-
29th May 2014, 06:02 AM
#11
Junior Member
Newbie Hubber
இந்த மாதம் வெளியான இரு உன்னத நகைச்சுவை படங்கள் மணமகன் தேவை (16 மே ) ,பலே பாண்டியா (26 மே)
மணமகன் தேவை ,பானுமதி சொந்த தயாரிப்பில், அவரது கணவர் இயக்கிய படம்.காலத்தை முந்திய அற்புதமான ஆங்கில பாணி நகைச்சுவை சித்திரம். ஜீன்ஸ் படத்தின் முன்னோடி. பானுமதி ,இரு ஆண்களிடம் அக்கா தங்கை வேடமிட்டு சமாளிக்கும் துணிச்சலான கதைக்கு சொட்டு கொடுக்க வேண்டும்.(50 களின் பெண்கள் நிலை தெரிந்தவர்களுக்கு காரணம் புரியும்).பம்பர கண்ணாலே காதல் சங்கதி பாடல் ஜி.ராமநாதன் இசையில் ,சந்திர பாபு தந்த காலம் மீறிய அதிசயம்.நடிகர்திலகம் படு sophisticated urban look (மீசையில்லாமல்)உடன் பிரமாத படுத்தி மேலை நாட்டு பாணி ,சூழ்நிலை சார்ந்த காமெடி யில் பின்னியிருப்பார். ஒரு காட்சியில் பானுமதி ,நடிகர்திலகத்துடன் செல்ல சம்மதித்து ,டி.ஆர்.ராமசந்திரனை திராட்டில் விடும் போது ,நடிகர்திலகம் டபாய் ப்பது க்ளாஸ் .பார்த்தே ஆக வேண்டிய polish ஆன ஐம்பதுகளின் காலத்தை முந்திய நகைச்சுவை அற்புதம்.
பலே பாண்டியா-நண்பர் ,கப்பலோட்டிய தமிழன் முதல் வெளியீட்டில் சிறிதே பிசகியதால், இலவசமாக 13 நாட்களில் மூன்று வேடங்களில் அசத்திய பிரமாத நகைச்சுவை சித்திரம்.இந்த படம் மிகை நகைச்சுவை வகை.(கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி,கோடீஸ்வரன்,ராஜா ராணி,மணமகன் தேவை,சபாஷ் மீனா இயல்பான timing நகைசுவை)
இதில் பாண்டியா பாத்திரம் ,நடிகர்திலகம் தவிர யாரும் நினைத்தே பார்த்திர முடியாத ஒரு உன்னத புதிய பாணி நகைசுவை நடிப்பு.நாகேஷ்,பாலையா,எம்.ஆர்.ராதா எல்லோருடைய + point களை இணைத்த புள்ளி அந்த அதிசய பாத்திரம்.விஸ்வநாதன்-ராமமூர்த்தி -கண்ணதாசன் இணைவில் பாடல்கள் உன்னதம் தொடும்.நீயே உனக்கு பாடலில் சிவாஜி-எம்.ஆர்.ராதா அதகளம் அடாடா!!!! திரைகதையை கொஞ்சம் சீரமைத்திருந்தால் எங்கேயோ நின்றிருக்க வேண்டிய நகைச்சுவை classic .
மேற்கூறிய இரண்டு படங்களையும் பல முறை பார்த்து ரசித்துள்ளேன்.
-
29th May 2014 06:02 AM
# ADS
Circuit advertisement
Bookmarks