http://i61.tinypic.com/2u97eww.jpg
Printable View
உயர்நீதிமன்ற நீதிபதி திரு.கற்பக விநாயகம் அவர்களின் நூல் வெளியீட்டு விழா
சென்னை தி.நகர் பி.டி.தியாகராயர் மண்டபத்தில் கடந்த ஞாயிறு (23/11/2014)
அன்று நடைபெற்றது. அதில் நண்பர்கள் திருவாளர்கள் தம்பாசாரி, சி.எஸ். குமார் ,
நாகராஜன் ஆகியோருடன் நானும் கலந்து கொண்டேன்.
விழா பற்றிய புகைப்படங்கள் /செய்திகள் விரைவில் பதிவிடப்படும் .
விழாவில் முன்னாள் அமைச்சர் திரு. ஆர்.எம்.வீரப்பன் அவர்கள் கலந்துகொண்டு
நீதிபதி திரு. கற்பகவினாயகத்திற்கு பொன்னாடை போர்த்தி கௌரவித்தார் .
திரு.ஆர். எம்.வீரப்பன் விழா முடிந்து வெளியேறும்போது அவருடன் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் நமது நண்பர்களின் பார்வைக்கு.
ஆர். லோகநாதன்.
http://i57.tinypic.com/28cdo40.jpg
டிசம்பர் 8-ம் தேதி அன்று ‘சிரித்து வாழ வேண்டும்’ படத்தைப் பற்றி ஒரு கருத்தரங்கு நடைபெற்றது. அதில் பிரபல டைரக்டர் திரு. ப. நீலகண்டன், நடிகை திருமதி ஷீலா, கலாக்ஷேத்ரா நாட்டியக் கலைஞர் திருமதி கிருஷ்ணவேணி, டாக்டர் திருமதி சரோஜா, வர்த்தகர் ஜனாப் வதூது, வழக்கறிஞர் திரு. பழனியப்பன், தொழில் துறைப் பணியாளர் திரு. பாலசுப்ரமணியம், கல்லூரி மாணவி குமாரி உதயா ஆகியோர் கலந்து கொண்டனர்.
ப.நீலகண்டன்: படத்தைப் பார்த்த உடனேயே இது ஒரு ஜனரஞ்சகமான படம்னு சொல்லத் தோணித்து. கதையைச் சொல்லியிருக்கிற முறை ரொம்பப் பிடிச்சிருக்கு. படம் பார்க்கிறவங்களுக்கு எந்தக் குழப்பமும் இல்லாம, ஒழுங்கா, நேரடியாகச் சொல்லுகிற முறைக்காக டைரக்டரைப் பாராட்டணும். எம்.ஜி.ஆரைப் பொறுத்தவரைக்கும், எந்தக் கதையாக இருந்தாலும், தான் சொல்ல விரும்புகிற சில நல்ல கொள்கைகளை, எந்த இடத்திலேயாவது புகுத்துவதற்கு வாய்ப்பை ஏற்படுத்திக்கொண்டு, அது அந்தக் கதையோடு ஒட்டுகிற மாதிரியாகப் பண்றாரு பாருங்க, அது அழகாக இருந்தது. உதாரணமாக, ஒரு முஸ்லிம் ‘நமாஸ்’ பண்றாரு; அதே நேரத்திலே ஒரு பெண் அதே வீட்டிலே, முருகன் படத்துக்கு வணக்கம் பண்ணிக்கிட்டிருக்கா. மத சுதந்திரம் உண்டு என்கிறதை அது நல்லா எடுத்துக் காட்டுது.
பழனியப்பன்: இப்பொழுதெல்லாம் கடத்தல் மன்னர்களைப் பத்தியே பேசிக்கிட்டிருக்கோம். சமுதாயத்துக்கு அவர்கள் எந்த வகையிலே எதிரிகள் என்பதை இதுலே நல்லா எடுத்துச் சொல்லியிருக்காங்க.
உதயா: ஸ்டோரியைப் பொறுத்தவரைக்கும் அது ஒரிஜினல் இல்லை. இங்கிலீஷ் கதையைத்தான் இந்தியிலும், தமிழிலும் எடுத்திருக்காங்க. ஆனா, ஒவ்வொண்ணும் டிஃப்ரண்ட் வெர்ஷனா இருக்கு. இந்தியிலே இன்ஸ்பெக்டர் பாகத்தையும், முஸ்லிம் நண்பன் பாகத்தையும் வெவ்வேறு நடிகர்கள் செஞ்சிருக்காங்க. இந்தப் படத்திலே எம்.ஜி.ஆரே இரண்டையும் செய்திருக்கார். இரண்டும் ஒரே நபர்தான் என்பது தெரியாதபடி தனித்தன்மைகளோடு நடித்திருக்கிறார். இன்ஸ்பெக்டர், அப்துல் ரஹ்மான் இரண்டு பேரும் சந்திக்கிறபோது கூட, அப்படித் தோன்றாமல் செய்திருக்கிறார்.
கிருஷ்ணவேணி: ஆனா, நடிப்பிலே அந்த முஸ்லிம் காரெக்டர்தான் மேலோங்கி நிற்கிறது.
வதூது: ஆமாம்! எம்.ஜி.ஆர். அவர்கள் முஸ்லிம் காரக்டரை ரொம்ப நல்லா செஞ்சிருக்காரு. பேச்சு, தொழுகை, சாப்பிடும் விதம் எல்லாமே இயற்கையாக இருக்கிறது.
ப.நீலகண்டன்: ‘மலைக்கள்ளன்‘லே இருந்தே, முஸ்லிம் வேஷம் போடறதிலே அவருக்குத் தனித்தன்மை உண்டு. அதுவும் இந்தப் படத்திலே முஸ்லிம் பாத்திரம் உங்க மனசிலே நிக்கறதுக்கு இன்னொரு காரணமும் உண்டு. ஒரு இந்து, தன்னுடைய காதலியை முஸ்லிம் நண்பர்கிட்டே கொண்டு போய் ஒப்படைக்கிற அளவுக்கு நம்பிக்கைக்குரிய பாத்திரமா அவன் இருக்கான்னு சொல்லும்போது, உங்க மனசுக்குள்ளே குடியேறுது அந்த முஸ்லிம் பாத்திரம்.
கிருஷ்ணவேணி: ராமு ஒரு வார்த்தை சொன்னதுக்காக, அவ்வளவு பெரிய கிளப்பை ஒரே நாள்லே மூடிடறாரே… நட்புக்காக உயிரைக்கூடக் கொடுக்கத் தயார்னு சொல்றாரே, அப்ப அவர் நடிப்பு உயர்ந்திருக்குது.
ஷீலா: ஸ்லோமோஷன்லே எடுக்கப்பட்ட காட்சிகள் நன்றாக இருக்கின்றன. அந்த ஸ்லோ மோஷன் சண்டை இன்னும் கொஞ்சம் கூட இருக்காதா என்று இருக்கிறது.
கிருஷ்ணவேணி: ‘மேரா நாம் அப்துல் ரஹ்மான்’ பாட்டுக்கு, எம்.ஜி.ஆர். கையில் டேப் வைத்துக்கொண்டு டான்ஸ் ஆடுகிறாரே, அது பிரமாதம். அதுக்காகவே இரண்டாம் தடவை அந்தப் படத்தைப் பார்த்தேன்.
ஷீலா: காமெடின்னு தனி டிராக்கே இல்லை. இது தமிழ்ப் படத்திலே ரொம்ப அபூர்வம். ஆனால், நகைச்சுவை இல்லாத குறையே தெரியலை.
சரோஜா: தேங்காய் சீனிவாசன் கேடியாக வர்ற காட்சிகள் தமாஷாக இருக்கே!
கிருஷ்ணவேணி: நம்பியார் பேசுறதே சில இடத்திலே நகைச்சுவையா இருக்கு. தான் செய்த கொலைகளைப் பற்றி அவர் கூலாகப் பேசுவது தமாஷ்தான்!
(லதா கத்தி தீட்டும் பெண்ணாக வரும்போது போட்டுக்கொண்டிருக்கிற உடையைப் பற்றி பல்வேறு கருத்துக்கள் கூறப்பட்டன. பொதுவாக, அந்த உடை வேறு மாதிரியாக இருந்திருக்கலாம் என்று கருதினார்கள். உப பாத்திரங்கள் ராகவன், தேங்காய் சீனிவாசன், மோதிரத்தைக் கழற்றும் வீரப்பன் அனைவருமே நெஞ்சை அள்ளும்படி நன்றாக நடித்திருப்பதாகக் கருத்து தெரிவித்தனர். பாடல் களில் ‘கொஞ்ச நேரம்‘, ‘பொன் மனச் செம்மல்‘ ‘மேரா நாம் அப்துல் ரஹ்மான்’ ஆகிய பாடல்கள் மிகவும் நன்றாக இருப்பதாகக் கூறப்பட்டது.)
உதயா: ‘சிரித்து வாழவேண்டும்’ என்ற தலைப்புக்கும் படத்துக்கும் சம்பந்தம் இருப்பதாகத் தெரியவில்லை.
பாலசுப்ரமணியம்: ஒரு பெரிய சரித்திரப் படத்தைப் பார்க்கிற உணர்ச்சி இருந்தது. ரொம்ப ரிச்காஸ்ட்யூம்ஸ்; ரிச் ஸெட்ஸ்; இந்த மாதிரி ஒரு படம் சமீபகாலத்திலே பார்க்கலேன்னு சொல்லலாம்.
ப.நீலகண்டன்: அது, காலம் சென்ற எஸ்.எஸ்.வாசன் அவர்களுடைய பிரதிபலிப்புன்னுதான் சொல்லணும். பிரமாண்டமா தயாரிக்கிற பாரம்பரியம். அவர் மகன் எஸ்.எஸ்.பாலன் அந்தப் பாரம்பரியத்தைக் காப்பாற்றி ஒரு புதிய சாதனையைச் செய்திருக்கிறார்.
மக்கள் திலகம் திரியின் பாகம் 12ஐ துவக்கி வைத்து அருமையான பதிவுகளை தொடர்ந்து மேற்கொண்டு வரும் சகோதரர் திரு. கலை வேந்தன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
அலுவலகப் பணிச்சுமை காரணமாக சற்று இடைவெளி ஏற்பட்டு விட்டது. தாமதமான வாழ்த்துக்களுக்கு வருந்துகிறேன் !
http://i58.tinypic.com/dyvoyu.jpg
எல்லோரையும் அரவணைத்து அவர்களை அன்புடன் நடத்திய பண்பாளர் எங்கள் மக்கள் திலகத்தின் புகழ் பாடும் இந்த திரியில், பங்களித்து வரும் அன்பர்கள் அனைவரின் பாங்கையும் பாராட்டி, இந்த மக்கள் திலகம் திரியினில் தங்களின் பதிவுகள் தொடர்ந்திட நாங்களும் ஆவலுடன் இருக்கிறோம்.
தங்களை இரு கரம் கூப்பி சிரம் தாழ்த்தி அன்புடன் வரவேற்கிறோம். மக்கள் திலகத்தை பற்றிய அரிய பதிவுகளை தங்களிடமிருந்து ஆர்வமுடன் எதிர்பார்க்கிறோம்.
A SPECIAL RAJ YOTSAVA FUNCTION IS TO BE CONDUCTED BY EX MLA THIRU MUNIYAPPA ON 30.11.2014.
MAKKAL THILAGAM MGR DEVOTEES CO-ORDINAING THIS FUNCTION
http://i58.tinypic.com/2lwxfl5.jpg
இன்று தொலைக்காட்சியில் எம்.ஜி.ஆர் படங்கள்
ஜெயா - பகல் 1.30 மணி - ஆயிரத்தில் ஒருவன்
ராஜ் டிஜிட்டல் பிளஸ் - காலை 10 மணி - மதுரை வீரன்
http://i58.tinypic.com/vhrt4o.jpg
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
வறுமைக்கு வைத்தியம் செய்த வள்ளலே "என்றென்றும் எங்கள் அன்புக்கு அடிமைப்பட்ட அண்ணனே ,கைசிவக்க கொடுத்த கா்ணன்நீா் தமிழரை காதல் வயப்படுத்திய கண்ணன் நீா்,உமது சாதனைகள் வரலற்றில் தங்கத்தில் பொறிக்கும் தகுதி உள்ளளைதான்,ஆனால் என்ன செய்வேன் அதைப்போற்றும் தமிழுக்கு தங்கம் பெறும் தகுதி இல்லையே,ஆகவேதான் முதல்வா் உமக்கு மடல்வரைய இரண்டாவது உலோகமான வெள்ளியைத் தோ்ந்தெடுத்தேன்,இப்பிழையை மன்னிப்பீரா?மன்னிப்பீா்,நானறிவேன் பலபேரை மன்னித்துப் பழகியவராயிற்றே நீா்? பட்டம்பெற்ற உம்மைபோற்றும் தகுதி எனக்கில்லை என்றாலும் உமது புகுந்தவீட்டு சாதனைகலை பீறந்தவீட்டான் என்ற வகையில் பாராட்டுகிறேன்.டாக்டா் பட்டம் பெற்றதற்காக எம்ஜிஆருக்கு நடத்தப்பட்ட பாரட்டு விழாவிலிருந்து, அன்புத் தம்பி கமல்ஹாசன்.
http://i1170.photobucket.com/albums/...ps16318147.jpg
உன் நாயோட திறமையை, நான் பார்க்கிறேன். என்னோட திறமையை நீங்க பாருங்க" என்று சொல்லிவிட்டு தலைவர் டைவ் அடிப்பார்
நெப்டியூன் ஸ்டூடியோ
அடையாறு பகுதியில் ராமகிருஷ்ண மடம் சாலையும், கிரீன்வேஸ் சாலையும் சந்திக்கும் வட்டத்திற்கு எதிரே மேற்குமுக பிரதான வாசலைக்கொண்டது 'நெப்டியூன் ஸ்டூடியோ.'
இது பேசும் பட ஆரம்ப காலத்தில் 1933-1934-களில் 'மீனாட்சி சினி டோன்' என்ற பெயரில் சக்தி வாய்ந்த மின் விளக்குச் சாதனங்கள் எதுவும் இன்றி, சூரிய ஒளியில் படம் பிடிக்கும் வகையில் மேற்கூரை இல்லாத அரங்கங்களை அமைத்து அதில் படப்பிடிப்பு நடைபெற்ற ஒரு ஸ்டூடியோ!. (பின்நாளில் சுந்தரம் சவுண்ட் ஸ்டூடியோ). இங்குதான் காரைக்குடி மானகிரியைச் சேர்ந்த 'லேனா' என்று அழைக்கப்பட்ட லெட்சுமணன் செட்டியார், அழ.ராம அழகப்ப செட்டியாருடன் எம்.கே.தியாகராஜ பாகவதர் முதன் முதலாக அறிமுகமாகி நடித்து கே.சுப்பிரமணியம் இயக்கிய 'பவளக்கொடி' படம் தயாரானது. அதன் பிறகு 'கிருஷ்ணா பிக்சர்ஸ்' என்னும் பேனரில் பி.யு.சின்னப்பா- டி.ஆர்.ராஜகுமாரி நடித்த 'கிருஷ்ணபக்தி', 'வனசுந்தரி' மற்றும் எம்.ஜி.ஆர்.- பானுமதி நடித்து மகத்தான வெற்றி பெற்ற 'மதுரை வீரன்', 'ராஜாதேசிங்கு', சிவாஜிகணேசன்- பத்மினி நடித்த 'காவேரி', என்.டி.ராமாராவ்- பத்மினி நடித்த 'மருமகள்' போன்ற பல நல்ல படங்கள் எடுக்கப்பட்டது.
பின்நாட்களில் கோயம்புத்தூர் ஜூபிடர் பிக்சர்ஸ் அதிபர்களான எம்.சோமசுந்தரம், எஸ்.கே.மொய்தீன் ஆகியோர் இந்த மீனாட்சி சினிடோன் ஸ்டூடியோவை வாங்கி 'நெப்டியூன்' என்று பெயரிட்டு, முன்னணி நடிகர், நடிகைகளை வைத்து பல வெற்றிப் படங்களை எடுத்துப் பிரபலமாயினர்.
நான் வசனம் எழுதி ஏ.பீம்சிங் இயக்கி சிவாஜி, ஜெமினிகணேசன், சாவித்திரி நடித்த 'பாசமலர்', 'படித்தால் மட்டும் போதுமா', சிவாஜியின் 'புதிய பறவை', எம்.ஜி.ஆர்., சரோஜாதேவி நடித்த 'பெற்றால்தான் பிள்ளையா', சிவாஜி நடித்த 'அன்னை இல்லம்' மற்றும் 'அன்பளிப்பு' ஆகிய எனது 6 படங்களும் இந்த 'நெப்டியூன்' ஸ்டூடியோவில்தான் உருவாயின. இது எம்.ஜி.ஆர்., சிவாஜிக்கு மட்டும் அல்ல எனக்கும் மிக ராசியான ஸ்டூடியோ.
ஏற்கனவே இந்த ஸ்டூடியோவில் சில பங்குகளைப் பெற்றிருந்த எம்.ஜி.ஆர். பிறகு முழு உரிமையும் பெற்று அதிபரானார். அதற்கு தம் அருமை அன்னையார் சத்தியபாமாவின் நினைவாக 'சத்தியா ஸ்டூடியோ' என்று பெயரிட்டு பல படங்களின் படப்பிடிப்பை இங்கு நடத்தி வந்தார். அவருடைய மறைவிற்குப் பின்னர், இப்பொழுது இங்கு 'எம்.ஜி.ஆர். ஜானகி' மகளிர் கல்லூரி இயங்குகிறது.
இனிய நண்பர் திரு.சைலேஷ் பாசு அவர்களுக்கு வணக்கம்.
3000 பதிவுகள் முடித்து தொடரும் தங்களின் மேலான பதிவுகளுக்கு வாழ்த்துக்கள் !!
பாராட்டுக்கள்.!!! தாமதமாக வாழ்த்துக்கள் தெரிவிப்பதற்கு பொறுத்தருளவும் .
கணிப்பொறி பழுது மற்றும் இணையதள இணைப்பு துண்டிப்பு ஆகியன காரணங்கள்.
தங்களின் வேண்டுகோளின்படி நீதிபதி திரு.கற்பக விநாயகம் அவர்களை பற்றிய
நூலின் முகப்பு தோற்றத்தை பதிவு செய்கிறேன்.
விழா பற்றிய புகைப்படங்கள்/செய்திகள் /நூலில் உள்ள புரட்சி தலைவர் பற்றிய
செய்திகள் விரைவில் நண்பர்களுக்காக பதிவிட உள்ளேன்.
http://i59.tinypic.com/mwqicw.jpg
ஆர். லோகநாதன்.
மக்கள் திலகத்தின் ''சிரித்து வாழவேண்டும்'' - 30.11.1974
http://i58.tinypic.com/v5zfba.jpg
7.11.1974 அன்று வெளிவந்த மக்கள் திலகத்தின் ''உரிமைக்குரல் '' வேலூர் தாஜ் அரங்கில் 24 வது நாளை கடந்த நேரத்தில்
சிரித்து வாழ வேண்டும் - வேலூர் .கிரவுன் அரங்கில் வெளியானது . 30.11.1974 அன்று காலை 6 மணிக்கு வேலூர் நகர தலைமை எம்ஜிஆர் மன்றத்தின் சிறப்பு காட்சி நடைபெற்றது . திரை அரங்கமே திருவிழாவாக காட்சி அளித்தது .கிரவுன் அரங்கில் மெயின் அரங்காக நீண்ட வருடங்களுக்கு பிறகு மக்கள் திலகத்தின் படம் வந்தது குறிப்பிடத்தக்கது . இந்த அரங்கில் முதல் வாரம் நடைபெற்ற மொத்தம் 33 காட்சிகளும் தொடர்ந்து அரங்கு நிறைந்து சாதனை படைத்தது .
சிறப்பு காட்சி துவங்கியதும் ரசிகர்களின் ஆராவராம்- டைட்டில் மற்றும் .மக்கள் திலகம் அறிமுக காட்சியில் கைதட்டல்கள் - விசில் தூள் பறந்தது .அப்துல் ரஹமான் அறிமுக பாடல் காட்சி ரசிகர்களை மேலும் பரவசமாக்கியது .சூதாட்ட விடுதியில் மக்கள் திலகம் vs மக்கள் திலகம் மோதும் ஆக்ரோஷமான சண்டை காட்சி புதுமையாக இருந்தது .
நீ என்னை விட்டு போகாதே பாடல் காட்சியில் மக்கள் திலகம் போலீஸ் அதிகாரி மிடுக்குடன் நடந்து கொள்ளும் காட்சியிலும் , காஞ்சனா மக்கள் திலகத்தை தொடும்போது அவரை தட்டி விடும் காட்சியில் அவரது ஸ்டைல் அபாரம் .
லதா கனவு பாடலில் மக்கள் திலகத்தின் பல வண்ண உடைகள் - கொஞ்ச நேரம் என்னை மறந்தேன் பாடல் - ரசிகர்களின் மகிழ்ச்சிக்கு அளவேயில்லை .ஒரே கைதட்டல் மயமாக இருந்தது .
மக்கள் திலகம் - ஜஸ்டின் சண்டை காட்சி மிகவும் புதுமையாக இருந்தது . சுவரில் மோதி ஜஸ்டினை புரட்டி எடுத்த இடத்தில ரசிகர்களின் ஆராவாரம் காதை பிளந்தது . மக்கள் திலகம் - வி.எஸ். ராகவன் தொலைபேசி உரையாடல் மற்றும் கல்லறையில் இருவரும் நேரில் உரையாடும் காட்சியிலும் மக்கள் திலகத்தின் நடிப்பை ரசிகர்கள் பெரிதும் ரசித்தார்கள் .
உலகமெனும் நாடகமேடையில் ..பாடல்காட்சி துவங்கியது முதல் கிளைமாக்ஸ் வரை பரப்பரப்பான காட்சிகள் - சண்டை காட்சிகள் - ரீரெக்கார்டிங் எல்லாமே ரசிகர்களை கட்டி போட வைத்தது . ஒரு பக்கம் உரிமைக்குரல் படத்தின் இமாலய வெற்றி - களிப்பில் இருந்த ரசிகர்களுக்கு சிரித்து வாழ வேண்டும் மேலும் மகிழ்ச்சி வெள்ளத்தில் ரசிகர்களை மூழ்கடித்தது .
1974ல் வேலூர் லஷ்மியில் நேற்று இன்று நாளை - வசூலில் சாதனை படைத்தது . வேலூர் தாஜில் உரிமைக்குரல் பிரமாண்ட வெற்றி பெற்றது . சிரித்து வாழ வேண்டும் வேலூர் -கிரவுனில் 7 வாரங்கள் ஓடி அந்த அரங்கில் அதிக வசூல் பெற்ற படமாக திகழ்ந்தது
.