-
5th September 2015, 06:19 PM
#3421
Senior Member
Diamond Hubber
சின்னா!
லேட்டா வந்தாலும் அமர்க்களப்படுத்தி விட்டீரே அய்யா! விஸ்வரூபம் எடுத்து விட்டீரே!
மரமாய் கல்லாய் இருந்த என்னை
..மயக்கி விட்டாய் கண்ணே தமிழே
அதுவேதான். மயக்கி விட்டாய் சின்னக் கண்ணா! நெனச்சேன். ஒன்பதுல குருன்னும் போதே லஷ்மிராய் பேர் வரும்னு நெனச்சேன். ஏமாற்றவே இல்லை அய்யா!
//ஒருத்திக்கு நடனம்
ஒருத்தியுடன் பாடல்
ஒருத்தியுடன் ஊடல்
ஒருத்தியுடன் கண்ணா மூச்சி
ஒருத்தியுடன் அழுகை
மற்றும் பல கோபியரிடம் பலவிதமாய்..
எல்லாம்
அந்த மாயக் கண்ணனின் லீலை
இருந்தும்
ஒருத்தியின் அருகில் கண்ணன் காணோம்..
மயக்கத்தில் இருந்த பக்கத்து கோபிகை
எங்கே எனக் கண்ணால் வினவ
அவள்
ஷ்..கண்ணன் என்னுள்..
மனதிற்குள்..
செய்யாதே தொந்தரவு என..
மாயக்கண்ணன் முகத்தில் புன்னகை//
வாசுவினுள் சினனா போல.
'கோகுலத்தில் பசுக்கள் எல்லாம்' முழுப்பாடலையும் அளித்து விட்டேரே! நன்றி!
'ஆயர் பாடி மாளிகையில் தாய் மடியில் கன்றினைப் போல்
மாயக்கண்ணன் தூங்குகிறான் தாலேலோ'
எங்க ஆளாக்கும். நான் யாருக்கும் விட்டுத் தர மாட்டேன். எப்படி போடப் போச்சு என்று உம்மை திட்டவும் மாட்டேன். போனாப் போகுது. இன்னிக்கு உங்க பேருக்கு ஜெயந்தி. அதான் விட்டுக் கொடுத்திட்டேன். ஹ ஹா
உன்னை எதிர்பார்த்தென் கண்ணா போட்டாச். முடியல. போடாம இருக்க. ஓய்... பணமா பாசமா படத்து வருஷமெல்லாம் சொல்றீரு. விக்கியை நம்பாதேயும். காலை வாரி விட்டுடும். இந்தி நம்பியார் பாட்டுக்கு தேங்க்ஸ்.
-
Post Thanks / Like - 1 Thanks, 0 Likes
-
5th September 2015 06:19 PM
# ADS
Circuit advertisement
-
5th September 2015, 06:23 PM
#3422
Senior Member
Diamond Hubber
யாரோ 'கல்' மனது கொண்ட 'நாயக'ர் இங்கே வந்திருப்பதாக உணர்கிறேன்.
நான் முன்பு வாக்குறுதி கொடுத்தது போல அவருடன் இன்று (மட்டும்) பேசுவதாக இல்லை. எனக்கு மட்டும் கல் மனது இருக்காதா? இன்று கிருஷ்ண ஜெயந்தி. நல்ல நாள் என்பதால் அவரை மனதார மீண்டும் இங்கே வரவேற்கிறேன். பேச்செல்லாம் நாளைக்குத்தான். கடலூர் காரவுகளுக்கு கல் மனது என்று நானும் நிரூபிச்சுட்டேன்.
இருந்தாலும் மனசு கேக்கல.
வாங்கோ கடலூர் நண்பா!
-
5th September 2015, 06:25 PM
#3423
Senior Member
Diamond Hubber
மது அண்ணா!
'கனவு கண்டேன் கண்ணா' போஸ்டர் விவரங்களுக்கு நன்றி. அதே போல ஜானகி குழப்பத்தை தெளிவு படுத்தியதற்கும். ஜானகி குரலிலும் எங்க ஆள் பாடும். யார் அது? இல்லே யாருன்னு கேக்குறேன். பின்னே ராட்சஸி என்று ஏன் பெயர் வைத்தோமாக்கும்.
-
5th September 2015, 06:27 PM
#3424
Senior Member
Diamond Hubber
//போஸ்டர் ஏறக்குறைய ஆறு மாதம் ஒட்டிய இடத்திலேயே பளிச்சென்று இருந்ததாக்கும்//
ஆடு, மாடு எதுவும் இல்லாத ஏரியா போல.
-
5th September 2015, 06:37 PM
#3425
Junior Member
Seasoned Hubber
-
5th September 2015, 06:39 PM
#3426
Junior Member
Seasoned Hubber
கல் நாயக் சார் - இந்த கோகுலத்திற்கு மீண்டும் வந்து சேர்ந்ததில் மிக்க மகிழ்ச்சி
-
5th September 2015, 06:50 PM
#3427
Junior Member
Seasoned Hubber
இறைவன் நாம் வழிபடும் உருவங்களில் இல்லை ; எண்ணும் தூய எண்ணகளில் , செய்யும் காரியங்களில் , பழகும் நண்பர்களில் இருக்கிறான் . மதங்களுக்கும் , நம் ஆசாரங்களுக்கும் அப்பார்ப்பட்டவன் அவன் - சிலர் அவனை கணபதி என்கின்றனர் , சிலர் கிருஷ்ணன் என்கின்றனர் , சிலர் ஏசு என்று அழைக்கிறார்கள் , சிலர் அல்லா என்று பூஜை செய்கின்றனர் . நம் எண்ணங்கள் ஒன்றுப்பட்டால் , இறைவனும் ஒருவானாகவே நமக்குத்தெரிவான் ...

-
Post Thanks / Like - 1 Thanks, 2 Likes
-
5th September 2015, 08:57 PM
#3428
Senior Member
Diamond Hubber
மதுண்ணா!
ஜெய், எஸ்.வி.சுப்பையா, எம்.ஆர்.ஆர்.வாசு,லஷ்மி நடித்த படம் 'ஆசீர்வாதம்'. இன்று ஆசிரியர் தினம் என்பதால் இந்தப் படம் ஏனோ மனசில் ஓடியது. எப்போதோ ஒருமுறை ஏதோ ஒரு சானலில் எழுந்திருக்காமல் பார்த்தது.
சுப்பையாவின் சொந்த மகன் வாசு. படிப்பில் கவனம் இருக்காது. ஆனால் சுப்பையா மாணவன் ஜெய் படிப்பில் கெட்டி. நீங்க சொல்லும் வாத்தியாரய்யா மாதிரி சுப்பையா மாணவன் ஜெய் முன்னேற்றத்தில் அக்கறை காட்டுவார். மகனை அலட்சியப் படுத்துவார். இதைக் கண்டு சொந்த மகன் எம்.ஆர்.ஆர்.வாசு கறுவுவார். இப்படி லேசாக கதை ஞாபகம் இருக்கிறது. ஜெய் பட்டம் வாங்கி சுப்பையாவிடம் ஆசீர்வாதம் வாங்குவது போன்ற போஸ்டரும் நினைவில் இருக்கிறது.
சில அற்புதமான பாட்டுக்கள். வழக்கம் போல ஜெய் பட புண்ணியத்தில்.
'இந்த நாள் நல்ல நாள்' என்ற அருமையான 'கோவை'யாரின் பாடல்
ஒரிஜினல் சௌந்தர்ராஜனின் இன்னொரு அருமையான பாடல் சுப்பையாவிற்கு. மனசை அப்படியே கலங்கடிக்கும்.
'நெஞ்சம் நிறைய வரவேற்றான் நீ யாரென்று
அந்த நேரம் முதலே நினைக்கின்றேன் நான் யாரென்று
அந்நியன் போலே கேட்டானே நான் யாரென்று
அவனிடம் எப்படி சொல்வேன் நான் யாரென்று'
Last edited by vasudevan31355; 5th September 2015 at 09:06 PM.
நடிகர் திலகமே தெய்வம்
-
Post Thanks / Like - 1 Thanks, 1 Likes
-
5th September 2015, 09:14 PM
#3429
Senior Member
Diamond Hubber
இன்று ஆசிரியர் தினம். இந்த ஆசிரியர் ஒரு 'ஸ்கூல் மாஸ்டர்'. ஆனால் பாடலின் அப்லோடர் இவரை 'ஸ்கூல் டீச்சர்' என்கிறார்.
பிள்ளைகளுக்கு 'அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதலாகும்' என்று பாடம் சொல்லி அறிவைப் புகட்டுவதைக் காணுங்கள்.
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
5th September 2015, 10:14 PM
#3430
Senior Member
Senior Hubber

Originally Posted by
g94127302
CK -

. தவறாக உங்கள் பதிவை புரிந்து கொண்டு விட்டேன் , சாரி --- என்ற வரிகளைத் வெகு நேரம் தேடினேன் - நேரம் தான் வீணாயிற்று

---- கவிதைகள் அந்த மாய கண்ணனுக்கு ஒரு சிறப்பான புகழாஞ்சலி ..

.
PS :
..
நன்றிங்க..
*
சிலப்பதிகாரத்தில் தன் மனதில் ஒன்றை நினைத்துக் கொண்டு , சொல்லும் போது வேறு விதமாய்க் கூறி விடுகிறான் பாண்டிய மன்னன். அதனால் விளைந்தது விபரீதம்.
சினையவர் வேம்பன் தேரானாகி
ஊர்காப் பாளரைக் கூவி ஈங்கு என்
தாழ் பூங் கோதை தன்கால் சிலம்பு
கொன்றச் சிலம்பு கொணர்க ஈங்கென..
தாழ்ந்த மலர் மாலையுடைய அரசமாதேவியின் சிலம்பு ‘இவன் கூறிய கள்வன் கோவலன் கையில் இருக்குமானால், அவனைக் கொல்வதற்கு அச்சிலம்புடன் இங்கு கொண்டு வருக” எனக் கூற எண்ணியவன் அவ்வாறு கூறாமல் “அவனைக் கொன்று அச்சிலம்பைக் கொணர்க”. எனக் கட்டளையிட்டான் பாண்டியன்.//
இதே நிலமை தான் ரவி உங்கள் பதிவிற்கும்.. நிச்சயமாக அதை எழுதிய போது – பின்னால் இறையருள் என்றெல்லாம் நீங்கள் கூறினாலும் –உங்கள் மனதில் ஒன்றுமில்லை எனச் சொன்னாலும்- எழுதும்போது ஜஸ்ட் ஓ.கே.. நம்ம சி.கே. எதுவேணும்னாலும் சொல்லலாம் என்று தான் எழுதியிருந்தீர்…. அதைப் படிப்பவர்கள் எப்படி எண்ணுவார்கள் என்றெல்லாம் நினைக்கவில்லை.. எனக்குத் தெரிந்த நண்பர்களுக்கும் நான் எண்ணியவாறே தான்பட்டு என்னிடம் பி.எம்.மில் கோபப் பட்டார்கள்..
இப்படி இருக்கையில் நான் எப்படி உங்களிடம் ஸாரி சொல்ல இயலும்? விளையாட்டாய் நீங்கள் அதைக் கேட்கிறீர்கள்.. நானும் விளையாட்டாய் மறுக்கிறேன் ஓகேயா குரு..
இந்த குரு என்ற வார்த்தை நான் அன்றாடம் தினமும் உபயோகப் படுத்தும் வார்த்தை..ஒவ்வொருவரிடம் இருந்தும் ஒன்று கற்றுக் கொள்கிறோம்..என்னிடம் நீங்கள் கற்றுக் கொண்டீர்கள் என எழுதியிருந்தீர்கள்..
நானும் கற்றுக்கொண்டேன்..இனி இன்னமும் ஒரிஜினலாக எழுத வேண்டும் என்று..அது எப்படி காப்பி அடிக்கிறேன் என்ற எண்ணம் ரவியைப் போன்ற எல்லாம் தெரிந்து எழுதுகின்ற,படிப்பறிவு மிக்க, மென்மையான பிறர்மனம் நோகவைக்காத நண்பர் மனதில் விளையாட்டாய்த் தோன்றியது என்று.. அதற்காகத் தான் நான் முன்பு எழுதியதில் தேடிப் படித்துப் பார்த்து இங்கு இட்டேன்..புதியதாக எழுதுவதையும் இடுவேன்
நீங்கள் இந்த வண்ணம் என்னிடம் நான் ஸாரி சொல்லவில்லைஎன ஜாலியாக வருத்தப் படாமல் இருந்திருந்தால் இந்த இடுகை வந்திருக்காது...
உங்களுக்காக நீங்கள் எழுதுகிறேன் என்று நீங்கள் ஒரு தடவை சொல்லியிருக்கிறீர்கள் - . . நான் எழுதுவது அப்படி இல்லை..எனக்காகவும்., எந்த கான்செப்டாக இருந்தாலும் சுவாரஸ்யமாக, படிப்பவர்களைப் படுத்தாமல் நன்றாக இருக்கவேண்டும், சில வருடம் கழித்துப்படித்தாலும் சுவையாக இருக்கவேண்டும் என்று தான் எழுதிப்பார்க்கிறேன்..ஒவ்வொரு தடவையும் கூடுதலான கவனத்துடன் எழுத முயற்சியும் செய்து கொண்டு இருக்கிறேன்..
இங்குள்ளவர்கள் ( நீங்கள் உட்பட) வித்தியாசமாக எழுதிப் பார்ப்பது அதனால் தான்.. தேடித் தேடி ரேர் சாங்க்ஸ் மக்கள் போடுவதும் அதனால் தான்..
என்ன புதியதாக எழுதவில்லை..எழுதவேண்டும் ரவி.. கொஞ்சம் ஆசீர்வதியுங்கள்..இப்போதைக்கு வாங்கிய புத்தகங்களைப் படித்துக் கொண்டிருக்கிறேன்..
குறள் என்ன ஆச்சு ரவி,..
நான் முன்பு எழுதிப் பார்த்த சில குறள்களைச் சொல்லட்டா..
*
*
முதல் சீரும் ஈற்றுச் சீரும் முரண்பட்டு இருக்கணுமாம் குறளில் (அதாவது ஆரம்பம் இலியானால வந்தா ஈற்றுச் சீர் நமீதால வரணும் smile emoticon ) கொஞ்சம் ட்ரை பண்ணிப் பார்த்தேன்..
*
விரித்துச் சிரித்தாலே விண்வரை கண்ணாம்
திரித்தே உதட்டைக் குவி..
*
போலி பலவாறாய்ப் போனாலும் எப்போதும்
ஆழிபோல் பொங்கும் அசல்..
*
ஓடி உழைத்து உலகத்தில் புண்ணியங்கள்
தேடியே சேர்த்துநீ நில்
*
ஒல்லியாய் ஆக உழைத்தே இருந்தீரேல்
துள்ளிடும் நெஞ்சமும் குண்டு..
*
கதிரவன் வந்தால் கடலுள்ளே வீழ்ந்தே
மதியை இழக்கும் மதி
*
காட்டினில் மன்னர் கடுந்தவம் செய்திட
நாட்டமாய் விட்டிடுவார் நாடு..
*
Last edited by chinnakkannan; 5th September 2015 at 10:18 PM.
Bookmarks