Originally Posted by
g94127302
நினைத்து பார்த்தேன் ராகுல் - MGR நடித்திருந்தால் படத்தில் கீழ்கண்ட காட்சிகள் இடம் பெற்றிருக்கும்
1. கர்ணன் தானம் செய்யும்போது அரண்மனையை சுற்றி 100-200 வயதான கிழவிகள் , தாத்தாக்கள் காத்துகொண்டு இருப்பார்கள் - கர்ணன் கட்டிக்கொள்ள .
2. OAK தேவர் கர்ணனிடம் வீம்புக்கு கத்தி சண்டை ஒரு பாடலுடன் போட்டிருப்பார் - சுபாங்கியின் தந்தை post யை resign செய்திருப்பார்
3. அசோகனிடம் கர்ணன் நண்பனாக இருந்திருக்க மாட்டான் - அசோகனின் மனைவி ஒரு காலத்தில் கர்ணனை ஒருபக்க காதல் செய்து , கனவில் டூயட் பாடிவிட்டு பிறகு தங்கை யாக மாறி இருப்பாள்
4. கர்ணன் போரின் நடுவில் ஒரு காதல் பாட்டை பாடியிருப்பான் - கடைசியில் கண்ணனும் , அர்ஜுனணனும் கர்ணனின் வில்லுக்கு இரையாகி இருப்பார்கள்
5. கர்ணன் தாயை புகழ்ந்து போர்க்களத்தில் ஒரு பாட்டை பாடியிருப்பான்
6. பரசுராமர் , கர்ணனுக்கு கண்டிப்பாக பிரம்மாஸ்திரம் சொல்லி கொடுத்திருப்பார் - தாயின் கருணையால் , போரில் அதை கர்ணன் மறந்திருக்க மாட்டான் - அர்ஜுனனின் தேர் தான் பள்ளத்தில் இறங்கி இருக்கும்
25நாட்கள் மட்டுமே ஓடியிருந்தால் இன்று அந்த பக்கம் , முதல் தடவை வெளிவந்ததில் 500 திரை அரங்குகளில் 250 நாட்கள் ஓடிய வெற்றி காவியம் என்று சொல்லியிருப்பார்கள் - இல்லை உண்மையை சொல்வதாக வைத்துக்கொண்டால் , மவுண்ட் ரோடு இல் உள்ள எல்லா கட்டடங்களும் தீ விபத்துக்கு உள்ளாகி கூட்டம் வர தவறி விட்டது - ஆனாலும் ரீ -ரிலீஸ்இல் பந்துலுக்கு நிறைய லாபத்தை மீட்டு கொடுத்தது என்று பிதற்றி இருப்பார்கள் - கர்ணன் நல்லவேளை அவமானப்படாமல் தப்பித்தான் !