Andharangam - Devarajan -PS -KJY-Kamalkanth
ஞாயிறு ஒளி மழையில் திங்கள் குளிக்க வந்தாள் ..
அந்தரங்கம் 1975 திரைப்படத்திற்காக
கமலஹாசன் தமிழ்த் திரையில் பாடிய முதல் பாடல் என்று நம்புகிறேன்
வாய்ப்பளித்த இசையமைப்பாளர் தேவராஜன்
பாட்டுக்கு சொந்தக்காரர் நேதாஜிதானே ?
http://www.youtube.com/watch?v=a513fQZqTXA
உண்ணி மேரி தீபாவின் அறிமுகம் !
லைப்பரியில் பார்த்த சாண்டில்யன் நாவலின் அட்டைப்பட இளவரசி போன்ற களையான முகம்
அவரது குண்டு உடம்பை குறைப்பதற்கு பிரயத்தனப்படும் நாயகன்
உடற்பயிற்சி என்று வெட்ட வெளியில் தீபாவை அம்மி அரைக்க சொல்லி
கவர்ச்சிக்காக ஆட்டிப் படைத்து இருக்கிறார்கள்
நல்ல வேளை அரிசி குத்த சொல்லவில்லை
கமல் தீபா இளஞ்சிட்டு ஜோடி
புதுமுகமே சிறு ? மதுக்குடமே இள மதிமுகமே ..
என்று கண்ணதாசனோ வாலியோ பாட்டு
P சுஷீலா K J யேசுதாஸ் குரலின் மிக இனிமையாக ஒலிக்கும்
http://www.youtube.com/watch?v=Ez0zGNAyyvA
கருப்பு வெள்ளைப் படத்தில் இரண்டு கலர் பாட்டுக்கள்
முடிந்தால் டவுன் லோடு செய்து கொள்ளுங்கள்
லண்டன் டியூப்பில் தொலைந்தது கிடைத்தாலும்
யூ டியூப்பில் பார்க்கக் கிடைப்பதில்லை
அகப்பட்டாலும் நிலைப்பதில்லை
கவர்சியான நீச்சலுடை தீபாவை விளம்பரப்படுத்தி
போஸ்டரில் பெரிதாய் ஒட்டிக்காட்டி
பார்க்கும் உள்ளங்களை படாதபாடுபடுத்திய
ஒரு மாதிரியாக சிந்திக்க வைத்த திரைப்படப் பெயரும் அந்தரங்கம் என்று
போய்ப் பார்த்தால் மேஜர் சுந்தராஜனுக்கும் சாவித்திரிக்கும்
இன்னும் குமாரி பத்மினினிக்கும் இடையில் என்னமோ !
பாவமில்லையா ரசிகர்கள் :(
Regards
AyOthi Arannmai -PS -Jeevanaadi
பி சுஷீலா வாலி பாட்டு ஜீவநாடி'யில் ( 1970 )வி தக்க்ஷிணாமூர்த்தி இசையில்
http://music.cooltoad.com/music/song.php?id=487054
அயோத்தி அரண்மனை பஞ்சணையில்
அமைதி கொண்டிருந்தான் ஸ்ரீராமன்
வராத சுகம் இன்று வந்ததென
மடியினில் கிடந்தாள் வைதேகி
அயோத்தி அரண்மனை ..
சீதையை ராமன் பாராட்டினான்
சீதா ராமனைத் தாலாட்டினாள்
திரும்பவும் காலம் வென்றதென
தேன் எனும் குரலில் சீராட்டினாள்
அயோத்தி அரண்மனை ...
கல்லில் நடந்த ராமனுக்கு
கால்கட்டு போட்டாள் வைதேகி
கண்ணில் கலந்த ராமனுக்கு
கால்கட்டு போட்டாள்...................?
ஒரு நாள் ராமனை உறங்க வைக்க
பலநாள் ஜானகி தவமிருந்தாள்
ரகுபதி ராகவன் துயில் கொண்டான்
ரசனையை ஜானகி பயில்கின்றாள் ?
அயோத்தி அரண்மனை பஞ்சணையில்
அமைதி கொண்டிருந்தான் ஸ்ரீராமன்
வராத சுகம் இன்று வந்ததென
மடியினில் கிடந்தாள் வைதேகி !
(மது : வரிகள் சரி பிழை பாருங்கள் - முடிந்தால் , pls)
Regards