ஜி வணக்கம்
Printable View
ஜி வணக்கம்
Courtesy: Mr Aathavan Ravi Facebook
Aathavan Ravi
ஒரு கச்சேரி நிகழவிருக்கிற
சபை.
பருத்த உடலும் தடிமனான
கண்ணாடியுமாய் பார்வையாளர்
வரிசையில் ஒரு பாகவதர்.
பக்கத்தில் வந்தமரும்
போலீஸ்காரருக்கு
வணக்கம் சொல்கிறார் பவ்யமாய்.
குயில் கூவலாய் ஒரு பெண்
பாட கச்சேரி துவங்குகிறது.
அழகாய்ப் பயணப்படும் அந்தப்
பாடலின் வழியில் ஒரு வேகத் தடை.
அந்தப் பெண்
திக்குகிறாள். திணறுகிறாள்.
பாட்டறிந்த பாகவதர்
மேடையேறுகிறார்.
பாடுகிறார்.
இனிக்கப் பாடுகிறார்.
இதயங்கள் நெகிழப் பாடுகிறார்.
அப்பப்பா...!
அந்தப் பாடலென்ன?
பாவனைகளென்ன?
அசைவுகளென்ன?
அபிநயங்களென்ன?
அணிந்திருக்கும்
மூக்குக்கண்ணாடிக்குள்
அழகாய் மிளிரும்
கண்களிலே,
அனைத்தும் உணர்ந்ததன்
விளக்கமென்ன..?
பாடும் உதடுகள் மீதினிலே
புன்னகை அமர்த்தும்
பழக்கமென்ன?
தன் திறம் காட்டுதல் மட்டும்
இல்லாமல்,
உடன் கலை செய்வோரையும்
உயர்த்தும் தன்மை என்ன?
ஓங்கி உயர்த்தி
குரல் தருதல்,
உடல் நிமிர்த்தியும்,தளர்த்தியும்
அசைவுறுதல்,
தூய இசையோடு ஒன்றி விடல்,
தொடையில் அழகாய்த்
தாளமிடல்..
அனைத்திலும் தெரியும்
உண்மையென்ன..?
பாடல் தொடர்கிறது.
தொடர்ந்து நகர்கிறது.
நகர்ந்து முடிகிற நேரத்...
..முதுகில் பிடுங்கிய
மூட்டைப் பூச்சி
நினைவூட்டியது..
அமர்ந்திருப்பது
திரையரங்கமென்றும், அந்தக்
கச்சேரி 'குங்குமம்' படக்
காட்சியென்றும்,
அந்தப் பாகவதர் நம் நடிகர்
திலகமென்றும்!
https://youtu.be/mS_DsFaQl28
Aathavan Ravi's photo.
Courtesy: Mr Aathavan Ravi Face Book
ஏங்க.. மதியச் சாப்பாட்டுக்கு
சாம்பார் வைக்கட்டுமா.. ரசம்
வைக்கட்டுமா?" என்று
கேட்டாள்..சரிவர சமைக்கத்
தெரியாத மனைவி.
கணவன்,அமைதியாகச் சொன்னான்.. "முதல்ல
ஏதாவது வை.சாப்பிட்டுப்
பாத்து பேரு வச்சுக்கலாம்"
என்று.
*****
சமைக்கத் தெரியாத பெண்களைக் கிண்டலடிக்கிற
விதமாய் அமைந்த அந்த
நகைச்சுவைத் துணுக்கு,
சிரிக்க வைத்தாலும், பசித்தும்
நல்ல உணவை உண்ண முடியாத அந்தக் கணவனுக்காகக் கவலைப்படவும் வைக்கிறது.
*****
பசி பொல்லாதது.
மனிதனின் வாழ்வில் எண்ணற்ற உணர்வுகள்,கடமைகள்,செயல்கள் உண்டு.
அவை அத்தனையையும் மறக்கடிக்கச் செய்து,மனிதன்
தன்னை மட்டுமே நினைக்குமாறு செய்ய வல்லது இந்தப் பசி.
*****
"பாபு" என்கிற திரைப்படம்.
"வரதப்பா..வரதப்பா"என்று
அதில் ஒரு பாடல்.
உழைத்துப் பசித்தவர்களின்
உணவு நேர சந்தோஷத்தை
இந்தப் பாடல் போல் எந்தப்
பாடலும் காட்டியதில்லை.
கலைப்பசியில் சுருண்டு கிடக்கும் நமக்கு இப்படி நடிகர் திலகம் போல் வேறு யாரும் நடிப்புச் சோறு ஊட்டியதில்லை.
*****
பசியாறியவர்களின் வயிறு குளிர்வது போல, பார்ப்பவர்களின் நெஞ்சு குளிர்கிறது.
பளிங்கு போன்ற முகம்.படிய வாரிய தலைமுடி பாதி வரை மறைத்திருக்கும் நெற்றி.அதன் கீழ் உருண்டோடும் அந்த
இரண்டே கண்களுக்குள்
இன்னும் நூறு தலைமுறைகள்
தாண்டி வருபவனையும் தன் வசம் வசம் ஈர்க்கும் சக்தி
இருக்கிறது.
பிள்ளையார் அமர்ந்த மரத்தடி,
மாடில்லாத மாட்டு வண்டி என்றிருந்த ஒரு இடம்,சாப்பாடு
கொணரும் அழகான பெண்ணொருத்தியால் களை கட்டி விடுகிறது.
"சமையல் எல்லாம் கலக்குது.
அது,சமத்துவத்தை வளர்க்குது.. சாதி சமய பேதமெல்லாம்
சோத்தைக் கண்டா பறக்குது."
-மை ஊற்றினால் எழுதும்
பேனாவினால், உண்மையை
ஊற்றி எழுதியிருக்கிறார் அமர கவி.அய்யா.வாலி.
'வீரலட்சுமி,விஜயலட்சுமி' என
வரிசைப்படுத்திப் பாடி விட்டு,
"எத்தனை லட்சுமி பாருங்கடா"
என்று நீளமாய்ப் பாடும் போது,
பெண்கள் கூட்டமொன்று வந்து
முறைக்க,"உங்களை இல்லம்மா" என்று சைகையால்
சொல்லிக் கொண்டே,பாடலுக்கு வாயசைப்பதையும்
அழகுறத் தொடரும் அய்யா
நடிகர் திலகத்தின் நடிப்பழகிற்காகவே,இந்தப்
பாடலைப் பார்க்கலாம்..
பத்தாயிரம் தடவை.
https://youtu.be/H8VkUxkMu8c
இன்று கிருஷ்ண ஜெயந்தி. அனைவருக்கும் அந்த வெண்ணெய்த் திருடனின் பிறந்த நாளை முன்னிட்டு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். அந்த மாயக்கண்ணன் பிறந்த நாளில் அவனின் லீலைகளை மனதில் கொண்டே என்ன பாடல் இன்று இடலாம் என்று மண்டையைக் காய்ச்சியதில் திடீரென்று ஒரு பாடல் கிடைத்தது.
பொதுவாகவே கிருஷ்ணன், கண்ணன், கோபியர் சம்பந்தப்பட்ட பாடல் என்றாலே 'சட்'டென்று என் நினைவுக்கு வருபவர் 'வெண்ணிற ஆடை' நிர்மலா தான். இந்த சப்ஜெக்ட் பாடல்களுக்கு இவர் வெகு பொருத்தம். 'ராமன் எத்தனை ராமனடி', 'பிருந்தாவனத்திற்கு வருகின்றேன்' போன்ற பாடல்களே சாட்சி. ('பாசதீபம்' படத்தின் 'கனவு கண்டேன் கண்ணா' பாடலும் 'வெண்ணிற ஆடை' நிர்மலா பாடும் பாடல்தானே?) இவருடைய உடலமைப்பும் கோபிகாஸ்திரீ போலவே இருப்பதும் சிறப்புக்கு இன்னும் காரணம்.
தேவரின் 'துணைவன்' படத்தில் 'வெண்ணிற ஆடை' நிர்மலா கோபியர் உடை அணிந்து பாடும் அருமையான பாடல்.
கோகுலத்தில் ஓர் இரவு கொண்டாட்டமாம் கொண்டாட்டம்
கோபியர்கள் ஆடுகின்றார் கங்கைக்கரை வண்டாட்டம்
கொஞ்சினாள் முத்தமிட்டாள்
கோலமொழி பெண்ணொருத்தி
கன்னத்தில் வண்ணமிட்டாள்
கண்ணனுக்கு இன்னொருத்தி
சிரித்தாள் இதழ் விரித்தாள்
கனி பறித்தாள் புது பெண்ணாட்டம்
சேலை கொண்டு மெத்தையிட்டு
சேர்ந்து விட்டாள் பூவாட்டம்
பச்சைக்கல்லு வைரத்தோடு பட்டுப் பாவாடை
பருவப் பெண்ணின் தலையினிலே ஒரு கட்டுப் பூவாடை
குங்கும உதடு கன்னத்தில் ஓடி கொஞ்சுது அத்தானை
கூடை போலே மூடிக் கொள்ளுது கொட்டடி முந்தானை
அழகிய விழி மீனினைத் தொட்டு
அள்ளுது பூந்தேனை இங்கே
அஞ்சிடும் பெண்மானின் கைகள்
ஆடுது ஆடுது அம்மானை
பச்சைக்கல்லு வைரத்தோடு பட்டுப் பாவாடை
பருவப் பெண்ணின் தலையினிலே ஒரு கட்டுப் பூவாடை
ஒரு கட்டுப் பூவாடை
ஒரு கட்டுப் பூவாடை
எவ்வளவு அருமையான பாடல்! ஈஸ்வரியின் குரலும் நம்மை அப்படி ஈர்க்கும். சான்ஸே இல்லை. அப்படி ஒரு இனிமை. அதுவும் விடுவிடுவென்று 'பச்சைக்கல்லு வைரத்தோடு பட்டுப் பாவாடை' என்று அவர் ஆரம்பிக்கும் போது மனது சொக்கிப் போகிறது.
ராகவேந்திரன் சார், மதுண்ணா!
ஒரு பெரிய குரல் குழப்பம். இந்தப் பாடலை ஜானகியும் சேர்ந்து பாடி இருக்கிறாரா? பாடலின் துவக்கத்தில் ஒலிக்கும் குரல் அப்படியே ஜானகி போல் உள்ளதே! படத்தில் பாடுபவர் நிர்மலா மட்டுமே. இருகுரல்கள் ஒலி க்க அவ்வளவு வாய்ப்பில்லை. (சில படங்களில் விதி விலக்கு) ஆனால் ஜானகியும், ஈஸ்வரியும் சேர்ந்து பாடியிருக்கிறார்களா என்று சந்தேகமாய் இருக்கிறது. குரலைக் கண்டு பிடிப்பதில் சற்று சிரமமாய் இருக்கிறது. ஆனால் 'துணைவன்' பட டைட்டிலில் ஜானகி பெயர் இல்லை. ஈஸ்வரி மட்டும்தான் இருக்கிறது. தயவு செய்து சந்தேகத்தை நிவர்த்தி செய்யவும்.
எது எப்படியோ! மிக அருமையான பாடல் என்பதில் சந்தேகம் இல்லை.
http://www.dailymotion.com/video/xhc...ki-tamil_music
வணக்கம் ஜி! கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்துக்கள்.
அருமை வாசு - அந்த மாய கண்ணன் உங்கள் அலுவுலக பிரச்சனைகளையும் கண்டிப்பாக தீர்த்து வைப்பான் . நம்பிக்கையுடன் இருங்கள் .
ஒன்றை இந்த மையம் திரியில் கவனித்தீர்களா ? திரியில் அருமையாக பதிவுகள் இடும் முக்கியமான நபர்கள் பெயர்களில் கண்ணனும் ஒளிந்திருக்கிறான் . தலைவனுக்கு உள்ள திறமை , . கருணை , அன்பு , குழல் ஊதுவதுபோல இனிமையான பதிவுகள் , மற்றவர்களை வழிக்காட்டும் திறன் , திரியை சாரதியாக ஓட்டும் அழகு , கண்ணனுக்கும் வருவது போல கோபதாபங்கள் இங்கு பதிவிடுபவர்களிடம் காண்கிறேன் - அந்த மாய கண்ணன் நம்மை ஆளுமை புரிவது மிகவும் அழகாக தெரிகிறது .
கண்ணன் மறைந்திருக்கும் நபர்கள் :
1. திரு ராகவேந்திரா ( கண்ணனையே நினைத்து கண்ணனாகவே மாறியவர் )
2. திரு ராஜ் ராஜ் ( கண்ணன் ராஜாக்கெல்லாம் ராஜா )
2. திரு மது ( மதுசூதனன் என்று கண்ணனுக்கு ஒரு பெயர் உண்டு )
3. திரு வாசுதேவன் ( 2) ( சொல்லவே வேண்டாம் - எல்லோரையும் மயக்கும் திறன் )
4. திரு கோபு ( கோபாலகிருஷ்ணன் என்ற பெயர் கண்ணனுக்கு உண்டு)
5. திரு கோபால்
6. திரு முரளி ஸ்ரீநிவாஸ்
8. திரு பார்த்த சாரதி
9. திரு ராதா கிருஷ்ணன்
9. திரு கிருஷ்ணா
10. திரு சின்ன கண்ணன்
11 திரு ராஜேஷ் - ( கண்ணன் ராஜ்யத்தை பரிபாலனம் செய்யும் வேளையில் மக்கள் அவனை அழைக்கும் செல்ல பெயர் இது )
12. திரு . கலை வேந்தன் ( பாரத போரில் பீஷ்மர் கண்ணனை ஒரு சில இடங்களில் அன்புடன் அழைக்கும் பெயர் இது )
13.திரு குமார் - விஷ்ணு சஹஸ்ரநாமத்தில் வரும் பெயர் இது
14. . திரு வினோத் ( கண்ணனை வினோத கிருஷ்ணன் என்று கோபியர் அழைப்பது உண்டு )
கிருஷ்ண ஜெயந்தி சிறப்புப் பாடல்
http://www.photofast.ca/files/products/7417.jpg
நடிகர் திலகத்தின் பாடல் இல்லாமல் 'கிருஷ்ண ஜெயந்தி'யா?
இதோ அற்புதமான ஒரு பாடல்.
துள்ளி ஓடும் அந்த சின்னக் கண்ணனை அள்ளி வாரி,
'கண்ணா! மணிவண்ணா! ஆயர்குல மணிவிளக்கே எங்கள் மன்னா!
வண்ணப் பசுங்கிளியே! வார்த்தெடுத்த பொற்சிலையே!
எண்ணமெனும் சோலையிலே இசை பாடும் இளங்குயிலே
இசை பாடும் இளங்குயிலே!
எங்கள் வீட்டில் எந்த நாளும் கண்ணன் பாட்டுத்தான்
நல்ல செங்கமலச் சிரிப்பிரிக்கும் மன்னன் பாட்டுத்தான்'
'வா கண்ணா வா' என்று நம்மை அழைத்து என்றும் வற்றாத ஜீவனுள்ள நடிப்பைத் தந்து,
'நடிகர் திலகம்' இடுப்பொடித்து, பட்டு வேட்டியும், சிகப்பு வர்ணச் சொக்காயுமாய், இடுப்பில் அங்கவஸ்திரம் கட்டி, சுஜாதாவுடன் ஆடும்போது அள்ளிக் கொண்டு போகும்.
'சின்னக் கண்ணன் செல்லக் கண்ணன் சுட்டிப் பிள்ளைதான்
படுசுட்டி பிள்ளைதான்
அள்ளிக்கொண்ட கை மணக்கும் வண்ண முல்லைதான்'
(எங்கள் வீட்டில்)
'மணிவண்ணன் பாட்டுத்தான்
எங்கள் கண்ணன் பாட்டுத்தான்
கொட்டுங்கடி கும்மி கொட்டுங்கடி
தட்டுங்கடி கையைத் தட்டுங்கடி'
கோவிலில் கிருஷ்ண ஜெயந்தியை பிரம்மாண்டமாகக் கொண்டாடும் நடிகர் திலகம், வி.கே.ராமசாமி ஜெயகணேஷ், சுஜாதா, வடிவுக்கரசி, நாகேஷ் மற்றும் ஊர் மக்கள்.
'முத்துக்கருமணி சத்தமிட
வண்ணக் கோல வளையல்கள் ஓசையிட
சுத்திச் சுத்தி வந்து ஆடுங்கடி
சுந்தரக் கண்ணனைப் பாடுங்கடி'
(கொட்டுங்கடி)
இப்போது உறியடித் திருவிழா நடக்கும். வி.கே.ராமசாமி தொடை தட்டி உறியடிக்கப் போகுமுன் நடிகர் திலகத்தின் முகத்தில்தான் எத்தனை கேலி, கிண்டல், நக்கல், நையாண்டி! வி.கே.ஆர் உறியடிக்க முடியாமல் திணற, அடுத்து சுஜாதா நடிகர் திலகத்தை உறியடிக்கத் தள்ளிவிட, கம்பீரமாக களத்திற்குள் 'நடிகர் திலகம்' மீசையைத் தடவியபடி நுழைந்துவிட, சுற்றிலும் உள்ள பெண்மணிகள் இவர் மேல் மஞ்சள் தண்ணீரை ஊற்ற, நடிகர் திலகம் எம்பி எம்பி உறியை அடிக்க முயல்வது வெகு அழகு.
இப்போது நெஞ்சு நிமிர்த்தி, மீசை முறுக்கி, பின்னால் வீரமாக பின்னோக்கி நடந்து சென்று, பின் படு ஸ்டைலாக ஓடி வந்து உறியை கம்பால் அடித்து பதம் பார்ப்பாரே! அதகளம்தான்.
கன்னிப் பெண்கள் மத்தியிலே கண்ணன் ஆட, நடிகர் திலகத்தின் கோலாகல கோலாட்ட நாட்டிய முத்திரைகள் ஆரம்பமாகும். கைகளில் இரண்டு கோலாட்டக் குச்சிகளை வைத்துக் கொண்டு என்ன அழகாக, வாகாக, நளினமாக ஸ்டெப்ஸ் வைப்பார் தெரியுமா!
'கோலாட்டம் இது கோலாட்டம்
கோகுலத்தில் இன்று கொண்டாட்டம்'
'நடிகர் திலகம்' அருமையான முக பாவத்தில் இரண்டு கால்களையும் ஒன்று மாற்றி ஒன்று வைத்து கோல்களைத் தட்டியபடி,
'கண்ணனின் திருமுகம் பாலாட்டம்'
என்று பாட,
'கண்கள் இரண்டும் வேலாட்டம்
கன்னம் தாமரைப் பூவாட்டம்
சிந்தும் புன்னகை பொன்னாட்டம்'
என்று சுஜாதா தொடர்வார்.
அடுத்து வழுக்கு மரம் ஏறும் போட்டி. எண்ணெய் தடவிய வழுக்கு மர உச்சி ஏறி, உச்சியில் இருக்கும் கலசப் பானையிலிருந்து பரிசுப் பொருளை எடுக்க வேண்டும். இதிலும் சிலர் முயன்று தோற்க, நாயகர் வி.கே.ஆரை உசுப்பிவிட, வி.கே.ஆர் சந்தோஷத்துடன் தலையாட்டி சென்று பெரிய ஏணி ஒன்றை எடுத்து வருவாரே பார்க்கலாம்! ஏணியில் ஏறி பரிசுப் பொருளைக் கவர்வதற்காம்.
அடுத்து 'நடிகர் திலகம்' வழுக்கு மரத்தில் 'சரசர' வென கொஞ்சம் கொஞ்சமாக ஏற, கணவன் ஏறுவதைப் பார்க்கும் சுஜாதா கைகளால் 'அப்.. அப்' என்று சொல்வது போல கைகளை உயர்த்தி திலகத்தை உற்சாகப்படுத்துவார். (சுஜாதா ஆக்ஷனில் அசத்துவார் இந்த இடத்தில்) நடிகர் திலகமும் மேலே ஏறி கலசப் பானையை திறக்கும் போது ஆரவாரம், விசில் சப்தம் பறக்கும் திரையில் அல்லாமல் படம் பார்க்கும் திரை அரங்கு உட்பட. (சுஜாதாவின் முகத்தில்தான் எத்துணை பெருமை தாண்டவமாடுகிறது நடிகர்திலகம் கலசப் பானையைக் கைப்பற்றியவுடன்!)
இப்போது அப்படியே டிராக் மாறும்.
கண்ணன் 'நடிகர் திலகம்' மடியில் அமர்ந்திருக்க, ஆரத்தி எடுக்கப்பட்டு பாடல் தொடரும்.
கோகுல பாலா! எங்கள் கோதை மணாளா!
கோபியர்நேசா! வேணுகான விலாசா!
பொன்மணிக் கால்களில் கிண்கிணி கொஞ்சிடும்
புன்னகை மன்னா!
போக்கிரிக் கண்ணா!
மன்னன் தோளில் பூச்சாத்தி
மஞ்சள் நீரில் ஆராத்தி
நந்தகுமாரா!
நவநீத ஜோரா!
என்றும் உந்தன் பேர் வாழி!
அருமையான கிருஷ்ண ஜெயந்தி பாடல். வயதான நடிகர் திலகத்தின் சிறுபிள்ளை விளையாடுத்தனமான ஜாலி நடிப்பு. பார்த்து அனுபவியுங்கள். அந்த கிருஷ்ணனின் புகழைப் பாடுங்கள். நம் 'ரங்கனி'ன் புகழையும் சேர்த்துத்தான்.
https://youtu.be/HDIeuCA_g90
Here is my respectful dedication to கிருஷ்ண ஜெயந்தி...
https://www.youtube.com/watch?v=5GhqpT0C6SE
தீவிரவாதிகளுக்கு மதம் உண்டா ??
ஒரு நாள் isis தீவிரவாதிகள் காரில் சென்றுகொண்டிருந்த ஒரு குடும்பத்தை வழி மறித்தனர்.
Isis தீவிரவாதி -
நீ எந்த மதம்?
அந்த மனிதர் -
நாங்கள் முஸ்லிம்
(அவர்கள் உண்மையில் கிருஸ்டியன்)
isisதீவிரவாதி -
அப்படியானால் குரானிலிருந்து சில வரிகளை சொல் பார்க்கலாம்.
(காரில் இருந்தவரின் மனைவி
நடுங்கிவிட்டாள்)
ஆனால் அவர் சிறிதும் தயக்கமின்றி
பைபிளில் இருந்து சில வரிகளை
கூறினார்.
Isis தீவிரவாதி -
சரியாக கூறினாய் நீ செல்லலாம்.
(கார் சிறிது தூரம் நகர்ந்ததும்)
அவரின் மனைவி -
"எப்படி சிறிதும் பயமின்றி குரானுக்கு பதிலாக பைபிலை கூறினீர்கள், ஒரு வேளை அந்த தீவிரவாதி கண்டுபிடித்திருந்தால் நம் நிலை என்னாவது?"
அவர் -
அவர்களுக்கு குரான் தெரியாது!
மனைவி -
அது எப்படி உங்களுக்கு தெரியும்.
அவர் சிரித்துக்கொண்டே
"அவர்கள் குரானை முழுவதும் படித்து புரிந்துகொண்டிருந்தால் ஆயுதம் ஏந்தி அப்பாவி மக்களை கொலை செய்யும் தீவிரவாதிகளாக மாறியிருக்கமாட்டார்கள்".
எந்த ஒரு மதமும் கொலை செய்ய சொல்லவில்லை.
தீவிரவாதிகளுக்கு மதமும் கிடையாது, மனமும் கிடையாது, அவர்கள் மனிதர்களும் கிடையாது......
வாசு - வா கண்ணா வா - பதிவு அருமை - இந்த பாடலைத் தேடினேன் - உடன் கிடைக்கவில்லை . ( ம்ம் -- எல்லோரும் வாசுவாகி விட முடியுமா என்ன ??) . நீங்கள் சொன்னது உண்மை - நடிகர் திலகத்தை நீக்கி , கண்ணன் பாடல்களை ரசிப்பது என்பது முடியாத காரியம் . இதோ இன்னும் சில பாடல்கள் - நம் நினைவுகளில் ரீங்காரம் இடுபவைகள் ---
https://www.youtube.com/watch?v=RvzIQsSnb-c
https://www.youtube.com/watch?v=eZyzQ4xq3JQ
https://www.youtube.com/watch?v=HEaY_qGscLo
https://www.youtube.com/watch?v=Gra_9_lOTRc
https://www.youtube.com/watch?v=tDU7NB440bs
எல்லாத்துக்கும் சிகரமாக இந்த பாடல்
https://www.youtube.com/watch?v=GxG9EzeAXi4
இனிய நண்பர் திரு ரவி சார்
என் பெயரும் கண்ணன் லிஸ்டில் இடம் பெற்று இருப்பதை அறிந்து மிக்க மகிழ்ச்சி .இன்று ஆசிரியர் தினமும் கண்ணன் பிறந்த தினமும் மதுர கானம் திரியில் மிகவும் சிறப்பாக நண்பர்களால் கொண்டாடப்பட்டுள்ளது . மிக்க மகிழ்ச்சி .
https://youtu.be/2h7NZd76mtk
பாரினில் வந்துவிட்டோம் பாழும் மனத்தினிலே
வேரிட்ட ஆசைகள் வீழ்வதெப்போ - தேர்போல்
அசைந்தாடி அங்குமிங்கும் அல்லலுறும் வாழ்வில்
இசைந்தாடி நிற்றல் எழில்
*
சகியே உன்னை நினைத்தால் நெஞ்சில்
..தடைகள் தகர்ந்தே எழில்கள் ஊறும்
உரமாய் நானும் உயரத் தானே
..உணர்வில் கலந்தே உயிராய் நின்றாய்
கரத்தை நீட்டி ககன வெளியில்
..காற்றைப் போலப் பறக்கவும் வைப்பாய்
மரமாய் கல்லாய் இருந்த என்னை
..மயக்கி விட்டாய் கண்ணே தமிழே..!
*
ஹாய் குட் ஆஃப்டர் நூன் ஆல்.. ( குட்மார்னிங்க் சொல்லலாம்னு தான் எழுத ஆரம்பித்தேன்..தொகுப்பதற்கு இவ்வளவு நேரம் ஆகிவிட்டது..
*
ரவி,
தமிழில் ஒரு சொல் வெல்லும் ஒரு சொல் கொல்லும் என்பார்கள்.. நீங்கள் உங்கள் சொற்களில் என்னை வென்று விட்டீர்கள். இறையருள் எனக்கிருக்கிறது என ச் சொல்லி.. (எல்லாருக்கும் தானே இருக்குங்காணும்) ( ஒ.சொ.வெ ஒ.சொ.கொ உதாரணம் பின்னால் சொல்கிறேன்..
உங்கள் குருக்களில் என்னையும் ஒன்றாய் சேர்த்தமைக்கு மிக்க நன்றி.. பன்னிரண்டு பதின்மூன்/றாவது இடமாய்ச் சொல்லியிருக்கிறீர்கள்..ம்ம்..ஒன்பதாமிடத்தில் சொல்லியிருக்கலாம் ( என்னது ஒன்பதுல குரு.. லஷ்மிராய் உங்களுக்குப் பிடிக்காதா.. எனக்குத் தெரியாதே..) :)
*
நண்பர்கள் அனைவருக்கும் கிருஷ்ண ஜெயந்தி நல் வாழ்த்துக்கள்..
*
முன்பு எழுதிப் பார்த்த கண்ணனின் புதுக்கவிதை ஒன்று
*
ஒருத்திக்கு நடனம்
ஒருத்தியுடன் பாடல்
ஒருத்தியுடன் ஊடல்
ஒருத்தியுடன் கண்ணா மூச்சி
ஒருத்தியுடன் அழுகை
மற்றும் பல கோபியரிடம் பலவிதமாய்..
எல்லாம்
அந்த மாயக் கண்ணனின் லீலை
இருந்தும்
ஒருத்தியின் அருகில் கண்ணன் காணோம்..
மயக்கத்தில் இருந்த பக்கத்து கோபிகை
எங்கே எனக் கண்ணால் வினவ
அவள்
ஷ்..கண்ணன் என்னுள்..
மனதிற்குள்..
செய்யாதே தொந்தரவு என..
மாயக்கண்ணன் முகத்தில் புன்னகை..
*
முன்பு எழுதிப்பார்த்த கண்ணனுக்கான அந்தாதி..
*
முன்னால் எழுதிப் பார்த்த அந்தாதி..
*
எண்ணுகையில் நெஞ்சுள்ளே உற்சாகம் தான்பெருக்கும்
சின்னக் குழவியவன் சீர்மிகுந்த நோக்கினிலே
வண்ணமாய் எல்லோர்க்கும் வாழ வகைசெய்யும்
கண்ணன் கழல்களே காப்பு
காப்பதற் கென்றே குடையாகத் தான்பிடிக்க
ஆக்களுடன் சேர்ந்தங்கு மாக்களும் நின்றுவிட
பேய்மழையைப் பார்த்தே பயந்திருந்த கோகுலத்தைக்
காத்துத்தான் நின்றவன் காண்..
காண்பதோ சின்னக் குழந்தையின் தோற்றமெனில்
தீண்டிய பூதகியைத் தாக்கியே - மண்ணில்
விழச்செய்து வித்தைகள் வேடிக்கையாய்ச் செய்த
குழவிக் கிணையேது சொல்
சொல்ல நினைத்தாலே சோறதுவும் பானையிலே
துள்ளியே ஆர்ப்பரித்துத் தோயாமல் பொங்குதற்போல்
அள்ளிப் பெருகிடுதே கண்ணனவன் லீலையதும்
பள்ளிப் பருவத்தில் பார்..
பார்த்தான் பலவாறாய் பக்குவத்தைத் தானிழந்து
ஆர்ப்பரித்த காளிங்கன் தீச்செயலை – வேர்த்து
விறுவிறுத் தாடியே வெட்கிட வைத்தான்
துறுதுறு கண்ணனவன் தான்..
கண்ணனவன் தானங்கே கட்டிய கல்லிழுத்து
திண்ணமாய் நேர்நோக்கிச் செல்லுகையில் – மின்னலது
பட்டாற்போல் மரங்கள் பிரிந்தங்கே வீழவும்
தொட்டனர் சுட்டியின் தாள்
தாளால் விஷத்துடனே தீண்டிய பூதகியை
மீளா நிலைக்கணுப்பி மீண்டவன் –கேளாமல்
தாயிடம் தப்பித் தளிர்மண்ணைத் தின்னவும்
வாயில் தெரிந்த வுலகு..
உலகங்கள்: சுற்றுவதை ஒன்றாக்க் காட்டி
கலக்கத்தைத் தாயிடம் கூட்டி – படக்கென
அன்னையைக் கொஞ்சம் அணைத்தே அழுதிடுவான்
சின்னஞ் சிறுகண்ணன் தான்
சின்ன்ஞ் சிறுகண்ணன் தானென்று எண்ணாமல்
நன்றாய் இழுத்தே நாலுஅடி போடென்றே
கன்ன ஞ் சிவந்திருந்த கன்னியர்கள் சொல்கையிலே
பின்னலைப் பின்னுவான் பார்..
பார்க்கும் இடமெல்லாம் புன்னகைக்கு முன்வதனம்
ஈர்க்கும் பலவாறாய் என்பதனால் – சேர்த்திழுத்துக்
கண்ணிமை மூடவும் கண்ணா சிரிக்கின்றாய்
விண்ணினைக் காட்டுவா யா.
*
வெகு அழகான கண்ணன் பாடல் கீழே..எழுதியவர் யார் கவியரசர்..
https://www.youtube.com/watch?featur...&v=rzd42y0l0CQ
கோகுலத்தில் பசுக்கள் எல்லாம்
கோபாலன் குழலைக் கேட்டு
நாலுபடி பால் கறக்குது இராமாரி! - அந்த
மோகனின் பேரைச் சொல்லி
மூடி வைத்த பாத்திரத்தில்
மூன்றுபடி நெய் இருக்குது கிருஷ்ணாரி!
(இராமாரி அரே கிருஷ்ணாரி - அரி அரி
இராமாரி அரே கிருஷ்ணாரி)
கண்ணன் அவன் நடனமிட்டு
காளிந்தியில் வென்ற பின்னால்
தண்ணிப் பாம்பில் நஞ்சுமில்லை இராமாரி! - அவன்
கனிஇதழில் பால் கொடுத்த
பூதகியைக் கொன்ற பின்னால்
கன்னியர் பால் வஞ்சமில்லை கிருஷ்ணாரி!
குளத்தில் முங்கிக் குளிக்கையிலே
கோவிந்தன் பெயரைச் சொன்னால்
கழுத்திலுள்ள தாலி நிக்குது இராமாரி! - சேலை
திருத்தும் போது அவன்பெயரை
ஸ்ரீரங்கா என்று சொன்னால்
அழுத்தமான சுகம் கிடைக்குது கிருஷ்ணாரி!
படிப்படியாய் மலையில் ஏறி
பக்திசெய்தால் துன்பம் எல்லாம்
பொடிப் பொடியாய் நொறுங்குதடி இராமாரி! - அட
படிப்பில்லாத ஆட்கள் கூட
பாதத்திலே போய் விழுந்தால்
வேதத்திற்கே பொருள் விளங்குது கிருஷ்ணாரி!
வரிகள்: கண்ணதாசன்
குரல்: எஸ்.ஜானகி
இசை: எம்.எஸ்.வி
தொகுப்பு: கிருஷ்ண கானம்
*
*
தூங்குகிறான் தூளியிலே சின்னக் கண்ணன்
..சுற்றிநீயும் ஆட்டாதே விழித்துக் கொள்வான்
பாங்காக அவன்முறுவல் முகத்தில் தானே
..பரவசத்தைக் கூட்டுதடி அடியே தோழி
தேங்கிடுமே மென்காற்று அவனைச் சுற்றி
..தேகத்தை விட்டெங்கும் போகா வண்ணம்
நீங்கிடுமே நாம்பட்ட துயரம் எல்லாம்
..நீலவண்ணன் தரிசனத்தில் என்றும் தானே..
*
ஆயர் பாடி மாளிகையில் தாய் மடியில் கன்றினைப் போல்
மாயக்கண்ணன் தூங்குகிறான் தாலேலோ
https://youtu.be/cuP2jzhmnh4
*
*
தேடும் பார்வை உன்னைக் காண அங்கும் இங்கும்
….நாடும் மனமோ நிலையில் லாமல் முன்னும் பின்னும்
ஓடிச் சென்றே அலைகள் போலே உந்தன் நினைவை
..ஊடி உணர்வை மேலும் மேலும் மயக்க வைக்கும்
வாடும் வஞ்சி என்னை நீயும் மகிழ வைக்க
…வாராய் கண்ணா வாவா விரைவில் இங்கே இங்கே
பாடும் பாடல் சுவையா என்று நானும் அறியேன்
..பக்தி அதனுள் உண்டே உனக்கும் தெரியும் கண்ணா..!..
கேட்க லாயிற்றே கண்ணனவன் குழலினிமை
…தெள்ளத் தெளிவாக தேனமுதாய்க் காதுகளில்
பார்க்க லாயிற்றே பரபரக்கும் விழிமலர்கள்
…பார்த்தன் திருவுருவம் வரும்திசையை நோக்கித்தான்
வேட்கை கொண்டவுளம் விரைவாக அங்குமிங்கும்
…வெட்கம் தனைவிட்டே அவனணைப்பை நாடித்தான்
வேர்த்து அலைபாயத் தவித்துநிற்க லாயிற்றே..
.மேவி அவளிடமே கண்ணனெப்போ வருவானோ
வாராதா கண்ணனவன் உருவம் கண்ணில்
..வந்துவக்க வைக்கவரும் காலம் என்றே
ஆறாக மனமுருகி அழைத்த பெண்ணின்
..அழகுமிகு பாடல்கள் கேட்ட வண்ணம்
வா ராதா என்றபடி வந்தான் அங்கே
..வஞ்சியவள் மனங்கவர்ந்த மாயன் மேலும்
பேறாகத் தந்துவிட்டான் தன்னைத் தானே
..பெண்மயிலும் கலந்துவிட்டாள் அவனில் அன்று
*
https://www.youtube.com/watch?featur...&v=Z-uribm60cM
யமுனை ஆற்றிலே ஈரக் காற்றிலே
கண்ணனோடு தான் ஆட
பார்வை பூத்திட பாதை பார்த்திட
பாவை ராதையோ வாட
இரவும் போனது பகலும் போனது
மன்னன் இல்லையே கூட
இளைய கன்னியின் இமைத்திடாத கண்
இங்கும் அங்குமே தேட
ஆயர்பாடியில் கண்ணன் இல்லையோ
ஆசைவைப்பதே அன்புத் தொல்லையோ
பாவம் ராதா...
*
காண்கின்ற காட்சிகளில் தெரிகின்றாய் கண்ணாநீ
...கண்டுவக்க நேரினிலே வரவில்லை கண்ணாநீ
பூண்கின்ற அணிகலன்கள் சூடுகின்ற பூச்சரங்கள்
..புடவையதன் வண்ணங்கள் உனக்காக த் தான்கண்ணா
நோன்புதனை நான்கொண்டு நேர்விழிகள் பார்த்தபடி
..நெகிழ்ந்திருப்ப தெதற்காக உனக்காகத் தான்கண்ணா
வேண்டுவன நாந்தருவேன் விரைவினிலே வந்திந்த
..வஞ்சியெந்தன் தாபமதைத் தீர்ப்பாயா கண்ணாநீ
*
http://www.inbaminge.com/t/r/Radha/U...Kanna.eng.html
உன்னை எதிர்பார்த்தேன் கண்ணா நீ வாவா
கண்கள் உறங்காமல் தவித்தாளே ராதா
உள்ளம் போராடவும் கண்ணில் நீராடவும்
இங்கு ஏங்குகிறேன் தனியாக..
படம் ராதா
*
*
ராஜ் ராஜ் சார், சிவாஜிசெந்தில் – ஆசிரியர் தின வாழ்த்துக்கள் ப்ளஸ் என் நமஸ்காரங்கள் டு யூ.
*
மக்கு மாணவி தான் அவள்..
எதைச் சொன்னாலும்
குறைந்தபட்சம் நாலுதடவை சொன்னபிறகுதான்
ஏறும் என்றால் அதுவுமில்லை
முழுக்கச் சரியாய்ப் போட்டுவிட்டு
விடையில் தப்பு பண்ணுவாள்..
தனிக்கல்வி தான் என்றாலும்
கோபம் எனக்கு வந்ததால்
நன்றாகக் காதைத் திருக
பரவாயில்லை மிஸ்
எப்படியும் வர்ற பங்குனில கல்யாணம்
பண்ணிடுவாங்க
எனக்கோ கூட்டக்கழிக்க தெரியும்
அது போதும்
சொன்னாற்போல
ப்ளஸ் ஒன் முடித்த லீவில்
அவளுக்குக் கல்யாணம்
பெற்றோர் அழைப்பை வைக்க
போனபோது குட்டியாய்ப் புன்னகை
எங்க கணக்குடீச்சர் எனப் பெருமையாய்
அறிமுகம்
கொடுவாள் மீசை வேட்டிசட்டை மாப்பிள்ளையிடம்…
திரும்பும் போது அவள் அம்மா சொன்னார்..
நாலு நாத்தனார் மூன்று மச்சினனாம் அவளுக்கு
இவ தான் மூத்தவளாம்
சுதானமா இருக்குமா என்ன தெரியலையே
அவர் கவலை
எனக்குத் தொற்றிக்கொண்டு கல்யாண மண்டபத்திலிருந்து
வீடுவரை இருந்தது..
சில வருடங்கள் கழித்து
வேறு ஊருக்கு மாற்றலாகி
சென்னை எதற்கோ சென்றபோது
சந்தித்தேன் அவளை..
அதே மாணவிதான்..சற்றே புஷ்டியாய்
தொங்கத்தொங்க நகைகள்..அடுக்கிய வளையல்கள்
மின்னும் பேசரி..
பட்டுப் புடவை..யானை பார்டர்..ஆரெம்கேவியா..
அவள்தானா..இல்லை..
அவள் தான்..
ஹாய் மிஸ்..
அதே புன்னகை..
என்னடி இவளே எப்படி இருக்க
நான்மல்லிகா இல்லை மிஸ் மாதவி
மறந்துட்டீங்களா..பரவாயில்லை..
நல்லா இருக்கேன் மிஸ்..
நாலு நாத்தனாருக்கும் கல்யாணம் ஆயிடுச்சு
தம்பிங்க மூணு பேருல ஒருத்தன் டோஹா ஒருத்தன் துபாய்
ஒருத்தன் பெங்களூரு
பொண்ணு தேடிக்கிட்டிருக்கோம்..
இவருக்கு பிஸினஸ்..தோ… அந்த மால்ல தான்
நாலு கடை..
ரெண்டு கடை நாந்தான் பாக்கணுமாம்
கணக்கு வழக்கெல்லாம் நாந்தேன்..
அட்மினும் நல்லா செய்றேனாம்..
குழந்தையா மிஸ்..எனக் கேட்டு கன்னஞ்சிவந்து
இப்பத் தான் நாலுமாசம்..
எல்லாம் செட்டிலாய்ட்டு வச்சுக்கலாம்னு
இருந்தோமா..இப்பத் தான் வேளை..
நீங்க செளக்கியமா..
என் கொஞ்சூண்டு கசங்கிய துப்பட்டாவினால்
கண்ணாடியைத் துடைத்த போது
அவளைக் காணோம்
பார்த்தால்
அருகில் வந்த பிஎம் டபிள் யூவில் அவள்..
மிஸ் ட்ராப் பண்ணட்டா..
வேணாம் மல்லிகா ஸாரி மாதவி..
பை மிஸ்
ஐ வோண்ட் ஃபர்கெட் யூ இன் மை லைஃப்..
நானும்…..!
*
உங்களுக்காக ஒரு ஜுகல் பந்தி (ராஜ் ராஜ் சார் பாணியில்.)
https://youtu.be/F5giBnun_4I
பணமா பாசமா 1968, இது 1969, அப்ப தமிழ்ப்பாட்டுதான் மொத வந்திருக்கணும்.
"மெல்ல மெல்ல மெல்ல எந்தன் மேனி நடுங்குது மெல்ல" பாட்டை யூட்யூபில் கேட்டு மகிழலாம்..சரி..போட்டுடறேன்..சேர்ந்தும் பாக்கலாம்!
https://youtu.be/uDk-a_Wfo98
*
என்னவோ வெகு அழகிய பாடலான கோகுலத்தில் ஓர் இரவு.. வரவில்லை எனக்கு..எனில் தேடி எடுத்துப் பார்த்தேன்.. தாங்க்ஸ் வாசு ஜி. வா.கண்ணாவாவிற்கும்
இது முழுக்க முழுக்க எல்.ஆர் ஈஸ்வரி போலத் தான் தெரிகிறது..யூட்யூபில் ஜானகி பெயர் போடவில்லை..
ராகதேவன் ராஜ்ராஜ் ரவி,வரப்போகும் க.பாட்ஸ் தரப்போகும் மது அனைவருக்கும் நன்றி..
https://youtu.be/Npi3gVwyCRU
அனைவருக்கும் ஸ்ரீகிருஷ்ண ஜெயந்தி வாழ்த்துகள்
நூறு வருடங்கள் வாழ்ந்தும் 18 வயதிலேயே வாழ்ந்து வருபவர் ஆயிரம் பதிவுகள் இட்ட பின்பு, தான் பதினெட்டே பதிவுகள்தான் இட்டதாக ஏன் சொல்ல மாட்டேன் என்கிறார்? வாழ்த்துகள் கலைவேந்தரே!!!
வாசு ஜி...
குரலில் கொஞ்சம் மாற்றம் இருக்கிறது. ஜானகியோ எனும்படி இசைப்பதிவு ஆகி இருக்கலாம். ஆனாலும் அந்த "ண்டாட்டம்" ஒரிஜினல் ஈஸ்வரி ஸ்டைல்.. அதை யாராலும் காப்பி அடிக்கவே முடியாது. அதனால் அங்கேயே முடிவு தெரிஞ்சு போச்சு.
கனவு கண்டேன் கண்ணாவும் நிர்மலாவுக்குதான். கால் சரியில்லாத பெண் என்று நினைவு. எப்போதும் அந்த கண்ணன் பொம்மையை வைத்துக் கொண்டே இருப்பாராம். பரங்கிமலை ரயில்வே கேட்டருகில் நிர்மலா உட்கார்ந்து கண்ணன் விக்ரகத்தை நிமிர்ந்து பார்க்கும் போஸ்டர் ஏறக்குறைய ஆறு மாதம் ஒட்டிய இடத்திலேயே பளிச்சென்று இருந்ததாக்கும்....
சின்னா!
லேட்டா வந்தாலும் அமர்க்களப்படுத்தி விட்டீரே அய்யா! விஸ்வரூபம் எடுத்து விட்டீரே!
மரமாய் கல்லாய் இருந்த என்னை
..மயக்கி விட்டாய் கண்ணே தமிழே
அதுவேதான். மயக்கி விட்டாய் சின்னக் கண்ணா! நெனச்சேன். ஒன்பதுல குருன்னும் போதே லஷ்மிராய் பேர் வரும்னு நெனச்சேன். ஏமாற்றவே இல்லை அய்யா!
//ஒருத்திக்கு நடனம்
ஒருத்தியுடன் பாடல்
ஒருத்தியுடன் ஊடல்
ஒருத்தியுடன் கண்ணா மூச்சி
ஒருத்தியுடன் அழுகை
மற்றும் பல கோபியரிடம் பலவிதமாய்..
எல்லாம்
அந்த மாயக் கண்ணனின் லீலை
இருந்தும்
ஒருத்தியின் அருகில் கண்ணன் காணோம்..
மயக்கத்தில் இருந்த பக்கத்து கோபிகை
எங்கே எனக் கண்ணால் வினவ
அவள்
ஷ்..கண்ணன் என்னுள்..
மனதிற்குள்..
செய்யாதே தொந்தரவு என..
மாயக்கண்ணன் முகத்தில் புன்னகை//
வாசுவினுள் சினனா போல.
'கோகுலத்தில் பசுக்கள் எல்லாம்' முழுப்பாடலையும் அளித்து விட்டேரே! நன்றி!
'ஆயர் பாடி மாளிகையில் தாய் மடியில் கன்றினைப் போல்
மாயக்கண்ணன் தூங்குகிறான் தாலேலோ'
எங்க ஆளாக்கும். நான் யாருக்கும் விட்டுத் தர மாட்டேன். எப்படி போடப் போச்சு என்று உம்மை திட்டவும் மாட்டேன். போனாப் போகுது. இன்னிக்கு உங்க பேருக்கு ஜெயந்தி. அதான் விட்டுக் கொடுத்திட்டேன். ஹ ஹா
உன்னை எதிர்பார்த்தென் கண்ணா போட்டாச். முடியல. போடாம இருக்க. ஓய்... பணமா பாசமா படத்து வருஷமெல்லாம் சொல்றீரு. விக்கியை நம்பாதேயும். காலை வாரி விட்டுடும். இந்தி நம்பியார் பாட்டுக்கு தேங்க்ஸ்.
யாரோ 'கல்' மனது கொண்ட 'நாயக'ர் இங்கே வந்திருப்பதாக உணர்கிறேன்.:) நான் முன்பு வாக்குறுதி கொடுத்தது போல அவருடன் இன்று (மட்டும்) பேசுவதாக இல்லை. எனக்கு மட்டும் கல் மனது இருக்காதா? இன்று கிருஷ்ண ஜெயந்தி. நல்ல நாள் என்பதால் அவரை மனதார மீண்டும் இங்கே வரவேற்கிறேன். பேச்செல்லாம் நாளைக்குத்தான். கடலூர் காரவுகளுக்கு கல் மனது என்று நானும் நிரூபிச்சுட்டேன்.:) இருந்தாலும் மனசு கேக்கல.
வாங்கோ கடலூர் நண்பா!
மது அண்ணா!
'கனவு கண்டேன் கண்ணா' போஸ்டர் விவரங்களுக்கு நன்றி. அதே போல ஜானகி குழப்பத்தை தெளிவு படுத்தியதற்கும். ஜானகி குரலிலும் எங்க ஆள் பாடும். யார் அது? இல்லே யாருன்னு கேக்குறேன். பின்னே ராட்சஸி என்று ஏன் பெயர் வைத்தோமாக்கும்.
//போஸ்டர் ஏறக்குறைய ஆறு மாதம் ஒட்டிய இடத்திலேயே பளிச்சென்று இருந்ததாக்கும்//
ஆடு, மாடு எதுவும் இல்லாத ஏரியா போல.:)
CK - குற்றால அருவியில் குளித்தது போன்று இருந்தது:-D - உங்கள் கவிதை மழையில் எல்லோரையும் நனைத்து விட்டீர்கள்:-D . தவறாக உங்கள் பதிவை புரிந்து கொண்டு விட்டேன் , சாரி --- என்ற வரிகளைத் வெகு நேரம் தேடினேன் - நேரம் தான் வீணாயிற்று:-D ---- கவிதைகள் அந்த மாய கண்ணனுக்கு ஒரு சிறப்பான புகழாஞ்சலி ..:-D.
PS :
"smiley" அதிகமாக உபயோகித்து எனக்கு பழக்கமில்லை - தேவை இல்லாத இடங்களில் use பண்ணியிருந்தால் கண்டுகொள்ளாதீர்கள் - என்னுடைய பதிவுகள் எல்லாமே ஜாலியான பதிவுகள் தான் ...
கல் நாயக் சார் - இந்த கோகுலத்திற்கு மீண்டும் வந்து சேர்ந்ததில் மிக்க மகிழ்ச்சி
இறைவன் நாம் வழிபடும் உருவங்களில் இல்லை ; எண்ணும் தூய எண்ணகளில் , செய்யும் காரியங்களில் , பழகும் நண்பர்களில் இருக்கிறான் . மதங்களுக்கும் , நம் ஆசாரங்களுக்கும் அப்பார்ப்பட்டவன் அவன் - சிலர் அவனை கணபதி என்கின்றனர் , சிலர் கிருஷ்ணன் என்கின்றனர் , சிலர் ஏசு என்று அழைக்கிறார்கள் , சிலர் அல்லா என்று பூஜை செய்கின்றனர் . நம் எண்ணங்கள் ஒன்றுப்பட்டால் , இறைவனும் ஒருவானாகவே நமக்குத்தெரிவான் ...
http://i818.photobucket.com/albums/z...psqhkpxnob.jpg
http://i818.photobucket.com/albums/z...psphuuec9n.jpg
மதுண்ணா!
ஜெய், எஸ்.வி.சுப்பையா, எம்.ஆர்.ஆர்.வாசு,லஷ்மி நடித்த படம் 'ஆசீர்வாதம்'. இன்று ஆசிரியர் தினம் என்பதால் இந்தப் படம் ஏனோ மனசில் ஓடியது. எப்போதோ ஒருமுறை ஏதோ ஒரு சானலில் எழுந்திருக்காமல் பார்த்தது.
சுப்பையாவின் சொந்த மகன் வாசு. படிப்பில் கவனம் இருக்காது. ஆனால் சுப்பையா மாணவன் ஜெய் படிப்பில் கெட்டி. நீங்க சொல்லும் வாத்தியாரய்யா மாதிரி சுப்பையா மாணவன் ஜெய் முன்னேற்றத்தில் அக்கறை காட்டுவார். மகனை அலட்சியப் படுத்துவார். இதைக் கண்டு சொந்த மகன் எம்.ஆர்.ஆர்.வாசு கறுவுவார். இப்படி லேசாக கதை ஞாபகம் இருக்கிறது. ஜெய் பட்டம் வாங்கி சுப்பையாவிடம் ஆசீர்வாதம் வாங்குவது போன்ற போஸ்டரும் நினைவில் இருக்கிறது.
சில அற்புதமான பாட்டுக்கள். வழக்கம் போல ஜெய் பட புண்ணியத்தில்.
'இந்த நாள் நல்ல நாள்' என்ற அருமையான 'கோவை'யாரின் பாடல்
https://youtu.be/Xon9iOr58fk
ஒரிஜினல் சௌந்தர்ராஜனின் இன்னொரு அருமையான பாடல் சுப்பையாவிற்கு. மனசை அப்படியே கலங்கடிக்கும்.
'நெஞ்சம் நிறைய வரவேற்றான் நீ யாரென்று
அந்த நேரம் முதலே நினைக்கின்றேன் நான் யாரென்று
அந்நியன் போலே கேட்டானே நான் யாரென்று
அவனிடம் எப்படி சொல்வேன் நான் யாரென்று'
இன்று ஆசிரியர் தினம். இந்த ஆசிரியர் ஒரு 'ஸ்கூல் மாஸ்டர்'. ஆனால் பாடலின் அப்லோடர் இவரை 'ஸ்கூல் டீச்சர்' என்கிறார்.:) பிள்ளைகளுக்கு 'அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதலாகும்' என்று பாடம் சொல்லி அறிவைப் புகட்டுவதைக் காணுங்கள்.
https://youtu.be/nPZnB0x0GI4
நன்றிங்க..
*
சிலப்பதிகாரத்தில் தன் மனதில் ஒன்றை நினைத்துக் கொண்டு , சொல்லும் போது வேறு விதமாய்க் கூறி விடுகிறான் பாண்டிய மன்னன். அதனால் விளைந்தது விபரீதம்.
சினையவர் வேம்பன் தேரானாகி
ஊர்காப் பாளரைக் கூவி ஈங்கு என்
தாழ் பூங் கோதை தன்கால் சிலம்பு
கொன்றச் சிலம்பு கொணர்க ஈங்கென..
தாழ்ந்த மலர் மாலையுடைய அரசமாதேவியின் சிலம்பு ‘இவன் கூறிய கள்வன் கோவலன் கையில் இருக்குமானால், அவனைக் கொல்வதற்கு அச்சிலம்புடன் இங்கு கொண்டு வருக” எனக் கூற எண்ணியவன் அவ்வாறு கூறாமல் “அவனைக் கொன்று அச்சிலம்பைக் கொணர்க”. எனக் கட்டளையிட்டான் பாண்டியன்.//
இதே நிலமை தான் ரவி உங்கள் பதிவிற்கும்.. நிச்சயமாக அதை எழுதிய போது – பின்னால் இறையருள் என்றெல்லாம் நீங்கள் கூறினாலும் –உங்கள் மனதில் ஒன்றுமில்லை எனச் சொன்னாலும்- எழுதும்போது ஜஸ்ட் ஓ.கே.. நம்ம சி.கே. எதுவேணும்னாலும் சொல்லலாம் என்று தான் எழுதியிருந்தீர்…. அதைப் படிப்பவர்கள் எப்படி எண்ணுவார்கள் என்றெல்லாம் நினைக்கவில்லை.. எனக்குத் தெரிந்த நண்பர்களுக்கும் நான் எண்ணியவாறே தான்பட்டு என்னிடம் பி.எம்.மில் கோபப் பட்டார்கள்..
இப்படி இருக்கையில் நான் எப்படி உங்களிடம் ஸாரி சொல்ல இயலும்? விளையாட்டாய் நீங்கள் அதைக் கேட்கிறீர்கள்.. நானும் விளையாட்டாய் மறுக்கிறேன் ஓகேயா குரு..
இந்த குரு என்ற வார்த்தை நான் அன்றாடம் தினமும் உபயோகப் படுத்தும் வார்த்தை..ஒவ்வொருவரிடம் இருந்தும் ஒன்று கற்றுக் கொள்கிறோம்..என்னிடம் நீங்கள் கற்றுக் கொண்டீர்கள் என எழுதியிருந்தீர்கள்..
நானும் கற்றுக்கொண்டேன்..இனி இன்னமும் ஒரிஜினலாக எழுத வேண்டும் என்று..அது எப்படி காப்பி அடிக்கிறேன் என்ற எண்ணம் ரவியைப் போன்ற எல்லாம் தெரிந்து எழுதுகின்ற,படிப்பறிவு மிக்க, மென்மையான பிறர்மனம் நோகவைக்காத நண்பர் மனதில் விளையாட்டாய்த் தோன்றியது என்று.. அதற்காகத் தான் நான் முன்பு எழுதியதில் தேடிப் படித்துப் பார்த்து இங்கு இட்டேன்..புதியதாக எழுதுவதையும் இடுவேன்
நீங்கள் இந்த வண்ணம் என்னிடம் நான் ஸாரி சொல்லவில்லைஎன ஜாலியாக வருத்தப் படாமல் இருந்திருந்தால் இந்த இடுகை வந்திருக்காது...
உங்களுக்காக நீங்கள் எழுதுகிறேன் என்று நீங்கள் ஒரு தடவை சொல்லியிருக்கிறீர்கள் - . . நான் எழுதுவது அப்படி இல்லை..எனக்காகவும்., எந்த கான்செப்டாக இருந்தாலும் சுவாரஸ்யமாக, படிப்பவர்களைப் படுத்தாமல் நன்றாக இருக்கவேண்டும், சில வருடம் கழித்துப்படித்தாலும் சுவையாக இருக்கவேண்டும் என்று தான் எழுதிப்பார்க்கிறேன்..ஒவ்வொரு தடவையும் கூடுதலான கவனத்துடன் எழுத முயற்சியும் செய்து கொண்டு இருக்கிறேன்..
இங்குள்ளவர்கள் ( நீங்கள் உட்பட) வித்தியாசமாக எழுதிப் பார்ப்பது அதனால் தான்.. தேடித் தேடி ரேர் சாங்க்ஸ் மக்கள் போடுவதும் அதனால் தான்..
என்ன புதியதாக எழுதவில்லை..எழுதவேண்டும் ரவி.. கொஞ்சம் ஆசீர்வதியுங்கள்..இப்போதைக்கு வாங்கிய புத்தகங்களைப் படித்துக் கொண்டிருக்கிறேன்..
குறள் என்ன ஆச்சு ரவி,..
நான் முன்பு எழுதிப் பார்த்த சில குறள்களைச் சொல்லட்டா..
*
*
முதல் சீரும் ஈற்றுச் சீரும் முரண்பட்டு இருக்கணுமாம் குறளில் (அதாவது ஆரம்பம் இலியானால வந்தா ஈற்றுச் சீர் நமீதால வரணும் smile emoticon ) கொஞ்சம் ட்ரை பண்ணிப் பார்த்தேன்..
*
விரித்துச் சிரித்தாலே விண்வரை கண்ணாம்
திரித்தே உதட்டைக் குவி..
*
போலி பலவாறாய்ப் போனாலும் எப்போதும்
ஆழிபோல் பொங்கும் அசல்..
*
ஓடி உழைத்து உலகத்தில் புண்ணியங்கள்
தேடியே சேர்த்துநீ நில்
*
ஒல்லியாய் ஆக உழைத்தே இருந்தீரேல்
துள்ளிடும் நெஞ்சமும் குண்டு..
*
கதிரவன் வந்தால் கடலுள்ளே வீழ்ந்தே
மதியை இழக்கும் மதி
*
காட்டினில் மன்னர் கடுந்தவம் செய்திட
நாட்டமாய் விட்டிடுவார் நாடு..
*
//தேடித் தேடி ரேர் சாங்க்ஸ் மக்கள் போடுவதும் அதனால் தான்..//
அண்ணா!
நடுவில நானும், மது அண்ணாவும் சிக்கிகினோமா?
சின்னா!
லேட்டா வந்தாலும் அமர்க்களப்படுத்தி விட்டீரே அய்யா! விஸ்வரூபம் எடுத்து விட்டீரே!
மரமாய் கல்லாய் இருந்த என்னை
..மயக்கி விட்டாய் கண்ணே தமிழே
அதுவேதான். மயக்கி விட்டாய் சின்னக் கண்ணா! நெனச்சேன். ஒன்பதுல குருன்னும் போதே லஷ்மிராய் பேர் வரும்னு நெனச்சேன். ஏமாற்றவே இல்லை அய்யா!//
மிக்க நன்றி வாசு.. ஆயர்பாடி மாளிகையில் எஸ்பிபிங்கறப்பவே நெனச்சேன்.. நீர் படப்பாட்டுதான்போடுவீர்னு இதைப்போட்டுட்டேன்.. ஷமிக்கணும்ணா..
இந்த நாள் நல்ல நாளுக்கும் நன்றி..
அதென்ன பத்து விஜயகுமாரி பாட் போடுவீரோ வெவ்வெவ்வெவ்வே :)
//இதே நிலமை தான் ரவி உங்கள் பதிவிற்கும்.. நிச்சயமாக அதை எழுதிய போது – பின்னால் இறையருள் என்றெல்லாம் நீங்கள் கூறினாலும் –உங்கள் மனதில் ஒன்றுமில்லை எனச் சொன்னாலும்- எழுதும்போது ஜஸ்ட் ஓ.கே.. நம்ம சி.கே. எதுவேணும்னாலும் சொல்லலாம் என்று தான் எழுதியிருந்தீர்…. அதைப் படிப்பவர்கள் எப்படி எண்ணுவார்கள் என்றெல்லாம் நினைக்கவில்லை.. எனக்குத் தெரிந்த நண்பர்களுக்கும் நான் எண்ணியவாறே தான்பட்டு என்னிடம் பி.எம்.மில் கோபப் பட்டார்கள்..//
உங்கள் விளக்கம் அருமை சின்னா! உங்கள் வருத்தம் நன்றாகப் புரிகிறது. ரவியும் அப்படி சொல்லக் கூடியவர் அல்ல. ஆனால் தவறாக நினைக்கும்படி அமைந்து விட்டது துரதிருஷ்டவசமானது. உங்கள் மனம் இதனால் புண்பட்டிருக்கிறது என்பது புரிகிறது. சரி! ஓகே. லீவ் இட். இனி உங்களுக்குள் பனிப் போர் தேவையில்லை என்பது என் கருத்து. மன மாச்சர்யங்களை மறந்து மகிழ்ச்சியுடன் அதே நட்புடன் பதிவுகளை இட உரிமையுடன் கேட்டுக்கொள்கிறேன். இதில் ஏதாவது என்னுடைய கருத்து தவறாக இருந்தால் இருவருமே என்னைப் பொறுத்தருள வேண்டுகிறேன்.
அருமையான பதிவுகளை இருவரும் தொடர்ந்து அளித்து வருவதற்கு நன்றி!
ஒரு சொல் வெல்லும் ஒரு சொல் கொல்லும்னு வாலிப வாலியில் வாலி எழுதியிருந்ததைப் படித்தேன்..
இனி வாலி சொன்னது அந்தப் புத்தகத்தில் இருந்து..:
தலைவன் பட வேலைகள் தாமதமாகிக் கொண்டே இருந்ததாம்..என்னவென்று கேட்டால் ம.தி வாலியிடம்..ஓய் நீர் தானே எழுதினீர் நீராழி மண்டபத்தில்... தலைவன் வாராமல் காத்திருந்தாள்னு..அதான் டிலே ஆகுது என்றாராம்..வாலி ம.தியிடம் “இல்லீங்ணா..தாமஸ் பிக்சர்ஸோன்னோ..அதான் தாமத பிக்சர்ஸுன்னு ஆகிவிட்டது” என ஏதோ சொல்லிச் சமாளித்தாராம்..
உயர்ந்த மனிதன் பாட்டு - முதலில் வாலி எழுதியது வெள்ளித் தட்டுத் தான் தங்கக் கைகளில்... ஏவிஎம் அவரைக் கூப்பிட்டு.. “கவிஞரே.. வெள்ளிங்கறது பணம் தட்டுங்கறது தட்டுப்பாடு..ஏன் இப்படி எழுதறீர் மாத்தும் என்றாராம்.. பின் அது வெள்ளிக் கிண்ணம் தா தங்கக் கைகளில் என மாறியதாம்..
இப்படிப் பட்ட வார்த்தைகளைத் தான் அறச் சொல் என்பார்களாம்..அவற்றைத் தவிர்க்க வேண்டும்.. எப்போதும் நல்ல சொல்லையே பேசவேண்டும்..அதுவும் நமது தமிழ் எப்படிப் பட்ட மொழி..
நன்றி: வாலிப வாலி நெல்லைஜெயந்தா தொகுப்பு
In your careers you experience a lot. Some incidents leave a lasting impression. Here is one from my teaching days.
One day after work I was walking towards my car in the parking lot. One of my students stopped me and said he wanted to talk to me. I asked him to see me in my office the next day. Then he said that it was not about the course. it was about me. I asked him to walk with me to my car. Then he said that I was the only professor who smiled at the students. I was surprised and shocked. I thanked him and he walked away. What does a smile cost? This was a student from the middle east (Saudi Arabia, I think). Foreign students need a little compassion. They are here far away from home and in a different culture. It reminded of my college days here and how I was treated ! :)
There are other incidents I remember.
Happy Teachers' Day! :) On a lighter note, here's a "teachers special" movie song...
https://www.youtube.com/watch?v=iu12SVj7vhw
Thanks Raghevendra ! :) Only later I understood why that happened. I wrote to them in January 68. They responded to my adviser in Sep 68 after I had accepted a position in the industry. My adviser suggested that I stick with the industry for five years and return to the university to teach or go to IIT,Kanpur. He responded to them telling them that I already accepted a job in the US ! That is the story in short. In fact it is a long story ! :) I think they were following theiir routine- advertise in May, call for interview in July and make an offer in Aug/Sep! Here we recruit year round!
நகைச்சுவை உணர்வு ஒரு வரம் ! ( தொடர்கிறது )
மற்றவங்க நமக்கு செஞ்ச நல்லதையெல்லாம் சுலபமாக நாம் மறந்துடறோம் . ஆனா அவங்க செய்த தீமைகள் நம்ம மனசிலே ஆழமாக பதிஞ்சு போயிடுது . அதுமட்டுமில்லே . பழிவாங்குவதற்கான தருணத்தை எதிர்பார்த்து மனம் காத்துகிட்டிருக்கு ! இதினாலே என்ன ஆவுது ? மனசிலே அமைதி இல்லே --- எப்பவும் பயந்து பயந்து வாழ்கிறோம் . நம்மவர்கள் சில பேர் பழிவாங்கற விதமே தனி .
ஒருத்தன் இன்னொருவனை போட்டு அடியோ அடின்னு அடிச்சிக்கிட்டிருந்தான் . அந்த வழியா வந்த ஒருவர் " ஏன்டா அவனை போட்டு இப்படி அடிக்கிறே ? " -ன்னார் .
" இவனைப் பழி வாங்கிறேன் " -ன்னான் அவன் .
" எதுக்காகப் பழி வாங்கறே ? " -ன்னார் .
" இவன் என் முகத்தை பார்த்து தேவாங்கு - ன்னு திடிப்புட்டான் சார் !" அப்படின்னான் .
" எப்போ திட்டினான் ?" -னு கேட்டார் அவர் .
" ஆறு மாசத்திற்கு முந்தி !" என்றான் அவன் .
" அதுக்கு ஏன் இப்ப அடிக்கிறே ?" -ன்னார் .
" நான் இன்னிக்குத்தான் சார் தேவாங்கை நேர்லே பார்த்தேன் !" - அப்படின்னான் அவன் ..
வாழ்க்கையிலே மகிழ்ச்சியும் , மன அமைதியும் வேணும்ன்னு நினைக்கிறவங்க , அடுத்தவங்க செய்த கெடுதல்களை மறந்துடணும் . அவர்கள் செய்த நன்மைகளை எப்பவும் மறந்து விடக்கூடாது .
https://www.youtube.com/watch?v=lPfUcBCYews
https://www.youtube.com/watch?v=wYyPpM_q7a0
https://www.youtube.com/watch?v=qe0i-cHYeNc