MAKKAL THILAGAM ''NALLA NERAM ''
http://youtu.be/u_xUTTKbSCc
Printable View
MAKKAL THILAGAM ''NALLA NERAM ''
http://youtu.be/u_xUTTKbSCc
வெற்றி-திருப்புகழ் பாட்டுடைத் தலைவன்-அற்புத நாயகன் எம்.ஜி.ஆர்.
https://www.youtube.com/watch?v=_BBM...ature=youtu.be
courtesy - thiru era. chezhiyan
"திரையுலகின் சிங்கம் எம்ஜிஆர்' அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் வெள்ளி விழா மலர் 1997- இல் வெளியிடப்பட்டது. அதை அண்மையில் கண்ணுற்றேன். அதில் எம்ஜிஆர் பற்றி அண்ணா கூறிய கருத்துகள் சிலவற்றைத் தொகுத்துள்ளனர். அந்த மலரில் தரப்பட்டுள்ள அண்ணாவின் ஒரு கருத்து, " எம்ஜிஆர் கழகத்தின் கண்மணி, கலை உலகத்தின் நன்மணி; குணத்தில் தங்கம், கொதித்தெழுந்தால் சிங்கம்' என்பதாகும்.
சிங்கம் பீடு நடையுடன் வந்த வழியை திரும்பிப் பார்க்குமாம் - அதை அரிமா நோக்கு என்பார்கள். அதைப்போல் எம்ஜிஆர் திரையுலகில் புரிந்த சாதனைகளை சற்றுத் திரும்பிப் பார்க்கலாம்.
எம்ஜிஆர் நடித்த படங்கள் 134 அதில் கதாநாயகனாக இருந்த படங்கள் 115. அவற்றில் 100 நாள்கள் விழா கண்ட படங்கள் 66. வெள்ளிவிழா (25 வாரங்கள்) கொண்டாடிய படங்கள் 10 . என் தங்கை படம் 200 நாள்களுக்கு மேலும் வெற்றிப் படமாக விளங்கியது.
எம்ஜிஆர் பெற்ற விருதுகள்:
1954 - மலைக் கள்ளன் - இந்திய அரசாங்க விருது.
1956 - அலிபாபா நாற்பது திருடர்கள் - பிலிம் ரசிகர்கள் விருது 1967.
1967 - காவல்காரன், தமிழ்நாடு அரசாங்க விருது.
1968 - குடியிருந்த கோயில், தமிழ்நாடு அரசாங்க விருது.
1969 - அடிமைப் பெண், தமிழ்நாடு அரசாங்கப் பரிசு, பிலிம்பேர் விருது.
1972 - ரிக்ஷாகாரன், சிறந்த நடிகர் -தேசிய விருது.
1978 - மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன், சிறந்த படம்- தமிழ்நாடு அரசாங்க விருது.
கவுரவ டாக்டர் பட்டம் - அமெரிக்க அரிசோனா பல்கலைக்கழகம்.
கவுரவ டாக்டர் பட்டம் - சென்னைப் பல்கலைக் கழகம்.
1988 - (இறந்தபின்) பாரத் ரத்னா விருது.
மேலும் 1960-இல் இந்திய அரசாங்கம் தந்த பத்மஸ்ரீ விருதை ஏற்றுக்கொள்ள எம்ஜிஆர் மறுத்துவிட்டார். அதற்கு அவர் சொன்ன காரணம், "அந்த விருது தமிழில் எழுதப்பட்டிருந்தால் ஏற்றுக்கொள்ளலாம். இந்தியில் இருந்தபடியால் ஏற்றுக்கொள்ளவில்லை'.
நான் இந்தக் கட்டுரைக்கு "இதயம் கனிந்த எம்ஜிஆர்' என்ற தலைப்பில் ஆரம்பித்தேன். அதைப் பார்த்ததும் பலருக்கும் அண்ணா - எம்ஜிஆர் காலத்தில் இருந்தவர்களுக்கு - எம்ஜிஆர் பற்றி அண்ணா கூறிய "இதயக்கனி' என்ற பாராட்டுரை நினைவுக்கு வந்திருக்கும். அண்ணா கூறியதை நான் இங்கு தருகிறேன்.
""என்னை அறியாமலேயே என் மடியில் கனி ஒன்று வந்து விழுந்தது கண்டேன். அதன் அருமை கருதி அதனை எடுத்து என் இதயத்திலே வைத்துக்கொண்டேன். அதுதான் எம்ஜிஆர்.''
அண்ணா கூறிய இதயக்கனி என்பது மிகச் சிறந்த பாராட்டுரையாக ஆகி, எம்ஜிஆர் நடித்த ஒரு படத்துக்கே அந்தப் பெயர் தரப்பட்டது. இதயக் கனி என்று அண்ணா கூறியது கிடைத்த கனியைப் பாதுகாப்பாக இதயத்தில் வைத்துக் கொண்டேன் என்பது.
வேறொரு வகையில் நான் நினைப்பது, எம்ஜிஆர் அவர்களே கனிந்த இதயம் படைத்தவர் என்பதுதான்.
எல்லாவற்றையும்விட மேலாக எம்ஜிஆர் பற்றி அண்ணா ஒன்றைக் கூறியிருக்கிறார். அதுவும் மேலே குறிப்பிட்ட அஇஅதிமுக வெள்ளிவிழா மலரில் வெளிவந்துள்ளது. அந்த கருத்தாவது, ""எம்.ஜி.ஆர் என்றேனும் ஒரு நாள், ஒருக்கால் அரசியலில் பொறுப்பேற்றுச் செயல்படுவாரேயானால், அதிலும் அவரது தனி முத்திரை பதிக்கப்படும் என்பது தெளிவு''.
மிகவும் பிரமிக்கத்தக்க, ஆச்சரியமான அண்ணாவின் இந்தத் தெளிவான தொலைநோக்குப் பார்வை - எம்ஜிஆரால் தனிமுத்திரை பதிக்கப்பட்ட ஆட்சி - அண்ணாவுக்குப் பின் வந்த தமிழக அரசியல் வரலாற்றில் மெய்ப்பிக்கப்பட்டுவிட்டது.
'ஐ.ஏ.எஸ். படித்து விட்டு பியூன் வேலைக்கு வந்ததற்குச் சமமான ஒரு விபத்து'' என்று, தான் பாடல் எழுதவந்தது பற்றி வர்ணிக்கிறார் புலவர் புலமைப்பித்தன்.
எம்.ஜி.ஆர்., சிவாஜி காலத்தில் தொடங்கி இன்று அஜீத், விஜய் வரைக்கும் தன்னை நீட்டித்துக் கொண்டிருக்கிற கவிஞர்.
எந்தச் சூழ்நிலைக்கும் இலக்கியத் தரமாகவே பாடல்கள் எழுதுவதில் முன்னோடி என்று இவரைச் சொல்லலாம்.
''பிறவி கம்யூனிஸ்ட் நான். ஏற்றத் தாழ்வுகளை ஒழிக்கப் போராடும் யுத்தக்காரன். சமூக அநீதி கண்டு பொங்கும் போராளி. பாரதி, பாரதிதாசன் வழியில் வந்த தொடர்ச்சி. பொது உடைமையும் சம உரிமையும் விரும்புபவன். சினிமாவில் பாட்டெழுதுவது என் லட்சியம் அல்ல. பாடலாசிரியன் என்பது மட்டுமே என் முகவரி அல்ல.. என் முகங்களில் ஒன்று'' என்று சிரிக்கிறார்.
உடுத்துகிற சட்டை-வேட்டி, முறுக்கேறிய மீசை, வெடித்துக் கிளம்புகிற சிரிப்பு என அத்தனையும் பளிச் வெள்ளை!
''பஞ்சாலைக் கூலித் தொழிலாளி நான். புலவர் படிப்பு படித்துவிட்டு கோவையில் தமிழாசிரியராக வேலை பார்த்துக் கொண்டிருந்தேன். 1966-ம் வருடம் இயக்குநர் கே. சங்கர் என்னை சென்னைக்கு அழைத்தார். திடீரென வந்தது திரைப்பாடல் எழுதுகிற வாய்ப்பு. யார் யாரோ எழுதி சரி வராமல் போக, கடைசியில் என்னை எழுதச் சொன்னதாக நினைவு. மாம்பலம் பவர்ஹவுஸ் அருகில் ஒரு பெட்டிக்கடை வாசலில் நின்றுகொண்டே 'குடியிருந்த கோயில்' படத்துக்காக நான் எழுதிய பாடல்தான் -
நான் யார்? நான் யார்? நீ யார்?
நாலும் தெரிந்தவர் யார்- யார்?
தாய் யார்? மகன் யார்? தெரியார்;
தந்தை என்பார் அவர் யார்- யார்?
உறவார்? பகை யார்?
உண்மையை உணரார்;
உனக்கே நீ யாரோ?
வருவார்; இருப்பார்;
போவார்; நிலையாய்
வாழ்வார் யார் யாரோ?
'ஒரு பைத்தியக்காரன் பாடுவது போல் எழுதுங்கள்!' என்று சொன்னதும் எனக்குத் தோன்றியது 'நான் யார்?' என்கிற கேள்விதான். எல்லோரும் தன்னைப் பார்த்துக் கேட்கவேண்டிய கேள்வி இது. பட்டினத்தான் கேட்டாலும் இதைத்தான் கேட்பான். பட்டினத்தானும் பைத்தியக்காரனும் ஒன்றுதானே...
இந்தப் பாடலுக்குக் கிடைத்த பெரும் வெற்றியால் நான் தொடர்ந்து பாடல்கள் எழுதலானேன். எந்தச் சூழல் தரப்பட்டாலும் அதற்குப் பொருந்துகிற மாதிரி என் முற்போக்கான கருத்துகளை, புரட்சிகர எண்ணங்களை எழுதிக்கொடுக்க ஆரம்பித்தேன். எம்.ஜி.ஆர். என்கிற சக்திவாய்ந்த கருவியைப் பயன்படுத்தி வீரமான இளைஞர்களுக்கு நான் விடுத்த அறைகூவல்தான் 'உழைக்கும் கரங்கள்' படத்தில் இடம்பெற்ற -
நாளை உலகை ஆள வேண்டும்
உழைக்கும் கரங்களே - இந்த
நாடு முழுதும் மலர வேண்டும்
புரட்சி மலர்களே
கடமை செய்வோம் கலங்காமலே
உரிமை கேட்போம் தயங்காமலே
வாருங்கள் தோழர்களே - ஒன்றாய்
சேருங்கள் தோழர்களே!
என்கிற பாடல். இன்றைக்கும் கேட்ட விநாடி சிலிர்ப்பூட்டுகிற ஒரு பாடல் அது.
பஞ்சபூதங்களில் மண் மட்டும் தான் மனிதர்களால் பிரித்து வைக்கப்பட்டிருக்கிறது. இந்த அவலத்தைத் தான்-
காற்றும் நீரும் வானும் நெருப்பும்
பொதுவில் இருக்குது - மனிதன்
காலில் பட்ட பூமி மட்டும்
பிரிந்து கிடக்குது..
பிரித்து வைத்துப் பார்ப்பதெல்லாம்
மனித இதயமே - உலகில்
பிரிவு மாறி ஒருமை வந்தால்
அமைதி நிலவுமே...
என்று 'இதயக்கனி' படத்தில் எழுதினேன். இன்று மண்ணை மட்டுமல்ல.. நீரையும் பிரித்து விட்டார்கள் என்பது பெரும் வேதனை.
என் பாடல்களின் மீது புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆருக்கு மயக்கமே உண்டு.
எந்தக் குழந்தையும் நல்ல
குழந்தைதான்
மண்ணில் பிறக்கையிலே - அவர்
நல்லவராவதும் தீயவராவதும்
அன்னை வளர்ப்பதிலே...
என்கிற, 'நீதிக்குத் தலைவணங்கு' பாட்டு வரிகளை குடும்பநலத் துறை சார்பாக மாநிலம் முழுக்க எழுதி வைக்கச் செய்தார். ஒரு திரைப்படப் பாடலுக்கு அரசாங்கம் தந்த உச்சகட்ட அங்கீகாரம் இதுவாகத்தான் இருக்கும் என்று கருதுகிறேன்.
எம்.ஜி.ஆருக்கு நான் எழுதிய இளமை கொப்பளிக்கும் காதல் வரிகள் இன்றைக்கும் வாழ்பவை. சாகாவரம் பெற்றவை. 'அடிமைப் பெண்' படத்தின் 'ஆயிரம் நிலவே வா' பாடலில் வரும் -
பொய்கையெனும்
நீர்மகளும்
பூவாடை போர்த்து
நின்றாள்
தென்றலெனும்
காதலனின்
கைவிலக்க வேர்த்து
நின்றாள்
என்ன துடிப்போ
அவள் நிலை
நீயுணர மாட்டாயோ
அந்த நிலையில் தந்த சுகத்தை
நான் உணரக் காட்டாயோ?
என்கிற வரிகள் விரகத்தின் தவிப்பை விளக்கினால், ஆண் - பெண் உறவை இலக்கியத்தரமாகச் சித்திரித்தது -
சந்தன மேனிகளின்
சங்கம வேளையிலே
சிந்திய முத்துகளைச்
சேர்த்திடும் காலமிது
தேன்கனிக் கோட்டையிலே
சிற்றிடை வாசலிலே
தோரண மேகலையில்
தோன்றிய கோலமிது
courtesy - pulavar pulamaipithan
கடின இலக்கான 9,000 பதிவுகளை வெகு சாதரணமாக பதிவிட்டு, அனைவரையும் வியப்பில் ஆழ்த்திய திரு. வினோத் அவர்களை ஆச்சரியத்துடன் பார்க்கிறாரோ நம் பொன்மனச்செம்மல் ?http://i57.tinypic.com/mwwtoz.jpg
இனிய நண்பர் திரு. வினோத் அவர்களுக்கு பாராட்டுக்கள்.
ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் ! [
அன்பன் : சௌ. செல்வகுமார்
என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்
திரு. ரவிச்சந்திரன் அவர்கள் அறிவது ;
அனைத்துலக எம். ஜி. ஆர். பொது நல சங்க சார்பில், அதன் அனைத்து உறுப்பினர்களும், நிர்வாகிகளும் திரு. புலமைபித்தன் அவர்கள் வெளியிடும் "தலைவர் - தம்பி - நான் " புத்தக வெளியீட்டில் கலந்து கொள்வர்.
அதே போன்று திரு. ராஜ்குமார் அவர்களை தலைவராக கொண்ட "இறைவன் எம். ஜி. ஆர். பக்தர்கள் குழு" அமைப்பினரும் கலந்து கொள்வர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தங்களின் அம்சமான அழகிய வடிவமைப்புடன் கூடிய பதிவுகள் தொடரட்டும்.
ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் ! [அன்பன் : சௌ. செல்வகுமார்
என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்
”நடிகவேள் மீது கலைவேந்தன் வைத்திருந்த பாசம்..”
----------------------------------------------------- --------------------------
சண்டைக் காட்சிகளில் நடிப்பதில்லை என்று ஒரு கொள்கையை நடிகவேள் எம்.ஆர்.ராதா வைத்திருந்தார். ஆனால் அவரையும் சண்டை செய்து நடிக்க வைத்தவர் எம்.ஜி.ஆர்.,
'நல்லவன் வாழ்வான்' படத்தில் இருவரும் மோதிக் கொள்ளும் ஒரு காட்சி உண்டு. கதைப்படி அந்த சண்டைக் காட்சியில் எம்.ஆர்.ராதா நடிக்க வேண்டுமென்று எம்.ஜி.ஆர்., விரும்பினார்.
அதைப் பற்றி கூறி, "இந்தக் காட்சியில் நாம் இருவரும் நடித்தால் நன்றாக இருக்கும். நீங்கள் சம்மதித்தால் உங்களுக்கு சிரமமில்லாமல் நான் பார்த்துக் கொள்கிறேன்" என்று கேட்டிருக்கிறார். "சரி, நடிச்சிட்டா போச்சு" என்று எம்.ஆர்.ராதா கூறியதும் எம்.ஜி.ஆர். உற்சாகமாகிவிட்டார்.
அந்த சண்டைக் காட்சியை அமைத்தது, இயக்கியது எல்லாம் எம்.ஜி.ஆர்., தான். தண்ணீருக்கடியில் இருவரும் சண்டை செய்வது போல் காட்சிகள் ஒரு வாரம் தொடர்ந்தாற் போல் படமாக்கப்பட்டது.
தொடர்ந்து தண்ணீரில் நனைந்தபடியே இருந்தது எம்.ஆர்.ராதாவுக்கு ஒத்துக் கொள்ளவில்லை. அதனால், உடல்ந்லம் குன்றி அவர் படுக்கையில் விழ நேர்ந்தது. எழுந்திருக்க முடியாமல், அசைய முடியாமல் படுத்திருந்தார்.
இதனையறிந்த எம்.ஜி.ஆர்., ரொம்பவும் வேதனைப்பட்டுப் போனார்; 'நம்மால் தானே ராதாண்ணனுக்கு இப்படி ஆயிற்று' என்று உணர்வுக்குள்ளாகி, தனக்குத் தானே மருகினார்.
தனது படப்பிடிப்பு மற்றும் எல்லா வேலைகளையும் ஒத்தி போட்டுவிட்டு எம்.ஜி.ஆர்., தினமும் எம்.ஆர்.ராதாவின் வீட்டுக்கு சென்றிருக்கிறார்.
தன்னுடைய வீட்டின் கீழ் தளத்தில் கட்டிலில் படுத்திருக்கும் எம்.ஆர்.ராதாவின் முகத்திற்கு நேராக எம்.ஜி.ஆர்., கீழே தரையில் அமர்ந்து கொள்வார். வந்தது முதல் யாருடனும் பேச மாட்டார்.எம்.ஆர்.ராதாவின் முகத்தையே பார்த்துக் கொண்டிருப்பார். அப்படி ஒரு மணி நேரம், இரண்டு மணி நேரமல்ல, காலை முதல் மாலை வரை அமர்ந்திருப்பார். இப்படி எம்.ஆர்.ராதாவின் உடல் நலம் தேறும் வரையில் எம்.ஜி.ஆர்., ஏதோ தியானம் செய்வது போல் அமர்ந்துவிட்டு செல்வாராம்.
(தனக்கும் எம்.ஜி.ஆருக்கும் இடையிலான நட்பு குறித்து ஒரு பத்திரிக்கை பேட்டியில் நடிகவேள் எம்.ஆர்.ராதா கூறியது..)
http://i59.tinypic.com/ayjyp0.jpg
வினோத் சார்,
தங்களின் மகத்தான 9,000 பதிவுகள் என்னும் மகத்தான சாதனைக்கு இதயம் நிறைந்த நல்வாழ்த்துக்கள்.
vinodh sir congratulations for 9000 posts
மக்கள்திலகம் திரியின் கேப்டன் திரு வினோத் சார் அவர்களின் 9000 பதிவுகள் மிகவும் அருமை அதை அடைய அவர் ஆற்றிய பணிகளுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்
http://i59.tinypic.com/2en5je1.jpg
அன்புடன் வேலூர் எம்ஜிஆர் இராமமூர்த்தி
என்றும் எங்கள் குலதெய்வம் எம்ஜிஆர்
14-07-1961 அன்று வெளிவந்த நம் மக்கள் திலகத்தின் "சபாஷ் மாப்பிளே" .... முதல் நாள் திரையரங்கில் விற்கப்பட்ட ஒரிஜினல் பாட்டு புத்தகத்தின் முன் அட்டை தோற்றம்:
http://i61.tinypic.com/27x08li.jpg
குறிப்பு : பின் அட்டையில், ராகவன் புரொடக்ஷன் சார்பில் தயாரிக்கப்படும் தங்களின் அடுத்த சமூக ஹாஸ்ய சித்திரம் பற்றிய விளம்பர அறிவிப்பு காணப்படுகிறது.
ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் ! [
அன்பன் : சௌ. செல்வகுமார்
என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்” வாழ்ந்த ராமாவரம் தோட்டம்..
காது கேளாத, பேச முடியாதோர் சிறப்பு பள்ளியான கதை
--------------------------------------------------------------------------------------
" அமெரிக்காவில் சிகிச்சை முடிச்சு வந்தப்போ சரியாப் பேச முடியாத காரணத்தினால... அதிகமாக தனிமையை நாடினார்.
அந்த நாட்களில் திடீர் திடீர்னு படுக்கையைவிட்டு எழுந்து... என்னை, இல்லேன்னா மாணிக்கத்தை (எம்.ஜி.ஆரால் வளர்க்கப்பட்டு இன்று ஜானகி அம்மாளுடன் இருக்கும் ஒரே பழைய மனிதர்) அழைச்சு, கையைப் பிடிச்சுக்கிட்டு தோட்டத்தைச் சுத்திச் சுத்தி வந்து பெருமூச்சுவிடுவார்.
அப்போ ஒருநாள், இங்க வேலை பார்த்துட்டு இருந்த ஒரு பெரியவரோட மகள், தன் எட்டு வயசுப் பேத்தியைக் கூட்டிட்டுத் தோட்டத்துக்கு வந்திருந்தா. அந்தப் பேத்தி வாய் பேச முடியாத பொண்ணு. முறையா டாக்டர்கிட்ட காண்பிக்காம - காண்பிக்க வசதி இல்லாமதான் இந்த நிலைமைக்கு ஆளாயிருக்குன்னு சொல்லி அந்தப் பெரியவர் அழுததைக் கேட்டார்.
உடனே தனக்கு ட்ரீட்மென்ட் தந்துட்டு இருந்த டாக்டர்களைக் கூப்பிட்டு, அந்தப் பொண்ணுக் கும் சிகிச்சை செய்யச் சொன்னார். ஆச்சர்யப் படற அளவுல அந்தப் பொண்ணுக்கு எட்டாவது வாரமே ஓரளவு பேச வந்திட்டுது. அன்னிக்கு அவர் பட்ட சந்தோஷத்துக்கு அளவே இல்லை.
அதுல இருந்தே அவர் கொஞ்சம் மனசு லேசான உணர்வுல இருந்தார்னு சொல்லலாம். அப்போ தான் சொத்துக்கள் பத்தி இப்படி ஒரு நல்ல முடிவு எடுத்திருப்பார்னு நினைக்கிறேன். இந்த ஏழரை ஏக்கர் நிலத்துல இந்த வீடு இருக்கிற இடம் போக, மீதி இருக்கிற எல்லா இடத்தையும், வாய் பேச இயலாத, காது கேட்கும் திறன் குறைஞ்ச குழந்தைகளுக்கான ஸ்கூல் ஆரம்பிச்சு நடத்தணும்னு உயில்ல எழுதிவெச்சிட்டாரு.
அப்படி ஆரம்பிக்கப்பட்ட இந்தப் பள்ளியையும் இதுல சேர்ந்து படிக்கிற பிள்ளைகளையும் பார்க்கிறப்போ, என் மனசுக்கு ரொம்ப நிறைவா இருக்குது.''
(1993-ம் ஆண்டில் தமிழ் வார இதழ் ஒன்றுக்கு அமரர் எம்.ஜி.ஆரின் மனைவி, மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் ஜானகி அம்மையார் அளித்த பேட்டி )
l
" சிரித்து வாழ வேண்டும் " படப்பிடிப்பின் போது ..... பத்திரிகையாளர்களுக்கு அளிக்கப்பட்ட விருந்தில், உபசரிக்கும் நம் பொன்மனச்செம்மல்.
http://i61.tinypic.com/28kpnhz.jpg
ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் !
அன்பன் : சௌ. செல்வகுமார்
என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்
" பரமபிதா " படத்துக்காக ....... ஒப்பனையில் நம் மக்கள் திலகம்.
http://i62.tinypic.com/2ujo4eh.jpg
ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் ! [
அன்பன் : சௌ. செல்வகுமார்
என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்
நம் தலைவரின் இந்த கள்ளம் கபடம் இல்லாத என்ன ஒரு உண்மையான சிரிப்பு நன்றி திரு இரவிச்சந்திரன் சார் இதுவரை நான் காணாத பதிவு சார்
http://i60.tinypic.com/55110l.jpg
என்றும் எங்கள் குலதெய்வம் எம்ஜிஆர்
Fans experience in netru indru nalai fdfs
1974ம ஆண்டு இதே நாள் வாழ்க்கையில் மறக்க முடியாத நாள் திருநெல்வேலி பார்வதி திரையரங்கில் மக்கள் திலகத்தின் நேற்று இன்று நாளை வெளியானது.வீட்டில் என் மாமாவிடம் அனுமதி வாங்கிக் கொண்டு காலையிலே தியேட்டர்க்கு சென்றால் மக்கள் வெள்ளம் அலைமோதிக் கொண்டு இருந்தது ரசிகர் மன்ற டிக்கெட்டுகளை வாங்க வசதியில்லாத வயதில் கூட்டத்தில் தரை டிக்கெட் கியூவில் நின்றேன் மேட்னி காட்சிக்கு .அன்றைய தரை டிக்கெட் 40 காசுகள்.மதியம் வரை கியூவில் நின்றது தான் வீண் கடைசி நேர தள்ளு முள்ளில் தாக்கு பிடிக்க முடியாமல் மூச்சு திணறி வெளியே வந்து விட்டேன்.ஹவுஸ் புல் ஆனவுடன் மீண்டும் அப்படியே மாலைக் காட்சிக்கு நின்றேன். மீண்டும் மாலை காட்சி நேரம் நெருங்க நெருங்க தலைக்கு மேல் எல்லாம் ஆட்கள் ஏறி நடந்து கூட்டத்தில் குதித்து டிக்கெட் வாங்க தொடங்கினார்கள். 11 வயது சிறுவனான என்னால் ஒன்றும் செய்ய முடியவில்லை. டிக்கெட் கவுண்டரை நெருங்கும் போது டிக்கெட் தீர்ந்து விட்டது, மிகவும் சோர்ந்த நிலையில் வீடு திரும்பி திட்டு மழையில் நனைந்தேன்.நெல்லை பார்வதியில் 16 வாரங்கள் நேற்று இன்று நாளை ஓடியது.
Courtesy net
மக்கள் குறையை நேரில் கேட்கும் மக்களின் மகத்தான தலைவர்.
http://i62.tinypic.com/ie40b7.jpg
ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் ! [
அன்பன் : சௌ. செல்வகுமார்
என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்
திரைக்கு வர முடியாமல் போன " நாடோடியின் மகன் " படத்திலிருந்து ஒரு காட்சி. மக்கள் திலகத்துடன் தோன்றுவது நடிகை ஜி.சகுந்தலா.
http://i58.tinypic.com/2a6lgmu.jpg
ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் ! [
அன்பன் : சௌ. செல்வகுமார்
என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்
திரு. வினோத் சார். தாங்கள் கூறுவது போல் நேற்று இன்று நாளை திரைப்படத்தில் புரட்சித்தலைவரின் தேர்தல் வெற்றியை
காட்டும்போது தியேட்டரில் கைதட்டலும் , ரசிகர்கள் ஆரவாரமும் விண்ணை எட்டும். 70களில் வந்த மற்ற நடிகர்களின் படங்களில் கூட இந்த தாக்கம் இருந்திருக்கிறது. குறிப்பாக ஏவிஎம் ராஜன் நடித்த வீட்டு மாப்பிள்ளை என்ற படத்தில் திண்டுக்கல்லில் அண்ணா திமுக வெற்றி என்று ஒருவர் பேப்பர் படிப்பார்.
அப்போது மற்றொருவர்: தலைவர் ஜெயிச்சிட்டாரா..எவ்வளவு
வித்தியாசம்
முதலாமவர்: 1,41,898 ஒட்டுகள் என்பார்.
இரண்டாமவர்: நான் உடனே மாலை வாங்கி தலைவருக்கு போடணும் என்பார்.
அதே போன்று நடிகர் ஜெய்ஷங்கர் நடித்த பொன்வண்டு படத்தில் ஜெய்ஷங்கர் வேலை தேடும்போது உலகம் சுற்றும் வாலிபன் திரைப்பட பேனர் காட்டுவார்கள்.
http://i59.tinypic.com/kafl12.jpg
ரவிச்சந்திரன் ஏவிஎம் ராஜன் நடித்த புகுந்த வீடு படத்தில் லக்ஷ்மி, ராஜன், ரவிச்சந்திரன் ஆகியோர் திரையரங்கில் பெற்றால்தான் பிள்ளையா திரைப்படம் பார்ப்பதுபோல் காட்சி அமைத்திருப்பார்கள்.
அந்த காலகட்டத்தில் இதே போன்று மற்ற படங்களில் தலைவர் சம்பந்தப்பட்ட காட்சிகள் இருந்தால் குறிப்பிடவும்.
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்.
The Only God, whose Birthday is celebrated throughout the year.
http://i62.tinypic.com/5338dc.jpg
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்.
http://i61.tinypic.com/a1doj.jpg
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்.
http://i62.tinypic.com/2hd4op5.jpg
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்.
http://i61.tinypic.com/2vt6q90.jpg
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்.
http://i58.tinypic.com/10hvsaw.jpg
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்.
Can anyone please confirm the movies in which no song/Lip movement for Thalaivar, movies in which he is the Hero. For example, this song can also be considered, if Thalaivar does not have any other song in Manthiri Kumari [ no dual role movies please; because on role whill have son and other no song]:
https://www.youtube.com/watch?v=boY4OEeAHaE
இன்று பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் பிறந்த நாள் .
http://i62.tinypic.com/2cyftl4.jpg
http://i60.tinypic.com/2it5z5t.jpg
TAMIL NADU CHIEF MINISTER PURATCHI THALAIVAR MGR OPENED THE PERUNTHALAIVAR NINAIVU ILLAM- 1978
PERUNTHALAIVAR NINAIVIDAM - OPENED BY THIRU M.K THEN CHIEF MINISTER.
http://i58.tinypic.com/1zzhlvt.jpg
TAMIL NADU CHIEF MINISTER PURATCHI THALAIVAR MGR OPENED MADURAI KAMARAJAR PALKALAIKAZHAGAM- IN 1978
http://i58.tinypic.com/otzukg.jpg
courtesy - net
1967 ல் எம்ஜிஆர் ராதாவால் சுடப்படார் என்பது செய்தி. பின் வழக்கு நடந்தது. ஒரு சில தகவல்கள் அரசியல் செல்வாக்கு இதில் தலை நுழைத்து சாதகமாய் காரியங்கள் நடந்தன என்று சொல்லபட்டதே.இதில் எது உண்மை?
பதில்: யாருக்கு சாதகமாய்? எதற்கும் சுதாங்கன் எழுதிய புத்தகத்தைப் பாருங்கள். மற்றப்படி கேஸ் நடந்து முடிந்து எம்.ஆர். ராதா தண்டனையும் பெற்று வெளியில் வந்தாயிற்று. அவரும் இல்லை, எம்ஜிஆரும் இப்போது இல்லை. எல்லாம் பழங்கதை ஆகிவிட்டது.
அந்த வழக்கில் சாட்சியளித்த தடவியல் நிபுணர் ஒரு சுவாரசியமான விஷயம் சொன்னார். அவ்வளவு கிட்டத்திலிருந்து எம்.ஜி.ஆரை சுட்டபோதும் அவர் இறக்க்வில்லை. காரணம் என்னவென்றால் தோட்டா பழையதாக ஆனதால் அதன் வீர்யம் குறைந்திருந்தது என்பதே. எது எப்படியானாலும் எம்.ஜி.ஆர். செய்த தருமமே அவரைக் காப்பாறியது என்றுதான் நான் கூறுவேன்.
பெருந்தலைவர் காமராஜருக்கு பெருமை சேர்த்த புரட்சித் தலைவர் எம். ஜி. ஆர்.
பெருந்தலைவர் காமராஜர் சென்னை தியாகராயநகர் திருமலைபிள்ளை சாலையில் வாழ்ந்த வீட்டை, 15-07-1978 அன்று அப்போது முதல்வராக இருந்த நம் புரட்சித்தலைவர் அவர்கள் தலைமயிலான தமிழக அரசு, நினைவு இல்லமாக மாற்றியது . அவர் பயன்படுத்திய பொருட்கள், வாழ்க்கை நிகழ்ச்சிகளை எடுத்துக் கூறும் புகைப்படங்கள், படித்த நூல்கள் ஆகியவை நினைவு இல்லத்தில் நிரந்தரமாக வைக்கப்பட்டுள்ளன.
தினமும் 9 மணி முதல் இரவு 7 மணி வரை நினைவு இல்லத்தை பொது மக்கள் பார்வையிடலாம். சென்னை .கடற்கரை சாலைக்கு காமராஜர் சாலை என்று பெயரும் சூட்டப்பட்டது. விருது நகரை தலைமைஇடமாக கொண்டு காமராஜர் மாவட்டத்தை 1984ம் ஆண்டு ஜூலை 15ம் நாள் நம் இதய தெய்வம் புரட்சித் தலைவர் அவர்கள் தொடங்கி வைத்தார். மதுரை பல்கலை கழகத்துக்கு "மதுரை காமராஜர் பல்கலை கழகம்" என்று பெயர் சூட்டி சிறப்பித்தார். தமிழக அரசு வாங்கிய 3வது கப்பலுக்கு "தமிழ் காமராஜ்" என்ற பெயரையும் சூட்டி மகிழ்ந்தார்.
நம் புரட்சித்தலைவர் அவர்கள் முதல்வராக இருந்த சமயத்தில்தான், 18-08-1977 அன்று அப்போது குடியரசு தலைவராக இருந்த நீலம் சஞ்சீவி ரெட்டி அவர்கள் தமிழக சட்ட சபையில், காமராஜர் அவர்களின் திரு உருவப்படம் திறக்கப்பட்டது.
நம் மக்கள் திலகம் அவர்கள், பேரறிஞர் அண்ணா அவர்கள் தலைமையில் இயங்கி வந்த தி. மு. க.வில் இருந்த போது, "காமராஜர் என் தலைவர், அறிஞர் அண்ணா அவர்கள் என் வழிகாட்டி" என்று கூறினார். மாற்றான் தோட்டத்து மல்லிகையும் மணக்கும் என்ற பொன்மொழியை உதிர்த்த பேரறிஞர் அண்ணா அவர்களும், இதை பொருட்படுத்தாமல் (கழகத்தில் இருந்த சிலர் இது குறித்து அவரிடம் கலகமூட்டிய போதும்) பெருந்தன்மையுடன், அந்த பொன்மொழிக்கேற்ப நடந்து கொண்டார்.
குறிப்பு : இப்போதெல்லாம் , மாற்றுக்கட்சியினர் இல்லங்களில் நடைபெறும் விஷேசங்களில் கலந்து கொண்டால், விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்புவது, கட்சியை விட்டு நீக்குவது, போன்ற அரசியல் அநாகரீக செயல்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற அவலத்தை நாம் காண்கிறோம்.
http://i60.tinypic.com/fkmf45.jpg
ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர்.புகழ் !
அன்பன் : சௌ. செல்வகுமார்
என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்