மனதைத் துளைக்க வந்த தென்றல் மலரைத் துளைத்திடாதா.. வாவ் நல்லா இருக்கு மதுண்ணா..இப்பதான்பாக்கறேன்.. நன்றி
Printable View
மனதைத் துளைக்க வந்த தென்றல் மலரைத் துளைத்திடாதா.. வாவ் நல்லா இருக்கு மதுண்ணா..இப்பதான்பாக்கறேன்.. நன்றி
இரண்டு பாடல்கள் கேட்கமட்டும் செய்திருக்கிறேன் பார்த்ததில்லை
1. நெஞ்சம் அலை மோதவே கண்ணும் குளமாகவே (அழுகைப் பாடல், சந்தோஷப் பாடல் என இரண்டு உண்டு)
2. நெஞ்சினிலே நிலவு முகம் நினைப்பிலும் செயலிலும் அழகு முகம் ஆசை முகம் (ரெண்டு படமும் தெரியாது)
பாடல்: நெஞ்சினிலே நினைவு முகம்
திரைப்படம்: சித்ராங்கி
பாடியவர்கள்: P சுசீலா, TMS, K ஜமுனா ராணி
திரைக்கலைஞர்கள்: AVM ராஜன், புஷ்பலதா, ஷீலா
இசை: வேதா
வருடம்: 1964
http://www.youtube.com/watch?v=TSLfwR--fLI
ஆருயிர் என்று அழைத்தவளே புது
ஆசையை நெஞ்சில் விதைத்தவளே
நான் ஓருயிர் கொண்டு தவிக்கையிலே நீ
ஓடி மறைந்ததேன் நீதியில்லை..
நெஞ்சினிலே ஓர் நினைவு முகம்..
நினைவினில் தெரிவது அழகு முகம் ஆசை முகம்
...
படம் சித்ராங்கி
குரல்கள் டி.எம்.எஸ், பி.சுசீலா, கே.ஜமுனா ராணி
இசை வேதா
வரிகள் கண்ணதாசன்
http://www.youtube.com/watch?v=TSLfwR--fLI
பாடல்: நெஞ்சம் அலை மோதுதே
திரைப்படம்: மணமாலை
பாடியவர்: P B ஸ்ரீனிவாஸ்
திரைக்கலைஞர்கள்: ஜெமினி கணேசன், சாவித்திரி
இசை: வேதா
வருடம்: 1958
திரை வடிவம் கிடைக்கவில்லை, ஒலி வடிவம் இதோ (சோகம்):
http://www.youtube.com/watch?v=ZPnDLwT9g2c
The heroine of Kalyaana Mandabbam is KR Vijaya.
அன்பான இசை ரசிகன் சார், ராகவேந்திரா சார் பாடல்களுக்கு மிக்க நன்றி .. ராஜேஷ்..தாங்க்ஸ் ஃபார் தெ இன்ஃபோ.. என் பள்ளி நாளில் வெகு சின்னப் பிள்ளையாய் இருந்த போது இந்தப் பாடல்களைக் கேட்டிருக்கிறேன்... சிலோன் ரேடியோ கொடிகட்டிப் பறந்த நேரம்..மத்யானம் நாலு - டு நாலரை - விடுமுறை நாட்களில் கண்டிப்பாய் இசைக் களஞ்சியம் என்ற நிகழ்ச்சி பல அருமையான பாடல்கள் வழங்குவார்கள் - கேட்டு விடுவேன்..4.30-5 பப்பிசைப் பாடல்களோ அல்லது பாட்டும் பதமும், இசையும் கதையும் என்ற நிகழ்ச்சியெல்லாம் வரும்.. ரொம்ப்ப அருமையாக இருக்கும்..ம்ம்
பாக்ய லஷ்மி - கல்லூரி ராணிகாள் கலாட்டா பாடல், கைராசி - காதல் எனும் ஆற்றினிலே - இங்குபதிவாகி இருக்கிறதா..
மறுபடி நன்றி..