சென்னை சைதாப்பேட்டை, கோடம்பாக்கம் சாலையில் உள்ள ஒரு ஓட்டலில்
வைக்கப்பட்டிருந்த விளம்பர பேனர்.
http://i68.tinypic.com/2qn0dpe.jpg
Printable View
சென்னை சைதாப்பேட்டை, கோடம்பாக்கம் சாலையில் உள்ள ஒரு ஓட்டலில்
வைக்கப்பட்டிருந்த விளம்பர பேனர்.
http://i68.tinypic.com/2qn0dpe.jpg
http://i67.tinypic.com/1zl7rq8.jpg
வெற்றி! வெற்றி! வெற்றி!
புரட்சித் தலைவருக்கு வெற்றி!
புரட்சித் தலைவிக்கு வெற்றி!
தஞ்சை, அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் ஆகிய 3 தொகுதிகளுக்கு 19-ம் தேதி நடந்த தேர்தலில் இன்று ஓட்டுக்கள் எண்ணப்பட்டு முடிவுகள் வெளியாகின்றன. இப்போதைய நிலவரப்படி 3 தொகுதிகளிலும் அதிமுக தொடர்ந்து முன்னிலையில் இருக்கிறது. இன்னும் 3 மணி நேரத்துக்குள் முடிவுகள் வெளியாகிவிடும்.
அதிமுக 3 தொகுதிகளிலும் அமோக வெற்றி! உறுதி!
43 வருசத்துக்கு முன் ஒரு தனி மனிதர் தனது சொந்த செல்வாக்கையும் மக்களையும் மட்டுமே நம்பி ஆரம்பித்த கட்சி இன்றும், அந்த மனிதர் உடல் அளவில் மறைந்து 29 ஆண்டுகள் ஆகியும் அவரது கட்சி வெற்றிகளை குவித்து வருகிறது. அப்படி என்றால் மக்கள் தலைவர், மனிதர் குல மாணிக்கம் புரட்சித் தலைவரின் செல்வாக்கு எந்த அளவுக்கு மக்களிடம் நிலைத்து நிற்கிறது என்பதை மன மாச்சரியங்களை, வெறுப்பை, கட்சி வேறுபாடுகளை ஒதுக்கிவைத்து விட்டு இதைப் படிக்கும் எல்லாரும் நடுநிலையோடு சிந்தித்து பாருங்கள். புரட்சித் தலைவரின் செல்வாக்கும் புகழும் பிரமிப்பை ஏற்படுத்தும்.
என்றென்றும் புரட்சித் தலைவரின் புகழ்க்கொடி பறக்கும் கோட்டையாம் எங்கள் மதுரையின் திருப்பரங்குன்றத்திலும் அதிமுக வெற்றி பெற்றுள்ளது. மதுரை என்றும் புரட்சித் தலைவரின் கோட்டை என்பதற்கு மறுபடியும் ஒரு உதாரணம்.
1984-ம் ஆண்டு சட்டசபைத் தேர்தலில் புரட்சித் தலைவர் அமெரிக்காவில் இருந்து சிகிச்சை பெற்றுக்கொண்டு படுத்தபடியே இங்கு வெற்றி பெற்றார். கட்சியும் வெற்றி பெற்றது. அவர் வழியில் உடல் நலக்குறைவு காரணமாக சென்னை அப்போலோ ஆஸ்பத்திரியில் சி்கிச்சை பெற்று வரும் புரட்சித் தலைவி அம்மாவும் பிரசாரத்துக்கு போகாமல் ஆஸ்பத்திரியில் படுத்துக் கொண்டே புரட்சித் தலைவர் ஆசியோடு 3 தொகுதியிலும் அதிமுகவை வெற்றி பெறச் செய்துள்ளார்.
இந்த வெற்றியை கொண்டாடும் வகையில் கூடிய சீக்கிரம் அம்மா அவர்கள் பூரண குணம்பெற்று திரும்பிவந்து பணியாற்ற வேண்டும். புரட்சித் தலைவர் அருள் புரிய வேண்டும்.
மனிதப் புனிதர் மங்காப்புகழ் மன்னவர் மக்கள் தலைவர் புரட்சித் தலைவர் அவர்கள் வாழ்க!
தென்னிந்தியாவின் ஜான்சி ராணி வீராங்கனை கட்சியின் காவல் தெய்வம் புரட்சித் தலைவி அம்மா அவர்கள் நீடுழி வாழ்க!
http://i65.tinypic.com/2vmzh91.jpg
இன்று இசை மேதை மதிப்பிற்குரிய பாலமுரளி கிருஷ்ணா காலமானார்.
மக்கள் திலகம் நடித்த நவரத்தினம் என்ற படத்தில் குருவிக்கார மச்சானே என்ற ஒரு பாடல் மட்டுமே மக்கள் திலகத்திற்காக அவர் பாடியுள்ளார்.
அன்னாரின் ஆன்மா சாந்தி அடைய வேண்டிக்கொள்கிறேன்.
அருமை நண்பர் திரு. சுந்தர பாண்டியன் அவர்களே, தஞ்சை, அரவக்குறிச்சி ,
திருப்பரங்குன்றம் தேர்தலில் அ.தி.மு.க அமோக . வெற்றி பற்றிய தங்களின்
கருத்துக்கள் /விமர்சனங்கள் மேலானவை.பாராட்டுக்கள்.
இனிய நண்பர் திரு. ரவிச்சந்திரன் அவர்களின் கவனத்திற்கு,
மறைந்த இசை மேதை திரு. பாலமுரளி கிருஷ்ணாவின் மறைவு திரையுலகிற்கு பேரிழப்பு. திரு. பாலமுரளிகிருஷ்ணா அவர்கள் , :நவரத்தினம் திரைப்படத்தில்
மக்கள் திலகம் எம்.ஜி.ஆருக்காக , குருவிக்கார மச்சானே பாடலுடன்
பன்மொழி பாடலையும் பாடியுள்ளார்(நடிகை ஒய். விஜயாவுடன் )என்பது கூடுதல் தகவல்.
ஆர். லோகநாதன்.
http://i67.tinypic.com/2yy7ckl.jpg
நாளை (23/11/2016) இரவு 7 மணிக்கு மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். வழங்கும்
"நீதிக்கு தலை வணங்கு " சன் லைப் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிறது .
தற்போது சென்னை பாட்சா (மினர்வா ) அரங்கில் தினசரி 3 காட்சிகள் நடைபெற்று வருகிறது.
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்.அவர்களின் படங்கள் எவ்வளவோ இருக்கும் நிலையில் , சமீப காலமாக , சன் டி.வி. நிறுவனம் , தற்போது அரங்குகளில்
ஓடி கொண்டிருக்கும் படங்களை மட்டும் தேடி பிடித்து ஒளிபரப்ப வேண்டிய அவசியம் என்னவோ ?
உதாரணத்திற்கு கடந்த ஞாயிறு அன்று இதயக்கனி காலை 11 மணிக்கும் (அகஸ்தியாவில் திரையிடப்பட்டள்ள படம் ), உரிமைக்குரல் இரவு 7 மணிக்கும்
(ஸ்ரீநிவாஸாவில் திரையிடப்பட்டுள்ள படம் ) சன் டி.வி. ஒளிப்பரப்பியது .
நன்றி - தினமணி
http://i66.tinypic.com/20kq9tl.jpg
http://www.dinamani.com/latest-news/...5-2603131.html
3 தொகுதிகளிலும் முத்தான வெற்றியைப் பெற்றது அதிமுக!
நன்றி - தினமணி
----------------------------------------------------------------------------------------------------------------
மற்ற இரண்டு தொகுதிகளை விட எங்கள் மதுரையம்பதியின் திருப்பரங்குன்றத்தில் வாக்கு வித்தியாசம் எங்கோ இருக்கிறது. அதிமுக வேட்பாளர் அண்ணன் ஏ.கே.போஸ் பெற்ற மொத்த வாக்குகள் 1,13,032. வாக்கு வித்தியாசம் 42,000-க்கும் மேல்.
எல்லாருக்குமே ஊர்ப் பாசம் இருக்கும். மதுரைக்காரர்களுக்கு கொஞ்சம் கூடவே உண்டு. எங்கள் ஊரில் உள்ள தொகுதியில் அதிமுக அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது எனக்கு ரொம்ப சந்தோசமாகவும் பெருமையாகவும் உள்ளது. திருப்பரங்குன்றம் தொகுதி வாக்காளப் பெருமக்களுக்கு மகிழ்ச்சியில் உருண்டு புரண்டு நன்றி தெரிவிக்கிறோம்.
என்றென்றும் புரட்சித் தலைவரின் புகழ்க்கொடி பறக்கும் கோட்டை மண் மணக்கும் எங்கள் மாமதுரை என்பது மீண்டும் நிரூபணம் ஆகி இருக்கிறது.
http://i65.tinypic.com/1zn97ut.jpg
3தொகுதி தேர்தல் பற்றிய எனது கருத்துகளுக்கு பாராட்டு தெரிவித்த திரு. எஸ்.வி.அய்யா அவர்கள், நண்பர்கள் திரு. லோகநாதன் அவர்கள், திரு.ரவிச்சந்திரன் அவர்கள் ஆகியோருக்கு நன்றி. புரட்சித் தலைவரின் பெருமையை சொல்லுவதால் என் கருத்துக்கள் நன்றாக இருக்கிறது. என் பெருமை ஒன்றும் இல்லை.
எல்லாப் புகழும் பெருமையும் வெற்றித் தெய்வம் புரட்சித் தலைவருக்கே!
http://i66.tinypic.com/14jn69k.png
நண்பர் லோகநாதன் சார் ,
ரிக்க்ஷக்காரன் படம் டிரைலர் வெளியீட்டு விழா சென்னை தேவி பாரடைஸ் அரங்கில் நடந்த அதே நேரத்தில் ரிக்க்ஷாக்காரன் படத்தை சன் லைப் தொலைக்காட்சியில் திரையிட்டார்கள். படம் வருவதற்குள் மறுபடியும் இரண்டு முறை ஒளிபரப்பினார்கள்.
இது வேண்டுமென்றே நடக்கிறதா? யதேச்சையாக நடக்கிறதா? என்று தெரியவில்லை.
எதற்கும் நல்லதையே நினைப்போம். பார்ப்போம். தொடர்ந்தால் யோசிப்போம்.
உரிமைக்குரல் படத்தின் சென்னை சீனிவாசா தியேட்டர் கொண்டாட்ட படங்கள் அருமை. உங்களின் தொடர்ந்த அயராத பணிக்கு நன்றி.
மக்கள் திலகமும் மதுரை நகரமும்
************************************************** **********
http://i67.tinypic.com/1zxo9jn.png
மதுரை மாநகரில் மக்கள் திலகத்தின் திரை உலக சாதனைகள்
1956ல் மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்களின் ''மதுரை வீரன் '' திரைப்படம் மதுரை மாநகரில் வெள்ளி விழா ஓடி மாபெரும் சரித்திர சாதனை புரிந்தது .
1958ல் மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்களின் ''நாடோடி மன்னன் '' வெற்றி விழா கண்டு மாபெரும் ஊர்வலத்துடன் பிரமாண்ட காட்சிகளை மதுரை மாநகர் கண்டது .
மதுரை மாநகரில் ......................http://i63.tinypic.com/2myt4z7.jpg
http://i63.tinypic.com/2rmoxhe.jpg
1965ல் மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்களின் ''எங்க வீட்டு பிள்ளை '' - வெள்ளிவிழா
1969ல் மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்களின் ' ''அடிமைப்பெண் '' வெள்ளிவிழா
1970ல் மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்களின் ''' மாட்டுக்கார வேலன் '' வெள்ளிவிழா
1973ல் மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்களின் ' ''உலகம் சுற்றும் வாலிபன் '' 200 நாட்கள்
1974ல் மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்களின் ' ''உரிமைக்குரல் '' 200 நாட்கள்
1978ல் மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்களின் கடைசி திரைப்படம் ''மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன் ''.
மக்கள் திலகத்தின் அரசியல் -மதுரை
*******************************************
1957
1962
1967
1971
1977
1980
1984
தமிழகத்தில் நடைபெற்ற 7 பொது தேர்தல்களில் [ பாராளுமன்றம் மற்றும் சட்ட சபை ] மக்கள் திலகம் அவர்கள் தான் சேர்ந்திருந்த திமுகவிற்கும் 1957-1971 ] பிறகு [1973- 1984] கால கட்டங்களில் நடந்த தேர்தல் பிரச்சாரங்களில் அவருடைய பெயரும் , கட்சியின் சின்னமும் , திரைப்படங்களும் , பாடல்களும் இடம் பெற்று வரலாற்று வெற்றிகள் குவித்தது ஏராளம் .
குறிப்பாக மதுரை மாவட்டத்தில் 1962ல் தேனி சட்ட சபைக்கு நடிகர் எஸ்.எஸ்.ஆர் அவர்களை ஆதரித்து வெற்றி பெற செய்தார் .1967ல் மதுரை மாவட்டத்தில் திமுக பல தொகுதிகளை கைப்பற்றியது .1971ல் பெரும்பாலான தொகுதிகளை மதுரை மாவட்டம் கைப்பற்றியது .
http://i68.tinypic.com/1178r2u.png
1973ல் மதுரை மாவட்டம் -திண்டுக்கல் -நாடாளுமன்ற இடை தேர்தலில் புதியதாக உதயமான புரட்சித்தலைவரின் அதிமுக முதல் வெற்றி .வரலாற்று வெற்றி .
1977-1980-1984 மதுரை எம்ஜிஆர் கோட்டையானது என்பது சரித்திர வரலாறு .
1989 மதுரை -கிழக்கு சட்ட சபை தொகுதி ஒன்று பட்ட அதிமுகவிற்கு கிடைத்த முதல் வெற்றி .
1991-2001-2006-2011-2016 சட்ட சபை தேர்தல்களில் மதுரை மாவட்டம் என்றென்றும் எம்ஜிஆர் கோட்டை என்பதை உறுதி செய்தது .
மக்கள் திலகத்தின் பழைய திரைப்படங்கள் சுமார் 80 படங்களுக்கு மேல் மதுரை நகரம் மற்றும் அதன் சுற்றுப்புற மதுரை மாவட்டத்தில் கடந்த 1977 முதல் 2016 இன்று வரை ஓய்வில்லாமல் படங்கள் வெற்றி பவனி வருவதும் திரை உலக சாதனை .
22.11.2016
http://i63.tinypic.com/s1kz9t.jpg
இன்று ஒட்டு எண்ணப்பட்ட மதுரை - திருப்பரங்குன்றம் சட்டசபை இடைத்தேர்தலில் அதிமுக தொகுதியை தக்க வைத்து கொண்டுள்ளது .42,670 வாக்குகள் வித்தியாசத்தில்வெற்றி
இரட்டை இலை சின்னம் புரட்சித்தலைவரின் திருமுகம் மீண்டும் வெற்றி கனியை பறித்துள்ளது .
மக்கள் திலகத்தின் பெயரும் , அவருடைய புகழும் , மாநிலம் முழுவதும் 60 ஆண்டுகளாக வலம் வருவது உலக வரலாற்றில் எந்த ஒரு தலைவருக்கும் கிடைக்காத பெருமை .
மேலும் மதுரை கோட்டை - இன்றைய அரசியல் வெற்றி எம்ஜிஆர் புகழிற்கு கிடைத்த வைர கிரீடம் .
எஸ்வி அய்யா அவர்களுக்கு,
எங்கள் மண் மணக்கும் மதுரையில் புரட்சித் தலைவரின் வெற்றிகளை சாதனைகளை புள்ளி விவரத்தோடு துல்லியமாக பட்டியல் போட்ட உங்களுக்கு நன்றி. இவ்வளவையும் ஞாபகத்தில் வைத்துக் கொண்டிருப்பது ஆச்சிரியமாக இருக்கிறது. எங்கள் ஊரின் பெருமையை உலகுக்கு அறிவித்த உங்களுக்கு மிகவும் நன்றி.
அடுத்த பதிவில் மதுரையில் புரட்சித் தலைவர் அண்ணா சிலைக்கு துணிச்சலாக மாலை போட்ட சம்பவத்தையும் மதுரைக்கும் புரட்சித் தலைவருக்கும் உள்ள தொடர்புகள் நெருக்கம் வெற்றிகள் பற்றியும் தி இந்து பத்திரிகையில் வந்த கட்டுரையை பதிவிடுகிறேன். நன்றி.
http://i67.tinypic.com/2q88ze8.jpg
எம்ஜிஆர் 100 | 39 -படத்தில் மட்டுமல்ல; நிஜத்திலும் ‘ஹீரோ’!
M.G.R. அசாத்திய துணிச்சல் மிக்கவர். தவறு எங்கே நடந்தாலும் தயங்காமல் தட்டிக் கேட்பார். ஒரு காரியத்தில் இறங்க வேண்டுமென்றால் அது ஆபத்தானதாக இருந்தாலும் பொருட்படுத்த மாட்டார். அதற்கு எவ்வளவோ உதாரணங்கள்.
1977-ம் ஆண்டு சட்டப் பேர வைத் தேர்தலில் அதிமுக அமோக வெற்றி பெற்று முதல்முறையாக ஆட்சியைப் பிடித்தது. அந்தத் தேர்தலில் அருப்புக் கோட்டை தொகுதியில் போட்டியிட்டு எம்.ஜி.ஆர். வெற்றி பெற்றார். வேட்புமனு தாக்கல் செய்வதற்கு முன், மதுரை மேம்பாலம் அருகில் உள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவிக்க வந்தார். சிலையின் பீடமே 10 அடி உயரம் இருக்கும். அதற்கு மேலே சுமார் 8 அடி உயரத்தில் அண்ணா சிலை கம்பீரமாக நிற்கும்.
இப்போது இருப்பது போல சிலைக்கு மாலை அணிவிக்க படி வசதி எல்லாம் அப்போது கிடையாது. எம்.ஜி.ஆர். வரப்போகிறார் என்பதை அறிந்ததும் அந்தப் பகுதியே ஜன சமுத்திரமாக காட்சியளித்தது. மாலை அணிவிப்பதற்காக வந்த எம்.ஜி.ஆர்., காரை விட்டு இறங்கியதும் சில தொண்டர்கள் எங்கிருந்தோ மர ஏணி ஒன்றைக் கொண்டு வந்தனர்.
தொண்டர்கள் சிலர் ‘‘நீங்கள் ஏணியில் ஏறி சிரமப்பட வேண்டாம். மாலையை தொட்டுக் கொடுங்கள். நாங்கள் சிலைக்கு அணிவிக்கிறோம்’’ என்று எம்.ஜி.ஆரிடம் கூறினர்.
அதை எல்லாம் எம்.ஜி.ஆர். கவனிக் காமல், சிலையையும் ஏணியையும் ஒரு பார்வை பார்த்தார். ‘எப்படி ஏறலாம்? எப்படி மாலையை தனது அண்ணனுக்கு அணிவிக்கலாம்? ’ என்று அவரது மனம் கணக்கு போட்டது. இதெல்லாம் சில விநாடிகள்தான். உடனே, வேகமாக ஏணியில் ஏறி சிலையின் குறுகலான பீடத்துக்கு சென்று பிடிமானத்துக்காக சிலையை கைகளால் தொட்டபடி நின்று கொண்டார். கொஞ்சம் தவறினாலும் கீழே விழும் அபாயம் உண்டு. என் றாலும் துணிச்சலாக எம்.ஜி.ஆர். ஏறிவிட்டார்.
சிலைக்கு பின்னால் இருந்து ஒருவர் பெரிய மாலையை கொடுக்க அதை லாவகமாக தூக்கி அண்ணா சிலை யின் கழுத்தில் சரியாக விழும்படி எம்.ஜி.ஆர். அணிவித்தபோது, தொண் டர்களின் ஆரவாரத்தால் தென்பாண்டி மண்டலமே குலுங்கியது.
மதுரை என்றதும் சில சுவையான நினைவுகள். எம்.ஜி.ஆரின் திரைப்பட, அரசியல் வாழ்க்கையில் மதுரைக்கு தனி இடம் உண்டு. தமிழகம் முழுவ திலும் எம்.ஜி.ஆருக்கு ஆதரவு உண்டு என்றாலும் மதுரை அவரது கோட்டையைப் போல விளங்கியது.
சிறுவயதில் எம்.ஜி.ஆர். நடித்த நாடகக் கம்பெனியின் பெயர் மதுரை ஒரிஜினல் பாய்ஸ் கம்பெனி. எம்.ஜி.ஆர். கதாநாயகனாக நடித்து வெள்ளி விழா கண்ட முதல் படம் ‘மதுரை வீரன்'. படம் வெள்ளி விழா கொண்டாடியது மதுரையில்.
1958-ம் ஆண்டு ‘நாடோடி மன்னன்’ படத்தின் அசுர வெற்றிக்காக முதன் முதலில் பொதுமக்கள் முன்னிலையில் விழா நடந்த இடம் மதுரை தமுக்கம் மைதானம். இந்த விழாவில்தான் எம்.ஜி.ஆர். ஊர்வலமாக அழைத்து வரப்பட்டு 110 பவுனில் அவருக்கு தங்கவாள் வழங்கப்பட்டது.
அதிமுகவை தொடங்கிய பின் அப் போதைய திமுக ஆட்சிக்கு எதிராக பிரதமர் இந்திரா காந்தியிடம் புகார் மனு கொடுக்க மதுரைக்கு எம்.ஜி.ஆர். சென்ற ரயில், வழிநெடுக மக்களின் வரவேற்பால் 10 மணி நேரம் தாமதமாகச் சென்று பரபரப்பை ஏற்படுத்தியது.
அதிமுகவை எம்.ஜி.ஆர். தொடங்கிய 7 மாதத்தில் அவரது கட்சிக்கு முதல் வெற்றியைக் கொடுத்தது திண்டுக்கல் நாடாளுமன்றத் தொகுதி இடைத்தேர் தல். அப்போது திண்டுக்கல் தனி மாவட் டமாக பிரிக்கப்படவில்லை. மதுரை மாவட்டத்தில்தான் இருந்தது.
அதிமுக வுக்கு முதல் மேயரைக் கொடுத்தது மதுரைதான்.
1980-ம் ஆண்டு எம்.ஜி.ஆர்.ஆட்சி கலைக்கப்பட்டது. பின்னர், நடந்த தேர்தலில் எம்.ஜி.ஆர். போட்டியிட்டு வெற்றி பெற்ற தொகுதி மதுரை மேற்கு.
மீண்டும் முதல்வரான பின்னர், மதுரை யில் உலகத் தமிழ் மாநாட்டை நடத்தி னார்.
1984-ம் ஆண்டு அமெரிக்காவில் இருந்தபடியே ஆண்டிப்பட்டி தொகுதி யில் போட்டியிட்டு வென்றார். அப்போது ஆண்டிப்பட்டி மதுரை மாவட் டத்தில்தான் இருந்தது.
1986-ம் ஆண்டு ஜூலையில் மதுரையில் எம்.ஜி.ஆர். மன்ற மாநாட்டை நடத்தினார். எம்.ஜி.ஆர். நடித்த கடைசிப் படம்
‘மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்’. இப்படி மதுரையோடு எம்.ஜி.ஆருக்கு நெருக்கமான பிணைப்பு உண்டு!
ஜப்பானில் எக்ஸ்போ 70 கண்காட் சியில் ‘உலகம் சுற்றும் வாலிபன்' படத் தின் படப்பிடிப்பு நடந்தது. ‘உலகம் அழகு கலைகளின் சுரங்கம்…’ பாடலின் சில காட்சிகளை 30 ஆயிரம் பல்புகளைக் கொண்டு ஒளி வெள்ளம் பாய்ச்சப்பட்ட ஸ்விஸ் பெவிலியனில் எடுக்க எம்.ஜி.ஆர். திட்டமிட்டார்.
அந்த சமயத்தில் ஒரு காட்சிக்காக ஒளிப்பதிவாளர் அழைக்கும்வரை எம்.ஜி.ஆர், நடிகை சந்திரகலா, அசோ கன், நாகேஷ் ஆகியோர் ஒரு இடத்தில் அமர்ந்திருந்தனர். அப்போது அவர் கள் அருகில் வந்த ஜப்பானியர் ஒருவர் மது மயக்கத்தில் இருந்தார். ஆர்வத் தோடு சந்திரகலாவின் உடையை கவ னித்தார். திடீரென சில்மிஷம் செய்யும் எண்ணத்துடன் சந்திரகலாவின் உட லைத் தொட்டுவிட்டார். ஜப்பானியரின் கை சந்திரகலாவின் உடலைத் தொட்ட மறுகணம் எம்.ஜி.ஆரின் கை அவர் கன்னத்தில் விழுந்தது. ஜப்பானியரை எம்.ஜி.ஆர். பலமாக அறைந்து விட்டார். இதில் ஜப்பானியர் அணிந்திருந்த கண்ணாடி தெறித்து விழுந்தது.
நிதானத்துக்கு வந்த ஜப்பானியர், தனது தவறுக்கு வருத்தம் தெரிவிக்கும் வகையில் இரு கைகளையும் கோர்த்து இடுப்பு வரை முன்னோக்கி வளைந்து ‘‘மன்னியுங்கள்’’ என்று ஜப்பானிய மொழியில் சொல்லிவிட்டு பின்னோக்கி நகர்ந்து போய்விட்டார்.
படத்தில் மட்டுமல்ல; நிஜத்திலும் ‘ஹீரோ’ எம்.ஜி.ஆர்.!
நன்றி - தி இந்து
என் நினைவு தவறில்லை எனில்... மிகக் சரியாக 3 வருடங்கள் இருக்கும்... எந்த வித சிறப்பு நாளும் இல்லாத ஒரு மிக சாதாரண நாளில்...
மனநிலையில் சற்று குழப்பத்துடன் அமைதியாக மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் போய் அமர்ந்து இருக்க...
வயதானவர்கள்... நடக்க இயலாதவர்கள்... கர்ப்பிணி பெண்கள்... இவர்களுக்காக கோவிலுக்குள் இயக்கப்படும் பேட்டரி கார் சப்தம் கேட்டு என் அமைதி குழைந்து திரும்பி பார்த்தால்...
அய்யா. பாலமுரளி கிருஷ்ணா அவர்கள்...
தடாலடியாக எழுந்து கை கூப்பி வணக்கம் சொல்ல... காரை நிறுத்த சொல்லி என்னை அருகில் அழைத்து தன் இரு கைகளையும் என் தலைக்கு மேல் வைத்து "நல்லா இரு கண்ணா..." என்றார்...
"அய்யா... நான் பத்திரிக்கைகாரன்... நீங்க சரினு சொன்னா... நான் உங்க ரூமுக்கு..."
இல்ல... எனக்கு 8 .30க்கு ட்ரைன்... இன்னொரு தரம் பார்ப்போம்...
"இன்னொரு வாய்ப்பு...?" என நான் வாய் விட்டே தயங்கவும்...
"சன்னதி வரை நடந்து போவோம்ல... அதுவரை பேசலாமா...?"
என ஜாக்பாட் வாய்ப்பளித்தார்...
பேட்டரி காருக்கு முன்... நான் சன்னதி வாசலில்...
காரில் இருந்து அய்யா இறங்க நான் என் கை கொடுத்து உதவ... கீழே இறங்கியவுடன்... அவர் என்னை பார்த்ததும் ...
"ஓஓ... நீதானா... அதுக்குள்ளே வந்துட்டியா...?" என சொல்லி விட்டு இடுப்பில் கட்டி இருந்த அங்கவஸ்த்திரத்தை இறுக்கி கொண்டு...
" போகலாமா...? " என்பதாய் தலையாட்டி...கை அசைத்தார்... மௌனமாய்...
ஓடி வந்த அந்த ஒரு நிமிடத்திற்கும் குறைவான நேரத்தில் இசை சமுத்திரத்தை கேள்வி கேட்க நான் எப்படி தயாரானேன்...?!
"அய்யா... ஆலாபனை - சாஷ்திரிய சங்கீதம் என இருந்த உங்களை ஜனரஞ்சக பாடல் பாட வைத்தாரே... எம்.ஜி.ஆர். அய்யா... அவர் ஒரு பெரும் ஆளுமை என்பதால் ஒத்துக்கொண்ட பாடலா அது...? "
- என நொடிப்பொழுதில் நான் கேட்க...? சந்நிதானத்தின் உள்ளே நுழைய படிக்கட்டுகள் ஏற இருந்த சூழலில்...
என் கை பிடித்து... படியேற...
" தம்பி... எடுத்த எடுப்பிலேயே அழகான தொடுப்பு... ஈஸ்வரா... ! " என்றவாறு...
" அது என்ன படம்னு இப்போ சரியா ஞாபகத்துக்கு வரல... ஆனா அந்த படத்துக்கு நம்ம வயலின் குன்னக்குடி வைத்தியநாதன் தான் மியூசிக்... அவர் ரொம்பவே கேட்டுக்கிட்டதால தான் நான் ஓகே சொன்னேன்... பட் ரெகார்டிங் போனப்பறம் தான் தெரியும் அது எம்.ஜி.ஆர் சார் படம்னு... கொஞ்சம் தயக்கம் இருந்தது என்னவோ உண்மைதான்... தமிழ் சினிமாவின் ரொம்ப பெரிய ஜாம்பவான் பட் அவரோட ஜானர் வேற ... நம்மள வச்சு என நானும் யோஜனையோட தான் போய் உக்காந்தேன்... எம்.ஜி.ஆர் சார் ஒரு 15 நிமிஷம் லேட்டா தான் வந்தாரு... அவர் வரவும் நான் எழுந்து வணக்கம் சொல்ல... அவர் வந்து என் கைய புடிச்சு உக்கார வச்சு... சூடா பால் கொண்டுவர சொன்னார்... குடிச்சேன்...
போகலாமா...? - னார் கொஞ்சம் யோஜனையோட போனேன்... ரெகார்டிங்க்ல அவரும் வந்தார் நான் பாடுவேன்... ஊடால ஊடால அவர் பேசுவதாக போனது அந்த ரெகார்டிங்... எல்லாம் முடிவானது...எனக்கும் ரொம்பவே சந்தோசம்... நல்ல ஒரு மியூசிக் பத்தின பாட்டு... தமிழ்ல இந்த மாதிரி பாட்டு தமிழ் மியூசிக் பத்தி விளக்கமா சொல்ற பாட்டு அன்னைய தேதில இல்லாததால நான் ரொம்பவே சந்தோசமா சொல்லீட்டு கிளம்ப போக...
எம்.ஜி.ஆர் சார் என் கைய புடிச்சு... " ஒரு வேண்டுகோள்... இந்த படத்தோட நாயகன் பலதரப்பட்ட ஆட்களை சந்திப்பதாக போறது கதை... அதுல ஒரு பொண்ணு நாடோடி பொண்ணு ... அவளுக்கும் எனக்கும் ஒரு டூயட் அது கொஞ்சம் லோக்கலா இருக்கும்... வைத்தி உங்க வாய்ஸ் நல்லா இருக்கும்னு சொல்லுறாரு ஆனா உங்ககிட்டே கேக்க கொஞ்சம் கூசுறாரு... அதான் நானே..." - என இழுத்தார்...
அவர் நினச்சு இருந்தா எல்லாத்தையும் மியூசிக் டைரக்டர் மேல பாரத்த போட்டுட்டு ஷிவ ஷிவ னு உக்காந்துஇருக்கலாம் ஆனா அவர் அப்படி செய்யல... அவருக்காக இவர் தூது வரணும்னு அவசியமும் இல்ல...
அவர் அப்ரோச் பண்ணுனது எனக்கு புடிச்சுடுச்சு நான் ஓகே சொல்லீட்டு ஒரு 10 நாள் கழிச்சு பாடுனதுதான் அந்த குருவிகார பாட்டு..." என அதிரடி மழையாய் பொழிந்தார்...
http://i67.tinypic.com/2keic4.jpg
‘‘இன்னொரு விஷயமும் இதுல இருக்கு சாமி தரிசனம் பண்ணீட்டு பேசலாமா ? - னார்... அய்யா. டாக்டர். பாலமுரளி கிருஷ்ணா அவர்கள்...
நான் சாமி தரிசனம் கூட சரியாக செய்யாமல்...
"என்னவாக இருக்கும்...?" என காத்திருந்தது போல... நீங்களும்...கொஞ்சம்...
--------மக்கள் திலகத்தின் மாணவன் மயில்ராஜ் முகநூல் பக்கம்
நண்பர் திரு. வினோத் அவர்கள் பதிவிட்ட , மதுரை மாநகரில், மக்கள் திலகத்தின்
சினிமா மற்றும் சாதனை செய்திகள் அபாரம் .
நண்பர் திரு. சுந்தரபாண்டியன் பதிவு செய்த , மதுரை மண்ணுக்கும் , மக்கள் திலகம் மற்றும் மக்கள் தலைவருக்கும் உள்ள இணைப்பு, பிணைப்பு ஆகியன குறித்த
விளக்க செய்திகள் அசத்தல் .
ஆர்.லோகநாதன்.
குமுதம் லைப் வார இதழ் -30/11/2016
http://i64.tinypic.com/n2y44o.jpg
http://i63.tinypic.com/726is7.jpg
http://i65.tinypic.com/2yuyotc.jpg
Makkalthilagam, Evergreen Collection Emperor's "Adimaipenn" Digitally Remastered Format ready to Rerelese soon... Informations received...
இன்று முதல்
கோவை
டிலைட் திரையரங்கில்
பறக்கும் பாவை
மக்கள் திலகத்தின் ''பறக்கும் பாவை '' பொன்விழா ஆண்டு நிறைவுபெற்ற இந்த மாதத்தில் கோவை நகரில் திரைக்கு வந்திருப்பது மிகவும் மகிழ்ச்சி .தகவலுக்கு நன்றி திரு ரவிச்சந்திரன் சார் .
மகாதேவி பரிசு வேட்டைக்காரன் ஆகிய மூன்று படங்களில் தலைவரோடு ஜோடியாக நடித்தவர் சாவித்திரி!
முதல் இர்ண்டு படங்களில் காதல் காட்சிகளில் சற்று இடைவெளி விட்டு அதாவது பட்டும்படாமலும் நடித்த தலைவர் வேட்டைக்காரனில் வழக்கம்போல் சற்று நெருக்கமாக நடித்தாராம்?
அவரது நண்பர் அவரிடம் இந்த வித்தியாசம் குறித்து வினவியபோது தலைவர் அளித்த விளக்கம்?
முதல் இரண்டு படங்களில் நடிக்கும்போது அந்தம்மா ஜெமினி கணேசனைக் காதலித்து திருமணம் செய்யுக்கூடிய நிலையில் இருந்தார்கள், அந்த சமயத்தில் நான் நெருக்கமாக நடித்திருந்தால் அந்தப் பெண்ணுக்கு கெட்ட பெயர் ஏற்பட வாய்ப்பும் திருமணம் தள்ளிப்போகும் நிலையும் வந்திருக்கும், ஆனால் வேட்டைக்காரன் படத்தின்போது அதற்கு திருமணம் ஆகி தன் கணவரின் அனுமதியோடு நடிக்க வந்திருக்கு
இப்போது தொழில் ரீதியில் இப்படி நடித்தால் அந்தப் பெண்ணுக்கு யாதொரு பாதிப்பும் இல்லையே?
தலைவரின் இந்த கண்ணியம் கலந்த விளக்கம் கேட்டு அனைவரும் அயர்ந்து போனார்களாம்!
ஏன் நாமும்தானே??
courtesy - fb
எம்.ஜி.ஆரின் நடிப்பு, அலட்டிக்கொள்ளாத வகையைச் சேர்ந்தது. அவருடைய ரசிகர்களுக்கு அதுதான் பிடிக்கும். கவர்ந்திழுக்கும் புன்னகை, நெருக்கமான காதல் காட்சிகள், அசத்தும் சண்டைக்காட்சிகள், நெஞ்சில் மையம் கொள்ளும் பாடல்கள், சமுதாயத்திற்கானக் கருத்துகளைக் கொண்ட வசனங்கள் இவற்றின் அடிப்படையிலானதுதான் அவரது படம். இந்த ரெடிமேட் ஃபார்முலாவுக்குள் உடன்பட முடியாத புகழ்பெற்ற இயக்குநர்களும் தயாரிப்பாளர்களும் ஒருநேரத்தில் எம்.ஜி.ஆர் பக்கம் கவனத்தைத் திருப்பவில்லை என்றாலும் பிறகு அவர்களும் அவரை வைத்து படம் இயக்கினார்கள்.
ஏ.வி.எம் நிறுவனத்தின் முதல் வண்ணப்படமான ‘அன்பே வா’ (இயக்கம்-ஏ.சி.திருலோகச்சந்தர்), ஜெமினி நிறுவனத்தின் முதல் வண்ணப்படமான ‘ஒளிவிளக்கு’ ஆகியவை எம்.ஜி.ஆர் நடித்தவையாகும். (ஒளிவிளக்கு, எம்.ஜி.ஆரின் 100வது படம்). பத்மினி பிக்சர்ஸ் அதிபர் பி.ஆர்.பந்தலு தயாரித்து இயக்கிய ‘ஆயிரத்தில் ஒருவன்’ தமிழ்த் திரையின் முக்கியமான படங்களில் ஒன்று. நீண்டகாலம் எம்.ஜி.ஆர் பக்கம் திரும்பாமல் இருந்த இயக்குநர் ஸ்ரீதர் பின்னர் ‘உரிமைக்குரல்’, ‘மீனவநண்பன்’ ஆகிய படங்களை எம்.ஜி.ஆரை வைத்து இயக்கினார். (அண்ணா நீ என் தெய்வம் என்ற படத்தையும் அவர் இயக்கினார். எம்.ஜி.ஆர் முதல்வரானதால் படம் பாதியில் நின்றுபோய், பின்னர் எம்.ஜி.ஆரின் மறைவுக்குப்பிறகு பாக்யராஜ் இயக்கத்தில் ‘அவசர போலீஸ் 100’ என்ற தலைப்பில் எம்.ஜி.ஆர் நடித்த காட்சிகளுடன் வெளியானது). புராணப்படங்களை வெற்றிகரமாகத் தந்த இயக்குநர் ஏ.பி.நாகராஜன் எம்.ஜி.ஆரை வைத்து ’நவரத்தினம்’ என்ற படத்தை இயக்கினார். இவர்களும் எம்.ஜி.ஆர் ஃபார்முலாவுக்குட்பட்டே இப்படங்களை இயக்கினர்.
துப்பாக்கியால் சுடப்பட்டு உயிர் மீண்ட எம்.ஜி.ஆரின் குரல் பாதிக்கப்பட்டபோதும், படங்களில் அவரே சொந்தக் குரலில் பேசினார். அவரது ரசிகர்கள் அதனை ஏற்றுக்கொண்டனர். அதுபோல சண்டைக் காட்சிகளில் வாள் சுழற்றுதல், சிலம்பம், மான்கொம்பு, சுருள்கத்தி சுழற்றுதல், பூட்டுப்போட்டு தாக்குதல் எனப் பலவகைகளைக் கையாண்டு ரசிகர்களைக் கவர்ந்தார். ரிக்*ஷாக்காரன் படத்திற்காக அவருக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருது(பாரத்) கிடைத்தது. தமிழ் நடிகர்களில் முதலில் தேசிய விருது வாங்கியவர் எம்.ஜி.ஆரே. அவர் நடித்த மொத்த படங்கள் 136. கடைசியாக வெளியான படம் எம்.ஜி.ஆரின் இயக்கத்தில் உருவான ‘மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்’(1978). படவேலைகள் நிறைவடைந்து எம்.ஜி.ஆர் முதல்வரானபிறகு வெளியானது. அவரது மறைவுக்குப்பிறகு வெளியான ‘அவசர போலீஸ் 100‘, ‘நல்லதை நாடு கேட்கும்’ ஆகியவற்றில் அவர் நடித்து வெளிவராத படங்களின் காட்சிகள் இடம்பெற்றன.
தனது படங்கள் மூலம் தன்னுடைய திரையுலக-அரசியல் செல்வாக்கை நிலைநிறுத்துவதில் எம்.ஜி.ஆர் தீவிரமாகவும் திட்டமிட்டும் கவனம் செலுத்தினார். அன்று தென்னிந்திய (தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம்) நடிகர்களிலேயே அதிக சம்பளம் பெற்றவர் எம்.ஜி.ஆர்தான் (6 முதல் 8 லட்ச ரூபாய் வரை). மதுரை வீரனில் தொடங்கி நாடோடி மன்னன் வழியாகப் பல படங்களிலும் ஏழைகளுக்காகவும் ஒடுக்கப்பட்ட சமுதாயத்தினருக்காகவும் அவர் பேசிய வசனங்களும், வாயசைத்த பாடல்களும் அவருடைய அரசியல் செல்வாக்கிற்கு அடிப்படையாக அமைந்தன.
‘படகோட்டி’ படம் மூலம் மீனவ சமுதாயத்திடம் அவர் ஏற்படுத்திய தாக்கம் இன்றுவரை அவருடைய கட்சிக்கான வாக்கு வங்கியாக நிலைபெற்றிருக்கிறது. தொழிலாளி, விவசாயி, எங்க வீட்டுப் பிள்ளை உள்ளிட்ட பல படங்களும் அவருடைய அரசியல் செல்வாக்கிற்குத் துணை நின்றன. தி.மு.கவிலிருந்து அவர் நீக்கப்பட்டு, தனிக்கட்சியான அ.தி.மு.கவைத் தொடங்கிய சூழ்நிலையில் வெளியான ‘ரிக்*ஷாக்காரன்’ படத்திற்கு நெருக்கடி வந்தபோது, பல ஊர்களிலும் ரிக்*ஷா தொழிலாளர்கள் அந்தப் படத்திற்கு பாதுகாப்பாக இருந்து, திரையிடச் செய்தனர். எம்.ஜி.ஆரின் தயாரிப்பு- இயக்கத்தில் அன்றைய சூழலில் பெரும்பொருட்செலவில் வெளிநாடுகளில் உருவாக்கப்பட்ட ‘உலகம் சுற்றும் வாலிபன்’ படத்தின் வெளியீட்டின்போது, தி.மு.க ஆட்சி கொடுத்த நெருக்கடியால் சென்னையில் சுவரொட்டி ஒட்டமுடியாத நிலை ஏற்பட்டது. அதற்குப் பதிலாக ஸ்டிக்கர்கள் மூலம் விளம்பரம் செய்யப்பட்டது. அதனை வாகனங்களிலும் கடைகளிலும் ஒட்டும் பணியில் அவருடைய ரசிகர் மன்றத்தினர் முழுமையாக ஈடுபட்டனர்.
தனது ரசிகர்களை மன்றங்கள் என்ற அமைப்பின் கீழ் ஒன்றிணைத்து அதனை அரசியல் தளத்திற்கு நகர்த்தி வெற்றி கண்டவர் எம்.ஜி.ஆர். 1972ல் அ.தி.மு.க என்ற தனிக்கட்சியைத் தொடங்கியபிறகு, திரைப்படத்தின் சில காட்சிகளையும், பாடல்களையும் நேரடி அரசியல் பிரச்சாரமாக்கி, 5ஆண்டுகளில் ஆட்சியையும் பிடித்தவர் அவர். முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகு, திரைப்படங்களில் நடிப்பதை நிறுத்திக்கொண்டார். மும்முறை தொடர்ச்சியாக அவரது கட்சி தேர்தலில் வென்றது. 11ஆண்டுகாலம்(1977ஜூன்-1987டிசம்பர்) தமிழகத்தின் முதலமைச்சராக செயல்பட்டார்.
திரைப்படங்களை தன்னுடைய பிரச்சார ஊடகமாக, அரசியல் ஆயுதமாகப் பயன்படுத்தி வெற்றி கண்டவர் எம்.ஜி.ஆர். அவரது இந்த அணுகுமுறையைக் கடுமையாக விமர்சிப்பவர்களும் உண்டு. எனினும், திரைப்படங்களை நுட்பமாகப் பயன்படுத்தி அவர் வெற்றி பெற்றார் என்பது மறுக்கமுடியாதது. எம்.ஜி.ஆருடைய படங்கள் சில, வெளியான காலத்தில் வணிகரீதியில் தோல்வியடைந்துள்ளன. ஆனால், பின்னர் அவை திரும்பத் திரும்ப வெளியிடப்பட்டு வசூலைக் குவித்தன. அவரது படப்பாடல்கள்தான் இன்றளவும் மக்களிடம் செல்வாக்கு பெற்றிருப்பதுடன் கட்சிக்கு வாக்கு சேகரிக்கும் பிரச்சாரப் பாடல்களாகவும் நிலைத்திருக்கின்றன. தொலைக்காட்சி, இணையதளம் என நவீனத் தொழில்நுட்பங்கள் வளர்ந்த நிலையிலும் எம்.ஜி.ஆரின் புகழ் ஒளிவீசுகிறது.
எம்…ஜி….ஆர்… என்ற ஆங்கில எழுத்துகள், இங்கே தமிழுக்குரிய எழுத்துகளைப்போல ஆகிவிட்டன...
-கோவி.லெனின்.
நீ தொட்டால் எங்கும் பொன்னாகுமே......
எம்ஜிஆர் மீது மயக்கம் கொண்ட கோடிக்கணக்கான ரசிகர்களில் நானும் ஒருவன். அவர் போடும் டைட்டான சட்டையை இன்றும் விரும்பி அணிகிறேன். நேர்மை, நியாயத்திற்காக வாதாடும் குணம், ஏழைகள் மீது கருணை, முதியோர் மற்றும் உழைப்பாளிகளுடன் தோழமை, குழந்தைகள் மீதான பிரியம், அழகான பெண்களுடன் காதல் லீலைகள், தத்துவம், போன்ற எம்ஜிஆரின் முத்திரைகள் தெரிந்தோ தெரியாமலோ என்னைப் போன்ற லட்சக்கணக்கான ஆண்களின் அடையாளமாகி விட்டுள்ளது.
இறைவன் இருப்பதை நானறிவேன் என்னை அவனே தானறிவான்
இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும் இவர் போல யாரென்று ஊர் சொல்ல வேண்டும்
உன் கண்ணில் ஒருதுளி நீர்வழிந்தாலும் உலகம் அழவேண்டும்
மாபெரும் சபையில் நீ நடந்தால் உனக்கு மாலைகள் விழ வேண்டும்
கற்றவர் சபையில் உனக்காக தனி இடமும் தரவேண்டும்
என்ற வரிகள் யாவும் எனக்காக எழுதப்பட்டது போல் தோன்றுகின்றன. இருள் வந்த போது ஒளி ஒன்று உண்டு என்ற நம்பிக்கையை எம்ஜிஆரின் பாடல்கள் ஏற்படுத்துகின்றன.
கண்ணதாசன், வாலி, புலமைப்பித்தன், ஆலங்குடி சோமு, நா.காமராசன், முத்துலிங்கம், பூவை செங்குட்டவன், உள்ளிட்ட பல பாடலாசிரியர்கள் எம்ஜிஆருக்காக எழுதினாலும் அவை அத்தனையும் எம்ஜிஆரின் ஒற்றைக்குரலாகவே ரசிகர்களுக்கு ஒலித்தது.
எம்ஜிஆரை நான் ஒருமுறைதான் நேரில் பார்த்திருக்கிறேன். அப்போது எனக்கு பதின்பருவம். மக்கள் குரல் மாலை நாளிதழில் டி.ஆர்.ஆர். கட்டுரைகளை விரும்பிப் படிப்பேன். எனது அரசியல் அரிச்சுவடி அதுதான்.
அண்ணா நினைவு நாளில் அவரது நினைவிடத்திற்கு எம்ஜிஆர் மலர் வளையம் வைக்க வருகிறார் என அறிந்து காலை 6 மணிக்கே கடற்கரைக்கு போய்விட்டேன். கையில் மாலை வாங்கிய மக்கள் குரல் இருந்தது.
8 மணிக்கு செக்க செவேல் என சூரியனை விட பிரகாசமாக ஜொலித்தபடி வந்தார் எம்ஜிஆர். ஒளியே ரூபமெடுத்து நடந்துவருவது போல் இருந்த்து. வெள்ளை கரை வேட்டி சட்டையுடன் வழக்கமான தொப்பியும் கண்ணாடியும் அணிந்திருந்த எம்ஜிஆர் தொண்டர்களிடம் வணக்கம் கூறியபடியும் கைகளை உயர்த்தி ஆட்டியபடியும் சென்றுக்கொண்டிருந்தார். ஆரவாரமும் கரவொலிகளும் அடங்கவே இல்லை.இத்தனை ஆர்ப்பாட்டத்திலும் என்கையில் இருந்த மக்கள் குரலை பார்த்துவிட்டார் எம்ஜிஆர். நான் அதனை கையில் பிடித்து அவரை நோக்கி அசைத்துக் கொண்டிருந்தேன். என் அருகில் வந்த அவர் என் கன்னத்தைத் தொட்டு தடவி சிரித்தபடி சென்றுவிட்டார். எனக்கு சொர்க்கத்தில் மிதக்கிற நினைப்பு
எங்கவீட்டுப் பிள்ளையில் நான் ஆணையிட்டால் பாடல் எனக்கு மிகவும் பிடித்த பாடல்களில் ஒன்றுதான். எம்ஜிஆரின் சுறுசுறுப்பும் நடன அசைவுகளும் டிஎம்எஸ் சின் கம்பீரமான குரலும் வாலியின் வைர வரிகளும் கொண்ட பாடல் அது. இந்தப் பாட்டு எனக்கு மட்டுமின்றி என்னை விட 40 வயது குறைந்த விக்கிக்கும் பிடித்த பாட்டாக இருப்பதுதான் ஆச்சரியமளிக்கிறது.
எம்ஜிஆரின் புகழ் தலைமுறைகளைக் கடந்து தொடர்வதற்கான சாட்சி எனக்கு என் வீட்டிலேயே இருக்கிறது.
நாங்க புதுசா கட்டிக்கிட்ட ஜோடி.தானுங்க.....
தமிழ்த்திரையுலகம் கண்ட ஜோடிப் பொருத்தங்களில் முதன்மையானது எம்ஜிஆர் ஜெயலலிதா ஜோடிதான். எம்.ஜிஆரும் ஜெயல லிதாவும் சேர்ந்து நடித்த படங்களின் பட்டியல் நீளமானது. இதில் முக்கியமாக ஆயிரத்தில் ஒருவன், அடிமைப்பெண், குடியிருந்த கோவில், ராமன் தேடிய சீதை, அன்னமிட்டகை, ஒருதாய் மக்கள், , ரகசிய போலீஸ்115, காவல்காரன், மாட்டுக்கார வேலன்,தேடி வந்த மாப்பிள்ளை, முகராசி, புதிய பூமி. ஆகிய படங்கள் உடனடியாக நினைவுக்கு வருகின்றன.
குமரிக்கோட்டம் படத்தில் ஜெயலலிதாவை எம்ஜிஆர் ஆணவக்காரியாக சித்தரித்து பாடுவார் என்பதால் அப்படமும் பாடலும் கலைஞர் டிவியில் அடிக்கடி இடம் பெறுவதுண்டு.
அரசியலை விட சினிமாவில்தான் ஜெயலலிதா மனம் கவர்கிறார். அதுவும் எம்ஜிஆர் படங்களில் அவரது திறமை மிக அற்புதமாக வெளிப்படுகிறது.
ரகசிய போலீஸ் 115ல் கணவன்-மனைவியாக எம்ஜிஆர்-ஜெயல லிதா சண்டை போடும் காட்சியும் குடியிருந்த கோவிலில் நீயேதான் என் மணவாட்டி என ஊஞ்சலில் ஆடிப்பாடுவதும் எனக்கு மிகவும் பிடித்த திரைக்காட்சிகள்.
அதெல்லாம் விடுங்கள் .ஆறுகுணங்கள் கொண்டவளாம் ஒரு பாவை என்று ராமன் தேடிய சீதையில் எம்ஜிஆரும் எனது மடியில் வா ராமா என எம்ஜி ராமச்சந்திரனை ஜெயலலிதா அழைப்பதும் பரவசமான காதல் காட்சிகளில் ஒன்று
திரைவாழ்வைப் போல எம்ஜிஆரும் ஜெயலலிதாவும் நிஜவாழ்விலும் ஜோடி சேர வேண்டும் என விரும்பிய ரசிகர்களில் நானும் ஒருவன்தான்.
நாங்க புதுசா கட்டிக்கிட்ட ஜோடிதானுங்க என்று ஒளிவிளக்கில் அவர்கள் ஆடிப்பாடினார்கள். ராமன் தேடிய சீதையில்தான் எம்ஜிஆரும் ஜெயல லிதாவும் மணக்கோலத்தில் வரும் காட்சி வரும். அது வரலாற்றால் பதிவு செய்யப்பட்ட அற்புதக் காட்சியாகும்.
----------------------------------------------------------------------------------------------------
courtesy - net
எம்.ஜி.ஆர். அவர்களின் சினிமா மார்க்கெட்டை உயர்த்திய மர்மயோகி
– பெரு துளசி பழனிவேல்
Vetrithirumagan MGR
புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். நடித்து ஜூபிடர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்த படம் மர்மயோகி(1951). நூறு நாட்களை கடந்து ஓடி வசூலையும் அள்ளித்தந்து அவருக்கு நல்ல பேரையும், புகழையும் பெற்றுத்தந்த படமான மர்மயோகியில் எம்.ஜி.ஆர். கரிகாலன் என்ற கதாபாத்திரத்தை ஏற்று சிறப்பாக நடித்தார். மக்கள் தலைவன் மக்களுக்காக போராடுகிறவன். நீதி நியாயத்தை நிலைநாட்ட விரும்புகிறவன். இந்த கதாபாத்திரம் பிடித்திருந்ததால் எம்.ஜி.ஆர். படு உற்சாகத்தோடு அக்கறையோடும் நடித்தார்.
வில்லி இளையராணி (அஞ்சலிதேவி)யின் முன்னிலையில் நடக்கும் வீர தீர சாகசப்போட்டிகள் நடைபெறும் காட்சியில் குதிரை மீதேறி ஓடுவது ஈட்டி, வாளுடன் பாய்வது, நாட்டின் தளபதியாக இருக்கும் அரச குமாரனை (எஸ்.வி.சகஸ்ரநாமம்) எதிர்த்து போராடுவது போன்ற காட்சி முழுவதும் கவசமும், முகமூடியும் அணிந்திருந்தாலும் டூப் போட வேண்டாம் என எம்.ஜி.ஆரே பயிற்சி எடுத்துக் கொண்டு ஈடுபாட்டோடு மூன்று நான்கு நாட்கள் அந்தச் சண்டைக்காட்சியில் நடித்தார்.
இந்தச் சண்டைக்காட்சியை வெளிப்புறக் காட்சியாக அற்புதமாக படமாக்கினார்கள். படத்தில் எம்.ஜி.ஆரின் தோற்றம் மிக அழகாக இருந்ததால் அவர் ஏற்றுக் கொண்ட வீரம், தீரம் நிறைந்த கரிகாலன் கதாபாத்திரம் மக்களை மிகவும் கவர்ந்தது.
mgr-in-marma-yogi-the-mysterious-mystic-1951-movie
இந்தப் படத்தில் எம்.ஜி.ஆரின் நடை, உடை, பாவனை, வசனம் பேசும் அழகு, இரண்டு கைகளிலும் வாள் கொண்டு சுழற்றும் முறை எல்லாமே படம் பார்த்தவர்களை கவர்ந்து விட்டதால் படமும் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. அதனால் இந்தப் படத்தை இந்தியிலும் ‘ஏக்தராஜா’ என்ற பெயரில் வெளியிட்டார்கள்.
இந்தப் படத்திற்காக எம்.ஜி.ஆர். பேசிய வசனங்கள் மிகவும் பரபரப்பாக பேசப்பட்டன. ‘கரிகாலன் குறி வைத்தால் தவறமாட்டான். தவறுமேயானால் குறி வைக்கமாட்டான்’. மற்றொரு காட்சியில் நாற்காலியை, காலால் எட்டி உதைத்து மறுபடியும் அதை தன்னிடமே வரும்படி செய்து அதில் அமர்ந்து இளையராணியை பார்த்து அழகாக வசனம் பேசும் காட்சியை பார்த்து ரசிகர்கள் கைதட்டி மகிழ்ந்தனர்.
குதிரை மீதேறி ஈட்டி, வாளை ஏந்திக்கொண்டு போரிடும் காட்சியில் படம் பார்த்த அனைவரையும் வியக்க வைத்தார். மொத்தத்தில் எம்ஜிஆர் அவர்களுக்கு சினிமா மார்க்கெட்டை உயர்த்தி விட்ட படம் ‘மர்மயோகி’.
அரசர் வயதானவர் (செருகளத்தூர்சாமா) என்பதால் அவரை மயக்கி அரசைக் கைப்பற்ற முயற்சிக்கிறார் சூழ்ச்சிக்காரி இளையராணி (அஞ்சலிதேவி). இதை தடுக்க வாரீசான அரசகுமாரன் ஒருவன் முயற்சிக்கிறான் (எஸ்.வி.சகஸ்ரநாமம்). மற்றொரு அரசகுமாரன் (எம்.ஜி.ஆர்.) அவருக்கு ஒரு பெண்ணோடு (மாதுரிதேவி) காதல் ஏற்படுகிறது. அது தொடர்ந்து கொண்டருக்கிறது. மக்களோடு மக்களாக இருந்து அவர்களை ஒன்று திரட்டி நாட்டின் இளையராணியை எதிர்த்துப் போராடி அரசரையும், அரசையும் மீட்டெடுக்க முயற்சி செய்கிறான். அரசர் மர்மமான முறையில் கொல்லப்படுகிறார். அரசர் இறந்து விட்டார் என்று இளையராணி கருதினாள்.
அவரோ அரூபமான உருவில் வந்து தன்னைக் கொலை செய்ய முயற்சித்தவர்களை மிரட்டுகிறார் பயமுறுத்துகிறார். மற்றொரு அரசகுமாரனும் மக்கள் தலைவனுமாகிய கரிகாலன் இளையராணியை அவளது அரச சபையிலேயே நேருக்கு நேராக சந்தித்து மோதுகிறான். மக்களை ஒன்று திரட்டி புரட்சியும் செய்கிறான். இறுதியில் அரசர் இறக்கவில்லை மர்மயோகி என்ற பெயரில் அரூபமான தோற்றத்தில் வந்து தன்னை மிரட்டிக் கொண்டிருப்பவர்தான் என்பதை அறிகிறாள். மக்களும் கொந்தளிக்கிறார்கள். அவளும் அதிர்ச்சியில் இறந்து போய்விடுகிறாள். மறுபடியும் அரசர் கையில் ஆட்சி வருகிறது. அரச குமாரர்களின் உதவியுடன் நல்லாட்சி நடைபெறுகிறது.
இதில் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். கரிகாலன் வேடத்தில் நடித்தார். வில்லி இளையராணியாக அஞ்சலிதேவி நடித்தார். எம்.ஜி.ஆருக்கு ஜோடியாக மாதுரிதேவி நடித்தார். மர்மயோகியாக செருகளத்தூர்சாமா நடித்தார். மற்றும் எம்என் நம்பியார், எஸ்.ஏ.நடராஜன், ‘ஜாவர்’ சீதாராமன், எம்.ஜி.ஆரின் சகோதரனாக எஸ்.வி.சகஸ்ரநாமம் நடித்தார். பாடல்கள் உடுமலை நாராயண கவி, கே.டி.சந்தானம். திரைக்கதை, வசனம், ஏ.எஸ்.ஏ.சாமி. தயாரிப்பு ஜூபிடர் பிக்சர்ஸ் எம்.சோமசுந்தரம், எஸ்.கே.மொய்தீன். டைரக்*ஷன் கே.ராம்நாத்.
மக்கள் விரும்பிய மந்திரி குமாரி
– பெரு துளசி பழனிவேல்
manthirikumari Vetrithirumagan mgr
புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். நடிகராக தனது கலைப்பயணத்தை தொடங்கிய முதல் படம் ‘சதிலீலாவதி’ (1936). தொடர்ந்து இரு சகோதரர்கள் (1936), தட்சயக்ஞம் (1938), வீரஜெகதீஷ் (1938), மாயமச்சீந்திரா (1938), பிரகலாதா (1939), சீதா ஜனனம் (1941), அசோக்குமார் (1941), தமிழ் அறியும் பெருமாள் (1942) தாசிப்பெண் (1943), ஹரிச்சந்திரா (1944), சாலிவாஹனன் (1945), மீரா (1945), ஸ்ரீமுருகன் (1946), சுலேக்சனா (1946), பைத்தியக்காரன் (1947), அபிமன்யூ (1948), ராஜமுக்தி (1948), ரத்னகுமார் (1949), போன்ற படங்களில் சிறிய வேடங்களில் நடித்தார் எம்.ஜி.ஆர்.
அதன்பிறகு ஜூபிடர் பிலிம்ஸ் தயாரித்த ராஜகுமாரி (1947) படத்தில் கதாநாயகனாக நடித்தார். தொடர்ந்து மோகினி (1948), மருதநாட்டு இளவரசி (1950), போன்ற படங்களில் கதாநாயகனாக நடித்தார். மாடர்ன் தியேட்டர்ஸ் டி.ஆர்.சுந்தரம் தி.மு.க தலைவர்களில் ஒருவரான மு.கருணாநிதியை அழைத்து, ஐம்பெருங்காப்பியங்களில் ஒன்றான குண்டலக்கேசியில் வரும் ஒரு சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு மந்திரிகுமாரி என்ற நாடகத்தை எழுதி வைத்திருந்தார். ஏற்கனவே மேடையில் வெற்றிப்பெற்ற அந்த நாடகத்தை திரைப்படமாக தயாரிக்க டி.ஆர்.சுந்தரம் தீர்மானித்தார். திரைக்கதையை அமைத்து, வசனத்தை எழுதி தரும்படி மு.கருணாநிதியிடம் டி.ஆர்.சுந்தரம் கேட்டுக்கொண்டார். அதை மகிழ்ச்சியுடன் ஏற்று வசனத்தை எழுதினார் மு.கருணாநிதி.
manthirikumari
மந்திரிகுமாரி படத்தின் கதாநாயகனாக யாரைப்போடுவது என்று டி.ஆர்.சுந்தரம் யோசித்துக் கொண்டிருந்த போது, தான் வசனம் எழுதிய ராஜகுமாரி, மருதநாட்டு இளவரசி போன்ற படங்களில் ஏற்கனவே கதாநாயகனாக நடித்திருந்த எம்.ஜி.ஆரை கதாநாயகனாக நடிக்க வைக்க சிபாரிசு செய்தார் மு.கருணாநிதி. நன்றாக நடிப்பார். ஒர்ஜினலாக முறையாக கத்தி சண்டை போடக்கூடியவர் எம்.ஜி.ஆர். என்று எடுத்துச் சொன்னார். மந்திரி குமாரி படத்தின் கதாநாயகனாக எம்.ஜி.ஆரை நடிக்க வைத்தார் மாடர்ன் தியேட்டர்ஸ் அதிபர் டி.ஆர்.சுந்தரம்.
மந்திரி குமாரி படத்தில் அனைவரும் பாராட்டக்கூடிய ஒரு வில்லன் வேடம் இருந்தது. அந்த வேடத்திற்கு நாடக நடிகர், எஸ்.ஏ.நடராஜன் தேர்ந்தெடுக்கப்பட்டார். மற்றும் ராஜகுமாரி வேடத்திற்கு ஜி.சகுந்தலா, மந்திரி குமாரி வேடத்திற்கு மாதுரி தேவி. ராஜகுரு வேடத்திற்கு எம்.என்.நம்பியார் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டு நடித்தார்கள்.
1950 ஆம் ஆண்டு வெளிவந்து 151 நாட்கள் ஓடி வசூலை அள்ளிக்கொடுத்த மந்திரி குமாரி படத்தில் எம்.ஜி.ஆர். வீர மோகன் என்ற தளபதி வேடத்தில் நடித்தார். ராஜகுருவாக நடித்திருக்கும் எம்.என்.நம்பியாரிடமும், வில்லன் நடித்திருக்கும் எஸ்.ஏ.நடராஜனிடமும் மோதும் காட்சிகள் தியேட்டரில் கைத்தட்டல்களை எம்.ஜி.ஆருக்கு பெற்றுத்தந்தது.
manthirikumari
இந்தப் படத்தில் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரின் கத்திச்சண்டை ரசிகர்களால் பெரிதும் பாராட்டப்பட்டது. படத்தின் இறுதிக் காட்சியில் எம்.ஜி.ஆர். வில்லன் அடியாட்களுடன் மோதும் காட்சி ரசிகர்களால் மட்டுமல்லாமல் திரைப்பட துறையினராலேயே அன்று பெரிதும் பாராட்டி பேசப்பட்டது. கத்திச்சண்டையில் இவருக்கு நிகராக ஸ்டைலாக சண்டையிடும் நடிகர் இன்று வரையிலும் இல்லை என்று பேசப்பட்டுக் கொண்டிருக்கிறார்.
தோளில் மயங்கிக் கிடக்கும். ஜி. சகுந்தலாவை சுமந்துக் கொண்டே வில்லன் அடியாட்களுடன் எம்.ஜி.ஆர். கத்திச் சண்டையிடும் காட்சியை அற்புதமாக படமாக்கியிருந்தார்கள். இந்தச் சண்டைக்காட்சியை நிஜ சண்டைக் காட்சியைப் போலவே டைரக்டர் கட் சொல்லாமல் படமாக்கியிருந்தார். அதனால்தான் இன்று வரையிலும் அந்தச் சண்டைக்காட்சிக்காக எம்.ஜி.ஆர். அனைவராலும் பாராட்டப்பட்டுக் கொண்டிருக்கிறார்.
எம்.ஜி.ஆர். கதாநாயகனாக நடித்த நான்காவது படமான மந்திரிகுமாரி அவரது கலையுலக வாழ்க்கையில் எதிர்கால உயர்வையும், ரசிகர் கூட்டத்தையும் பெற்றுத் தந்தது.
இதில் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். எம்.என்.நம்பியா, மாதுரி தேவி, எஸ்.ஏ.நடராஜன், ஜி.சகுந்தலா, ஏ.கருணாநிதி, டி.பி.முத்துலட்சுமி, அங்கமுத்து மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். கதை, வசனம் மு.கருணாநிதி, பாடல்கள் மருதகாசி, கவிகாமு ஷெரீப், இசை ஜி.ராமநாதன், டைரக்*ஷன் டி.ஆர்.சுந்தரம் எல்லீஸ் ஆர்.டங்கன்.
manthirikumari
முல்லை நாட்டில் கொலை, கொள்ளை செய்து, நாட்டு மக்களை அச்சுறுத்தி சீரழித்துக் கொண்டிருக்கிறான் ஒரு கொடியவன் (எஸ்.ஏ.நடராஜன்). அவனுக்கு அந்த நாட்டின் ராஜகுரு (எம்.என்.நம்பியார்). கொடியவனின் தந்தையாக இருப்பதால் அவனுடைய பாவ செயல்களுக்கெல்லாம் துணையாக நிற்கிறான். அதனால், அவர்களை எதிர்த்து போரிடவோ, தடுத்து நிறுத்தவோ யாருக்கும் துணிச்சல் இல்லை. அதனால், அனைவரும் அந்த நாட்டு அரசரிடம் முறையிடுகிறார்கள். அரசரும் அதிர்ச்சி அடைகிறார். உடனடியாக தனது தளபதி வீரமோகனை (எம்.ஜி.ஆர்) வரவழைத்து, தமது நாட்டு மக்களை ஏழை எளியவர்களை அந்த கொடியவர்களிடம் இருந்து காப்பாற்ற வேண்டும். அதன் மூலம் எனது அரசையும் காப்பாற்ற வேண்டும் என்று வேண்டுகோள் வைக்கிறார். வீர மோகனும் மக்களிடம் இருந்து கொள்ளை அடிப்பது கொலை செய்வது யார் என்பதை கண்டுபிடிக்க முயற்சி செய்கிறார். இறுதியில் பிடிபடுகிறார்கள். பிடிபட்டவர்கள் ராஜகுருவும், அவரது மகன் கொடியவன் பார்த்திபனும்தான். இவர்களை அரசபையின் முன் கொண்டு வந்து நிறுத்துகிறான் வீரமோகன்.
ராஜகுருவின் சூழ்ச்சியால் பார்த்திபன் தவறாக பிடிக்கப்பட்டுவிட்டான் என்று தீர்ப்பு வழங்கிய அரசர், வீரமோகனை நாடு கடத்துகிறார்.
இதற்கிடையில் ஏற்கனவே ராஜகுமாரி (ஜி.சகுந்தலா) தளபதி வீரமோகனும் (எம்.ஜி.ஆர்) காதலித்துக் கொண்டிருக்கிறார்கள். மந்திரியின் மகள் அமுதவள்ளி (மாதுரி தேவி) கொடியவன் பார்த்திபனை நல்லவன் என்று நம்பி காதலித்து ஏமாறுகிறார். ராஜகுரு அரசனை கொன்று தான் அரசனாக முயற்சிக்கிறான். அதற்கு கொடியவன் பார்த்திபன் உதவுகிறான். பார்த்திபன்தான் கொலை கொள்ளைக்கு காரணமானவன் என்பதை அறிந்துக் கொண்ட மந்திரி குமாரி அமுதவள்ளி அவனை மலை உச்சிக்கு அழைத்துச் சென்று தள்ளி சாகடிக்கிறாள். நாடு கடத்தப்பட்ட வீரமோகன் தவற்றவன் என்பதை அறிந்து அரசர் தண்டனையை நீக்கி நாட்டுக்குள் வரவழைக்கிறார். வீரமோகனும், ராஜகுமாரியும் கணவன் மனைவியாக ஒன்று சேருகிறார்கள்.
மாபெரும் வெற்றிப் படம் குலேபகாவலி
– பெருதுளசி பழனிவேல்
mgr-special
எம்.ஜி.ஆரை கதாநாயகனாக நடிக்க வைத்து ‘குலேபகாவலி’ என்ற படத்தை இயக்கினார். இந்தப் படத்தை ஆர்.ஆர்.பிக்சர்ஸ் சார்பில் டி.ஆர்.ராமண்ணாவே தயாரித்தார்.
இந்திய நாடோடி, கர்ணபரம்பரைக் கதைகள் போல இஸ்லாமியப் பின்புலத்தில் அமைக்கப்பட்ட புகழ் பெற்ற கதை. இது தெருக்கூத்து, நாடக மேடைகளிலே பிரபலமான கதை. இந்தக்கதை ஏற்கனவே ஒருமுறை வி.ஏ.செல்லப்பா, டி.பி.ராஜலட்சுமி போன்ற பழம் பெரும் கலைஞர்கள் நடித்து தயாரிக்கப்பட்டது. இப்பொழுது சில மாற்றங்களுடன் மீண்டும் ‘குலேபகாவலி’ என்ற பெயரிலேயே உருவாக்கப்பட்டது.
இதில் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். ஆடல் பாடல், வாள் சண்டை, புலியுடன் கட்டிப்பிரண்டு சண்டை, வசீகர காதல் காட்சி என்று அனைத்திலும் புகுந்து விளையாடினார். வீரம் நிறைந்த புத்திசாலித்தனமான கதாநாயகனாக எம்.ஜி.ஆர். நடித்து அனைத்து தரப்பு ரசிகர்களிடமிருந்து கைதட்டல்களையும், பாராட்டுகளையும் பெற்றார். இந்தப் படத்தில் எம்.ஜி.ஆருக்கு ஜோடியாக ஜி.வரலட்சுமி, டி.ஆர்.ராஜகுமாரி, ராஜசுலோச்சனா, ஈ.வி.ஆர்.சரோஜா ஆகியோர் நடித்திருந்தார்கள்.
ஒரு கதாநாயகனுக்கு நான்கு கதாநாயகிகள் ஜோடியாக நடித்தது இந்தப்படத்தின் சிறப்பம்சமாகும். இவர்களுடன் தங்கவேலு, சந்திரபாபு ஆகியோர் நடித்திருந்தனர். இந்தப்படத்தின் வெற்றிக்கு உதவுகின்ற வகையில் எம்.ஜி.ஆர். போடும் வாள் சண்டைக் காட்சி, கதாநாயகிகளுடன் ஆடிப்பாடிய காதல், பாடல் காட்சி, பந்தய மைதானத்தில் எம்.ஜி.ஆர். டூப் இல்லாமல் புலியுடன் கட்டிப்பிடித்து போட்ட மயிர்க்கூச்செரியும் சண்டைக் காட்சியும், பிரம்மாண்டமான அரங்குகளும் இடம் பெற்றிருந்தன.
MGR
இந்தப்படத்தில் இடம் பெற்ற அத்தனை சூப்பர் ஹிட் பாடல்களான ‘பாராண்ட மன்னரெல்லாம்’, ‘பளப்பள பட்டுகளா’, ‘வில்லேந்தும் வீரரெல்லாம்’ (இந்தப் பாடலில் பல மொழிகள் கையாளப்பட்டன) ‘கையைத் தொட்டதும்’, ‘சொக்கா போட்ட நவாபு செல்லாது உன் ஜவாபு’, ‘அநியாயம் இந்த ஆட்சியிலே – அநியாயம்’, ‘கண்ணாலே பேசும் பெண்ணாலே ஆண்கள் தன்னாலே மயங்கும் காலமே’, ‘மயக்கும் மாலைப் பொழுதே நீ போ போ’ போன்ற பாடல்களை தஞ்சை ராமையா தாஸ் எழுதியிருந்தார். படம் பார்த்த அனைவரையும் கவருகின்ற வகையில் வசனங்களையும் எளிமையாக எழுதியிருந்தார் தஞ்சை ராமையாதாஸ்.
பாதுஷா தனது மகனை நேரில் பார்த்தால் தன் கண் பார்வையே இழந்துவிடுவார் என்று ஜோதிடர் ஒருவர் கூறுகிறார். இதனால் பாதுஷாவின் முதல் மனைவியையும், அவள் குழந்தையையும் நாட்டுக்கு அப்பாற்பட்டு அழைத்துச் சென்று மறைந்து வாழ சொல்கின்றனர். அக்குழந்தை வளர்ந்து பெரியவனாகிறான். இளைய மனைவியின் மகன்களுடன் வேட்டையாடச் சென்ற பாதுஷா, தெரியாமல் மூத்த மனைவியின் மகனை நேரில் பார்த்து விடுகிறார். அதனால் அவரது கண் பார்வை பறி போகிறது. குலேபகாவலி நாட்டிற்கு சென்று பகாவலி என்னும் மலரைக் கொண்டு வந்தால்தான் இழந்த பார்வை பெற முடியும் என்னும் நிலை ஏற்படுகிறது. பாதுஷாவின் நான்கு மகன்களும் மலரைக் கொண்டு வரச் செல்கிறார்கள். மூத்த மகன் தாசனும் (எம்.ஜி.ஆர்) இதையறிந்து புறப்படுகிறான்.
மலர் வெகு தூரத்தில் உள்ளது. அதை எடுத்து வரப் பல தடைகளைக் கடக்க வேண்டும். ஒரு மயக்குக்காரியைச் சூதாட்டத்தில் வெல்ல வேண்டும். ஒரு சூழ்ச்சிக் காரியை மணக்க வேண்டும். பிறகு ஆண்களை அடிமையாக ஆட்டிப்படைக்கும் ஆணவக்காரி ஒருத்தியை சந்தித்து போட்டிகளில் வென்று மலரை அடையவேண்டும்.
சூதாட்டத்தில் அடிமையாக்கப்பட்ட சகோதரர்களை விடுவித்து முன் கூறிய சோதனைகளைக் கடந்து, மலரைப் பெறுகிறான் தாசன். அவனை மோசம் செய்கின்றனர் சகோதரர்கள். பிறகு தந்தைக்கு உண்மைத் தெரிய வருகிறது.
இந்தப்படம் 1955ஆம் ஆண்டு வெளிவந்தது. 166 நாள் ஓடி வெற்றி விழா கொண்டாடியது. எம்.ஜி.ஆர். அவர்களுக்கு ரசிகர் பட்டாளம் உயர்ந்தது. சினிமா மார்க்கெட்டை மேலும் உயர்த்து வதற்கும், அதிகமாக சம்பளம் பெறுவதற்கும் ‘குலேபகாவலி’ படம் பெரிதும் உதவியது.
எம்.ஜி.ஆர். நடிக்கின்ற படங்களின் கதை, காட்சியமைப்பு, சண்டைக்காட்சி, காதல் காட்சி, உடையலங்காரம் அனைத்துமே எம்.ஜி.ஆர். என்ற இமேஜ் நடிகருக்கு உட்பட்டு அது படத்தின் கதாநாயகனாக வெளிப்படும். அதனால்தான் அது எப்படிப்பட்ட படமாக இருந்தாலும் அது எம்.ஜி.ஆர் படமாகவே அனைவராலும் போற்றப்பட்டது. அப்படித்தான் ‘குலேபகாவலி’ படத்தின் வெற்றியும் அமைந்தது.
மாபெரும் வெற்றிப்படம் – மதுரைவீரன்
– பெருதுளசி பழனிவேல்
Vetrithirumagan MGR
புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் நடித்தப்படங்களில் அவருக்கு வசூல் சக்கரவர்த்தி என்ற பட்டத்தை பெற்றுக்கொடுத்தப்படம் மதுரைவீரன். 13.4.1956 ஆம் ஆண்டு தமிழ்ப்புத்தாண்டன்று வெளிவந்து 180 நாட்கள் வெற்றிகரமாக ஓடி வசூலை வாரிக் குவித்தப்படம்
மதுரைவீரன் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து எம்.ஜி.ஆருக்கு ஒவ்வொரு ஊரிலும் ரசிகர் மன்றங்களை உருவாக்கித் தந்த படம்.
எம்.ஜி.ஆரை வைத்துப் படங்களை உருவாக்க தயாரிப்பாளர்களும், இயக்குனர்களும் போட்டிப்போட்டுக் கொண்டு எம்.ஜி.ஆரின் வீட்டிற்கு படையெடுப்பதற்கு காரணமாக இருந்த படம் மதுரைவீரன். தாழ்த்தப்பட்டவர்கள் காலம் காலமாக மதுரை வீரனை தெய்வமாக வழிபட்டு வருகிறார்கள். அத்தெய்வத்தின் வேடத்தையே எம்.ஜி.ஆர் ஏற்று நடித்ததால் தாழ்த்தப்பட்ட மக்கள் இன்றுவரை எம்.ஜி.ஆரை தெய்வமாகத்தான் பூஜித்துவருகிறார்கள்.
கிருஷ்ணாபிக்சர்ஸ் லேனா செட்டியார் மதுரைவீரன் படத்தை பிரம்மாண்டமாக தயாரித்தார். அதற்கான லாபத்தை அதிகமாக பெற்றார்.
இதில் எம்.ஜி.ஆர் மதுரைவீரனாக நடித்தார். பி.பானுமதி பொம்மியாகவும், பத்மினி வெள்ளையம்மாளாகவும், டி.எஸ். பாலையா, ஒ.ஏ.கே.தேவர், கலைவாணர் – என்.எஸ்.கிருஷ்ணன், டி.ஏ.மதுரம், ஈ.வி.சரோஜா, ஆர்.பாலசுப்ரமணியம், சந்தானலட்சுமி, டி.கே.ராமசந்திரன், ”மாடி”லட்சுமி, மற்றும் பலர் நடித்திருந்தனர்.
கர்ண பரம்பரைக் கதையான மதுரைவீரனுக்கு திரைக்கதை, வசனத்தை கவியரசர் கண்ணதாசன் எழுதியிருந்தார். இசையை ஜி.ராமனாதன் அமைத்தார். பாடல்களை, உடுமலைநாராயண கவி, தஞ்சைராமையதாஸ், மற்றும் கவியரசர் கண்ணதாசன் எழுதியிருந்தனர். டைரக்*ஷன் – யோகானந்த்.
அரசருக்கு பிறந்த குழந்தை கழுத்தில் மாலையுடன் பிறந்துவிட்டதால் அது நாட்டுக்கு ஆகாது என்கிறார் ஜோசியர். அதைக்கேட்டதும் அரசர் அதிர்ந்து போய் குழந்தையை உடனடியாக காட்டில் கொண்டுபோய் விட்டுவிடச் சொல்கிறார். காட்டில் விடப்பட்ட குழந்தையை செருப்புத்தைக்கும் தொழிலாளியும் (என்.எஸ்.கிருஷ்ணன்) அவரது மனைவியும் (டி.ஏ.மதுரம்) பார்த்து விடுகிறார்கள். அந்தக் குழந்தை அழகும், அறிவும், வீரமும் நிறைந்த இளைஞனாக (எம்.ஜி.ஆர்) வளர்கிறார். ஒரு சமயம் அரசகுமாரி பொம்மியை (பி.பானுமதி) எதிரிகளிடமிருந்து வீரன் காப்பாற்றுகிறான். அதனால் வீரனின் திறமையிலும், அழகிலும் மயங்கி அரசகுமாரி பொம்மி காதலிக்கத் தொடங்குகிறாள். பொம்மியின் முறைமாமன் நரசப்பன் பொம்மியை காவலில் கட்டிவைத்து கட்டாய திருமணத்திற்கு ஏற்பாடு செய்கிறான். ஆனால் வீரன் தக்க தருணத்தில் பாய்ந்து வந்து பொம்மியை காப்பாற்றி சிறையெடுத்துச் செல்கிறான். அவனுடைய வீரத்தை மெச்சிய விஜயரங்கசொக்கன் பொம்மி வீரனுக்கே உரியவள் என்று தீர்ப்பு கூறுகிறான். அதனால் வீரன் பொம்மியை மணந்துக் கொள்கிறான்.
திருமலைநாயக்கனுக்கு தளபதியாக நியமிக்கப்படுகிறான். அரசவை நர்த்தகி வெள்ளையம்மாள் (பத்மினி) வீரனை காதலிக்கிறாள். இதையரிந்த பொம்மி தன் கணவனை மறந்துவிடுமாறு அவளிடம் கெஞ்சி கேட்கிறாள். வெள்ளையம்மாளும் பொம்மியின் வேண்டுகோளை ஏற்கிறாள். பக்கத்து ஊர் கள்ளர்களை பிடித்து வர தமது தளபதி வீரனுக்கு ஆணையிடுகிறார். திரிமலைமன்னன் வீரன் உற்சாகத்துடன் இறங்கி கள்ளர்களை பிடித்து வந்து அரசபைமுன் நிறுத்துகிறான். இதனால் தளபதி வீரனுக்கு நாட்டில் நல்ல பெயர் உண்டாகிறது. அவனது வீரம் நாட்டு மக்களால் போற்றப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த நரசப்பனும், குடிலனும் திருமலைமன்னரிடம் தவறான செய்திகளை கூறுகிறனர். வீரன் மீது பல பழிகளைப் போட்டு மன்னனிடம் தெரிவித்தார்கள், இதை உண்மையென்று நம்பிய மன்னன் வீரனின் மாறுகால், மாறுகை வாங்க அரசானைபிறப்பிக்கிறான். கொலைக்களத்துக்கு வீரன் இழுத்துச்செல்லப் படுகிறான். இந்த செய்தியைக் அறிந்த பொம்மியும், வெள்ளையம்மாளும் கொலைக்களத்திற்க்கு வேதனையோடு ஓடி வருகிறார்கள். மக்கள் கூட்டமும் நிரம்பி வழிகிறது. தண்டனை நிறைவேற்றப்படுகிறது. வீரனின் மாறுகால், மாறுகை வாங்கப்படுகிறது. கதறுகிறார்கள் பொம்மியும், வெள்ளையம்மாளும், மக்களும் இறந்து போன வீரனுக்காக மார்தட்டி அழுகிறார்கள். வானத்திலிருந்து மலர்மழை வீரனின் உடம்பிலும், பொம்மி, வெள்ளையம்மாள் உடம்பிலும் விழுகிறது. இப்பொழுது வீரன் மதுரைவீரன் தெய்வமாகவும், பொம்மி, வெள்ளையம்மாள் மற்றொரு பெண்தெய்வங்களாகவும் வானுலகம் சொல்கிறார்கள். மக்களால் இன்றுவரை அவர்கள் தெய்வங்களாக வணங்கப்பட்டு கொண்டிருக்கிறார்கள்.
ட்சிராஜா ஸ்டூடியோ அதிகப்படங்களை தயாரிப்பதில்லை ஆனால் அவர்கள் எடுத்தப்படங்கள்அத்தனையும் சூப்பர் ஹிட்டாகியிருக்கிறது. இதன் அதிபர் ஸ்ரீராமுலு நாயுடு நாமக்கல் கவிஞர் வெ.ராமலிங்கம் பிள்ளை எழுதிய ‘மலைக்கள்ளன்’ நாவலைப் படித்தார்.அந்தநாவலைபடமாக்க விரும்பினார்.இக்கதையைபடமாக்குவதாக இருந்தால் அன்று ‘பராசக்தி’ படம் மூலம் பிரபலமாக இருந்த மு.கருணாநிதியை படத்திற்கு வசனமெழுத வைக்க வேண்டும் என்றுதீர்மானித்தார்.
இந்தச் சூழ்நிலையில் எம்.ஜி.ஆர்.ஸ்ரீராமுலு நாயுடுவை வந்து சந்திக்க ‘நீங்கள் தான் இந்தப்படத்திற்கு ஹீரோ, ஆனால் மு.கருணாநிதியை வசனமெழுத வைக்க வேண்டும்’ என்றார். எம்.ஜி.ஆரும் மு.கருணாநிதியை சந்தித்து வேண்டுகோள்வைத்தார்.அவரும் ஏற்றுக்கொண்டார்.எம்.ஜி.ஆர் கதாநாயகனாகநடிக்க, மு.கருணாநிதி வசனமெழுதபட்சிராஜா ஸ்டூடியோ ஸ்ரீராமுலு நாயுடு ‘மலைக்கள்ளன்’ படத்தை இயக்கித் தயாரித்தார்.1954ஆம் ஆண்டு வெளிவந்த ‘மலைக்கள்ளன்’ பெரும்வெற்றிப் பெற்று எம்.ஜி.ஆருக்கு சூப்பர் ஸ்டார் அந்தஸ்தை பெற்றுத்தந்தது.
படத்தைதயாரித்தவர்களுக்கு சிறந்தமாநிலப்படமாக தேசிய விருதைப்பெற்றுத் தந்தது. தேசிய விருதுப் பெற்ற முதல் தமிழ் படம் ‘மலைக்கள்ளன்’ தான். எம்.ஜி.ஆருக்கு ஜோடியாகபி.பானுமதி நடித்தார்.எம்.ஜி.ஆர் பலமாறுபட்ட வேடங்களில் வந்து அனைவரையும் கவர்ந்தார்.இந்தப்படத்தில் எம்.ஜி.ஆரின் முழுத்திறமையும் வெளிப்பட்டது.
எம்.ஜி.ஆரின் படங்களில் நாட்டு மக்களுக்கு நல்ல கருத்துக்களைச் சொல்லும் பாடல்கள்எப்போதும் இடம் பெற்றிருக்கும்.அதைத் துவக்கி வைத்தப்படம் ‘மலைக்கள்ளன்’ தான்.எம்.ஜி.ஆர் பானுமதியை குதிரையில் அமரவைத்து அழைத்துச் செல்லும் காட்சியில் ‘எத்தனைகாலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே சொந்த நாட்டிலே’ என்று பாடிக் கொண்டே செல்லுவார்.இந்தப்பாடலைகணீர் குரலில் டி.எம்.சௌந்தரராஜன் பாடியிருந்தார்.எம்.ஜி.ஆருக்காக டி.எம். சௌந்தரராஜன் பின்னணி பாடிய முதல் படம் ‘மலைக்கள்ளன்’ தான்.
இப்படம் தமிழில் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி, சிங்களம் ஆகிய 6 மொழிகளிலும் தயாரித்து வெளியிடப்பட்டது.
இந்தியில் எம்.ஜி.ஆர்.நடித்த வேடத்தில் திலீப்குமார் நடித்தார். எல்லாமொழிகதாநாயகர்களும் எம்.ஜி.ஆரைபின்பற்றியே நடித்தனர். ‘மலைக்கள்ளன்’ 6 மொழிகளிலும் பெரும் வெற்றிப் பெற்றது.
இருப்பவர்களிடமிருந்துது கொள்ளையடித்து இல்லாதவர்களுக்கு தருகின்ற ராபின்ஹூட் கேரக்டர் அமைந்தபடங்களுக்கு முன்னோடி மலைக்கள்ளன்’ தான்.ஏழைஎளியவர்களுக்கு உதவுகின்ற கதாபாத்திரத்தை ஏற்றுதான் எம்.ஜி.ஆர்.எல்லா படங்களிலும் நடித்திருப்பார். இல்லாதவர்களின் துயரங்களை பிரச்சனைகளை போக்குபவராகஎம்.ஜி.ஆர்.என்றென்றும் இருப்பார் என்ற நம்பிக்கையைமக்கள்மனதில் முதன்முதலில் விதைத்தப்படம் ‘மலைக்கள்ளன்’ தான்.
இந்தப்படத்திலிருந்து தான் எம்.ஜி.ஆர்.ஏழைப்பங்களனாக, தொழிலாளிகளின் தோழனாக, அநீதியைஎதிர்ப்பவராக, தர்மத்தை காப்பவராக, பின்னாளில் பலபடங்களில் இப்படிப்பட்டகதாபாத்திரங்களை ஏற்று நடித்து பேரும்புகழையும் பெறுவதற்கு காரணமாகஅமைந்தபடம் ‘மலைக்கள்ளன்’ தான்.
இந்தப்படத்தில் எம்.ஜி.ஆர், பி.பானுமதி எம்.ஜி.சக்கரபாணி (எம்.ஜி.ஆரின் தமையனார்), டி.எஸ்.துரைராஜ், சந்தியா (ஜெயலலிதாவின் தாயார்), பி.எஸ்.ஞானம், டி.பாலசுப்ரமணியம், ஈ.ஆர்.சகாதேவன், சாந்தா, பாலசரஸ்வதிமற்றும் பலர் நடித்திருந்தனர்.கதை&நாமக்கல் கவிஞர் வெ.ராமலிங்கம்பிள்ளை, வசனம் & மு.கருணாநிதி, இசை& எஸ்.எம்.சுப்பையா நாயுடு, பாடல்கள்&நாமக்கல் கவிஞர் வெ.ராமலிங்கம் பிள்ளை, டி.பாலசுப்ரமணியம், தஞ்சை ராமையாதாஸ், மக்களன்பன், தயாரிப்பு & டைரக்ஷன் & எஸ்.எம்.ஸ்ரீராமுலு நாயுடு.
விஜயபுரி மிராசுதார் சொக்கேசமுதலியார் (டி.பாலசுப்ரமணியன்) இவரது ஒரேமகள்பூங்கோதை (பானுமதி) இவளுக்கு முறைமாமன் வீரராஜன் ஒரு வில்லன் மனப்பபோக்கு கொண்டவன்.இவனுக்கு துணையாக இருப்பவன் கொள்ளை காத்தவராயன் (ஈ.ஆர்.சகாதேவன்) அடியாட்களை வைத்து ஆட்டிபடைக்கிறவன் குட்டிபுட்டி ஜமீந்தார். பெயருருக்கேற்றாற்போல் குட்டிபுட்டிகளுடன் தான் இருப்பான்.
பூங்கோதையைஇக்கூட்டம் கடத்திவிடுகிறது. ‘மலைக்கள்ளன்’ காப்பாற்றிமரியாதையுடன் திருப்பி அனுப்புகிறான்.முயற்சி தோல்வியடைந்ததால் சொக்கேசரைகடத்தி, பூங்கோதையைமடக்கிதன் வீட்டில் வைத்து அவர்களை சித்திரவதைகளை செய்கிறான் வில்லன்.
அந்தவில்லன் கும்பலிடமிருந்து அவர்களை காப்பாற்றுகிறான் ‘மலைக்கள்ளன்’ மலையிலே வாழ்ந்து வந்தான் மக்களுக்கு பொது நலத்தொண்டு புரிந்தான்.இதனால் அவன் குடும்பம் பாதிக்கப்படுகிறது.பச்சோந்திகளுக்கு பாடம் புகட்டினான். வஞ்சகத்தை வீழ்த்தினான். வெற்றிக்கண்டான் தனது கொள்கையிலே மட்டுமல்லாமல் காதலிலும் வெற்றிக் கண்டான்.ஏழைகளின் தோழனானான்.ஏய்ப்பவர்களுக்கு கள்ளனானான்.காதலிக்கு கணவனாகஆனான்.
எம்.ஜி.ஆர்
இந்த மூன்றெழுத்து மந்திரத்தை உச்சரித்து வாழ்க்கையில் உயர்ந்தவர்களை பட்டியலிட்டால் எண்ணிக்கையிலடங்காமல் நீண்டுக் கொண்டே போகும்.
சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரின் இதயங்களிலும் அன்பென்ற ஆணிகள் அடிக்கப்பட்டு அழகாக மாட்டப்பட்டிருக்கும் உயிரோவியம் எம்.ஜி.ஆர்.
ஒரு நடிகரால் மக்களை கவரவும் முடியும், நாடாளவும் முடியும் என்பதை நாட்டு மக்களுக்கு நிரூபித்து காட்டியவர் எம்.ஜி.ஆர்.
சினிமாவில் நடிக்க வந்த நடிகர்களில் சினிமாவை சரியாக பயன்படுத்தி தன்னை உலகளவில் உயர்த்தி கொண்டவர் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்.மட்டும்தான்.
தனக்கு கிடைத்த படவாய்ப்புகளில் ஏற்று நடித்த கதாபாத்திரங்களில் கவனம் செலுத்தினார். ஏழை எளியோரின் தோழனாக மாற்றிக் கொண்டார். அநியாயத்தை எதிர்த்துப் போராடுபவராக உருவாக்கிக் கொண்டார். பெண் குலத்தை பாதுகாப்பவராக அடையாளம் காட்டிக் கொண்டார். இல்லாதவர்களுக்கு கொடுத்து உதவ வேண்டும் என்ற உணர்வை அனைவருக்குள்ளும் வரவழைப்பதற்காக மனித நேயமிக்க கதாபாத்திரங்களில் நடித்தார். வறுமையை ஒழிப்பவராக, குழந்தைகளை நேசிப்பவராக, மாமனிதராக ஒவ்வொரு படங்களிலும் தன்னை உயர்த்திக் கொண்டார்.
26
தான் நடிக்கும் படங்களில் இடம் பெறும் வசனம், பாடல்களை கூட படம் பார்ப்பவர்களுக்கு நம்பிக்கையூட்டும் வகையில் தான் அமைக்க வேண்டும் என்று வலியுறுத்துவார். இப்படிப்பட்ட கதாபாத்திரங்களில் நடித்த எம்.ஜி.ஆரின் மீது படம் பார்த்துவிட்டு வந்தமக்கள் முழுவதுமாக நம்பிக்கையை வைத்தார்கள்.தனது துன்பங்களை தீர்க்கவந்த தேவது£தனாக பார்த்தார்கள். தொடரும் தங்களது பிரச்சனைகளை தீர்க்க வந்த தீர்க்கதரிசியாக பார்த்தார்கள். ஏன் தங்களது கவலைகளை, தலை எழுத்தை மாற்றவந்த கடவுளாகவும் எம்.ஜி.ஆரை நினைத்தார்கள். அதனால்தான் சினிமாவில் நடிக்க வந்தவரை தமிழகத்தின் முதல்வராகவும் உயர்த்தி வைத்து மக்கள் பார்த்து மகிழ்ந்தார்கள்.
10
எம்.ஜி.ஆர். அவர்களுக்கும் மரணம் வரும் என்பதை தமிழகத்திலிருக்கும் பல குக்கிராமங்கள் ஏற்றுக் கொள்ள மறுத்தது. அதனால்தான் எம்.ஜி.ஆர். இறந்து விட்டார் என்று ஊருக்குள் போய் சொன்னர்வர்களை கூட அடித்து வெளியே துரத்தியிருக்கிறார்கள். இப்படி கற்பனைக்கு அப்பாற்பட்ட சர்வ சக்தி படைத்த மனிதராக எம்.ஜி.ஆரை உயர்த்தி வைத்து மக்கள் கொண்டாடிக் கொணடிருக்கிறார்கள்.
11
எம்.ஜி.ஆர். அவர்களுக்கு இந்த இமாலய வெற்றியை, இறவாப்புகழை இவருக்கு வழங்கியது.
சென்னை ராஜா அண்ணாமலை மன்றத்தில், நாளை (26/11/2016) மாலை 6 மணியளவில் நடைபெற உள்ள இன்னிசை நிகழ்ச்சியில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் பாடல்கள் மட்டும் இடம் பெறும் . அதன் விளம்பர பேனர்/சுவரொட்டிகளை காண்க .
http://i65.tinypic.com/33wmerd.jpg
http://i63.tinypic.com/wlvp1d.jpg
வண்ணத்திரை வார இதழ்
நடிகர் சிவகுமார் பேட்டி .
மக்கள் திலகம் எம்.ஜி.ஆருடன் ,காவல்காரன், இதய வீணை ஆகிய இரண்டு படங்களில் நடித்துள்ளேன்.
ஏழு லட்சம் வாங்கும் மக்கள் திலகம் , ஏழாயிரம் வாங்கும் என்னை , அன்புடன்
வரவேற்று, உபசரித்து ,அருகில் அமர்ந்து அரவணைப்போடு பேசிய நாட்கள்
மறக்க முடியாதவை .
சினி சாரல் மாத இதழ் -நவம்பர் 2016
http://i67.tinypic.com/2zohtm0.jpg
http://i68.tinypic.com/20hvcyh.jpg
சினி சாரல் மாத இதழ் -நவம்பர் 2016
இயக்குனர் ப.நீலகண்டன் இயக்கிய மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்.படங்கள் பட்டியல்
1.சக்கரவர்த்தி திருமகள் -1957- இசை -ஜி.ராமநாதன்
2.திருடாதே -1961-இசை -எஸ்.எம்.சுப்பையா நாயுடு
3.நல்லவன் வாழ்வான் -1961- தயாரிப்பு / இயக்கம்.-இசை.டி.ஆர். பாப்பா
4.கொடுத்து வைத்தவள் - வசனம் /இயக்கம் -இசை.கே.வி.மகாதேவன்
5.காவல்காரன் -1967-இசை எம்.எஸ்.வி.
6.கணவன் -1968-இசை எம்.எஸ்.வி.
7.கண்ணன் என் காதலன் 1968-இசை எம்.எஸ்.வி.
8.என் அண்ணன் -1970-இசை கே.வி.மகாதேவன்
9.மாட்டுக்கார வேளாண் -1970-இசை கே.வி.மகாதேவன்
10.குமரிக்கோட்டம் -1971-இசை எம்.எஸ்.வி.
11.ஒரு தாய் மக்கள் -1971-இசை எம்.எஸ்.வி.
12.நீரும் நெருப்பும்-1971-இசை எம்.எஸ்.வி.
13.சங்கே முழங்கு -1972-இசை எம்.எஸ்.வி.
14.ராமன் தேடிய சீதை -1972-இசை எம்.எஸ்.வி.
15.நேற்று இன்று நாளை -1974-இசை எம்.எஸ்.வி.
16.நினைத்ததை முடிப்பவன் -1975-இசை எம்.எஸ்.வி.
17.நீதிக்கு தலை வணங்கு -1976-இசை எம்.எஸ்.வி.
சாதாரண நடிகையான சச்சு எங்கே? மக்கள் தலைவர் எங்கே?
சச்சுவின் பாட்டி, சச்சுவுக்கு புரட்சித் தலைவரிடம் ஹீரோயின் சான்ஸ் கேட்டதற்கு, ‘ரொம்ப சின்னப் பொண்ணா இருக்கு கொஞ்சம் போகட்டும்’ என்று மக்கள் திலகம் சொன்னதற்காக சச்சு கோபித்துக் கொண்டு போயிருக்கிறார். சச்சுவை சமாதானப்படுத்தும் வகையில் பல வருடங்கள் கழித்து அதை நினைவில் வைத்திருந்து ‘‘நான் அன்னிக்கு அப்படி சொன்னேன்னு கோபமா? கொஞ்சம் காத்திருந்து பார்க்கலாம்ல’’ என்று புரட்சித் தலைவர் கேட்கிறார்.
சச்சுவை சமாதானப்படுத்த வேண்டும் என்று அவருக்கு அவசியமே இல்லை. யாரையும் காயப்படுத்தாத பொன்மனச் செம்மல் மக்கள் திலகம். சச்சு கொஞ்ச காலம் காத்திருந்தால் நிச்சயம் அவருக்கு தனது படத்திலேயே ஹீரோயின் வேடத்தை தலைவர் கொடுத்திருப்பார். காமெடி நடிகையான பிறகு எப்படி அவரை தலைவர் தனது படத்தில் ஹீரோயினாகப் போட முடியும்? மனோரமா மக்கள் திலகத்துக்கு ஜோடியாக நடித்தால் எப்படி இருக்கும்? நாம் ரசிப்போமா?
சச்சுவை சொல்லியும் தவறில்லை. காத்திருக்கும் நிலையில் அவரது குடும்ப சூழல் இல்லை என்று அவரது பேட்டியில் இருந்து தெரிகிறது. அப்படியும், அவரை மட்டம் தட்டாமல் ‘காமெடி உனக்கு நன்றாக வருகிறது, அதுல பெரிய அளவுல வருவ’ என்று சொல்லி அப்போதும் அவரை ஊக்கப்படுத்தியிருக்கிறார் நம் மனிதநேய மாமனிதர்!
சச்சுவின் அக்கா மாடி லட்சுமியி்ன் வாழ்வும் அஸ்தமித்துப் போகாமல் வாழ்வு கொடுத்திருக்கிறார் மக்கள் தலைவர். பின்னாளில் அதே மாடி லட்சுமி தலைவரை கடுமையாக தாக்கிப் பேசியிருக்கிறார். அதைப் பற்றி எல்லாம் தலைவர் கவலைப்பட்டதே இல்லை. அவரால் உயர்ந்த பலர் பின்னர் அவரையே தாக்கியிருக்கிறார்கள்.
‘‘என்னால்தான் உனக்கு இந்த வாழ்வு வந்தது, நான் உனக்கு ஒரு காலத்தில் எவ்வளவு உதவிகள் செய்திருக்கிறேன். நன்றி மறந்துவிட்டாயே’’ என்று யாரையும் புரட்சித் தலைவர் சொல்லிக் காட்டியதே இல்லை.
அரசியல், சினிமா என்று புரட்சித் தலைவர் கால்வைத்த துறை எல்லாம் வெற்றி. ஆனாலும் அவர் ஆணவம் கொண்டது இல்லை. தூற்றியவர்களுக்கும் உதவி செய்யத் தவறியது இல்லை. இப்படியும் ஒரு மனிதர் வாழ்ந்தாரா என்று எதிர்கால உலகம் ஆச்சரியப்படும். அப்படிப்பட்ட மனிதர் குல மாணிக்கத்தின் ரசிகர்கள், தொண்டர்கள் என்பதில் நாம் கர்வம் கொள்ளலாம்.
புரட்சித் தலைவர் பற்றிய பத்திரிகை செய்திகளை தவறாமல் பதிவிடும் நண்பர் லோகநாதன் சார் அவர்களுக்கு நன்றி.