http://i280.photobucket.com/albums/k...psja5t06ge.jpg
Printable View
மதுரை திருநகர் தேவி கலைவாணியில் வெற்றிகரமான இணைந்த 2 வது வாரம் .
http://i280.photobucket.com/albums/k...psreh0insh.jpg
நெல்லை - கணேஷில் வெற்றிகரமான 25 வது நாள் கொண்டாட்டம் .
http://i280.photobucket.com/albums/k...psib75oaqa.jpg
புகைப்படங்கள் உதவி : மதுரை நண்பர் திரு. எஸ். குமார்.
ஆமாம் அப்பா செல்வகுமார் அவர்களே.
நண்பர்கள் யாராச்சும் அனுப்பிவிடுகிறார்கள். கண்ணில் பட்டு தொலைக்கின்றது. மதுரையில் புரட்சித் தலவர் நூறாண்டு நிகழ்ச்சிக்கு கூ்ட்டமே இல்லை. காங்கயநல்லூரில் நடந்த அவர்கள் நடிகரின் சிலை திறப்பு விழாவுக்கு கூட்டம். இதனால், யாருக்கு செல்வாக்கு என்று தெரியுதா/ என்பது மாதிரி முகநூலில் ஒரு பதிவு. அதுக்கும் ஆமாம் போட ஒரு மண்டுக் கூட்டம். காங்கய நல்லூர் சின்ன ஊர். கூட்டம் நடந்ததும் சின்ன இடம். 100 பேர் சேர்ந்தாலே பெரிசாய் தெரியும்.
சரி. பரவால்ல. நமக்குத்தான் கூட்டமே வராது. அவர்கள் நடிகருக்கே செல்வாக்கு. கூட்டம் வரும். அவ்வளவு பேர் ஓட்டு போட்டால் அவர் தேர்தல்ல ஜெயிச்சிருக்கணுமே? .உடனே அவர் நல்லவர். ஏமாத்த தெரியாது. நிஜத்தில் நடிக்க தெரியாது என்று பதில் சொல்வார்கள், அப்ப தேர்தல்ல ஜெயிச்ச காமராஜ் எல்லாம் அயோக்கியர்களா? உண்மையில் அந்த நடிகரின் ரசிகர்களே அவரை கவுத்துவிட்டார்கள். அவர ரசிச்சவர்களி்ல் பாதிப்பேர் அவருக்கும் அவர் கட்சிக்கும் ஓட்டு போடவி்லை். இதில் சுயமாய் சிந்திக்கும் மேதாவிகள் என்று கூறிக் கொண்டு பாதிப்பேர் திமுகவுக்கு ஓட்டு போடுவார்கள். அதுவும் புரட்சித் தலைவர் ஜெயிக்கக் கூடாது என்பதற்காக. இதுங்களை எல்லாம் ஒதுக்கிவிட்டுத்தான் புரட்சித் தலைவர் வெற்றிபெற்றார்.
அதும் பரவால்ல. இப்பவும் அவர்கள் நடிகரின் சிலைய மெட்ராசில் எடுக்கப் போகிறார்கள்? இவர்கள் என்ன செய்கிறார்கள். ஒரு ஆர்ப்பாட்டம், போராட்டம் உண்டா/ அவ்வளவு செல்வாக்கு உள்ள நடிகரின் ரசிகர்கள் எங்கே? புரட்சித் தலைவர் சிலையை எவனாச்சும் எடுக்க முடியுமா? ரோட்டில குடும்பத்தோட படுத்துற மாட்டோம்? அதெல்லாம் இவர்கள் செய்ய மாட்டார்கள். செய்ய ஆளும் இல்லை. வெறுமே திண்ணையில் உக்காந்து பேசுவார்கள்.
ஆனால், நாம்ப லைட் போஸ்டில் ஏறி கொடி தொரணம் கட்டிருக்கோம். பட்டினியோட டீய மட்டும் குடிச்சு ராத்திரி பூரா கண் முழிச்சு போஸ்டர் ஒட்டிருக்கோம். தேர்தல் அன்று பூத்துக்கு முன்னாடி 6 மணிலேருந்து நின்னு டேபிள் போட்டு ஸ்லிப் குடுத்து ஏற்பாடுகள் பண்ணி ஓட்டு போட வர மூஞ்சி தெரியாதவன் காலில் எல்லாம் விழுந்து இரட்ட இலைக்கி ஓட்டு கேட்டுருக்கோம்.
புரட்சித் தலைவரின் ஒவ்வொரு ரசிகனும் அவருக்கே ஓட்டு போடுவான். தன் குடும்பத்தையும் ஓட்டு போட வைப்பான். அனால், அந்த நடிகரின் ரசிகர்களே அவருக்கு ஓட்டு போட மாட்டார்கள். இதில் செல்வாக்கு கூட்டம் ரசிகர் படை என்று பேச்சு வேற. 1989-ல் திருவையாறு தொகுதியிலேயே செல்வாக்கு தெரிஞ்சு போச்சே. இவர்கள் நடிகர் கொஞ்ச நஞ்சம் இல்ல 10 ஆயிரம் ஓட்டு வித்தியாசத்தில் திமுக காரன்கிட்ட தோத்தாரே. இன்னும் எதுக்கு இவன்களுக்கு வாய். அதும் சேகர் என்ற முட்டாளுக்கு புரட்சித் தலைவரை குறை சொல்லாமல் பதிவு போடயே தெரியாது.
இமயம் படத்தை பத்தி எல்லாம் தெரிஞ்சதா காட்டிக்கும் ஒரு மேதாவி எழுதி இருக்கிறது. படத்தை பத்தி எழுதினா அதப்பத்தி மட்டும் எழுத வேண்டியதுதான். அது ஒரு டப்பா படம். அதுக்கு சம்பந்தமே இல்லாமல் புரட்சித் தலைவர் அரசியல் நிலை மாற்றிவிட்டார் என்று மேல விழுந்து பிராண்டுகிறது. அந்த காலத்தை எழுதினேன் என்றால் 1975-76ல் காமராஜூக்கு இவர்கள் நடிகர் துரோகம் செய்துவிட்டு, அவர் இறந்துபோன உடனே உங்களைக் கேட்காமல் முடிவு எடுக்க மாட்டேன் என்று ரசிகர்களிடம் பொய் சொல்லிவிட்டு அவர்களையும் ஏமாற்றிவிட்டு யாருக்கும் தெரியாமல் டில்லிக்கி போய் கட்சி மாறி, இந்திரா காந்தியிடம் சேர்ந்ததையும் சொல்ல வேண்டும். அதுதான் நேர்மை. இல்லாவிட்டால் யாரயும் எழுதக் கூடாது.
இது நமக்கு தேவை இல்லாதது. ஆனால், இமயம் பட விமரிசனத்தில் தேவயில்லாமல் புரட்சித் தலைவர பற்றி சொல்லும்போது நாங்களும் சொல்ல வேண்டிஇருக்கு.ஸ்கைலாப் ராக்கெட் விழும் என்று மக்களுக்கு பயம் இருந்துதாம். கூட்டம் கூட்டமா நின்னு பேசினார்களாம். அதனால இமயம் படம் ஒடவில்லையாம். படம் வரதுக்கு பத்து நாள் முன்னாடியே ஸ்கைலாப் ராக்கெட் விழுந்துவிட்டது. நாங்களும் அப்போ அதுபற்றியே பேசிக் கொண்டிருந்தோம். அதுக்கு 10 நாளுக்கு அப்பறம்தான் படம் ரீலீஸ். இமயம் படம் 21ம் தேதி ரிலீஸ். அதுக்கு ஒரு பத்துநாள் முன்னாலே ராக்கெட் விழுந்திருக்கும். படம் வந்தபோது எல்லாம் முடிஞ்சி போச்சி. மக்கள் அதைப்பத்தி மறந்துவிட்டு வேலையை பார்க்க ஆரம்பித்து விடட்ார்கள். இது உண்மை. யாராவுது விவரம் தெரிஞ்சவர்கள் எப்படியாவது தேதியை சரி பாருங்கள். உண்மை தெரியும். ஆனால், மக்கள் ராக்கெட் பத்தி கவலையா இருந்தாங்களாம். படம் வெற்றி பெறாததற்கு காரணங்கள் என்று நான் நினைச்சவற்றை எழுதி இருந்தேன் என்று முன்னுரை வேற.
இவன்கள் மட்டும்தான் இப்ப உயிரோட இருக்கான்கள். நாம்ப எல்லாரும் எம்ஜிஆர் ரசிகர்கள் எல்லாரும் செத்துபோயிட்டோம். நடந்தது ஏதும் யாருக்கும் தெரியாது என்று நினைக்கும் முட்டாள்கள்.
போறாமை புடிச்சவங்களா. பொய்யிக்கு ஒரு அளவே இல்லியாடா.
நன்றி அப்பா செல்வகுமார் அவர்களே.
பாக்யா வார இதழ் -28/7/17
http://i280.photobucket.com/albums/k...psgn8ejucn.jpg
சினி சாரல் மாத இதழ் -ஜூலை 2017
http://i280.photobucket.com/albums/k...psvfpvfnal.jpg
http://i280.photobucket.com/albums/k...psxv5w6mek.jpg
1970ல் பொங்கலுக்கு "மாட்டுக்கார வேளாண் " மற்றும் எங்க மாமா படங்கள் வெளியாகின . இதில் மாட்டுக்கார வேலன் பிரம்மாண்ட வெற்றிப்படமாகியது .
ப. நீலகண்டன் இயக்கி, கே.வி. மகாதேவன் இசையமைக்க ,அசோகன் வில்லனாக நடித்தார் .
http://i280.photobucket.com/albums/k...psoh0nuppd.jpg
ஆனந்த விகடன் வார இகழ் -12/07/17
---------------------------------------------------------
மதுரையில் தி.மு.க. மாநாட்டை தொடங்கி வைக்கும் பெருமை எம்.ஜி.ஆருக்கு தரப்பட்டது . அப்போது பேசும்போது , என்னைவிட திறமையானவர்கள், தகுதியானவர்கள் கழகத்தில் இருக்கும்போது என்னை இந்த மாநாட்டைத் தொடங்கி வைக்க அழைத்தது ஏன் தெரியுமா? இது சாதாரணமானவர்களுக்கான கட்சி .சாமானியர்களுக்காகப் பாடுபடும் கட்சி என்பதை எடுத்துக் காட்டத்தான் .இனி வரும் காலத்தில் சாமானியர்கள் பொறுப்புக்கு வருவார்கள் என்றார் .எம்.ஜி.ஆர். நினைத்த மாதிரியே சாமானியர்கள் பொறுப்புக்கு வந்தார்கள் .
தி,மு.க. படித்தவர்கள் கட்சியாக அடையாளம் காட்டப்பட்டபோது , அ. தி.மு.க. பாமரர் கட்சியாக சொல்லப்பட்டது. தன்னை வளர்த்தது கிராமப்புற ரசிகர்களென்பதால் எம்.ஜி.ஆரின் சிந்தனை கிராமப்புறத்தை சுற்றியே இருந்தது .சத்துணவு திட்டத்தில் மாற்றங்கள் கொண்டு வந்ததும் , அரிசி தட்டப்பாட்டுக்காக உண்ணாவிரதம் இருந்ததும் விலைவாசியை குறைக்க அ.தி.மு.க. வினர் போராடுவார்கள் என்று அ.தி.மு.க.ஆட்சியின்போதே அறிவித்ததும் எம்.ஜி.ஆர். தான் .
http://i280.photobucket.com/albums/k...ps3aayhw5i.jpg
பேதமற்ற, சமத்துவ, சமதர்ம சமுதாயத்தை உருவாக்குவதற்காகத்தான் மாநில சுயாட்சி கேட்கிறோமே தவிர , பிரிவினைக்காக அல்ல என்றவர் எம்.ஜி.ஆர்.
சாதி மதத்தை முன்னிறுத்தி அரசியல் செய்யும் அயோக்கியர்களை சட்டம் வேடிக்கை பார்க்காது என்று முதல்வராக இருந்தபோது எம்.ஜி.ஆர். சொன்னார் .
அ . தி.மு.க. என்கிற கட்சியை தொடங்கியதுமே , அ. தி.மு. க.தலைமையை ஏற்றுக் கொண்ட கட்சியுடன்தான் கூட்டணி என்று துணிந்து சொல்லும் முதுகெலும்பு எம்.ஜி.ஆருக்கு இருந்தது . அ தி. மு. க. தொண்டர்களால் உருவாக்கப்பட்ட ,ஆரம்பிக்கப்பட்ட கட்சி என்று எம்.ஜி.ஆர். பேசினார் .
கருணாநிதிக்கும், எம்.ஜி..ஆருக்கும் மோதல் வந்தபோது , கிண்டலாக எம்.ஜி.ஆர். சொன்னாராம் .அவர் கதாசிரியர், எல்லாக் கதையையும் எப்படி முடிப்பார் என்று எனக்கு தெரியும் . அவர் கதை சொல்லக் கேட்டிருக்கிறேன். ஆனால் நான் கதை சொல்லி அவர் கேட்டதில்லை . நான் கதையை எப்படி முடிப்பேன் என்பது அவருக்கு தெரியாது என்று .
தமிழ் இந்து -01/08/17
http://i280.photobucket.com/albums/k...psqtyzwxrz.jpg
இன்று காலை 11 மணி முதல் சன்லைப் சானலில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் நடித்த "கண்ணன் என் காதலன் "திரைப்படம் ஒளிபரப்பாகி வருகிறது
http://i65.tinypic.com/1zfn8lf.jpg
இன்று இரவு 7 மணிக்கு சன்லைப் சானலில் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். நடித்த "காவல்காரன் " திரைப்படம் ஒளிபரப்பாகிறது .
http://i280.photobucket.com/albums/k...psoll68d1y.jpg
பெங்களூர் தமிழ் சங்கத்தில் , கடந்த 16/7/2017 அன்று மாலை நடைபெற்ற மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு பிறந்த நாள் விழா பற்றிய தொகுப்பு :
-------------------------------------------------------------------------------------------------------------------------------
பெங்களூரு தமிழ் சங்கத்தில் கடந்த 16/7/2017 ஞாயிறு மாலை 6 மணியளவில்
மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு பிறந்த நாள் விழா , அமுதசுரபி டாக்டர்
எம்.ஜி.ஆர். நற்பணி மன்ற நிர்வாகி திரு. கா.நா. பழனி தலைமையில் வெகு சிறப்பாக அனுசரிக்கப்பட்டது
பெங்களூரு தமிழ் சங்க அரங்கத்தின் முன்பு புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். உருவம்
பொருந்திய எண்ணற்ற பேனர்கள் அமைக்கப்பட்டு இருந்தன .
மாலை 4 மணி முதல் சென்னை, கோவை,மதுரை, கோவில்பட்டி, கோவை ஆகிய நகரங்களில் இருந்து பக்தர்கள் வந்த வண்ணம் இருந்தனர் .
அரங்கத்தில் மேடையின் முன்பு , மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். "நாளை நமதே " படத்தில் கிளைமாக்சில் பயன்படுத்திய என்பீல்டு (புல்லட் ) மோட்டார் சைக்கிள் ,
மற்றும் திரைப்படத்தில் அவர் உடுத்திய ஓவர் கோட் ஆகியன பொதுமக்கள்
பார்வைக்காக வைக்கப்பட்டிருந்தன .
நிகழ்ச்சிக்கு வருகை தந்த அனைவரையும் திரு.கா. நா. பழனி வரவேற்றார்.
மாலை 6 மணியளவில் திரு. கா.நா. பழனி தலைமையில், திரு. கலீல் பாட்சா
(திருவண்ணாமலை) முன்னிலையில் நிகழ்ச்சிகள் துவங்கின .
விழாவிற்கு வருகை தந்த நடிகை வெண்ணிற ஆடை நிர்மலா அவர்களுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது .
மேடையில் திரு. கா. நா. பழனி அவர்கள் நிகழ்ச்சி நிரலை வாசிக்க, அதை திரு.கலீல் பாட்சா வழி மொழிந்தார் .
பின்னர் மேடையில் மூன்று எழுத்துக்களான அண்ணா , எம்.ஜி.ஆர். ஆகிய தலைவர்களை குறிக்கும் பொருட்டு மூன்று புறாக்கள் திரு. எம்.ஜி.ஆர். ரவி, திரு. மதியழகன், திரு. சுகுமாரன் (மலேசியா ) ஆகியோரின் கரங்களால் பறக்கவிடப்பட்டன . அதன்பின் , திருநின்றவூர் எம்.ஜி.ஆர். ஆலய நிர்வாகி திரு. கலைவாணன் தனது மகள் சங்கீதாவுடன் மேடைக்கு வந்து திரு. சுகுமாரன் (மலேசியா ) அவர்களிடம் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். பயன்படுத்திய ஜிப்பா ,
மற்றும் சால்வையை வழங்கினார் .
நடிகை நிர்மலா, திருமதி மம்தா சரவணன் , கவுன்சிலர் (அல்சூர் ), திரு. கிருஷ்ணராஜ் (முன்னாள் மாநில அ.தி.மு.க. செயலாளர் ),திரு.எம்.ஜி.ஆர். ரவி, திரு. எம்.ஜி.ஆர். மணி ஆகியோர் குத்துவிளக்கேற்றி வைத்தனர் .பின்பு மேடையில் அலங்கரிக்கப்பட்டிருந்த புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். படத்திற்கு மலர் தூவி
அனைவரும் வணங்கினர் .பின்னர் தின இதழ் புகழ் சிரஞ்சீவி அனீஸ் அவர்களின் எம்.ஜி.ஆர். கீதம் இசைக்கப்பட்டது .
புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு பிறந்த நாள் குறிக்கும் வகையில் மேடையில் அனைவர் முன்னிலையில் பிரம்மாண்ட கேக் , நடிகை நிர்மலா அவர்களால் வெட்டப்பட்டு பக்தர்கள் அனைவருக்கும் பகிர்ந்து அளிக்கப்பட்டது .
மேடையில் சிறப்பு விருந்தினர்கள் வீற்றிருக்க , மாணவி தேஜாஸ்ரீ அவர்களின் நடனம் (மதுரை வீரன் படத்தில் வரும் ஆடல் காணீரோ பாடலுக்கு ) ஆடி
அனைவரின் பாராட்டையும் பெற்றார் .
பின்னர் மலேசிய இசை குழுவை சார்ந்த மாணவி ,நாடோடி மன்னன் திரைப்படத்தில் கிளைமாக்சில் வரும் -வீரமாமுகம் தெரியுதே பாடலுக்கு தகுந்தாற்போல் நடனம் ஆடி அனைவரின் கைதட்டல் பெற்றார் .
அடுத்து , பெங்களூரு நகரில் உள்ள விஜய் தாரை தப்பட்டைகுழுவை சார்ந்தவர்கள் மேடையில் வாசித்தனர் . பின்னர் ஆனந்த் பேண்ட் வாத்திய குழுவினர் , பெங்களூரு , நினைத்ததை முடிப்பவன் படப்பாடலான பூ மழை தூவி , மற்றும்
மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன் படப்பாடலான தாயகத்தின் சுதந்திரமே ஆகிய பாடல்களை மேடையில் வாசித்து அரங்கத்தில் உள்ள அனைவரின் பாராட்டையும் பெற்றனர் .
மேடையில் நடிகை நிர்மலா ,திருமதி மம்தா சரவணன் (கவுன்சிலர்),நடிகர் சக்கரவர்த்தி , திரு. எம்.ஜி.ஆர். மணி, திரு.கிருஷ்ணராஜ், திரு.பொன்மனம் சிவகுமார் ஆகியோருக்கு பொன்னாடை அணிவித்து , நினைவு பரிசு வழங்கப்பட்டது
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். பல படங்களில் கம்பு சண்டை, சிலம்பாட்டம் ஆகிய காட்சிகளில் அசத்தி இருந்ததை பிரதிபலிக்கும் பொருட்டு , மேடையில் அவர் நினைவாக சிலம்பாட்ட குழுவினர் தங்களுடைய திறமைகளை வெளிப்படுத்தி
கைதட்டல்கள் வாங்கினர் .
நிகழ்ச்சியின் சிறப்பு அம்சமாக திரு.கா. நா. பழனி மற்றும் அவரது நண்பர்கள் இணைந்து , அன்னதானமே சிறந்த தானம் என்கிற தலைப்பில் ஒரு நாடகம் நடத்தினர். அதில் திரு. கா. நா. பழனி பார்வையற்றவராகவும், பிச்சை கேட்கும் பாத்திரத்தையும் ஏற்று மிக சிறப்பாக, இயல்பாக நடித்து அனைவரின் பாராட்டையம் பெற்றார். புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். அவர்கள் தான் வாழ்ந்த ராமாவரம் தோட்டத்தில் ஏழை, பணக்காரன் என்கிற பாகுபாடு இல்லாமல் தன்னை தேடி வந்த அனைவருக்கும் உணவளித்து பசியாற்றிய சம்பவங்களை உணர்த்தியபடி நாடகத்தின் கதையமைப்பு , அனைவரும் ரசிக்கும்படியும் இருந்தது .
நிகழ்ச்சியின் போது , இடையில் அவ்வப்போது \மலேசிய இசை குழுவை சார்ந்த திரு. மேகநாதன் தலைமையில் இசை குழுவினர் மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் திரைப்படப்பாடல்கள் இசைத்து பக்தர்களை பரவசப்படுத்தினர் .
சென்னையில் இருந்து வந்த திருவாளர்கள் பொன்மனம் சிவகுமார், சிரஞ்சீவி அனீஸ், ஒம்பொடி பிரசாத் (மனைவியுடன் ),திரு. எம்.ஜி.ஆர். வல்லரசு (பெங்களூரு ) திருநின்றவூர் எம்.ஜி.ஆர். ஆலய நிர்வாகி திரு.கலைவாணன், அவரது மகள் சங்கீதா , திருவாளர்கள் ஜி.வெங்கடேச பெருமாள், ஆர். லோகநாதன் , வி.சுந்தர், தாம்பரம் முரளி , மதுரையில் இருந்து திரு. தமிழ் நேசன்,திரு. ம.சோ. நாராயணன் திரு. மர்மயோகி மனோகர், கோவை திரு. தாஸ், திருமதி பெரியநாயகி , ஆகியோர் குறிப்பிட தக்கவர்கள். மற்றும் ஏராளமான பக்தர்கள் பெங்களூரு மாநகரில் இருந்து வருகை தந்து நிகழ்ச்சியை சிறப்பித்தனர் .
இறுதியில் நடிகை வெண்ணிற ஆடை நிர்மலா உரையாற்றினார் .
"அனைவருக்கும் இனிய மாலை வணக்கம். நான் ரயிலில் பயணம் செய்ததாலும், வயது மூப்பின் காரணமாகவும் சற்று அசதி யாகவும், உடல்நல குறைவும் ஏற்பட்டது. ஆயினும், நான் ஏற்கனவே நிகழ்ச்சியில் பங்கேற்க விழா குழுவினருக்கு ஒப்புதல் அளித்துவிட்டதால் சற்று தாமதத்தோடு
வர நேரிட்டது . மன்னிக்கவும் . மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு பிறந்த நாள் விழா பெங்களூரு தமிழ் சங்கத்தில் இவ்வளவு சிறப்பாக ஏற்பாடு செய்திருக்கும் அமுதசுரபி டாக்டர் எம்.ஜி.ஆர். நற்பணி மன்றத்திற்கும் அதன்
நிர்வாகி திரு. கா. நா. பழனி அவர்களுக்கும் என் மனமார்ந்த பாராட்டுக்கள் .
தானம், தர்மம் செய்து பல தலைமுறைகளுக்கு பெயரும், புகழும் அடையும் அளவிற்கு புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். பெருமை வாய்ந்தவர் .அந்த பெருமைகளை உணர்த்தும் பொருட்டு இங்கே சிறிய நாடகம் ஒன்றினை மிக சிறப்பாக நடத்தி காட்டிய நாடக குழுவிற்கு என் நெஞ்சார்ந்த பாராட்டுக்கள். புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். அவர்கள் எனக்கு அ தி.மு.க. வில் சேருவதற்கு வாய்ப்பளித்தார் .
அப்போது பலவித ஆலோசனைகள், கருத்துக்கள் ,தெரிவித்தார். நல்ல பல ஒழுக்கங்களை கற்றுக் கொடுத்தார். அதை இன்றும் நான் பின்பற்றி வருகிறேன் .
இந்த பெங்களூரு தமிழ் சங்கத்தில் நடைபெற்ற பல நிகழ்ச்சிகளுக்கு நான் வருகை தந்துள்ளேன் .குறிப்பாக பொன்மன செம்மல் எம்.ஜி.ஆர். சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிக்கு எப்போதும் முன்னுரிமை அளித்து கலந்து கொள்வேன் என்பது விழா ஏற்பாட்டாளர் அனைவருக்கும் தெரியும். புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு பிறந்த நாள்
விழா எந்த நாட்டில், எந்த மாநிலத்தில், எந்த நகரத்தில், எந்த ஊரில் நடந்தாலும்
அவரை பற்றிய அரிய பல தகவல்களையும், பெருமைகளையும், அவரது பக்தர்களுக்கும், தொண்டர்களுக்கும், தெரிவிப்பதை எனது கடமையாக கருதுகிறேன். எனது வருகையை நீங்கள் எல்லாம் ஆவலோடு எதிர்பார்த்து காத்திருக்கிறீர்கள் என்பதை நான் அறிவேன். உங்களை ஏமாற்ற நான் நினைக்கவில்லை.. இப்போது உடல்நல குறைவால் அதிகம் பேச முடியவில்லை.
அடுத்த நிகழ்ச்சியின்போது மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர்.பற்றிய கூடுதல் தகவல்களை தெரிவிக்கிறேன் . புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். பிறந்த நாளை ,
இந்த பெங்களூரு தமிழ் சங்கம் , ஒவ்வொரு ஆண்டும் சிறப்பாக கொண்டாட வேண்டும் என்பது என் அன்பான வேண்டுகோள் .. நன்றி .