வாசு ஜி...
இது போலத்தான் பல பாடல்கள் சரியான வார்த்தைகளை நாம் உபயோகித்து தேடினால் கிடைக்கவே கிடைக்காது.. அதனால் நான் தப்பு தப்பாக டைப் செஞ்சுதா தேடுறது வழக்கம்.. கிக்கிக்கி.... அப்படித்தான் சிக்கிச்சு இந்தப் பாட்டும்..
Printable View
வாசு ஜி...
இது போலத்தான் பல பாடல்கள் சரியான வார்த்தைகளை நாம் உபயோகித்து தேடினால் கிடைக்கவே கிடைக்காது.. அதனால் நான் தப்பு தப்பாக டைப் செஞ்சுதா தேடுறது வழக்கம்.. கிக்கிக்கி.... அப்படித்தான் சிக்கிச்சு இந்தப் பாட்டும்..
'விஜயா' படத்துக்கு 'vijaya' ன்னு டைப் அடிச்சா படம் கிடைக்காது. 'vijeya' அப்படின்னு அடிக்கணும்.:)
மதுண்ணா!
சுசீலாம்மா பாடிய ஒரு அருமையான பாடல். கிட்டத்தட்ட 'தேடி தேடி காத்திருந்தேன்' மாதிரியே மனதை மயக்கும். இந்தப் பாடலுக்கும் நான் வாழ்நாள் அடிமை.
கண்ணா....மணிவண்ணா
முகுந்தா முராரே ம் ..ஹூம்
கனவு கண்டேன் கண்ணா!
நீ கை கொடுத்தாய் மணிவண்ணா!
மனமெனும் சோலையில் மலர் பறித்தே
நான் மனமெனும் சோலையில் மலர் பறித்தே
நான் மாலைகள் செய்து மணமுடித்தாய் நீ!
மாலைகள் செய்து மணமுடித்தாய் நீ!
(சரண வரிகள் ராக்கெட் வேகத்தில் பறக்கும்)
பந்தல் மீதொரு கூந்தல் தோரணம்
வாழைகள் ஆடிடக் கண்டேன்
வாடும் மங்கள மேளம் தாளமும்
ஊர்வலம் போய் வரக் கண்டேன்
மாதர் கூட்டம் கைகளில் தாங்கும் மஞ்சள்
குங்குமம் கண்டேன்
மாலை சூடும் மங்கை நானும்
மாயக் கருணையைக் கண்டேன்
(அடடாடா! இப்போ பாடுவார் பாருங்கள்).....
ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே! கிருஷ்ண ஹரே!
ஸ்ரீ கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே! கிருஷ்ண ஹரே!
இது 'பாதபூஜை' படம்தானே! படத்தில் இந்தப் பாடல் உண்டா? வீடியோ இருந்தால் போடுங்கண்ணா! கண்ணன், கிருஷ்ணன் இமேஜ்களுடன்தான் பாடலின் வீடியோ கிடைக்கிறது.
என்ன பாட்டு! என்ன பாட்டு! என்ன குரல்! என்ன இனிமை!
கேட்டுக் கொண்டே இருக்கலாமே!
https://youtu.be/YCvYMjmzogo
வாசு - வாழ்த்துக்கள் சீக்கிரமாய் அமைந்தால் , வரமும் சீக்கிரமே கிடைக்கும் என்பார்கள் . சுமூகமான முடிவுடன் தான் strike விடை பெற்றது என்று நினைத்தேன் . மது சார் சொன்னதுபோல் " பிரார்த்தனைகளுக்கான பலன்கள் தாமதம் ஆகலாம். ஆனால் கிடைக்காமல் போகாது. விரைவிலேயே எல்லாம் சுபமாக முடியட்டும்" .
உங்கள் மகிழ்ச்சியில் தான் எங்கள் இன்பமும் அடங்கி உள்ளது .
நன்றி வாசு - நல்ல நடிப்பு - ஒரு நல்ல ஜோடியை , டீச்சர் / மாணவன் என்று பிரித்து வயத்தெரிச்சலை வேறு வாங்கி கொள்வார்கள் - ஆனால் அந்த வயத்தெரிச்சல் அவர் நடிப்பில் நாம் சுத்தமாக பார்க்க முடியாது . ஒரு உண்மை மாணாக்கன் எப்படி இருக்க வேண்டும் என்பதை அருமையாக எடுத்துக்காட்டுவார் நடிகர் திலகம் .
Very correct Vasu. Mesmorising song . Song deserves to be added in the music folder of our cell phones .
Vasu - for U
https://www.youtube.com/watch?t=23&v=YofxxvjzSLM
எண்ணங்களின் வண்ணங்களாக எண்கள் திகழ்ந்திட்ட திகட்டாத மதுர கீதங்கள் !
எண் இரண்டு
PART 2/2Quote:
இரண்டு கண்கள் இரண்டு காதுகள் இரண்டு கால்கள் இரண்டு நாசித் துவாரங்கள்...நாணயத்தின் இரண்டு பக்கங்கள்....இரவும் பகலும் இரண்டு நேரங்கள்....
இன்பம் துன்பம் இரண்டு உணர்வுகள் ....ஆணும் பெண்ணும் இறைவனின் இரண்டு படைப்பம்சங்கள்....
எண் இரண்டை பெருமைப்படுத்திய திரைப் பாடல்கள் !
மக்கள்திலகம் பெருமைப்படுத்திய எண் இரண்டு !
கண்களிரண்டும் விடி விளக்காக .....
https://www.youtube.com/watch?v=KSFTdt6I1n8
கண்கள் இரண்டும் என்று உம்மைக் கண்டு பேசுமோ ...
https://www.youtube.com/watch?v=-xYZh6kgbk0
வாசு.. மதுண்ணா சொன்னாற்போல் பலன் கிடைக்க தாமதம் ஆகிறது.. கிடைக்காமற் போகாது..எங்கள் ப்ரார்த்தனைகள் என்றும் உங்களுடன்..
*
சி.செ..ரெண்டுல இப்பத்தான் கண்கள் ஆரம்பிச்சுருக்கீர்..ம்ம் இன்னும் கன்னத்துக்கு வர எவ்ளோ நேரம் ஆகுமோ :) நான் பாட் சொல்ல மாட்டேனே :)
செந்தில் சார் ..எந்த " எண் " வரையில் உங்கள் அற்புதமான பதிவுகள் வரக்கூடும் ? ஏன் கேட்கிறேன் என்றால் " 243" எண்ணில் எனக்கு சில பாடல்கள் தெரியும் , "அந்த எண் " பதிவு வரும்போது உங்களுடன் சேர்ந்துக் கொள்ளலாம் என்ற ஒரு ஆசை தான் !!
ரவி
எனக்கு ஒரு கோடியில் ஒரு சில பாடல்கள் தெரியுமே.. எப்போ வருமோ சான்ஸ்...
RaviG
We Love You or We Hate You songs!! On the anvil boss....
I feel this thread is very lively without inhibitions!!
Before I resume back to GG island...only two more concepts...suspense!!
Why 143 left RaviG?
Raghavendhar Sir
I know counting only from zero to ten!!
Crores ...Ten power seven!!
I invite contributions from you all for numbers more than 10!!
senthil
இரு நூறு முன்னூறு, ஆயிரம் அப்புற்ம் கோடி தான் இருக்கு லட்சத்துல பாட் இல்லை.. ஆமா..அதென்ன 243.. எனக்கு 247 தான் தெரியும்..!
நடிகர்திலகமும் இளைய திலகமும்
1பொட்டு வைத்த முகமோ.
பொட்டு வச்சதாரு
2நிலவைப் பார்த்து வானம் சொன்னது.
நிலவொன்று கண்டேன்.
3.மல்லிகை முல்லை
மல்லியே சின்ன முல்லையே
4.சொந்தம் எப்போதும் தொடர்கதைதான்
சொந்த சுமைய தூக்கி தூக்கி
5.மெல்லநட மெல்ல நட மேனி
மெல்ல மெல்ல நடந்து வந்தது
6.அழகு தெய்வம் மெல்லமெல்ல
அழகு நிலவு சிரிக்க மறந்ததே
7.பூ முடிப்பாள் இந்த பூங்குழலி
பூ பூத்த செடியக் காணோம்
8.காலம் மாறலாம்
காலம் எனும் ஏட்டினிலே
9.சீவி முடிச்சு சிங்காரிச்சு
சீவி சிணுக்கெடுத்து
10.சின்னஞ்சிறிய வண்ணப்பறவை
சின்னச்சின்ன சொல்லெடுத்து
//We Love You or We Hate You songs!! On the anvil boss....
I feel this thread is very lively without inhibitions!!
Before I resume back to GG island...only two more concepts...suspense!!// பதினாறு வயதினிலே கவுண்டமணி சொல்வது போல்... ஐயா என்ன சொல்றாக.. புரியலீங்க..
கடைசி வரி..ஜிஜி தீவுக்குத் திரும்பப் போறீங்க்ளா..ஏஏஏஏன்..
ஆசை ஆசை ! ஆசை ஆசை !!
ஆசையே துன்பத்தின் ஆணிவேர் என்பது புத்தரின் அருளோசை !
ஆடையில்லாதவன் அரை மனிதன் அதுபோலவே ஆசையில்லாதவர் அரைகுறை மனிதரே !!
ஆக்கபூர்வமான ஆசைகளே நாட்டின் வீட்டின் முன்னேற்றத்துக்கு அடித்தளம்!
பற்றற்றவரால் இப்பூமிக்கு எந்த பிரயோஜனமுமில்லை ஆசைகளே முன்னேற்றத்தின் படிக்கட்டுக்கள் !! பேராசையே பெருநஷ்டம்!!
தேடலே ஆசையின் விளைவு ! தேடல்களால்தான் நடிகர்திலகமும் காதல் மன்னரும் மக்கள்திலகமும் புகழுச்சியில் கோலோச்சி நமக்கெல்லாம் வழிகாட்டிகளாக நிலைக்க முடிந்தது ! காடு வாவா என்றாலும் ஆசை நம்மை நீங்குவதில்லை!! பிறப்பு முதல் இறப்பு வரை ரகம்ரகமாக எத்தனை ஆசைகள் நமது கனவுகளில் விதைக்கப்பட்ட கவிதைகளாக உலா வருகின்றன !!
பஞ்சுமிட்டாய்க்கு ஆசைப்படும் பிஞ்சுப் பருவம் ! கண்டதெல்லாம் கடலையான விடலைப் பருவம்!காதலை ஆராதிக்கும் வாலிபப் பருவம் !! குடும்பத்தை நேசிக்கும் சுமைதாங்கி வாழ்க்கைப் பருவம்! மனைவியை காதலிக்கும் வயோதிகப் பருவம்! கடவுளின் காலடி தேடும் உயிருதிர் பருவம்!!
மண்ணில் வந்து மண்ணில் வாழ்ந்து மண்ணையே சேரும்வரை ஆசைகள்தான் எப்பேர்பட்ட வண்ணக்கலவைகளான எண்ணச் சிதறல்கள்!!
காதல் மன்னரின் ஆசைப் பாடல்கள் !
ஆசையினாலே மனம்! ...அஞ்சுது கெஞ்சுது தினம்
https://www.youtube.com/watch?v=aKeGYz325cA
ஆசைப்பட்டது நானல்ல ...
https://www.youtube.com/watch?v=5JEw7WM2_1c
பத்துக்கு மேல ந்னு யோசிச்சுக்கிட்டிருக்கறச்சே டொய்ங்க்னு இந்த லைன் நினைவுக்கு வந்தது..
பதினோரு மணியானால் சிரிப்போம் கண்ணே..
பனிரெண்டு மணியானால் அழுவோம் கண்ணே
நம் வீட்டில் டைம் டேபிள் அது தான் கண்ணே
ம்ம் என்ன பாட் எனத் தேடிப்பார்த்தால் அவர் எனக்கே சொந்தம் பாட்..
ஒரு வீடு இரு உள்ளம்
ஒரு கோவில் இரு தெய்வம்
இரு பெண்கள் ஒன்றாக
இரு காட்சி தனியாக
எஸ்.பி.பி.. போட்டா வாசு சார் திட்டுவார்..:)
பதினாறு இருக்கு பதினெட்டு இருக்கு இருபது கோடில்ல இருபது இருக்கு அப்புறம் முப்பது நாற்பது ஐம்பது அறுபது போகுது..எழுபதுலருந்து 99 வரைக்கும் பாட் இல்லைன்னு நினைக்கிறேன்..சரியா சி.செ..
வாசு ஜி...
இது இணையத்தில் குழப்பப் பட்ட இன்னொரு பாட்டு... இது பாதபூஜை படமே இல்லை. ஏ.வி.எம்.ராஜன், வெண்ணிற ஆடை நிர்மலா நடித்த பாசதீபம் படம்.
( ஹி ஹி.. பாதபூஜை சென்னை அண்ணா தியேட்டரில் 1974 தீபாவளிக்கு முதல் நாள் மாட்னி ஷோ பார்த்து விட்டு அன்னைக்கு நைட் உஸ்மான் ரோடில் அவசரமாக ரெடிமேட் சட்டை வாங்கிக் கொண்டு காலையில் பட்டாசு வெடித்தேன்... பாசதீபம் ஆதம்பாக்கம் ஜெயலக்ஷ்மி தியேட்டரில் என் அப்பா, அம்மாவுட நைட் ஷோ போயிட்டு தூங்கி விட்டேன் :) )
என்ன ஒரு ஒற்றுமை ? இன்னைக்குத்தான் இந்தப் பாட்டைப் பற்றி தூத்துக்குடி பேராசிரியரைக் கேட்டிருந்தேன். அவரும் ஆடியோ அனுப்பினார். ஆனால் ஆடியோவில் ஒரு சரணம்தான் இருக்கு.. பாட்டுக்கு ரெண்டு ஸ்டான்ஸா உண்டு..
ரொம்ப நாளாச்சு... ரெண்டாவது சரணத்தின் வரிகள் சில மறந்து போச்சு... It goes like..
................................ கண்டேன்
சொந்தம் சுற்றம் வாழிய என்றே மலர்கள் தூவிடக் கண்டேன்
பாதி நிலாவில் பஞ்சணை மீது நாணம் பொங்கிடக் கண்டேன்
பாலும் பழமும் கண்டேன் அதிலே பரந்தாமன் உனைக் கண்டேன்
கனவு கண்டேன் கண்ணா...
பேராசிரியரிடம் பட வீடியோ இருப்பதாக சொன்னார். கண்டுபிடித்துக் கொடுத்தால் ரொம்ப சந்தோஷமாக இருக்கும்.. காத்திருப்போம்.
சிகQuote:
பதினாறு வயதினிலே கவுண்டமணி சொல்வது போல்... ஐயா என்ன சொல்றாக.. புரியலீங்க..
கடைசி வரி..ஜிஜி தீவுக்குத் திரும்பப் போறீங்க்ளா..ஏஏஏஏன்..
ஒண்ணுமில்லே சிக
ஜிஜி திரியை ஒரு நானூறு பக்கம் இழுத்து அட்லீஸ்ட் அவருக்காக ஒரு புல் திரெட்டாவது இருக்கணும்னு நினைக்கிறேன் ...அதுதான் அவருக்கு என்னுடைய
நடிகர்திலகம் திரி சார்ந்த நன்றிக்கடனாக இருக்கும் !! ஜஸ்ட் இரண்டுமாதங்கள் கான்சென்ட்ரேஷன்! ஒரு பத்து விதமான கான்செப்ட் அவருக்காக ஸ்கெட்ச் பண்ணியிருக்கிறேன் ! கொஞ்சம் விடியோ ஆய்வுகள்...அவ்வளவுதான்!
மதுர கானம் வேகமெடுத்து விட்டது ..விரைவில் இலக்கு 400 வந்துவிடும். நிறைவுக்குள் எண் கான்செப்டை முடித்துவிட்டு ஜிஜி திரி ஒரு ஷேப்புக்குவந்ததும் திரும்பி விடுவேன் ! இந்தவாரத்தில் எண் கான்செப்டை முடித்துவிடுவேன்!!
செந்தில்
You are right sika!
100 has a song but from 70 to 99 no songs!
senthil
மது அண்ணா !
அருமை! எனக்கு 'பாத பூஜை'யா என்று ரொம்ப நாளாக சந்தேகம். அதற்கு முன் இந்தப் பாடல் 'அம்மன் அருள்' என்று கூட நினைத்தது உண்டு. இப்போது நீங்கள் சொல்லித்தான் 'பாச தீபம்' என்று தெரிகிறது.
அண்ணா! எப்படியோ ஒருவழியாக யோசித்து
சொந்தம் சுற்றம் வாழிய என்றே மலர்கள் தூவிடக் கண்டேன்
பாதி நிலாவில் பஞ்சணை மீது நாணம் பொங்கிடக் கண்டேன்
பாலும் பழமும் கண்டேன் அதிலே பரந்தாமன் உனைக் கண்டேன்
வரிகளைக் கொண்டு வந்து விட்டீர்கள். சபாஷ்! நானும் இதே வரிகளைத் திரும்பத் திரும்ப பாடிப் பார்த்துக் கொண்டிருக்கிறேன். நீங்கள் எழுதிய வரிகள் மிகச் சரியாகத்தான் இருக்கிறது. எனக்கும் ஞாபகம் வருகிறது. அதில் கடைசி வரியின் கடைசி வார்த்தையாக
.'........பிருந்தாவனமும் கண்டேன்' என்று என்னையுமறியாமல் என் வாய் முணுமுணுக்கிறதே! சரியோ தவறோ நான் பாடியது?:)
ஒருவேளை 'பரந்தாமன் உனைக் கண்டேன்' வரிகளைத்தான் 'பிருந்தாவனமும் கண்டேன்' என்று மாற்றிப் பாடி வைக்கிறேனா?:) 'பரந்தாமன் உனைக் கண்டேன்' மிகச் சரியான வரி ஆயிற்றே!:confused2:
ராகவேந்திரன் சார்! ஹெல்ப் ப்ளீஸ்!
'இப்போது எழுபத்தைந்து' சரிதான் மதுண்ணா!
RaviG
We Love You or We Hate You songs!! On the anvil boss....
I feel this thread is very lively without inhibitions!!
Before I resume back to GG island...only two more concepts...suspense!!
=========
செந்தில் சார் , நீங்கள் CK வின் நெருங்கிய நண்பர் என்பது இங்கு எல்லோருக்கும் தெரியும் , அதற்காக அவர் மாதிரியே எழுத வேண்டுமா ??- நீங்கள் எதோ சொல்ல வருகிறீர்கள் என்று தெரிகிறது , என்ன என்பதுதான் புரியவில்லை .
//விரைவில் இலக்கு 400 வந்துவிடும். நிறைவுக்குள் எண் கான்செப்டை முடித்துவிட்டு ஜிஜி திரி ஒரு ஷேப்புக்குவந்ததும் திரும்பி விடுவேன் ! இந்தவாரத்தில் எண் கான்செப்டை முடித்துவிடுவேன்!!// அப்படி எல்லாம் தனியா ப் போக விட்டுடுவோமா.. நானும் வர்றேன்..வாஸ் மதூஸ் எல்லாம் ரேர் சாங்க்ஸோட வருவாக..அஃப்கோர்ஸ்.. ராக்ஸ் ஆல்ஸோ வில் ராக் :) ஹச்சோ என்னை மறந்ததேன் தென்றலேன்னு அமெரிக்கால்லருந்து குரல் கேக்குது..
//அதற்காக அவர் மாதிரியே எழுத வேண்டுமா ??- நீங்கள் எதோ சொல்ல வருகிறீர்கள் என்று தெரிகிறது , என்ன என்பதுதான் புரியவில்லை .// ரஙி சார்..:) என்னோட , சி.செயோட எழுத்துக்களே புரியலைன்னு சொன்னா கவிதைக்குக் கவிதை இழையில் கோபாலோட கவிதைகள்ளாம் படிச்சீங்கன்னா என்ன ஆவீங்கன்னு தெரியலை :) சரீ ஈ.. நானும் தானே அவரோட ஃபர்ஸ்ட் லைன் புரிலைன்னு சொன்னேன்..
inhibition னு வாசு பண்ணிப் பார்த்தா..கடைவிளைப் பொருள் தடுத்தல்னு ஒருஅர்த்தம்..(எனக்குப் புரியலை)இன்னொரு பேஜ்ல தடைகக்ட்டுச் செய்தல் தடைக்கட்டுத் தடுப்பாணை விலக்கி வைப்பு... மிக்ஸட் இன்ஹிபிஷன்ஸ்க்கு கலப்புத் தடுப்பான்கள்..னு வருது..சரி ரவி.. அந்த லைன்ஸ்க்கு எனக்குப் புரிஞ்ச அர்த்தம் அடுத்தபோஸ்ட்..:)
//RaviG
We Love You or We Hate You songs!! On the anvil boss....
I feel this thread is very lively without inhibitions!!
Before I resume back to GG island...only two more concepts...suspense!!//
ரவிஜி
நாங்கள் உங்களைக் காதலிக்கிறோம் அல்லது நாங்கள் உங்களை வெறுக்கிறோம்..பாடல்கள்!! அதாவது, ஆனியின் மேலே, முதலாளி,
இந்த இழையானது தடைகளின்றி வெகுவாய் ஈர்க்கும் வண்ணம் வாழ்வியல் சூழல் கொண்டுள்ளதாக நான் உணர்கிறேன்..
நான் ஜிஜியின் தீவுக்குப் (அப்பாவோடதா, பொண்ணோடதா?!) போவதற்கு முன் இரண்டே இரண்டுகான்செப்டுக்கள் கருக்கள் மட்டுமே..மர்மம்!
(ரவி, சி.செ..ச்சும்மா நகைச்சுவைக்காகத் தமிழ்ப்படுத்தினேன்.. மனம் புண்படும்படி எழுதி இருந்தால் மன்னிக்க)
Numerals rule the roost!!
எண்ணங்களின் வண்ணங்களான எண்கள் ஆட்டுவித்திட்ட அமுத கான வரிசை !
எண் மூன்று
Quote:
மூன்று என்பது மும்மூர்த்திளை ஆராதிக்கும் / மூவேந்தர்களை குறிக்கும் / முக்கனிகளை நினைவூட்டும் / சமுத்திர முக்கூடலை மனத்திரையில் விரிக்கும் / கடந்த காலம் நிகழ் காலம் எதிர்காலம் என்னும் முக்காலங்கள்......முப்படை அணிவகுப்பு, நீளம் அகலம் ஆழ/உயரம் முப்பரிமாணம்....
திரையுலகப் பொருத்தவரை நடிகர்திலகம் /மக்கள்திலகம்/ காதல் மன்னர் என்னும் முப்பரிமாண நடிகவேந்தர்களைக் கண்முன்னே நிறுத்தும் !
அரசியலிலும் மூன்று என்பது மந்திர வார்த்தையே ....
எண் மூன்று மக்கள்திலகம் அதிகமாகப் பெருமைப் படுத்தியதே!
மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும் ..அது முடிந்த பின்னாலும் பேச்சிருக்கும்...கடமை...அது கடமை...MGR என்ற மூன்றெழுத்து பொழுதுபோக்கு மனமகிழ் மந்திரவாதி பாடி ஆடுகிறார் !
https://www.youtube.com/watch?v=cvgOHwXNrFA
மூன்று தமிழ் தோன்றியதும் உன்னிடமோ...மு க முத்து முயல்கிறார்...நகலெடுக்க!
[url]https://www.youtube.com/watch?v=SaC4mtYp4FY
மதுரையில் பறந்த மீன்கொடி ராஜஸ்ரீ முக்கனியாய் மூவேந்தர் ராஜ்ஜியமாய் ஒன்றான தமிழகமாக வர்ணிக்கப் படுகிறார் ..காதல் மன்னரின் புகழ் பெற்ற
பைஜாமா ஜிப்பா கெட்டப்பில் !!
https://www.youtube.com/watch?v=v7PePTO-xYI
மூன்று தமிழும் ஓரிடம் வந்து பாடவேண்டும் காவிய சிந்து ....நாளை நமதே!
[url]https://www.youtube.com/watch?v=aoj1z1KnWwk
மூன்று சார்ந்த பாடல்களின் அணிவகுப்பு இனி நண்பர்களின் பங்களிப்பிலே !
From PuNyavathi(1956), Tamil dubbed version of Snehaseema(1954) (Malayalam)
kaNNum moodi uranguga.....
http://www.youtube.com/watch?v=qZ7KcXpzORo
From the original
KaNNum pootti uranguga.......
http://www.youtube.com/watch?v=pn8O69xtB7U
Happy ONam ! :)
( It will be sleepy ONam iif you listen to these songs a few times. Have ONam fun ! :) )
மது
ஸ்கூல் மாஸ்டரில் நீங்கள் சொன்னது போல், மாணவர்கள் ஆசிரியரின் வீட்டைக் கட்டித் தருவது போல காட்சியமைப்பு. அதில் தான் அந்தப் பாடல் இடம் பெறும்.
ஏதோ ஒரு மாத இதழில், சத்யராஜ் வந்த புதிதில் தான் முதலில் ஒப்பந்தமாகி நடித்த படமாக அவசரக்காரி படத்தைத் தான் குறிப்பிட்டிருந்தார். ஆனால் படம் நீண்ட காலத் தயாரிப்பில் இருந்து ஒரு வழியாக 1981ல் வெளியானது. சட்டம் என் கையில் 1978ல் வெளியானது. இந்தப் படம் ஒப்பந்தமாவதற்கு முன்பாகவே அவசரக்காரி படத்தில் சத்யராஜ் ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார் என்றால் கிட்டத்தட்ட 4 ஆண்டுகள் கழித்தே படம் வெளியாகியுள்ளது.
பிலிம் நியூஸ் ஆனந்தனின் திரைப்பட வரலாற்றுப் புத்தகத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் விவரங்கள்
தயாரிப்பு - ஆனந்த் கிரியேஷன்ஸ்
தணிக்கை - 03.06.1981
வெளியீடு - 05.06.1981
அதாவது கல்தூண் வெளியான வாரத்திற்கு அடுத்த வாரம் வெளியிடு.
தயாரிப்பு - ஏ. ரத்தினம்
இயக்கம் - கே.எஸ். மாதங்கன்
வசனம் - கே.எஸ். மாதங்கன்
இசை - சங்கர் கணேஷ்
ஒளிப்பதிவு - விஸ்வம் நடராஜ்
நடிக நடிகையர் - மோகன் குமார், ரூபா சக்கரவர்த்தி -
http://www.5eli.com/Lyrics/wp-conten...asarakkari.jpg