நான் அவனில்லை கதை களம், சம்மந்த பட்டவர்களின் பங்களிப்பு இவற்றை ஆராயு முன்----
தமிழிலேயே எனக்கு மிக மிக பிடித்த படங்களில் ஒன்றாக நான் கருதுவது நான் அவனில்லை.
ஜெமினிக்கு ,இந்த படத்துக்காக தேசிய விருது கிடைக்காதது நமக்கெல்லாம் பெருத்த அவமானம்.என்ன ஒரு performance ? சும்மா புகுந்து விளையாடி பெடலெடுத்திருப்பார். அவரின் 9 சொச்ச வேடங்களும் தனித்தனியாக நில்லாமல் கதையுடன் பிணைந்து பயணிக்கும். காதல் மன்னனுடன் ,காதல் இளவரசனும் (அன்றைய வளரும் நடிகர்)ஒரு சிறு சுவையான வேடத்தில் மலையாளம் பறைவார்.
பாலச்சந்தரின் மருமகன் குறிப்பிட்டதில் இருந்து நான் அறிந்தது, ஜெமினிக்கும் (சொந்த படம்),கே.பிக்கும் பிணக்கு ஏற்பட்டு ,இடைவேளைக்கு பின்பு கே.பீ நினைத்த மாதிரி அமையாமல் கே.பீக்கு முழு திருப்தி இல்லையாம். ஆனால் புத்திசாலி ரசிகர்களுக்கு ,இது என்றுமே முழு திருப்தி தந்த படமே.
ஒரு சாதாரண கோர்ட் ரூம் டிராமா , எப்படி சுவையான பாத்திரங்களால்,nerrative surprise நிறைந்த திரைக்கதையால்,கூர்மையான இயல்பான வசனங்களால் ,ஒரு வித்தியாச சிந்தனை கொண்ட இயக்குனரால் பரிமளித்தது என்று பார்ப்போம்.வந்த போது பெரிய வெற்றி படமல்ல.புத்தியுள்ள மனிதரெல்லாம் வெற்றி காணாத காலம்.
இந்த படத்தில் விறுவிறுப்பு,திருப்பங்கள்,நகைச்சுவை(டயலாக்,situati on-linked) ,அங்கங்கே மிளீரிடும் மனிதம்,கட்டி போடும் வசனம்(ஒரு நிமிடம் நாம் கவனத்தை நகர்த்தினால் முக்கியமான லிங்க் போய் விடும்)என்று ,அருமையான ஒரு படைப்பு. இந்த அளவு wholesome என்று சொல்லத்தக்க படங்கள் இந்திய அளவில் மிக குறைவே.
நான் எஸ்.எஸ்.எல்.சி முடித்த கையோடு, பீ.யு.சீயில் படிக்கும் போது இந்த படம் பார்த்த போது தீவிர கே.பீ.ரசிகன். ஜெமினியை பிடிக்கும்.(தீவிர ரசிகன் என்று சொல்ல முடியாவிட்டாலும்)
அடுத்தடுத்த நாட்களில் ஐந்து முறை பார்த்து என் பெரியப்பா ,அப்பாவிற்கு போஸ்ட் கார்டு எழுதி உன் பையனுக்கு எதிர்காலமே இல்லை என்று தெரிவிக்கும் அளவு தீவிரமாகி, இந்த படம் என்னை பாதித்தது.
இன்று பார்க்கும் போதும் அதே உணர்வையே அடைகிறேன். இதை பற்றி விலாவரியாக எழுதும் துடிப்பை என் கைகள்,இதயம்,அறிவு மூன்றும் பரபரக்கிறது.
இனி முகவுரை முடிந்து படத்தினுள்.....