ராகவேந்திரன் சார்,
ஒரு சின்ன க்ளூ. நம்மிடம் இந்தப் படம் இல்லை.
Printable View
ராகவேந்திரன் சார்,
ஒரு சின்ன க்ளூ. நம்மிடம் இந்தப் படம் இல்லை.
ஞாயிறும் திங்களும்.
adap paavi!
பரிசு எதுவும் வேணாம். ரவி திரிக்கு வா.
பிரபுராம் சார்,
தங்களின் அற்புத எழுத்துக்களில் உருவான (19th June 2009) 'காத்தவராயன்' பட ஆய்வை ரசிகவேந்தர் Filmography திரியில் மறுபதிவாக அளித்திருந்தார். நிஜமாகவே சுருக்கமாக சுவை குன்றாமல் அற்புதமாக வடிவமைக்கப்பட்ட ஆய்வு. என் நெஞ்சம் கவர்ந்த படத்தின் நெஞ்சைக் கொள்ளை கொண்ட ஆய்வு. மிக மிக ரசித்துப் படித்தேன். என் மனமுவந்த பாராட்டுக்கள்.
நான் திரும்பி பார்த்து மறு பரிசீலனை செய்தே ஆக வேண்டும். ரெண்டு பெரிய இடத்து recommendation . ஆனாலும் என்னோடு ஒட்டி பிறந்தது சோடை போகுமா?நான் பிறந்த தினம் ,வருடத்தில் வெளியான படத்திற்கு ,என் மனைவி பிறந்த தினத்தில் (வருடமல்ல!!!) P_ R விமரிசனம் ??? ஆச்சரியம்.காத்து விற்கும் எனக்கும் ஏதொ தெய்வீக தொடர்பு.
அன்புள்ள திரு. கோபால் அவர்களே,
ஆயிரம் பதிவுகள் கடந்த உங்களுக்கு ஆயிரமாயிரம் வாழ்த்துக்கள். தாங்கள் மேலும் ஆயிரக் கணக்கில் பதிவுகள் இட்டு எல்லோரையும் மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்திட வேண்டுகிறேன்!
தங்கள் "வீரபாண்டிய கட்டபொம்மன்" பதிவு மிகவும் நுணுக்கமாக உள்ளது.
எண்பதுகளின் இறுதியில், இப்படம் சென்னையில் பெரிய அளவில் மறு வெளியீடு கண்டு "ஸ்டார்" தியேட்டரில் ஐம்பது நாட்களைக் கடந்து பின் சென்னை முழுவதும் (நாட்கள் நினைவில் இல்லை) ஓடிக் கொண்டே இருந்தது. அப்போது தான் கட்டபொம்மனை முதலில் பார்த்தேன் - அதுவும் என் பெற்றோர்கள், மனைவி, குழந்தை மற்றும் அத்தை மகன் ஆகியோருடன் - கமலா தியேட்டரில். அங்கு மட்டும் கிட்டத்தட்ட மூன்று அல்லது நான்கு வாரங்கள் வரை ஓடியது.
எனக்குத் தெரிந்து, இந்த ஒரு படத்திற்கு படம் நெடுகிலும் அரங்கத்தில் கிடைத்த வரவேற்பும், கரவொலியும் "தெய்வ மகன்" தவிர வேறு எந்தப் படத்திற்கும் தற்போது மறு வெளியீடு கண்ட "கர்ணன்" வரை கிட்டியதில்லை. தெய்வ மகன் கூட அத்தனை தரப்பட்ட பொது மக்கள் வரவேற்பைப் பெற்றதா என்று சொல்ல முடியாது. ஆனால், "கட்டபொம்மன்" அனுபவம் வேறு மாதிரியானது. படம் நெடுகிலும், பல சிறிய காட்சிகளுக்குக் கூட ஒட்டு மொத்த அரங்கும் அதிர்ந்தது என்பது தான் உண்மை - ஒரு கட்டத்தில், ஒரு தாய் (எஸ்.என். பார்வதி?) அவரது மகனை போரில் இழந்து அவரைப் பார்க்க வரும் போது நடிகர் திலகம் காட்டும் ரியாக்ஷன், "இன்பம் பொங்கும் வெண்ணிலா" பாடலின் முடிவில், ஜெமினி/பத்மினிக்கு மேல் தொங்கும் மலைப்பாம்பை சுட்டிக் காட்டி அவர்களைத் தப்புவிக்க வைத்து சொல்லும் ஒரு வித ஏளனம் கலந்த வசனம் மற்றும் நடிப்பு, இப்படி பல இடங்களின் அரங்கம் ஆர்ப்பரித்தது.
படம் துவங்கி, முடியும் வரை, ஒரு நடிகன் அவனது நடிப்பினால் மட்டுமே ஒட்டு மொத்த அரங்கத்தையும் ஒரு வித அதீத ஜுரம் மற்றும் ரத்தக் கொதிப்பு நிலையில் வைத்திருந்ததை அன்று தான் முதலில் கண்டேன்.
படம் முடிந்து வெளியில் வரும் போது படம் பார்த்த ஒவ்வொருவரும் அந்த ஜுரத்தோடேயே வெளியில் வந்தனர். அந்த நேரத்தில், யாராவது ஒருவர் ஒரு வெள்ளைக் காரரை வெளியில் பார்த்திருந்தால், அவரை அங்கேயே கொன்றிருப்பர். அந்த அளவிற்கு தாக்கத்தை மக்கள் மனதில் ஏற்படுத்திய ஒரு நடிப்பை இவ்வுலகம் கண்டிருக்குமா?
அன்புடன்,
இரா. பார்த்தசாரதி
சாரதி சார்,
ரொம்ப நாள் நீங்கள் வராமல் சோர்ந்து கிடந்தோம் புத்தெழுச்சி தந்தீர்கள். நன்றி. தொடருங்கள்.
அன்புள்ள திரு. ராகவேந்திரன் அவர்களே,
பல அறிய ஆவணங்களைப் பதிந்து மகிழ்ச்சிக்கடலில் ஆழ்த்துகிறீர்கள்.
தொடர்ந்து களிப்புற வையுங்கள்.
அன்புடன்,
இரா. பார்த்தசாரதி
அன்புள்ள திரு. வாசுதேவன் அவர்களே,
அந்த ஸ்டில் கிட்டத்தட்ட மோட்டார் சுந்தரம் பிள்ளை போல் இருந்தாலும், எனக்கு ஒரு சிறிய சந்தேகம் இருந்து கொண்டே இருந்தது - ஏனென்றால், அதில், நெற்றியில் முடி சுருண்டு விழும் (பிளாஷ் பேக்கில்). வேறெந்தப் படத்திலும் பார்த்திராதது. ஞாயிறும் திங்களும் என்று எழுதலாம் என்றிருந்தேன் - நீங்கள் ஒரு க்ளூ கொடுப்பதற்கு முன்னேயே. கட்டபோம்மனுக்காக ஒரு பதிவைப் பதிந்து விட்டுப் பார்த்தால், கோபால் முந்திக் கொண்டு விட்டார்.
அருதமான அறிய ஸ்டில்லைப் பதிவு செய்ததற்கு நன்றி.
அன்புடன்,
இரா. பார்த்தசாரதி
அன்புள்ள திரு. பிரபுராம் அவர்களே,
காத்தவராயன் - வழக்கம் போல நுணுக்கமான ஆய்வு. (குறிப்பாக, திருவிளையாடல் பாடல் காட்சியில் கொன்னக் கோல் பாடத் துவங்கும் நடிகர் திலகம் அவரது முறை வருவதற்கு சற்று முன் தொண்டையை செருமி ஆயத்தமாவது ...).
ரசிக்கத்தக்க பதிவு.
அன்புடன்,
இரா. பார்த்தசாரதி
சாரதி சார்,
ரொம்ப நாள் நீங்கள் வராமல் சோர்ந்து கிடந்தோம் புத்தெழுச்சி தந்தீர்கள். நன்றி. தொடருங்கள்.
அந்த நடிகை P.S.சீதாலட்சுமி என்று நினைவு. ராகவேந்திரன் சார்! ஹெல்ப் ப்ளீஸ்.
http://www.kalyanamalaimagazine.com/...thalakshmi.jpg
பெற்ற மனம்
சரி! இனிமேல் சோதிக்க விரும்பவில்லை. அது வேறு மொழிப் படம்.
அன்புள்ள ராகவேந்தர் சார்,
நடிகர்திலகத்தின் தேசிய விருது பெற்ற திரைப்படங்கள் பற்றிய பதிவு வெகு சூப்பர். இதுவரை நம்மால் தயாரிக்கப்பட்ட பட்டியல் வடிவில் மட்டுமே பார்த்து வந்தவற்றை அரசின் ஒரிஜினல் ஆவணங்களாக தந்து அசத்தி விட்டீர்கள். யாராலும் மறுக்க முடியாத, மறைக்க முடியாத ஆவணங்கள் இவையனைத்தும்.
திரியின் பிதாமகரே, உங்கள் உழைப்பைப் போற்றுகிறோம்.
It is true Mr Parthasarathy Sir,
VPKB released at Star theatre along with Norjehan in Saidapet. No relrease movies ran for more than
3 weeks in that theatre. It is a goldmine for every distrubutor whenever they release VPKB.
Fully agreed with Mr Karthik.
www.biscoot.com சைட்டுக்கு போனால் கண்டு பிடிக்கலாம்
இருக்கறதுக்குள்ளே ,நல்லதா stock இருந்தது இது ஒண்ணுதான். பின்னே காலையிலிருந்து அலைக்கழித்து விட்டு அவர் தெலுங்கு நடிகர் என்று establish பண்ண பார்த்தால் .........(அவ்வளவு மாநில பற்று) போங்கப்பா........
நல்ல வேளை ..."பறவைகள் "என் கோபத்திலிருந்து உன்னை காத்து விட்டது.
Unfinished NT movie
'ஸ்கூல் மாஸ்டர்' மலையாளப் படத்தில்தான் அந்த போஸ். (எந்தா..மனசிலாயோ) இதோ இன்னொரு அமர்க்களம்.
http://i1087.photobucket.com/albums/...t%20-2/s-1.jpg
வாசு சார்,
தெரியாத படத்தின் ஸ்டில்லைப் போட்டு கிட்டத்தட்ட இருபத்தைந்து பதிவுகள் ஏத்தி விட்டுட்டீங்க. அவர்களும் நடிகர்திலகம் நடித்த கால்வாசி படத்தின் பெயர்களை சொல்லி முடிச்சுட்டாங்க. கடைசியில் வேறு மொழிப் படமென்றால் கோபால் சார் வெறுத்துதானே போவார்.
நான் எந்தப்படத்தையும் யோசிக்காமல் மத்தவங்க கண்டுபிடிச்சு சொல்லட்டும்னு இருக்கேன்.
ஸ்கூல் மாஸ்டர் படத்தைப் போட்டு ஸ்டில் மாஸ்டர் நம்மையெல்லாம் ஒரு வழி பண்ணிட்டார் போல... வாசு சார் ... இது போல இன்னும் எங்களையெல்லாம் படுத்துங்க... நல்லாத்தான் இருக்கு... இந்த விளையாட்டு....
பாலா சார்,
ஸ்வர்ண சாமரம் [தமிழில் தங்க சாமரம்] unfinished movie என்பதை விட dropped movie என்பதே சரி. மோகன்லால் நடித்த சித்ரம் வந்தனம் போன்ற படங்களை தயாரித்த வி.பி.கே மேனன் தனது தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் நடிகர் திலகத்தையும் மோகன்லாலையும் இணைத்து இந்த ஸ்வர்ண சாமரம் படத்தை ஆரம்பித்தார் ராஜீவ்நாத் என்ற திறமையான இயக்குனர் படத்தின் டைரக்டர். நடிகர் திலகம் தந்தையாகவும் மோகன்லால் மகனாகவும் நடிக்கும் கதை.
தந்தை மீதி உயிரை வைத்திருக்கும் மகன், மகன் மீது பாசத்தை பொழியும் தந்தை. ஒருகட்டத்தில் தந்தை நோய்வாய்ப்பட எத்தனயோ மருத்துவ சிகிச்சைகள் அளித்தும் குணமாகாத சூழலில் தந்தையின் வேதனை தாளாமல் மகன் கருணை கொலையை தேர்ந்தெடுக்கும் சூழல் என வார்க்கப்பட்டிருந்தது கதை.மகன் தந்தைக்கு செய்யும் பணிவிடையை கருத்தில் கொண்டு சூட்டப்பட்ட தலைப்புதான் ஸ்வர்ண சாமரம்.சிறிது நாட்கள் திருவனந்தபுரத்தில் படபிடிப்பும் நடைப்பெற்றது இது நடப்பது 1995 காலகட்டத்தில்.
ஆனால் அன்றைய நாட்களில்தான் இயல்பான ஆற்றொழுக்கு போன்ற தங்கள் பாணியை விட்டுவிட்டு larger than life என்று சொல்வார்களே அது போன்ற ஒரு இமேஜ் வளையத்திற்குள் மலையாளசினிமாவும் மோகன்லால் போன்றவர்களும் மெதுவாக இழுக்கப்பட்டுக் கொண்டிருந்த நேரம். சுற்றி இருந்த சில "நல விரும்பிகள்" இந்த மாதிரி படங்கள் எல்லாம் இந்த காலகட்டத்தில் எடுபடாது என்று தூபம் போடவே இந்த படம் நிறுத்தப்பட்டது.
இதனால் அதிகமாக பாதிக்கப்பட்டது தயாரிப்பாளர் மேனன்தான். அவருக்கு உதவி செய்வதற்காக சித்ரம், வந்தனம் படங்களின் இயக்குனரும், லாலின் நெருங்கிய நண்பருமான பிரியதர்ஷனை அணுக அவர் கொடுத்த கதைதான் ஒரு யாத்ரா மொழி. இந்த மாதிரி படத்திற்கு ராஜீவ்நாத் சரிப்பட்டு வரமாட்டார் என்பதால் பிரதாப் போத்தன் இயக்குனராக பொறுப்பு ஏற்றார்.
ஸ்வர்ண சாமரம் படத்திற்கு முழு ஒத்துழைப்பு கொடுத்த நடிகர் திலகம் அது நின்று போனாலும் தன் "மாப்பிளையின்" வேண்டுகோளை ஏற்று இந்த படத்திற்கும் முழு ஒத்துழைப்பு கொடுத்தார். 1996 ஜனவரியில் படபிடிப்பு நடைப்பெற்றது.
நடிகர் திலகத்தின் உடல்நிலையை கருத்தில் கொண்டும், அன்றைய நாளில் காலா பானி படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றுக் கொண்டிருந்த பொள்ளாச்சி, வேட்டைக்காரன் புதூர் போன்ற சுற்று வட்டாரங்களிலேயே யாத்ரா மொழி படப்பிடிப்பும் நடைபெற்றது. படம் 1996-லேயே முடிந்து விட்ட போதிலும் தயாரிப்பாளரின் ஒரு சில பிரச்சனைகள் காரணமாக ஒரு யாத்ரா மொழி திரைப்படம் 1997 ஜூலை மாதம் வெளியானது.
நடிகர் திலகத்திற்கு தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்ட நாள் 1997 ஜூலை 3. அதற்கு அடுத்த நாள் ஜூலை 4 அன்று once more வெளியானது. அது வெளியாகி அடுத்த ஒரு 15-20 நாட்களில் ஒரு யாத்ரா மொழி வெளியானது.
ஸ்வர்ண சாமரம் பற்றியும் ஒரு யாத்ரா மொழி பற்றியும் ஏற்கனவே எழுதியிருக்கிறேன் என்ற போதிலும் மீண்டும் அதை அசை போட வாய்ப்பளித்த பாலாவிற்கு நன்றி.
அன்புடன்
ஒரு விஷயம் தெரியுமா? ஒரு யாத்ரா மொழி படத்தில் நடிகர் திலகம் நடிக்கும் contractor என்ற கேரக்டர் வேலைக்கு கொண்டு வரும் ஆட்களை வேலை செய்ய விடாமல் தடுக்கும் union leader வேடத்தில் வந்து தகராறு செய்து நடிகர் திலகத்திடம் கன்னத்தில் அறை வாங்கி கொண்டு போகும் மனிதன்தான் தயாரிப்பாளர் வி.பி.கே.மேனன்.
உண்மை கார்த்திக் சார். இன்னொரு ஜோக் ஞாபகம் வந்து தொ .... sorry ,மகிழ்விக்கிறது.
என் நண்பர் ஒருவர் படு சோகமாக இருந்தார்.(race எல்லாம் active ஆக இருந்த தங்க சுரங்கம் காலம்.) என்ன என்று கேட்ட போது நேற்று கனவில் கடவுள் மாதிரி ஒரு உருவம் வந்து 4 8 2 5 என்று நம்பர் காட்டியது. நான் இன்னைக்கு அதை வைத்து jack pot ஆடினேன் சென்னை கிண்டி ரேஸில் . ஊத்திக்கிச்சு. நான் உடனே உனக்குத்தான் பழக்கமாச்சே. அதுக்கா இவ்வளவு சோகமா இருக்கே என்ற போது இன்னைக்கு டெல்லி ரேஸில் அதே combination க்கு ஜாக்பாட் அடிச்சிருக்குப்பா. நம்பர் காட்டின ஆள் எந்த ஊர் race என்று சொல்லி தொலைக்க(இது நானில்லை ,நண்பர்) கூடாதா?என்று சோகமாக முடித்தார்.
முரளி,
உன் பதிவுகள் எங்களிடம் நீ நேரில் பேசும் உணர்வை ஏற்படுத்துகிறது. இது நடிகர்திலகம் ரசிகர்கள் சந்திக்கும் போது ஏற்படும் passion ,fondness and warmth ,உன்னுடைய எழுத்துக்களை படிக்கும் போதெல்லாம் உணர்கிறேன்.
[QUOTE=Gopal,S.;1050729]உண்மை கார்த்திக் சார். இன்னொரு ஜோக் ஞாபகம் வந்து தொ .... sorry ,மகிழ்விக்கிறது.
Goplaji,
Pl play in your own terrain.இம்மாதிரியான உங்கள் துணுக்குகள் பாய் (bhai)வீட்டு திருமண விருந்தில் மோர்குழம்பு பரிமாறியது போல் உள்ளது :-D
தங்கை.
நடிகர்திலகத்தின் திருப்புமுனை படம். அவரை C centre superstar ஆக்கிய படம்.
புதிய பறவை போல Duets கிடையாது. எல்லாமே solo பாடல்கள்தான்.
ஆனால் பாடல்களுக்கான leads பிரமாதமாக இருக்கும்.(Hats off டு திரிலோக் team )
கேட்டவரெல்லாம்- பாட சொல்லி எல்லோரையும் கேட்ட பிறகு ,ஒன்றிலிருந்து பத்து idea சொல்லி அவர் NT பேரிலே வந்து.....
இனியது- காரில் ரேடியோ திருப்ப அது உப்பு ,புளி ,மிளகாய் விலைகளை பட்டியலிட ,சூழ்நிலை இறுக்கத்தை மறந்து சிரிப்பை கட்டுபடுத்தி ,மேஜர் உடன் உரையாடல் தொடர்வார் பாருங்கள் ,ஏன் இவரை தினமும் துதிக்கிறோம் என்று புரியும்.கட்டாயமாக காரிலிருந்து இறக்கி விட பட்டதும் இந்த பாடல்....
சுகம் சுகம்- கே.ஆர்.வீ , NT இடம் அவர் நிலையை கேட்க,வாக்குவாதம் முற்றி அவர் அறைந்து விட்டு நடக்க ஆரம்பிக்க இந்த பாடல்.(சிவாஜி-கே.ஆர்.வீ pair நன்றாக இருக்கும்)
நினைத்தேன் உன்னை- வில்லன்களின் பிளான். காஞ்சனாவின் சிவாஜி காதலினால் அவரை தப்பிக்க வைக்க என்று இறுக்கமான சூழல். சிவாஜி படு rugged handsome ஆக தெரிவார்.
நடிகர் திலகத்தின் பாடல்களெல்லாம் சோக மயமானவை என்பது போன்ற ஒரு தோற்றத்தை தொலைக்காட்சி சேனல்கள் உண்டாக்கி விட்டது போன்ற ஒரு பிரமை ஏனோ வந்து தொலைக்கிறது. வாழ்க்கையில் நம்பிக்கையூட்டும் பாடல்களெல்லாம் ஏதோ ஒருவர் படத்தில் மட்டுமே இருப்பது போன்ற மாயையும் உடைத்து எறிய வேண்டியதொன்று. வாழ்க்கையின் அர்த்தங்கள், எப்படி வாழ வேண்டும் என்பது போன்ற தத்துவங்களை இன்றைய சூழலுக்கேற்பவும் பொருந்தும் வகையில் அமைந்துள்ளவை நடிகர் திலகத்தின் படப் பாடல்களே.
அப்படிப்பட்ட ஒரு பாடலை நண்பர் கோபால் சார் காலையில் நினைவூட்டி இந்நாளைத் துவக்கி வைத்துள்ளார். இதோ அவருக்காகவும் நம் அனைவருக்காகவும், தங்கை திரைப்படத்திலிருந்து இனியது இனியது உலகம்.
http://youtu.be/XbRUcqDobU8
தினமும் காலையில் எழுந்தவுடன் நடிகர் திலகத்தின் படத்தைக் கும்பிட்டு விட்டு படப்பிடிப்பிற்குச் சென்றால் அவருடைய ஆசியால் நடிப்பு கொஞ்சமாவது வரும்.
ஸ்டைல் என்றால் என்ன என்பதை இந்தப் பாடல் விளக்கும்.
Not only in Thangai there are many other songs which will motivate
every one. For Ex Kelvi Piranthathadu, Aru Maname Aru,
Vazha Ninaithal and many more songs.
சற்றே கூர்ந்து கவனித்தால் தலைவர் வட இந்திய ஹீரோக்களின் இலகுவான பாணி நடன அசைவுகளை பயன் படுத்தியிருப்பது தெரியும்.நட்ட நடு வழியில் தன்னை இறக்கி விட்டு சென்றாலும் அதை "நான் விளையாட்டாகத்தான் எடுத்துக்கொண்டேன்" எனும் தன எண்ணத்தை பிரதிபலிக்க இதை ஒரு ஊரதியாக உபயோகித்திருப்பார்.
அன்புள்ள முரளி சார்,
வாசு அவர்கள் பதித்த ஸ்டில்லுக்கான தங்கள் நீண்ட விளக்கம் மிக அருமை மட்டுமல்ல, இதுவரை கேள்விப்படாத அரிய தகவல். மிக விளக்கமாக பதித்துள்ளீர்கள். பம்மலார் அவர்கள் ஆவணப்புதையல் என்றால் நீங்கள் வரலாற்று புதையல். கிருஷ்ண ராஜசாகர் மதகுகள் எப்போது திறக்கப்படும் என்று காத்திருக்கும் மத்திய தமிழக விவசாயிகள் போல தங்கள் வரலாற்றுத் தகவல் கதவுகள் எப்போது திறக்கப்படும் என்று தவம் கிடப்பவர்களில் நானும் ஒருவன்.
தங்களின் மிகப்பெரிய பலம் மற்றும் சிறப்பு என்னவென்றால், எந்த ஒரு விஷயத்தைப் பற்றியும் பதிவிடும்போது, அதைப்பற்றி நமது ரசிகர்கள், நண்பர்கள் முன்னர் பதிவிட்டிருப்பதையும் மறவாமல் நினைவு கூர்வது. இது மற்றவர்கள், முன்னர் பதித்தவைகளுக்கு நீங்கள் தரும் மிகப்பெரிய கௌரவம். இந்த நல்ல வழக்கம் நமது பம்மலார் சார், வாசு சார், கோபால் சார் போன்றவர்களிடமும் உள்ளது மகிழ்சியளிக்கிறது.
தங்களின் 'எங்கே நிம்மதி' பாடல் ஆய்வு 2008 ல் பதித்திருந்த போது ஒரு நீண்ட பதிலை பின்னூட்டமாக பதித்திருந்தேன். சதி வெள்ளத்தில் அதுவும் அடித்துச் செல்லப்பட்டு விட்டது.
தங்களின் விரிவான அனைத்து பதிவுகளுக்கும் மிக்க நன்றி.