-
30th March 2016, 03:16 PM
#10
Junior Member
Veteran Hubber
நமது மக்கள் திலகம், குண்டடி பட்டு குரல் வளம் இழந்தவர். இந்த பெண்மணி பிரேமலதாவின் கணவரோ குடியினால், நல்ல குரலிருந்தும் போதையினால் உளறிக் கொட்டுகிறார். யாருடன் யாரை ஒப்பீடு செய்வது ? நான் வணங்கும் எங்கள் குல தெய்வம் - மலை எம்.ஜி. ஆருடன் மடுவை (மதுவை) ஒப்பிடலாமா ?
என் தங்கத்தலைவன், 1967க்கு பின், கெட்ட தனது குரல் வளத்தை, தான் நடித்து வெளிவந்த "காவல் காரன்" காவியத்தை மக்கள் ஏற்றுக் கொண்டால் திரையுலகில் தொடர்ந்து நீடிப்பதாகவும், இல்லை என்றால் , தமிழ் திரை உலகிலிருந்து விலகி விடுவதாகவும் துணிச்சலாக அறிவித்தார். மக்கள், அவரது முகம் திரையில் தோன்றினால் போதும், குரல் எப்படியிருந்தாலும் அது பற்றிய கவலையில்லை என்று கருதி "காவல் காரன்" காவியத்தை மாபெரும் வெற்றிக்காவியமாக்கிய வரலாறு தெரியாமல், பிதற்றியிருக்கும் பிரேமலதா, மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கோடிக்கணக்கான மக்கள் திலகத்தின் பக்தர்கள் கோருகிறார்கள். என்ன பதில் சொல்லப் போகிறாய் பிரேமலதாவே?
உனக்கு இன்னொரு செய்தியையும் சொல்கிறோம் :
எங்கள் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். அவர்கள், தனது குரல் வளம் குன்றிய, 1967க்கு பிறகு நடித்த காவியங்கள் பல வெற்றிக்காவியங்களாகவும், வெள்ளி விழாக் காவியங்களாகவும் திகழ்ந்தன. அது மட்டுமல்ல, பாதிக்கப்பட்ட அந்த குரலில்தான் தமிழகம் முழுவதும் தேர்தல் சுற்றுப்பயணங்களை மேற்கொண்டு, மகத்தான வெற்றி கண்டு, மூன்று முறை தமிழக முதல்வராக தொடர்ந்து பதவி வகித்து, மக்களின் முழு நம்பிக்கையை பெற்றவராகவும், அசைக்க முடியாத சக்தியாகவும், இன்றும் தனக்கென்று பெரும்பான்மையான வாக்கு வங்கியை தக்க வைத்து கொண்டு வருவதும் உலகமறிந்த உண்மை. !
பிரமலதாவே ! அவையடக்கத்துடன், அரசியல் நாகரீகத்துடன், பண்புடன் பேச கற்றுக்கொள்.
உயர உயரப் பறந்தாலும், ஊர்க்குருவி பருந்தாகி விடாது ! எல்லோரும் எம். ஜி. ஆர். ஆகி விட முடியாது.
ஒரு சூரியன், ஒரு சந்திரன் போல் இந்த பூவுலகில் ஒரே ஒரு எம். ஜி. ஆர். தான் என்பதை புரிந்து கொள் பிரேமலதாவே !
From Facebook Posting.
-
Post Thanks / Like - 1 Thanks, 1 Likes
Bookmarks