6) · (0)
reply (0)
Muthulakshmi · vasakan · vigneshwaran · Partha · CHANDRU · kannan Up Voted
Ravi Sankar
எம் ஜி ஆர் பற்றி பேச உனக்கு எல்லாம் தகுதியே கிடையாது இருக்கற கொஞ்ச ஓட்டையும் கெடுத்துக்காத நாதாரி பீப்
எம்ஜிஆர் என்னை அழைத்தார் வைகோ பேச்சு.இப்படியெல்லாம் உளறிக் கொண்டு திரியாதீங்க.எம்ஜிஆர் தமிழக மக்களின் தெய்வம். எம்ஜிஆர் பேச்சையே மதிக்காதவனுக்கு நாம எதுக்கு ஓட்டு போடணும் என்று மக்கள் நினைக்க தொடங்கினால் உங்களுக்கு கிடைக்க வேண்டிய டெபாசிட் கிடைக்காமல் போய் விடும்
courtesy net
எம்.ஜி.ஆர் ஆட்சியில் அவரது அண்ணன் சக்ரபாணிக்கு ஏதாவது பதவி கொடுக்கப்பட்டதா?
எம்.ஜி.ஆர் தனிக்கட்சி ஆரம்பிக்கும்போது எப்போதாவது தேவைப்பட்டால் தனது அண்ணன் சக்ரபாணியிடம் ஆலோசனை கேட்பதை வழக்கமாக வைத்திருந்தார். ஆட்சி அமைத்த பிறகு அதிகாரிகள் மட்டத்தில் தனது ஆலோசனைகளை முடித்துக்கொண்டார். தனது உறவினர்கள் ஆட்சியில் தலையிடக் கூடாது என்று எம்.ஜி.ஆர் நினைத்தார். 'எனது பெயரை 'எனது உறவினர்’ என்று சொல்லிக்கொண்டு யாராவது பயன்படுத்தினால் அதற்கு முக்கியத்துவம் தரவேண்டாம்’ என்று நாளிதழ்களில் எம்.ஜி.ஆர் விளம்பரமே கொடுத்தார். தலைமைச் செயலகத்தில் அதனை ஒட்டவும் சொன்னார். எம்.ஜி.ஆர் உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் இருந்தபோது நடந்த 1984 சட்டமன்றத் தேர்தலில் சில இடங்களில் அ.தி.மு.கவுக்கு ஆதரவாக சக்ரபாணி பிரசாரம் செய்தார். அ.தி.மு.க வீரப்பன் அணியாகவும் ஜெயலலிதா அணியாகவும் பிரிந்து மோதிக்கொண்டு இருந்த நேரம் அது. 'எனது தம்பி மிக நல்ல நோக்கத்துக்காக இந்தக் கட்சியை ஆரம்பித்தார். அந்த நோக்கத்தை யாரும் சிதைத்துவிடக் கூடாது’ என்று அறிவுரை சொல்லி வந்தார்.
- கழுகார் பதில்கள் .
எம்.ஜி.ஆர். எதிலும் எதிர்நீச்சல் போட்டே வளர்ந்தவர். நெருக்கடியான கட்டங்கள் ஏற்படும்போது தனக்கு நம்பிக்கையானவர்களின் துணை கொண்டு அதை எளிதாகக் கடந்து விடுவார். அதுபோன்ற சமயங்களில் அவருக்கு தோள்கொடுக்க ராஜவிசுவாசிகள் இருப்பார்கள் என்று வசனகர்த்தா ஆரூர்தாஸ் ஒருமுறை குறிப்பிட்டார். அப்படிப்பட்ட ராஜவிசுவாசிகளில் முக்கியமானவர் ஆர்.எம். வீரப்பன்.
1953-ம் ஆண்டு எம்.ஜி.ஆர். நாடக மன்றத்தின் நிர்வாகியாக ஆர்.எம்.வீரப்பன் பொறுப்பேற்றுக் கொண்டார். விரைவிலேயே அவரது செயல்பாடுகள் எம்.ஜி.ஆருக்கு பிடித்துப் போனது. எம்.ஜி.ஆர். நாடக மன்றத்தின் முதல் நாடகம் ‘இடிந்த கோயில்’. திமுக சார்பில் நடந்த கல்லக்குடி போராட்ட நிதிக்காக, 1953-ம் ஆண்டு அக்டோபர் முதல் வாரம் இடிந்த கோயில் நாடகம் திருச்சியில் அரங்கேறி மக்களின் வரவேற்பை பெற்றது.
அப்போதைய சூழலில் திமுக மீது நாத்திகக் கட்சி என்ற முத்திரை பலமாக விழுந்திருந்தது. அந்த நேரத்தில் ‘இடிந்த கோயில்’ என்ற பெயரில் நாடகம் போட்டால் கடவுள் மறுப்பு நாடகம் என்று மக்கள் கருத வாய்ப்பு ஏற்படும் என்றும் நாடகத்தின் கருத்துக்கள் இன்னும் அதிக மக்களை அடைய நாடகத்தின் பெயரை ‘இன்பக் கனவு’ என மாற்றலாம் என்றும் எம்.ஜி.ஆருக்கு யோசனை சொன்னார் வீரப்பன். அது நியாயமாக இருக்கவே, ஏற்றுக் கொண்டார் எம்.ஜி.ஆர்.
அந்தக் காலத்திலேயே மேடை நாடகத்தில் புதிய உத்திகளை எம்.ஜி.ஆர். கையாண்டார். நாடகத்தில் கனவுக் காட்சி வரும். சாட்டின் படுதா ஒன்றின் மீது சிவப்பு, பச்சை வண்ணங்களில் ஒளிவெள்ளம் பாய்ச்சி அந்தப் படுதாவை லேசாக ஆட்டும்போது அலை அலையாக வண்ணக் கலவையில் தோன்றும் கனவுக் காட்சி கைதட்டல் பெறும்.
அந்தச் சமயத்தில் ‘மலைக்கள்ளன்’ படத்தில் நடிக்க எம்.ஜி.ஆர். ஒப்பந்தம் ஆனார். படத்துக்கு திரைக்கதை வசனம் எழுத கருணாநிதியை ஏற்பாடு செய்தார். படம் பிரம்மாண்ட வெற்றி பெற்றது. எம்.ஜி.ஆர். நாடக மன்ற நிர்வாகியாக இருந்த வீரப்பன், அவரது படங்கள் தொடர்பான வேலைகளையும் கவனித்துக் கொண்டார்.
குலேபகாவலி, மதுரைவீரன் போன்ற வெற்றிப்படங்கள் மூலம் எம்.ஜி.ஆர். திரையுலகில் உச்சத்தை தொட்டுக் கொண்டிருந்த நேரத்தில் ‘நாடோடி மன்னன்’ படம் தயாரிக்க முடிவு செய்தார். எம்.ஜி.ஆர். பிக்சர்ஸ் நிறுவனத்தை தொடங்கினார். எம்.ஜி.ஆரும் அவரது அண்ணன் சக்ரபாணியும் பங்குதாரர்கள். பின்னர், சிறிது காலம் கழித்து அந்நிறுவனம் ‘எம்.ஜி.ஆர். பிக்சர்ஸ் பிரைவேட் லிமிடெட்’ நிறுவனமாக மாற்றப்பட்டது. அதில் ஆர்.எம்.வீரப்பனையும் பங்குதாரராக சேர்த்ததுடன் அவரை நிர்வாக இயக்குநராகவும் நியமித்தார் எம்.ஜி.ஆர்.!
‘நாடோடி மன்னன்’ படம் வளர்ந்தது. படத்துக்கான தயாரிப்பு செலவுகள் எகிறிக் கொண்டே இருந்தன. செலவு களை சமாளிக்க ஏவி.மெய்யப்ப செட்டியாரிடம் கடன் கேட்க முடிவு செய் தார் வீரப்பன். அப்போது, ஏவி.எம். நிறுவனத்தின் ஆடிட்டர் சீனிவாசன், ‘‘கடன் தருவோம். ஆனால், எம்.ஜி.ஆர். கையெழுத்து போட வேண்டும்’’ என்று கூறிவிட்டார். கடன் பத்திரத்தில் எம்.ஜி.ஆர். கையெழுத்து போடக் கூடாது, ஏதும் சிக்கல்கள் வந்தால் அவர் மாட்டிக் கொள்ளக் கூடாது என்பதில் உறுதியாக இருந்தார் வீரப்பன்.
கடன் பெறுவதற்காக, படத்தின் இலங்கை ஏரியா விநியோக ஒப்பந்தத்தை ஈடாக காண்பித்திருந்தனர். அதில் எம்.ஜி.ஆர். கையெழுத்திட்டிருந்தார். ‘‘விநியோக உரிமை ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருக்கும்போது கடன் பத்திரத்தில் எம்.ஜி.ஆர். கையெழுத்து போடவேண்டும்’’ என்று ஆடிட்டரும் பிடிவாதமாக இருந்தார். நாட்கள் ஓடின. பணம் இல்லையென்றால் படப்பிடிப்பு நடத்த ஃபிலிம் வாங்க முடியாத நிலை.
திடீரென யோசனை தோன்ற மீண்டும் சீனிவாசனிடம் சென்றார் வீரப்பன். ‘‘இலங்கை விநியோக ஒப்பந்தம் எம்.ஜி.ஆர். பிக்சர்ஸ் பெயரில் போடப்பட்டது. ஆனால், அந்நிறுவனம் பிறகு ‘எம்.ஜி.ஆர்.பிக்சர்ஸ் பிரைவேட் லிமிடெட்’ என்று ஆனபிறகு, அதன் நிர்வாக இயக்குநர் நான்தான். என் பெயரில்தான் கடிதத் தொடர்புகள் நடக்கிறது. எனவே கடன் பத்திரத்தில் நான் கையெழுத்திட்டால் போதும்.’’ என்று கூறி ஆதாரங்களை காட்டினார் வீரப்பன்.
சட்டபூர்வமாக அவரது வாதத்தை மறுக்க முடியாத நிலையில், கடன் கொடுக்க முடிவு செய்யப்பட்டது. கடன் பத்திரத்தில் எம்.ஜி.ஆரை கையெழுத்து போடவிடாமல் கடன் பெற்றுவிட்டார் வீரப்பன்.
‘எம்.ஜி.ஆர். படங்கள் நகரங்களில் ஓடாது. கிராமங்களில்தான் ஓடும்’ என்ற தவறான கருத்து இருந்தது. இதை மாற்ற வேண்டுமானால் எம்.ஜி.ஆர். பிக்சர்ஸ் நிறுவனம் திரைப்பட விநியோகத்திலும் ஈடுபட வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது. அதன்படி, 1961-ல் எம்.ஜி.ஆர் நடித்த ‘திருடாதே’ படத்தின் சென்னை நகர விநியோக உரிமையை அந்நிறுவனம் பெற்றது. அப்போதெல்லாம், சென்னையில் எம்.ஜி.ஆர். படங்களுக்கு முதல்தர திரையரங்குகள் கிடைக்காது.
எம்.ஜி.ஆர். பிக்சர்ஸ் நிர்வாகியாக இருந்த வீரப்பன் துணிந்து முடிவு எடுத்தார். அண்ணா சாலையில் பழைய படங்களை வெளியிட்டு வந்த பிளாசா, மற்றும் பாரத், மகாலட்சுமி ஆகிய பழைய திரையரங்குகளில் ‘திருடாதே’ படம் திரையிடப்பட்டது. புதிய விளம்பர உத்திகளையும் வீரப்பன் வகுத்தார். மூன்று தியேட்டர்களிலும் படம் 100 நாட்கள் ஓடி அமோக வெற்றி பெற்றது. அதன் பிறகு எம்.ஜி.ஆர். படங்களை திரையிடுவதில் சென்னையின் முக்கிய தியேட்டர் அதிபர்கள் ஆர்வம் காட்டினர். ‘திருடாதே’ படம் பட்டி தொட்டிகளிலும் ஓடி வசூலை வாரிக்குவித்தது. ராஜா ராணிக் கதைகளுக்குத்தான் எம்.ஜி.ஆர். பொருத்தமானவர் என்ற கருத்தையும் ‘திருடாதே’ தகர்த்தது.
எம்.ஜி.ஆரின் தாயார் பெயரில் சத்யா மூவிஸ் பட நிறுவத்தை தொடங்கிய ஆர்.எம்.வீரப்பன், எம்.ஜி.ஆரை வைத்து எடுத்த முதல் வெற்றிப்படம் ‘தெய்வத்தாய்.’ அதிலிருந்து ‘இதயக்கனி’ வரை சத்யா மூவீஸின் 6 படங்களில் எம்.ஜி.ஆர். நடித்தார்.
எம்.ஜி.ஆரிடம் மாதச் சம்பளம் வாங்கிக் கொண்டிருந்த வீரப்பன், அவருக்கே சம்பளம் கொடுப்பவராக மாறினார். சமயங்களில் வீரப்பனை எம்.ஜி.ஆர். ‘‘என்ன முதலாளி?’’ என்று ஜாலியாக அழைப்பது வழக்கம்.
முதல்வராகி தன் அமைச்சரவையில் சேர்த்துக் கொண்ட பிறகும், கடைசி வரை தனது ‘கணக்குப் பிள்ளை’யான ஆர்.எம். வீரப்பனுக்கு மாத சம்பளமாக 500 ரூபாய் கொடுப்பதை எம்.ஜி.ஆர். நிறுத்தவேயில்லை.
- தொடரும்...
‘இதயக்கனி’ படத்துக்கு மற்ற எம்.ஜி.ஆர். படங்களுக்கு இல்லாத சிறப்பு உண்டு. ரஷ்யாவில் நடைபெற்ற தாஷ்கண்ட் திரைப்பட விழாவில் கலந்து கொள்ள ‘இதயக்கனி’ தேர்வு செய்யப்பட்டது. வெளிநாட்டு திரைப்பட விழாவில் கலந்து கொண்ட எம்.ஜி.ஆர்.படம் என்ற பெருமையைப் பெற்றது ‘இதயக்கனி’.
Courtesy the hindu tamil
திரையிலும் அரசியலிலும் எவராலும் வெல்ல முடியாதவராக திகழ்ந்தவர் எம் ஜி ஆர்
நீதி எப்பக்கமோ அதுவே எம் ஜி ஆர் பாதை
தீயசக்திகளை அழிக்கும் பயங்கர சக்தி கொண்டது எம் ஜி ஆர் சக்தி
எம் ஜி ஆர் நாமம் சக்தி தரும் நாமம்
எம் ஜி ஆர் நாமம் உற்சாகம் தரும் நாமம்
எம் ஜி ஆர் நாமம் நேர்மை தரும் நாமம்
எம் ஜி ஆர் நாமம் ஒழுக்கம் தரும் நாமம்
எம் ஜி ஆர் நாமம் வீரம் தரும் நாமம்
எம் ஜி ஆர் நாமம் வெற்றி தரும் நாமம்
courtesy net
தமிழ்நாட்டில் காமராஜர் ஆட்சி மட்டுமே பொற்கால ஆட்சியாக இருந்தது. அதன் பிறகு ஆட்சிக்கு வந்த அ.தி.மு.க.–தி.மு.க., தமிழகத்தை குட்டிச்சுவராக ஆக்கி விட்டன : பிரேமலதா பேச்சு !
## காமராஜருக்குப் பின் ஆட்சிக்கு வந்த
அண்ணாவும் எம்ஜியாரும் சேர்த்துத்தான்
நாட்டைக் குட்டிச்சுவர் ஆக்கி விட்டார்கள் ,
அப்படித்தானே , மேடம் ? இந்தலட்சணத்தில்
உன்புருசனுக்கு ' கருப்பு எம்.ஜி.ஆர் '
பட்டம் வேற ? தூ .........
Mg.ராமசந்திரா பணம் எதற்கு உன் முகம் காட்டு லட்சம் ஓட்டுக்கள் விழும் என்றார் அறிஞர் அண்ணா
# அப்படிபட்ட எங்கள் பொன்மன செம்மலை எந்த தகுதியும் இல்லாத உன் புருசனோடு ஒப்பிடுகிறாய்
#தகுதியற்றவாளே
#தரகுறையானளே
AFTER GUN SHOT (1967 THALAIVAR SPEECH VERY CLEAR EXAMPLE ( ADIMAI PENN MOVIE SCENES THALAIVAR MEET HIS
MOTHER)
https://www.youtube.com/watch?v=5XU6P2sdLuI
ஒரு காலத்தில் பள்ளியில் வாழ்வியல், சூழ்நிலையியல் என்றொரு பாடம் இருந்தது. நல்லொழுக்கம், நன்னடத்தை கற்றுக் கொடுக்கப்பட்டு வந்தது. ஆனால் இன்றைய பரபரப்பான காலத்தில் மதிப்பெண் முக்கியமில்லாத இந்த படிப்புகள் பள்ளியில் இருந்தே எடுக்கப்பட்டு விட்டன.
இன்றைய தலைமுறைக்கு வீட்டில் சொல்லிக் கொடுத்து வளர்க்க வேண்டிய தாத்தா, பாட்டிகளோ முதியோர் இல்லத்திலும் பரம்பரை வீட்டில் தனிமையிலும் இருக்கின்றனர். பகிர்ந்து கொள்ள சகோதரர்கள் கிடையாது. பிறகு சுயநலம் இல்லாமல் வேறென்ன இருக்கும்.
இன்று முரட்டுத்தனம் தான் ஹீரோவுக்கு உரிய இலக்கணமாக மாறி விட்டது. ஒரே அடியில் வீழ்த்துவதே ஹீரோயிசம் என்று குழந்தைகளுக்கு ஊட்டப்பட்டு விட்டது. நல்லவனாக மட்டுமே வாழக் கற்றுக் கொடுத்த காந்தியிசம் நகைப்புக்குரிய ஒன்றாகி விட்டது.
எம்ஜிஆரின் பாத்திரப்படைப்பு பெரும்பாலும் நல்லவர்களாகவே காட்டப்பட்டு வந்தன. சிறுவர்களும், வாலிபர்களும் அதைப் போன்று வளரவே பெற்றோர்களால் ஊக்குவிக்கப்பட்டனர். ஆனால் இன்று மசாலா சினிமா என்ற பெயரில் முரட்டுத்தனம் சிறுவர்களின் மனதில் விதைக்கப்பட்டு கொண்டு இருக்கின்றன.
courtesy - net
உயிர்தெழிந்து 52 வயதில் சாதனை படைத்த MGR.
1967ஆம் ஆண்டு ஜனவரி 12 அன்று மாலை 5 மணிக்கு நடந்த துப்பாக்கி சூடு. ராமாவரம் தோட்டத்தில் உள்ள எம்ஜிஆரின் வீட்டுக்கு வந்த எம்.ஆர்.ராதா, எதிர்பாராத நேரத்தில் தன்னை மறந்து துப்பாக்கியை எடுத்தார். எம்ஜிஆரை சுட்டார். சீறிய தோட்டா, எம்ஜிஆரின் கழுத்தில் பாய்ந்தது.
மொத்த திரையுலகமும் இந்த சம்பவத்தை அறிந்ததும் அதிர்ந்தது. அனைவரது மனதிலும் எழுந்த கேள்வி-முடியுமா?அப்படியே நடித்தாலும் அவரால் சொந்தக் குரலில் பேச முடியுமா?
இதற்கான விடை ஒருவரிடமும் இல்லை. சொல்லப்போனால் யாருக்கும் நம்பிக்கையும் இல்லை. எம்ஜிஆர் எழுந்திருக்க மாட்டார் என்றே நினைத்தார்கள். எண்ணியதை வாய்விட்டு சொல்ல அஞ்சினார்கள். ஆனால் கற்பனைக்கு எட்டாதவர் எம்ஜிஆர் என்பதை ஒருவரும் உணரவில்லை.
எல்;லாம் நல்லபடியாக சென்ற தருணத்தில் இந்த துப்பாக்கி சூடு. எம்ஜிஆர் பிழைத்து விட்டார். ஆனால்- கழுத்தில் பாய்ந்த குண்டால் அவரது குரல் வளம் பாதிக்கப்பட்டது.
எந்த திiயுலகில் தனக்கென ஒரு ராஜ்ஜியத்தை அமைக்க அரும்பாடு பட்டாரோ- அதே சினிமாவில் அவரது எதிர்காலம் கேள்விக்குறியானது.
50 வயதில்-மீண்டும் ஆரம்ப நிலைக்கு வந்து நின்றார். மனிதர் பின் வாங்கவேயில்லை. பழைய நிலையை அல்ல–அதற்கும் மேம்பட்ட இடத்தை பிடிக்க தனக்குள் சபதம் செய்தார். அதற்கான வேலைகளில் இறங்கினார்.
பாதிக்கப்பட்ட குரல் மட்டும் இடைஞ்சலாக இருந்தது. ரசிகர்கள் ஏற்பார்களா?அறிந்த கொள்ள உடல்நலம் தேறியதும் காவல்காரன் படத்தில் நடித்தார்.
சத்யா மூவிஸ் தயாரித்த இந்தப் படத்தின் ஹ_ட்டிங். முன்பே முடிந்து விட்டது. பேட்ச் ஒர்க் மட்டுமே பாக்கி. நடித்து முடித்தார்.
ஒரேயொரு இடத்தில் மட்டும்- புதிதாக டப்பிங் பேசினார். ரிஸ்க் வேண்டாம். டப்பிங் கலைஞர்களை பயன்படுத்திக் கொள்ளலாம் என நண்பர்கள் கருத்து தெரிவித்தார்கள்.மறுத்து விட்டார். ரசிகர்களை ஏமாற்ற விரும்பவில்லை. குண்டடிபட்ட குரலுடன் தன்னை அவர்கள் ஏற்றால்,தொடர்ந்து நடிக்கிறேன். இல்லாவிட்டால் திரையுலகிலிருந்த விடைபெறுகிறேன் என்று தீர்மானமாக சொன்னார்.
1967 செப்டம்பர் 7 அன்று வெளியான காவல்காரன் மகத்தான வெற்றியை அடைந்தது.பிசிறு தட்டிய எம்ஜிஆரின் குரலை- முகம் சுளிக்காமல் ரசிகர்கள் ஏற்றார்கள். . அடுத்ததாக ரிலீசான தேவரின் விவசாயியும் வசூலில் பட்டையை கிளப்பியது.
மறுவருடம் 1968ல் எட்டு படங்களில் நடித்தார்.ரகசிய போலீஸ் 115. தேர்த் திருவிழா, குடியிருந்த கோயில், கண்ணன்என் காதலன், புதிய பூமி, கணவன், ஒளிவிளக்கு , காதல் வாகனம்.
எல்லாமே வெற்றிப்படங்கள் தான் என்றாலும் குடியிருந்தகோயில் ப்ளாக் பஸ்டர் இவை அனைத்திலும் ஜெயலலிதாதான் அவருக்கு ஜோடி. அத்துடன் ஒளி விளக்கு அவருக்கு நூறாவது படமும் கூட.
1936ம் வருடம் சதி லீலாவதி படத்தில் அறிமுகமானார். இப்படத்துக்கு கதை எழுதியவர் எஸ்.எஸ்.வாசன். அதே வாசனின் ஜெமினி பிக்சர்ஸ் ஒளிவிளக்கு அவரது நூறாவது படத்தை தயாரித்தது! எம்ஜிஆர் நெகிழ்ந்து விட்டார்.
இக்கட்டான சமயங்களில் எல்லாம் எந்த பிரதிபலனும் பாராமல் இப்படி ரசிகர்கள் தோள் கொடுக்கிறார்களே. கை கொடுத்து தன்னை உயர்த்துகிறார்களே.. அவர்களுக்கு என்ன கைமாறு செய்வது? ஆறஅமர யோசித்தார்.அதுவரை அவர்கள் பார்க்காத ரசிக்காத பொழுது போக்கு படம் ஒன்றில் நடிப்பது தான் ஒரே வழி என்று முடிவெடுத்தார்.
களத்தில் இறங்கினார்.
வரலாறு தான் எவ்வளவு சுவாரஸ்யமானது. நாடோடி மன்னன் படத்தில் பானுமதி திடீரென்று காணாமல் போவார். சரோஜா தேவி சட்டென்று தோன்றுவார்.அதே சம்பவங்கள் இம்மி பிசகாமல் அரச கட்டளையில் அரங்கேறின.
இதன் பிறகு தான் எம்ஜிஆரின் திரையுலக வாழ்வில் ஜெயலலிதா நீங்காத இடத்தை பிடித்தார்.
குண்டு பாய்ந்து உயிருக்கு போராடிய தருணத்திலும்- அதிலிருந்து மீண்டு நடிக்க வந்த நேரத்திலும்- தனக்கு உறுதுணையாக நின்ற ஜெயலிதாவை இறுதி வரை அவர் மறக்கவேயில்லை. மட்டுமல்ல. ரசிகர்களுக்கு பெரும் விருந்து கொடுக்கப் போகும் படத்தில் இவரது அத்தனை திறமைகளும் வெளிப்படும் வகையில் இரு கதாபாத்திரங்களை உருவாக்கினார். அதில் ஒன்று வில்லி வேடம்!இப்படி தயாரானது தான் அடிமைப்பெண்!
1969ஆம் ஆண்டு எம்ஜிஆர் பிக்சர்ஸ{ம்,இயக்குனர் கே.சங்கரும் அசாத்தியமான காரியத்தை தங்களுக்கு கிடைத்த தொழில்நுட்ப வசதியைக் கொண்டு அப்படியொரு பிரம்மாண்டமான அடிமைப்பெண் படத்தை தமிழில் எடுத்தது வியப்புக்குரிய விஷயம்.
இதற்கு முன் ராஜா வேடம் ஏற்று எம்ஜிஆர் பல படங்களில் நடித்திருக்கிறார். ஆனால்- இதில் தான் முதன் முறையாக ஐரோப்பிய பாணியில் உடை அணிந்திருப்பார். கட்டுமஸ்தான அவரது புஜங்களும், புடைத்த மார்புகளும், உருண்டு திரண்ட தொடைகளும் அப்பட்டமாக தெரியும். அதன் வழியாக ஐம்பத்திரண்டு வயதிலும், தன் உடல் வலு குன்றவில்லை என்பதை உலகுக்கு உணர்த்தினார்.
அடிமைப்பெண்ணில் அதிக டுவிஸ்டுகளும் கமர்ஷியல் அம்சங்களும் கொண்டது. ஜெயப்பூர் அரண்மனையில் பிரமாண்டமாக படமாக்கி இருப்பார்கள். பாலைவன ஒட்டக சண்டையும், க்ளைமாக்ஸில் சிங்கத்துடன் எம்ஜிஆர் நேருக்கு நேர் மோதும் காட்சியும் மெய்சலிர்க்க வைக்கும்.
எம்ஜிஆர் சிங்கத்துடன் போடும் சண்டை மிகவும்பிரசித்தம். சிங்கத்துடன் சண்டை போடும் காட்சிக்காக, எம்ஜிஆர் நிறைய சிரத்தை எடுத்துக் கொண்டார். பாம்பே சர்க்கசில் இருந்து நன்றாக வளர்ந்த, ராஜா என்ற ஆண் சிங்கத்தை விலைக்கு வாங்கி, தன் சத்யா ஸ்டூயோவில் தனி இடத்தில் வைத்து பிரத்யேக பயிற்சியாளர் வைத்து, ஆறு மாதங்கள் பயிற்சி கொடுத்தார்.
அடிமைப்பெண் படத்தில் அம்மா என்றால் அன்பு, அப்பா என்றால் அறிவு என்ற பாடலை ஜெயலலிதா பாடினார். ஆனால் டி.எம்.சௌந்தரராஜனையும் இதே பாடலை பாட வைத்து முதலில் ரிக்கார்டிங் செய்து விட்டனர்.கதைப்படி எம்ஜிஆர் பேச முடியாத சூழ்நிலை என்பதால் இந்தப் பாட்டிற்கு வாயசைத்து நடித்தால் சரி வராது அதனால் ஜெயலலிதாவை பாட வைத்து பாட்டை பதிவு செய்து விடுங்கள் என்று எம்ஜிஆர் சொல்லி விட்டார். எனவே முதன் முதலாக ஜெயலலிதாவை பாட வைத்தவர் இசைத்திலகம் கே.வி.மகாதேவன் அவர்கள். டி.எம்.எஸ் அவர்களுக்கு இன்னொரு அம்மா பாட்டைக் கொடுத் தார்கள் அது தான் தாய் இல்லாமல் நானில்லை என்ற கம்பீரமான பாட்டாக எம்ஜிஆருக்கு அமைந்த பாடல்.
இப்படி பார்த்துப் பார்த்துப் செதுக்கப்பட்ட படம்
COURTESY - NET
மக்கள் திலகத்தை பற்றி பாடகர் திலகம் .
https://youtu.be/uOdEOhIAfss
1984 - புரட்சித்தலைவர் எம்ஜிஆர் பெயரும் படமும் சந்தித்த தேர்தல் களம் .
மக்கள் திலகத்தின் கோட்டை மதுரை மாநகரம்
http://i67.tinypic.com/rm2sub.jpg