மணல் கயிறு ..S. V சேகர்
https://uploads.tapatalk-cdn.com/201...9724fb6ced.jpg
Printable View
மணல் கயிறு ..S. V சேகர்
https://uploads.tapatalk-cdn.com/201...9724fb6ced.jpg
பொங்கும் மங்கலம் எங்கும் தங்குக
அனைவருக்கும் இனிய தை திங்கள் பொங்கல் திருநாள் வாழ்த்துகள்.
மற்றும்
உழவர் திருநாள் வாழ்த்துகள்!
அன்புடன்
பொங்கல் வாழ்த்துக்கள்
செச்தில்வேல் பழைய பொக்கிஷங்களின்
அணிவகுப்பு பிரமாதம் தொடருங்கள்.
சிலவற்றை வாசிக்கமுடியாமல் இருக்கிறது
இதனை கவனத்தில் கொண்டு பதிவிடுங்கள்.
சிலவற்றின் தொடர் காணப்படவில்லை
அவற்றையும் கவனத்தில் எடுத்து பதிவிடுங்கள் நன்றி.
திரை மடல் ஒருசில பத்திரிகைகள் பார்த்த ஞாபகம் இருக்கிறது.
மதிஒளி , சிவாஜி ரசிகன், சினிமா ஸ்டார் , சினிமா குண்டூசி
என்பன அனைவரும் அறிந்த நடிகர் திலகம் சார்பாக
தமிழகத்தில் இருந்து
வெளிவந்த பிரபலமான பத்திரிகைகளாகும்.
இவை தவிர மின்மினி என்ற பத்திரிகை ஒன்றும் வெளி வந்தது.
இலங்கையிலிருந்து சிம்மக்குரல் ,நடிகர் திலகம் சிவாஜி,
ரசிகன், மின்மினி, மதிஒளி,சிவாஜி ,உத்தமன், திரைமன்னன்
ஆகிய பத்திரிகைகள் நடிகர் திலகம் சார்பாக வெளிவந்தன.
மின்மினி
அன்பு நண்பர்கள் அனைவருக்கும் இதயம் நிறைந்த உழவர் திருநாள் நல்வாழ்த்துக்கள்.
மிகவும் கனத்த இதயத்தோடு கொண்டாட வேண்டிய பொங்கலாக அமைந்து விட்டது.
ஒருபுறம் கொத்துக்கொத்தாக விவசாயிகள் மரணம்.
மறுபுறம் மழையும் இன்றி நதிகளில் நீர் வரத்தும் இன்றி பாதி கதிர்கள் வந்த நிலையில் காய்ந்துகிடக்கும் வயல் வெளிகள். போட்ட முதலீட்டை முழுவதும் இழந்து நிற்கும் விவசாயிகள்.
தண்ணீர் இல்லாததால் இப்போதே துவங்கி விட்ட தண்ணீர் பஞ்சம், அதை தொடர்ந்து அச்சுறுத்தும் உணவுப் பஞ்சம்.
தமிழரின் வீர விளையாட்டான ஏறு தழுவுதல் இவ்வாண்டும் இல்லாமல் போன ஏமாற்றம்.
கையில் பணப்புழக்கம் இன்றி தவிக்கும் மக்கள்.
என்று பலவாறு நம்மை சந்தோஷம் இழக்க வைத்த பொங்கல்.
விரைவில் சுபிட்சம் திரும்ப இறைவனை வேண்டுவோம்.
அன்பு செந்தில்வேல் சார்,
தங்களின் ஆவணப் பதிவுகள் அனைத்தும் அருமையோ அருமை. கடந்த கால சுவையான நினைவுகளை மனதில் கொண்டு வருவதுடன் நமது பதிவர்கள் எழுத்துக்களால் பதிவிட்ட விவரங்களுக்கு சிறந்த சான்றுகளாகவும் அமைந்துள்ளன.
உதாரணமாக,
நமது முரளி சார் அவர்கள் மணியன் பற்றிய கட்டுரையில் சொல்லி இருந்த நடிகர்திலகம் நடிக்க சிவாஜி புரொடக்ஷன்ஸ் எக்ஸ்போவில் எடுப்பதாக இருந்த படவிவரம், மதிஒளியில் வெளியான விவரத்துக்கு சான்றாக அமைந்துள்ள 'மதிஒளி' பத்திரிகையின் முதல் பக்கம்.
அதுபோல நமது கார்த்திக் சார் பங்கேற்றதாக எழுதியிருந்த உண்ணாவிரத போராட்டம் பற்றிய 'திரைமடல்' இதழ் என தங்கள் ஆவண பங்களிப்பு மகத்தானது.
நடிகர்திலகத்தின் ரசிகர்கள் ஆதாரம் இல்லாமல் சரடு விடுபவர்கள் அல்ல என்பதை உணர்த்துவதாக அமைந்துள்ளது.
எனக்கு நமது சாஸ்திரிய சங்கீத கீர்த்தனைகளில் விமர்சனம் உண்டு. அது அவ்ளோ பெரிய விஷயமா ,ராகத்தை ஒட்டி வார்த்தை நிரப்பல்தானே என்று? ஆனால் தஞ்சாவூர் சங்கரன் என்பவர் மும்மூர்த்திகளின் கீர்த்தனை சிலதை எடுத்து விளக்கினார். ஒவ்வொரு எழுத்தும் வார்த்தையும் எப்படி முக்கியத்துவம் பெற்று ராகங்களின் அழகை மிளிர வைக்கிறது என்று.
அதை போல் தான் நடிகர்திலகத்தின் வசன உச்சரிப்புகளும். தமிழனுக்கு தமிழை எழுத கற்று கொடுத்தவர்கள் வள்ளுவர் முதல் பாரதி வரை ஏராளம். ஆனால் தமிழை அதன் அழகுடன், அர்த்தத்துடன் பேச தமிழனுக்கு கற்று கொடுத்த ஒரே மேதை நடிகர்திலகம் அல்லவா?அதுதானே பலரை கவர்ந்து தமிழை பாமரர் முதல் பண்டிதர் வரை பள்ளி மாணவரில் இருந்து பல் போன முதியவர் வரை தமிழ் மீது ஆர்வத்தை தூண்டி புலவர் எழுத்துக்கும் பாமரர் மனதுக்கும் தொடர்பு கண்ணியானது? எனக்கு முதல் பரிச்சயம் கட்டபொம்மனுடன் ஒலிச்சித்திரம் (soundtrack ) மூலமே ஏற்பட்டது.பிறகு வசன புத்தகத்தை வாங்கி வசனங்களை மனனம் செய்தேன். அவரை போல் பேச முயன்றேன்.
listen only to soundtrack and you will realise the timbre ,modulation ,tonal clarity ,subtle and quick flow of variation in octave levels that plucks every known &buried emotional suggestions from the dialogue with its rhythm and beauty(He lived in his voice) .அவருடைய ஆண்மையான குரலில் வசனத்தின் ஒவ்வொரூ எழுத்தும் சொல்லும் அவரின் பாவம், ஏற்ற இறக்கம், தெளிவு, கவிதையின் அழகு,முக பாவத்திற்கேற்ற கை கால் உடல் அசைவுகளுக்கேற்ப மெல்லிய துல்லிய குரல் மாற்றங்கள், நம்மில் அந்த பாத்திரத்தை அதன் உணர்வை மனகண்ணில் காட்டி விடும் வலிமை கொண்டது.
http://i1028.photobucket.com/albums/...psacaajlzo.jpg
"பொங்குதல்...
ஆனந்த முழுமையின்
அடையாளம்."
- அன்புத் தலைவனின் திருமுகத்தை அனுதினமும்
ஆயிரம் முறைகள் தொலைக்காட்சிகள் காட்டினாலும், திரையரங்கின் "வெள்ளி" விரிப்பில்
அந்தப் "பொன்" முகத்தைக் காண்பதே பிறவிப் பயனென்று வாழும் நூற்றுக்கணக்கான ரசிக நெஞ்சங்களின் உணர்வுகள் பொங்குமிடத்தில்
"சொர்க்கம்" கண்டேன்.
அன்புச் சகோதரர் திரு. சுந்தர்ராஜன் அவர்களின்
செயல் எழுச்சி, திரு. பிரபு வெங்கடேஷ் அவர்களின் சுறுசுறுப்பு , சென்னை திரு. ஜெயக்குமார் அவர்களின் வெறித்தனமான சிவாஜி பித்து, பிப்ரவரி 10-ல் "ராஜபார்ட் ரங்கதுரை" யை உலகெங்கும் உலவ விடும் நற்செய்தியோடு கை குலுக்கிய திரு. பாலகிருஷ்ணன் அவர்களின் பேருழைப்பு, அகில
இந்திய சிவாஜி மன்றம், தலைவன் சிவாஜி மக்கள் இயக்கம், சிவாஜி பேரவை போன்ற அய்யனின் கீர்த்தி சொல்லும் அற்புத இயக்கங்களோடு தம்மைப் பிணைத்துக் கொண்டு
அயராது பணியாற்றிய அன்பு நெஞ்சங்களின்
ஆர்வம், ஒரு பெரிய பொறுப்பிலிருக்கும் கர்வம்
காட்டாது எல்லோரோடும் அன்போடு கலந்து நின்று அய்யன் புகழ் பாடிய அகில இந்திய சிவாஜி மன்றத்தின் இணைப் பொதுச் செயலாளர்
அண்ணன் திரு. முருகவிலாஸ் நாகராஜன் அவர்களின் பேரன்பு...
இவற்றின் மீதான வியப்புகளுடனே "சொர்க்கம்"
கண்டேன்.
உள்ளே மூன்றே நபர்களை வைத்துக் கொண்டு,
வெளியே நூறு நாள், வெள்ளி விழாவெல்லாம்
காணுகிற பொய்ப் படங்களுக்கு மத்தியில், ஒரு
திருவிழாவிற்குப் போல் திரண்ட பெருங்கூட்டத்தின் பூரிப்பில் "சொர்க்கம்" கண்டேன்.
ஒரு பொழுது போக்குச் சித்திரம் காட்டப்படுகிற
திரையரங்கத்தை, காலங்கள் வியக்கும் கலைக்
கூடமாய் மாற்றத் தெரிந்த எங்களய்யன் நடிகர்
திலகம் சிருஷ்டித்த "சொர்க்கம்" கண்டேன்.
" எனக்கு ஒரு லட்சியம் உண்டு. எல்லோரும் என்னைப் பத்தியே பேசணும்." - எல்லோரையும்
தன்னைப் பற்றியே இன்றளவும் பேச வைக்கிற
தலைவன் இந்த வசனம் பேசுகிற போதும்...
அட்டகாசமான ஆடை மாற்றத்திற்குப் பிறகு "பொன்மகள் வந்தாள்" பாடலின் துவக்கத்தில்
ஒயிலாய்த் திரும்பி நிற்கும் போதும்...
முதல் தடவையாய் குடித்து விட்டு வந்து, மனைவியிடம் அழுது புலம்பும் போதும்...
"நீல வானம் மெல்ல மெல்ல சிவந்து போனதே"
என்ற வரியின் போது நிஜமான செவ்வானத்தை
கண்களில் காட்டுகிற போதும்...
தன்னை விட்டுப் பிரிந்து போக எண்ணும் மனைவியிடம் உரையாடும் போது, நடந்து போனவர் மிடுக்காய் திரும்பி நின்று பார்க்கும்
போதும்...
ஜூலியட் சீஸராக நேர் நடை நடந்து வரும்
போதும்...
"உன்னையா மறப்போம் உத்தமனே?" என்று உள்ளங்கள் வினவுவதைக் கரவொலியாக்கி,
அரங்கமெங்கும் பரவ விட்ட அன்பு நெஞ்சங்களோடு நானும் கலந்த நிம்மதியில்
"சொர்க்கம்" கண்டேன்.
*****
நல்லதையே வாழ்நாள் முழுக்க செய்து வந்தாலும்,
செத்தால்தான் "சொர்க்கம்" .
நல்லவரான தன்னை மிக நேசிக்கும் நல்லவர்களுக்கு வாழும் போதே "சொர்க்கம்"
காட்டினான் தலைவன்.
வணங்குவோம்... நமக்கு "சொர்க்கம்" தந்தவனை.
vasu sir kalakkal. semma collage.
'சொர்க்க'த்தை நேரில் கண்டு அதை வார்த்தைகளில் வடித்துக் காட்டிய ஆதவன் ரவிக்கு நன்றி! போதையில் மனைவியிடம் உளறும் கட்டம் மாஸ்டர் பீஸ். குறிப்பாக அந்த 'குடிச்சேன்.....குடிச்சேனா!
https://c1.staticflickr.com/9/8323/8...19b415ec_b.jpg
http://i1087.photobucket.com/albums/...31355/efgh.png
நன்றி ராகவேந்திரன் சார். முக நூலில் நண்பர் ஒருவர் போட்ட அட்டகாசம் அது. அவருக்கு நம் மனமார்ந்த நன்றிகள். Nadigar Thilagam Film Appreciation Association ஆறாவது ஆண்டு Annversary விழாவிற்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள். இதை சிறப்பாக திறம்பட நடத்தி வரும் தங்களுக்கும், முரளி சாருக்கும் திரு. ஒய்.ஜி.மகேந்திரா சார் அவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகளும், வாழ்த்துக்களும். நம் 'டார்லிங் இயக்குனர்' விழா சிறப்பாக நடை பெற வாழ்த்துக்கள்.
Best Wishes Ragavendhar and Murali for falicitating our Youth Icon of our times and who made use of Sivajis youthfull goodlooks and Energy.
நன்றி வாசு மற்றும் கோபால்.முகநூல் அதிக பரிச்சயமில்லாத காலம், வாட்ஸப் தோன்றாத காலம்.. நம்முடைய மய்யம் இணையதளம் நடிகர் திலகம் திரிகள் மட்டுமே கருத்துப் பரிமாற்றங்களுக்கு சிறந்த வடிகாலாய் விளங்கிய (இன்றும் அப்படித்தான்) நாட்களில் நம் அமைப்பினைத் தொடங்குவதற்கு அடித்தளமிட்டதே நம் மய்யம் இணைய தளமும் நம் நடிகர் திலகம் இணைய தளமும் தானே. குறிப்பாக நம்முடைய மய்ய நண்பர்களின் முயற்சியில் உருவானது தானே இந்த அமைப்பு. ஒரு ஆகஸ்ட் மாதம் ஞாயிற்றுக்கிழமை மாலை சென்னை ஸ்பென்ஸர் பிளாஸாவில் சந்தித்தபோது உருவானது தானே இவ்வமைப்பு. பின்னர் அது ஒரு வடிவம் பெற்று நிர்வாகிகள் தேர்வாகி நம் ஒய்ஜீ.மகேந்திரா அவர்களின் தாயார் திருமதி ராஷ்மி அவர்களின் ஆசியோடு பாரத் கலாச்சார வளாகத்தில் உள்ள பிள்ளையாரை வழிபட்டுத் தானே முதல் விண்ணபத்தை அளித்துத் தொடங்கி வைத்தார். அது மட்டுமா.. அதன் தொடக்க விழாவை மிகச்சிறப்பாக நடத்தி நல்லதொரு அஸ்திவாரத்தை அளித்த மகேந்திராவுக்கு எப்படி நன்றி சொல்ல. நம் மய்யம் இணையதளத்தில் நடிகர் திலகம் திரியில் பல நாட்களுக்கு இதைப்பற்றிய பகிர்வுகள் இடம் பெற்றனவே. வாசு சார் அளித்த ஏராளமான நிழற்படங்கள் இன்றும் கண்ணில் நிற்கின்றன. இத்தருணத்தில் அனைவருக்கும் குறிப்பாக மய்யம் இணைய தளத்திற்கு உளமார்ந்த நன்றி.