அமைச்சரவை அமைத்தது யார் என்று தெரிந்துமா உங்களுக்கு இந்த சந்தேகம்? செயின்ட் ஜார்ஜ் கோட்டை ஈகா தியேட்டர் அருகே வினோத் மேற்பார்வையில் கட்ட பட்டு வருகிறது.
Printable View
வினோத் சார்,
தண்டனை மிக அதிகம். என் நண்பனுக்காக கொஞ்சம் குறைத்துக் கொள்ளக் (கொல்லக்) கூடாதா? :)
ஜெய்சங்கர் படம் மட்டும் பார்க்க அனுமதி தரும்படி கேட்டுக் கொள்கிறேன்.:)
ankil .. Dr chakravarthy .. my fav movie .
PS had fantastic songs for Savitiri.. Neevu leka veena , padamani nannadaga .... Awesome songs . will share it here
இன்றைய ஸ்பெஷல் (89)
இந்த மாதிரி இனிமையான பாடல்கள் கிடைக்க, பாடகர் , பாடகியர் கிடைக்க தமிழன் தவம்தான் செய்திருக்க வேண்டும்.
என்ன மாதிரி ஒரு பாடல்!
ஆயுசு முழுக்க கேட்டுக் கொண்டே இருக்கலாம்.
ஆண்களை மடக்கி அவர்களை அடக்கி, வஞ்சக வலையில் சிக்க வைக்கும் பகாவலி ராணி. ஏமாந்து விட்டில் பூச்சிகளாய் விளக்கில் விழுந்து கருகும் வீரர்கள்.
'கவறாடும் புவனம். பந்தயம் 10000 பொன். வெற்றிக்கு மணமாலை. வீழ்ச்சிக்கு சிறைச்சாலை'
பகடை ஆட்டம் ஆட சதி பின்னிய வலை அழைப்பு.
ஏமாந்து வருகிறான் போரோப்பு ராஜா. பகடையில் மன்னன் பன்னிரெண்டு கேட்க ராணி பகடை உருட்டுகிறாள். உடன் உள்ள சதிகாரன் முன்னேற்பாட்டின்படி விளக்கை அணைத்து வேறொரு பகடை பன்னிரண்டை தயார் செய்து மாற்றி வைத்து விடுகிறான். விளக்கின் ஒளி மறுபடி திட்டமிட்டபடி வந்தபின் பார்த்தால் மன்னன் கேட்ட பன்னிரண்டு. அதிர்ச்சி அவனுக்கு. வெற்றி. ராணிக்கு வஞ்சகத்தின் மூலம் வெற்றி. தோல்வி. போட்டியிட வந்த மன்னனுக்கு சதி அறியாத தோல்வி. மண்ணைக் கவ்வி விட்டான். விடுவாளா ராணி? அடிமைப்படுத்துகிறாள். கேவலப்படுத்துகிறாள். ஆண் இனத்தின் நிலைமையை அவமானப்படுத்துகிறாள்.
மேற்கண்ட சூழல் முழுதும் இந்த அற்புதமான பாட்டிலே.
போரோப்பு மன்னன் ஈ.ஆர்.சகாதேவன் (என்ன ஒரு தேஜஸ் மற்றும் அழகு) டி.ஆர் ராஜகுமாரி அழகுராணியிடம், "திமிர்த்தனம் கொள்ளாதே ....ஆடவரை ஏளனமாய் எண்ணாதே" என்று சொல்லி ஆட்டத்தைத் தொடங்குவதும், 'என்ன வேண்டும் கேள்' என்று ராஜகுமாரி கேட்க, 12 போட சகாதேவன் கேட்க, சூட்சுமக்கார தங்கவேலு தந்திரமாக விளக்கை அணைத்து வேறு 12 எண்ணிக்கையுள்ள பகடையை அங்கு மாற்றி வைத்துவிட, அதிர்ச்சித் தோல்வியில் சகாதேவன் உறைய, ஆண்களின் பரிதாப நிலையை கேலி செய்து ராஜகுமாரி பாட அற்புதமாகப் படமாக்கப்பட்ட பாடல்.
ராஜகுமாரி கொள்ளை அழகு. முகம் அருகே காட்டப்படும் போது பால் நிலவு காய்கிறது முகத்தில். பல்வரிசைகளும், கண்கள் புரியும் ஜாலமும் எந்த ஆடவரையும் பைத்தியம் பிடிக்க வைக்கத்தான் செய்யும். இந்த அழகு கொண்ட நடிகை இன்னும் இங்கு பிறக்கவில்லை என்றுதான் சொல்ல வேண்டும்.
'வீராப்பு பேசி வந்த போரோப்பு ராஜாவை வெட்டிட சொல்லு'
என்று நிறுத்தி, ஒரு போடு போட்டு, சகாதேவனுக்கு உயிர் பீதியைக் கிளப்பி, ஒரு நொடி சகா படும் வேதனையை இன்பமாக அனுபவித்து,
'மண் வெட்டிட சொல்லு'
என்று மண்ணை வெட்டச் சொல்லி ஆணை இடுவது அமர்க்களம். (பாடலாசிரியருக்கு மனம் நிறைந்த பாராட்டுக்கள்)
பாடலைப் பாடியவர் தன் குரலால் லீலா வினோதங்கள் புரிந்த பி.லீலா. (உடன் திருச்சி லோகநாதன் என்று நினைவு) சும்மா அதம் பறக்கிறது. அதுவும் பகடை ஆட்டம் பாதிப் பாடல் முடிந்தது பாட்டின் இசையே முற்றிலும் மாறி 'மதியை இழக்கிறார்' என்று இவர் பாடும்போது அப்படியே நாம் ஜென்மம் சாபல்யம் பெற்றுவிட்டது போலத் தோன்றும். 'தலைவிதியால் காலகதியால் வந்து தனியே வாடுறார்' என்று பாடும் போது உச்சங்கள் தொடுவார். நம் உடம்பெல்லாம் புல்லரிப்பது போன்ற இனம் புரியா உணர்வு ஏற்படுவதை சொல்லி முடியாது.
http://upload.wikimedia.org/wikipedi...lebagavali.jpg
http://i.ytimg.com/vi/9_XoBcW8B8g/maxresdefault.jpg
ஆர்.ஆர். பிக்சர்ஸ் தயாரித்த 'குலேபகாவலி' (1955) படத்தின் இசையமைப்பாளர் விஸ்வநாதன் ராமமூர்த்தி. இயக்கம் ராமண்ணா. எம்ஜிஆர், டி.ஆர்.ராஜகுமாரி, ஜி.வரலஷ்மி, சந்திரபாபு, ராஜசுலோச்சனா, தங்கவேலு, சாய்ராம் ஆகியோர் நடித்த படம் இது.
இனி பாடலின் வரிகள்.
http://i.ytimg.com/vi/PqBI70073nw/hqdefault.jpg
வில்லேந்தும் வீரரெல்லாம் வீழ்ச்சி பெற்றார் பகடையிலே
வில்லேந்தும் வீரரெல்லாம் வீழ்ச்சி பெற்றார் பகடையிலே
என்னை வெற்றி பெற முடியாது
நீர் கற்ற வித்தையும் செல்லாது
என்னை வெற்றி பெற முடியாது
நீர் கற்ற வித்தையும் செல்லாது
வில்லேந்தும் வீரரெல்லாம் வீழ்ச்சி பெற்றார் பகடையிலே
அகம்பாவத்தினாலே என்னை அலட்சியம் செய்யாதே
வீண் அகம்பாவத்தினாலே என்னை அலட்சியம் செய்யாதே
இந்த ஜகமே புகழ் யுவராஜனை மதியாமல் உளறாதே
இந்த ஜகமே புகழ் யுவராஜனை மதியாமல் உளறாதே
எந்நாளும் ஆடவரை ஏளனமாய் எண்ணாதே
எந்நாளும் ஆடவரை ஏளனமாய் எண்ணாதே
என்ன வேணும் துரையே
இஷ்டம் போலே கேள் இனியே
என்ன வேணும் துரையே
இஷ்டம் போலே கேள் இனியே
பன்னிரண்டு போட வேணும்
பலித்தாலே ஜெயம் காணும்
பன்னிரண்டு போட வேணும்
பலித்தாலே ஜெயம் காணும்
ஈராறு பன்னிரண்டு
ஏங்குதே உன் கண்ணிரண்டு
ஈராறு பன்னிரண்டு
ஏங்குதே உன் கண்ணிரண்டு
வீராப்பு பேசி வந்த போரோப்பு ராஜாவை
வெட்டிட சொல்லு
மண் வெட்டிட சொல்லு
சூராதி சூரன் என்று சோம்பேறியாய்த் திரிந்தார்
கட்டிடச் சொல்லு
மரத்தில் கட்டிடச் சொல்லு
வீராப்பு பேசி வந்த போரோப்பு ராஜாவை
வெட்டிட சொல்லு
மண் வெட்டிட சொல்லு
மதியை இழக்கிறார்
மனப்பால் குடிக்கிறார்
தலைவிதியால் காலகதியால்
வந்து தனியே வாடுறார்
மதியை இழக்கிறார்
மனப்பால் குடிக்கிறார்
தலைவிதியால் காலகதியால்
வந்து தனியே வாடுறார்
நிதியோடு வாழும் செல்வந்தர் யாரும்
சதியால் பாவம் ஆகிறார்
நினைவே வாழ்வில் கனவானதாலே
நிலையே மாறி ஏங்குறார்
மதியை இழக்கிறார்
மனப்பால் குடிக்கிறார்
தலைவிதியால் காலகதியால்
வந்து தனியே வாடுறார்
நிதியோடு வாழும் செல்வந்தர் யாரும்
சதியால் பாவம் ஆகிறார்
நினைவே வாழ்வில் கனவானதாலே
நிலையே மாறி ஏங்குறார்
விதியால் காலகதியால்
வந்து தனியே வாடுறார்
http://www.youtube.com/watch?v=PqBI7...yer_detailpage
குலேபகாவலி ஆஹா இன்று பார்த்தாலும் சலிக்காமல் விறுவிறுப்பாக போகும் படம்
பாடல் அற்புதம்..
வாசு சார்
59 ஆண்டுகள் நிறைவு பெற்ற மக்கள் திலகத்தின் ''குலேபகாவலி '' படத்தில் இடம் பெற்ற பாடல்
காட்சியை விவரித்து விதம் மிகவும் அருமை .படத்தை பார்த்த உணர்வு ஏற்பட்டது .நன்றி .