இன்றைய ஸ்பெஷல் (4)
நேற்று படகோட்டும் போது தன் கண்ணாளனுக்காக நதியை மெதுவாகப் போகச் சொன்னார் 'வடக்கத்திய இசைக்குயில்' லதா.
இன்று நம் 'தென்னகத்து இசைக்குயில்' சுசீலா.
அக்பரின் மகன் சலீமைக் காதலித்த நாட்டிய யௌவன ராணி அனார்கலி இளவரசனைக் காதலித்த பாவக் குற்றத்திற்காக அக்பரால் சிறையடைக்கப்பட்டு சங்கிலிகளால் பிணைக்கப்பட்டு கிடக்கிறாள் அழுக்குத் துணியுடன் அலங்கோலமாக.
தன் காதல் அரும்பு மலராமல் கருகிப் போகிறதே என்று கண்ணீர் வடிக்கிறாள். தான் கனவு கண்டிருந்த காதல்கதை கண்ணீரில் போய் முடிந்ததே என்று ஆற்றொணாத் துயருற்று கண்ணீர் வடிக்கிறாள்.
நிலா ஒளி வீசிக் கொண்டிருந்த வானத்தில் மழை மேகங்கள் சூழ ஆரம்பித்து விட்டதே என்று கதறுகிறாள்.
ஆமாம்!
இந்தியில் வெளிவந்து நம் உள்ளங்களையெல்லாம் கொள்ளையடித்த 'மொகல்-ஏ.அசாம்' திரைப்படம் தமிழில் அக்பர் ஆக 'டப்' ஆனது.
http://1.bp.blogspot.com/-dJSCIAr2CP...25282%2529.jpg
மதுபாலா என்ற மனதை மயக்கும் கட்டழகிதான் அனார்கலியாகி பல இந்திய சலீம்களின் மனதில் காதல் சாம்ராஜ்யக் கோட்டை எழுப்பினார்.
1960-ஆம் ஆண்டு வெளியான இப்படம் பல சிறப்புகளைப் பெற்றது. (அதைப் பற்றி சொல்லி மாளாது)
நடிகர் திலகத்திற்கு மிகவும் பிடித்த பிருத்விராஜ்கபூர் அக்பராகவும், மது அனாராகவும் வாழ்ந்தனர். சலீம் திலீப்.
'அக்பர்' தமிழாகி இந்தியில் லதா பாடிய 'மொஹபத் கி ஜூட்டி கஹானி பெ ரோயே' என்ற உலகை உலுக்கிய பாடல் தமிழில் நம் தென்னகத்து இசைக்குயில் இசைக்க அதே அளவுக்கு புகழ் பெற்றது நௌஷாத்தின் மனம் மயக்கும் இசையிலே!
http://4.bp.blogspot.com/-JsK84wpNpt...ni+pe+roye.JPG
என்ன பாடல் என்று தெரிகிறதா?
கனவு கண்ட காதல்
கதை கண்ணீராச்சே!
நிலா வீசும் வானில்
மழை சூழலாச்சே!
மழை சூழலாச்சே!
முன்பே எண்ணிப் பாராமல்
நெஞ்சம் ஏங்கிட்டேனே
எந்தன் ஆசையே இன்று
என்னைக் கொல்லலாச்சே!
உந்தன் காதலின்
கனவெல்லாம்
கண்ணீர் ஆச்சே! ஆச்சே!
கனவு கண்ட காதல்
கதை கண்ணீராச்சே!
அகம் வாட்டும் காதல் தீ
யார்க்கும் சொல்லாதே
மறைத்தே நாம் வாழ்கின்றோம்
மார்க்கம் காணாதே
ஜகம் வாழ்கிறேன்
வாழ்க்கையே
கண்ணீர் ஆச்சே!ஆச்சே!
கனவு கண்ட காதல்
கதை கண்ணீராச்சே!
நிலா வீசும் வானில்
மழை சூழலாச்சே!
மழை சூழலாச்சே!
கனவு கண்ட காதல்
கதை கண்ணீராச்சே!
மதுபாலாவின் மனதை வாட்டி எடுக்கும் இரும்பையும் இளக வைக்கும் நடிப்பு. அனார்கலியை நம் கண்முன்னே அவள் காதலின் துடிப்பை அப்படியே நம்முள் கொண்டு வந்து செருகும் உணர்வு பூரவமான நடிப்பு மறக்கவே முடியாத ஒன்று. அதை விட அவர் அழகு. சோகத்தில் கூட.
(பிரபல இந்திப் பின்னணி பாடகர் கிஷோர் குமாரை மது மணம் செய்து கொண்டார். கிஷோர் இந்த விஷயத்தில் நம்மூர் ஜெமினி மாதிரி கில்லாடி. இவர்கள் இணைந்து நடித்த 'சல்திகா நாம் காடி" அங்கு படு சூப்பர் ஹிட்)
நடிப்புக்கு மது உயிர் கொடுத்ததைவிட சுசீலாம்மா இந்தப் பாடலை சிரத்தை எடுத்துப் பாடி அழியாக் காவியமாகி விட்டார். இதுவும் சிலோன் ரேடியோவில் தினமும் ஒளிபரப்பான பாடல்.
'கனவு கண்ட காதல்' இன்றைய ஸ்பெஷலாக
http://www.youtube.com/watch?feature...&v=qpQk4puv_fg