http://i57.tinypic.com/2r7add0.jpg
Printable View
[quote=raghavendra;1260872]ஹாலிவுட் நடிகர்களுக்கு சவால் விடும் அட்டகாசமான ஸ்டைல், நெஞ்சைப் பிழியும் உருக்கமான காட்சிகள், உறவுகளுக்குள் ஏற்படும் உணர்ச்சி மிக்க மோதல் காட்சிகள், கலையுணர்வை வெளிப்படுத்தும் ஓரங்க நாடகக் காட்சிகள், காதலின் மேன்மையை உணர்த்தும் உன்னதமான பாடல் காட்சி, பக்திப்பரவசமூட்டும் பாடல் காட்சி, என அனைத்து விதமான உணர்வுகளுக்கும் பங்களித்திருக்கும் உன்னதத் திரைக்காவியம் அன்னையின் ஆணை. திரைப்படக் கல்லூரிகளில் பாடமாக வைத்துப் போற்றப்பட வேண்டிய மிகச் சிறந்த நடிப்பில், நடிகர் திலகத்தின் புகழ்க்கிரீடத்தில் மற்றுமோர் வைரக்கல்லாக மின்னும் அன்னையின் ஆணை திரைக்காவியத்தில் மக்கள் தலைவரின் எழில் மிகு தோற்றங்கொண்ட கண் கவரும் நிழற்படங்களின் அணிவகுப்பில் திரியின் பக்கங்கள் ஜொலிக்கின்றன.
அபூர்வமான தொகுப்புக்கு உளமார்ந்த நன்றி சிவா.
தங்களுடைய ஆர்வமான கடினமான உழைப்பின் எதிரொலியாகவே இத்தொகுப்பு விளங்குகிறது. தங்களுக்கு உளமார்ந்த பாராட்டுக்கள்.[/quote
அண்ணனின் புகழ் பரப்புதல் ஒன்றுதான் மனதில் . பாராட்டுக்கு நன்றி சார்.
நடிகர் திலகத்தின் அருகில் இருப்பவர் பிரபல இசைஅமைப்பாளர் எஸ்.வி.வெங்கட்ராமன் அவர்கள். பண்டரிபாய் அவர்களுக்கு தந்தையாக நடித்திருப்பார். மீரா இவர் இசை அமைத்த படங்களில் குறிபிடத்தக்கது.
http://i62.tinypic.com/2dsdz55.jpg