வெங்கி ராம்,
என்னை தவறாகவே புரிந்து கொண்டுள்ளீர்கள். என்னுடைய கருத்துக்கள் உங்களுக்கு ஏற்பில்லாமல் போகலாம். ஆனால் என் மனதுக்கு நேர்மையானவை."politically correct " என்று நான் நினைத்து எதையும் செய்வதில்லை. அது உண்டாக்கும் எதிர் விளைவுகளால், பிரபலமாகும் அரிப்பும் எனக்கில்லை.
நீங்கள் இளைய ராஜா திரியில் நான் கூறியவற்றை தவறாக quote செய்கிறீர்கள்.வெறும் song composition என்று பார்த்தால் விஸ்வநாதன்-ராமமூர்த்தி (இருவரும் இணைந்து மட்டுமே), ரகுமான்,இளைய ராஜா என்று வரிசை படுத்தினாலும், Re -Recording ,Back Ground music ,Harmony இவற்றில் இளைய ராஜாவை முதல்வராக சொல்லியிருந்ததை எப்படி புறக்கணிக்கிறீர்கள்?நான் படம் எடுத்தால் ,எனது தேர்வு இளைய ராஜாவே என்று சொன்னதை ,எப்படி உதாசீனம் செய்கிறீர்கள்?
என்னதான் சொன்னாலும் ,குரலில் இனிமையோ,வித்தியாச தன்மையோ இல்லாமல் இருக்கும் ஜானகி என்னை கவரவே இல்லை.இவர் வலிந்து பாடுவதில் ,ஒரு strain இருப்பது போல ,உணர்ச்சிகளில் ஒரு authenticity இருக்காது.ஆனால் ஜானகி பாடிய சிங்கார வேலனே, ஜல் ஜல் ஜல் எனும் சலங்கை ஒலி ,தூக்கம் உன் கண்களை போன்ற பாடல்கள் எனக்கு மிக பிடிக்கும்.