http://i160.photobucket.com/albums/t...psigf8avm1.jpg
Printable View
http://i160.photobucket.com/albums/t...ps1bmcvcoq.jpg
Courtesy : http://www.nikkilcinema.com/site/pho...bration-stills
I know that I have not done a great job like Sri. Loganathan [ giving the details of the persons in each image].
Congrats Yukesh Babu Sir. Soon you will be busy singing this song:
https://www.youtube.com/watch?v=cQaAGBJZEgA
யுகேஷ் சார்
தந்தையான மகிழ்ச்சியான தருணத்தைக் கொண்டாடும் தங்களுக்கு என் மனப்பூர்வமான வாழ்த்துக்கள்.
தங்கள் வாழ்வில் எல்லா வளமும் நலனும் பெற்று சிறப்புற வாழ வேண்டும் என இறைவனிடம் வேண்டிக் கொண்டு என் வாழ்த்துக்களை மீண்டும் கூறிக் கொள்கிறேன்.
மக்கள் திலகம் எம்ஜிஆர் திரியில் 4000 பதிவுகளை வழங்கிய இனிய நண்பர் திரு சைலேஷ் அவர்களுக்கு இனிய நல் வாழ்த்துக்கள் .இன்று பொன்விழா நிறைவு கொண்டாடும் மக்கள் திலகத்தின் ''பணம் படைத்தவன் '' பற்றிய தங்களுடைய பதிவுகளை எதிர்பார்க்கிறேன் .
27.3.1965 ''பணம் படைத்தவன் ''
விஸ்வநாதன் ராமமூர்த்தி இசை அமைத்த கடைசி படங்களில் ஒன்று. டி.ஆர். ராமண்ணா இயக்கம். வாலியின் பாடல்கள். எம்ஜிஆரைத் தவிர ஸௌகார் ஜானகி, கே.ஆர். விஜயா, நாகேஷ், டி.எஸ். பாலையா, அசோகன், மனோகர் நடித்திருக்கிறார்கள். நன்றாக ஓடியிருக்கும் என்று நினைக்கிறேன்.
நான் ஆச்சரியப்பட்ட விஷயம் இது ஒரு செண்டிமெண்டல் படமாக இருந்ததுதான். வில்லன்களின் சதி, அவற்றை முறியடிக்கும் திட்டங்கள் எதுவுமே இல்லை. எம்ஜிஆருக்கு சண்டை போடக்கூட பெரிய ஸ்கோப் இல்லை. மனோகருடன் க்ளப்பில் ஒரு சண்டை, அசோகனுடன் கல்யாண மண்டபத்தில் பேருக்கு ஒரு சண்டை, அசோகனுடன் ஒரு க்ளைமாக்ஸ் சண்டை, அவ்வளவுதான். மனோதருக்கும் அசோகனுக்கும் பேருக்கு கூட ஒரு அடியாள் இல்லை. எப்போதும் தென்படும் ஜஸ்டின், குண்டுமணி போன்ற யாருமே இல்லை.
எம்ஜிஆர் பணக்கார ஸௌகார் வீட்டு வேலைக்காரி கே.ஆர். விஜயாவை காதலிக்கிறார், தம்பி நாகேஷுக்காக ஸௌகாரையெ கல்யாணம் செய்து கொள்கிறார், நாகரீகத்தின் அபாயங்களை ஸௌகாருக்கும் படம் பார்க்கும் பெண்களுக்கும் எடுத்து சொல்கிறார், தன் தவறுகளை உணரும்போது சரியாக ஸௌகார் இறந்ததும் முகத்தை கையில் புதைத்துக்கொண்டு அழுகிறார், பிறகு கே.ஆர். விஜயாவை அப்பா பாலையாவை எதிர்த்து கல்யாணம் செய்து கொள்கிறார், “எனக்கொரு மகன் பிறப்பான்” என்று பாடுகிறார், பிறந்த மகனை கொடுத்துவிடும் மனைவியை பார்த்து “மாணிக்கத் தொட்டில் இங்கிருக்க” என்று இன்னொரு பாட்டு பாடுகிறார், கடைசியில் ரசிகர்கள் பிழைத்துப் போகட்டும் என்று அசோகனுடன் ஒரு சண்டை போட்டுவிட்டு குடும்பத்தை இணைக்கிறார். பெற்றால்தான் பிள்ளையா ஒன்றுதான் அவரது செண்டிமெண்டல் படம் என்று நினைத்தேன், இதுவும் அந்த ரகம்தான்.
படத்தில் ஸௌகார் கொஞ்சம் ஈகோ உள்ள பணக்காரக் குடும்பத்து பெண்ணை அவர் கொண்டு வந்தது சிறப்பாக இருந்தது. முதல் இரவில் ஹாஸ்பிடலில் இருக்கும் காதலி கே.ஆர். விஜயாவை பார்க்க எம்ஜிஆர் போய்விடுவார். தான் போவது சரி என்பதற்காக நிறைய வசனமும் பேசுவார். இப்போது பார்த்தால் எம்ஜிஆரை மேல் ஷாவினிஸ்ட் என்று சொல்லிவிடுவார்கள். அடுத்த இரவு ஸௌகார் அந்த வசனங்களை திருப்பி எம்ஜிஆரிடம் சொல்லிவிட்டு க்ளப்புக்கு போவார். அந்த காட்சியில் நன்றாக நடித்திருந்தார். இன்றைய பெண்கள் விசில் அடிக்கலாம்.
சிறு பிள்ளைத்தனம் என்றாலும் எம்ஜிஆரும் நாகேஷும் இரவில் அறையை விட்டு வெளியேற முயற்சி செய்யும் காட்சி எனக்கு பிடித்திருந்தது. அதுவும் இருவரும் தரையில் ஊர்ந்து வந்து ஒருவரை ஒருவர் பார்க்கும்போது நாகேஷ் தந்தால் எடுக்கிறேன் என்று சமாளிக்கும்போது நான் சிரித்தேன்.
7 பாட்டுகள். எல்லாமே நல்ல பாட்டுகள். “பவளக் கொடியிலே முத்துக்கள் பூத்தால்” பாட்டில் எம்ஜிஆரும் கே.ஆர். விஜயாவும் முகலாய உடையில் வந்து ஆடிப் பாடுவது எம்ஜிஆர் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த ஒன்று. எல்.ஆர். ஈஸ்வரியின் ஹம்மிங் சூப்பர்! டி எம் எஸ்ஸும் கலக்குவார்.
“கண் போன போக்கிலே” எம்ஜிஆரின் தத்துவ பாட்டு லிஸ்டுகளில் தவறாமல் இடம் பெறுவது. டிஎம்எஸ், வாலியின் நல்ல பாட்டு.
“அந்த மாப்பிள்ளே காதலிச்சான் கையப் புடிச்சான்” எனக்கு மிகவும் பிடிக்கும். சுசீலாவின் குரலில் இருக்கும் ஒரு கொஞ்சல் அபாரம்! டி எம் எஸ் அதற்கு பதில் பாட்டு பாட “ஒஹொஹொ ஒஹொஹொ” என்று ஆரம்பிக்கும் இடம் அருமை. எம்ஜிஆர் சூப்பர் ஸ்டெப் போடுகிறார். Really fancy footwork. கே.ஆர். விஜயா நல்ல அழகாக இருக்கிறார், டான்ஸ் ஆடுகிறார்.
“தன்னுயிர் பிரிவதைப் பார்த்தவர் இல்லை” ஒன்றுதான் இன்னும் யூட்யூபில் இருக்கிறது.
“எனக்கொரு மகன் பிறப்பான்”, “மாணிக்கத் தொட்டில் அங்கிருக்க”, “பருவத்தில் கொஞ்சம்” பாட்டுக்களும் பிரபலமானவையே.
COURTESY - RV
நற்பதிவுகள் 4௦௦௦ கண்ட சகோதரர் திரு. சைலேஷ் பாசு அவர்களுக்கு, புரட்சித்தலைவர் மற்றும் அன்னை ஜானகி ஆசியுடன், நல் வாழ்த்துக்கள்.
http://i61.tinypic.com/v3hkwz.jpg
எம்ஜிஆர் படத்தில் ஒரு வித்தியாசமான கதை கொண்ட படம் பணம் படைத்தவன்.
இந்தப் படத்தில் இடம் பெற்ற கண்போன போக்கிலே கால் போகலாமா.. பாடலை கண்ணதாசன் எழுதினார் என்ற தவறான எண்ணம் எனக்கு இருந்தது.
கண்போன போக்கிலே கால் போகலாமா..
கால் போன போக்கிலே மனம் போகலாமா..
மனம் போன போக்கிலே மனிதன் போகலாமா..
மனிதன் போன பாதையை மறந்து போகலாமா..
என்று அந்தாதியாக ஆரம்பிக்கும் இந்தப் பாடலுக்குச் சொந்தக்காரர் கவிஞர் வாலி.
பணம் படைத்தவனில் „அந்த மாப்பிளை காதலிச்சான் கையைப் பிடிச்சான்…“ என்ற பாடல் இருக்கிறது. அங்கே மச்சான். இங்கே மாப்பிள்ளை.
பணம் படைத்தவன் படத்தில் இடம் பெற்ற எல்லாப் பாடல்களுமே இனிமையானவை.
„அந்த மாப்பிளை காதலிச்சான் கையைப் பிடிச்சான்...'
இந்தப் பாடல் காட்சியை நடனக் கலைஞர் தங்கப்பன் நன்றாக அமைத்திருப்பார். கட்டிலில் படுத்திருக்கும் எம்ஜிஆர் எழுந்து ஆடும் பொழுது, அவரிடம் இருக்கும் குதூகலத்தை அவரின் கால்களில் அவர் காட்டும் முத்திரைகளில் பிரதி பட வைத்திருப்பார். நாயகனும் நாயகியும் தொடாமலே காதலைத் தெரிவிக்கும் இந்தக் காட்சிஅழகாக இருக்கும். இப் பாடலில் „அம்மம்மா என்ன சுகம் அத்தனையும் கன்னி சுகம்' என்ற வரிகள் இசைத் தட்டில் இருக்கும். ஆனால் இந்த „கன்னி சுகம்' என்பது கடுமையான விமர்சனத்துக்கு உள்ளானதால், „அம்மம்மா என்ன சொல்ல அத்தனையும் கண்டதல்ல' என்று படத்தில் மாற்றி இருப்பார்கள்.
அலுங்காமல் குலுங்காமல், துள்ளாமல், துடிக்காமல் எம்ஜிஆர் அமைதியாகப் பாடுவதாகக் காட்சி இருக்கும்.
Courtesy - net
பணம் படைத்தவன் படத்தில் தாஜ்மாகாலில் „பவளக்கொடியிலே முத்துக்கள் பூத்தால்.. „ .
நல்ல மெலடி நிறைந்த பாடல். முகலாய உடையில் எம்ஜிஆர், கே.ஆர். விஜயா பாடுவதாக படத்தில் அமைந்திருக்கும் இந்தப் பாடலில் எல்.ஆர்.ஈஸ்வரியின் ஹம்மிங் அருமையாக இருக்கும்.
„பவளக் கொடியிலே முத்துக்கள் பூத்தால்...'
„எனக்கொரு மகன் பிறப்பான் அவன் என்னைப் போலவே இருப்பான்..'
இந்தப் பாடலில் காக்கை இனம் வாழும் வாழ்க்கை முறை பார்த்து மனித குலம் வாழ உழைப்பான் என்ற பாடல் வரி வரும். அன்றைய காங்கிரஸ்காரருக்கு காக்கைகள் என்று சொன்னால் பிடிக்காது. காக்கைளைக் காங்கிரஸார் தணிக்கை செய்ய, நேற்று நாம் வாழ்ந்த வாழ்க்கை விதம் பார்த்து மனித குலம் வாழ உழைப்பான் என்று படத்தில் பாடல் இடம் பெற்றிருக்கும்.
தன்னுயிர் பிரிவதைப் பார்த்தவரில்லை என்னுயிர் பிரிவதைப் பார்த்து நின்றேன்... அன்றைய காதலில் தோல்வி அடைந்த பெண்களுக்கான சோகம் ததும்பும் கண்ணீர்ப் பாட்டு. எம்ஜிஆருக்கு சோகம் வெகு தூரம் என்பதாலோ என்னவோ அநேக காட்சிகளில் எம்ஜிஆரை தூரத்தில் வைத்தே காட்சியை அமைத்திருக்கிறார்கள்.
மாணிக்கத் தொட்டில் இங்கிருக்க மன்னவன் மட்டும் அங்கிருக்க...
பாடல் காட்சியில் வெளிச்சம் கொஞ்சம் கம்மியாக இருக்கும்.
பருவத்தில் கொஞ்சம் உருவத்தில் கொஞ்சம் பெண்ணுக்கு அழகு வரும்.. பாடலில் சௌகார்ஜானகியை ஆட விட்டு பார்வையாளர்களுக்குக் கொஞ்சம் சிரமத்தை உண்டாக்கி இருப்பார்கள்.
டி.ராமண்ணா எம்ஜிஆரை வைத்து „ப' வரிசையில் புதுமைபித்தன், பாசம், பெரிய இடத்துப் பெண், பணக்காரக் குடும்பம், பணம் படைத்தவன், பறக்கும் பாவை படங்களை இயக்கினார் (குலேபகாவலி, கூண்டுக்கிளி ஆகிய இரண்டு படங்கள் விதிவிலக்கு) ஏ.பீம்சிங், டி.ராமண்ணா இருவரும் இயக்கிய இந்தப் 'ப' வரிசையில் வந்த எல்லா படப் பாடல்களும் செம ஹிட்.
விஸ்வநாதன்-ராமமூர்த்தி, கண்ணதாசன் என்ற கூட்டணி, பணம் படைத்தவன் திரைப்படத்தில் விஸ்வநாதன்-ராமமூர்த்தி, வாலி என்று சற்று மாறிப் போயிருந்தது. ஆனாலும் பாடல்கள் இனிமையாகவே இருந்தன. இன்றும் மறக்க முடியாத அளவுக்கு மனதில் நிற்கின்றன.
Courtesy - thiru ayya pillai - net
Congrats Mr.Sailesh basu for crossing 4000 posts.
http://i160.photobucket.com/albums/t...psy3cwxr8d.jpg
http://dinaethal.epapr.in/466410/Din...2015#page/13/1
For saving/records purposes only, do not read small letters
நீங்கள் முதலமைச்சர். அப்போது தான் என் பெயரைத் தமிழ்நாடு மெல்ல மெல்ல எழுத்துக் கூட்டத் தொடங்கியிருக்கிறது.என் நண்பர் க.மூ. அரங்கனின் "வியர்வை முத்துக்கள்"என்ற கவிதை நூலைக் கலைஞர் வெளியிடுகிறார். நான் முதற்பிரதி பெற்றுக் கொள்கிறேன்.கலைஞரின் எழுத்துக்கள் என்னைக் கவிஞனாக்கின என்று அங்கே பேசுகிறேன். இது நடந்தது 18.5.1982 மாலை. 19.5.82 காலை ஐ.ஜி. அலுவலகம் தூள் பறக்கிறது.
"வைரமுத்து கலைஞரோடு ஏன் போனார்? எதற்குப் போனார்? எப்படிப் போனார்? என்று அவசர அவசரமாய் திராவகக் கேள்விகள் வீசித் திணற அடிக்கிறீர்கள்.
என்னைப் பற்றிய கோப்பு ஒன்று உங்கள் பார்வைக்கு வருகிறது. என் ஜாதகம் அறிகிறீர்கள்.
தேசிய விருது வாங்கிய பிறகு முதலமைச்சரான உங்களைச் சந்திக்காமல் கலைஞரைச் சந்தித்து வாழ்த்துப் பெறுகிறேன். கவனிக்கிறீர்கள்.
இத்தனைக்குப் பிறகும் எனக்கு இரண்டு முறை விருது தருகிறீர்கள்.
உங்கள் பெருந்தன்மை கண்டு நெகிழ்ந்து போகிறேன்.
உங்கள் வெற்றியிலிருந்து நாங்கள் கற்றுக் கொள்வதற்கு ஒன்றே ஒன்று உண்டு அது தான்-
நசிந்து போனவர்களுக்கு நம்பிக்கை ஊட்டுவது.
உங்கள் பாடல்களெல்லாம் தமிழ்நாட்டுக்கு நீங்கள் செய்த ரத்ததானம்.
ஒரு பாடலின் பாடலாசிரியன் காணாமல் போவது பாடலுக்கு வெற்றி ஆகாது என்ற போதிலும், பாடலாசிரியன் முகம் கரைந்து போய் நீங்கள் மட்டுமே முகம் காட்டுவது உங்கள் பாடல்களில் மட்டும் தான்.
உங்களுக்காகப் படைக்கப்பட்ட பாடல்கள் என்னையும் படைத்திருக்கின்றன.
எனக்கு ஒரே ஓர் ஆசை மட்டும். ஆடிக்காற்றில் ஆடும் அகல் விளக்கின் சுடராய் ஆடிக் கொண்டேயிருக்கிறது.
நிகழ்விலிருக்கும் எல்லாக் கதாநாயகர்களும் என் பாடலை உச்சரித்திருக்கிறார்கள். உங்கள் உதடுகளைத் தவிர.
ஒரே ஒரு பாட்டு உங்களுக்கு நான் எழுத ஆசைப்பட்டேன்.
ஆனால்,என்னால் எழுத முடிந்தது உங்களுக்கான இரங்கல் பாட்டுதான்.
உங்களுக்கு என்னால் படைக்க முடிந்தவை - உங்கள் இறுதி ஊர்வலமான "காவியத் தலைவனுக்குக் கடைசி வரிகள்" தான்.
உங்கள் ராமாவரம் தோட்டத்திற்கு நான் முதன் முதலாய்ப் போனது உங்கள் அன்புத் துணைவியாருக்கு ஆறுதல் சொல்லத்தான்.
"உங்களைப் பற்றி முதன் முதலில் நான் பேசியது உங்கள் இரங்கல் கூட்டத்தில் தான். அன்று சொன்ன இறுதி வரியே இன்றும் என் இறுதி வரி ;
ஒரே ஒரு சந்திரன் தான் ;
ஒரே ஒரு சூரியன் தான் ;
ஒரே ஒரு எம்.ஜி.ஆர் தான் !
- கவிஞர் வைரமுத்து .
இணைய தளத்தில் குறிப்பிடப்பட்டதை மேற்கோள் காட்டி பதிவு செய்த வரதகுமார் சுந்தராமன் அவர்களுக்கு நன்றி !
அந்த இணைய தள செய்தியில் சொல்ல மறந்தது :
நம் மக்கள் திலகம் அவர்களது காவியங்களில், பெரும்பாலும் கதாநாயகிதான் கனவு காண்பாள் என்ற ஒரு எதிர்மறையான விமர்சனத்தை தகர்த்தெறிந்து, நாயகன் கனவு காணும் வித்தியாசமான காட்சி
http://i58.tinypic.com/1s1o8w.jpg
இந்த " பணம் படைத்தவன் " காவியத்தில் "பவளக்கொடியிலே முத்துக்கள் பூத்தால்.." என்ற பாடலில் இடம் பெற்றது.
நம் பொன்மனச்செம்மல் அவர்கள் கதா நாயகனாக நடித்த "விவசாயி" காவியத்தில், அவர் கனவு காணும் மற்றொரு பாடல் காட்சிதான் "என்னம்மா, சிங்கார கண்ணம்மா".
"அணுவை பிளந்து ஆழ்கடலை புகட்டி குறுக தரித்த குறள்" இது அவ்வையாரின் திருக்குறள் பற்றிய கருத்து.
அதேபோல எம்.ஜி.ஆர். என்ற மூன்றெழுத்து அணுவை பிளந்து ஆழ்கடலை புகட்டி குறுக தரித்த குறள்" போன்றவர்.
வெற்றி திருப்புகழ் வேந்தன்-பாட்டுடைத் தலைவன் -அற்புத நாயகன்-மக்கள் திலகம் - தெய்வம் எம்.ஜி.ஆர்.
https://www.youtube.com/watch?v=HeqW...ature=youtu.be
http://i60.tinypic.com/2gvpkqe.jpg
இந்த கருத்தை 8th மார்ச் 2015 அன்று என்னுடைய 397வது பதிவின் வழியாக தெரிவித்து இருந்தேன். இன்று மீண்டும் இங்கே அதனை பதிவு செய்கிறேன்.
அன்பு சகோதரர் திரு. வரதகுமார் சுந்தராமன் அவர்கள் அறிவது :
இந்த பட்டியலில், நமது இதய தெய்வம் பாரத ரத்னா மக்கள் திலகம் அவர்களின் துணைவி அன்னை ஜானகி, நாயகியாய் அவருடன் இணைந்த "மருத நாட்டு இளவரசி" காவியத்தில், இடம் பெற்ற அருமையான காதல் பாடல் " நதியே நீராழி அதையே சேர்தல் நாம் சேர்ந்தோம் " என்ற பாடலின் இடையே, நம் மன்னவனைப் போற்றி வரும் அற்புதமான வரிகளாகிய "ஆனந்தக்கடல் நீ ! அதிலொரு மீன் போல் மகிழ்வேன், வாழ்வினில் மாறாப் பிரேமையினால்" (அன்பினால்) என்பது விடுபட்டு விட்டது.
அதே போன்று, "மோகினி" என்ற காவியத்தில், இடம் பெற்ற "வசந்த மாலை நேரம் மந்த மாருதம் குளிர்ந்து வீசிடும்" என்ற பாடலின் இடையே அன்னை ஜானகி அவர்கள் நம் பொன்மனசெம்மலை நோக்கி பாடும் " காதல் வேகம் போல் இல்லையே - உனது கால்கள் தாவும் வேகம், வேதை கொண்டு வரும் பாதை கண்டு மெலிவாரே வீர விஜயன் (மக்கள் திலகத்தின் கதா பாத்திர பெயர் விஜயன் என்பது குறிப்பிடத்தக்கது) காட்டும் நடையிலும், திராட்டிலும் - அந்த ஓட்டம் விரைவு வேணும் , செல்லு செல்லு பரியே " (பரி என்ற சொல்லுக்கு குதிரை என்று பொருள் உண்டு) என்ற வரிகளும், கவனத்தில் கொள்ளத்தக்கது.
http://s7.postimg.org/7q0bskvp7/image.jpg
FROM 27.03.2015 AT SHANMUGHA THEATRE, COIMBATORE
ENGA VEETU PILLAI - 50 YEARS - NAKEERAN SPECIAL VIDEO
https://www.youtube.com/watch?v=Gn0zwYd-OZ8
Enga veetu pillai - 50 years - Nakeeran special video
very nice Thanks Sailseh sir & Nakeeran.
மனதில் நிறைந்த மக்கள் திலகம்
அறிமுகம்:
“வாழ்ந்தவர் கோடி மறைந்தவர் கோடி
மக்களின் மனதில் நிற்பவர் யார்?
மாபெரும் வீரர் மானம் காத்தோர்
சரித்திரம் தனிலே நிற்கின்றார்.”
என்ற கவியரசர் கண்ணதாசனின் பாடலைப் பாடிக்கொண்டே அக்கால இளவரசு குதிரை வண்டியில் நண்பன் குலதெய்வம் ராஜகோபாலுடன் சவாரி செய்யும் “மன்னாதி மன்ன”னாக பவனி வந்த மக்கள் திலகம் அவர்களது நாட்டியத் திறமை அதே திரைப்படத்தில் நாட்டியப் பேரொளி பத்மினியுடன் அவர் போட்டி நடனம் புரிந்து வெல்வதாகப் படமெடுக்கப் பட்ட காட்சிகளில் தெளிவாயிற்று. நாட்டியத்தில் மட்டுமின்றி இசையிலும் அவர் திறமை மிக்கவர் என்பது அதே திரைப்படத்தில் அவர் பத்மினி ஆடும் நடனத்துக்குப் பத்துக்கும் மேற்பட்ட தாள வாத்தியக் கருவிகளைக் கொண்டு தாளம் போடுவதாக அமைந்த, டி.எம். சௌந்தரராஜன், எம்.எல். வசந்தகுமாரி குரல்களில் ஒலிக்கும் “ஆடாத மனமும் உண்டோ?” எனும் பாடல் காட்சியில் தெளிவானது. அதே திரைப் படத்திலும் அனேகமாக அவர் நடித்த அனைத்துத் திரைப் படங்களிலும் அவர் பங்கு பெற்ற சண்டைக் காட்சிகளைக் கண்டு பாராட்டாத ரசிகர் யாரும் இல்லை என்பது பிரசித்தம்.
பண்டைய பாரத மன்னர்களைப் போலவே யானையேற்றம், குதிரை சவாரி, வாட்போர், மற்போர், கம்பு சுழற்றுதல் மற்றும் பல்வேறு சாகசக் கலைகளில் தலைசிறந்து விளங்கினார் எம்.ஜி.ஆர். அவரது திரைப்படம் வெளியாகிறதென்றால் அத்திரையரங்குகளில் கூட்டம் வரலாறு காணாத அளவுக்குக் காணப்படும். 1965-ஆம் ஆண்டில் வெளிவந்த அவரது “எங்க வீட்டுப் பிள்ளை” திரைப் படத்தைத் திரையிட்ட கிராமப்புற ஓலைக் கொட்டகைத் திரையரங்குகளில் டிக்கட் கவுண்டர்களின் முன்னால் போடப்பட்ட தடுப்புகள் தவிடுபொடியாயின. அதுவரையில் வேறு எந்தத் திரைப்படத்திற்கும் அப்படிப்பட்ட கூட்டத்தைக் கண்டதில்லை, அதன் பிறகும் கண்டதில்லை. எம்.ஜி.ஆர். என்பது ஒரு தாரக மந்திரமாகவே விளங்கிற்று. அவர் பெயரைக் கேட்டால் “மயங்காத மனம் யாவும் மயங்கும்” எனக் “காஞ்சித் தலைவன்” திரைப்படத்தில் பானுமதி பாடும் பாடல் போலவே அனைவரது மனங்களும் மயங்கும். அவரது திரைப்படங்களைக் கண்டு மகிழாத மக்கள் மிகவும் குறைவே.
மக்களின் மனங்களில் மாறா இடம்:
தனது குணச்சித்திர நடிப்பினாலும் பல்வேறு வகையான பாத்திரங்களை ஏற்று, அப்பாத்திரங்களாகவே தான் மாறி ரசிகர்களைத் தன்பால் ஈர்த்த நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடித்த திரைப் படங்களைக் காட்டிலும் எம்.ஜி.ஆர். அவர்களது திரைப் படங்கள் அதிகப் பொழுது போக்கு அம்சங்களுடன் காண வருவோர் மனங்களைக் குளிர்விக்கும் தன்மை கொண்டவையாய் இருந்ததுடன் வாழ்க்கையில் ஒவ்வொரு மனிதனும் கடைபிடிக்க வேண்டிய சீரிய அறிவுரைகள் நிறைந்திருந்தமையே எம்.ஜி.ஆர். மக்கள் திலகமாகி மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்ததன் அடிப்படை ரகசியமாகும்.
“கொடுக்குற காலம் நெருங்குவதால்
இனி எடுக்குற அவசியம் இருக்காது
இருக்குறதெல்லாம் பொதுவாய்ப் போனால்
பதுக்குற வேலையும் இருக்காது
ஒதுக்குற வேலையும் இருக்காது
உழைக்குற நோக்கம் உறுதியாயிட்டாக்
கெடுக்குற நோக்கம் வளராது
மனம் கீழும் மேலும் புரளாது.”
எனக் கவிஞர் பட்டுக்கோட்டை கலியாணசுந்தரம் எழுதிய,
“திருடாதே பாப்பா திருடாதே,
வறுமை நிலைக்கு பயந்து விடாதே,
திறமை இருக்கு மறந்து விடாதே”
எனும் “திருடாதே” படப் பாடலைக் கேட்டுத் திருந்தியவர்கள் ஏராளம்.
திரைப்படங்களில் நடித்ததுடன் நில்லாது மக்கள் திலகம் சமூக சேவையிலும் அதிக ஈடுபாடு கொண்டு பல்வேறு காரணங்களால் அவதியுற்ற மக்களின் துயர் நீங்க அரும்பாடு பட்டார். கை ரிக்ஷாக்கள் மற்றும் சைக்கிள் ரிக்ஷாக்கள் ஓட்டிப் பிழைப்போர், மீனவர்கள், ஏழைத் தொழிலாளிகள், விவசாயிகள் முதலானோர் வாழும் வாழ்க்கையினை விளக்கும் பல திரைப்படங்களைத் தந்ததோடு அவர்களது குறைகள் களைய நிஜ வாழ்வில் பெரும் பொருளுதவியும், வேறு பலவித உதவிகளையும் அவர் செய்தார்.
“கடல்நீர் நடுவே பயணம் போனால்
குடிநீர் தருபவர் யாரோ?
தனியாய் வருவோர் துணிவைத் தவிர
துணையாய் வருபவர் யாரோ?
ஒரு நாள் போவார் ஒரு நாள் வருவார்
ஒவ்வொரு நாளும் துயரம்;
ஒரு ஜாண் வயிறை வளர்ப்பவர்
உயிரை ஊரார் நினைப்பது சுலபம்”
எனும் உயிர்த்துடிப்பு மிக்க வரிகளுடன் கவிஞர் வாலி எழுதிய
“தரை மேல் பிறக்க வைத்தாய்
எங்களைத் தண்ணீரில் திளைக்க வைத்தாய்,
கரைமேல் இருக்க வைத்தாய்
பெண்களைக் கண்ணீரில் குளிக்க வைத்தாய்”
எனும் மீனவர்கள் படும் துயரத்தை விளக்கும் பாடலைப் “படகோட்டி” திரைப்படத்தில் எம்.ஜி.ஆர். பாடி நடிக்கக்கண்டு கண்ணீர் உகுக்காதவர் வெகு சிலரே.
“என்ன வளம் இல்லை இந்தத் திருநாட்டில்?
ஏன் கையை ஏந்த வேண்டும் வெளிநாட்டில்?
ஒழுங்காய்ப் பாடுபடு வயக்காட்டில்,
உயரும் உன் மதிப்பு அயல்நாட்டில்”
எனும் வாலி பாடலை டி.எம்.எஸ். குரலில் பாடி கே.ஆர். விஜயாவுடன் அவர் நடித்த “விவசாயி” படம் விவசாயத்தின் பெருமையைப் பறைசாற்றிற்று. பேருந்து நடத்துனராகப் பணி செய்கையில் தன் தாய் வழியில் நிற்கக் கண்டும் அதிகம் பேரை ஏற்றக்கூடாது எனும் சட்டத்தை மதித்துத் தாய்க்கும் பேருந்தில் இடமளிக்காமல் நடத்தும் காட்சியும், பின் அதே பேருந்துக் கம்பெனியில் அதிகாரி பதவி பெற்று அதன் பின் முதலாளியின் மகள் கே.ஆர். விஜயாவின் காதலை ஏற்க மறுத்ததால் வேலையிழந்து கைவண்டி இழுத்துக் கொண்டு அவர் பாடுவதாக, “தொழிலாளி” படத்தில் அமைந்த
“ஆண்டவன் உலகத்தின் முதலாளி,
அவனுக்கு நானொரு தொழிலாளி,
அன்னை உலகின் மடியின் மேலே
அனைவரும் எனது கூட்டாளி”
என டி.எம்.எஸ். குரலில் அமைந்த பாடல் தொழிலாளியின் பெருமையை இனிமையான இசையுடன் விளக்குவதாகும்.
சென்னையை அடுத்த பரங்கிமலை எம்.ஜி.ஆர். அவர்கள் பல்லாண்டுகள் சட்டமன்ற உறுப்பினராய் விளங்கிய தொகுதியாகும். அங்கே எம்.ஜி.ஆர். தோட்டம் இன்னும் சிறப்புடன் விளங்குகிறது. அங்கே காது கேளாத குழந்தைகள் பலர் இலவசமாய்க் கல்வி பெற ஒரு அருமையான பள்ளிக் கூடம் எம்.ஜி.ஆர். அருளால் துவங்கப் பட்டு இன்றும் சீரும் சிறப்புமாய் நடந்து வருகிறது.
எல்லா அரசுப் பள்ளிகளிலும் பயிலும் மாணவ மாணவியருக்கு தினந்தோறும் மதிய உணவு வழங்கும் நோக்கில் பெருந்தலைவர் காமராஜர் துவக்கி வைத்துத் திறம்பட நடத்தி வந்த மதிய உணவுத் திட்டத்துடன் பள்ளிகளில் மட்டுமின்றி வேறு பல மையங்களிலும் ஏழைக் குழந்தைகளுக்கு சத்தான உணவு வழங்கவும், அம்மையங்களில் அவர்களுக்குப் பாடங்கள் சொல்லித் தரவும் ஏற்ற வகையில் சத்துணவுத் திட்டம் கொண்டு வந்தவர் எம்.ஜி.ஆர். தான் தமிழ்நாட்டின் முதல்வராக இருக்கையில்.
எம்.ஜி.ஆர். ஒரு சகாப்தம்:
அகத்திய முனிவர் காவேரி நதியையே தன் சிறு கமண்டலத்தில் அடைத்தாரம். அது போன்றே எம்.ஜி.ஆர். குறித்த கட்டுரையை 1500 வார்த்தைகளுக்குள் அடக்குவதும் ஆகும். ஏனெனில், அவரது தனிமனித சிறப்பு குறித்தும் அவரது படங்கள் குறித்தும் எழுதத் துவங்கினால் மகாபாரதத்தையும் விட அதிகமான பக்கங்கள் நிறையும் என்பதில் எவ்வித ஐயமுமில்லை. எனினும் என் மனதில் அதிக பாதிப்பை ஏற்படுத்திய விஷயங்களை மட்டும் முன்வைக்கிறேன்.
வி.என். ஜானகி, பானுமதி, சரோஜா தேவி, சாவித்திரி, மாலினி, கே.ஆர். விஜயா, ரத்னா, ஜெயலலிதா, மஞ்சுளா உட்படப் பல கதாநாயகிகளுடனும் சேர்ந்து அவர் நடித்த திரைப்படங்கள் அன்றும் இன்றும் என்றும் பார்த்து இன்புறத் தக்க இனிய காவியங்களாகும். திரைப்படங்களில் கண்கவரும் பாடல் காட்சிகளும், செட்டிங்குகளும், சந்திரபாபு, எம்.ஆர். ராதா, டி.எஸ். பாலையா, நாகேஷ், மனோரமா, குமாரி சச்சு, ஐசரி வேலன் உட்படப் பல நகைச்சுவை நடிகர்கள் இடம்பெற்ற இனிய நகைச்சுவைக் காட்சிகளும் குறைவின்றி நிறைந்திருந்தன. கவிஞர் கண்ணதாசன், பட்டுக்கோட்டை கலியாணசுந்தரம், மருதகாசி, புலமைப் பித்தன், தஞ்சை ராமையா தாஸ், வாலி உட்படப் பல கவிஞர்கள் இயற்றிய அரிய பொருட்செறிவு மிக்க எம்.ஜி.ஆர். படப் பாடல்கள் திரையிசைத் திலகம் கே.வி. மகாதேவன் மற்றும் மெல்லிசை மன்னர் எம்.எஸ். விஸ்வநாதன் உட்படப் பல திறமைமிக்க இசையமைப்பாளர்களது இசையில் என்றும் நம் காதுகளில் ஒலித்துக்கொண்டேயிருக்கும் தன்மையவை. ஏ.எம். ராஜா, பி.பி. ஸ்ரீனிவாஸ், டி.எம். சௌந்தரராஜன், சீர்காழி கோவிந்தராஜன், எஸ்.பி. பாலசுப்பிரமணியம், கே.ஜே. ஜேசுதாஸ் உட்படப் பல பிரபலப் பாடகர்கள் என்.ஜி.ஆருக்குக் குரல் கொடுத்துப் பாடியுள்ளனர்.
எம்.ஜி.ஆர். படங்களில் பி.எஸ். வீரப்பா, ஈ.ஆர். சகாதேவன், டி.எஸ். பாலையா, சாண்டோ எம்.எம்.ஏ. சின்னப்பா தேவர், எம்.ஆர். ராதா, என்.என். நம்பியார், எஸ்.ஏ. அசோகன், ஆர்.எஸ். மனோகர் முதலானோர் முக்கிய வில்லன் பாத்திரங்களிலும் பிற குணச்சித்திரப் பாத்திரங்களிலும் தவறாமல் பங்கு பெற்றனர். நடிப்புத் திறமையில் புகழ்பெற்று விளங்கிய எந்த நடிகரையும் எம்.ஜி.ஆர். தன் படத்தில் பங்கேற்க வைப்பதில் மிக முனைப்புடன் இருந்தார். சிவகுமார், டி.கே. பகவதி, எஸ்.வி, சஹஸ்ரநாமம், எம்.வி. ராஜம்மா, பண்டரி பாய் முதலானோர் அவரது பல படங்களில் முக்கியப் பாத்திரங்களில் நடித்துள்ளனர். சின்னப்பா தேவர் எம்.ஜி,ஆர். அவர்ககளை வைத்துப் பல திரைப்படங்கள் தயாரித்துள்ளார்.
மாறுவேட மாமன்னன்:
எம்.ஜி.ஆர். மாறுவேடம் புனைந்து நடிப்பதில் தனித்திறமை வாய்ந்தவர். “குலேபகாவலி” திரைப்படத்தில் கிழவர் வேடம் பூண்டு டி.ஆர். ராஜகுமாரியும் தங்கவேலுவும் சேர்ந்து நடத்தும் ஏமாற்று பகடை விளையாட்டை வெளிச்சமாக்கும் காட்சிகளும், “பாக்தாத் திருடன்” படத்தில் அருவருப்பான கிழவர் வேடம் பூண்டு அடிமையாக விற்கப்படும் கதாநாயகி வைஜயந்திமாலாவை விலை கொடுத்து வாங்கி அவள் இரவில் திருட்டுத் தனமாகத் தன்னிடமிருந்து தப்ப முயல்கையில் பிடித்து, “யாருக்கு டிமிக்கி கொடுக்கப் பாக்குறே? எங்கே ஓடுறே? சொல்லு” எனும் பாடலைப் பாடும் காட்சிகளும், “மஹாதேவி” திரைப்படத்தில் குருடனாகத் தாயத்து விற்றுக்கொண்டே, “தாயத்து அம்மா தாயத்து” என்று பாடிச் சென்று மக்களூக்குத் தாயத்துகள் மூலம் ரகசிய செய்தி சொல்லும் காட்சிகளும், “படகோட்டி” படத்தில் வளையல் காரராக வேடம் பூண்டு எதிரிகளால் சிறை வைக்கப்பட்டிருக்கும் நாயகி சரோஜா தேவியை சந்தித்து, “கல்யாணப் பொண்ணு, கண்ணான கண்ணு கொண்டாடி வரும் வளையல்” என்று பாடி ஆடி தைரியமூட்டும் காட்சிகளும் “ENGAL THANGM” திரைப்படத்தில் மொட்டைத் தலையுடன் நெற்றி நிறையத் திருநீற்றுடன் அவர் செய்யும் கதாகாலக்ஷேபமும், “இதயவீணை” திரைப்படத்தில் சாமியார் வேடம் பூண்டு தன் சகோதரியின் திருமணம் நிகழும் மண்டபத்தில் வாயிலில் நின்று, “திருநிறைச் செல்வி, மங்கையர்க்கரசி திருமணம் கொண்டாள் இனிதாக” என்று பாடி மணமக்களை ஆசீர்வதிக்கும் காட்சிகளும் எம்.ஜி.ஆர். அவர்களின் தனித்திறமையை வெளிப்படுத்துகின்றன.
புரட்சித் தலைவர்:
“எத்தனை காலம் தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே” எனும் பாடலை “மலைக்கள்ளன்” படத்தில் பாடி நடித்த எம்.ஜி.ஆர். புரட்சி நடிகர் என்று கலைஞர் மு. கருணாநிதி அவர்களால் புகழப் பட்டார் முன்பு. அதே பாடலில் வரும்,
“தெருவெங்கும் பள்ளிகள் கட்டுவோம்,
கல்வி தெரியாத பேர்களே இல்லாமல் செய்வோம்,
கருத்தாகப் பல தொழில் பயிலுவோம்,
ஊரில் கஞ்சிக்கில்லை எனும்
கொடுமையைப் போக்குவோம்”
எனும் வரிகளை மெய்ப்பிக்கும் வகையில் தான் முதல்வரான பின்பு செயல்பட்டவர். புரட்சி நடிகர் புரட்சித் தலைவரான வரலாறு தமிழ்நாட்டு அரசியலில் ஒரு மிகப்பெரிய திருப்பம். இங்கே அரசியல் வேண்டாம் என்பதால் எழுதவில்லை.
பொன்மனச் செம்மல்:
திருமுருக கிருபானந்த வாரியார் அவர்கள் எம்.ஜி.ஆர். அவர்களுக்கு அவரது சேவை மனப்பான்மையைப் பாராட்டிப் “பொன்மனச் செம்மல்” என்று பட்டம் சூட்டினார். அப்பெயர் இன்றளவும் நீடித்து நிற்கிறது, இனி என்றும் நிலைத்து நிற்கும். “பொன்மனச் செம்மலைப் புண்பட வைத்தது யாரோ?” எனும் தஞ்சை ராமையா தாஸ் அவர்கள் இயற்றிய பாடல் வாணி ஜெயராம் பாட, எம்.ஜி.ஆர்., லதா ஆகியோர் நடிக்க இடம்பெற்ற படம் “சிரித்து வாழ வேண்டும்”.
எம்.ஜி.ஆர். ரின் முதல் படம் “சதி லீலாவதி”. அதன் பின்னர் அவர் “ராஜகுமாரி” எனும் படத்தில் கதாநாயகனாக நடித்தார். அதன் பின்னர் அவரது இறுதிப் படமான, “மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்” வரை கதாநாயகனாகவே நடித்து வந்தார். நடிகர் திலகம் சிவாஜி கணேசனுடன் அவர் இணைந்து நடித்த ஓரே திரைப்படம், “கூண்டுக் கிளி”. அதன் பின்னர் சிவாஜிக்குப் போட்டியாகத் தனியாக நடித்து வந்தாலும் தான் முதல்வரான பின்னர் கலைத்துறை தொடர்பான எந்த ஒரு பொது நிகழ்ச்சிக்குத் தலைமை வகித்த போதும் சிவாஜியை அழைத்து மேடையில் அமர்த்தி உரிய மரியாதை செலுத்தத் தவறியதில்லை.
அடிமைப்பெண் திரைப்படத்தில் முதல் முதலாக எஸ்.பி. பாலசுப்பிரமணியம் எம்.ஜி.ஆர். அவர்களால் தமிழ்த் திரையுலகிற்கு அறிமுகப்படுத்தப் பட்டார். பாடல் பதிவு செய்யும் நாளில் எஸ்.பி.பி. உடல்நலக் குறைவால் அவதிப்பட்டதால் பதிவு செய்யும் நாளைத் தள்ளி வைத்தார் எம்.ஜி.ஆர். பின்னர் பதிவு செய்யப்பட்டு ரசிகர்கள் மனங்களைக் கொள்ளை கொண்ட பாடலே,
“ஆயிரம் நிலவே வா,
ஓராயிரம் நிலவே வா,
இதழோரம் சுவை தேட,
புதுப் பாடல் விழி பாடப் பாட”
எனும் பாடல். அப்பாடலுடன் தன் தமிழ்த் திரையிசைப் பயணத்தைத் துவங்கிய எஸ்.பி.பி. இன்று சிங்க நடை போட்டு சிகரத்தில் ஏறி நிற்கிறார்.
தன்னைப் போலப் பிறரை எண்ணும் தன்மை கொண்ட பொன்மனச்செம்மலன்றோ எம்.ஜி.ஆர்!
“ஒளிவிளக்கு” திரைப்படத்தில் எம்.ஜி.ஆர். உயிருக்குப் போராடும் நிலையில் படுத்திருக்க, அவரது உயிரை மீட்டுத்தரக் கோரி சவுகார் ஜானகி அவர்கள் முருகனிடம் வேண்டுவதாக அமைந்த பி. சுசீலாவின் குரலில் ஒலித்த,
“ஆண்டவனே, உன் பாதங்களை நான்
கண்ணீரில் நீராட்டினேன்,
இந்த ஓருயிரை நீ வாழ வைக்க இன்று
உன்னிடம் கையேந்தினேன் முருகையா!”
எனும் பாடல் பிற்காலத்தில் 1984ஆம் ஆண்டு சிறுநீரகக் கோளாறினால் அவதியுற்று சென்னை அப்பொலோ மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டிருக்கையில் தமிழகமெங்கும் எல்லா ஊர்களிலும் ஆட்டோ ரிக்ஷாக்களிலும், வேறு பல இடங்களிலும் ஒலிபெருக்கிகள் வாயிலாகத் தொடர்ந்து ஒலிபரப்பப் பட்டது. எம்.ஜி.ஆர். பிழைத்து வர வேண்டும் என வேண்டாத உள்ளங்கள் அரிதாக இருந்தது அந்நாளில்.
தமிழ் மக்களின் பிரார்த்தனை பலித்தது. எம்.ஜி.ஆர். அவர்களை சகல வசதிகளுடன் ஒரு மருத்துவ மனையாகவே மாற்றப்பட்ட ஆகாய விமானத்தில் சென்னையிலிருந்து அமெரிக்காவில் இருக்கும் ப்ரூக்லின் மருத்துவ மனைக்கு எடுத்துச் செல்ல அந்நாளில் பாரதப் பிரதமராக இருந்த திருமதி இந்திரா காந்தியவர்கள் ஏற்பாடு செய்தார். ப்ரூக்லின் மருத்துவமனையில் தன் அண்ணன் சக்கரபாணி அவர்களின் மகள் தானமாகக் கொடுத்த சிறுநீரகம் பொறுத்தப்பட்டு உடல்நலம் தேறிப் புத்துயிர் பெற்றார் எம்.ஜி.ஆர். ப்ரூக்லின் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த காலத்திலேயே தமிழ்நாட்டு சட்டசபைத் தேர்தலில் போட்டியிற்று அபார வெற்றியும் பெற்றுத் திரும்பி வந்து முதல்வர் பதவியில் தன் இறுதி மூச்சுள்ள வரை தொடர்ந்தார்.
எம்.ஜி.ஆர். எனும் ஒளிவிளக்கு இவ்வுலகை விட்டு மறைந்த பின்னர் கழுதை தேய்ந்து கட்டெறும்பானாற் போலத் தமிழகம் மீண்டும் இருளில் மூழ்கி மக்கள் சொல்லுணாத் துயருற்று விலைவாசி ஏற்றத்தாலும், சுற்றுச்சூழல் மாசுபாடு பெருகுவதாலும், தண்ணீர் தரும் ஆறுகள் சாக்கடைகளாகி ஓட, சாராய ஆறு கட்டுக்கடங்காமல் கரைபுரண்டு ஓடுவதாலும் இன்னும் பல முறைகேடுகளாலும் அவதியுறும் நிலை வந்துற்றது. அவர் அன்று பாடி நடித்த, “எத்தனை காலம் தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே?” எனும் பாடலை மீண்டும் பாடி நல்ல காலம் வருமா என ஏங்கும் உள்ளங்கள் விடை தெரியாமல் கலங்கி மடிகின்றன.
இன்னும் ஒரு பொன்மனச் செம்மல் தமிழ்நாட்டைக் காக்க வர வேண்டும். நம் துன்பங்கள் தீர வேண்டும். அதற்கு மக்கள் திலகத்தின் உயிரைக் காத்த முருகன் அருள்புரிய வேண்டும்.
ஆகிரா.- vallami -net
My posting in vallamai about our makkal thilagam
மனதில் நிறைந்த மக்கள் திலகம்
உலகத் திரைப்பட வரலாற்றில் மாபெரும் புரட்சி செய்து என்றென்றும் கோடிக்கணக்கான ரசிகர்களின் உள்ளங்களில் ஒருவர் வாழ்கிறார் என்றால் உலக வரலாற்றில் அவர் மக்கள் திலகம் ஒருவரே. இயற்கையான நடிப்பால் மக்கள் மனதை வென்றவர் .ஆஸ்கர் விருதை விட, மக்கள் தந்த விருது ”மக்கள் திலகம் எம்ஜிஆர் ”- இது ஒன்று போதுமே.
எம்ஜிஆர் படங்களையும், அவரது ரசிகர்களையும் ஒரு கால கட்டத்தில் தரமின்றி சில பத்திரிகைகள் விமர்சனம் செய்தார்கள். அடிமட்ட மக்கள் மட்டும் எம்ஜிஆர் ரசிகர்கள் என்று ஏளனமாக பார்த்தார்கள். மக்கள் திலகம் எம்ஜிஆர் இவர்களைப் பற்றி கவலை படாமல் தன்னுடைய தொழிலில், அரசியலில், பொது வாழ்வில் தொடர்ந்து பல அற்புதங்களை நிகழ்த்தி மாபெரும் வெற்றிகளைக் குவித்தார். வெற்றி மேல் வெற்றி பெற்று எல்லா தரப்பு மக்களின் ஆதரவை பெற்றார்.
1957 முதல் 1984 வரை நடந்த பல தேர்தல்களில் எம்ஜிஆரின் பிரச்சாரம் – உழைப்பு – திரைப்பட தாக்கம் மறக்க முடியாதது . அண்ணாவை ஆட்சியில் அமர்த்தினார். பின்னர் கருணாநிதியை ஆட்சியில் அமர வைத்தார் . 1977ல் தானே முதல்வரானார். இந்த விந்தை உலகில் யாருக்கு சாத்தியம்? அவருக்குப் பிறகும் அவருடைய பெயர் – இரட்டை இலை சின்னம் மூலம் மூன்று முறை எம்ஜிஆர் ஆட்சி அமைத்தது – மக்கள் திலகம் எம்ஜிஆர் வலிமை அன்றோ ?
மக்கள் திலகம் எம்ஜிஆர் திரைப்படத் துறையை விட்டு விலகி 38 ஆண்டுகள் கடந்த பின்னாலும் இன்றும் அவருடைய எல்லா படங்களும் தொடர்ந்து ஓடிக்கொண்டிருக்கிறது. எம்ஜிஆர் புகழ் பாடும் பல புத்தகங்கள் வந்த வண்ணம் உள்ளது . எம்ஜிஆர் சிறப்பு நிகழ்ச்சிகள் நாடெங்கும் நடை பெற்று வருகிறது. மக்கள் திலகம் ஒரு சகாப்தம். சாதனையின் சிகரம் -திரை உலகின் சரித்திரம்.
சி. எஸ். குமார்.
http://i160.photobucket.com/albums/t...ps4yqymhoj.jpg
http://dinaethal.epapr.in/467013/Din...2015#page/13/1
For saving/records purposes only, do not read small letters.
என் தாயார் இறந்த செய்தி அறிந்து ,விரைந்து வந்து மலரஞ்சலி செலுத்தி, ஆறுதல் கூறி, என் துயரத்தில் பங்கு கொண்டு அனுதாபங்கள் தெரிவித்த
அனைத்துலக எம்.ஜி.ஆர். பொதுநல சங்கம் , இறைவன் எம்.ஜி.ஆர். பக்தர்கள் குழு,
பொன்மனச்செம்மல் ஸ்ரீ எம்.ஜி.ஆர். நற்பணி சங்கம், கலைவேந்தன் எம்.ஜி.ஆர்.
பக்தர்கள் அறக்கட்டளை , மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். மன்றம் (எழும்பூர் ), ஆயிரத்தில் ஒருவன் இறைவன் எம்.ஜி.ஆர். பக்தர்கள் ஆகிய அமைப்புகளைச் சார்ந்த தோழர்கள்
அனைவருக்கும் நன்றி.
ஆர். லோகநாதன்.