Originally Posted by
kalaiventhan
‘பாவம்! திரு.சிவாஜி கணேசன் அவர்கள்’
தலைவருக்கு பாரத் பட்டம் குறித்து சமீபத்தில் மாற்றுத் திரியில் பதிவிடப்பட்ட கருத்தால் சர்ச்சை எழுந்து நாம் விளக்கமும் அளித்து விட்டோம். மீண்டும் தேவையில்லாமல் ‘இனி’ என்ற பத்திரிகையில் இருந்து சில பக்கங்களை பதிவிட்டுள்ளனர். அரசியல் ஆபத்தில் இருந்து காப்பாற்றிக் கொள்வதற்காக கலைஞர் கருணாநிதி பாரத் பட்டத்தை தலைவருக்கு வாங்கிக் கொடுத்ததாகவும் பின்னர், கட்சி உடைந்ததும் திரு. கருணாநிதி, தானே, அந்தப் பட்டத்தை வாங்கிக் கொடுத்ததாக கூறியதால் தலைவர் அந்தப் பட்டத்தை திருப்பி கொடுத்ததாகவும் கூறப்பட்டுள்ளது.
வாங்கிக் கொடுத்த பட்டம் என்று கூறப்பட்டதால், தலைவர் பாரத் பட்டத்தை தூக்கி எறிந்தது உண்மை. ஆனால், அந்தப் பட்டத்தை வாங்கித் தருமாறு தலைவர் யாரையும் கோரவில்லை. கருணாநிதியே கூட அப்படி கூறியதில்லை. மாற்றுத் திரியில் பதிவிட்டிருக்கும் ‘இனி’பத்திரிகையிலும் அப்படிக் கூறவில்லை. எந்தப் பதவிக்காகவும், விருதுக்காகவும் தலைவர் யாரையும் எப்போதும் கெஞ்சியவரல்ல.
ஆனால், அந்த பதிவில் இருந்து தெரிந்து கொள்ள வேண்டிய முக்கியமான விஷயம் ஒன்று உண்டு. அதை அப்படியே குறிப்பிடுகிறேன்.
‘நர்கீஸ் செத்துப் போனதால் காலியான மாநிலங்களவை உறுப்பினர் பதவியைப் பெற (ஒரு வருடத்திற்கு மட்டும்) யார் யார் தயவையோ கெஞ்சிக் கேட்கும் நிலைக்கு சிவாஜியை தள்ளியது காங்கிரஸ் அரசு.’
...என்று இருக்கிறது. இதுநாள் வரை நாம் கூட அந்த எம்.பி.பதவி ஏதோ திரு.சிவாஜிகணேசன் அவர்களின் கலைத் திறமைக்காக கொடுத்திருக்கிறார்கள் போலிருக்கிறது (அதற்கு அவர் தகுதியானவர்தான்) என்று நினைத்துக் கொண்டிருந்தோம். ஆனால், அவர் யார், யார் தயவையோ கெஞ்சிக் கேட்கும் நிலைக்கு ஆளாகி அந்த பதவியைப் பெற்றிருக்கிறார் என்பது ‘இனி’ பத்திரிகையில் வெளியான தகவல் மூலம் தெரிகிறது.
எம்.பி.பதவிக்காக யார், யார் தயவையோ கெஞ்சிக் கேட்கும் நிலை திரு.சிவாஜிகணேசன் அவர்களுக்கு வந்திருக்க வேண்டாம். பாவம். அந்தக் கலைஞனுக்கு நேர்ந்த இந்தக் கொடுமையை அம்பலப்படுத்தியதற்காக நண்பர் திரு.செந்தில்வேல் சிவராஜ் அவர்களுக்கு மிக்க நன்றி.
நமது சகோதரர்களுக்கு, இதை குறித்து வைத்துக் கொள்ளுங்கள். 1994ம் வருடம் வந்த ‘இனி’ என்ற வார இதழில் வெளியான கட்டுரையில் இருந்து, அவர்களது திரியின் 15ம் பாகம் 5வது பக்கத்தில் 43வது பதிவாக இது வந்திருக்கிறது. பின்னால், தேவைப்படும்போது உதவும்.
மீனவ நண்பன் படத்தில் தலைவர் கூறுவார்.
‘என்னை அவமானப்படுத்தறதா நினைக்கிறவங்க, தன்னைத் தானே ஏமாத்திக்கிறாங்க’
உண்மைதான் தலைவரே.
அன்புடன் :கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்