முன்பு வாசு ஜி ஸ்ரீப்பிரியா பற்றி சொல்லும் கிளாமராக, தாராளாமாக நடித்தவர் என்று சொல்லியிருந்தார், இருந்தாலும் ஆண்களை டம்மியாக்கி பெண்களுக்கு முக்கியத்துவமான பாத்திரங்களை செய்ததில் ஜெய்சித்ராவும் ஸ்ரீப்பிரியாவும் உண்டு .. என்பது என் தாழ்மையான கருத்து
Printable View
முன்பு வாசு ஜி ஸ்ரீப்பிரியா பற்றி சொல்லும் கிளாமராக, தாராளாமாக நடித்தவர் என்று சொல்லியிருந்தார், இருந்தாலும் ஆண்களை டம்மியாக்கி பெண்களுக்கு முக்கியத்துவமான பாத்திரங்களை செய்ததில் ஜெய்சித்ராவும் ஸ்ரீப்பிரியாவும் உண்டு .. என்பது என் தாழ்மையான கருத்து
லலிதா ஸ்ரீ பற்றி உங்கள் நினைவூட்டலுக்கு நன்றி
சிரி சிரி முவ்வ - தமிழில் சிரிக்கும் சலங்கை என்று டப் ஆன நினைவு
மிக அருமையான படம் மற்றும் பாடல் .
இந்த ஜுவந்தி நாதம் பாடலை இரவு நேரத்தில் தனியாக கேட்டு பாருங்கள்
அப்படியே மனது எங்கோ செல்லும்
இப்போது அடிகடி ஜெமினி லைப் இல் இந்த பாடலை கேட்கிறேன்
பாடலில் இசைஅரசியின் குரலில் ஒருவித சோகம் இருக்கும்
இதற்கு திரு விஸ்வநாத் ஓர் பேட்டியில் விளக்கம் கூறி இருந்த நினைவு
'கதாநாயகியிடம் அருமையான பரதம் என்ற கலை குடி புகுந்து உள்ளது
ஆனால் வாய் பேச முடியாத ஊமை .மேலும் சித்தி கொடுமை
ஆனால் இதை எல்லாம் மீறி அவள் காணும் கனவு தன பரதத்தின் மேல் உள்ள காதல் இதை எல்லாம் வெளிப்படும் போது சோகம் வரத்தானே செய்யும் .ஆனால் நாங்கள் rerecording போது காட்சி அமைப்பையும் கதாநாயகி யார் என்பதை மட்டும் தான் கூறினோம் .சுசீலா அம்மாவின் கற்பனையில் உதித்த மெருகு அது '
ஜெயப் ப்ரதா பற்றிப் பேச்சு வந்ததனால்..இன்னொரு தங்கப் பதுமை - ஜொலிக்கும் ஜீஹி சாவ்லா..
ஆஸ்கர் ரவிச்சந்திரன் ஹீரோ..ஜூஹி சாவ்லா அறிமுகம் ஜூலி என்று..
ஒருஅழகான பாட்டு (படத்தில் நிறையப் பாடல்களும் அழகு) மனதில் நின்றது..
ஒரு மின்னல் போல என் முன்னால் போவது யாரு
என்ன பேரு..என்ன ஊரு
அவள் கண்ணில் நானும் நிலா பார்க்கிறேனே..
நல்ல பாட்டு..முழுக்க வர்ணிப்பு தான் ஜூஹியை.. பார்த்திருக்கிறீர்களா..
THUNIVE THUNAI -1976
PRABHA
http://i61.tinypic.com/16jgayr.jpg
கிருஷ்ணா சார்!
தங்கள் வாழ்த்திற்கு நன்றி! மறந்து போன பல தென்னக திரைப்படக் கலைஞர்களைப் பற்றிய நினைவுகளுக்காக நீங்கள் பல்வேறு சிரமப்பட்டு பலரிடம் தொடர்பு கொண்டு அளித்து வரும் பதிவுகள் மெச்சத் தகுந்தவை.
நிஜமாகவே அனைவரும் பாராட்டி மகிழ வேண்டிய சேவை.
என் உளப்பூர்வமான நன்றிகள் மற்றும் வாழ்த்துக்கள்.
சிரி சிரி முவ்வக்கு முன் அந்துலேனி கத (தமிழ் அவள் ஒரு தொடர்கதை )
படத்தில் ஜெயப்ரதவை பார்க்கணும் சார் கருப்பு வெள்ளையில் என்ன அழகு தெரியுமா ? இந்த பாலச்சந்தர் எங்கிருந்து தான் heroine கொண்டு வாருவார்னே தெரியாது
அவள் ஒரு தொடர்கதை சுஜாதா ,படபட் ஜெயலக்ஷ்மி,விநோதனி என்ற ரீனா,மரோசரித்ரா சரிதா நிழல் நிஜமாகிறது ஷோபா
காலையில் இருந்து எஸ்வி சார் ஒரு மார்க்கமாகத் தான் இருக்கார் :)
//ஹ்ம்ம் . மன்மத லீலையில் ஆரம்பித்ததாக்கும் உமது லீலை // போங்க சார்.. நான் அப்போல்லாம் நான் ச்ச்சின்னக் கண்ணனாக்கும்..
பிரபாவும் நல்ல நடிகை, பல நல்ல வேடங்கள் செய்தார். ஜெகன் மோகினி, பெண் ஜென்மம் என பல படங்கள்
சமீபத்தில் அவன் இவனில் ஆர்யாவின் அம்மாவாக நடித்தார்
எல்லோருக்கும் பிடித்த ஒரு கோவிலின் பாடல்
http://www.youtube.com/watch?v=NzEDhUvja1o
அதே போல் மக்கள் அதிகம் கேட்டிராத ஒரு கதா கால்ட்ஷேப பாடல்
பிரபாவுக்கு இசையரசியும் உடன் ஒலிக்கும் குரல் நடிகை சண்முக சுந்தரியினுடையது.
கேட்டு பாருங்கள் .. இசையரசி சும்மா பட்டைய கிளப்பியிருப்பாங்க ( நவராத்திரி தெருக்கூத்திற்கு பிறகு இது தான்)
http://www.youtube.com/watch?v=5PVExRQqMn0
ஆனால் எஸ்வி சார் பிரபா தமிழ் இல் நடிப்பில் பிரபலம் ஆகவில்லை
ஒரு நாள் 1977 -78 காலகட்டத்தில் மாலை முரசு நாள் இதழ் போஸ்டர் 'பிரபல நடிகை விபசார வழக்கில் கைது ' என்று படித்தவுடன் அடித்து பிடித்து பேப்பர் வாங்கி பார்த்தால் இவர் பெயர் போட்டு 'நடிகை ஜெயபிரபா (துணிவே துணை புகழ்) என்று போட்டு இருந்தார்கள்
இது எவ்வளுவு தூரம் உண்மை என்று தெரியவில்லை . என் நினைவில் இருந்து எழுதுகிறேன் .
இந்த ஜெய பிரபா மற்றும் சந்திர மோகன் நடித்து ஒரு படம் கருப்பு வெள்ளை தெலுகு 1980 கால் கட்டம் மிக அருமையாக இருக்கும் சந்திர மோகன் பட்டை frame கண்ணாடி அணித்து கொண்டு வருவார்
//அட நாராயணா நாங்கள் இப்பவும் நீங்கள் சின்ன கண்ணன் என்றல்லவா நினைத்துக்கொண்டிருக்கிறோம் .. இல்லையா???// இப்பவும் தான்..:)
எஸ்வி சார்
ஜெயமாலினி அறிமுகம் ஆன புதிதில் தன்னை ஜோதியின் தங்கை என்றே எல்லோரிடும் சொல்வார் . ஆனால் இதை ஜோதி மறுத்து எனக்கு தங்கையே கிடையாது என்று தமிழ் பிலிமாலய இதழில் படித்த நினைவு
ஆனால் இருவரும் ராஜேந்தரின் 'அந்த கானா கட்டை கருவாட்டுக்கு கழுத்திலே வெள்ளை இந்த மானா மதுரை மினாவுக்கு வாங்கிடு முல்லை " ராகம் தேடும் பல்லவி னு நினைவு
பிரபா தான் மலையாளத்தில் நானும் ஒரு பெண் படம் செய்தார்.
அதிலும் கண்ணா கருமை நிற கண்ணா உண்டு .. இதோ இசையரசியின் குரலில்
படத்துக்கு இசை தேவராஜன் மாஸ்டர் . சுதர்சனம் மாஸ்டரின் டியூனை அப்படியே வைத்து கொண்டு இந்த பாடலுக்கு இசை சுதர்சனம் என்று பெயர் பலகையில் போட்டு கெளரவித்தார்கள்
http://www.youtube.com/watch?v=PJZXen27m1U
http://imedia.movies.com.pk/cb/image...avatar8733.jpg
இன்றைய ஜெய பிரபா
சரி நித்திரை என்னை அழைக்கிறது.. நீங்கள் சம்பாஷணைகளை தொடருங்கள்
நாளை சந்திகிறேன்
குட் நைட் ராஜேஷ் ஜி..ம்ம்
TODAY'S LAST PIC
DREAM GIRL... STILL
http://i61.tinypic.com/2mxh6v6.jpg
http://youtu.be/IIE6JlDsISg
வாசு சார்
ஒருத்தர் வந்து நீதிக்கு தலை வணங்கு என்று சொல்வார் பாருங்கள் :)
(எஸ்வி சார் நான் உங்களை சொல்லவில்லை தயவு செய்து கோபித்து கொண்டு விடாதீர்கள் . உங்கள் படங்கள் ஒவ்வொன்றும் பாடங்கள்
இன்னிக்கு இவ்வளவுதானா எஸ்வி சார் dream கேர்ள் போட்டோ போட்டு ராஜேஷ் சார் க்கு ச்வீட் dream சொல்கீறீர்கள்)
வினோத் சார்,
http://www.centerforinquiry.net/imag...-trumpcard.jpg
அதகளம். trump card. புரியுதா? புரியுமே!புரியுமே!
கிருஷ்ணா சார்,
சி,காவை சாதரணமா நெனச்சுடாதீங்க. ஒண்ணுமே தெரியாம அப்பாவி மாதிரி முழி முழிப்பார்.:) அப்புறம் நம்மை முழிக்க வைப்பார். கட்ட கடைசியில் நம்மை சிரிப்பு போலிஸ் ஆக்கி விடுவார்.:) என்னவாக்கும் நான் சொல்றது.:)
ஆமாம். 'தங்கப்பதக்கம்' படத்தில் தலைவர் ஜோடி ஒய்.விஜயாதானே!:)
நான் எஸ்.ஆர்.விஜயான்னு நெனச்சேனாக்கும்.:)
ஐயையோ! தவளை தவளை... தன் வாயால கெடும்.:) கிருஷ்ணா சார்! எஸ்.ஆர்.விஜயா யாராக்கும் என்று சி.க. நம்மை காய விடப் போகிறார்.:) இது தேவையா?:)
ஜோதி லக்ஷ்மி- செக்ஸ் பாம் என்று சொல்லத்தக்க நம்மூர் கவர்ச்சி.இவர் இளம் பிராயத்திலிருந்து நடிக்கிறார்.வெவ்வேறு காலகட்டங்களில் இவர் அழகு வெவ்வேறு பரிமாணங்களில் மிளிர்ந்தது. எனக்கு பிடித்த பின் பரிமாணங்கள் பின்னாட்களில்.
1963 வானம்பாடி.
https://www.youtube.com/watch?v=Z12Xa2R_BmE
1968 பூவும் போட்டும்.
https://www.youtube.com/watch?v=G9g29W9VYBk
1970 எதிரொலி.
https://www.youtube.com/watch?v=rO8a1GpQHxQ
கண்டு கொண்டேன் ...கண்டு கொண்டேன் ....கண்டு கொண்டேன் ... தேவரே
http://i62.tinypic.com/110kfmr.jpg
நூறு ஆயுசு .
ஜோ.ல வில் முக்கியமான் “ தங்கம் தங்கம் உன்னுருவம் தாங்காதினிமேல் என் பருவம்” விட்டதை வன்மையாக்க் கண்டிக்கிறேன் :)
//சி,காவை சாதரணமா நெனச்சுடாதீங்க. ஒண்ணுமே தெரியாம அப்பாவி மாதிரி முழி முழிப்பார்.அப்புறம் நம்மை முழிக்க வைப்பார். கட்ட கடைசியில் நம்மை சிரிப்பு போலிஸ் ஆக்கி விடுவார். என்னவாக்கும் நான் சொல்றது.// வாசு சார் நான் அப்படி எல்லாம் இல்லையாக்கும்.. //தூக்குத்தூக்கி லலிதா தானே// க்ருஷ்ணா சார்..அவரே.. கணவனே கண்கண்ட தெய்வத்தில் ஒரு நாகப்பாம்பு நடனம் அப்புறம் உன்னைக் க்ண் தேடுதேயில் அவரும் விக்கி காண்பவரையும் விக்க வைத்தார் :)
ஆமாம் எஸ்.ஆர். விஜயா யாராக்கும் :)
கார்ட்டூன் புதிர்கள் இந்தச் சிற்றறிவை எட்டவில்லை என்பதை ...
I too did my B.tech between 1981 - 1985 but i could not notice any such veruppu against SJ. In fact their were quite a lot of SJ fans. I am a hard core fan of PS but the fact was during the college days SJ and Illayaraja's songs are very popular among the youth especially the romantic and sexy songs . PS was not as popular as SJ in this period and slowly she was losing the market to the new generation singers in which SJ was the lead.
கொஞ்சூண்டு வலையில் தேடியதில் அகப்பட்டது..:)
**
தமிழக ரசிகர்களை தங்கள் நடனத்தால் கவர்ந்த "திருவாங்கூர் சகோதரிகள்" லலிதா, பத்மினி, ராகினி ஆகிய மூவரும் பின்னர் நடிப்பிலும் முத்திரை பதித்தனர்.
திருவாங்கூர் அரச குடும்பத்தைச் சேர்ந்தவர்களான லலிதா, பத்மினி, ராகினி ஆகிய மூவரில் லலிதா 1932லும், பத்மினி 1934லும், ராகினி 1938லும் பிறந்தவர்கள். தந்தை பெயர் தங்கப்பன்பிள்ளை. தாயார் பெயர் சரசுவதி அம்மாள்.
நடனப் பயிற்சி
மூன்று சகோதரிகளில் முதலில் பத்மினிதான் நடனப் பயிற்சி பெற்றார். பிறகு லலிதாவுக்கும் நடனத்தில் ஆர்வம் ஏற்பட்டது. இருவரும் நடன ஆசிரியரிடம் முறைப்படி நடனம் பயின்றனர்.
சில ஆண்டுகள் கழித்து, ராகினியும் நடனப் பயிற்சி பெற்றார்.
கல்பனா
40களில், இந்தியாவிலேயே நடனத்தில் புகழ் பெற்று விளங்கியவர் உதயசங்கர். இவர் சிதார் மேதை ரவிசங்கரின் சகோதரர்.
ரவிசங்கர் சென்னை வந்திருந்தபோது, பத்மினியும், ராகினியும் அவரை சந்தித்து ஆசி பெற்றனர். அப்போது, முழுக்க முழுக்க நடனங்கள் கொண்ட "கல்பனா" என்ற இந்தி திரைப்படத்தை ஜெமினி ஸ்டூடியோவில் ரவிசங்கர் தயாரித்துக் கொண்டிருந்தார். அந்தப் படத்தில் நடிப்பதற்கு லலிதாபத்மினிக்கு ரவிசங்கர் வாய்ப்பளித்தார்.
"கல்பனா" மூலமாக லலிதாவும், பத்மினியும் திரைப்பட உலகில் அறிமுகம் ஆனார்கள்.
வேதாள உலகம்
இந்த சமயத்தில், காரைக்குடியில் ஏவி.எம். ஸ்டூடியோ இயங்கி வந்தது. "நாம் இருவர்" என்ற மெகாஹிட் படத்தை வெளியிட்டதைத் தொடர்ந்து, "வேதாள உலகம்" என்ற படத்தை ஏவி. மெய்யப்ப செட்டியார் தயாரித்து வந்தார். இது இசை நாட்டியத் திரைப்படம்.
"இந்தப் படத்தில் நடிக்கிறீர்களா?" என்று லலிதா பத்மினியிடம் ஏவி.எம். கேட்டார்.
"நடனம் மட்டும் ஆடுகிறோம். நடிப்பதில் எங்களுக்கு விருப்பம் இல்லை" என்று சகோதரிகள் கூறினார்கள்.
இதற்கு ஏவி.எம். சம்மதித்து, பவளக்கொடி இசை நாட்டிய நாடகம், பாம்பாட்டி நடனம் முதலியவற்றில் லலிதா, பத்மினியை நடிக்க வைத்தார்.
1948 ஆகஸ்டு மாதம் வெளியான "வேதாள உலக"த்தின் சிறப்பு அம்சமாக, லலிதா பத்மினியின் நடனங்கள் அமைந்தன. நடனங்களை வழுவூர் ராமையாப்பிள்ளை அருமையாக அமைத்திருந்தார்.
வேதாள உலகத்தைத் தொடர்ந்து, தங்கள் படத்தில் லலிதா பத்மினியின் நடனம் இடம் பெறவேண்டும் என்று ஒவ்வொரு பட அதிபரும் விரும்பினர்.
லலிதா பத்மினி நடனம் இடம் பெறாத படமே அநேகமாக இல்லை என்ற நிலை ஏற்பட்டது. ஓடாத படங்களையும் ஓட வைக்க, லலிதா பத்மினி நடனங்கள் உதவின.
அந்தக் காலக் கட்டத்தில் பத்மினியை விட லலிதாதான் கவர்ச்சிகரமாக இருப்பார். நடன நாடகங்களில், லலிதா பெண்ணாக ஆட, பத்மினி ஆண் வேடத்தில் (மீசையோடு) ஆடுவார். இதனால், இந்த நடன சீசனில், லலிதாவின் கையே ஓங்கியிருந்தது.